Skip to content
Post Views: 1,248
மனசு 8
“நேத்து தான் நீ இங்க வரக் கூடாதுன்னு எச்சரிச்சேன். இங்க வந்து எம் மருமகனுக வாழ்க்கைய நாசமாக்க வந்துட்டியா? நான் சொன்னதை மீறுனேல்ல…இனி எனக்கு நீ பொண்டாட்டியே கிடையாது. உம் அப்பன் வீட்டுக்கு போயிடு. என் வீட்ல காலெடுத்து வச்ச உன்னை வெட்டி போட்டு நான் ஜெயிலுக்கு போயிடுவேன்” ஆங்காரமுடன் கத்தினார் பத்மாவின் கணவர்.
தன் மகள், மனைவியின் செயலை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இன்பவேணி குடும்பத்தை நெருங்கிய பத்மாவின் கணவர்,
Advertisement
“என்ன மன்னிச்சிருங்கம்மா. நான் அன்னிக்கு எம் பொண்ணோட ஆசைக்காக தான் அப்படி பேசிட்டேன்” மன்னிப்பு கேட்டார். இருவரும் அமைதியாகவே இருந்தனர்.
Advertisement
யாரும் இவ பேசுனத வச்சி உதய் மாப்பிள்ளய தப்பா நினைக்காதீங்க. அவரு மேல தப்பே இல்ல. அவரு எம் பொண்ண கல்யாணமே பண்ணிக்கல. இவளும் எம் மகளும் சேர்ந்து…என அவர் சொல்லும் முன்…
Advertisement
“மாமா…” சத்தமிட்டு உதய் அழைத்து அர்த்தமுடன் தம்பியை பார்க்க, அவர் வாயை கையால் அடைத்த விதார்த், “இருக்கிற கொஞ்ச நஞ்ச மானத்தையும் வாங்கிடாதீங்க மாமா…” அவரை இழுக்க, அவனை வேகமாக தள்ளிய அவர்…
Advertisement
ஏம்மா இன்பா, நிஜமாவே இன்னும் உதய் மாப்பிள்ளைக்கு கல்யாணமே ஆகல. இது தான் உண்மை. எங்களுக்கே நேத்து தான் தெரியும். எம் பொண்ணும் இவளும் பிளான் போட்டு அவ கழுத்துல அவளே தாலி கட்டி மாப்பிள்ளைய மாட்டி விட்டு….
மா…மா…உதய்கிருஷ்ணா சினமுடன் கத்தி அவரை இழுக்க,
“உதய் மாப்பிள்ள இன்னும் உன்ன தான் காதலிக்கிறாரு. நீங்க இங்கிருந்து கிளம்பும் முன்னாடியே சூசைட் பண்ணிக்கிட்டாரு. நான் தான் யாருக்கும் தெரியக் கூடாதுன்னு வீட்லயே ட்ரீட்மண்ட் பாத்தேன்…” கத்திக் கொண்டே இன்பவேணி குடும்பத்தை பார்த்தவாறு செல்ல, அனைவரும் ஷாக் அடித்தது போல நின்றனர்.
விதார்த் அவர்களிடம் வந்து, “உன்னோட ஆபிஸ்ல வச்சே உங்கிட்ட சொல்லணும்னு நினச்சேன். என்ன நீ பேசவே விடல..” கண்ணீரை துடைத்து அவன் நகர,
“அப்புறம் என்னாச்சு?” விதார்த் கையை சாயாலி பிடிக்க,
உன்னோட அக்காவுக்கு தான் இது தேவையில்லாத விசயமாச்சே! நான் சொல்லவே மாட்டேன்..
“லூசாடா நீ? சொல்லு?” விதார்த் கையை அழுத்தி அவள் பிடிக்க, சாயாலியை ஓங்கி அறைந்தாள் ஷோபனா.
“யாரு மேல கை வைக்கிற?” ஷோபனா கத்த, சாயாலி விதார்த்தை தான் பார்த்தாள்.
ஷோபனாவின் கழுத்தை பிடித்த விதார்த், “எதுக்கு எங்க ஆபிஸ் வந்த?” கத்தினான்.
தார்..நா..உன்ன லவ் பண்றேன்..
நான் கேட்டதுக்கு பதில் சொல்லு?
ஆமா, ஜான்விய எங்க கஸ்டடிக்கு கொண்டு வர தான் உன்னை காதலிக்க வந்தேன். ஆனா உன்னை நிஜமாகவே காதலிக்கிறேன்..
ச்சீ…வாய மூடு. எங்க உலகமே பட்டு தான். அவ இல்ல நானும் அண்ணாவும் உயிரோட இருக்கவே மாட்டோம் என கத்திய விதார்த்,
“காதலிக்க வந்தீயா? அடுத்தவங்க வாழ்க்கைய குலைக்க வந்தீயா? உன்னோட அக்கா பிரியா புத்தி தான உனக்கும் இருக்கும். இதுக்கு மேல தார் மோர்னு எம் முன்னாடி வந்த…” அவள் கழுத்தை ஆத்திரமுடன் இறுக்கினான் விதார்த்.
“விது அவள விடு…விது விது…” இன்பவேணி கத்தும் சத்தம் கேட்டும் விதார்த் ஷோபனா கழுத்தை அழுத்தி நெறிக்க,
“விடு மாமா….விடு…” சாயாலியும் அவனை இழுத்தாள்.
ஊஹூம்…முடியவில்லை. கோசலையோ பத்மாவின் கணவன் கூறியதையும் விதார்த்தின் செயலையும் நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.
அத்தெருவில் வசிக்கும் ஆண்கள் உதவிக்கு வர, சொருகிய விழிகளுடன் தொண்டையை பிடித்து கீழே விழுந்தாள் ஷோபனா.
“நீ எதுக்கும்மா வந்த?” தாத்தா அவளை தூக்கி விட,
தார், நான் உன்ன தான் கல்யாணம் பண்ணிப்பேன்..
அப்படியொரு நிலைம வந்தா என்னோட அண்ணா மாதிரி ஒதுங்கி போகலாம் மாட்டேன். எல்லார் முன்னாடியும் சந்தி சிரிக்க வச்சிருவேன். நீயும் உன் காதலும்…ச்சீ…கண்ணீருடன் அவன் நகர,
“விது…” இன்பவேணி விதார்த் அழுவதை தாங்க மாட்டாமல் அழைத்தாள்.
“போதும் இன்னு. என்னால தாங்க முடியல. தனியா இருக்கணும்…” சென்று விட்டான்.
“ஏய்..நீ மட்டும் தார் பக்கத்துல வந்த உன்ன கொல்லாமல் விட மாட்டேன்டி” சாயாலியிடம் ஷோபனா கத்த,
“ஹலோ இங்க போலீஸ்காரன்னு ஒருத்தன் இருக்கேன் தெரியுதா?” பைரவன் கேட்க,
“இவ கழுத்த விது மாமா பிடிக்கும் போது போலீஸ் இவள காப்பாத்த வந்தீங்களா?” சாயாலி கேட்க,
“நான் எதுக்கு காப்பாத்தணும்??? இந்த மாதிரி கேவலமான பொண்ணுங்கள தொடுறதே எனக்கு புடிக்காது” முகம் சுளித்தான்.
சாயாலி ஷோபனாவை ஏளனமாக பார்க்க, “உன்ன அப்புறம் பாத்துக்கிறேன்டி” அவள் சென்று விட்டாள்.
பத்மாவை போலீஸ் அழைத்து செல்ல, பைரவன் உதய்கிருஷ்ணா வீட்டிற்குள் வந்தான்.
“ஏம் மாமா சொன்னீங்க?” உதய்கிருஷ்ணா பதட்டமாகவே இருந்தான்.
“இப்படி ஒரு பொண்ண பெத்து உங்க வாழ்க்கையவே நாசமாக்கிட்டேன். என்ன மன்னிச்சிருங்க மாப்பிள்ள. அவளுக செஞ்சத நினச்சாலே எனக்கு அருவருப்பா இருக்கு. ஒரு பொட்டு தூக்கமில்லை. என்னால தூங்க முடியல மாப்பிள்ள” அழுதார் அவர்.
தாத்தா அமைதியாக இருக்க,
“நீங்க உங்க வீட்டுக்கு போங்க. இனிமே எம் பேரன் வீட்டுக்கும் சரி வாழ்க்கையிலயும் சரி…யாரும் நுழையக் கூடாது. நுழைய விடவும் மாட்டேன்” என்றார் பாட்டி.
“பாட்டி….” உதய்கிருஷ்ணா அழைக்க,
“அத்த சொல்றது சரிதான் மாப்பிள்ள. அந்த பொண்ணுக்கு உங்கள இன்னும் பிடிச்சிருக்குன்னு தான் தோணுது. நீங்க நல்லா இருக்கணும். இனி நான் வர மாட்டேன்” சொல்லி அவர் தோய்வுடன் நடந்து காரருகே சென்றார்.
ஓடி வந்த சாயாலி, “தேங்க்ஸ் அங்கிள்” இனி ரெண்டு பேரையும் சேத்து வைக்க எனக்கு ஈஸியா இருக்கும்.
அவள் தலையில் கை வைத்தவர், காரில் ஏற, இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த பாட்டி ஓடி வந்தார்.
மாப்பிள்ள தப்பா எடுத்துக்காதீங்க. உங்கள பாத்தா உதய்கு பிரியா நினைவு வந்திரும். அதனால தான் அப்படி பேசினேன். மன்னிச்சிருங்க.
“அய்யோ அத்த! நான் வர்றது நல்லாவும் இருக்காது….” அவர் சென்று விட்டார்.
உனக்கும் வேணிபுள்ளைக்கும் எப்படி பழக்கம்? சொந்தமா? சாயாலியிடம் பாட்டி வினவினார்.
இல்ல..தயங்கினாள்.
அப்புறம்..??
என்ன விடுங்க. உதய் மாமா அக்கா சேரணும்னு நினக்கிறீங்களா?
ம்ம்! உங்க அக்கா என்ன பழி வாங்க மாட்டாளே! பாவமாக பாட்டி கேட்க, பக்கென சிரித்து விட்டாள் சாயாலி.
பாட்டி..அதெல்லாம் அக்கா பண்ணாம நான் பாத்துக்கிறேன். நாம மூணு பேரும் சேர்ந்து இருவரையும் சேர்த்து வைக்கலாம்.
மூணு பேரா? வேற யாரும் என் கண்ணுக்கு தெரியல. பேய் எதுவும் இருக்கா? ஒரு வேல அந்த பொண்ணோட அப்பன் விச்சு பேயா வந்துட்டானா? பயந்து கேட்டார் பாட்டி.
கலகலவென சிரித்தாள் சாயாலி.
உதய் அவன் நண்பன் பைரவனுடன் வர, வாயில் கை வைத்து சிரிப்பை அடக்கி, “பை மாமா” உதயை பார்த்து சொல்லி செல்ல, அவன் நின்று விட்டான்.
மூணாவது யாருடி? பாட்டி கத்த..
ஹம்..விது மாமா தா..
விதுவா???.. என்ன விதுவா?
அடியேய்…அவர் சத்தமிட, சிரித்துக் கொண்டே அவள் மறைந்து விட்டாள்.
சின்னவயசுல வேணி புள்ளைய பாத்தது போல இருக்கு இந்த புள்ளைய பாத்தா..
“பாட்டி உள்ள போங்க” உதய்கிருஷ்ணா அதட்ட, வாயில் கை வைத்து பவ்வியமாக உள்ளே சென்று விட்டார் பாட்டி.
கோசலையும் இன்பவேணியும் ஆளுக்கொரு திசையில் அமர்ந்திருந்தனர். இன்பவேணி எண்ணங்கள் பின்னோக்கி சுழன்றது.
“சார், அவன் என்ன செஞ்சான்னு கேளுங்க?” விதார்த் அவர்கள் பள்ளி முதல்வரிடம் சினமுடன் பேசினான்.
“விதார்த், அவன் யாருன்னு தெரிஞ்சும் நீ அவன அடிச்சிருக்க? அப்புறம் நீ பொண்ணா இருந்துட்டு எவ்வளவு தைரியம்மா உனக்கு?” இன்பவேணியிடமும் சத்தமிட்டார் பள்ளி முதல்வர்.
வாய் ஓயாது பேசும் இன்பவேணி அவள் குணத்திற்கு எதிராக அமைதியாக இருந்தாள். அவள் அமைதியில் அவளுக்கு எதிராக நின்ற ஜோகன் நக்கலாக அவளை பார்த்தான். அவன் மத்திய மந்திரியின் மகன்..
“சார் இன்பவேணியோட அம்மா வந்துருக்காங்க…” அவளது வகுப்பாசிரியை பள்ளி முதல்வரிடம் கூறினார்.
வாங்கம்மா, உங்க பொண்ண பாருங்க…கொஞ்சம் கூட ஒழுக்கமில்லை. எப்ப பாரு பசங்களோடவே சுத்திட்டு இருக்கா. இப்படிலாம் பண்ணான்னா பிளஸ் டூ தேறுவது சிரமம் தான்…
மகளை முறைத்து கோசலை விதார்த்தை பார்க்க, அவனுக்கு தான் தெரியுமே இன்பவேணியை சும்மாவே திட்டுவார். இதில் முதல்வரின் பேச்சில் அவன் இன்பவேணியை தான் பார்த்தான்.
கோசலை அவனை பார்த்து இன்பவேணியை கவனித்து பார்க்க, எந்த பதிலும் கூறாமல் இருக்கவே ஊன்றி மகளை கவனிக்க, அவள் அணிந்திருக்கும் ஆடை ஆண்கள் அணிந்திருக்கும் சட்டை…
வேகமாக இன்பவேணியிடம் வந்தவர், “உன்னோட சட்டைய எங்கடி?” கோசலை கேட்க, கண்ணிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வந்தது இன்பவேணிக்கு.
ராமநாதன் வர முடியாத காரணத்தால் உதய்கிருஷ்ணா வந்திருந்தான். அவன் உள்ளே வந்த போது தேம்பி தேம்பி தன் அன்னை தோளில் சாய்ந்து அழுது கொண்டிருந்த இன்பவேணியும், கோசலையிடம் குரல் உயர்த்திய முதல்வரையும் தான்…
“அண்ணா…” விதார்த் அழைக்கவும், எல்லாரும் உதய்கிருஷ்ணாவை பார்த்தனர். அவன் யாரையும் கண்டுகொள்ளாமல் கோசலையிடம் வந்தவன்..
“என்னாச்சு ஆன்ட்டி? எதுக்கு அழுறா? உங்கள எதுக்கு இவங்க சத்தம் போடுறாங்க?” கேள்விகளை அடுக்கினான்.
“உங்க அப்பா வரலையா?” விதார்த்திடம் ஆசிரியை கேட்க,
என்னோட தம்பிக்கான முழுப்பொறுப்பு நான் தான். என்னன்னு எங்கிட்ட சொல்லுங்க?
என்ன சொல்ல? இந்த பையன உங்க பையன் அடிச்சிருக்கான்..
இன்பவேணிக்கு நன்றாக தெரியும். யாரையும் அதட்டாத உதய்கிருஷ்ணா தன் தம்பியிடம் ஒரு கண்டிப்பு காட்டுவான்.அதை எண்ணி தன் தாயிடமிருந்து நகர்ந்து கோசலையை பார்த்தார்.
“உதய், கொஞ்சம் பொறு. நீ சொல்லுடி. அப்புறம் அழலாம். இது யாரோட சட்டை..பசங்க சட்டை மாதிரி இருக்கு…” கோசலை அதட்டினார்.
ஆன்ட்டி,..என்னோடது தான் என்றான் விதார்த்.
“உன்னோடதா? என்ன பொண்ணும்மா நீ?” முதல்வர் பேச்சு தொடங்க…அவரை பார்வையிலே அடக்கினான் உதய்கிருஷ்ணா.
ஆனால் அவர்களின் ஆசிரியை அதை கவனிக்காது விதார்த் மற்றும் இன்பவேணியை சேர்த்து தவறாக பேச, “நிறுத்துங்க…” சீறினான் உதய்கிருஷ்ணா.
என்னோட தம்பியும் இன்பவேணியும் சின்ன வயசுல இருந்தே ப்ரெண்ட்ஸ். இதுவரை அவ இப்படி அழுது நான் பாத்ததேயில்ல. சொல்லு விது…என்ன நடந்தது? உன்னோட சட்டைய எதுக்கு அவட்ட கொடுத்த?
அண்ணா, பிரேக் முடியப் போகுது. இன்னு இன்னும் வரலன்னு தேடி போனேன். பொண்ணுங்க ரெஸ்ட் ரூம் பக்கத்துல இருந்த அறையில இருந்து சத்தம் வந்ததுன்னு பாத்தா..இன்னுட்ட இந்த பொறுக்கி தப்பா நடந்துட்டு இருந்தான். அவ சட்ட கிழிஞ்சிருச்சு… அதான் அவன அடிச்சிட்டு அவள ரெஸ்ட் ரூம்ல வெயிட் பண்ண சொல்லி, நா ஸ்போர்ட்ஸ் டிரஸ் போட்டு அவளுக்கு என்னோத குடுத்தேன். பாருங்க அவ டிரஸ்…
ஜோகன் திமிறாக அவர்களை பார்க்க, தன்னை கட்டுப்படுத்த முடியாமல் பளாரென அவன் கன்னத்தில் அறைந்தான் உதய்கிருஷ்ணா.
சார்..அவன் மத்திய மந்திரி மகன்..
“எவனா இருந்தா எனக்கென்ன? எங்க வீட்டு பொண்ணு மேல கை வச்சா சும்மா இருப்போமா? வெளிய வா. உன்ன பாத்துக்கிறேன்” என்ற உதய்கிருஷ்ணா கோசலையை பார்த்து,
“ஆன்ட்டி, நீங்க வீட்டுக்கு போங்க. நா போலீஸ் ஸ்டேசன் வரை உங்க பொண்ணோட போயிட்டு வாரேன்” உதய்கிருஷ்ணா சொல்லிக் கொண்டிருக்க, அவனையே பார்த்துக் கொண்டிருந்த இன்பவேணி, “பாரு” என சத்தமிட்டு சன்னலை நோக்கி ஓடினாள்.
“என்னடி?” கோசலையும் பின் செல்ல, ஒரு பெண் மேலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டாள்.
“ம்மா…பாரு..அய்யோ..ம்மா….பாரு…” சன்னல் பக்கம் பார்த்து பார்த்து அழுதாள்.
எட்டி பார்த்த அனைவரும் திகைத்தனர். ஜோகன் வேகமாக அறையை விட்டு வெளியேறுவதை பார்த்து, “கிருஷ்…அவன புடி. அவன் பாருவ நியூடா வீடியோ எடுத்தான்…புடி…” உதய்கிருஷ்ணாவை தள்ளினாள்.
விதார்த்தும் அதிர்ந்து இன்பவேணியை பார்க்க, உதய்கிருஷ்ணா வெளியே செல்வதற்குள் அவன் ஓடி விட்டான்.
மறுநிமிடம் ஆம்புலன்ஸை அழைத்து, போலீஸூடம் விசயத்தை தெரிவித்தான் உதய்கிருஷ்ணா. அவன் பின் வந்த இன்பவேணி..அவன் எங்க? போயிட்டானா? பதட்டமானாள்.
ஒண்ணுமில்ல. எதுக்கு பதறுற?
கிருஷ், அவன் என்னயும் அவனோட பேசியில வீடியோ எடுத்தான். விது வந்துட்டான்…ஆனா அந்த வீடியோ.. அவளுக்கு விழிகள் கலங்கி அழுகை பெருக்கெடுக்க…
கோசலை அதிர்ந்து, “என்ன தான் நடந்ததுன்னு சொல்லுடி?” அவளை அடித்தார்.
பார்வதி எங்களோட பக்கத்து வகுப்பு தோழி. அவ சத்தம் கேட்டு தான் அந்த அறைக்கு போனேன். அவளுக்கு உதவ…அவ அவளோட ஆடையோட வெளிய வந்துட்டா. நானும் வரப் பாத்தேன். ஆனா..அவன்..அம்மா..அவன என்ன தொட விடல…அழுதாள்.
பெருமூச்சுடன், “ஒண்ணும் பிரச்சனையில்ல. நான் இப்பவே பாக்குறேன்” என்று முதல்வரை வெறித்தவன்,
“ஸ்கூல் படிக்கிற பையன் ஸ்கூல்ல போன் யூஸ் பண்ணி இருக்கான். அதுவும் என்ன வேல பாத்துருக்கான். அவன கேக்காம எங்க பசங்கள கேக்குறீங்க. இத நான் சும்மா விட மாட்டேன்..”
“சார் சார்…வெளிய தெரிஞ்சா எங்க ஸ்கூல் பேர் கெட்டு போயிரும். நாங்க ஏதாவது சொல்லி மேனேஜ் பண்ணிக்கிறோம்…” முதல்வர் பேச…
உங்களுக்குன்னா அவமானம் எங்களுக்குனா அவமானமில்ல. கண்டபடி பேசுவீங்க. நான் ஏற்கனவே போலீஸ்ட விசயத்த சொல்லீட்டேன். சத்தம் கேக்குதா ஆம்புலன்சும் வந்துருச்சு….உங்களால ஒண்ணும் பண்ண முடியாது.
ஆன்ட்டி முதல்ல ரெண்டு பேரையும் வீட்டுக்கு அழைச்சிட்டு போங்க. நான் இத முடிக்காம வேற வேல பாக்கப் போறதில்ல. அந்த வீடியோவ அழிக்காம நான் வீட்டுக்கு வர மாட்டேன் என்று அவர்களை காரில் அவன் டிரைவருடன் அனுப்பி வைத்தான். அவனை பார்த்துக் கொண்டே மூவரும் சென்றனர்.
பள்ளி நிர்வாகத்தினர்களாலும் உண்மையை மறைக்க முடியாத அளவிற்கு உடனே செய்தியாளர்களுக்கும் விசயத்தை தெரிவித்தான். ஜோகனை காவலர் ஒருவர் உதவியுடன் பிடித்து அவனது கைபேசியை கைப்பற்றினான். அதிலுள்ள வீடியோவை பார்த்து அனைவரும் அவனை அருவருப்புடன் பார்த்தனர்.
மந்திரியே அவர் மகனை சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளியில் சேர்த்து அவனை அவரின் குடும்ப உறுப்பினர்கள் யாரும் அண்டாதவாறு பார்த்துக் கொண்டார். அவரும் மகனை காண செல்லவில்லை.
பிரச்சனையை புத்திசாலியாக ஹேண்டில் செய்த விதத்தில் உதயை காவல் ஆய்வாளர் பாராட்டினார். அவன் வீட்டிற்கு வந்ததும் இன்பவேணி பற்றி தான் கேட்டான். அவளோ பார்வதி பிழைத்தாளா? இல்லையா? என அவளுடைய நினைவிலே இருந்தாள். பார்வதி பிழைத்த செய்தி தெரியவும் தான் இன்பவேணி நிம்மதியாக உணர்ந்தாள்.
போலீஸ் விசயம் மொத்தமாக முடிந்து வீட்டிற்கு வந்த உதய்கிருஷ்ணா நேராக அவனறைக்கு சென்றான். அவனறையில் தலைவிரிக் கோலமாக அழுத விழிகளுடன் இருட்டுக்குள் அவன் படுக்கையில் அமர்ந்திருந்தாள் இன்பவேணி..
கதவை திறந்து விளக்கை போட்டு அவளை கண்டு பயந்து பின் நிதானித்து, “ஏய்ய்…இங்க என்ன பண்ற?” சத்தமிட்டான் உதய்கிருஷ்ணா.
அழுது கொண்டே உதய்கிருஷ்ணாவிடம் வந்த இன்பவேணி, கிருஷ் விது கோபமா இருக்கான். அப்பா என்ன அடிச்சிட்டாரு…அம்மா சூடு வைக்க வந்தாங்க..அதான் உன்ன தேடி வந்தேன். நீயில்ல அதான் வெயிட் பண்ணீட்டு இருந்தேன்.
அதுக்காக அறைக்கா வருவ. யாரும் பாத்தா என்ன நினைப்பாங்க..???
என்ன? என்ன நினைப்பாங்க..??? நினைச்சா நினைச்சிட்டு போகட்டும். வா கார்த்திக் அண்ணா வீட்ல என்ன விட்ரு. பெரிம்மாட்ட நான் அம்மாவ கம்பிளைண்ட் பண்ணனும்..
நீ செஞ்ச வேல தெரிஞ்சா எல்லாரும் உன்ன தான் திட்டுவாங்க..
நான் பாருவுக்கு உதவி தான செஞ்சேன். ஏன் எல்லாரும் குத்தமாவே பாக்குறீங்க? சத்தமிட்டாள்.
அண்ணாவை பார்க்க வந்த விதார்த் காதில் இன்பவேணி சத்தம் கேட்க, வெளியே நின்று கவனித்தான்.
நீ அந்த பொண்ணுக்கு உதவி செஞ்சது தப்பில்ல. அத எப்படி பண்ணி இருக்க? உடனே பெரியவங்க யாரையாவது கூப்பிட்டு இருக்கணும். அத விட்டு தனியா போயிருக்க? உனக்கு ஏதாவது ஆகி இருந்தால் ஆன்ட்டி அங்கிள் எவ்வளவு கஷ்டப்படுவாங்க..??? படிச்சா போதாது மூளைய கொஞ்சமாவது யூஸ் பண்ணனும்.
ஹ ஹ ஹ ஹ ஹ…..சத்தம் போட்டு இன்பவேணி அழ, “எதுக்கு கத்துற?” அதட்டினான் உதய்கிருஷ்ணா.
“நான் அழுறது உனக்கு கத்துற மாதிரியா இருக்கு?” மூக்கை உறிஞ்சி, நானே கார்த்திக் அண்ணா வீட்டுக்கு போயிக்கிறேன். நீ ரொம்ப நல்லவன்னு நினச்சேன். ஆனா சின்ன உதவி கூட செய்ய மாட்டேங்கிற..
“செட் அப் இன்பவேணி” உதய்கிருஷ்ணா கத்த, விதார்த்தும் அதிர்ந்தான்.
உறைந்து அவனை பார்த்தாள் இன்பவேணி..
“ஆன்ட்டி அங்கிள்ட சொல்லீட்டு வந்தீயா?” கண்டிப்புடன் உதய்கிருஷ்ணா கேட்க,
நான் விதுவ தான் தேடி வருவேன்னு அவங்களுக்கு தெரியும்.
“அதையும் நீயா முடிவெடுத்துப்பியா? அவங்க உன்னோட அம்மா, அப்பா. உன்ன எவ்வளவு பத்திரமா பாத்து பாத்து வளத்திருக்காங்க? என்ன செஞ்சிட்டு வந்திருக்க? விது இல்லைன்னா உனக்கு என்ன ஆகி இருக்கும்? அவன் மட்டும் உன்னை ஏதாவது செய்திருந்தால் அவங்க நிலைமைய நினச்சு பாரு….வாழ்க்கை விளையாட்டு கிடையாது. முடிஞ்சத சரி செய்றதுங்கிறது ஆகாத காரியம். நடந்ததை மாத்த யாராலும் முடியாது. அதனால கவனமா இரு…எனக்கும் உன் மேல கோபம் தான்…பொண்ணுங்களுக்கு தைரியம் இருக்க வேண்டியது தான். அசட்டு தைரியம் கூடவே கூடாது..”
தலைகவிழ்ந்து தரையை பார்த்து இன்பவேணி நிற்க, “வா அங்கிள் ஆன்ட்டி உன்ன தேடுவாங்க” அவள் கை பிடித்தான்.
பட்டென உதறி, “கண்ணீருடன் அம்மா சூடு வச்சிருவாங்க. நான் வர மாட்டேன். நான் இனிமே இது போல செய்ய மாட்டேன்..ஆனா ஒரு பொண்ணா நான் எப்படி அவள அந்த நிலையில…உதவவே கூடாதுல்ல..” தேம்பினாள்.
“முதல்ல கீழ வா” என்று அவளின் எண்ணத்தை கவனிக்காமல் இன்பவேணி கைபிடித்து வெளியே வந்தான் உதய்கிருஷ்ணா.
“இமையில் இருக்கும்
இரவு உறக்கம் கண் விட்டுப்
போயாச்சு காரணம் நீயாச்சு
நிலவு எரிக்க நினைவு கொதிக்க
ஆராத நெஞ்சாச்சு
ஆகாரம் நஞ்சாச்சு”
error: Content is protected !!