Skip to content
Post Views: 1,428

அத்தியாயம்-18
அதிதி கிளம்பி சென்றதும்..
“டேய் என்னடா நடக்குது..?” என்று ஒற்றைப் புருவம் உயர்த்தி கேட்டான் விக்ரம்.
Advertisement
“ம்ம்ம்..இங்க டின்னர் நடக்குது அந்த பக்கமா எதோ பார்ட்டி நடக்குது.. வெளிய வேற எதாவது நடக்கும் நீ எத கேக்குறடா அண்ணா..?”
“நான் என்ன கேக்குறேன்னு உனக்கு தெரியாது..? நடிக்காதடா.. உங்க ரெண்டு பேருக்கு நடுவுல என்ன நடக்குது..?”
“என்னடா உளறுற..?அதெல்லாம் ஒன்னும் இல்ல..”
Advertisement
“இல்லையே.. நீ ஆளே சரியில்லையே.. பொதுவா எந்த பொண்ணுக்கிட்டயும் நீயா போய் பேசமாட்ட.. அதுவும் இப்ப ஃபோன் நம்பர்லாம் வாங்குற..”
Advertisement
“தனியா உக்காந்திருந்தாங்க எதார்த்தமா போய் பேசுனேன்..ஆஃபீஸ் விஷயம் பேசதான் நம்பர் வாங்கினேன்..அவ்ளோதான், அதுக்கு எதுக்கு இப்ப நீ விசாரணை கமிஷன் வைக்கிற..?”
“சாதாரணமா பேசுன மாதிரி தெரியலயேடா கண்ணா.. ரொம்ப நாள் பழகினவங்க மாதிரில்ல தெரிஞ்சது..”
“நீ தான்டா சொன்ன நம்ம காலேஜ் பொண்ணுன்னு.. அதான் எந்த வருஷம், என்ன டிபார்ட்மெண்ட்ன்னு கேட்டுட்டு இருந்தேன்.. அதுக்குள்ள வந்துட்டான் சிபிஐ மூளைய தூக்கிகிட்டு..”
Advertisement
“இப்பவும் நீ சொல்றத நம்ப முடியலையே ராஜா… என்ன அந்த பொண்ண புடிச்சிருக்கா..? உன்னோட டைப்னு தோணுதா..?” என்று துருவினான்.
“யப்பா டேய்..ஆள விடுடா தெரியாம பேசிட்டேன்.. இனிமே அவ இருக்கற பக்கமே திரும்பல போதுமா..”
என்று கையெடுத்து கும்பிடுவது போல் பாவனைக்காட்ட..
“வெரி குட்.. இதை இப்படியே மெயிண்டெயின் பண்ணிக்கோ.. அது என்னோட ஸ்டாஃப் நியாபகம் இருக்கட்டும்..” என்று மிரட்டும் தொனியில் கூற
“அடப்பாவி இவ்ளோ நேரம் என்னைப் போட்டு வாங்கினியா..?” என்று அதிர்ந்தாள்.
“சீரியஸாவே சொல்றேன் வசி..அவ ரொம்ப நல்ல பொண்ணு.. உன்னோட சித்து விளையாட்டுலாம் அவகிட்ட வேண்டாம்..”
“நான் என்ன ப்ளேபாயா? ரொம்பதான் நீ என்னை டேமேஜ் பண்ற..”
“ஷி இஸ் அ வெரி ஸ்பெஷல் கேர்ள்..நாட் லைக் அதர்ஸ்..” என்று கூறியவனின் பார்வையில் இருந்த ஒளியை வசீகரன் கவனிக்கத்தவறவில்லை, தான் எதோ ஆபத்தானவன் போலவும் தன்னிடமிருந்து அதிதியை பாதுக்காப்பவன் போலவும் விக்ரம் பேசுவது எரிச்சலூட்டியது.. அது மட்டுமில்லாமல் அதிதியும் விக்ரமை எதோ வானிலிருந்து இறங்கி வந்த தேவன் போல கண்களில் நட்சத்திரம் மின்ன பார்ப்பதும் அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை..
அடிவயிற்றிலிருந்து சூடாக அமிலம் சுரந்து உடல் முழுவதும் பரவியது.
வாழ்க்கையில் முதன் முறையாக பொறாமை எனும் நெருப்பில் வெந்தான் அவன்.
அதற்குமேல் அவனுக்கு மனம் சரியில்லாமல் போக சற்று நேரத்திலேயே அவனும் கிளம்பிவிட்டான்.
ஊருக்கு போக ஃபிளைட்டில் ஏறி அமர்ந்தவன் வாட்ஸாப்பை திறந்து அதிதியின் எண்ணையே பார்த்துக்கொண்டிருந்தான்.
“வீட்டுக்கு போனதும் விக்ரமுக்கு மெசேஜ் அனுப்பி இருப்பா.. எனக்கு சொல்லனும்னு தோணுதா பாரு.. நான் மட்டும் கிள்ளுக்கீரையா போய்ட்டேனா அவளுக்கு..?” என்று லாஜிக்கே இல்லாமல் ஏதேதோ யோசித்து புகைந்து கொண்டிந்தான்.
அப்போது அதிதி ஆன்லைனில் இருப்பதாக காட்டவும்.. சட்டென்று முடிவெடுத்து..
“கிட்டி..ஊருக்கு கிளம்பிட்டேன்..போயிட்டு வரேன்..பை.” என்று மெசேஜ் அனுப்பினான்.
அவள் மெசேஜை பார்த்துவிட்டதுக்கான ப்ளூ டிக் வந்தது.. பின் எதோ டைப் செய்வதும் அழிப்பதுமாக அந்த மூன்று புள்ளிகள் தோன்றுவதும் மறைவதுமாக இருக்க..
இவன் மூச்சுவிடவும் மறந்து பார்த்திருந்தான்.
அப்போது “ப்ளீஸ் ஸ்விட்ச் ஆஃப் யுவர் டிவைஸ் சார்.. இட்ஸ் டேக் ஆஃப் டைம்..” என்று இனிமையான குரலில் விமானப் பணிப்பெண் கூற வேறு வழியில்லாமல் மொபைலை ஆஃப் செய்யப்போன தருணம்
“ஹேவ் ய சேஃப் ஜர்னி.. பை..”
என்று அவளிடமிருந்து பதில் வந்தது.
முகத்தில் புன்னகை விரிய..
“குட்நைட் பேபி..” என்று ஏதோ ஒரு அசட்டு தைரியத்தில் மீண்டும் செய்தி அனுப்பிவிட்டு உயிரைக் கையில் பிடித்து காத்திருந்தான்.
சிறு தயக்கத்திற்கு பிறகு
“குட்நைட்..” என்று ரிப்ளை வந்தபோது நிஜமாகவே அவன் வானத்தில் பறந்து கொண்டுதான் இருந்தான்.
அதிதியோ தான் எதற்காக அந்த குட்நைட்டை அனுப்பினோம் என்று போர்வைக்குள் காலை உதைத்துக் கொண்டிருந்தாள்.
மறுநாள் இன்ஃபிடெக்கில் காலை மீட்டிங்கிற்காக எல்லாரும் கூடி இருக்க..
பவி எனும் பவித்ரா ஒருநாள் விடுப்பின் பின் அலுவலகம் வந்திருந்தாள்.
பவித்ரா அங்கே விக்ரமிற்கு அடுத்தபடியாக என்று கூறலாம்.
விக்ரம் அமெரிக்காவில் இருக்கும்போது, பவித்ரா இங்கே ஒரு பெரிய சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலைப்பார்த்துக் கொண்டிருந்தாள். இருவரும் லின்க்டின்(LinkedIn) மூலம் நண்பர்கள் ஆனார்கள்.. விக்ரம் இந்தியாவிற்கு வந்து தொழில் தொடங்கியபோது முதல் ஆளாக அவனுக்கு துணை நின்றவள் பவித்ராதான். அவனுக்காக தன் கம்பெனியில் காத்திருந்த வளமான எதிர்காலத்தையும் உதறிவிட்டு எந்தவித உத்தரவாதமும் இல்லாத அவனது புதிய முயற்சியில் கூட நின்றாள்.
அதனால் விக்ரமிற்கு அவள்மேல் தனி மரியாதை எப்போதுமே உண்டு.. அவனே கூட அவனை முழுமையாக நம்பியிறாத போது அவன் ஜெயிப்பான் என்று நம்பி வந்தவள் அவள்.
அதிதியை காலேஜ் கேம்பஸ் இண்டர்வியூவில் தேர்ந்தெடுத்ததும் பவித்ரா தான். அப்போதிலிருந்தே அவளுக்கும் பவித்ராவிற்கும் ஒரு நல்ல பழக்கம் உருவாகியிருந்தது. அதிதி வேலைக்கு சேர்ந்ததும் அவளே சிரத்தை எடுத்து அவளுக்கு நிறைய கற்றுக்கொடுத்தாள்.
முதலிலேயே மிகவும் ஆளுமை நிறைந்த ஸ்டிராங்க் இண்டிபெண்டண்ட் உமன் என்று அவளைப் பார்த்து வியந்திருந்த அதிதிக்கு..
பவித்ராவின் தந்தை அவள் சிறுவயதிலேயே இறந்துவிட அவரது தயார் மிகுந்த சிரமங்களுக்கிடையே அவளையும் அவளது தங்கையையும் வளர்த்தார். பவித்ராவும் படிக்கும்போதே குடும்ப கஷ்டத்தை உணர்ந்து பகுதிநேர வேலைக்குப்போய் தன் தங்கையையும் சேர்த்து படிக்க வைத்து இன்று அவளுக்கு கல்யாணத்தையும் ஒற்றை மனுஷியாக செய்துமுடித்து.. தன் அம்மாவையும் சொந்தவீட்டில் எஜமானியாக வாழவைத்திருக்கும் சிங்கப்பெண் என்ற கதையெல்லாம் தெரிந்ததிலிருந்து பவித்ராவின் மேல் இருந்த மதிப்பு பன்மடங்கு உயர்ந்தது அதிதிக்கு.
மீட்டிங் ஆரம்பிக்கும் முன்.. முதலில் பவித்ராவின் தாயாரது உடல் நலத்தை விசாரித்துவிட்டு தொடங்கினான் விக்ரம்..
“சோ நமக்கு தேவையான இன்வெஸ்மெண்ட் வர போகுது.. இனிமேல் தான் நமக்கு பொறுப்பும் வேலையும் அதிகமாக இருக்கும்…
வசீகரன் வெறும் இன்வெஸ்டரா மட்டும் இல்லாம பார்ட்னரா சேரவும் ஆர்வமா இருக்காரு.
அவங்க கம்பெனி ஐடி செக்டார்லயும் கால் பதிக்க நெனைக்கறாங்க.. இந்த கொலாபரேஷன் மட்டும் நடந்தா நம்ம ஸ்கேல் இன்னும் பெருசா மாறிடும்..
அதிதி நீதான் இந்த கொலாபரேஷன் காண்ட்ராக்ட் ப்ரொசீஜர் எல்லாம் பார்த்துக்கனும்.. அப்புறம் லிங்கா மெஷினரீஸோட புது யூனிட்க்கு ஐடி சப்போர்ட் வேணும்னு கேட்டிருந்தாங்க, அது என்னன்னு கேட்டு ப்ளாண்ட் விசிட்க்கு அரேஞ் பண்ணிடு.. ரிஷி நீ அதிதிக்கு சப்போர்ட் பண்ணு..எதாவது டவுட் இருந்தா என்னையோ இல்ல பவியவோ கேட்டுக்கோங்க..” என்று கூறியவனை இடையிட்ட பவித்ரா..
“வாவ்.. சூப்பர் விக்கி..” என்று கைத்தட்டினாள் ஏளனமாக..
“ஒரு நாள் ஆஃபீஸுக்கு வரலைன்னா.. நான் ஒருத்தி இருக்கறதே மறந்து போயிடுமா..?என்னோட பொறுப்ப என்னை கேக்காம இன்னொருத்தருக்கு தூக்கி குடுத்துடுவீங்களா.? அப்போ நான் எதுக்கு இங்க இருக்கேன்..?நேத்து வந்த கத்துகுட்டிய விட இளக்காரமா போயிட்டேனா நான்..?” என்று கொதித்தெழுந்துவிட்டாள்.
“டேக் ய ப்ரெத் பவி.. உன்னோட திறமைய யாரும் குறைச்சி நினைக்கல.. நான் எது பண்ணாலும் கம்பெனியோட பெஸ்ட் இண்டரெஸ்ட்ட மனசுல வச்சிதான் செய்வேன்னு உனக்கு தெரியாதா..?”
என்று சற்றும் நிதானம் இழக்காமல் பொறுமையாக கேட்டான்.
“கோ டு ஹெல் வித் யுவர் டிப்லமஸி(diplomacy) விக்ரம்.. ஐ யம் டன் வித் திஸ் டிஸ்கஷன்..” என்று புயலாக கிளம்பி வெளியேறினாள்.
அந்த அறையில் மூச்சுவிடும் சத்தம்கூட இல்லாமல் கனத்த அமைதி நிலவியது.
அதிதி பேயறைந்தது போல் வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள்.
இதுவரை பவித்ரா விக்ரமிடம் அதிர்ந்து பேசிகூட யாரும் பார்த்ததில்லை.. அப்படிப்பட்டவள் இன்று எல்லோர் முன்னிலையிலும் விக்ரமை எதிர்த்து சண்டை போடும் படியாக நேர்ந்துவிட்டது..அதற்குக் காரணம் தான் தான் என்று அதிதிக்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது.
‘இதுக்குதான் நான் அப்பவே தயங்கினேன்.. எல்லாம் இந்த வசியால வந்தது. அவன்தான் பாஸ் மனச மாத்தி இருப்பான்..’ கிடைத்தான் ஒருத்தன் என்று எல்லா கேஸையும் அவன் மேல் எழுதிக்கொண்டிருந்தாள் அதிதி.
அப்போதும் நிதானம் இழக்காத விக்ரம்..
“தட்ஸ் ஆல் ஃபார் நவ்.. கெட் பேக் டு வொர்க் கைஸ்..” என்று மீட்டிங்கை முடித்துவிட்டு பவித்ராவைத் தேடிப்போனான்.
சுள்ளென்று அடித்த வெயிலையும் பொருட்படுத்தாமல் மொட்டை மாடியில் நின்றுகொண்டு இலக்கில்லாமல் வெறித்துகொண்டிருந்தாள் பவித்ரா.
அவளது மனம் கொதித்துக்கொண்டிருந்தது.
விக்ரம் தனக்கு இப்படி ஒரு துரோகத்தை செய்வான் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை. நேற்று வந்த சின்னப்பெண் முன்னால் என்னை அவமானப்படுத்திவிட்டான்.
இவனை நம்பி அமெரிக்கா போகும் ஆன்சைட் வாய்ப்பைக்கூட விட்டுவிட்டு வந்தேனே… எனக்கு நன்றாக வேண்டும்..என்று அவள் தன்னையே நொந்துகொண்டிருந்தபோது,
“சன் பாத் எடுக்கறியா பவி..?” என்றபடி அவள் அருகில் வந்து நின்றான் விக்ரம்.
“இல்ல வெயில் காயனும்னு வேண்டுதல்..” என்றாள் அவள் நக்கலாக..
“பவி..” என்று அவன் சீரியஸாக ஆரம்பிக்கவும்..
“உன்னோட எந்த எக்ஸ்கியூசும் எனக்கு தேவையில்ல.. தயவு செஞ்சி போயிடு விக்கி..” என்றாள் கோபமாக.
“இப்ப என்ன உனக்கு அந்த காண்ட்ராக்ட் ரெடி பண்றது ஒரு பெரிய விஷயமா?
நமக்கு இங்க எவ்ளோ வேலையிருக்கு..?
புதுசா ஆளுங்கள ரெக்ரூட் பண்ணனும், அவங்கள அக்காமடேட் பண்ணற அளவுக்கு புது ஆஃபீஸ் பாக்கனும்,லைசென்ஸ் வாங்கனும், நியூ கிளையண்ட்ஸ ஐடெண்டிஃபை பண்ணி, ப்ராஜெக்ட்ஸ் கோஆர்டினேட் பண்ணனும்..இன்னும் எவ்ளோ வேலை இருக்கு..அதையெல்லாம் விட்டுட்டு நீ போய் கோயம்புத்தூர்ல உக்காந்துகிட்டா நான் என்ன பண்றது..?எனக்கு இங்க நீ இருக்கனும்.. அதான் அதிதிய அங்க போக சொன்னேன். அவளுக்கும் ஒரு லேர்னிங்கா இருக்குன்னு நெனைச்சேன்..ஆனா நீ இத இப்படி பர்சனலா எடுத்துப்பன்னு நான் நெனைக்கல.. சாரி..” என்று படபடப்பாக ஆரம்பித்து தணிவாக முடித்தான்.
பவித்ராவின் கோபம் குறைந்ததா இல்லையா என்று அவள் முகத்திலிருந்து எதுவும் அறியமுடியவில்லை.
“நீ நெனைக்கறதெல்லாம் என் மூளைக்கும் அப்படியே காப்பி பேஸ்ட் ஆகிடுமா..?சொன்னாதானே எனக்குத் தெரியும்..? நேத்துவரைக்கும் என்கிட்ட இருந்த பொறுப்ப இன்னிக்கு என் ஜூனியருக்கு தூக்கிக்குடுத்தா நான் என்ன நினைக்கறது..? என்னை ஓரங்கட்டி இன்சல்ட் பண்றதாதானே நினைக்கத்தோணும்..?”
“ஆர் யூ இன்சேன் பவி..? எப்படி உன்னால இப்படி லூசு மாதிரி யோசிக்க முடியுது..? நான் உன்ன இன்சல்ட் பண்ணனும்ன்னு நெனைப்பேனா?”
“நீ என்ன சொன்னாலும் இன்னிக்கு நீ என்ன லெட் டவுன் பண்ணமாதிரி தான் எனக்கு ஃபீல் ஆச்சி விக்கி.. என்கிட்ட ஒரு வார்த்த கூட சொல்லனும்னு உனக்கு தோணலைல..?”
“தப்புதான் நான் உன்கிட்ட சொல்லியிருக்கனும்.. நானே அத லேட்டராதான் ரியலைஸ் பண்ணேன். நான் என்ன நினைக்கறேன்னு நான் சொல்லாமலே நீ புரிஞ்சிப்பன்னு எதிர்பார்த்தது அதிகபடினு தெரியுது.. ஐயம் ரியலி சாரி பவி..”
அவன் திரும்பத் திரும்ப மன்னிப்பு கேட்கவும் பவியும் கொஞ்சம் மனம் இறங்கினாள்.
“என்னமோ அவ நேத்து ப்ரெசெண்டேஷன் ரொம்ப நல்லா பண்ணாளாமே.. என்னைவிட நல்லா பண்ணிட்டாளா..?”
“நீ பத்து அதிதிய தூக்கி சாப்டுடுவ.. அவ இப்பதான் கத்துக்கறா அவள போய் உனக்கு காம்பெடீஷனா நெனைப்பியா..? உன்னோட ப்ளேஸ யாராலையும் ரீப்ளேஸ் பண்ண முடியாது பவி.. யூ ஹேவ் பிக்கர்(bigger) ரோல்ஸ் டு ப்ளே ஹியர்..” என்று அவள் தோளைப் பிடித்து தன் புறமாக திருப்பி லேசாகக் குனிந்து அவள் கண்ணை நேராகப் பார்த்து கூறவும்…
அவள் கோபம் முற்றிலுமாக வடிந்துவிட்டது..
“நானும் சாரி விக்கி.. எல்லார் முன்னாடியும் உன்னை கத்திட்டேன்..” என்றாள் கழிவிரக்கத்துடன்.
“எப்பவும் தனியா கூப்டு திட்டுவ.. இன்னிக்கு எல்லார் முன்னாடியும் திட்டிட்ட அவ்ளோதானே விடு..”
“இல்ல விக்கி.. என்ன இருந்தாலும் நீ என்னோட பாஸ், மத்தவங்க முன்னாடி உன்னை கவுரவ குறைச்சலா பேசினது தப்புதான் சாரி..”
“என்ன இப்ப மாத்தி மாத்தி சாரி கேக்குற போட்டியா நடக்குது.. நம்ம பசங்கதானே விடு பாத்துக்கலாம்..” என்று கேலி பேசி நிலமையை சகஜமாக்கினான்.
அந்தப்பக்கம் இந்த நேரம் பார்த்து வசீகரன் அதிதியை அலைப்பேசியில் அழைக்க..
அழைப்பை எடுத்ததும் அவனை பேசவே விடாமல்
“இங்க எவ்ளோ பெரிய பிரச்சனை போயிட்டு இருக்கு தெரியுமா? எல்லாம் உங்களால தான்..உங்கள யாரு இங்க வர சொன்னா..?” என்று பொரியத் தொடங்கிவிட்டாள்.
“ஹேய் இருடி.. நான் என்ன பண்ணேன்…? இப்பல்லாம் என்னன்னு காரணம் சொல்லாமலே திட்ட ஆரம்பிச்சிட்டியா..?”
“டி போட்டு பேசாதீங்க..”
“ஆமா இப்ப அது ரொம்ப முக்கியம்.. மொதல்ல என்ன விஷயம்ன்னு சொல்லு..”
“எங்க கம்பெனி விஷயத்த நான் எதுக்கு உங்ககிட்ட சொல்லனும்..?”
“இது நல்ல கதையா இருக்கே..நீ என்னை கண்டபடி கத்துவ அதுக்கு ரீசன் தெரிஞ்சிக்கக்கூட எனக்கு உரிமை இல்லையா..? நம்ம சட்டத்துலயே இருக்கு ரைட் டு இன்ஃபர்னேஷன் ஆர்டிஐ..” என்றவனை இடையிட்டு..
“ஓ சட்டம் பேசனுமா..?நேத்து பேபின்னு மேசேஜ் அனுப்புனீங்களே.. அது எந்த சட்டத்துல சார் வருது..?” என்று ஏளனத்துடன் கேட்க
“இரும்மா.. ஒரு கேஸ் போயிட்டு இருக்கும்போதே அடுத்த பஞ்சாயத்துக்கு தாவாத..கொஞ்சம் கேப் விடு..பாடி தாங்கனும்ல..”
“சும்மா கதையடிக்காதீங்க எதுக்கு ஃபோன் பண்ணீங்கன்னு சொல்லுங்க..”
“உங்க கம்பெனிய நம்பி காசு போடுறதுக்கு எனக்கு நல்ல மரியாதை கெடைக்குது..” என்று அவன் பெருமூச்செரிய..
உடனே தணிந்து “என்ன விஷயம் சொல்லுங்க சார்..” என்று தேன் தடவிய குரலில் போலிப்பணிவுடன் கேட்டாள்..
“காண்ட்ராக்ட் டீடெயில்ஸ் பத்தி டிஸ்கஸ் பண்ண இன்னிக்கு மீட்டிங் வச்சிக்கலாமான்னு கேட்க தான் கால் பண்ணேன்.. நியாயப்படி நீங்கதான் ஃபாலோஅப் பண்ணனும்.. என் நேரம் இதையும் நானே பண்ணவேண்டியதா இருக்கு.” என்று தலையில் அடித்துக்கொண்டான்.
“உங்களுக்கு வசதியான நேரத்த சொல்லுங்க சார்.. நான் ஷெட்யூல் பண்றேன். அப்புறம் இனிமே எதுவா இருந்தாலும் மெயில் அனுப்புங்க சார்…அதுதான் எனக்கு வசதி..” என்றாள் ராகத்துடன்..
“அச்சோ..ஆனா கால் பண்றதுதான் எனக்கு வசதியா இருக்கு மேடம்.. நாம இப்படியே கண்டினியூ பண்ணிக்கலாம்.. என்று அவளைப்போலவே ராகமிழுத்து பேசியவன்
“அப்றம்..ரெண்டு மணிக்கு மீட்டிங் அரேஞ்ச் பண்ணிடு..பை கிட்டி..” என்று அழைப்பைத் துண்டித்தான்.
error: Content is protected !!