Skip to content
Post Views: 1,057
சந்தான லஷ்மிக்கு அலுவலகத்தில் வேலையே ஓடவில்லை.. நமக்கு வந்த கனவு என்றால்..! அவருக்கும் இதே கனவு வந்ததா..? இதை எதிர்பார்க்கவில்லையே நான்..! அதெப்படி சாத்தியம்.. இதைப் பற்றி ஒரு வார்த்தை கூட என்னிடம் சொல்லவில்லையே வாத்சல்யன்..
அதான் இப்ப சொல்லிட்டாரே..! ஒருவேளை சாதாரண கனவு என்று அதற்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்திருக்கலாம்..! நீ உனக்கு வந்த கனவை பற்றி சொன்னதும் அது பெரிய விஷயமாக தோன்றியிருக்கலாம்.. அவராக அழைத்து பேசும்வரை காத்திருக்க வேண்டும்.. என ஒருமனம் பொறுமை காக்க சொன்னாலும், இன்னொரு மனம் படுத்திய பாட்டில் ஆர்வக்கோளாறில் நான்கு முறை அவனுக்கு அழைத்திருந்தாள்.
“வேலையா இருக்கேன் டா சந்தா..! ஈவினிங் பேசிக்கலாம்.. இதுக்குத்தான் எந்த விஷயத்தையும் உன்கிட்ட முன்ன கூட்டியே சொல்றதில்ல..! உனக்கு கொஞ்சம் கூட பொறுமையே இல்ல சந்தா..! ஃபோன வை!” என கொஞ்சம் கடுமையாக திட்டிவிட்டு அழைப்பை துண்டித்தான்.
சந்தான லஷ்மிக்கு புரியவில்லை.. எப்படி இவனால் மட்டும் இயல்பாக வேலை பார்க்க முடிகிறது.. என்னால் ஒரு நிமிடத்தை கூட நிதானமாக நிறுத்தி தள்ள முடியவில்லை.. ஒரு துரும்பை கூட தூக்கி போட முடியவில்லை.. விரல்களில் சொடக்கெடுத்து.. தண்ணீர் குடித்து.. யோசனையும்.. குழப்பமுமாக வேலையில் கவனம் செலுத்த முயன்றாள். தலை போகும் காரியமானாலும் பணியில் அலட்சியம் காட்டக்கூடிய ஆளில்லை இவள். இன்று தான் இப்படி.!
கவனக் குறைவு காரணமாக வேலையில் செய்த தவறு, அதற்கு கிடைத்த திட்டு..! அதைத் தொடர்ந்து செய்ய வேண்டிய கரக்ஷன்.. அடுத்தடுத்து வரிசை கட்டி நின்ற வேலைகள் என நேரம் இழுத்துக் கொண்டு போனதில்.. கனவுப் பிரச்சனையை ஐந்து மணி வரை மறந்திருந்தாள் லஷ்மி.
Advertisement
அலைபேசி விடாமல் அடித்த பிறகுதான் இன்னும் பர்மிஷன் வாங்கவே இல்லை என்ற உண்மை மூளையில் உரைக்க.. தலையிலடித்துக் கொண்டு அவசரமாக தன் உயரதிகாரியிடம் போய் நின்றாள்.
“ஆனா ஊனா பர்மிஷன் லீவ்ன்னு வந்து நின்னுடறீங்க.. போங்க..!” முனுமுனுப்பும் கோபமுமாக அவர் அனுமதி தந்த பிறகு கைப் பையை தூக்கிக் கொண்டு வேகமாக அலுவலகத்தை விட்டு வெளியே வந்தாள்.
சந்தான லஷ்மி வருமானவரித்துறை அலுவலகத்தில் டேக்ஸ் அசிஸ்டன்டாக பணிபுரிகிறாள்.
Advertisement
“கவர்மெண்ட் உத்தியோகம் பார்க்கிறாள்ல.. அதான் திமிருக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை..!” நிமிர்வாக நிற்கும் நேரங்களில் புகுந்த வீட்டாரோ.. அல்லது சுற்றத்தாரோ இப்படி கறுவுவதுண்டு.
Advertisement
ஆரம்பத்தில் ஒரு டிரான்ஸ்போர்ட் கம்பெனியில்.. கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்து கொண்டிருந்தாள். ஆனால் இது போதாது இன்னும் பெரிதாக தனக்கான ஒரு அங்கீகாரத்தை தேடிக்கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தோடுதான் ஸ்டாஃப் கமிஷன் தேர்வெழுதி டாக்ஸ் அசிஸ்டன்ட் பணிக்கு தேர்வானது.. அதிக மதிப்பெண்களோடு ராங்க் பட்டியலில் முதலிடத்தில் இருந்ததால் பணிபுரிய வேண்டிய இடத்தை தேர்வு செய்யக்கூடிய முன்னுரிமை அவளுக்கு இருந்தது.
இதுவும் சொந்த ஊரிலேயே அரசாங்கப்பணி..! பணத்துக்கும் வசதிக்கும் ஏன் மரியாதைக்கும் கூட எந்த குறைச்சலும் இல்லை.. சந்தான லஷ்மிக்கு இரண்டு மூத்த சகோதரிகள் உண்டு.. முத்துலஷ்மி முதலாமவள்.. அழகு லக்ஷ்மி இரண்டாவதாக பிறந்த பெண்.. சந்தான லஷ்மிதான் கடைக்குட்டி..
கடைக்குட்டி என்பதால் செல்லத்துக்கும் கொஞ்சலுக்கும் பஞ்சமில்லை.. புகுந்த வீட்டிலும் உள்ளங்கையில் வைத்து தாங்கும் கணவன். அனைத்தையும் அள்ளிக் கொடுத்த கடவுள் தன்னை ஒரே ஒரு விஷயத்தில் வஞ்சித்து விட்டதாக நினைப்பதெல்லாம் இந்த குழந்தையின்மை மட்டும்தான்.!
Advertisement
தனக்கென ஒரு குழந்தை பிறந்து விட்டால் அனைத்தும் மாறிவிடும். புகுந்த வீட்டிலும் கூட இப்போதிருக்கும் சண்டை சச்சரவுகள் நீங்கி இயல்பு நிலை திரும்பி விடும் என நம்புகிறாள்.
ஓடிப்போய் கணவனின் காரில் ஏறிக்கொண்டவள்.. “இப்ப சொல்லுங்க.. சொல்லுங்க வாத்சா உங்களுக்கும் அதே கனவு வந்துச்சா..!” மூச்சு விடாமல் படபடவென வார்த்தைகளை கொட்டித் தீர்க்க..
“ரொம்ப பசிக்குது! ஏதாவது ஒரு ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டு கிட்டே பேசலாம்.!” என்றான் அவன்.
“ப்ச்..! அதெல்லாம் சாப்பிடலாம் முதல்ல விஷயத்தை சொல்லுங்க!” தேக்கி வைத்திருந்த கொஞ்ச நஞ்ச பொறுமையையும் இழந்து கொண்டிருந்தாள்.
வாத்சல்யன் அமைதியாக காரை எடுத்தான். அவன் இப்படித்தான்.. சில விஷயங்களில் சந்தான லஷ்மியை தவிக்க விட்டு வேடிக்கை பார்ப்பான். அது அவன் குணாதிசயம்.. ஒன்றும் சொல்வதற்கில்லை. அவன் பொறுமை, நிதானம் சில நேரங்களில் எரிச்சலை தருகிறது அவளுக்கு.
இழுத்து மூச்சுவிட்டு, வெளியே வேடிக்கை பார்ப்பதும் கணவனின் முகம் பார்ப்பதுமாக இருந்தாள் லஷ்மி.
“நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே கனவுதான் வருதுன்னு எப்படி சொல்றீங்க..?” காத்திருக்க முடியாமல் மீண்டும் பேச்சை ஆரம்பித்தாள்.
“எனக்கு தெரியல.. நம்ம ரெண்டு பேரும் கலந்து பேசினாத்தான் அதுக்கு விடை கிடைக்கும்.” என்றான் அவன்.
“உங்களுக்கு என்ன கனவு வந்துச்சு..?”
“சொல்றேன்..”
“எனக்கு என்ன கனவு வந்துச்சுன்னு நான் சொல்லட்டுமா..?”
“பொறு! அங்க போய் பேசிக்கலாம்.”
“அடச்சே! என்ன மனுஷன்யா இவரு?” சலிப்போடு கன்னத்தில் கை வைத்து மீண்டும் திரும்பி வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள். மனமெங்கும் யோசனையும்.. பதட்டமும் பொங்கி வழிய.. காட்சிகள் எதுவும் கண்ணுக்குள் ஒட்டவில்லை.
ஒரு நல்ல ரெஸ்டாரண்டாக பார்த்து காரை நிறுத்தியதும் இருவருமாக இறங்கினர்.
உள்ளே போய் அமைதியான ஒரு இடம் பார்த்து அமர்ந்து கொள்ள.. இருவருக்கும் சேர்த்து அவனே காபி டிபன் ஆர்டர் செய்தான்.
“இப்ப சொல்லுங்க, இதுக்கு மேல எனக்கு பொறுமை இல்லை.. தலை வலிக்குது வாத்சா..! ஏன் என்னை இப்படி தவிக்க விடறீங்க..! ஒரு சாதாரண கனவு என்னை இந்த பாடுபடுத்துதே..!” தலையில் கை வைத்துக் கொண்டு கடுப்போடு சொன்னாள் அவள்.
“சரி காபி வரட்டும் குடிச்சிட்டு தெம்பா பேசு..!”
“யோவ்..! உன்னை கொன்னுடுவேன்.. என்ன விஷயம் சீக்கிரம் சொல்லுயா!” பற்களை கடித்தாள் லஷ்மி.
நீண்ட மூச்சுவிட்டு ஆரம்பித்தான் வாத்சா.
“ரெண்டு நாளா ஒரே மாதிரியான கனவு ஒரே அதிசயமா இருக்கு சந்தா..!”
“கனவுல ஒரு இருட்டு குகைக்குள்ள நான் நடந்து போறேன்..” சந்தான லஷ்மி தொடங்கினாள்.
“எஸ் எக்ஸாக்ட்லி..! எனக்கும் அப்படித்தான்.. ஒரு இருட்டு குகைக்குள்ள வழி தெரியாம எங்கேயோ நான் நடந்து போறேன்.” அவனும் அதையே சொன்னான்.
“திடீர்னு ஒரு இடத்துல பெரிய வெளிச்சம்..!” என்றாள் அவள்.
“அசரீரி மாதிரி ஒரு குரல்..” சொல்லிவிட்டு அவள் முகத்தை பார்த்தான்.
இருவர் முகத்திலும் அதிர்ச்சி.
“அ.. அந்தக் குரல்” என்று சந்தான லஷ்மி தொடர..
“உனக்கான குழந்தை உன்னிடம் தேடி வர போகிறது..!” என்றான் வாத்சல்யன்.
“இந்தப் பிறவியில் ஐந்து வயதோடு அதன் ஆயுட்காலம் முடிந்த பிறகு உன் வயிற்றில்..”
“உன் மனைவியின் வயிற்றில்..!”
“கருவாக..”
“உயிராக..”
“நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக உன்னிடம் வளரும்..”
“அதுவே உன் குழந்தை..!”
உனக்கான வரம்”
ஒவ்வொரு வரியும் இருவரும் மாற்றி மாற்றி பேசி அசரீரி சொன்ன வாக்கியத்தை முடித்தனர். அச்சு பிசகாமல் வரிகள் மாறாமல்.. இருவருக்கும் ஒரே தீர்க்கதரிசனமாய் அந்த குரல்.
“அ.. அந்த குழந்தையை நான் பார்த்தேன் வாத்சா..!”
“நா.. நானும் பார்த்தேன்.. அந்த அசரீரி சொன்ன ஒளி வெள்ளத்துக்குள்ள ஒரு முகம்.. எனக்கு தெரிஞ்சது..!” பரவசத்தில் கூச்சலிட்டான்.
“அ.. அதேதான். ஒரு பெண் குழந்தை..!”
“பிங்க் கலர் கவுன் போட்டுக்கிட்டு ஒரு குழந்தை ரொம்ப அழகா.. அந்த குழந்தையோட முகம் இன்னும் என் கண்ணுக்குள்ளேயே நிக்குது..!” உணர்ச்சி பெருக்கில். வாத்சல்யனின் கண்கள் கலங்கின.
“அந்த அழகான குழந்தை நமக்கு பிறக்க போகுதா..!” லஷ்மியின் இருதயம் படபடவென வேகமாக அடித்துக் கொண்டது..
“ஆனா அந்த குழந்தையோட ஆயுட்காலம் இந்த ஜென்மத்துல அஞ்சு வயசோட முடிய போகுது..!” வாத்சல்யன் சொன்னதும் அவள் முகம் மாறியது.
“என்ன இப்படி ஒரு கனவு..? இந்த கனவுல ஏதாவது அர்த்தம் இருக்குதா! உண்மை இருக்குதா..?” கணவனை அயற்சியாக பார்த்தாள் லக்ஷ்மி.
“அர்த்தம் இருக்கா.. உண்மை இருக்கான்னு எனக்கு தெரியல..! ஆனா ரெண்டு பேருக்கும் எப்படி ஒரே நேரத்துல ஒரே கனவு வரும்..! சோ இது நடக்க போகுது அப்படித்தானே..?”
“பூர்வ ஜென்மம் மறு ஜென்மம்.. இதுல எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை.. உலகத்துல எத்தனையோ பேர்.. பிறக்கறாங்க சாகறாங்க.. அப்படி ஒரு குழந்தை சாகப்போகுது..! நமக்கு ஒரு குழந்தை பிறக்கப்போகுது..! அந்த கனவோட அர்த்தத்தை நாம எப்படி எடுத்துக்கலாம் இல்லையா?”
“அப்ப நமக்கு குழந்தை பிறக்கப் போகுதா சந்தா..?”
“எனக்கு தெரியல வாத்சா..! ஆசையை வளர்த்துக்கிட்டு எதிர்பார்த்து காத்திருந்து..! கடைசில ஏமாந்து போக என் மனசுல திராணி இல்லை. இது ஜஸ்ட் ஒரு கனவு..! இதுக்கு எப்படி இம்பார்ட்டென்ஸ் கொடுக்க முடியும்.?”
“ரெண்டு பேருக்கும் ஒண்ணா வந்த கனவு..! இந்த கோணத்தில் பாரேன். ஏதோ ஒரு அசரிரி..! அது கடவுளோட குரலா கூட இருக்கலாம் இல்லையா..!” வாத்சா கண்களில் ஏதோ ஒரு நம்பிக்கை.
“என்ன வாத்சா..! நீங்களுமா..? கடவுளோட குரல் அர்த்தமில்லாமல் பேசுமா.? ரைட் நமக்கு குழந்தை பிறக்கப் போகுதுன்னா அதுல ஒரு லாஜிக் இருக்கு. எங்கேயோ ஏதோ ஒரு குழந்தை செத்து அதுதான் நமக்கு பிறக்கப் போகுதுன்னா.. it doesn’t make any sense..! ஏன் ஏதோ ஒரு குழந்தை செத்து என் வயித்துல வந்து பிறக்கணும். இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு..!” அவள் இதழோரம் லேசான சிரிப்பு.
“ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது.. ஆனால் ஒரு வகை ஆற்றலை இன்னொன்றாக மாற்ற முடியும்..! பாடப்புத்தகத்தில் படிச்சதில்லை..! இங்க வொர்க் அவுட் ஆகுது.”
“இது வெறும் தியரிதான். நடக்கற வரைக்கும் எதுவுமே உண்மை இல்லை வாத்சா..!”
“சரி இப்போ அடுத்து என்ன பண்ணப் போறோம்..! எனக்கு ரொம்ப எக்சைட்டடா இருக்கு சந்தா..! இது எனக்கு மட்டுமே வந்த பைத்தியக்காரத்தனமான கனவுன்னு நெனச்சிட்டு இருந்தேன். பட் உனக்கும் அதே மாதிரி ஒரு குரல் கேட்டிருக்குனா..?”
“வாத்சா.. ரொம்ப எக்சைட் ஆகாதீங்க..! இதுல எந்த அளவுக்கு உண்மை இருக்குன்னு தெரியல..! சோ இதை ஓரமா தூக்கி போட்டுட்டு நாம் அடுத்த வேலையை பார்க்கலாம் ஓகேவா..!” கண்கள் விரியச் சொன்னாள் சந்தான லஷ்மி.
காபி கோப்பையின் கைப்பிடியை நிரடியபடி யோசனையில் இருந்தான் வாத்சல்யன்.
“சரி நம்ம ரெண்டு பேருக்கும் ரெண்டு முறை ஒரே நேரத்தில் இந்த கனவு வந்திருக்கு.. ! மூணாவது முறையும் இந்த கனவு வந்துச்சுன்னா.. இது உண்மைன்னு எடுத்துக்கலாமா..?” ஆசையை அடக்க முடியாமல் அவன் கேட்க..
“எடுத்துக்கிட்டு..!” விழி சுருக்கினாள் சந்தான லஷ்மி.
“நமக்கு குழந்தை பிறக்கும்னு ஒரு பாசிடிவ் எண்ணத்தில் வாழலாம்.. சந்தோஷமா இருக்கலாம்..”
“இப்ப நம்ம சந்தோஷத்துக்கு என்ன குறைச்சல்..?” லஷ்மி சிரித்தாள்.
“நீ கேட்கற கேள்விக்கு பதில் என்னனு உனக்கே தெரியும் சந்தா.. இந்த சந்தோஷம் எனக்கானது இல்லை.. நான் உன்னைப் பத்தி பேசறேன்.. நீ எப்பவுமே சிரிச்சுக்கிட்டே இருந்தாத்தான் நான் ஹேப்பியா இருக்க முடியும்.. நமக்குன்னு ஒரு குழந்தை வந்துட்டா.. அவசர அவசரமா மேல வந்து கதவை சாத்திக்கிட்டு யாருக்கும் தெரியாம நீ அழற வேதனை இனிமே இருக்காதுல்ல..!”
சந்தான லஷ்மியின் கண்கள் கலங்கியது.
“சந்தா..!” அவள் கரத்தின் மேல் தன் கையை ஆறுதலாக வைத்து அழுத்தினான் வாத்சா.
மூக்கை உறிஞ்சிக்கொண்டு தன்னை சமன் படுத்தியவள்.. “சரி.. மூணாவது முறை அந்த கனவு வரட்டும்.. அப்புறமா பாத்துக்கலாம்..! அதுவரைக்கும் திரும்ப இதைப் பத்தி நாம பேச வேண்டாம். பிளீஸ்..!” என்று கண்களால் கெஞ்சி கேட்க.. சரி என தீர்க்கமாக தலையசைத்தான் அவன்.
தொடரும்.
error: Content is protected !!
ஐந்து வயசோட இறந்துட்டு மீண்டும் பிறக்குமா… எப்படி ஒரு குழந்தை கைல வந்து அது மீண்டுமே பிறக்கும்னாலும் இறக்குறத என்னால தாங்க முடியாது…😭😭😭அதுவும் பிள்ளைகளுக்கு ஏங்கி தவிக்கிற இதுங்களும் அத சாதரணமா கடந்து போகுங்கனு நினைக்க முடில…😔😔😔
என்னங்கடா இது இப்படி ஒரு கனவு இரண்டு பேருக்கும் ஒரே மாதிரி கனவு, அதுல அசரிரி குரல் , அந்த குழந்தை எங்க இருக்கு அதுக்கு ஏன் ஆயுசு முடிய போகுது, மூணாவது முறை யும் அந்த கனவு இரண்டு பேருக்கும் வருமா 🤔🤔இல்லை இல்லையா செம writer Ji
என்ன வரப்போகும் குழந்தை ஐந்து வயசுல இறந்துட்டு அடுத்து வர குழந்தை தான் இவங்க குழந்தையா 😱😱😱
அப்படியே இருந்தாலும் குழந்தை இல்லாமல் இத்தனை வருஷம் ஏங்கி தவிச்சவுங்க அந்த குழந்தையின் இழப்பை மட்டும் எப்படி தாங்குவாங்க கடவுளே நினச்சு பார்க்கவே முடியல 😳😳😳
ரொம்ப ரொம்ப exiting ah போகுது கதை அருமை அருமை 👌🏼👌🏼👌🏼
ஹையோ என்ன இப்படி ஒரு கனவு, ஐந்து வயது வரை குழந்தை நன்றாக இருந்துட்டு இறந்து போகுமா, ஒருவேள முன் ஜென்மத்துல ஏதும் இவங்களுக்கு பிறந்த குழந்தை இறந்து மறுபடியும் பிறக்க போகுதோ,🙄🙄
சரி மூன்றாவது முறையும் இவங்களுக்கு ஒரே மாதிரி கனவு வருதானு பார்ப்போம்🤔
என்ன இது இப்படி ஒரு கனவு.
ஒரு குழந்தை இறந்து மறுஜென்மம் எடுத்து இவங்களுக்கு பிறகேப்போகுதா.அந்த குழந்தை இந்த ஜென்மத்துல இவங்க கண்ணுல படாத வரைக்கும் ஓகே.ஒருவேளை அந்த குழந்தையை இவங்க பாத்துட்டா.💔
கடவுளே என்ன நடக்க போகுதோ..
Andha kuzhandhai 5years varaikkum irukkum apparam illama
Santha vaithulla karuva ah vallarum
Illama pora portion manasu kastam ah irukkumae 😟😟😟😟😟😟😟😟
எப்படி அவங்களே வரம் வாங்கி குழந்த கேட்குறாங்க இப்ப அந்த குழந்தை கிடைச்சா அதுக்கு ஆயுள் ஐந்து வயசு மட்டுமா 😳😳😳
இத கேட்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு 😔😔😔
that child may be his brother’s child