Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

இடம் தருவாயா மனசுக்குள்ளே?? 9

மனசு 9

“உதய்…” தந்தையின் குரல் கேட்டு விதார்த் பதற,

“அப்பா, நான் இவள அங்கிள்ட விட்டுட்டு வாறேன்” சாதாரணமாக கூறி படியிலிருந்து கீழே இறங்கினான் உதய்கிருஷ்ணா.



Advertisement

“நான் போக மாட்டேன். அம்மா சூடு வைப்பாங்க” அவன் கையை தட்டி விட்டு, “அங்கிள் என்ன கார்த்திக் அண்ணா வீட்ல விட்ருங்களேன்..ப்ளீஸ்…” ராமநாதனிடம் கெஞ்சுதலாக கேட்டாள் இன்பவேணி.

Advertisement

“என்னடா? பிரச்சனை பெருசா”? ராமநாதன் கேட்க,

Advertisement

முடிச்சிட்டேன்பா. ஆன்ட்டி, அங்கிள் இவளோட அதிகப்பிரசங்கி வேலையில கோபமாக இருக்காங்க போல. அதான் இங்க ஓடி வந்துட்டா…

Advertisement

“விது…” உதட்டை பிதுக்கி இன்பவேணி அழைக்க, அவன் முகம் திருப்பினான்.

எப்போதும் இவளுக்காக அவரிடமே சண்டை போடுபவன் இன்று முகம் திருப்புகிறான் பெரிய மகனை பார்த்தார். அவனும் கோபமாக தான் தெரிந்தான்.

“வா….” மீண்டும் கை பிடித்து இன்பவேணியை இழுத்து உதய்கிருஷ்ணா செல்ல, அவன் காலில் தொத்திக் கொண்டு, “நான் போக மாட்டேன்…” அழுது கொண்டிருந்தாள்.

மகளை தேட சென்ற கணவனை எதிர்பார்த்து கண்ணீருடன் காத்திருந்த கோசலை, இருவரையும் பார்த்து திகைத்து ஓடி வந்தார்.

“ஆன்ட்டி, உங்களுக்கு பயந்து எங்க வீட்டுக்கு ஓடி வந்துட்டா…” உதய் இன்பவேணியை பார்க்க, அவள் அவன் முதுகின் பின் மறைந்து தாயை எட்டி பார்த்தாள்.

“ஏன்டி, ஏதாவது செஞ்சு பயமுறுத்திட்டே இருக்க? இதுக்கு தான் அந்த மனுசன்ட பொட்ட புள்ளைக்கு செல்லம் கொடுக்காதீங்கன்னு சொன்னேன்..” புலம்பியவாறு கோசலை இன்பவேணியை நெருங்கினார்.

அம்மா…சூடு வைக்க மாட்டேல்ல..?? நான் இனிமே யார் விசயத்துலயும் தலையிட மாட்டேன்…

அவர் உதய்கிருஷ்ணாவை பார்க்க, கூட்டிட்டு போங்க ஆன்ட்டி. உங்களுக்கு பயந்து கார்த்திக் வீட்டுக்கு கூட்டிட்டு போக சொல்றா…

முந்தானையால் விழிகளை துடைத்து, “வா..அம்மா எதுவும் செய்ய மாட்டேன்” என்று உதய்கிருஷ்ணாவிடம் கையெடுத்து கோசலை கும்பிட பதறிப் போனான் அவன்.

“எதுக்கு ஆன்ட்டி??” அவர் கையை எடுத்து விட்டு, “அங்கிள் எங்க?” வீட்டை பார்த்தான்.

“இவள தேடி அவர் போயிருக்கார். இதோ இப்ப சொல்லிடுறேன்” என்று உதய்கிருஷ்ணா விதார்த்தை பார்த்து, “நீங்க ரெண்டு பேரும் இல்லைன்னா எம் புள்ள வாழ்க்கையே நாசாமா போயிருக்கும்…” அழுதார்.

“ஆன்ட்டி, எதுக்கு இப்படி பிரிச்சு பேசுறீங்க? முதல்ல அங்கிள்ட சொல்லுங்க. முக்கியமா இன்னுவ வீட்டுக்குள்ள பூட்டி போடுங்க…” என்றான் விதார்த். அவள் அவனை முறைக்க, உதட்டை சுளித்தான்.

“போடா…” அவள் ராமநாதன் உதய்கிருஷ்ணாவை பார்த்துக் கொண்டே தாயுடன் சென்றாள்.

உதய், அந்த பொண்ணு உன்னோட அறைக்கு வந்துருக்கா..

அவ சின்னப் பொண்ணுப்பா…

என்னை அறைவாசல்ல கூட நிக்க விட மாட்ட..

“எனக்கு சோர்வா இருக்கு” அவர் கேள்விக்கு பதிலளிக்காமல் சென்று விட்டான் உதய்கிருஷ்ணா.

மறுநாள் அனைவருக்கும் விடுமுறை. உதய்கிருஷ்ணா வெளியே வர, அவனை நிறுத்தி நன்றி உரைத்து அவன் குடும்பத்தை மதிய விருந்துக்காக அழைத்தார் விசுவமூர்த்தி.

எதுக்கு அங்கிள்?

“புள்ள நீ பேசியத சொன்னாப்பா. ரொம்ப நன்றி” உதய்கிருஷ்ணா கை பற்றினார் விசுவமூர்த்தி.

அங்கிள், இன்னும் கொஞ்ச நேரத்துல பாட்டி, அத்தை எல்லாரும் வந்துருவாங்க..

அதனால என்னப்பா? அவங்களையும் அழைச்சிட்டு வாங்க..

உங்களுக்கு தெரியுமே அங்கிள்!

“விருப்பமில்லைன்னா இருக்கட்டும் உதய். நான் வாரேன்” வருத்தமுடன் அவர் திரும்ப, “நானும் விதுவும் கண்டிப்பா வாரோம் அங்கிள்” கூறி சென்றான்.

அவர்கள் வீட்டினரிடம் நடந்ததை கூறி, உதவி செய்ததற்காக அழைக்கிறார்கள் என்று பலவாறு பேசி உதய்கிருஷ்ணா விதார்த்துடன் மதிய உணவிற்காக வந்தான்.

நம் தமிழ் கலாச்சாரத்திற்கேற்ப அவர்களை முறையாக வரவேற்று அமர வைத்தனர். இன்பவேணி சமையலறையிலிருந்து அவ்வப்போது இவர்களை எட்டிப் பார்த்தாள்.

“அங்கிள் இன்னுவுமா சமைக்கிறா?” ஆச்சர்யமாக விதார்த் கேட்க, சத்தமாக சிரித்தார் விசுவமூர்த்தி.

இல்ல விது, அவ சமைக்கிற எல்லாத்தையும் டேஸ்ட் பாக்குறேன்னு உள்ள போனா. உங்க ஆன்ட்டி அவள எதையும் தொட விட மாட்டேங்கிறா..

புன்னகைத்தவாறு உதய்கிருஷ்ணா விசுவமூர்த்தியை பார்த்தார்.

என்ன உதய்?

உங்க வீடு முழுசும் அசைவ உணவின் வாசனை..

ஆமா, நீ இப்பதான முதல் முறையா வீட்டுக்கு வந்து சாப்பிடுற..

ம்ம்! வாசனை பிடித்தவாறு விதார்த் எழ, அவனை அமர வைத்தான் உதய்கிருஷ்ணா.

அண்ணா…

அங்க போன ஏற்கனவே ஆன்ட்டி எதுவும் குடுக்கலைன்னு கடுப்புல இருப்பா உன்னோட ப்ரெண்டு. போன நீ காலி தான்..

விசுவமூர்த்தி சிரிக்க, அவர் பக்கம் அமர்ந்து…என்ன அங்கிள்? ரொம்ப ஹாப்பியா இருக்கீங்க?

நேத்து மீட்டிங் போனேன்ல என்னோட பிராஜெக்ட் அப்ரூவ் ஆகிடுச்சு. அந்த கம்பெனி போல பெரிய சாப்ட்வேர் கம்பெனி உருவாக்கணுங்கிறது தான் என்னோட கனவு..ம்ஹூம் பெருமூச்சுடன் இந்த சின்ன கம்பெனியவே கட்டிட்டு அழுதுட்டு இருக்கேன்.

“ஏன் அங்கிள் நெகடிவ்வா நினைக்கிறீங்க? பாசிட்டிவ்வா திங்க் பண்ணுங்க” உதய்கிருஷ்ணா அவரை ஊக்க,

“என்னத்த சொல்ல உதய்? நானும் ரொம்ப வருசமா முன்னுக்கு வர தான் ட்ரை பண்றேன். ஆனா பாரு நம்ம பீல்டு பத்தி எல்லாம் தெரிஞ்ச எனக்கு ஆள ஜர்ஜ் பண்ண தெரியல…” வருத்தமுடன் பேசினார்.

“சாப்பாடு ரெடி..வாங்க சாப்பிடலாம்” என்று உணவை தரையில் வைத்து, “உதய் தப்பா எடுத்துக்காம தரையில உட்காந்து சாப்பிடுறீயா?” கோசலை கேட்க,

“சுயர் ஆன்ட்டி” என்று அவன் சொல்லவும்,

“ஏங்க வாழ இல பறிச்சிட்டு வாங்க” என இருவரையும் அமர வைத்து வாழை இலை போட்டு ஸ்வீட் தொடங்கி அனைத்து இறைச்சி வகைகளையும் பரிமாறினார் கோசலை. விசுவமூர்த்தியும் மனைவியுடன் சேர்ந்து எடுத்து வைக்க, இலையை வெறித்து நின்றிருந்தாள் இன்பவேணி.

உதய்கிருஷ்ணாவும் விதார்த்தும் உணவை கையில் எடுக்க, இருவருக்கும் இடையில் அவர்களை இடித்து அமர்ந்து இருவரின் கையையும் பிடித்து, ரெண்டு பேருக்கும் எம் மேல கோபம் போச்சுன்னா தான் சாப்பிட முடியும்..

“வேணிம்மா…” அதட்டலுடன் விசுவமூர்த்தி அழைக்க,

“வேணி பசங்க சாப்பிட்டடும். சாப்பிடும் போது இப்படி தான் செய்வீயா?” அவளை அடிக்க வந்தார் கோசலை.

ஏற்கனவே அவளின் நெருக்கத்தை தாங்க மாட்டாமல் இருந்த உதய்கிருஷ்ணா கோசலை அடிக்க வரவும் மறைகிறேன் என்று அவன் நெஞ்சில் சாயவும் அவனுக்கு இதயம் வேகவேகமாக துடித்தது. அவள் நிமிர்ந்து அவனை பார்த்தாள். அவன் கவனம் உணவில் இருப்பது போல காட்டிக் கொண்டான்.

“சாப்பிட விடு இன்னு. பசிக்குது. ஆன்ட்டி இன்னிக்கு உங்க டேஸ்டி பேவரேட் சாம்பார் வைக்கலையா?” விதார்த் கேட்க,

கொதித்து எழுந்த இன்பவேணி, உங்களுக்காக நீந்துறது, நடக்குறது, பறக்குறது, ஓடுறது எல்லாம் எனக்கு கூட குடுக்காம சமைச்சு வச்சிருந்தா. நீ அலுத்துப் போன அந்த சாம்பார கேக்குற?

ஆன்ட்டி செய்ற சாம்பாரவே குற சொல்ற? ஆன்ட்டி இவளுக்கு சோறு போடாதீங்க…

எனக்கு சோறு போடக் கூடாதா? நான் உனக்கு எவ்ளோ கெல்ப் பண்ணி இருக்கேன்…

பேச்சு போகும் திசை கண்டு இன்பவேணியை தடுத்த விசுவமூர்த்தி, “கோசல பசங்களுக்கு கவனிச்சு எடுத்து வை வாரேன்” மகளை இழுத்து சென்றார்.

“ஆன்ட்டி அங்கிள் அவள திட்டப் போறார்…” உதய்கிருஷ்ணா இருவரும் சென்ற திசையை பார்க்க,

“திட்டலாம் மாட்டார். அட்வைஸ் பண்ணுவார். ரெண்டு பேரும் வருவாங்க. சாப்பிடு உதய்” பார்த்து பார்த்து கோசலை பரிமாற, உதய்கிருஷ்ணாவிற்கு அவரின் அன்னை நினைவு வந்தது.

அவன் விழிகள் கலங்கியது.

காரமா இருக்கா உதய்..

“இல்ல ஆன்ட்டி, என்னோட ஒரு வயசுல கடைசியா அம்மா எம் பக்கத்துல இருந்து சாப்பாடு பாத்து பாத்து ஊட்டி விட்டாங்க. அப்புறம் யாரும் இல்லாத ஒரு நிலை தான்.. விதுவுக்கு எதுவுமே செய்யாம போயிட்டாங்க” கண்ணீரை புறங்கையால் துடைத்தான்.

“சாப்பிடும் போது அழலாமா?” முந்தானையால் உதய் கிருஷ்ணா கண்ணீரை துடைத்து, “ஊட்டி தான விடணும்” என்று ஒரு கவள உணவை எடுத்து அவர் உதய்கிருஷ்ணாவிடம் நீட்டினார். அவன் முகம் மலர வாங்கிக் கொண்டான். விதார்த்துக்கும் ஊட்டியவர்,

வாழ்க்கையில எல்லாரும் எப்போதும் நினைச்ச மாதிரி இருக்க முடியாது. உன்னோட அம்மா உன்னையும் விதுவையும் நினச்சி வருந்தாத நாளில்லை. உங்க அம்மா இறக்கும் முந்தைய நாள் அவங்கள நான் பாக்க வந்தப்ப உங்களை பாத்துக்க சொன்னாங்க. அவங்க குணத்துக்கு இன்னும் மகாராசியா வாழ்ந்திருக்கணும்..குடுப்பன இல்ல..

அவங்க வார்த்தைக்காகவும் உங்க குணத்துக்கும் தான் உங்க குடும்பம் என்ன பேசுனாலும் பரவாயில்லன்னு பேசிட்டு இருக்கோம்.

“பேசுனாங்களா? என்ன பேசுனாங்க?” உதய்கிருஷ்ணா கேட்க, மலங்க மலங்க விழித்தார் கோசலை.

“கோசல…பசங்கள சாப்பிட விடு” பேச்சை திசை திருப்ப, அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டே வந்த இன்பவேணி அம்மாவின் அன்புக்காக ஏங்கும் சிறுபிள்ளை போல தெரிந்த உதய்கிருஷ்ணாவை பார்த்தவள் அன்னையில் பேச்சில் நின்று விட்டாள்.

“பேச்ச மாத்தாதீங்க அங்கிள். யாருன்னு சொல்லுங்க?” சொல்லியே ஆக வேண்டுமென கேட்டான் விதார்த்.

ஒண்ணுமில்ல விது. முதல்ல சாப்பிடுங்க..

“அம்மா சொல்லுங்க?” இன்பவேணி மீண்டும் இருவருக்கும் இடையில் அமர்ந்து தாயை கேட்க, அவருக்கு வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கிக் கொண்டன.

“ஆன்ட்டி…” உதய்கிருஷ்ணா அழைக்க, கோசலை கண்ணீருடன் வேகமாக அறைக்கு செல்ல,

“இப்ப எதுக்கு இத பேசணும்? சும்மா இருக்க மாட்டேங்கிறா?” முணங்கியவாறு “கோசல…புள்ளைங்க சாப்பிட உக்காந்திருக்காங்க” சத்தமிட்டார் விசுவமூர்த்தி.

அங்கிள் உங்களுக்கும் தெரியுமா? யார் என்ன சொன்னாங்க?

இன்பவேணியை தான் பார்த்தார் விசுவமூர்த்தி.

இன்னு நீ உள்ள போ…

எதுக்கு? எனக்கு தெரியக் கூடாதா?

“இன்னுவுக்கும் தெரியணும் அங்கிள். அது தான் நல்லது” விதார்த் கூற, “சொல்லுங்க அங்கிள்?” உதயும் கேட்டான்.

“உங்க அப்பாவ மயக்க கோசல…” அவரால் பேச முடியவில்லை.

“அப்பா….” இன்பவேணி சத்தம் கொடுக்க, அவர் தலைகவிழ்ந்தார்.

“அங்கிள், தப்பு பண்ணவங்க தான் தலைகவிழணும். நீங்க இப்படி இருந்தா எனக்கு பிடிக்காது” உதய் கூற நிமிர்ந்து அவனை பார்த்தார்.

யாரு அங்கிள்?

உன்னோட அத்த பத்மா..

நினச்சேன். அந்த பொம்பளைக்கு வேற வேலையேயில்ல..

“விது” சத்தமிட்டு வெளியே வந்த கோசலை, “பெரியவங்கள இப்படிலாம் பேசாத. முதல்ல சாப்பிடுங்க” என அவர்களருகே வந்து அமர்ந்தார்.

அவங்க பேச்செல்லாம் நினச்சிட்டு இருக்காதீங்க. அவங்க எங்கட்டயும் அப்படி தான் பேசுவாங்க. உம் அம்மா அமைதியா இருப்பா. இவன் இப்படி பேசுறான்னு விதுவ திட்டிட்டு தான் இருப்பாங்க…

“சரிப்பா…முதல்ல சாப்பிடுங்க” புன்னகைத்து அவர்களை உண்ண வைத்தார். அதிலிருந்து அதிகம் விதார்த் வீட்டிற்கு செல்வதை குறைத்திருந்தாள் இன்பவேணி. அதற்காக போகாமலெல்லாம் இருக்கவில்லை.

உதய்கிருஷ்ணா தனக்காக அன்று செய்ததை நினைத்து வருந்தி, அவனுக்கு திருமணமாகவில்லை என்ற நிஜம் அவள் மனதை லேசாக குளிரவும் வைத்தது.

  “உன் பெயரில் என் பெயர் சேரும்

     நாள் இதுதான் தூக்கம் இன்றி

    நாள்தோறும் கரைகின்றேன்

            என் உயிரே!

ஷோபனா விசயத்தில் விதார்த் என்ன செய்ய நினைக்கிறான் என அறிந்து கொள்ள அவனிடம் பேச முடிவெடுத்து அவனறைக்கு சென்றான் உதய்கிருஷ்ணா.

விதார்த்தை எத்தனை முறை அழைத்தும் அவன் கதவை திறக்கவில்லை.

“உதய் அவன் கொஞ்ச நேரம் தனியா இருக்கட்டும். நீ இங்க வா” அழைத்தார் பாட்டி.

தன் மகளை தூக்கி அவரருகே அமர்ந்தான் உதய்கிருஷ்ணா. அவனுக்கு எதிரே தாத்தாவும் அவன் தந்தையும் அமர்ந்திருந்தனர்.

உதய்…உன்னோட தாத்தாவ அவர் வீட்டுக்கு போக சொல்லு. நான் இங்க இருக்கவா இல்ல என்னோட அம்மா வீட்டுக்கு போகவா? பாட்டி கேட்க,

“இவ விட மாட்டா போலவே!” தாத்தா முகத்தை அஷ்டகோணலாக்கி பாட்டியை பார்த்தார்.

“பாட்டி, புதுசா எதுக்கு இப்படிலாம் பேசுறீங்க? இது உங்க மகன் வீடு. எப்ப வேணும்னாலும் வரலாம் போகலாம்…” உதய் கூறி தந்தையை பார்த்தான்.

“உதய் இது உனக்கும் சொந்தமான வீடு..” ராமநாதன் கூற, வெறுமையுடன் அவரை பார்த்தான்.

“அப்பாவும் மகனும் உங்க பிரச்சனையை அப்புறம் வச்சுக்கோங்க. நான் நேரடியாவே விசயத்துக்கு வாரேன். இந்தாளு இருக்கிற இடத்துல நான் இருக்க மாட்டேன் பாட்டி” தீர்மானமாக பேசினார்.

நானும் பாத்துட்டு இருக்கேன். ரொம்ப ஓவரா பேசிட்டே போற. விவாகரத்து தான உனக்கு வேணும். குடுத்திடுறேன் என்று பாட்டியை ஆஃப் செய்ய எண்ணி, உன்னோட பாட்டி சொன்ன மாதிரி வக்கீல பாரு உதய்…என்றார்.

பாட்டியோ எவ்வித குறுகுறுப்பும் இன்றி, ஆமா உதய் முதல்ல இந்தாளுட்ட இருந்து விடுதல வாங்கி குடு..

இருக்கும் பிரச்சனையில இவங்களுமா? என இருந்தது உதய்கு.

பாட்டி தான் கோபத்துல பேசுறாங்க. நீங்களுமா தாத்தா? கோபமாக கேட்டான். ஜான்வி தன் தந்தை முகத்தை பார்த்தாள்.

மூச்சை இழுத்து விட்டு அமைதியாக மகள் கன்னத்தில் முத்தமிட்டு பெரியவர்களை பார்த்தான்.

“நான் நிசமா தான் சொல்றேன் உதய். என்னால இதுக்கு மேல இந்தாளோட இருக்க முடியாது. உன்னோட வீட்ல இருக்கவா இல்ல நான் ஊருக்கு போகவான்னு முடிவு பண்ணி சொல்லு..” பேசி அவர் அறைக்கு செல்ல, தாத்தாவும் கோபமாக சென்றார்.

இருவருக்கும் இடையே சில பல வாக்குவாதத்தின் பின், “என்னோட தப்ப சரி பண்ண பாக்குறேன். உன்ன வேலைக்காரியா நடத்துனதுக்கு என்ன மன்னிச்சிரு…” தாத்தா வெட்கத்தை விட்டு பாட்டியிடம் சரணடைந்தார்.

இத்தனை வருடங்கள் அடிமை போல வாழ்ந்த பாட்டிக்கு மகள், பேத்தியால் பேரன் வாழ்வு கெட்டது போல ஜான்வியையும் ஏதும் செய்து விடுவார்களோ என்ற பயமும் தொற்றி இருந்தது. அதனூடே தாத்தாவின் பேச்சை பாட்டியால் முழுதாக நம்பவும் முடியவில்லை. அதனால் தாத்தாவை விட்டு தனியே வாழ முடிவெடுத்தார்…

“என்னால உங்கள நம்ப முடியாது. நாம விவாகரத்து பண்ணிக்கலாம். பசங்க பேச்ச கேட்டு என்னவெல்லாம் பண்ணீங்க. நீங்களும் அனுபவிக்க வேண்டாமா? நான் இனிமேலாவது நிம்மதியா எம் பேர புள்ளங்களோட இருக்கணும்” அவ்வறை சுவற்றை வெறித்தார் பாட்டி.

தாத்தா சோர்வுடன் வெளியே வந்து அமைதியாக அமர, பாட்டி அறையிலே சுருண்டு விட, ராமநாதன் ஆபிஸ் கிளம்ப தனது பையுடன் வந்தார்.

ராமா, நான் வீட்டுக்கு கிளம்புறேன். உம் அம்மாவ பாத்துக்கோ..

“உங்க பேரன்ட பேசிக்கோங்க…” அவர் சென்று விட, கையை பிசைந்து உதய் அறைக்கு வெளியே நின்றார் தாத்தா. அவனும் பாப்பாவும் தயாராகி வந்தனர்.

உதய், நான் கிளம்புறேன். உங்க பாட்டி…அவர் மேலும் பேச தயங்கினார்.

“பாட்டி உங்களோட வர மாட்டேன்னு சொல்லீட்டாங்களா?” ஏளனமாக பார்வையை அவரை நோக்கி வீசினான்.

ம்ம்..!!! நான் கிளம்பணும்..

கிளம்புங்க..

உங்க பாட்டி…???

என்னோட அம்மாவ காப்பாத்த கடைசி நிமிசம் வரை போராடி பாத்தேன். முடியல…அப்ப நான் சின்ன பையன். யாரும் துணைக்குயில்ல. என்னோட பாட்டிய அப்படி விட மாட்டேன். நான் இப்ப சின்னப்பையன் இல்ல..என்னோட பாட்டிய பாத்துக்க எனக்கு தெரியும். நான் உங்க பர்சனல்ல தலையிடலாமான்னு தெரியல..சொல்லத் தோணுது..

“பாட்டிய விட்ருங்க. அவங்களுக்கு எந்த நிலையிலும் நான் இருக்கேன். அவங்களுக்கான எந்த உரிமையும் குடுக்காம இத்தன வருசம் அடிமையா வச்சிருந்தீங்க. இனியும் அவங்க அடிமையா இருந்தா சாவு கூட அவங்கள பாத்து சிரிக்கும்…” சொல்லி தாத்தாவின் நெஞ்சை சாட்டையால் அடித்து சென்றான்.

பாட்டி பேசியதில் காயமடைந்த பெரியவர் பேரனின் பேச்சில் முற்றிலும் உடைந்தார். அப்படியா நான் என் மனைவியை கஷ்டப்படுத்தினேன்? சிந்தனையுடன் அவர் வீட்டிற்கு சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!