Skip to content
Post Views: 1,538
அத்தியாயம் 16
“என்ன பல்லவி?” என்று கேட்ட கீர்த்திஸ்வரன் அவள் பார்வை அன்னை சென்றுவிட்டாரா என்று பார்ப்பதில் இருப்பது தெரிந்து விழி சுருக்கினான்.
Advertisement
“உங்க ஆபீஸ் ரூம்ல பேசுவோமா சார்?” என்றவளை கேள்வியாய் பார்த்து அவனும் தலையசைக்க, அஞ்சலி அறையை ஒருமுறை இங்கிருந்தே பார்த்துவிட்டே சென்றாள் பல்லவி.
Advertisement
Advertisement
இன்னும் அவள் வந்ததை லதாவிடம் கூறவில்லை. கொஞ்சம் அவள் தெளிவாகிக் கொள்ளட்டும் என விட்டுவிட்டாள்.
Advertisement
“பிஸியா இருக்கீங்களா சார்?” பல்லவி கேட்கவும்,
“ஹ்ம் ஆபீஸ்ல கொஞ்சம் வேலை இருக்கு. இங்க லாவண்யா வந்து பிரச்சனை பன்றான்னு அம்மா சொல்லவும் தான் வந்தேன்!” என்றான் அவனும்.
“ஹ்ம்! நான் ஒண்ணு சொல்றேன். அமைதியா கேட்குறீங்களா?” பல்லவி கேட்க,
“என்னாச்சு? பீஸ் எதுவும் அதிகமா கேட்குறாங்களா?” அவ்வளவு தான் கீர்த்திஸ்வரனால் யோசிக்க முடிந்தது.
இப்படி தனியாய் அழைத்து வந்து இப்படி பொறுமையாய் அவள் பேசி என்னவோ என வினோதமாய் பார்த்தான் ஈஸ்வர். கேட்க சங்கோஜப்படுகிறாளோ என அவன் நினைக்க,
“அது எவ்வளவா இருந்தாலும் உங்க பேரை சொல்லி லதாம்மாகிட்ட வாங்கிக்க மாட்டேனா நான்?” என்றவள் சொல்லில்,
“வேற என்ன?” என்றான்.
“கோபப்பட மாட்டேன்னு ப்ரோமிஸ் பண்ணுங்க!” என்றும் சொல்ல,
“ப்ச்! அப்படி என்ன பல்லவி? காலேஜ்ல எதுவும் பிரச்சனை பண்ணிட்டு வந்தியா?” என்றவன் கேள்வியில்,
“அய்யோ சார்! பிரச்சனையான்னு கேட்காம பிரச்சனை பண்ணிட்டு வந்தேனானு கேட்குறீங்க? எப்படி தெரியுது என்னைப் பார்த்தா?“ என முறைத்தவள்,
“இதுக்கு உங்களை அப்புறம் பேசிக்குறேன்! காலேஜை விடுங்க. ஏன் அங்கேயே நிக்கிறீங்க?” என்றவள்,
“நானே சொல்லிக்குறேன். ப்ரோமிஸ் நீங்க கோவப்பட கூடாது. அண்ட் அமைதியா கேட்கணும்!” என சொல்லிக் கொண்டு,
“இப்போ நான் காலேஜ் போறேன். அங்க ஒரு பையன் என்கிட்ட பிரச்சனை பன்றான். என்ன பண்ணலாம்?” என்றாள் மெதுவாய்.
“ஓஹ்!” என்றவனுக்கு அவள் பிரச்சனைக்கு தன்னை உதவ கேட்கிறாள் என நினைத்தவன்,
“நீ டெய்லி காலேஜ் போக வேண்டியது இல்லையே பல்லவி? இன்னைக்கு தானா? என்ன பிரச்சனை பண்ணினான் சொல்லு. பார்த்துக்கலாம். இல்ல பெருசா ஒண்ணுமில்லைனா விடு. இல்ல போக பயமா இருக்குன்னா நெக்ஸ்ட் டைம் காலேஜ் போகும் போது சொல்லு நானும் வர்றேன்” என்றான் தீர்வுகளை அடுக்கி.
அப்படி பயப்படுபவள் இல்லையே என ஒரு ஓரத்தில் தோன்றினாலும் அவனால் முடிந்ததாய் இப்படி சொல்ல,
“ஹ்ம் குட் சார். அப்போ எனக்கு மட்டும் தான் இந்த சொல்யூஷனா?” என்றாள்.
“வேற யாருக்கு?” என்றவன்,
“அடுத்தவங்க பிரச்சனையை நீ என்கிட்ட கொண்டு வர்றியா?” என்றான் கொஞ்சம் முறைப்புடன்.
“ஸ்கூல் போற பொண்ணுக்கு?” என்று பல்லவி கேட்டு அவன் முகம் பார்க்க, சில நொடிகள் புரியாமல் விழித்தவனுக்கு சட்டென்று அஞ்சலியின் எண்ணம்.
அதை அவன் முகத்தின் அதிர்வு வெளிக்காட்ட, “ஹ்ம்!” என தலையசைத்தாள் பல்லவி.
“உங்க அப்பா ஸ்கூல்க்கு அனுப்ப மாட்டாங்கனு பயப்படுறா. நீங்களும் அப்படி தான் சொல்லுவிங்களா சார்?” என்று பல்லவி கேட்க,
“என்ன சொல்ற நீ? அஞ்சலியை எப்ப பார்த்த நீ?” என்று ஈஸ்வர் கேட்க, அஞ்சலியை பார்த்தது முதல் வீட்டிற்கு அழைத்து வரும் வழியில் கேட்டதும் அவள் பதிலும் என அனைத்தையும் கூறினாள் பல்லவி.
“காட்!” என நெற்றியை அவன் நீவிக் கொள்ள,
“ஏன் சார் இப்படி இருக்கீங்க? இந்த வசதியான வீட்டுல இருக்கவங்க எல்லாரும் வீட்டுக்குள்ள அன்பா பேசி வச்சு இருக்க மாட்டிங்களா? சின்ன பொண்ணு! பிரச்சனையை யார்கிட்ட சொல்லனு தெரியாம ரோட்ல அழுதுட்டு நிக்குறா. கேட்டா அழுது முடிச்சுட்டு வீட்டுக்கு போக போறாளாம். எங்க அப்பா பத்தி உங்களுக்கு தெரியாது திட்டுவாங்க. ஸ்கூல்க்கு அனுப்ப மாட்டாங்கனு அழுறா. மார்னிங் என்கூட நீங்க வர்றிங்களானு என்னை கேட்குறா. அதுவும் நான் பேச போய் தான். இல்லைனா? எக்ஸாம் டைம்.. இந்த பிரஷர் எல்லாம் அந்த பொண்ணுக்கு தேவையா?” என்ற பல்லவி,
“உங்க அப்பா இப்படி தான்னு அஞ்சலி நினைக்குற மாதிரி அண்ணாவும் இப்படி தான்னு நீங்களும் எதுவும் செஞ்சு வச்சிடாதீங்க சார். இத்தனை நாள் பார்த்து பேசி இருக்கேன் உங்ககிட்ட. நீங்க அப்படி இருக்க மாட்டிங்கனு நம்பி உங்ககிட்ட சொல்றேன். அவளுக்கு ஹோப் குடுங்க. இப்படி தனியா விடாதீங்க. நூறு பேர்ல ஒருத்தன் பண்ற தப்புனால ஒரு பொண்ணு தன் வாழ்க்கையை நினைச்சு பயப்படுறது எல்லாம் கொடுமை சார்.” என்று சொல்ல, பல்லவி பேசும் ஒவ்வொரு வார்த்தையும் கீர்த்திஸ்வரன் மனதை சுட்டது தான் உண்மை.
“பல்லவி! என்கிட்ட சொல்லி இருந்தா முதல் நாளே கேட்டிருக்க மாட்டேனா? ப்ச்!” அவன் சொல்ல,
“அதுக்கு கூட அவளுக்கு பயம்னா அப்போ நீங்களும் அவகிட்ட அவ்வளவு பிரண்ட்லியா இல்லைனு தானே அர்த்தம்? அப்படி என்ன பொல்லாத வேலை? முதல்ல குடும்பத்தை கவனிக்குறவங்க தான் நிஜமான ஆம்பளைங்க. அப்போ உங்க அப்பா பண்ற தப்பை தானே நீங்களும் பண்றிங்க?” என்று நேரே கோபமாய் கேட்டுவிட்டாள்.
ஏற்கனவே தந்தை தன் குடும்பத்தை கவனிக்கவில்லை. அன்னையை அவர் கண்டு கொள்ளவே இல்லை என சில நாட்களாய் கவனித்த கீர்த்திஸ்வரனுக்கு இப்பொழுது பல்லவியின் குற்றச்சாட்டு தான் எந்த அளவில் இருக்கிறோம் என்பதை மண்டையில் ஓங்கி அடிப்பதாய் புரிய வைத்தது.
“நானுமே எல்லாத்தையும் கிராஸ் பண்ணி வந்த பொண்ணு தான். ஆனா என்னால அந்தந்த சிட்டுவேஷனை ஹண்ட்ல் பண்ண முடிஞ்சது. ஏன்னா என்னை நான் தான் பார்த்துக்கணும்னு எனக்கு தெரியும். எனக்கு அஞ்சலி மாதிரி அப்பா அண்ணா எல்லாம் இல்ல!” என்று மீண்டும் மீண்டும் அவள் குட்டு வைக்க, அந்த சிறு பெண் முன் பேச்சச்சு நின்றான் கீர்த்திஸ்வரன்.
“பொறுக்கி ராஸ்கல்ங்க! பிறந்த குழந்தைல இருந்து வயசான பாட்டிங்க வரை இங்க பொண்ணுன்றதால அவ தோல் மட்டும் தான் இந்த மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் கண்ணுக்கு தெரியுது. இன்னும் அஞ்சலி என்கிட்ட அவன் சொன்னதா சொன்ன வார்த்தையை நான் உங்ககிட்ட சொல்லல சார். சொல்ல விரும்பல. ஆனா அவன் வாயால அந்த வார்த்தையை கேளுங்க. துடிச்சு போயிடுவீங்க ஒரு தங்கச்சிக்கு அண்ணனா. நான் எவ்வளவு தான் தைரியமா பேசினாலும் உள்ள நடுங்குது நினைக்கும் போதே! என்னால முடியாத பல விஷயங்கள் உங்களால முடியும். அவனை சும்மா விடாதீங்க” என்றவள்,
“நீங்க லதாம்மா பையன். அவங்க வளர்ப்பு. அந்த நம்பிக்கைல தான் உங்ககிட்ட இவ்வளவும் சொல்றேன். பார்த்துக்கோங்க!” என்றவள் வெளியில் செல்ல திரும்பிவிட்டு,
“அஞ்சலிக்கு லதாம்மா அம்மா. அதனால அவங்களுக்கு எல்லாம் தெரியணும் தான். ஆனா அது இப்ப உடனே தெரியணும்னு இல்ல. சால்வ் பண்ணிட்டு வந்து நீங்களே சொல்லுங்க” என்று சொல்லிவிட்டு அவள் செல்ல, கீர்த்திஸ்வரனுக்கு இன்னமும் அதிர்ச்சியும் பல்லவியின் வார்த்தைகளும் என அவனை ஒருநிலைக்கு கொண்டு வரவே முடியவில்லை.
எத்தனை பெரிய உண்மையை வார்த்தைகளில் புரிய வைத்து சென்றிருக்கிறாள் என வியப்பும் தான்.
தங்கையிடம் தான் எப்படி இருந்திருக்கிறோம் அவள் மனதில் தன்னிடம் சொல்ல முடியாத ஒரு பயத்தையும் விதைத்திருக்கிறோம் என்பதை உணர்ந்த போது தன்னை நினைத்தே தகித்தது அவன் மனது.
முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு ஈஸ்வர் வெளியே வர, “உனக்குமே காபி இருக்கு வேணுமா ஈஸ்வர்?” என்றார் லதா. அவரருகில் காபியை பருகிக் கொண்டிருந்தாள் பல்லவி.
“ஹ்ம்!” என்றவன் அமரவும் காபியை எடுத்து அவனிடம் கொடுத்த லதா,
“சீக்ரெட் எல்லாம் பேசியாச்சா?” என்று கேட்டு புன்னகைக்க,
“லதாம்மா! கேட்க கூடாதுன்னு சொன்னேன்ல?” என்றாள் மிரட்டலாய் பல்லவி.
“பேசியாச்சான்னு கூட கேட்க கூடாதா! சரிங்க மேடம்!” என அதையுமே விளையாட்டாய் சொல்லி சிரித்தார் லதா.
அங்கு வெகுளியானப் புன்னகையில் மனதின் கணம் கூடிப் போனது கீர்த்திஸ்வரனுக்கு.
“நீ ஆபீஸ்ல வேலை இருக்குன்னு அவசரமா வந்தியே ஈஸ்வர்? இப்ப இப்படி உக்காந்திருக்க?” என்று லதா கேட்டு,
“லாவண்யாவை யோசிக்குறியா? நானே சொல்லணும் நினைச்சேன். கல்யாணம் எத்தனை வருஷத்துக்கு அப்புறம் வேனா செஞ்சுக்கோ. ஆனா நீ லாவண்யாவோட தனிக்குடித்தனம் போய்டு” என்று சொல்லவும் ஈஸ்வர் நிமிர்ந்து அமர்ந்து அன்னையை முறைக்க,
“சபாஷ் லதாம்மா!” என்று பல்லவி சொல்லியதில் அவளையும் முறைத்தான் கீர்த்திஸ்வரன்.
“உன் கல்யாணத்துக்கு முன்னாடி என்னால முடிஞ்சதை நான் அஞ்சலிக் சேர்த்து வச்சுக்குறேன் டா. என்னவோ இதெல்லாம் எனக்கு சரியாப்படல. வந்தாலே பிரச்சனை தான் பண்ணனும்னு வர்றா!” என்று லதா கூறவுமே,
“ஏற்கனவே நான் வீட்டை கவனிக்கலைனு கம்பளைண்ட். இதுல வீட்டைவிட்டே போ’னு வேற சொல்றிங்களா நீங்களும்” என்றவன் முணுமுணுப்பு லதாவிற்கு புரியவில்லை கேட்கவும் இல்லை. பல்லவிக்கு உணர முடிந்தது.
“என்ன டா? சத்தமா சொல்லு!” லதா சொல்ல,
“அதுக்காக வீட்டை விட்டு போக சொல்விங்களா கேட்டேன். அஞ்சலிக்கு நான் பண்ண மாட்டேனா எதுவும்?” என்றவன் முகம் முழுதும் நினைவின் தாக்கம்.
“என்ன ஈஸ்வர்! அம்மா விளையாட்டுக்கு சொல்றேன்னு உனக்கு தெரியலையா?” என்று லதா கேட்கவும் தலையில் கைவைத்துவிட்டான்.
“ஒண்ணுமில்ல ம்மா. வேண்டாம்னா வேண்டாம்னு சொல்லிடனும் சொன்னேன்!” என்றதில் கண்களை அகல விரித்த லதா,
“அப்படி சொன்னா அதுக்கும் என் கழுத்தை அவ பிடிக்கவா? பேசாம இரு!” என்று அவர் சொல்ல,
“இப்படி பயந்து பயந்து ஒரு கல்யாணம்!” என்றவன் எண்ணம் அதில் இல்லை இப்பொழுது.
“அஞ்சலி வந்தாச்சா?” அன்னையிடம் அவன் கேட்க,
“பல்லவி சொன்னாளா? அவளுக்கு நாளைக்கு எக்ஸாம்னு இன்னைக்கு சீக்கிரமே முடிஞ்சிடுச்சாம் டா. அப்பவே வந்துட்டாளாம் போய்ட்டு. எனக்கும் பல்லவி சொல்லி தான் தெரியும். இவ தான் என்னை படியேற வேண்டாம்னு அவளுக்கு காபியும் குடுத்துட்டு வந்தா!” என்று லதா சொல்ல, பல்லவியைக் கண்டான் கீர்த்திஸ்வரன்.
எதுவும் பேசாமல் ஒரு புன்னகையை மட்டும் பல்லவி கொடுக்க, பதிலுக்கு புன்னகைத்தவன் சில நிமிடங்கள் அங்கே இருந்துவிட்டு மேலே செல்ல,
“நீ இரு பல்லவி சாப்பிட்டு போகலாம் இன்னைக்கு!” லதா கேட்கவும்,
“அம்மா தேடுவாங்க லதாம்மா. நீங்க சாப்பிடுங்க. நான் நாளைக்கு வர்றேன்!” என்றவள் மறக்காமல் காலை அஞ்சலியுடன் செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி இருந்தாள்.
மாடிக்கு வந்த கீர்த்திஸ்வரன் அஞ்சலி அறைக் கதவை தட்டி நின்றான்.
error: Content is protected !!