Skip to content
Post Views: 1,154
“சந்தா.. என் கண்ணுக்கு தெரியறது உனக்கு தெரியுதா..?” காரை நிறுத்திவிட்டு அவள் பக்கமாக திரும்பி மெல்லிய குரலில் கேட்டான் வாத்சல்யன்.
“ம்ம்..! அந்த குழந்தை..!” டெடிபைரை ஒரு கையில் அணைத்துக்கொண்டு இன்னொரு கையால் அம்மாவின் முந்தானையை பற்றியிழுத்த அந்த குட்டி ரோஜா மலரை இமைகளை கூட சிமிட்டாமல் பார்த்தபடி சொன்னாள் லக்ஷ்மி..
“சோ கனவு நனைவாக போகுது..!” கணவன் சொன்னதும் மீண்டும் அந்த குழந்தையை பார்த்தாள்.
தன்னை அம்மாவென அழைக்க.. தன் மனக்குறையை தீர்க்க ஒரு குழந்தை பிறக்கப் போகிறது என்பதைவிட.. இந்த சின்னஞ்சிறு பிஞ்சு மலர் உதிரப்போகிறதா..! என்ற கவலையில் நெஞ்சடைத்தது அவளுக்கு.
Advertisement
“இந்த குழந்தை சாக வேண்டாம் வாத்சா..!” அவள் கண்கள் குளம் கட்டியது.
“ஏய் நீ என்ன இப்படி சொல்ற..?” என்று பதறிப் போனவனுக்கும் கூட கனவெல்லாம் மறந்து போனது.. இந்த குழந்தை போய் சாகனுமா..! ச்சே..! கொடுமை.. இந்த கடவுளுக்கு கொஞ்சங்கூட இரக்கமே இல்லை..! விதியோடு சேர்த்து கடவுளையும் நிந்தித்தான்.
“இப்ப என்ன பண்றது..?” அவனைத் தாண்டி அந்த மழலையை எட்டிப் பார்த்தாள்.
Advertisement
“டேய் தீப்தி அந்த பக்கம் போகாதே..!” அம்மாவின் அதட்டலின் தெருவோரம் கிடந்த ஏதோ ஒரு உடைந்த பொம்மையை எடுக்கப் போன குழந்தை எழுந்து நின்று திரும்பிப் பார்த்தது.
Advertisement
வாத்சா.. சந்தான லஷ்மி இருவர் முகத்திலும் புன்னகை.
“தீப்தி..!”
ஒரு சேர அந்த பெயரை உச்சரித்தனர்.
Advertisement
“டேய் ரொம்ப அழகா இருக்குல்ல..!”
“பாப்பா கூட ரொம்ப அழகா இருக்கா..!” என்றான் வாத்சா மறுமுறை குழந்தையை திரும்பிப் பார்த்தபடி..
“நாமதான் ஏற்கனவே கனவுல பாத்துட்டோமே..!”
இருவருக்குமிடையில் சில நொடிகள் மௌனம்..
“தீப்தி கொஞ்சம் ஓரமா நில்லு..” என தாய் சொன்னதையும் கேட்காமல் தானும் உதவி செய்கிறேன் பேர்வழியென அங்கேயும் இங்கேயும் ஓடிக் கொண்டிருந்தாள் அந்த குட்டிப் பெண்.
“வாத்சா.. விஷயம் ரொம்ப சீரியஸா போயிட்டு இருக்கற மாதிரி தோணுது..! நல்லா யோசிச்சு பாருங்க..! நாம என்ன அவ்வளவு சுயநலவாதியா..?”
“இல்ல.. எனக்கு புரியல..?”
“முதல்ல காரை எடுங்க..! இல்லன்னா மனசு அந்த குழந்தையை பார்த்துட்டே இருக்க சொல்லும்.”
ஒருமுறை அந்த குழந்தையை ஆசை தீர பார்த்துவிட்டு காரை எடுத்தான் வாத்சல்யன்.
“இது உங்களோட குழந்தையின்னு பைத்தியக்காரத்தனமா கனவுல சொல்லப்பட்ட அந்த வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து நாம அப்செக்ஷன்ல போயிட்டோம்னு தோணுது.!”
“என்னடி உளர்ற..? அந்த குழந்தையை பார்த்து ரசிச்சோம். எவ்ளோ அழகா க்யூட்டா இருக்கா பாப்பா..!” மீண்டும் அந்த மழலைச் செல்வத்தை நினைத்து சிலாகித்தான் வாத்சல்யன்.
ஒரு ஆணுக்குள் உரு கொண்டிருக்கும் தகப்பன் ஸ்தானத்திற்கு என்றுமே பெண் குழந்தைகள் ஃபேவரைட்தான்.. வாத்சல்யனும் அதிலொன்றும் விதிவிலக்கு இல்லையே..!
துணிக்கடைகளுக்கு செல்லும்போதெல்லாம்.. அழகழகாக தொங்கவிடப்பட்டிருக்கும் குட்டி குட்டி கவுன்களை பார்க்க நேர்கையில்.. நமக்கொரு பெண் பிள்ளை இருந்திருந்தால் விதவிதமாக உடை அணிவித்து அழகு பார்த்திருக்கலாம்..! என லஷ்மியை விட அவன் அதிகமாக சிந்தித்து ஏங்கியதுண்டு.
“இந்த பாப்பா நமக்கு வேண்டாம்..! எங்கிருந்தாலும் அந்த குழந்தை சந்தோஷமா இருந்துட்டு போகட்டும்.! கடவுள் நமக்கு வரம் தரணும்னு நினைச்சா.. யாரையும் எந்த விதத்திலும் பாதிக்காமல் ஒரு குழந்தையை நமக்கு தரட்டும்.”
“வேணும் வேண்டாம்னு விட்டுக்கொடுக்கிற சாய்ஸ் நம்ம கிட்ட இல்லையே..! இது நடக்கும்னு மட்டும் தான் அந்த குரல் சொல்லுச்சு..! மத்தபடி எந்த முடிவையும் நம்ம கையில விடல!”
சந்தான லஷ்மி அமைதியாக இருந்தாள்.
“ஒருவேளை தேர்ந்தெடுக்கற உரிமை உங்க கையில விடப்பட்டால் நீங்க என்ன சூஸ் பண்ணுவீங்க..?”
“எனக்கு புரியலடி என்ன கேக்கற நீ..!”
“ஐ மீன்.. ஒரு அழகான குழந்தை இந்த உலகத்தை விட்டு போய்.. புது ஜீவன் அவதரிக்க வேண்டாம்.. இல்லைனா.. யார் எப்படி போனாலும் பரவாயில்லை நமக்கு குழந்தை வேணும்..! இது ரெண்டுல எது சூஸ் பண்ணுவீங்க..?”
“சந்தேகமே இல்ல இரண்டாவதுதான்.. அந்த குழந்தையோட முகம் என் கண்ணுக்குள்ளேயே நிக்குது. வாழ வேண்டிய அந்த சின்ன உயிர் இந்த உலகத்தை விட்டு போனாத்தான் நமக்கு நல்லது நடக்கும்னா.. நமக்கு வரமா கிடைக்கப் போற விஷயம் மத்தவங்களுக்கு சாபம்னா.. அது வேண்டவே வேண்டாம் சந்தா..!”
“எதுவும் நம்ம கையில இல்லையே வாத்சா..! அசரீதியோட வாக்கு மட்டும் உண்மையா போச்சுன்னா.. ப்ச்..! வேண்டாம்.. நினைக்கவே கொடுமையா இருக்கு.!”
“சரி விடு அதைப்பத்தி நாம் யோசிக்க வேண்டாம்.. நடக்கறது எதுவும் நம்ம கைல இல்ல.. நாம எதையும் தீர்மானிக்க போறது இல்ல..! எல்லாம் கடவுள் விட்ட வழி. மனசை போட்டு குழப்பிக்காம அமைதியா இரு.!”
மீண்டும் அங்கே ஒரு கனத்த மவுனம் நிலவியது. ஏதோ ஒன்று அவ்வப்போது இருதயத்தை அடைத்து சுவாசிப்பை திணறச் செய்தது..
கனவு.. அசரிரி.. தேவ வாக்கு..! இதை உண்மையென்றும் கொள்ள முடியவில்லை.. வெறும் கற்பனை.. என்று புறக்கணிக்கவும் வழி இல்லை.
தேவையில்லாம ஏதோ ஒரு குழந்தை மேல அன்பை வளர்த்துக்கறது சரியில்லை.. என்ற முடிவுக்கு வந்தாள் சந்தா..
சொந்தக்காரப் பிள்ளைகள் மீது பாசம் வைத்து அதனால் அனுபவித்த மனக்கஷ்டம் போதும். இதில் அடுத்த வீட்டு பிள்ளைகளை வேறு சொந்தம் கொண்டாட வேண்டுமா..! கனவாவது கன்றாவியாவது.. தூக்கி போட்டுட்டு அடுத்த வேலையை பாரு சந்தா.. உன் தலையில என்ன எழுதியிருக்கோ அதுதான் நடக்கும்.
என்னதான் மனதுக்கு சமாதானம் சொல்லிக் கொண்டு கட்டுப்படுத்த நினைத்தாலும்.. கார் அந்த பக்கம் போகும்போது வரும்போதும் இருவராலும் தலையை அந்த வீட்டு பக்கம் திருப்பாமல் இருக்க முடியவில்லை.
சர்வ அலங்கார தேவதையாய் வீற்றிருந்த காளிகாம்பாள் முன்பு கைகூப்பி நின்றிருந்தாள் சந்தான லஷ்மி..
“ஒருத்தரோட சந்தோஷத்தை அழிச்சிட்டுதான் இன்னொருத்தருக்கு வரம் கொடுப்பேன்னா அப்புறம் என்ன தெய்வம் நீ..! யாருக்கும் பாதகம் இல்லாம உன்னால நல்லது செய்யவே முடியாதா.. பிள்ளையை பெத்து குப்பை தொட்டியில் போட்டுட்டு போறவங்களுக்கும்.. பிள்ளையோட அருமை தெரியாதவங்களுக்கும்.. குழந்தை செல்வத்தை அள்ளிக் கொடுக்கற நீ.. ஒரு குழந்தைக்காக வருஷக்கணக்கில் ஏங்கி பரிதவிக்கற எங்களுக்கு மட்டும் ஏன் கண் திறக்கவே மாட்டேங்கற.. நாங்க அப்படி என்ன பாவம் செஞ்சுட்டோம்.?
உனக்கென்ன.. நீ தெய்வத்தாய்.. உன்னை எதுவும் பாதிக்கப் போறதில்லை.. ஏன்னா நீ மலடி இல்லையே..! என் கஷ்டம் உனக்கு எங்க புரியப்போகுது.. பூமியில வந்து கொஞ்ச நாள் என் வாழ்க்கையை வாழ்ந்து பாரு..! இப்பதான் என் வேதனை உனக்கு புரியும்..!” மனக்குமுறல்களை அந்த தாயிடம் கொட்டி நிந்தித்து விட்டு.. கண்களை துடைத்துக் கொண்டு புறப்பட்டாள் சந்தான லஷ்மி.
தன் வீட்டு கேட்டை திறக்கும் போது எதிர் வீட்டை எட்டிப் பார்த்தாள். வாசலில் யாருமில்லை.. கதவு சாத்தப்பட்டிருந்தது. அந்த குடும்பத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்று ஆர்வத்தை முயன்று கட்டுப்படுத்திக் கொண்டாள்.
யார் எப்படி போனா எனக்கென்ன வந்துச்சு.. இதெல்லாம் அனாவசியம்..! தோள்களை குலுக்கிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
“சந்தா..! நம்ம மனம் விட்டு பேசி எவ்வளவு நாளாச்சு..!”
“ஏன் தினம் தினம் பேசிக்கிட்டுதானே இருக்கோம்.!”
“நான் என்ன சொல்ல வரேன்னு உனக்கு புரியலையாடி..! இப்படி கிட்ட வா..” தனது கரத்தை நீட்ட.. நெருங்கி வந்து அவனிடம் அடைக்கலம் புகுந்தாள் லக்ஷ்மி..
“என்னங்க அந்த குழந்தை..!”
“வேண்டாம் சந்தா..! இந்த குழந்தையை பத்தி இனிமே பேச்சில்லை.. தேவையில்லாத ஒரு கனவு நம்ம ரெண்டு பேரையும் எமோஷனலா பிரேக் பண்ணிட்டு இருக்கு.. நம்ம சுயத்தை இழந்துட்டு இருக்கோம்னு தோணுது.. இது வேண்டாம். நாம நாமளா இருப்போம். இதையெல்லாம் மறந்துடலாம். பழையபடி சந்தோஷமா இருக்கலாம்.”
இழுத்து மூச்சு விட்டாள் லஷ்மி.. அப்படித்தான் தினம் சொல்றோம்.. ஆனா ஏதோ ஒன்னு மனசைப் போட்டு குடையுது..! என்றபடி அவன் தோளில் சாய்ந்தாள்.
“ஓடிடியில ஏதாவது ஹாட் சீரீஸ் பார்ப்போமா..! அப்பவாச்சும் உன் மூடு மாறி புருஷனை கொஞ்சமாவது கவனிக்கறயான்னு பார்க்கறேன்.”
“அடடா..! நான் உங்களை கண்டுக்கறதே இல்லைங்கற மாதிரி பேசறீங்க..!”
“உண்மை அதுதானே..! நீ என்னை டீல்ல விட்டுட்ட..! இன்னைக்கு காலையில நான் முத்தம் கொடுத்தது கூட தெரியாம உன் கண்ணுக்குள்ள அத்தனை யோசனை..?”
“கண்ணை திறந்து வைச்சிருந்தது அவ்வளவு பெரிய குத்தமா..! நீங்க முத்தம் கொடுக்கும் போது கண்ணை மூடிக்கறதை விட.. திறந்து பார்க்கிறது எவ்வளவோ மேல் இல்லையா..!”
“உன் கண்ண மூடிகிட்டாலும் அந்த கண்ணுக்குள்ள நான்தான் தெரிவேன். ஆனா இன்னிக்கு.. உனக்குள்ள ஏதேதோ யோசனைகள். தேவையில்லாத இந்த குழப்பத்தினால நாம விலகி போயிடுவோமோன்னு பயமா இருக்குடி.”
லக்ஷ்மி திகைத்து நிமிர்ந்தாள்.
“என்னப்பா இப்படி சொல்றீங்க..?”
“அப்படித்தான்.. தேவையில்லாத இந்த மன உளைச்சல்களை நமக்கு நடுவுல விட்டுட்டு.. விலகி போயிட்டே இருக்கோம்..”
“அ.. அப்படியெல்லாம் இல்லை வாத்சா.!”
“வாழ்க்கையில கஷ்ட நஷ்டங்கள் வராம இருக்க போறதில்லை.. இனி என்ன பிரச்சனை வந்தாலும் எவ்வளவு பிரச்சனை வந்தாலும்.. நம்ம நெருக்கத்துக்கும் அன்யோனியத்துக்கும்.. எந்த பாதிப்பும் வந்துரக்கூடாது. எனக்கு இந்த உலகத்துல உன்னை விட எதுவும் இம்பார்ட்டண்ட் இல்ல லஷ்மி..”
முரட்டுத்தனமான அன்பில் கரைந்து உருகினாள் லஷ்மி.
“கொஞ்சம் எல்லாத்தையும் மறந்துட்டு என்னைப்பத்தி மட்டுமே யோசி சந்தா..!”
“யோசிக்க வையுங்க வாத்சா!” அவள் சிரித்தாள்.
“ஆஹான்.. அப்படியா..!” என்றபடி கண்களில் குறுகுறுப்போடு அவள் நெற்றி முட்டினான்.
இதழும் இதழும் சேர்ந்து கொள்ள.. திணற வைக்கும் காதலில் கொள்ளை கொண்டு.. அவனைத் தவிர மற்ற அனைத்தையும் மறக்க வைத்தான் வாத்சல்யன். வெகு நாட்களுக்குப் பிறகு ஒரு நிறைவான தாம்பத்தியத்தோடு இருவரும் கட்டியணைத்து முகத்தோடு முகம் அணைத்து விழிகளை மூடினர்.
‘பூர்வ ஜென்மமோ..! கருவாக ஜனனமெடுக்கும் மறு ஜென்மமோ விதியை நிர்ணயிக்கும் உரிமை இனி உங்களிடமே.!
ஒரே ஒரு முறை பிள்ளையின் உச்சந்தலை தொட்டு தம்பதிகள் இருவரும் ஒருமித்து மனதார கேட்கும் ஒரு வரத்தை இந்த பிரபஞ்சம் நிறைவேற்றும்.’
ஜாஜ்வல்யமான அந்த தெய்வீக அக்னி பிழம்பிலிருந்து வெளிப்பட்ட குரலைத் தொடர்ந்து..
ஹக்..! லஷ்மியும்.. வாத்சல்யனும் ஒரே நேரத்தில் திடுக்கிட்டு விழித்தனர்..
கிழக்கு வெளுத்திருந்தது.
தொடரும்.
error: Content is protected !!
திரும்பவும் கனவு ஆனா இந்த முறை சாய்ஸ் அவங்க கிட்ட குடுத்திருச்சு. அதிகாலை கனவு பலிக்கும் னு சொல்லுவாங்க
என்ன முடிவு எடுக்கப் போறாங்க இரண்டு பேரும் தெரியலயே.
மறுபடியும் ஒரு அசரிரி குரல் அதோட வாக்கு என்னதான் நடக்குது 😳😳😳
ரைட்டரே நாளுக்கு நாள் எபி க்கு எபி சுவாரஸ்யம் கூடிட்டே போகுது அடுத்து என்ன நடக்க போகுது ன்னு 🤩🤩🤩
ஏங்க அசரீரி சாய்ஸ் கொடுக்குறது கூட முடிவே எடுக்க முடியாத அளவுக்கா கொடுப்பீங்க.…என்னாலலாம் இந்த சிட்டுவேஷன ஹேண்டில் பண்ணவே முடியாது…🤧🤧🤧
மறுபடியும் கனவா, அதுவும் இருவருக்கும் ஒருமித்த கனவு, என்னடா இந்த குழப்பு குழப்புது அசரீரி
இந்த முறை சாய்ஸ் இவங்க கிட்ட கொடுத்துடுச்சே பிள்ளையின் தலையை தொட்டு இருவரும் மனதார கேட்டால் கேட்டதை பிரபஞ்சம் நிறைவேற்றுமாமே அடுத்து என்ன செய்வாங்க தெரியலையே🙄🙄🙄
அவங்க ஒரு குழந்தை கேட்டது குத்தமா
நீ என் டா அசரீரி வாய்ஸ் ல வந்து படுத்துற
நேத்து வரைக்கும் அப்படி தான் தருவேன் சொல்லிட்டு இன்னைக்கு சாய்ஸ் இஸ் யுவர்ன்னு சொல்லுறியேடா 🤔🤔🤔
Super and interesting sandha vathasalyan enna mudivu edukurnganu parpom ❤️❤️❤️❤️❤️❤️
Avangloda decision idhuvume
Avangalukana
Kastam dhan
Kuzhandhai vennum naa inga deepthi illanu ra oru periya kastam
Pillai vendam. Naa
Kuzhandhaikaga yengara indha rendu jeevanugalukum kastam
😟😟😟😟😟😟😟
என்ன கொடுமை இது 💔