Skip to content
Post Views: 1,357
மனசு 7
நடுஇரவாகி இருக்க சாயாலி உடனே உறங்கி விட்டாள். பழைய நினைவுகளின் தாக்கத்தால் கோசலையால் உறங்க முடியவில்லை. இன்பவேணியும் விழித்திருந்தாள்…
அம்மா, நாம கொஞ்ச நாள் இங்கேயே தங்கலாமா?
Advertisement
கோபமாக மகள் பக்கம் திரும்பி படுத்து வெறித்தவர், “இவ்வளவு பட்டும்… நான் செத்துருவேன்னு சொல்லியும் உனக்கு அவன் முக்கியமா போயிட்டானா?”
Advertisement
என்னால கிருஷ மறக்க முடியல. அதுக்காக அவனோட வாழ நினைக்கல. எனக்கு இப்ப தான் நம்ம வீட்டுக்கு வந்த மாதிரி இருக்கு. ஆடம்பரமெல்லாம் எனக்கு புடிக்கல. நான் பழைய வேணியா இருக்க முடியாது தான். ஆனா என்னோட எல்லா நினைவுகளும் இருக்கும் இடத்திலே நிம்மதியா சாகணும்…
Advertisement
ஏய்ய்ய்..
Advertisement
“ப்ளீஸ்மா, கல்யாணத்த பத்தி பேசாதீங்க. கிருஷ் வேணும்னா கல்யாணம் பண்ணி இருக்கலாம். என்னால அவன விட அந்த இடத்த யாருக்கும் கொடுக்க முடியல. எனக்கு யாருமே வேண்டாம். என் நினைவுகளே போதும்…” அவரை கட்டிக் கொண்டு அழ, கோசலைக்கோ மகளின் பேச்சில் உதிரம் கொட்டியது.
தனக்கு பின் இவளுக்கு யார் இருப்பா? அவர் கேட்டு அழ,
நான் இருக்கேன்மா. என்னோட உயிரையும் மானத்தையும் அக்கா காப்பாத்தி இருக்காங்க. சாகும் வரை நான் அவங்களுக்காக இருப்பேன்…
இருவரும் திகைத்து அவளை பார்க்க, அவள் ஆதரவாக இருவரையும் அணைக்க,
“எங்க வாழ்க்கையில வந்த பொக்கிஷம்டா நீ” சாயாவை முத்தமிட்டார் கோசலை. விழிகள் கலங்க அவரை கட்டிக் கொண்டாள் சாயாலி.
உதய்கிருஷ்ணா விதார்த்தை அவன் படுக்கையில் போட்டு அவனருகே அவனை கட்டிக் கொண்டு படுத்து விட்டான். அவன் போதையில் உறங்க, கோசலையின் பாசமான முகம் தற்போது கோபத்தில் கொவ்வை பழமானதை எண்ணி மனம் நொந்து போனான். அவரின் ஒதுக்கம் அவனை நிலை குலைய வைத்தது. யார் முன்னும் எதையும் காட்டாத உதய் எப்போதும் தனியே அவனறையில் உணர்வுகளை வெளிப்படுத்த பழகி இருந்தான். இன்று தம்பியின் செயலில் அவனுடன் இருந்து கொண்டான்.
“காதல் என்னை பிளிகிறதே
கண்ணீர் நதியாய் வழிகிறதே
நினைப்பதும் தொல்லை
மறப்பதும் தொல்லை
வாழ்வே வலிக்கிறதே!”
ஆதவன் கதிர்வீச்சின் சாராம்சம் பட்டு விழித்த விதார்த் தன்னை சுற்றி பார்க்க அவனறையில் யாருமில்லை. தலை பிடித்து அமர்ந்தவன் நேற்று நடந்ததை எண்ணி குளிக்க சென்றான். அவன் எழும் முன் எழுந்த உதய்கிருஷ்ணா பாட்டி அறைக்கதவை தட்டினான்.
என்ன உதய்?
பாட்டிக்கு பதிலளிக்காமல் உள்ளே சென்று தாத்தாவை கண்டுகொள்ளாமல் ஜான்வியை மெதுவாக தூக்கி அவனறைக்கு சென்று விட்டான்.
பாட்டி தாத்தாவை வெறித்தவாறு இருக்க, அவரோ நல்ல உறக்கத்தில் இருந்தார்.
சிலமணி நேரத்தின் பின் குழந்தையுடன் உதய்கிருஷ்ணா தயாராகி வர, விதார்த்தும் மற்றவர்களுமே தயாராக இருந்தனர்.
“சித்ராக்கா….” உதய்கிருஷ்ணா அழைக்க,
“எடுத்து வைக்கிறேன்” என்று உணவை எடுத்து வைக்க, அனைவரும் அமைதியாக உண்டனர்.
விதார்த் மீண்டும் அறைக்கு சென்று கையில் பையுடன் விறுவிறுவென வெளியேற,
“விது விது…” அழைத்துக் கொண்டே உதய்கிருஷ்ணா வெளியே வந்தான்.
அண்ணனின் குரலில் வேகமெடுத்தான் விதார்த்.
கேட்டருகே விதார்த் செல்ல அவன் கை பிடித்து, “என்ன பண்ற?” சீற்றமுடன் வினவினான் உதய்கிருஷ்ணா.
தெருவினர் வேடிக்கை பார்க்க, கோசலை, சாயாலி, இன்பவேணியும் அவர்களை பார்த்தனர்.
நான் வீட்ட விட்டு போறேன்.
போறீயா? எங்க?
எங்கேயோ?
என்ன திடீர்னு?
ஏண்ணா, நான் எதுக்கு போறேன்னு தெரியாதா?
தெரியாது…சொல்லு? கை கட்டி தமையனை பார்த்தான்.
கொலகார கும்பளோட என்னால வாழ முடியாது..
“விது, எல்லாரும் வேடிக்க பாக்குறாங்க. உள்ள வாய்யா பேசிக்கலாம்..” பாட்டி அழைத்தார்.
“ஹ..ஹ…இதே மாதிரி எல்லார் முன்னும் தான விச்சு அங்கிள்ட பேச கூடாத எல்லாம் பேசி அவங்கள அவமானப்படுத்துனீங்க.. கடைசி அவர கொன்னுட்டீங்க. நீங்களாம் மனுசங்களே இல்ல..” ஆக்ரோசமாக கத்தினான் விதார்த்.
“நான் எதுவுமே செய்யலய்யா….” பாட்டி கூற,
ஆமா, வீட்டுக்கு மூத்த மனுசி. என்ன செஞ்ச? உம் பொண்ணு செய்ற எல்லா அராஜகத்தையும் அக்கரமத்தையும் வேடிக்க தான பாத்தா..
என்ன என்னிக்கிடா பேச விட்டாங்க..
பேசி இருக்கணும்..
முந்தானையை இழுத்து சொருகி, “நீ பேசுனியா? மூச்சுக்கு மூச்சு அங்கிள் அங்கிள்னு அவர வால் புடிச்சி நீ தான சுத்துன? நீ பேசுனியா அவருக்காக?”
எந்த தடுமாற்றமும் இல்லாமல், “நான் பேச முடியும்னு நீ நினைக்கிறியா பாட்டி..?? எனக்கு மட்டும் உங்க குடும்பத்துல்ல அந்த உரிமைய குடுத்திருந்தா உன்னோட பொண்ணு எங்க வீட்டு வாசல மிதிக்க விட்டிருக்கவே மாட்டேன்” ஆங்காரமுடன் கத்தினான்.
“என்னோட அங்கிள கொன்னுட்டா உம் மவன? என்னிக்கி இருந்தாலும் அவ சாவு என் கையில தான்…” அவன் கத்த, பளாரென விதார்த் கன்னத்தில் அறைந்தான் உதய்கிருஷ்ணா..
“அண்ணா, நடந்ததை மறந்துட்டியா? இல்ல எல்லாத்தையும் மறந்துட்டியா?” விதார்த் ஒரு வேகத்தில் கேட்டு தன் தவற்றை உணர்ந்து அண்ணனை பயத்துடன் பார்த்தான்.
விரக்தியுடன் இதழ் வளைத்த உதய்கிருஷ்ணா, “யாரோட சாவும் நம்ம கையிலன்னு சொல்லாத. நம்ம கையில எல்லாரோட வாழ்வும் சந்தோசமா இருக்கணும். என்ன சொன்ன கொலகார கும்பலா? யார சொன்ன?” விதார்த்தை நெருங்கி அவன் விழிகளை ஊடுருவினான் உதய்கிருஷ்ணா..
தடுமாற்றத்துடன், “அண்ணா…..” கண்ணீர் வந்து விட்டது விதார்த்திற்கு.
“யோசிச்சு பேசவே மாட்டீயா?” பாட்டி அவனை திட்ட,
அவரை முறைத்த உதய்கிருஷ்ணா, “நீ சொல்லு? யார கொலகாரன்னு சொல்ற?” அவனது உறுத்த விழிகளில் கையிலிருந்த பையை கீழே போட்டு விதார்த் உதய்கிருஷ்ணாவை அணைத்துக் கொண்டான்.
உன்ன இல்ல…எனக்கு தெரியும்..என்னோட அண்ணா யாருக்கும் எந்த தீங்கும் செய்ய மாட்டான். அவ செத்தது விதின்னா. அன்று நீயும் தான…சொல்ல வந்தவனை நகர்த்தி அவன் வாயில் கை வைத்து “வேண்டாம்” தலையசைத்தான்.
சரி நீ கிளம்பு. எங்க போகணுமோ போ. நான் தடுக்கல. ஆனால் நீ இந்த விட்டு போறதுக்கு முன்னாடி உன் மனசுல உன்னோட அண்ணா செத்துட்டான்னு புரிய வச்சிட்டு போயிடு..
அண்ணா…
உதய்…ஆளாலுக்கு அழைக்க,
வலிக்குதா? இது போல தான்டா எனக்கும். இது நம்ம வீடு. அடுத்தவங்க செஞ்ச எல்லாத்துக்கும் நாம பொறுப்பாக முடியாது. ஒரு விதத்துல நீ சொல்றது சரிதான்.
விச்சு அங்கிள் இறப்புக்கு நாமும் ஒரு விதத்துல காரணம் தான். ஆனா நாம என்ன கொலை செஞ்சோம்? வெளிய வர முடியாத சூழ்நிலை. அவர்களுக்காக பேச முடியாத நிலை…?? ஏன்டா அவரு அவர் குடும்பத்துக்காக வாழ்ந்திருக்கலாமே! ஏன் அவரு பொண்ணும் மனைவியும் அவர் இல்லாமல் அத்தனை வேதனையோட வாழணும்னு அவருக்கு தெரியாதா? தெரிஞ்சு தான தற்கொல செஞ்சிருக்கார். மானம் அவமானம் அவருக்கு மட்டும் தானா? அவங்க பொண்ணு மனைவிக்கு இல்லையா?
கோசலையும் இன்பவேணியும் கதறி அழ, அவர்களை தேற்றும் விதமாக கட்டிக் கொண்டாள் சாயாலி. அவளுக்கும் உதய் கூறுவது சரிதான் என தோன்றியது.
“என்ன கண்டதையும் பேசிட்டு இருக்கீங்க?” தாத்தா கர்ஜனையில் முகத்தை அழுந்த துடைத்து வெளியே வந்தாள் இன்பவேணி. ஆனால் அவள் பேசும் நிலை வரவேயில்ல.
யோவ், வாய மூடிரு இல்ல நான் உனக்கு விவாகரத்து குடுத்துட்டு போயிட்டே இருப்பேன் என்ற பாட்டி,
“எம் பேத்தி எம் பேரன கட்டிக்கிட்டா கூடவே இருப்பான்னு ஆசையில தான் கொஞ்சம் அமைதியா இருந்தேன். நீ ஒரு நாளாவது என்ன மதிச்சு கேட்டுருக்கியா? நீயும் உம் மகளும் சேர்ந்தே முடிவெடுத்துப்பீங்க. எனக்கு உன்ன புடிக்கவேயில்ல. உதய் நல்ல வக்கீலா பாரு. இந்த ஆள நான் விவாகரத்து செய்யணும். “கோண புத்தி இருக்கிறவனோட வாழ்றத விட தனியா இருந்துட்டு போகலாம்.”
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் வாயில் கை வைத்து பாட்டியை பார்க்க, தாத்தா நெஞ்சை பிடித்து அமர்ந்து விட்டார்.
“நெஞ்சு வலிக்குதா? நல்லா வலிக்கட்டும். எம் பேரனுக்கும் அப்படி தான இருந்திருக்கும். எப்ப அந்த பொண்ணுக்காக எம் பேரன் சாவுற வரைக்கும் போனானோ அப்பவே எனக்கு புரிஞ்சிடுச்சு. அப்பவே தல பாடா அடிச்சேன். கேட்டியா நீ? இப்ப எம் பேர வாழ்க்கையவே காவு குடுத்து நிக்கிறோம்’ என நெஞ்சில் அடித்து அழுதார்.
விதார்த் பாட்டியை சுற்றி சுற்றி வந்து, “பாட்டி டிராமா போடுற மாதிரி இருக்கே!” பார்த்தான்.
“அம்மா, என்ன பண்ற?” ராமநாதன் வர,
“நானும் எம் பேரன் விதுவோட வீட்ட விட்டு போறேன். ஏய் கிழவா உன்ன நான் கோர்ட்டுல பாத்துக்கிறேன்” என பாட்டி பேசவும் தான் அவ்விடம் சீரியசானது.
“பாட்டி, இந்த வயசுல என்ன விவாகரத்து? உனக்கென்ன பிரச்சனை?” உதய்கிருஷ்ணா கோபமாக கேட்டான்.
“என்ன பிரச்சனையா? என்ன இந்தாளு பேசவே விட மாட்டான் உதய். நான் சொல்றத ஒருநாள் கேட்டதில்லை. அன்னிக்கி மட்டும் நான் சொல்றத கேட்டிருந்தா. நீயும் பொண்டாட்டி புள்ளையோட சந்தோசமா வாழ்ந்திருப்ப..
ராமா, முதல்ல இந்தாளையும் இந்தாளு மகளையும் உன்னோட வீட்டுக்குள்ள விடாத இல்ல குழந்தை வாழ்க்கையையும் நாசமாக்கிடுங்க..” ஒப்பாரி வைத்தார் பாட்டி.
விதார்த் அண்ணனை பார்க்க, உதய்கிருஷ்ணா தலையில் கை வைத்து விட்டான்.
“ஏன்டி எல்லார் முன்னாடியும் எம் மானத்த வாங்குற?” தாத்தா கேட்கவும்,
கோபமான பாட்டி விறுவிறுவென வீட்டினுள் செல்ல, விதார்த்தும் உதய்கிருஷ்ணாவும் பதற, சென்ற வேகத்திலே வெளியே வந்த பாட்டி அவர் சுருக்கு பையில் இருந்த பல இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை தாத்தா மீது தூக்கி எறிந்தார்.
இந்த பணத்தால தான பிரச்சனை. நீயே வச்சுக்கோ. எனக்கு என்னோட அம்மா வீடு இன்னும் இருக்கு. அங்க போறேன்.
“விது, எதுக்கு எங்கேயோ போகப் போற? வா உன்ன உன்னோட பூட்டி வீட்டுக்கு கூட்டிட்டு போறேன். உதய் நீ நல்ல வக்கீலா பாத்துட்டு கால் பண்ணு” விதார்த்தின் பையை தோளில் போட்டு, “வாடா..” அவன் கை பிடித்து இழுத்தார்.
“பாட்டி….” அண்ணன் தம்பி ஒன்றாக சத்தமிட்டனர்.
என்னடா?
நான் போகல. நான் அண்ணாவ விட்டு டூர் கூட போனதில்ல.
“அதெல்லாம் முடியாது. நீயும் வர்ற…” விதார்த்தை இழுத்து அவர் நடக்க, பெருமூச்சுடன் அவர்கள் பின்னே உதய்கிருஷ்ணாவும் தாத்தாவும் ஓடி வந்தனர்.
“பாட்டி, விதுவ நான் எங்கேயும் விட மாட்டேன்” உதய் ஒரு பக்கம் கை பற்றி இழுக்க, “அவன் என்னோட தான் இருப்பான்” பாட்டி ஒரு பக்கம் இழுத்தார். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் சிரித்தனர்.
பாட்டி…அண்ணா….விதார்த் பாவம் போல விழிக்க, ராமநாதன் செய்வதறியாது திகைத்தார்.
புன்னகையுடன் ஓடி வந்த சாயாலி அவர்கள் முன் வந்து, “பாட்டி நான் ஒரு ஐடியா சொல்லவா?” விதார்த்தை பார்த்து புருவம் உயர்த்தினாள்.
“இவ எப்படி இங்க? நீ இங்க என்ன செய்ற?” விதார்த் கேட்டுக் கொண்டே இன்பவேணி வீட்டை பார்க்க, கோசலையும் இன்பவேணியும் அவர்களை முறைத்துக் கொண்டிருந்தனர்.
சொல்லும்மா?
பாட்டி நீங்க ஒரு மாசம் விது மாமாவ வச்சுக்கோங்க. உதய் மாமா ஒரு மாசம் வச்சுக்கட்டும்…
“சாயா…” கோபமாக கோசலை அழைக்க, பாட்டி அவர்களை பார்த்து, “யாரும்மா நீ?” கேட்டார்.
அவங்க என்னோட அம்மா, அக்கா..
அம்மாவா? அவங்களுக்கு ஒரு பொண்ணு தான?
அது சீக்ரெட்
சிகரெட்டா? பாட்டி வாயை பிளந்தார்.
அய்யோ! தலையில் அடித்தான் விதார்த்.
உதய்கிருஷ்ணா இன்பவேணியை பார்க்க, கோசலை வேகமாக அவர்களிடம் வந்து சாயாலியை இழுத்து சென்றார்.
அம்மா, பாட்டிக்கு ஐடியா சொல்ல தான் போனேன்..
“நீ எதுவும் சொல்லத் தேவையில்லை. அவங்களுக்கு தெரியாத ஐடியாவா நீ குடுக்கப் போற?” சத்தமிட்டார்.
பாட்டி முகம் சுருங்க, தாத்தாவிற்கு கோபம் வந்தது.
“ஏம்மா நில்லு” தாத்தா கோசலையை நோக்கி நடக்க, “அப்பா…” ராமநாதனும், “தாத்தா..” உதய் விதார்த்தும் அவரிடம் வந்தனர்.
இங்க பாரும்மா. எம் பொண்டாட்டி அன்னிக்கு உன்ன ஏதாவது சொன்னாளா? அவள இதுல இழுக்காதம்மா. அவ தங்கமானவ..
இன்பவேணி பல்லை கடிக்க, கோசலை அவரை கண்ணோடு பார்த்து குற்றம் சாட்டி,
“வா சாயா, இனி யார்டயாவது பேசுன? வீட்டுக்குள்ள உன்ன பூட்டி வச்சிருவேன்” கோபத்தில் சொல்லி சென்றார்.
“பாட்டி அமைதியா உள்ள வாங்க. நீ என்ன பண்ணப் போற?” கோபமாக உதய்கிருஷ்ணா தன் தம்பியிடம் கேட்க, விதார்த் உள்ளே சென்று விட்டான்.
சாயாலி இன்பவேணியை தான் பார்த்தாள். அவள் முகம் குழப்பத்தை தத்தெடுத்து இருந்தது. இவர்கள் வீட்டில் குடியிருப்பவர்கள் பக்கத்தில் இவர்களை விசாரிக்கவும், இன்பவேணி குடும்பம் அவமானப்பட்டத்தை கூறினார்கள்.
வேணிம்மா, நாம இங்கேயே கொஞ்ச நாள் இருக்கலாம் என்றார் கோசலை.
அவருக்கு பாட்டி சொன்ன, “அந்த பொண்ணுக்காக எம் பேரன் சாவுற அளவு போனான்” என்ற வார்த்தையில் இங்கு நடந்ததையும் அறிந்து கொள்ள எண்ணினார்.
“எதுக்கும்மா? அதெல்லாம் வேண்டாம்..” இன்பவேணி தடுக்க,
“இங்க தங்க போறீங்களா? அப்ப நாங்க காலி பண்ணனுமா?” அப்பெண் வினவ,
நாங்க உனக்கு இங்கேயே பக்கத்துல வீடு பாத்து எல்லா அரேஞ்மென்ட்டும் பண்ணித் தாரோம். உனக்கு வீடு புடிச்சிருக்கான்னு மட்டும் சொல்லு…என்றார்.
பணக்காரர்கள் இவ்வளவு தன்மையாக பேசுவதும் இல்லாமல் வீடு பாத்து எல்லாம் செய்து தாரேன்னு சொல்லவும் சரி என்று விட்டனர் அவர்கள் வீட்டில் குடியிருப்பவர்கள்.
மதியத்தின் பின் அவர்கள் கிளம்பவும் நிம்மதியுடன் மூச்சு விட்டனர் கோசலையும் இன்பவேணியும்.
இன்று யாரும் ஆபிஸ் செல்லவில்லை.
மாலை நேரம் தெருவினரே பதறி வெளியே வந்தனர்.
இன்பவேணி வீட்டின் முன் கத்திக் கொண்டிருந்தார் பிரியங்காவின் தாய் பத்மா.
“சிறுக்கி மவளே! வெளிய வாடி. இத்தன வருசத்துக்கு அப்புறமும் எம் மருமகன மயக்க வந்துட்டியா?” அவர் கத்தியதில் இரு வீட்டினரும் வெளியே வந்தனர். அன்று வெளியே வர முடியாத நிலையில் இருந்த உதய்கிருஷ்ணா வந்தான்.
எல்லாரும் அவரை தடுக்க, கை கட்டி அவரை வெறித்து பார்த்தாள் இன்பவேணி. கோசலைக்கு பகீரென ஆனது. மீண்டும் மீண்டுமா என்று…
இம்முறை விதார்த்தும் உதய்கிருஷ்ணாவும் விசுவமூர்த்தி வீட்டின் கேட்டருகே சென்று நிற்க, அதற்கும் பேசிய பத்மா இன்பவேணியை அடிக்க நெருங்கினார். இருவரும் அவர் பின் ஓட, அவர் கை பிடித்த சாயாலி அவள் பலம் கொண்டு பத்மாவை வேகமாக தள்ள அவர் கீழே விழுந்தாள்.
“என்னோட அக்கா பத்தி இதுக்கு மேல பேசுனீங்க வெட்டி போட்டு போயிட்டே இருப்பேன்” வீரதமிழச்சியாக தேங்காய் வெட்ட வெளியே வைத்திருந்த அரிவாளை எடுத்து அவர் கழுத்தில் வைத்தாள். மறுநொடி அமைதியாகி விட்டார் பத்மா.
“சாயா…” கோசலை அவளை அதட்டி அரிவாளை பிடுங்க,
“அம்மா….” அவள் பார்த்த பார்வையில் நகர்ந்து நின்றார் கோசலை. இன்பவேணி அசையவேயில்லை. அவளுக்கு தெரியும் சாயாலிக்கு அவர்கள் மீதுள்ள பாசம்..
உதய் வீட்டினர் அதிர்ந்து இருந்தனர்.
“விடு சாயா, கண்டவங்கட்ட என்ன சண்ட போட்டுட்டு? பாயாசம் சாப்பிடணும் வா இல்ல ஆறிடும்” இன்பவேணி அவள் கை பிடிக்க,
ஜாக்கிரத..அம்மா அக்காவ ஏதாவது சொன்ன நான் பேச வெல்லாம் மாட்டேன்…
“கண்டவங்களா? நடந்த எல்லாம் மறந்து போச்சா…?? ஆள வச்சு மிரட்டுற?” எழ முடியாமல் பத்மா வாய் விட,
அவரை மேலும் கீழே தள்ளி நெஞ்சில் காலால் மண்டியிட்டு அவரை முறைத்த சாயாலியின் பார்வையில், “நீ சாகாம போக மாட்ட?” மிரட்டும் தொனி இருந்தது.
போலீஸ் அவ்விடம் வர, “பைரவா நான் பத்மா மேடம் மேல கம்பிளைண்ட் பைல் பண்ணனும். இவங்க எம் பொண்ண கஷ்டப்படுத்துறங்க. எங்களால மத்தவங்களும் பாதிக்கப்படுறாங்க…இவங்கள அரெஸ்ட் பண்ணு..” உதய்கிருஷ்ணா கூற,
“உதய்…” கத்தினார் தாத்தா.
யாரடா அரெஸ்ட் பண்ணுவீங்க? நான் யாரு தெரியுமா? பைரவா என்னை தெரிஞ்சும் நீ அரெஸ்ட் பண்ணுவியா?
“ஆன்ட்டி, உங்கள மட்டுமல்ல எனக்கு உங்க பொண்ணயும் நல்லா தெரியும். எங்கிட்ட சில ஆதாரம் இருக்கு. அத வச்சு நடந்ததை கோர்ட்டுல நான் சொன்னேன்னு வச்சுக்கோங்க. உங்களால வெளிய தல காட்ட முடியாது…” கடுமையுடன் எச்சரித்தான் உதய்கிருஷ்ணாவின் தோழன் காவல் அதிகாரி பைரவன்.
“எம் பொண்ண பத்தி பேசாத பைரவா” கத்தினார் பத்மா.
“பையூ, நீ இவள ஒரு மாசம்..இல்ல இல்ல ஒரு வருசம் உள்ள போடு” பாட்டி சொல்ல,
நீ என்னோட அம்மா தானா?
இல்லடி. நீ எம் பொண்ணா இருக்க வாய்ப்பில்ல. புள்ள மாறிடுச்சுன்னு நினக்கிறேன்..
அம்மா..
இனி நீ மட்டுமல்ல உன் அப்பனும் எனக்கு யாரோ தான்? நான் எம் பேரனுகளோடவே இருந்துக்கிறேன்..
“உனக்கு என்னை விட இவனுக முக்கியமா?” கொதித்தார் பத்மா.
ஆமாடி, நான் பண்ண தப்பு என்ன தெரியுமா? வஞ்சி வீட்ட விட்டு போகும் போது தடுத்திருக்கணும். அவ மட்டும் இப்ப உயிரோட இருந்தா எம் பேரனுக இத்தன பேரு முன்னாடி எப்போதும் அவமானப்பட்டு நிக்க மாட்டாங்க. நான் பெத்த ரெண்டுமே தரித்திரம் தான்.. ஆனா எனக்கு வாய்ச்ச பேரனுக சொக்கத்தங்கம்…நீ போடி..
“உன் பேத்தி செத்தது கூட உனக்கு மறந்துடுச்சில்ல. இவன் தான் எம் பொண்ண கொன்னான்” உதய்கிருஷ்ணாவை விரல் நீட்டி பேச, அங்கே வந்த பத்மாவின் கணவர் பளாரென அவரை ஓங்கி அறைந்தார்.
error: Content is protected !!