Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

43. தனுஜா செந்தில்குமார் - மண் கொடுத்த மாணிக்கம்

மண் கொடுத்த மாணிக்கம் – 15

அத்தியாயம் – 15
பெரியவர்கள் முன் வெகு அழுத்தமாக அமர்ந்திருந்தான் லட்சுமணன்.அன்றைய பேச்சுக்கு பிறகு ஒரு வாரம் கழித்து வள்ளியப்பனை நச்சரித்து.இதோ சுப்பிரமணியன் அப்புச்சி,சின்னப்ப செட்டியார்,சுந்தரம் அப்புச்சி மூவரையும் ஒரே இடத்தில சந்திக்குமாறு ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு வள்ளியப்பன் விலகி கொண்டார்.


Advertisement

வந்து பொதுவான நல விசாரிப்புகளுக்கு பின்பு அமைதியாக இருந்தவனை பார்த்து “சொல்லுக பேரன் மாறே என்ன சங்கடம் உங்க அப்புச்சி மேல?” சுப்பிரமணியன் சிறு புன்னகையுடன் கேட்க மெதுவாக மூவரையும் ஒரு முறை பார்த்தவன்.
“அவுக மேல சங்கடப்பட எனக்கு எதுவும் இல்லங்க அப்புச்சி?” எடுத்த எடுப்பிலே அடித்தான் சதம் லட்சுமணன்.

Advertisement

Advertisement

“அப்பாவே என்ன கோபம் உங்களுக்கு? எத்தினி நல்ல பிள்ளை நீக” அத்தனை கொஞ்சலாகக் கேட்டு வைத்தார் சுந்தரம்.அவருக்கு லட்சுமணனை ரொம்பவும் பிடிக்கும் அடிக்கடி அவனைப் பற்றித் தனது மனைவியிடம் சொல்லி கொண்டே இருப்பார்.
லட்சுமணனை வருடத்தில் ஒரு முறை என்ற கணக்கில் குலசாமி கோவிலில் கண்டாலும்.அவனது வளர்ச்சி,குணம் என்று யார் மூலமாவது அவனைப் பற்றிச் செய்திகள் கேட்ட வண்ணமாக தான் இருக்கும்.அதனால் கொஞ்சம் கூடுதல் வாஞ்சை அவன் மேல்.சின்னப்பனுக்கு அவனைப் பற்றி முழுமையும்  தெரியும், கண் பார்க்க வளர்ந்து பிள்ளை என்பதால் அமைதியாக வேடிக்கை கொண்டார்.

Advertisement

“பெரிவுக எல்லாரும் நான் பேசுறதை வச்சு என்னைத் தப்ப எடுத்துக்காதீக. என் பேச்சு யாரையும் சங்கடப்படுத்த கூடாதுன்னு எண்ணி வைக்கிறேன் அந்த எண்ணத்துல தேன் பேச வந்திருக்கேன்.
“சொல்லுக அப்பாவே!”
“உங்களுக்கே தெரியும் எங்க கதை, எங்க ஆத்தா தனுச்சு கிடந்து இத்தினி நாள் போராடி என்னைப் பெரிய ஆக்கி விட்டுருக்காக, அதுக்கு அவுக பட்டபாடு கொஞ்சம், நஞ்சமில்லை. உண்,உறக்கம் பிடிக்காம பேய் கணக்கா உழைப்பாக. முழு ராவு தூக்கம் அவுக தூங்கி நான் பார்த்தே இல்லை.
அப்படி என்னைப் பார்த்து, பார்த்து வளர்த்தவுகளுக்கு நான் என்ன செஞ்சேன்? என்ன செய்யப்போறேன்னு தெரியாம தடுமாறி கிட்டு கிடக்கேன் அப்புச்சி.இதுல ஐயா எழவு வேற அதை கொண்டு உரசல். முன்ன போல ஆத்தா இல்ல இப்போ அவுக உடம்பும் தேய்ஞ்சு போச்சு.அவுக நோவு வந்து படுக்கவுந்தேன் கல்யாணம் பண்ண எண்ணி வச்சேன்” இந்த இடத்தில் லட்சுமணன் நிறுத்த.
“கேள்வி பட்டோம் வள்ளியப்பன் மகளைத்தேன் உறுதி எடுத்து வச்சீங்களாமே” சுந்தரம் குறும்பு சிரிப்புடன் லட்சுமணனை பார்த்து கேட்க.
“ஆமா அப்புச்சி அவர் இல்லன்னா நாங்க இன்னைக்கு இல்ல. அதுக்காக நன்றிக்கு வேண்டி அவுக மகளைக் கட்டல, மனசு விரும்பி நானா வழிய போயி கேட்டு உறுதி செஞ்சேன். கண்ணாத்தா அயித்தக்கு இந்த உறுதி நிமிஷம் வரை உறுத்தல்தேன்.அவுக ஊருக்கும், உறவுக்கும் பயந்து நிக்கிறாக” எங்கே மாமன், மாமியை தவறாக எண்ணி விடுவார்களோ என்று அவர்களது மனநிலையையும் கொடி காட்டி நின்றான்..
“பொண்ண பெத்தவுக சங்கடப்படத் தேன் செய்வாக அப்பு. அண்ணாமலை அப்புச்சி வேற வம்பு செஞ்சாரமே அப்போ புள்ளையக் கொடுக்குறவுக யோசனை பண்ணதேன் செய்வாக”, சுப்பிரமணி அப்புச்சி.
“அப்புச்சி என்னை விடச் சொல்லுக நான் பழசை பேசி நிக்கல. அம்மா, மாமா, அயித்த, சாலா – நான் இது போதும் எனக்கு” என்றவன் பேச்சில் மூவரும் ஒருவரை, ஒருவர் அர்த்தமாகப் பார்த்து கொண்டனர்.
“சரி அப்பு இப்போ நாங்க என்ன செய்யனும்? எங்களை என்ன செய்யச் சொல்றீக?” சுந்தரம்.
“நீகத்தேன் ஐயா தாத்தா கிட்ட பேசி வைக்கனும் அவுக புரிதல் இல்லாம அம்மா, மாமான்னு, சாலா வரை நோக செய்றாக அவுக இழுப்புக்கு என்னை இழுக்கப் பாக்குறாக, இது எந்த விதத்துல நியாயம்?
காசு பணத்துல செய்ய வேணாம் ஒரு ஐயாவா, ஒரு தாத்தாவா இத்தினி நாள் எனக்கும் ஆத்தாளுக்கும் என்ன செஞ்சாக? அவுக பையனை என்ன கண்டிச்சு விட்டாக? அதுக்கு மேல ஆத்தா பொறந்த வூடு அத்தினி சொந்தம் இருந்தும் அவுங்களுக்கு யாருமே நியாயம் செய்யல அப்புச்சி. வள்ளி மாமா நிழல் கிடைச்சதுட்டு போச்சு இல்லன்னா எங்க கதி என்ன? ஒரு பாட்டில் பூச்சி மருந்துதேன்” பட படவென பொரிந்தவனை.
“என்ன பேச்சு இது அப்பு? இத்தினி பெரிய பொறுப்புல இருந்துகிட்டு என்ன பேச்சு பேசுறீக?” கொஞ்சம் அதட்டலாகச் சின்னப்பன் கண்டித்தார்.கூடவே இருந்து அவனைப் பார்த்தவர் என்ற உரிமையில் அவர் பேச லட்சுமணனும் கொஞ்சமாக உடைந்தான்.
“என்ன வேற என்ன செய்யச் சொல்றீக மாமா? உங்களுக்குத் தெரியாதது எதுவுமில்லை. கல்யாணம் பேச்சை தொடங்குன நாள் கணக்கா தடை பண்ணிகிட்டே இருந்தா நான் வாழ்றதா என்ன?” நேரடியாகவே சொல்லி விட்டான்.
“உங்க தவிப்பு புரியுது முப்பது நாள் மட்டும் பொறுக பொறவு பிரியம் இருந்தா உங்க ஐயாவுக்குப் பூசையைப் போட்டு கல்யாண வேலையைத் தொடங்கிடுக” என்றார் சுப்பிரமணியன் அப்புச்சி.
“நியாயம் இருக்குற பக்கம் நாங்க இருப்போம் அப்பாவே நம்பி செய்க. புள்ளைங்க சுகப்படத்தேன் பெத்தவுக சுமை தாங்கி நிக்கிறோம். உங்க ஆத்தாளும் அந்த வகைத்தேன் நல்ல பார்த்துக்கிடுக” என்றார் சுந்தரம். வந்த வேலை இத்தனை சுலபமாக முடியும் என்று லட்சுமணன் எண்ணி வைக்கவில்லைப் போலும் முகத்தில் மலர்ச்சியுடன்.
“நீக சொன்ன மாதிரியே முப்பது நாள் போகட்டும் நான் கல்யாண வேலைய தொடங்கிடுறேன்” என்றவன் எழுந்து கொள்ளப் பார்க்க.
“இருக காரியம் கைக்கு வந்த உடனே ஓடுறீகளே பொல்லா டாக்டரு போக” சுந்தரம் வம்பு செய்ய அழகாகச் சிரித்தான் லட்சுமணன்.
“சொல்லுக அப்புச்சி?”
“உங்க தரப்பு சொன்னீக நியாயந்தேன் மறுத்து பேச வாய்ப்பே இல்லை அதேன் உங்களுக்குச் சாதகம் செஞ்சோம், ஆனா உங்க ஐயா தாத்தாவுக்கு நாங்க என்ன செய்யன்னு தெரியலையே” என்றதும் புருவம் சுளித்து அவரை கேள்வியாக லட்சுமணன் பார்க்க.
“என்ன சொல்றீக?”
“உங்களைப் போலவே, எங்களைக் கூட்டி, போன திங்களுக்குத்தேன் என் பேரனை மீட்டு குடுகன்னு கேட்டாக” என்றதும் லட்சுமணன் முகம் இறுகி போனது நொடியில் அவன் முகம் வாடி நிற்பதை பொறுக்க முடியாத சின்னப்பன்.
“ஐயா! எதுக்கு முகம் வாடி போறீக? அப்படி உங்களைத் தூக்கி கொடுக்கவா அந்தப் பாடுபட்டு உங்க ஆத்தா வளர்த்தாக எங்களுக்கும் நியாயம் தெரியும் அப்பாவே. ஒரு வார்த்தை உங்க காதுலையும் போட்டு வைக்கிறோம்.
ஏன்னா உங்க கல்யாணத்துக்கு முதல் நாள் உங்க தாத்தன் கூட அங்கன வருவோம்.அப்போ எங்க மேல நம்பிக்கை வச்சு நாங்க சொல்றதை நீக மறுக்காம செய்யனும்” என்றதும் ஏன்? எதற்கு? என்று துருவி கேள்வி கேட்காமல் சரியென்றி தலை ஆட்டி வைக்க.
லட்சுமணனின் இந்தச் செயல் வெகுவாகப் பெரியவர்களை ஈர்த்து வைத்தது,“எதையும் போட்டு மனசை குழப்பி வைக்காதீக நடப்பை ஈசன் பார்த்துக்குவான்” மூவரும் எழுந்து நின்று அவனை அனைத்து விடை கொடுத்தனர். சிறு தலையசைப்புடன் விடைபெற்றவனை பார்த்துக் கொண்டிருந்த இருவரையும் கலைத்தார் சின்னப்பன்.
“என்னக அண்ணே!”
“சின்னப்பா பையன் அத்தினி தெளிவு அண்ணாமலை அண்ணே சொன்னதுல ஒரு பகுதி கூட இந்தப் பொடிசு இல்லையே ஏமாத்தி கல்யாணம் கட்டுர ஆளா இவுக” அண்ணாமலை அது போல் தான் சொல்லி வைத்திருந்தார்.
“நாந்தேன் அப்பவே சொன்னேனே வள்ளியப்பன் கிட்ட போயி பொண்ணு கேட்டது இவுகதேன் ஒரு நாள் பேச்சு கொடுத்தப்ப கட்டுனா சாலா தேனு உடைச்சு சொல்லிப்புட்டாக”
“என்ன சொல்றீக சின்னப்பா? இரண்டும் ஆசை பட்டுச்சுகளோ?”
“இல்ல அண்ணே! அந்தப் புள்ளைக்கும் சங்கதி தெரியாது? லட்சுத்தேன் விருப்ப பட்டு கேட்டாக” என்றவர் அன்று தந்தை வழி சொந்தம் மாப்பிளை பார்க்க வந்த கதையைச் சொல்ல அனைத்தையும் கேட்டுக் கொண்டார்கள்.
“அண்ணே! கூடவே இருந்த சலுகையில சொல்லுறேன் புள்ள தங்கம் அதுக்கு நம்ம நியாயம் செஞ்சுப்புடனும்”
“பேசிடலாம் சின்னப்பா அண்ணாமலை ஏன் கல்யாணத்துக்கு முதல் நாள் பேச சொன்னாகன்னு இப்போதேன் புரியுது. என்ன பெரிய மனுசனா இருந்தாலும் இரத்த வாடை காட்டும் போது எல்லாம் சுயநலவாதித்தேன் போல” அண்ணாமலை எண்ணத்தை எண்ணி சுப்பிரமணியன் எரிச்சலாக சலித்து கொண்டார்.
இன்னும் சில மணி நேரங்கள் இருந்து லட்சுமணன், வள்ளி என்று மூவரும் அலசி அண்ணாமலை என்ன செய்தாலும் லட்சுமணன் பக்கம் நிற்க வேண்டும் என்ற முடிவுடன் கலைந்து சென்றனர்.வெகு நாளுக்கு பிறகு மூவரிடமும் பேசி தெளிந்த லட்சுமணன் கொஞ்சமாக இறுக்கம் தளர்ந்து நிற்க.மெல்ல மாமன் வீட்டுக்கு வண்டியை விட்டான்.
மகனை காண தவியாய் தவித்திருந்த மீனாள் மகனை கூடத்தில் காணவும் ஓடாத குறையாக ஓடி தாவி அனைத்து கொள்ள.சாலா அவனை முறைத்து நின்றாள்.வள்ளியப்பனும் கண்ணாத்தாளும் வெளியில் சென்று இருந்தார்கள் போலும்.
“ஆத்தா என்ன ஆச்சு?” என்றவன் பார்வை கேள்வியாய் சாலா மேல் பதிய அவளோ முறைத்து நின்றாள்.
“என்ன ஆத்தா? என்ன ஆச்சு?”
“என்ன ஆச்சுன்னு கேள்வி வேற வரும் போதெல்லாம் முகத்தை திருப்பி கிட்டு போனா அவுக என்ன செய்வாக. உங்களுக்கு இருக்கும் ஆயிரம் பிரச்சனை அதுக்கு ஏன் அவுங்கள நோக செய்றீக?” என்றவள் மீனாளிடம் திரும்பி.
“அயித்த செத்த உட்காருக அமைதி எடுக? ” என்றவள் மீனாளுக்கு குடிக்க தண்ணீர் கொடுக்க தாய்யை அனைத்து கொண்டு அவனும் அவளுடன் சரிந்து அமர்ந்து கொண்டான்.
“ஐயா ஆத்தா மேல கோவமா?”
“ப்ச்! ஆத்தா வேலை என்றவன் தாய்யை வருந்த செய்து விட்டோம் கவலை கொண்டவன் லேசாக அனைத்து தப்புத்தேன் ஒன்னுமில்ல கோச்சுக்கிடாதீக இனி இது போல நடந்துக்க மாட்டேன்” என்றவன் உறுதியில் கொஞ்சமாக அவனை கட்டி கொண்டாள் மீனா.
சில நொடிகள் நின்ற சாலா தாயிக்கும், மருமகனுக்கும் தனிமை கொடுத்துவிட்டு விலகி சென்றவள்.லட்சுமணனுக்கு குடிக்க டீ தயாரிக்க.தாயிடம் பேசி சமாதானம் செய்தவன்  “ஆத்தா மேலுக்குக் கொஞ்சம் ஊத்திக்கிட்டு வரேன் இருக”
“சரிய்யா” என்றவள் இப்போது தான் கொஞ்சமாகத் தெளிந்தாள்.
அங்கே உள்ளே சென்றவனை எதிர் கொண்டு முறைத்தவாறு காப்பி லோட்டாவை நீட்ட அதனை வாங்கிக் கொள்ளாமல் சென்றவனை இன்னும் முறைத்து.
“இந்தாருக நில்லுக?” என்றவள் பேச்சை கேட்காமல் கிணத்து மோட்டில் வந்து நின்றவன் பின்னே காப்பி லோட்டாவை கொண்டு சென்றவள் எதுவோ பேசும் முன்னே சடாரெனத் திரும்பி அவளை அணைக்கக் காப்பி லோட்டா தளும்பி நின்றது.
“என்ன செய்றீக?” பதறியவள் கண் பார்த்து.
“சாலா ஆச்சி என்ன கண்ணைக் காட்டி மிரட்டி வைக்கிறீக” நுனி விரல் கொண்டு கன்னத்துக் கதப்பில் உள்ள சிறு முடிகளைச் சீண்டி விட பெரும் மயக்கத்தைத் தழுவ பார்த்த அரிவை தலையை உதறி கண நேரத்தில் சுதாரித்து.
“என்ன வேலை செய்றீக? ஐயா, ஆத்தா வந்தா என்ன ஆகும்? அயித்த வேற இருக்காக”லட்சுமணன் கையில் மீனாகத் துள்ளியவளை அடக்கி வலிக்கப் பிடித்துக் கழுத்தில் முகம் புதைத்தவன்.
“ஆட்டம் கட்டாம இருந்தீகன்னா செத்த நேரம் இங்கன என்றவன் கழுத்தில் இன்னும் தனது மூக்கை நுழைந்து கொண்டு இதோ இப்படி இளப்பாறிக்கிட்டு விட்டுருவேன் இல்லன்னா பார்த்துக்கிடுங்க”
“என்ன மிரட்டி வைக்கிறீகளா?” என்றதும் சட்டென நிமிர்ந்து அவளைப் பார்த்தவன்.
“ஆமா சாலா ஆச்சி வர, வர லட்சு செட்டி பொறுமைய எல்லாம் சோதிச்சு பார்க்குறாக அதேன் ” என்றவன் பேச்சில் உண்மைக்கும் பயம் வர அமைதியாக இருந்தவளை கழுத்தில் புதைந்தவாறு.
“என்ன பேச்சை கண்ணோம்?”
“அப்படி இந்தக் கல்யாணம் தேவையா?” என்று சாலா கேட்டது தான் தாமதம் மிக பொறுமையாகத் தள்ளி நிறுத்தி அவள் கண் பார்த்து.சன நேரத்தில் கிணத்தில் குத்திருந்தான் லட்சு.அவனது செயலை முற்றிலும் எதிர்பாராதவள் அலறி வைக்க.அப்போது தான் உள்ளே நுழைந்த வள்ளியப்பனும், கண்ணாத்தாளும் சாலா குரல் கேட்டு அங்கு விரைந்தனர்.
அமைதி எத்தகைய ஆபத்து என்பதைச் சாலா அறிந்து நொடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!