Skip to content
Post Views: 1,740

கருப்பன் ஆட்டம் 23
Advertisement
காதல் ஜோடி புறாக்கள் இருவரும் மண் வீட்டினுள் தங்களின் காதலை வெளிப்படுத்திக் கொண்டு உணர்வுகளின் பிடியில் மூழ்கி மீண்டு வர விருப்பமில்லாமல் அதிலேயே சுகமாக நீந்தி கொண்டிருந்த நேரம் அந்த வீட்டின் கதவு தட்டப்பட்டது.
Advertisement
பட்டென தன்னிலை மீண்ட மலரோ “மாமா யாரோ கதவ தட்றாங்க…! யாரா இருக்கும்…?” என்று பயந்தவாரு கேட்டாள்.
Advertisement
“மலரு எதுக்குடி இதுக்கு போய் பயந்துக்குற யாருன்னு தெரியல போய் பாக்குறேன். நீ ரிலாக்ஸா இரு” என்று கூறியவன் அவள் நெற்றியில் முத்தமிட்டு அவளை இடையில் நிறுத்தியவன்,
Advertisement
பின் அங்கே ஹேங்கரில் மாட்டி இருந்த தனது சட்டையை எடுத்து போட்டு கொண்டு அதன் கீழ் பட்டன்களை பூட்டிய வாரே சென்று கதவை திறந்தான்.
கதவை தட்டியது கருப்பனின் தோட்டத்திற்கு வேலைக்கு வந்திருந்த பெண்கள் கூட்டத்தில் ஒரு பெண் சீதா.
கருப்பன் கதவை திறந்ததும் “யேய்யா கருப்பா இன்னைக்கு கிழக்கால இருக்கிற நஞ்சைகாட்டுக்கு களையெடுத்து வரப்பு வெட்டணும்னு சொல்லிட்டு இருந்தியேப்பு அப்பிடியே செய்ய சொல்லட்டுமா…!” என்று கேட்டார்.
அதற்கு கருப்பனோ “ஆமாத்தா அப்டியே பண்ணிபுடுங்க”
“பம்பு செட்டுல கொள்ள நேரமா தண்ணி போயிட்டு இருக்கு அதையும் அமத்தி விடட்டுமா…!
இல்ல வேற வரப்புக்கு திருப்பி விடுறியாப்பு…?” என்று கேட்டார்.
“இல்லத்தா காத்தால லோடுக்கு போறதுக்கு முன்னாடி தர்மந்தேன் போட்டு வுட்டுட்டு போய் இருப்பியான்…. இன்னும் கொஞ்ச நேரம் போகட்டும்…. தென்னந்தோப்புக்கு தானே பாயுது…. வெயில் காலம் வேற கிளம்பிடுச்சுல்ல இன்னும் செத்த நேரம் கிடக்கட்டும்…!” என்றான் கருப்பன்.
“அப்படியா சரிய்யா….! சரி நான் போயி அங்க உக்காந்து கதை பேசிட்டு இருக்க சிறுக்கிங்ககிட்ட சொல்லி வேலை ஏவுறேன்,
இவளுக கிட்ட ஒவ்வொரு வேலையும் சொல்லி வேலை வாங்குறதுக்குள்ள போதும் போதும்னு ஆயி போயிடுது…” என்று கருப்பனிடம் தன்னுடன் வேலை செய்யும் பெண்களை பற்றி கூறி எட்டப்பன் வேலையை செய்தாள் சீதா.
பேச்சு குடுத்து கொண்டே கருப்பனைத் தாண்டி வீட்டிற்குள் எதார்த்தமாக தனது கண்களை திருப்ப, அங்கே நின்றிருந்த மலர்விழியை பார்த்தவர் புருவம் இடுங்கி கருப்பனை பார்க்க,
அவனோ அது எதையும் கண்டு கொள்ளாது மீதமிருந்த தனது சட்டையின் பட்டனை பூட்டியவாரு தூரத்தில் சென்று கொண்டிருந்த வேலை ஆட்களை பார்த்தவன்
“சரி ஆத்தா நீங்க போங்க நான் செத்த நேரம் கழிச்சு வரேன்…!” என்றவன் கதவை சாத்தி கொண்டான்.
கதவிற்கு பின்புறம் இருந்த சீதாவோ….! ‘ஓஹோ இந்த வீட்டுக்குள்ள இந்த வேலை எல்லாம் நடக்குதா? இத்தன நாளும் இந்த சங்கதி தெரியாமை இருந்துருக்கேனே…!’ என்று கன்னத்தில் இரு விரலை விரித்து வைத்து நினைத்து கொண்டார்.
‘இருந்தாலும் இந்த மெட்ராஸ் காரி எப்ப இந்த ஊருக்கு வந்தாலோ அப்ப இருந்தே கருப்பன் கூடயே ஒட்டிக்கிட்டு திரியிரா….!
அப்பப்பா போற வார இடத்துல நீண்டு பாக்குறாங்க பேசுறாங்கன்னு தகவல் தெரிஞ்சுச்சு, சரி அது மெட்ராஸுல வளந்த புள்ள அப்படி இப்பிடி தான் இருக்கும்ன்னு நினைச்சுட்டு இருந்தா, இந்த பொட்ட சிறுக்கி என்னன்னா ஒரு ஆம்பள பய தனியா இருக்க வீட்டுக்குள்ள வந்து இப்படி திண்ணகமா நிக்கிறாளே…! எவ்வளவு ஏத்தம் இருக்கணும்…!
இந்த கருப்பனும் கூட மெட்ராஸ் காரி வந்ததுல இருந்து மாறி போயி மந்திரிச்சு விட்ட மாதிரி தான் திருயிரியான். ம்ம்ம்கூம்… என்ன பண்றது…. எல்லாம் அந்த பொட்டச்சி மேல உள்ள மோகந்தென்…
இப்ப வேற உள்ள போயி கதவை சாத்திக்கிட்டானே…! உள்ளுக்குள்ள என்ன நடக்குதோ தெரியலையே…! என்று புலம்பிய சீதா கன்னத்தில் விரல் வைத்து யோசித்துக் கொண்டே அங்கிருந்து சென்றவர் அடுத்தடுத்து தான் செய்ய வேண்டிய காரியங்களை சிறப்பாக செய்தும் வைத்துவிட்டார்.
அடுத்த அரை மணி நேரத்தில் அங்கு வயக்காட்டில் வேலை செய்து கொண்டிருக்கும் பெண்களுக்கு சோர்வு தெரியாமல் இருக்க வாயில் அரிசியை போட்டு அரைப்பதற்கு பதிலாக, அதற்கு இன்னும் ஒரு படி மேலே சுவாரஷ்யமாக கருப்பனும் மலர்விழியும் மாட்டிக் கொண்டனர்.
இவர்களின் பேச்சு ஏற்கனவே அரசல் புரசலாக ஊர் முழுவதும் பரவி கிடந்தாலும் அது வெளிப்புறங்களில் நின்று பேசுவதால் பெரிதாக கண்டுகொள்ளாத ஊர் மக்கள் இப்பொழுது மலர் வீட்டிற்குள் நின்று கொண்டிருப்பதாகவும் கருப்பன் வீட்டிற்குள் இருந்து வெளி வரும் போது வெற்றுடலில் சட்டையை மாட்டி கொண்டே வந்ததாகவும் தகவல் தீயாய் பரவ தொடங்கியது.
அதனை இன்னும் சிறப்பாக கதை திரைக்கதை வசனம் எழுதி பெரிதாக்கி அவர்கள் நின்று பேசியதை கூட ஏதோ அவனுடன் இணைந்து பிள்ளை குட்டி பெற்று விட்டால் என்னும் ரீதியில் அவளை மிகவும் தாழ்த்தி பேசியவர்கள்,
கருப்பன் நல்லவன் என்றும் மெட்ராஸ் காரி தான் வந்து அவனை வளச்சு போட்டு இப்படி பண்ணிபுட்டா என்றும் பல புறளிகள் ஏகபோகமாக ஊருக்குள் பரவியது.
மலர்விழி கருப்பனை பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்தவள் எப்பொழுதும் போல் காலேஜுக்கு கிளம்பி சென்று இருந்தாள்.
பேருந்து நிலையத்திற்கு வந்து மலருக்காக காத்திருந்தான் கருப்பன்.
தூரத்தில் வரும் பொழுதிலேயே கருப்பனை பார்த்து நொடியில் இருந்து பேருந்தில் ஏறி அங்கிருந்து செல்லுவரையிலும் அவனையே வைத்துக் கன் வாங்காமல் பார்த்துக் கொண்டும் கண்களால் கதை பேசி கொண்டும் இருந்த அந்த நிகழ்வும் புகைந்து கொண்டிருந்த நெருப்பில் எண்ணெய்யை ஊற்றினால் போல் ஊருக்குள் பேச பட்டது.
மாலை நேரம் காலேஜ் முடிந்து கல்லூரியை விட்டு தனது ஒற்றை காலை தாங்கி தாங்கி நடந்து கொண்டே வெளியில் வந்து கொண்டிருந்தால் மலர்.
அந்த காலேஜின் வாசலில் தான் ஜல்லிக்கட்டில் ஜெயித்து வாங்கிய பைக்கில் அமர்ந்து கைச் சட்டையை முட்டி வரை மடக்கி, அடங்க மறுத்த ஆணவனின் அடர்ந்த கரிய கேசமும், முறுக்கிவிட்டு மீசையும், அதற்கு ஏற்றார் போல் ட்ரீம் செய்யப்பட்ட தாடியும், ஆண்களுக்கே உரித்தான அழகுடன் தோரணையாக பேரழகனாக வந்து நின்ற தன்னவனை பார்த்த மார்க்கத்தில் மகிழ்ச்சியில் முகம் மலர்ந்தவள்,
பின் அவனை இஞ்சு இஞ்சாக ரசித்து கொண்டே தாங்கி தாங்கி அவனின் அருகில் வந்தவள்
“மாமா நீங்க இங்க என்ன பண்றீங்க..!” என்று கேட்டாள்.
அவள் தாங்கி கொண்டு நடந்து வருவதை கண்டு கொண்டவன் “ஏய் மலரு உனக்கு என்னடி ஆச்சு…? ஏண்டி ஒரு மாதிரி தாங்கி தாங்கி நடக்குற…! கால்ல எதும் அடிபட்டுருச்சா…?” என்று அவள் தாங்கி தாங்கி நடந்து வருவதை பார்த்து அவளிடம் கேட்டான் கருப்பன்.
அது ஒன்னும் இல்ல மாமா, நடந்து போயிட்டு இருக்கும் போது ஒரு இடத்துல கால் ஸ்லிப் ஆயிடுச்சு. அதனால லைட்டா வலிக்குது, அது கொஞ்ச நேரத்துல சரியா போயிடும்” என்றால் மலர்.
“சரி பைக்ல ஏறு நம்ம அப்படியே ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வரலாம்…!” என்று கூறி பரபரத்தான் கருப்பன்.
“ஹாஸ்பிடலுக்கா….! அய்யோ மாமா ஹாஸ்பிடலுக்கு போற அளவுக்கு எல்லாம் பெரிய காயம் இல்ல, இன்னும் கொஞ்சம் நேரம் அப்பிடியே விட்டா அதுவே சரியாகிடும் மாமா…!”.
“அட மலரு, என்ன பிரச்சனைன்னு ஆரம்பத்திலேயே நம்ம பாக்குறது நல்லது தானே…! உனக்கு தான் கால்ல வலி இருக்குல்ல, ஒரு தரம் டாக்டர பாத்துப்புட்டு வந்துருவோம்…!
பெருசா பிரச்சனை இல்லனாலும் வலிக்காவது ஊசி போட்டு மாத்திரை மருந்து வாங்கிட்டு வரலாம் வா…!”என்று அவளை பைக்கில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனை சென்று இருந்தான் கருப்பன்.
மருத்துவமனையில் மலரின் காலை பரிசோதித்த மருத்துவர் அவளுக்கு சிறிய சதை பிடிப்பு தான் என்றும் அதற்கு சிறிது நேரம் காலை அசைக்காமல் வைத்திருந்தாலே சரியாகிவிடும்…! என்றும் கூறியவர் அவளுக்கான மாத்திரை மருந்துகளை எழுதி கொடுத்து அனுப்பினார்.
அதனை பெற்றுக் கொண்டவன் அவளுக்கான மாத்திரை மருந்துகளை வாங்கி அவளை பைக்கில் அமர்த்தி கொண்டு தங்களின் ஊரை நோக்கி பைக்கை செலுத்தினான்.
பைக்கில் வரும் பொழுது மலர் கருப்பனிடம் “ஆமா…! மாமா நீங்க இந்த நேரத்துல இங்க என்ன பண்ணிட்டு இருந்தீங்க…?” என்று கேட்டாள்.
“அதுவா…, நான் இந்த பக்கம் ஒரு வேலையா வந்தேன், அதான் அப்படியே உன்னையும் கூட்டிட்டு போயிடலாமேன்னு…”
“உங்களுக்கு எதுக்கு மாமா சிரமம்…?”
“ஏய் லூசு, இதுல எனக்கு என்னடி சிரமம் இந்த பக்கம் ஒரு சோலி இருந்துச்சு, சரி அப்படியே ஊருக்கு போகும்போது உன்னையும் கூட்டிட்டு போயிடலாம்னு நினைச்சேன்..! நான் வந்தது கூட நல்லதா போச்சு, இல்லன்னா இந்த கால் வலியோட பாவம் நீ சிரமப்பட்டு பஸ்ல வந்து இருக்கணும் என்ன….!” என்றான் கருப்பன்.
“அப்பொழுதே தான் அமர்ந்திருந்த பைக்கை கவனித்தவள் ஆமா இந்த பைக்.. ஜல்லிக்கட்டுல வின் பண்ணது தானே…!” என்று கேட்டாள்.
“ஆமா அது தான். இதனால் வரைக்கும் எடுத்து ஓட்டாம வீட்டுக்குள்ளயே மூடி கெடந்துச்சு. இன்னைக்கு உன்ன இதுல கூட்டிட்டு போகணும்னு ஆசையா இருந்துச்சு அதனால தான் எடுத்துட்டு வந்தேன்…!”
“ஏதோ வேலையா வந்தேன்னு சொன்னீங்க….?” என்று கண்ணாடி வழியாக பார்த்து ஒற்றை புருவம் உயர்த்தி கேட்டாள்.
“வேலையா தான்டி வந்தேன். என் வருங்கால பொண்டாட்டிய பத்திரமா கொண்டுட்டு போயி ஊட்டுல விடுற முக்கியமான வேலையா வந்தேன்…!” என்றான் கருப்பன்.
அவன் கூறிய விதத்தில் முகம் சிவந்தவள் புன்னகைத்து கொண்டே அவனின் தோளில் கை போட்டு அவனை காதலோடு பார்த்தவாரு அமர்ந்து இருந்தாள்.
சுற்றிலும் இயற்கையை பறை சாற்றும் வகையில் வயலில் படர்ந்து இருந்த புல் வெளிகளும், பெரிய பெரிய மரங்கள் வளர்ந்திருக்கும் தோப்புகளும் நிறைந்த மண் சாலையில் மேடு பள்ளங்கள் நிறைந்த பகுதியில் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் இரண்டு காதல் கொண்ட இளம் பறவைகள் தங்களின் இணை தனக்கு மிக அருகில் இருக்கும் மகிழ்ச்சியில் மனம் முழுவதும் ஒரு வித நிறைவில் துள்ளலாக அந்த நிமிடங்களை அனுபவித்து கொண்டு இருந்தது.
கருப்பன் என்னதான் அவளுடன் இருக்க வேண்டும் அவளுடன் நேரம் செலவிட வேண்டும் என்று நினைத்து அவளை அழைப்பதற்காக வந்திருந்தாலும் எந்த ஒரு இடத்திலும் அவனது பார்வையும் எண்ணமும் அவள் மேல் தவறாக கூட படியவில்லை.
ஏன் வரும் வழியில் கூட கடந்து வந்த மேடு பள்ளங்களில் பொறுமையாக தான் வண்டியை ஏற்றி இறங்கினான்.
அதனை கவனித்த மலர்விழியோ
தன்னவனின் இந்த கண்ணியமான செயலில் தன்னவனை நினைத்து மனம் பூரித்துப் போனவள்,
“ஏன் மாமா…, இவ்ளோ மெதுவா உருட்டினீங்கன்னா எப்ப வீடு போய் சேர்றது…?” என்றாள்.
“போலாண்டி, வேகமாக போயிட்டா உன்னை சீக்கிரம் வீட்டுல விட்டுட்டு போக வேண்டியதா இருக்குமே அதனாலதான் இவ்வளவு மெதுவா போறேன்…!”
“ம்ம்.. சரித்தென் நான் லேட்டா போனா மயிலு வேற எனக்கு என்னாச்சோ ஏதாச்சோன்னு பயந்துகிட்டு கேள்வி மேல கேள்வி கேட்பா மாமா,
நம்ம வேணும்னா நாள பின்ன வெளிய வேற எங்கேயாவது போயி டைம் ஸ்பென்ட் பன்றதுக்கு பிளான் பண்ணிக்கலாம். ஆனா இப்ப வெரசா வண்டிய விடுங்க மாமா…!” என்றால் மலர்.
“அப்படியா..! அப்ப சரி நீயே சொல்லிட்ட, அப்புறம் என்ன…!” என்றவன் பைக்கின் ஹியரை முறுக்க, அவன் முறுக்கிய வேகத்தில் வேகமாக சென்று கருப்பனின் மார்பில் தனது மெண்மை அழுந்த மோதி பின் விலகினால் மலர்விழி.
ஆணவனின் இரும்பு போல் இறுகி இருந்த அந்த தேகத்தில் பூப்பந்தாய் பெண்ணவளின் மென்மை தழுவி சென்றதை உணர்ந்த அந்த காட்டானுக்கு ஒரு நொடி தனது உடல்கள் அதன் இயக்கத்தை நிறுத்தியதை போல் உறைந்து மீண்டவன் பைக்கை ஒரு ஓரமாக நிறுத்தி,
“அடியே மலரு.. நாம்பாட்டுக்கு பொறுமையா போயிட்டு இருந்தேன். வெரசா போ அது இதுன்னு சொல்லி ஏண்டி இப்படி மனுஷன உசுப்பேத்தி உட்டுட்டு இருக்குற…?” என்று கேட்டான் கருப்பன்.
“ஏன் மாமா அப்பிடி சொல்றிங்க…? நான் என்ன பண்ணேன்..?” என்று ஒன்றும் புரியாமல் கூறினால் மலர்விழி.
“ஏன்… நீ என்ன பண்ணன்னு உனக்கு தெரியாதாக்கும்…?”
“அட என்ன மாமா நீங்க … என்னன்னு சொல்லுங்க…?”
தனது கழுத்தை திருப்பி அவள் முகம் பார்த்தவன் இதழ் விரித்து குறும்பாக புன்னகைத்துக்கொண்டவன் ஒன்னுமில்லை என்று கூறிவிட்டு பைக்கை கிளப்ப,
வெகு நேரமாக அவன் கூறியதைப் பற்றி யோசித்தவளுக்கு இறுதியாக தான் அவன் மீது மோதியது நினைவில் வரவே,
அவனின் முதுகில் நான்கைந்து அடி அடித்தவள் “என்னைய திருட்டு பூனைன்னு சொல்லிட்டு நீங்களும் இப்போ திருட்டுப்பூனை வேலை தானே பார்த்துட்டு இருக்கீங்க….?” என்று கேட்டாள் மலர்.
“இது திருட்டுப் போன வேலை இல்லடி…! இது ஒரு மாதிரியான கள்ள பூனை வேலை …!” என்று ஒருவித மார்க்க குரலில் கூறினான் கருப்பன்.
அவன் கூறிய விதத்தில் பெண்ணவள் முகம் மேலும் சிவந்து விட, அதன் பிறகு எதுவும் பேசாமல் அமைதியாக வந்தாள்.
இருவரும் ஒரு வழியாக ஊருக்கு வந்து சேர்ந்தனர். கருப்பன் ஊருக்குள் பைக்கை திருப்பினான்.
அதனை பார்த்த மலரோ “மாமா நான் இங்கயே இறங்கிக்கிறேன்…!”
“ஏண்டி..!”
“இல்ல மாமா நம்ம காதலிக்கிற விஷயம் உங்களையும் என்னையும் தவர வேற யாருக்கும் தெரியாது…! இப்படியே ஊருக்குள்ள போனா அவங்க நம்மள தப்பா புரிஞ்சுகிட்டு உங்களை என்னையும் பேசுவாங்க…!
அது உங்களுக்கு தானே தேவை இல்லாத சங்கடம்… அதனால நான் இங்கே இறங்கிக்கிறேன்…!”
என்றவள் பைக்கில் இருந்து இறங்கி அவனின் முகம் பார்த்து அவன் குடுத்த மருந்துகளை வாங்கி கொண்டு அவனை விட்டு பிரியும் ஏக்கங்களை கண்களாலேயே பரிவர்த்தனை செய்துவிட்டு அங்கிருந்து செல்ல போகும் அவளையே விழியகலாது பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான் கருப்பன்.
இவர்கள் இருவரும் பைக்கில் வந்து இறங்கியதை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஊர்க்காரர்களின் கண்ணிலும் இது தவறாமல் பட்டுவிட்டது.
காதல் கொண்ட இரு மனங்களும் தற்பொழுதுதான் தங்களின் காதலை வெளிப்படுத்தி நன்றாக பேசவே ஆரம்பித்து இருக்கிறார்கள்
ஆனால் கருப்பனிடம் அவளின் கால் வலிக்கு அவள் வாங்கி சென்ற மருந்துகளை பார்த்து ஊருக்குள் கிளம்பிய புரளி என்னவென்றால்….!
ஒரு வேலை மலரும் கருப்பனும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசிக் கொள்வதால் அவர்களுக்கு இடையில் தவறு நடந்து அதன் விளைவாக மலர்விழி கருவுற்று இருப்பாளோ …! அதனால்தான் மலர்விழியை கருப்பன் பைக்கில் மருத்துவமனைக்கு எங்கும் அழைத்துச் சென்று மருந்து வாங்கி வந்து தருகிறானோ…!” என்ற ரீதியில் புரளி வெகு விமர்சையாக பேசப்பட்டு கொண்டிருந்தது.
கருப்பன் வேட்டை தொடரும்…
💝கருப்பனின் காரிகையவள்💝💝💝
கமெண்ட் வேணும் 🙏🏻
error: Content is protected !!