Skip to content
Post Views: 5,826
“குறள் 832: பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை கையல்ல தன்கண் செயல்
மு.வ விளக்க உரை: ஒருவனுக்கு பேதைமை எல்லாவற்றிலும் மிக்க பேதைமை, தன் ஒழுக்கத்திற்குப் பொருந்தாததில் தன் விருப்பத்தை செலுத்துதல் ஆகும்.”
அன்றைய தினம் அதன் பின் அதிரனின் முன் தவறியும் வரவில்லை தேவா. காரிலிருந்து இறங்கி மின்தூக்கியில் வந்து நின்றவன் வெளியே வருவதற்கு முன்பாக அவளிடம்,
“இன்னைக்கு இதுக்கப்பறம் என் கண்ணுலேயே பட்றாத அப்பறம் கட்டுப்பாடாவது மண்ணாவதுனு தூக்கிப் போட்டுருவேன்.”, என்றவன் வேக வேகமாய் மீட்டிங்கிற்குச் சென்றிருந்தான்.
Advertisement
இதற்கு பின்னும் அவனருகில் செல்லுமளவு தேவா முட்டாளா என்ன?
மாலை வேலை முடிந்து கிளம்பும் போது தான் அவனோடு வந்தது நினைவு வர ஆட்டோவில் செல்லலாம் என்று முடிவெடுத்தவள் வெளியே வந்த போது அதிரனும் அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான்.
“போலாமா?”
Advertisement
“இல்ல நான் ஆட்டோலேயே போய்க்குறேன்..”
Advertisement
“தேவையில்ல. வா போலாம்..”, என்றவனோடு அமைதியாகவே சென்றவள் காரிலும் வாயைத் திறக்கவில்லை.
“ரொம்ப சோதிக்குற ரஞ்சு..”, என்றவன் எப்போதும் போல் தனது கரத்தை நீட்ட அதில் கரம் கோர்த்துக் கொண்டவள் பேசாமல் வெளியில் வேடிக்கைப் பார்த்த படி வந்தாள்.
“சின்ன வயசில் எப்பவோ அம்மாகிட்ட வாங்கின முத்தம் அதுக்கப்பறம் இப்போ தான் அதுவும் உன்கிட்ட இருந்து நீயாவே கொடுத்த முத்தம். கொஞ்சம்.. இல்ல ரொம்பவே ஸ்பெஷலா ஃபீல் பண்ணேன்.”
Advertisement
“…”
“மூளை குழம்புது டி..”, என்றவனின் குரலும் பேச்சும் பெண்ணவளை பித்தாக்குவதாய்.
“வாயை திறந்து பேசேன்..”
“இந்த இன்ட்ரோவெர்ட் பையன் கெஞ்சி கொஞ்சி எல்லாத்துக்கும் மேல ரொம்ப அழகா அன்பு வைச்சு என்னை பேச விடாம பண்ணினால் நான் என்ன பண்றது..”
“அவனை இன்னும் இன்னும் உன் மேல பைத்தியமாக்கு..”
“அதி நீங்க கிடைக்குறதுக்கு நான் ரொம்பவே லக்கி. தேங்க் யூ ஃபார் கம்மிங் டு மி.”
“நீ கிடைக்குறதுக்கு நானும் லக்கி தான். இவ்வளவு மெச்சூர்ட் ஆன ஒரு ரிலேஷன்ஷிப் எல்லாம் நான் எதிர்பார்க்கவே இல்ல.
அதை விட அ கேர்ள் மேக்கிங் மி டு ஃபால் ஃபார் ஹெர். அது ரொம்பவே பிடிச்சுருக்கு.”
“தேங்க் யூ மை டியர் ஹீலர்.. (Healer)”
“என்ன இது ஹிட்லர் மாதிரி?”
“ரஞ்சனா ரஞ்சு திமிரழகி.. இத்தனை இருக்கு உங்களுக்கு. எனக்கு எதாவது வேண்டாமா?”
“அதிரன் இருக்கானே மொத்தமா..”, என்றதில் புன்னகையோடு அவனது தோள் சாய்ந்து கொண்டாள்.
அந்த வாரத்தில் மருத்துவக் கல்லூரியைப் பார்வையிடுவதற்காக அதிரன் கிளம்ப தேவாவையும் தன்னோடு அழைத்துக் கொண்டு கிளம்பியிருந்தான்.
வசந்தும் அவனும் தொழில் விஷயமாய் பேசிய படி வர தேவா அமைதியாய் கைப்பேசியைப் பார்த்த படி அமர்ந்திருந்தாள்.
கல்லூரியை அடைந்து பழைய முதலாளியோடு அதிரன் பேசிக் கொண்டிருக்க அலுவலக ஊழியர்களில் தேவாவை தெரிந்தவர்கள் அவளிடம் ஓரிரண்டு வார்த்தை பேசிச் சென்றனர்.
“ரஞ்சனா!”, என்ற அழைப்பில் அதிரனின் புறம் வந்தவள் தாளாளரைப் பார்த்து சிநேகமாய் புன்னகைத்து நமஸ்கரித்தாள்.
“இவங்க..”
“நல்லா தெரியுமே சார் உங்களை கல்யாணம் பண்ணிக்க போறவங்க..”
“அதோட இந்த காலேஜோட பொறுப்பெடுத்துக்க போறதும் இவங்க தான்.”, என்றதில் அதிர்ந்து போய் அதிரனைப் பார்த்தாள் தேவா.
“சேர்மன் நானா இருந்தாலும் இங்கே முழு அத்தாரிட்டி இருக்கப் போறது வைஸ் சேர்மனான இவங்களுக்கு தான்.
ஏற்கனவே இங்கே அவங்களுக்கு அனுபவம் இருக்குறதுனால ஈசியா ஹேண்டில் பண்ணிப்பாங்க.
சோ எல்லா விவரங்களையும் நாளையிலிருந்து இவங்களுக்கு சொல்லிடுங்க. சோ தட் டேக் ஓவர் பண்ணும் போது கொஞ்சம் ஈசியா இருக்கும்.”
“ஷுவர் சார் நான் பர்த்துக்குறேன்.”, என்றவரோடு மேலும் சில நிமிடங்கள் பேசி விட்டு நகர்வதற்காகவே காத்திருந்தவளாய்,
“என்கிட்ட கேட்க மாட்டீங்களா?”
“ஏன் என்ன பிரச்னை?”
“ஏன்னு கேட்டா என்ன அர்த்தம்? என்னோட விருப்பம்னு ஒண்ணு இருக்குல. இதெல்லாம் எனக்கு வேண்டாம். நான் உங்க வைஃப் அவ்வளவு தான்.”, என்றவளுக்கு கோவத்தில் முகம் சிவந்திருந்தது.
“வைஃப் புருஷனோட வேலையில் உதவி பண்றதும் அடங்கும் தான?”
“நீங்க பேச்சால் என்னை மடக்காதீங்க. எனக்கு இது வேண்டாம்.”, என்றவள் முடிவாய் கூறி விட்டு காருக்குச் சென்றிருந்தாள்.
அதிரன் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை அவன் போக்கில் வேலைகளைக் கவனிக்க ஐந்து நிமிடத்திற்கு மேல் அவளை சமாதானம் செய்யாது வேலை ஓடும் எனத் தோன்றவில்லை அவனுக்கு.
கடுப்பானவனாய் தேவாவைத் தேடிச் செல்ல அவள் காரின் அருகில் மரத்தடியில் அமர்ந்திருந்தாள்.
“ரஞ்சனா என்ன இது குழந்தை மாதிரி பிகேவ் பண்ணிட்டு இருக்க?”
“நியாயமா பேசினா குழந்தை தனமா தெரியுதா உங்களுக்கு?”
“இனாஃப். சொன்னவுடனே கேட்டுக்க மாட்டியா? எதிர்த்து எதிர்த்து பேசினால் என்ன அர்த்தம்.
நாம எங்க இருக்கோம்னு கூட புரியலையா உனக்கு.
இங்கேயே இப்பவே ஆர்க்யூ பண்ணி ஆகணுமா?”, என்றவனின் கரங்கள் பாக்கெட்டில் இருக்க பக்கத்தில் நடந்து செல்பவருக்குக் கூட கேட்காத குரலில் வார்த்தைகளைத் துப்பிக் கொண்டிருந்தான் தேவாவிடம்.
அவனது உடல்மொழி அவனது கோபத்தை பறை சாற்ற நொடியில் அதிரனின் கரத்தை வெளியில் இழுத்து கரங்களுக்குள் வைத்து அழுத்திக் கொடுத்தாள்.
அவளின் செயலில் அவன் ஒரு நொடி குழம்பி போனவனாய் கரத்தைப் பார்த்து விட்டு அவளைப் பார்க்க எவ்வித உணர்வும் இன்றி முகத்தை சாதாரணம் போல் வைத்திருந்தாள்.
“எதுக்கு இவ்வளவு கோவம். சாரி தெரியாம பேசிட்டேன். இதைப் பத்தி நாம அப்பறம் பேசலாம். நீங்க போய் வேலையை கவனிங்க.”
“விளையாடுறியா நீ?”
“நீங்க முதல்ல அமைதியாகுங்க..”
“நான் அமைதியா தான பேசிட்டு இருக்கேன்.”
“ஆனால் கோவப்பட்டா தான இந்த கை பாக்கெட்டுக்கு போயிடும்?”
“அவ்வளவு கவனிச்சுருக்கியா நீ?”
“ம்ம்..”
“ஏன் டி நீ இப்படியிருக்க?”, என்றவன் அவள் கரத்தை இழுத்து தன் கரத்தினுள் அழுத்திக் கொண்டான்.
“உங்களை விட உங்க கை தான் நிறைய காதல் பேசுது..”
“இப்படி உடனே எல்லாம் சமாதானம் ஆகாத..”
“என்ன?”
“கொஞ்சம் பிகு பண்ணிக்கோ. என்னை கொஞ்சம் கெஞ்ச விடு அப்பறம் போனா போகுதுனு உன்கிட்ட வர்றதுக்கு பெர்மிஷன் குடு. அப்படி நடக்குற சமாதானம் இன்னும் கிக்கா இருக்கும்ல?”
“இதுக்கெல்லாம் எப்பவும் வாய்ப்பிருக்கும்னு தோணலை?”
“ஏன்?!”
“சண்டையில் உங்க கண்ணைப் பார்த்துட்டா அடுத்த செகெண்டே சமாதானப் படுத்திடுவீங்க. அதனால தான் இங்கே வந்து உட்காந்துருந்தேன்.”, என்றவளின் முகச் சிவப்பு அதிரனுக்கு புன்னகையைக் கொடுத்திருந்தது.
“இந்தப் பொறுப்பை நீ எடுத்துக்கோ ரஞ்சு..”, என்றதில் அவனை முறைத்தாள்.
“முறைக்காத சொல்றதை கேளு. நீ என் வைஃப்பா இருந்தாலும் இந்த போஸ்ட்க்கான சம்பளம் உனக்கு வரும்.
அவினாஷ் லைஃபில் செட்டில் ஆகுற வரை அவனுக்கு உன் துணை வேணும் இல்லையா?”
“!!!”
“நீ என்கிட்ட எதிர்பார்த்து இருக்குற நிலைமைனு இருந்தா அவன் உன்கிட்ட கேட்கத் தயங்குவான். அப்படியே அவன் கேட்டாலும் நீ தயங்குவ..”
“இல்ல நான்..”
“ஐ நோ யூ ரஞ்சு. சோ இந்த சம்பளம் அதுக்காக இருக்கட்டும். ஒரு அக்காவா நீ செய்ய வேண்டிய எல்லாத்தையும் என்னை எதிர் பார்க்காம நீ அவனுக்கு பண்றதா இருக்கட்டும்.”
“!!”
“இதெல்லாம் கொஞ்ச வருஷம் தான். இப்போ அவனுக்கு அந்தளவு மெச்சூரிட்டி இருக்காது.
என்னைப் பத்தி புரிஞ்சுக்க டைம் வேணும். எல்லாம் நார்மல் ஆன பின்னாடி கண்டிப்பா உன் விருப்பத்தை நான் கேட்பேன்.
அப்பவும் உனக்கு இதில் விருப்பமில்லைனால் தாராளமா நீ அதிரனோட பொண்டாட்டியா மட்டும் இருக்கலாம்.”
“..”
“நான் தான் என் பொண்டாட்டிக்குத் தேவையானதை எல்லாம் செய்யுறேன்னு சொல்றதை விட அவளை அவளோட தேவைகளை எல்லாம் பார்த்துக்குற அளவுக்கு சுதந்திரமா வைச்சுருக்கேன்னு சொல்றதில் தான் எனக்கு பெருமை.”
“!!!”
“என்ன டி ஓகே தான? ஏன் இப்படி முழிக்குற?”
“இந்தளவு எனக்காக யோசிக்குறீங்களே ஏன்?”
“ஏன்னு கேட்டா என்ன அர்த்தம்? நீ என் ரஞ்சனா.”, என்றவனின் கரங்கள் அவள் விரல்களுக்குள் பாடாய் பட்டன.
“எதுக்கு இவ்வளவு இமோஷனல் ஆகுற நீ? அவனுக்கு சொன்னது தான் உனக்கும் இனி நீங்க இரண்டு பேரும் என் பொறுப்பு. எப்படி பார்த்துக்காம போவேன்?”
“உலகத்தில் உங்களை மாதிரி ஒருத்தரை இப்போ தான் பார்க்குறேன்.”
“பிடிச்சுருக்குற என் கையை எப்பவும் கெட்டியா பிடிச்சுக்கோ எல்லா ஆம்பளைங்களும் ஒரே மாதிரி இல்லைனு கண்டிப்பா நிரூபிக்குறேன்.”
“இன்னும் நிரூபிக்க எதுவும் இல்ல மை ஹீலர்..”
“என்ன பேர் இது கொஞ்சுற மாதிரியே இல்ல.”
“ம்ம் கொஞ்சுறாங்க.. குழந்தையை..”, என்றவள் சிரிக்க வெகு சாதாரணமாய் நின்றிருந்த படி கண் சிமிட்டி மென்னகைத்தான் அதிரன்.
அந்த நேரம் அங்கு வந்த சாருகேஷ் அண்ணனையும் அண்ணியையும் பார்த்து விட்டு அவர்கள் அருகில் வந்திருந்தான்.
“காதல் ஜோடி இங்கே என்ன பண்றீங்க?”, என்றதில் இருவருமாய் அவனைப் பார்த்து கையசைத்து சிரித்தனர்.
“க்ளாஸ் போகாம என்ன டா பண்ற?”
“ண்ணா ரொம்ப மொக்கையா இருக்கு ணா..”
“வைஸ் சேர்மன் அண்ட் சேர்மன்கிட்டேயே எவ்வளவு தைரியமா சொல்ற நீ?”
“இது எப்போயிருந்து?!!”, என்றவன் ஆச்சரியமாய் கேட்க அதிரன் கல்லூரி விவரங்களை அவனிடம் கூறினான்.
அதன் பின் இருவருமாய் வேலைகளை முடித்து விட்டு காரில் கிளம்ப வசந்த் வேறொரு வேலையை முடிப்பதற்காக கல்லூரியிலேயே இருந்தான்.
கார் கல்லூரி வளாகத்தைத் தாண்டுவதற்கு காத்திருந்தவளாய் தனது கைப்பேசியை எடுத்தவள் தனக்குப் பிடித்த பாடல் ஒன்றை எடுத்து ஓட விட்டு அவனுக்காக நீட்டினாள்.
“உன்னை காணும்
வரையில் எனது வாழ்க்கை
வெள்ளை காகிதம் கண்ணால்
நீயும் அதிலே எழுதி போனாய்
நல்ல ஓவியம் சிறு பாா்வையில்
ஒரு வார்த்தையில் தோன்றுதே
நூறு கோடி வானவில்”
“உங்களுக்கு யுவன் தான் பிடிக்கும்னு தெரியும் ஆனால் எனக்கு இப்போதைக்கு ஹாரிஸ் ஜெயராஜ் தான் உதவி பண்றாரு.”, என்றதில் இருவருமாய் சிரித்தனர்.
“எப்பவுமே Giving sideல மட்டுமே இருக்க விட மாட்டேன் அதி. யூ டிசேர்வ் டு பி இன் Receiving side ஆல்சோ. வாழ்க்கையை மொத்தமா முழுசா மாத்திட்டீங்க. ஐ..”, என்றவளின் இதழ் மீது தனது இடக்கரத்தை வைத்து தடுத்தவன் காரை ஓரமாய் நிறுத்தியிருந்தான்.
“இப்போ சொல்லு என் கண்ணைப் பார்த்து..”, என்றதில் தலை குனியச் சென்றவளை விடாமல் தன்னைப் பார்க்க வைத்துக் கொண்டவனாய் அவளையேப் பார்த்திருக்க,
“ஐ லவ் யூ அதிரன் டோட்டலி அண்ட் கம்ப்ளீட்லி..”, என்றவளின் முகத்தைப் பற்றி முன்னிழுந்து உச்சந் தலையில் இதழ் பதித்தவன்,
“ஐ லவ் யூ மை கேர்ள் மேட்லி அண்ட் டீப்லி..”,என்று கூறி புன்னகைக்க அவளது பாதுகாப்பான இடமான அவனது தோளில் எப்போதும் போல் தலை சாய்த்துக் கொண்டாள் அவனின் ரஞ்சனா.
error: Content is protected !!