Skip to content
Post Views: 1,918
அத்தியாயம் 20
தீம் பார்க்கில் சந்தித்த சுசீலாவை சிவங்கரிக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒருவரை பிடிக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு பார்க்க ஆரம்பித்தால் அவர்களிடம் உள்ள நிறைகளை தேடி பார்ப்போம். அதே போல ஒருவரை பிடிக்க வேண்டாம் என்று நினைத்து பார்த்தால் குறைகளே கண்ணுக்கு தெரியும்.
Advertisement
சிவங்கரியின் கண்ணோட்டத்தை மாற்றவே வீட்டில் நெருக்கடியான சூழலை ஏற்படுத்தினர் முத்துவும் கந்தசாமியும்.
இந்த பெண் தனக்கு திருப்தி என்று சிவங்கரி கூறியதும், கந்தசாமி நேரடியாக களத்தில் இறங்கி இரு வீட்டிலும் பேசி மேற்கொண்டு கல்யாண பேச்சை ஆரம்பித்து, நிச்சயம் வரை முடித்துவிட்டார்.
Advertisement
Advertisement
பாவைக்கு மருமகளை நினைத்து பெருமையாக இருந்தது.
ஒரு மாலை நேரத்தில்,“முத்து இந்த சின்னவயசுல எப்படியொரு கல்யாணத்தையே ஏற்பாடு பண்ணிருச்சு பார்த்தியா, ஹிருதய்” என்று மகனிடம் பெருமையாக கூறிக்கொண்டிருந்தார்.
Advertisement
அவனும் மேம்போக்காக மண்டையை ஆட்டி வைத்தான். ஏன்னென்றால், முத்து பாவை, ஸ்ரீகாந்த், மிருதுளா என்று அனைவரயும் சிவங்கரியிடம் வஞ்சனையின்றி வத்தி வைத்த அனைத்தையும் ஹிருதய்யிடம் கூறி புலம்பியிருந்தார் சிவங்கரி.
“டேய் ஹிருதய், உங்க அப்பா மாதிரி இருக்காதா டா.. நல்ல விஷயம் செய்யும் போது பாராட்டணும்..”
“நல்லா சொல்லி கொடுங்க அத்தை..” என்று கூறிக்கொண்டே வந்து ஹிருதய்யின் அருகில் அமர்ந்தாள் முத்து.
“காஃபி குடிக்கிறியா டா?” என்றார் மருமகளிடம் வாஞ்சையாக.
“இல்ல அத்தை, நீங்களும் நிறைய காஃபி குடிக்காதீங்க. நான் கவனிச்ச வரைக்கும் அஞ்சாறு காஃபி குடிக்கிறீங்க. காலையில ஒரு தடவை ஈவினிங் ஒரு தடவை குடிச்சா போதுமே.. பித்தம் இல்லையா?”
“பழகிடுச்சு தங்கம்..”
“கெட்ட பழக்கத்தை மாத்திக்கிறது தப்பில்லை இல்லையா?
இப்பொழுது பாவை தலையை ஆட்டி வைத்தார்.
ஹிருதய் உதடுக்குள் சிரிப்பை அடக்கி கொண்டான்.
முத்துவிற்கு ரிசல்ட் வந்ததும் தஞ்சாவூரிலேயே பார் எக்ஸாமிற்காக பதிவு செய்து விட்டாள். அப்படியே, அங்கேயே ஒரு சீனியர் வழக்கறிஞரிடம் கந்தசாமியின் துணையால் ஜுனியாராக சேர்ந்துக்கொண்டாள்.
ஹிருதய்யின் தொழில் வளர்ச்சிக்கு இங்கே இருப்பது தான் சரி என்று உணர்ந்து இங்கேயே வந்துவிட்டாள்.
பாவைக்கு மனதிற்கு மிகவும் நிம்மதியாக இருந்தது, அவர் மகனும் மருமகளும் அவள் அப்பா வீட்டிலே இருப்பதை நினைத்து.
அதை மாலதியிடம் கூறிய போது , “நீ வேற ரொம்ப உருகாதே, அவளுக்கு இங்கயே சுத்தி நாலு பஞ்சாயத்தை இழுக்கணும். அய்யாவுக்கும் பேத்திக்கும் சின்ன வயசுல இருந்தே அதுதான் எண்ணம்” என்று கூறி இருந்தார்.
ஹாசினி மிகவும் நல்ல மதிப்பெண் வாங்கி தேர்ச்சி பெற்றிருந்தாள்.
அரசு மருத்துவ கல்லூரியில் சீட் கிடைக்காவிட்டாலும் தனியார் கல்லூரியில் கிடைப்பதற்கு போதுமானதாக இருந்தது. அதில் அனைவருக்கும் மிகுந்த மகழ்ச்சி.
அன்று ஊரில் இருந்து அனைவரும் இங்கே வந்திருந்தார்கள். சிவங்கரி பேத்தியை கட்டி பிடித்து முத்தம் கொடுத்தார்.
ஹாசினியின் ரிசல்ட் வந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு அப்படியே ப்ரதமேஷ் சுசீலா கல்யாணத்திற்கு பட்டுப்புடவை எல்லாம் வாங்கிடலாம் என்று நினைத்தே அனைவரும் வந்திருந்தனர். இம்முறை காதம்பரி கேசவன் இருவரும் கூட இவர்கள் வீட்டிற்கு வந்து இருந்தார்கள். முத்து தான், ‘ஒருத்தர் பண்ற தப்புக்காக நீங்க எல்லாரையும் ஒதுக்கி வைக்க கூடாது கேசவப்பா.. நான் இனி இங்க தான் இருக்க போறேன், உங்க வீட்ல வந்து நான் எப்படி உரிமையை தங்கினேனோ அப்படி நீங்க எப்பவுமே உரிமையா எங்க வீட்டிற்கு வரத்தான் வேண்டும்’ என்று கூறி இருந்தாள்.
அனைவரும் வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
“எனக்கு டாக்டர் படிக்க வேண்டாம்” என்றாள் ஹாசினி மெல்ல.
“ஏன்டா, கவர்ன்மென்ட் காலேஜ் கிடைக்கலைன்னு யோசிக்கிறியா? உன் படிப்புக்காக அப்பா தனியா சேவிங்ஸ் வச்சிருக்கேன் டா.. கவலை படாதே” என்றார் ஸ்ரீகாந்த்.
“அதுக்காக தானே கஷ்டப்பட்டு படிச்ச ஹாசி, அப்புறம் டாக்டர் படிக்க வேண்டாம்னா புரியல” என்றார் பாவையும் குழப்பமாக.
அனைவரும் அவளையே பார்க்கவும், அவள் தன் அண்ணனை பார்த்தாள்.
அங்கே ஒரு பக்கமாக ப்ரதமேஷ் பக்கத்தில் முத்து அமர்ந்திருந்தாள்.
“என்ன ப்ரோ, ஹாசி தயாவை பாக்குது? என்ன விஷயமா இருக்கும்?” என்றாள் முத்து ப்ரதமேஷிடம்.
“அண்ணனும் தங்கச்சியும் சரியான்னு கல்லுளி மங்கன்ஸ் ப்ரோ… பார்க்க அப்பாவி மாதிரி தான் இருப்பாங்க.. ஆனா நினைச்சதை சாதிச்சிடுவாங்க” என்றான் ப்ரதமேஷும் மெல்ல.
“நானும் இப்ப தான் ப்ரோ கண்டுபிடிச்சேன்.. பார்க்கலாம் என்ன பண்றாங்கன்னு“
“அப்பா, ஹாசிக்கு நர்ஸிங் படிக்கணும்னு தான் ஆசை” என்றான் ஹிருதய்.
“என்ன உளர்ற? நர்ஸிங்கா?” என்று சிவங்கரி அமர்ந்திருந்தவர் எழுந்து நின்றுவிட்டார்.
“கிறுக்கு பிடிச்சிருக்கா உனக்கு? இவ்வளவு மார்க் வாங்கனவங்க யாரும் நர்ஸிங் படிப்பாங்களா?” என்று ஹாசினியிடம் பாய்ந்தார்.
அதற்கு பிறகு ஹாசினியும் ஹிருதய்யும் அமைதியாக அமர்ந்து கொண்டார்கள்.
பாவை தான் களத்தில் இறங்கி மாமியாருடனும் கணவருடனும் மல்லுக்கு நின்றார்.
“எனக்கும் அதிர்ச்சியா தான் இருக்கு. அதுக்குனு கிறுக்குன்னா சொல்லுவீங்க?” என்று மாமியாரிடம் பாய்ந்தார் முதலில்.
“நீ தான் ஊருக்கு கூட்டிட்டு வந்து எம் பேர பிள்ளைகளை மூலை சலவை செஞ்சு வச்சிருக்க..”
“எனக்கு உங்க புத்தி எல்லாம் இல்லை.. அது எல்லாம் உங்களுக்கு தான் வரும்”
“அங்க இருந்திருந்தா எம் பேரன் சாப்ட்வேர்ல இருந்திருப்பான், இவளும் டாக்டர் சேர தான் ஆசை படுவா.. உங்க பட்டிக்காட்டுல கூட்டிட்டு வந்து வச்சு, எம் பேரனை அரிசி கடை ஆரம்பிக்க வைச்சிட்ட… உனக்கு உங்க அப்பா மாதிரி உம்புள்ள வரணும்.. உன் சுயநலத்துக்காக எங்க வம்சத்தையே நாசம் செய்ய பார்க்கிற?” என்று பாவையிடம் எகிறிவிட்டு,
“என்ன ஸ்ரீ இது எல்லாம்?” என்று மகன் மீது பாய்ந்தார்.
“இங்க பாரு ஹாசி, உங்க அம்மா சொல்றாங்கன்னு கிடைக்கிற வாய்ப்பை விட கூடாது. அவளுக்கு என்ன தெரியும்? ஒழுங்கா மெடிசின் சேர்ற வழிய பாரு” என்றார் ஸ்ரீகாந்த் மகளிடம்.
“அதானே, நீங்க எல்லாம் திருந்திற ஆளா? உங்க அம்மா சொன்னதும் பழையபடி எம் மேல பழியை தூக்கி போட்டுட்டீங்க தானே?அவ நர்ஸிங் படிக்க ஆசை படறதே எனக்கும் இப்ப தானே தெரியும்?” என்றார் பாவை ஸ்ரீகாந்தை பார்த்து வெறுப்பாக.
“இப்ப உன் மேல பழி விழுகிறது தான் பிரச்சனையா?”
“அதானே, என்னை யார் என்ன சொன்னாலும் உங்களுக்கு பிரச்சனையாவே தெரியாதுல..”
“இப்ப நீ தான் கிறுக்கு மாதிரி பேசிட்டு இருக்க..”
“ஆமா எப்பவுமே எனக்கு தான் கிறுக்குன்னு பட்டம் கட்டுவீங்க.. இப்ப எம் பொண்ணையும் அப்படி சொல்லறீங்க..”
“அவ நல்லதுக்கு தானே நாங்களும் சொல்றோம்.. நல்ல விதமாவே யோசிக்க தெரியாதா?”
பாவை ஸ்ரீகாந்த் சிவங்கரி மூவரும் கட்சி கட்டிக்கொண்டு சண்டையில் இறங்கினார்கள்.
காதம்பரி கேசவன் இருவரும் சங்கடமாக சற்று நேரம் அமர்ந்திருந்தவர்கள் மெல்ல எழுந்து வெளியே சென்றனர். அவர்கள் பின்னே மிருதுளாவும் தணிகாச்சலம்மும் சென்று விட்டார்கள்.
இவர்கள் மூவரும் சண்டையை விடுவதாக தெரியவில்லை.
முத்துவும் ப்ரதமும் திரும்பி ஹாசினியையும் ஹிருதய்யையும் பார்த்தனர்.
இருவரும் சாந்த சொரூபமாக அமர்ந்திருந்தனர்.
“எப்படி ப்ரோ.. எப்படி இப்படி இருக்காங்க?” என்றாள் முத்து ஆச்சர்யமாக.
“முன்ன எல்லாம் எப்பவுமே இப்படி தான் ப்ரோ.. வீட்ல ரணகளமே நடக்கும்.. இதுங்க ரெண்டும் பேசாம அமைதியா ஒருபக்கம் உட்கார்ந்து இருக்குங்க.. எனக்கு தான் பார்க்க பாவமா இருக்கும்.. நான் தான் அவங்களை வெளியே கூட்டிட்டுப்போவேன்..”
“அப்புறம்?”
“அப்புறம் என்ன, நான் வாங்கி கொடுக்கிற சமோசா ஜூஸ் எல்லாத்தையும் இதே மாதிரி அமைதியா முகத்தை வச்சுகிட்டு காலி பண்ணிடுவாங்க”
“அட பாவமே!”
———
“இப்ப என்ன தான் சொல்ல வரீங்க?” என்று பாவை மூச்சு வாங்க கேட்டார் ஸ்ரீகாந்த்தை நோக்கி.
“எனக்கு நர்ஸிங் படிக்கறது பிடிக்கலை..” என்றார் அவர் சூடாக.
“எனக்கும் அதான்” என்றார் சிவங்கரியும் இணைந்து கொண்டு.
“என் கிட்ட கூட சொல்லலையே ஹாசி? எதுக்கு திடீர்ன்னு நர்ஸிங் சொல்ற?”
“அம்மா, அவ இரண்டு வருஷம் முன்னவே என்கிட்டே சொல்லிட்டா” என்றான் ஹிருதய் அலட்டிக்காமல்.
“நர்ஸிங் டீசெண்டா செய்யுற ஆயாம்மா வேலை டீ” என்றார் சிவங்கரி எரிச்சலாக.
அதை எல்லாம் கண்டுக்காமல்,“எனக்கு ஸ்வீட்டிம்மா மாதிரி ஆகணும், எல்லாருமே அவங்களை ஒரு தேவதை மாதிரி பார்ப்பாங்க” என்றாள் ஹாசினி.
உண்மை அதானே.. காதம்பரியை அப்படித்தான் அனைவரும் நடத்துவார்கள். அது ஸ்ரீகாந்த்திற்கே தெரியும்.
“எல்லாம் அந்த காதம்பரியால வந்த வினைதான், நீங்க தான் புருஷனும் பொண்டாட்டியும் அவ கூட உறவு கொண்டாடினீங்க.. அதான் இப்ப இந்த அளவு வந்து நிக்குது..” என்று பொங்கினார் சிவங்கரி.
“டாக்டருங்களை விட நர்ஸ் படிச்சா நிறைய பேருக்கு சேவை செய்ய முடியும்னு எனக்கு ஒரு எண்ணம். ஒவ்வொருத்தருக்கும் ஒரு விஷயம் பிடிக்கும். அண்ணாக்கு அரிசி கடை மாதிரி எனக்கு நர்ஸிங்.. நான் நர்ஸிங் படிக்கிறேனே அம்மா.. எனக்கு இது தான் இஷ்டம் அப்பா” என்று கூறி எழுந்து உள்ளே சென்று விட்டாள். அவள் பின்னாலே ஹிருதய்யும் சென்றுவிட்டான்.
முத்து வாயை’ ஆ’ என்று பிளந்து ஆச்சர்யமாக பார்த்து கொண்டிருந்தாள்.
“என்ன ப்ரோ?”, என்று முத்துவை பிடித்து உலுக்கினான் ப்ரதம்.
“நானெல்லாம் நினைச்சதை சாதிக்கணும்னா, கத்தி, சண்டை போட்டு, உண்ணா விரதம் எல்லாம் இருந்து, அய்யாகிட்ட சிபாரிசு வாங்கி, நானும் அய்யாவும் பல பிளான் போட்டு, எங்க அம்மாகிட்டயும் அப்பத்தாகிட்டயும் நல்லா வாங்கி கட்டிக்கிட்டு, தலைகீழா நின்னு தண்ணி குடிக்கணும்.. “
“மூச்சு விட்டு சொல்லுங்க ப்ரோ.. கேட்கவே கண்ண கட்டுதே?”
“ஆனா இப்ப.. இப்ப.. இந்த ஹாசி பொண்ணு, இரண்டு வரி தான் பேசுனா.. அவ்வளவுதான்னு உள்ளே போயிட்டா? இப்படிகூட பிடிவாதம் பிடிக்க முடியுமா?”
தங்கையிடம், பார்த்து கொள்வோம் என்று தைரியம் கூறி வெளியே வந்த ஹிருதய் மனைவியின் பேச்சை கேட்டு அலட்டலில்லாமல் அவளை பார்த்து சிரித்தான்.
“தெய்வமே” என்று கை எடுத்து கும்பிட்டு விட்டாள் முத்தாயி. அவளது செய்கையில் ப்ரதமேஷ் சத்தமாக சிரித்து வைத்து, சிவங்கரியின் முறைப்பை வாங்கிக்கொண்டான்.
நடந்த கலாட்டாவை முத்து மூலம் அறிந்துகொண்ட கேசவனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இவரை போல நான் வர வேண்டும் என்கிற ஊக்கத்தை கொடுக்க வேண்டும் என்றால் ஒருவர் எவ்வளவு சிறப்பானவராக இருக்க வேண்டும். அதில் இருந்து மனைவியை காதலாகவும் பெருமையாகவும் பார்த்து கொண்டே இருந்தார்.
இரவு உணவிற்கு பிறகு ஹாசினி, மெட்ராஸ் மருத்துவ கல்லூரியின் கீழ் உள்ள அரசு செவிலியர் கல்லூரியில் படிக்க விரும்பவதாக கூறினாள்.
அதில் சேர்வதற்கே மிக அதிக மதிப்பெண்கள் இருந்தால் மட்டுமே சாத்தியம் என்பது விளங்கியது அனைவருக்கும்.
“சென்னையா?” என்றார் பூம்பாவை யோசனையாக.
“ஆமா அம்மா, நான் காலேஜ் போகும் போது அப்பாவையும் நீங்களும் ஒன்னா தான் இருக்கணும். அப்புறம் கல்யாணத்துக்கு பிறகு நான் வேற வீட்டுக்கு போயிடுவேன் இல்லையா? எனக்கு அப்பா மட்டும் தனியா இருக்க வேண்டாம்மா” என்றாள்.
ஸ்ரீகாந்த்திற்கு உள்ளம் உருகியே விட்டது. என் பொண்ணு என்று கர்வமாக மகளை பார்த்தர். அதன் பிறகு அவர் மகளின் கட்சியில் சேர்ந்துவிட்டார்.
பாவையும் மகள் சொல்வதில் உள்ள உண்மை புரிய ஒத்து கொண்டார்.
சிவங்கரிக்கு துளியும் விருப்பமில்லை. அவர் அனைவரிடத்தலும் ‘என் பேத்தி மெடிசின் படிக்க போறா’ என்று பீற்றிக்கொண்டிருக்கிறார்.
“எல்லாம் உன்னால வந்தது தான் காதம்பரி.. உன்னை பார்த்து தான் நர்ஸ் ஆக போறேன்னு நிக்குறா” என்று நேரடியாக தங்கையிடம் சண்டைக்கு சென்றார்.
“கரெக்ட் க்யூட்டிம்மா.. நீங்க சொல்றது சரி தான்..” என்று பேச்சின் உள்ளே நுழைந்தாள் முத்து.
அவர் முத்துவை சந்தேகமாக பார்க்கவும்,
“பின்ன என்ன க்யூட்டிம்மா , ஒரிஜினல் அப்பத்தா நீங்க இருக்கும்போது எதுக்கு சின்ன அப்பத்தாவை பார்த்தது இம்ப்ரெஸ் ஆகணும்.. சரி நீங்க என்ன படிச்சிருக்கீங்க சொல்லுங்க.. அதையே ஹாசியையும் படிக்க நான் சொல்றேன் க்யூட்டிம்மா” என்றாள் முத்து ஆவேசமாக.
சிவங்கரியின் முகம் இஞ்சி தின்ன குரங்கு போல மாறியது.
அனைவரும் வந்த சிரிப்பை அடக்க முடியாமல் அமர்ந்திருந்தார்கள்.
“சொல்லுங்க க்யூட்டிம்மா.. சொல்லுங்க.. உங்க பக்கம் இந்த முத்தாயி இருக்கேன்.. சொல்லுங்க” என்றாள் முத்து ரஜினி பாணியில்.
கூறியதோடு மட்டும் இல்லாமல், பின்னாடி கையை கட்டிக்கொண்டு நின்றுகொண்டாள்.
சிவங்கரி கடுப்பாக மற்ற அனைவரையும் பார்த்து கொண்டு அமர்ந்திருந்தார்.
“என்ன பதிலே காணும்? “என்று முத்து திரும்பி, பின் அவரிடம் பக்கத்தில்
“சொல்லுங்க க்யூட்டிம்மா.. சொல்லுங்க.. எங்கு அநியாயம் நடந்தாலும் என்னால தட்டிகேக்காமல் இருக்கவே முடியாது.. சொல்லுங்க “ என்று உணர்ச்சிகரமாக கூறவும்.
“சொல்லுங்க சொல்லுங்கன்னா என்ன ப்ரோ சொல்லுவாங்க.. அவங்க ட்வெல்த் ஃபெயில் ப்ரோ” என்றான் ப்ரதமேஷ்.
“அய்யய்யோ.. என்ன சொல்றீங்க ப்ரோ.. அப்ப யாருமே நம்ம க்யூட்டிமாவை பின்பற்ற முடியாதா? இப்ப என்ன செய்யலாம்…” என்று யோசிப்பது போல பாவனை செய்து, பின் “திரும்ப மாமாவை வேணா ட்வெல்த் எக்ஸாம் எழுத சொல்லுவோம்.. கண்டிப்பா அவங்க அம்மாவுக்காக ஃபெயில் ஆயிடுவாரு.. என்ன சொல்றீங்க மாமா?” என்றாள் ஸ்ரீகாந்த்திடம் சீரியசாக.
அனைவரும் வெடித்து சிரித்து விட்டனர் சிவங்கரி உட்பட..
—————
அடுத்தடுத்து காரியங்கள் கடகடவென்று நடந்தது.
முதலாவதாக ஹாசினியின் அட்மிசன் முடிந்து, ஸ்ரீகாந்த், பூம்பாவை, ஹாசினி மூவரும் அவர்களது சென்னை வீட்டிற்கு குடிப்பெயர்ந்தனர்.
அங்கு உள்ள கடைக்கு பாவை சென்று தணிகாச்சலத்துக்கு உதவி செய்கிறார். ஆன்லைனிலும் அவரது வேலைகளை கவனித்து கொள்கிறார். அதனால் முன்பு போல் இல்லாமல், அவர் பிசியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறார். காதம்பரி கேசவனுடன் சிறிது காலம் இருந்த பழக்கத்தில் ஸ்ரீகாந்த் இப்பொழுது காலையில் மனைவிக்கு முடிந்த உதவிகளை செய்துவிட்டே அலுவலகம் புறப்படுகிறார்.
ப்ரதமேஷ் சுசுசீலாவின் கல்யாணத்திற்கு இன்னும் ஒரு மாதம் இருக்கிறது அவன் தன் வருங்கால மனைவியுடன் குஷியாக கடலை வறுத்து கொண்டிருக்கிறான். இருவரும் பழகப் பழக, ஒருவருக்கொருவர் மிகவும் பிடித்தமானவர்களாக ஆனார்கள்.
இங்கே ஹிருதய் முத்தாயி இருவரது தனிக்குடித்தனம் ஜெகஜோதியாக நடக்கிறது. வாழ்வில் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்தது வாழ்கிறான் ஹிருதய்.
—————-
அன்று முத்தாயி காலையில் தன் அப்பத்தாவை பார்த்து பேசிக் கொண்டிருக்கலாம் என்று அங்கே சென்றிருந்தாள்.
“இங்க பாரு முத்து, எப்ப பாரு என் வீட்டுக்காரரோடே சுத்திகிட்டு இருக்கான் உன் வீட்டுக்காரன். பார்த்துக்க அப்பாவியா இருக்கிற புள்ளையை கெடுத்துப்புடுவாரு..” என்று எச்சரித்தார் நித்யகல்யாணி.
“அப்பத்தா உனக்கு உலகமே இன்னும் புரியல.. உண்மையில கெட்டு போப்போறது உன் வீட்டுக்காரர் தான். நானும் அய்யாவும் எல்லாம் பார்க்க தான் அடாவடி.. ஆனால் சத்தமே போடாம காரியம் சாதிக்கிற அமுக்குணி என் வீட்டுக்காரர்..” என்றாள் இழுவையாக.
“அப்படியா சொல்ற? நம்ப முடியலையே?”
“ஆமா அப்பத்தா.. ஊர்ல உள்ளவங்க கண்ணுல எல்லாம் நாங்க விரல்ல விட்டு ஆடுவோம், ஆனா அப்படிப்பட்ட என்னையும் அய்யாவையும் எப்படி அவர் பின்னாடியே சுத்த வச்சிருக்காரு பார்த்தீல?அதுல இருந்தே தெரியலையா?”
“ஆமால்ல?”
“எல்லாரும் கணக்கு டீச்சர் மாதிரி கொடுத்து வச்சிருக்க மாட்டங்க அப்பத்தா.. நீ தான் புள்ளைய அப்படி தங்கமா வளர்த்து வச்சிருக்க..” என்றாள் குறும்பாக.
“அடிங்க.. அய்யாவுக்கும் பேத்திக்கும் குசும்பு மட்டும் குறையாதே..” என்று கூறி கொண்டே பேத்திக்கு பிடித்த அயிலை மீன் குழம்பை வைத்து முடித்தார்.
“போகையில எடுத்திட்டு போடா” என்றார் வாஞ்சையாக.
———————
error: Content is protected !!