Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

இடம் தருவாயா மனசுக்குள்ளே! Ep-11

மனசு 11

உதய்கிருஷ்ணா ஜான்வியிடம், “உனக்கு அம்மா இல்லடா…” என்று மெதுவாக குழந்தையிடம் எடுத்துக் கூற,

“குழந்தைக்கு என்ன புரியும்? அம்மா…அம்மா…” என அழ, எரிச்சலுடன் குழந்தையிடம் சத்தமிட்டான் உதய்கிருஷ்ணா.



Advertisement

“அம்மா அம்மான்னு கத்திட்டே இருக்காத. உனக்கு அம்மாவே வேண்டாம். அதான் நான் உயிரோட இருக்கேன்ல” கத்தி விட்டான் உதய்கிருஷ்ணா.

Advertisement

“உதய்” பாட்டி சத்தமிட, “அண்ணா…” விதார்த் அழைத்து, உதயை கண்டு பயந்த குழந்தையை தூக்கினான். பளாரென உதய்கிருஷ்ணா கன்னத்தில் அறைந்தார் சித்ரலேகா.

Advertisement

உதய்கிருஷ்ணாவிற்கு கோபம் அடங்கவில்லை. அவன் ஹனியுடன் மகிழ்ச்சியாக வாழும் வாழ்க்கையை கனவில் வாழ்ந்த அவன் கனவை கலைத்த அந்த பிரியங்கா மீது கட்டுக்கடங்கான கோபத்தை அடக்கியவனால் இன்று எக்காரணத்தை முன்னிட்டும் அடக்க முடியவில்லை.

Advertisement

காதலியாக இருந்தாலும் இன்பவேணியை அவன் குழந்தை அம்மா என அழைப்பது அவன் மனதை இளக வைக்க, அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதில் அவள் குடும்பத்தின் அமைதியும் அவன் திடமான மனதை மாற்றி விடுமோ என்ற எண்ணமும் சேர்ந்து கொள்ள…கோபத்தை குழந்தையிடம் காட்டி விட்டான்.

நீ ஏன்டி உதய அடிச்ச?

“தப்பெல்லாம் உங்க மேல வச்சிட்டு புள்ள மேல கோபப்பட்டா. என்னால ஏத்துக்க முடியல. அதான் அடிச்சிட்டேன். சாரில்லாம் சொல்ல முடியாது உதய்கிருஷ்ணா சார். நான் இப்பவே கிளம்புறேன்” சித்ரலேகா வேகவேகமாக வெளியே வந்தாள்.

குழந்தை அழுகை கூட, விதார்த்தும் பாட்டியும் செய்வதறியாது நின்றனர்.

“நில்லுங்க…நில்லுங்கக்கா…எம் மேல தான் தப்பு. நீங்க போகக் கூடாது” சித்ரலேகாவை தடுத்து நின்றான் உதய்கிருஷ்ணா.

சாயாலிக்கும் கோசலைக்கும் அவர்களின் குரல் கேட்டது.

நீங்க எனக்கு முதலாளி. செய்யக் கூடாத ஒன்ன நான் செஞ்சுட்டேன். அதனால போறேன். ஜான்விய பாத்துக்க வேற ஆள பாத்துக்கோங்க..

நீங்க பிளான் பண்ணி போற மாதிரி இருக்கே!

அமைதியா சித்ரா நிற்க, அவளை நெருங்கிய உதய்கிருஷ்ணா..யார் என்ன சொன்னாங்க? எங்க போகப் போறீங்க?

தன் அண்ணனை சித்ரலேகா அடித்தது விதார்த்திற்கு பிடிக்கவில்லை என்றாலும் அவரின் பாசமான குணத்திற்கு அவரை விட மனமில்லை..

அன்புக்கு ஏங்குவர்களுக்கு சிறு துளி அன்பு போதும் என்பார்களே! அது போல தான் சித்ரலேகா இவர்களின் கடினமான நேரத்தில் வந்தவர்.

“ஏன்டி, நான் கோபப்பட்டா போயிடுவியா?” பாட்டி கோபமாக கேட்க,

“இல்ல…நான் போறேன்” தயங்கினார்.

“அதான் கேக்குறேன். எங்க போவீங்க?” உதய்கிருஷ்ணா கேட்டுக் கொண்டிருக்க, இவர்களை பார்த்துக் கொண்டே காரில் இவர்களை கடந்து வீட்டிற்கு சென்றாள் இன்பவேணி.

அம்மா…அம்மா…அம்மா….ஜான்வி சத்தமிட, இன்பவேணி இவர்களை பார்த்து நின்று கொண்டிருந்தாள்.

குழந்தையை விதார்த்திடமிருந்து வாங்கிய சித்ரலேகா, சாயாலி வாயிலில் நிற்பதை கண்டு வரச் சொல்லி கையசைத்தாள்.

“அக்கா…” பல்லை கடித்தான் உதய்கிருஷ்ணா.

தயக்கமின்றி சாயாலி வர அவளிடம் குழந்தையை கொடுத்து, “உங்க வீட்ல கொஞ்ச நேரம் பாப்பாவ வச்சிரு…” குழந்தையை கொடுக்க, உதய்கிருஷ்ணா தடுக்க சென்றான். அவன் கையில் அடித்து, “நீ பாப்பாவ அழைச்சிட்டு போ…” என்று உதய்கிருஷ்ணா, விதார்த் இருவர் கையையும் பிடித்து “பாட்டி வாங்க” அழைத்து இழுத்து சென்றாள் நேராக உதய்கிருஷ்ணா அறைக்கு..

அவனுக்கு பதட்டமாக, எதுக்கு அண்ணா ரூமுக்கு அழைச்சிட்டு வந்துருக்கீங்க?

“கபோடு சாவி..???” உதய்கிருஷ்ணாவை பார்த்தாள்.

“இல்லை” தலையசைத்து, நான் தர மாட்டேன்…

தா…இல்ல கபோட உடைச்சிருவேன். விது கதவ உட..

உதய்கிருஷ்ணா அலமாரியை மறித்து நின்றான்.

“அண்ணா, என்ன வச்சிருக்க?” விதார்த் அவனை நெருங்கினான்.

விது, வராத…

இல்ல, நான் பாக்கணும்…

கையை கட்டி அவனை பார்த்தாள் சித்ரலேகா.

அண்ணா அறையிலிருக்கும் அலமாரி பத்தி இவங்களுக்கு எப்படி தெரியும்? அண்ணாவும் இவங்கள வீட்ட விட்டு போக விடல..அவன் எண்ணம் வேறு திசையில் பயணிக்க, உதயை நகர்த்த முடியாமல்…

அண்ணா…திற…

முடியாது..

இதுல என்ன தான் இருக்கு? விதார்த் சித்ரலேகாவை பார்க்க, உன்னோட அண்ணாவோட எதிர்காலம் என்றார்.

எதிர்காலமா? புரியாமல் தமையனை பார்த்து, என்ன அண்ணா வச்சிருக்க?

“உன்னோட அண்ணா மனசுல எத்தன நாளு இத வச்சிட்டு புழுங்கிட்டு இருக்கப் போறான்னு கேளு” மரியாதை சென்றது.

“அக்கா…” விதார்த் சினமுடன் அழைக்க,..

அவ தான் போயிட்டால்ல..விட வேண்டியது தான? காதலியுடன் கனவுலவே வாழ்றேன்னு எல்லாரும் வாழ்வாங்க. உங்க அண்ணன் இந்த அலமாரியோட வாழ்றான்…

அண்ணா…

உதய்கிருஷ்ணா கட்டுப்படுத்தியிருந்த கண்ணீர் வெளி வந்தது..

நகருண்ணா…சீற்றமுடன் கூறினான் விதார்த்.

“உதய் அலமாரில அந்த பொண்ணோட எப்படி வாழணும் நினைச்சு இருவரும் சேர்ந்து வாழ்வது போல புகைப்படம் வச்சிருக்கான்” அத விடு..என்ற சித்ரலேகா உதய்கிருஷ்ணாவை இழுத்து வெளியே செல்ல, பாட்டி அவர்கள் பின் சென்றார்.

விதார்த் அலமாரியை திறக்க முயன்று தோற்று இவர்களை பார்க்க வந்தான்.

இன்பவேணி, கோசலை, சாயாலியை அழைத்த சித்ரலேகா…உதய்கிருஷ்ணா மறுக்க மறுக்க அவனை அவர்கள் வீட்டின் முன் நிற்க வைத்தார்.

மூவரும் வந்து நிற்கவும், “பேசு…கேட்க வேண்டியத கேளு…எதுவா இருந்தாலும் நேரடியா பேசு..மனசுல போட்டு புழுங்காத…கோபம் இருந்தால் காட்டிரு..” சத்தமிட்டார்.

“ஏம்மா, என்ன பேசுற? நாங்க தான் கோபப்படணும்? ஆனா இவன் மூஞ்சிய திருப்பிக்கிறான். கண்டவங்க மாதிரி பேசுறான். நாங்க பட்ட கஷ்டம் எப்படி பட்டதுன்னு தெரியுமா?” சீற்றம் கொஞ்சமும் குறையாமல் மனதில் இருந்ததை பல வார்த்தைகள் கோர்த்து மேலும் கொட்டி தீர்த்தார் கோசலை.

கேளு…பேசுடா..உனக்காக தான் சொல்றேன்…

எனக்கு எதுவும் தேவையில்ல…

இருக்கு. இங்க இருக்கு என உதய்கிருஷ்ணா நெஞ்சை சுட்டிக் காட்டி சித்ரா பேச, அவ்விடம் நிற்க முடியாமல் உதய் நகர…

தன் அண்ணனை போக விடாமல் தடுத்து, ஆமா ஆன்ட்டி…எங்களால தான் பிரச்சனை? அண்ணா, இன்னு காதல் வீட்ல தெரியும் போது அண்ணா அதிர்ச்சியில இருந்தான். அவனால நகர முடியல…நாங்க உங்க பொண்ணுக்கும் உங்களுக்கும் வந்து நிக்கல. என்னால நிக்கவும் முடியல….தப்பு தான்…ஆனா கொஞ்சம் யோசிச்சி பாருங்களேன். அண்ணா ஏன் வெளிய வரல? உங்களுக்கு நடந்தது அவனுக்கு எப்படி தெரியும்? அவன் என்ன செஞ்சிட்டு இருந்தான்? என்ன செஞ்சிட்டு இருந்தான்? கோபமாக விதார்த் கேட்டான்.

விது…வா…உதய்கிருஷ்ணா அவனை தடுக்க..

“ஓ! உங்க மேல தப்பு. ஒத்துப்பீங்க…அன்று நடந்த அந்நிலைக்கு காரணம் வச்சிருக்கீங்களா? சரி அந்த காரணத்த வச்சி எனக்கு என்னோட அப்பாவ திருப்பி தாங்க?” இன்பவேணி குரல் ஏகத்துக்கும் உயர்ந்தது.

உதய்கிருஷ்ணா சித்ரலேகாவை பார்க்க, அவர் சலிக்காமல் அவனை தான் பார்த்தார்.

தப்பு தான்…தப்பு தான்…தப்பு தான் இன்னு. ஆனா உனக்கு வெளிய நடந்த எல்லாமே அண்ணாவுக்கு அவனோட அறைக்குள் நடந்தது.

சரி, அதனால நீங்க என்ன இழந்தீங்க? கோபமாகவும் திமிருடனும் கேட்டாள்.

நீ உன்னோட அப்பாவ இழந்த. ஆனா என்னோட அண்ணா உயிரோட இருந்து எல்லாத்தையும் இழந்துருக்கான். யாருக்கும் தெரியல. தனியா மனசுல போட்டு புழுங்கிட்டு இருந்திருக்கான்..

“வேண்டாம்கா…” சாயாலி இன்பவேணி கை பிடிக்க, வழிந்த கண்ணீரை துடைத்து நேராக உதய்கிருஷ்ணாவை நெருங்கி அவனது சட்டையை பிடித்தாள் இன்பவேணி.

“இன்னு…” விதார்த் அழைக்க, எல்லாரும் அவளை தடுக்க, “யாரும் பக்கத்துல வராதீங்க” கத்தினாள். எல்லாரும் கூடி விட்டனர்.

அன்னிக்கி இதே இடத்துல எல்லாரும் எப்படி கொச்சகொச்சயா பேசுனாங்க தெரியுமா? அப்படி என்ன அதிர்ச்சி உனக்கு? நாம காதலிக்கும் போதே எதிர்ப்பு வரும்னு தெரிஞ்சது தான? நம்மள பத்தி சொல்ல முடியாத பேச்சு…கேட்க முடியல…செத்துருலாம் போல இருந்துச்சி…உன்ன காதலிச்ச பாவத்துக்கு என்னோட பெத்தவங்களையும் நடுரோட்ல நிக்க வச்சுட்டேன்.. பாவம் அந்த மனுசன்…உடைஞ்சுட்டார்…நீ எதுக்கு வெளிய வரல? நைட் புல்லா நீ வருவியா வருவியான்னு பாத்துட்டே இருந்தேன். நீ வரல…யூ சீட்..யூ..இடியட்..

உனக்கு உன்னோட குடும்பத்தை விட என்னோட அப்பா கூடவே இருந்தாரேடா? ஏன்டா நீ வரல…என்னை ஏமாத்திட்ட. என்ன கொன்னுட்ட..அன்னிக்கே என்ன கொன்னுட்ட…அந்த சுட்டித்தனமாக சந்தோசமா எந்த கவலையும் இல்லாம சுத்திட்டு இருந்த இன்பவேணி அன்னிக்கே செத்துட்டா…செத்துட்டா…உதய்கிருஷ்ணாவை விட்டு வீதியில் அமர்ந்து கதறி அழுதாள்.

சாயாலியும் சித்ராவும் அவளை அணைத்துக் கொள்ள, “நிறுத்துறீயா?” கத்தினான் விதார்த்.

“விது நீ பேசாத. உதய் தான் பேசணும்” சித்ரா அதட்டினார். அவன் கண்டு கொள்ளவேயில்ல.

அத்தெருவினர் அவர்களையே வேடிக்கை பார்க்க, கடுப்பான விதார்த்..

“உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா?” என அவர்களிடம் கத்தி, சித்ராவையும் சாயாலியையும் தள்ளி இன்பவேணியை எழ வைத்து அவன் வீட்டிற்கு இழுத்து சென்றான்.

“விடுடா அவள” சித்ரா சத்தமிட, “விது என்ன பண்ற?” அவர்கள் பின்னே ஓடினான் உதய்கிருஷ்ணா. இரு வீட்டினரும் உதய்கிருஷ்ணா வீட்டிற்குள் சென்றனர்.

இன்பவேணியை அமர வைத்து, அன்றைய பிரச்சனையின் போது உதய்கிருஷ்ணாவின் மூச்சற்ற நிலை, அவனை அவன் குடும்பத்தினர் பேசிய அவதூறான பேச்சு, விதார்த் அவனை சுயநினைவுக்கு கொண்டு வந்தது. அதன் பின் நடந்த முற்றிய பேச்சினால் உதய்கிருஷ்ணா சூசைட் பண்ணது என சொல்லி அண்ணனை பார்க்க,

போதும் நிறுத்துறியா விது. இதுக்கு மேல ஏதாவது பேசுன? உதய்கிருஷ்ணா மிரட்ட,

அமைதியா இருந்திரு அண்ணா…இதுவரைக்கும் யார்டையும் பேசாம தான இருந்த? சித்ராக்கா அண்ணா வாய திறந்தான். நான் பட்டுவ எங்காவது தூக்கிட்டு போயிருவேன்…

உதய்கிருஷ்ணா சோர்வுடன் உணவு மேசையில் அமர்ந்து விட்டான்.

“ப்பா…” ஜான்வி தத்தி நடந்து தந்தையிடம் செல்ல, கண்ணீருடன் அவளை அணைத்துக் கொண்டான்.

உங்கள நாங்க தேடுனோம். எங்க போனீங்கன்னே தெரியல…நாள் செல்ல செல்ல அண்ணா குடிக்க ஆரம்பிச்சுட்டான். ஒரு வருசம் கம்பெனிக்கும் சரியாக செல்லாமல் குடிச்சிட்டே இருந்தான். இதையே காரணமா வச்சு அந்த கார்ல வரும் போது பிரியங்கா இடை புகுந்து அவ கழுத்துல அவளே தாலி கட்டிட்டு அண்ணா தான் போதையில கட்டிட்டான்னு சொல்லீட்டா. யாருமே அண்ணா பேச்ச நம்பல…எனக்குமே நீன்னு அவ கழுத்துல கட்டிட்டான்னு விட்டுட்டேன்.

ஒரு ரிசப்சன் கூட வைக்க கூடாது. அப்படின்னா பிரியங்கா இந்த வீட்ல இருக்கலாம்ன்னு அண்ணா உறுதியா சொன்னதுனால எந்த விழாவுமே வைக்கல. பிரியங்காவோட வாழ சம்மதிச்சிட்டான்னு எல்லாருக்கும் சந்தோசம். ஆனா…இதுவரை ஒரு நாள் கூட பிரியங்காவ என்னோட அண்ணா அவனறைக்குள்ள சேத்துக்கிட்டதேயில்ல…

நாலு வருசமாக என்ன செஞ்சும் அண்ணாவ அவளால வழிக்கு கொண்டு வர முடியல. நீ விட்டு போன துக்கத்துல குடிச்சதால தான் பிரியங்கா தன்னை பயன்படுத்திட்டான்னு குடிய விட்டுட்டான். நான் கூட அண்ணாவ பாக்கணும்னா அவனோட கம்பெனில தான் பாக்க முடியும். வீட்டுக்கு வரதவே நிறுத்திட்டான். அப்பா அடிக்க கூட செஞ்சாரு…கேக்கவேயில்லை. உழைப்பில் மட்டும் தான் அவன் கவனம் இருந்தது.

வெகு நாளுக்கு பின் வீட்டுக்கு வந்த அவனை பாக்க அறைக்கு பிரியங்கா போயிருக்கா. அண்ணாவுக்கும் அவளுக்கும் சண்டை தொடங்கியது. சும்மா அண்ணாவ சந்தேகப்பட்டு பேசிட்டே இருந்தா…அவள அடிச்சிட்டான். கோவிச்சிட்டு அவ அம்மா வீட்டுக்கு போயிட்டா…அப்புறம் அவளாவே வந்தா. நாங்க கூட சமாதானமாகிட்டாங்கன்னு நினைச் சோம். ஆனால் அன்று அண்ணா குடிக்கும் பால்ல டிரக்ஸ் கலந்து அவனோட சேர்ந்திருக்கா.. அண்ணா போதை தெளியவும் நடந்ததை அவனால ஏத்துக்க முடியல…கைய அறுத்துக்கிட்டான்…அப்பவும் பிரியங்கா உன்ன தான் இழுத்து பேசுனா. அன்னிக்கு அண்ணா சாகட்டும்னு விட்டுட்டாங்க கலங்கினான் விதார்த்.

பைரவன் அண்ணாவுக்கு உடனே கால் பண்ணி சொல்லி, நான் அண்ணனை ஹாஸ்பிட்டல்ல சேர்த்தேன். ட்ரீட்மென்ட் முடிஞ்சபின் அண்ணாவ பாக்க எல்லாரும் வந்தாங்க. ஆனா திட்டு திட்டு திட்டு தா…என்னாலவே தாங்க முடியல..அண்ணா பேசவேயில்லை. என்ட கூட…கண்ணீர் வந்தது விதார்த்திற்கு.

பிரியங்கா எங்க வீட்ல அடிக்கடி அண்ணாவ சந்தேகப்பட்டு ஆபிஸ் வரை பிரச்சனை சென்று, அவன் மீண்டும் கோபத்துல அவள அடிக்க, குடும்பம் மொத்தமும் அண்ணாவுக்கு எதிராக நின்றது. அந்த பிரியங்கா அப்படி நடிச்சா? இதுல அவ கர்ப்பமா இருக்கான்னு நியூஸ் வரவும் எல்லாரும் சந்தோசப்பட்டாங்க. இன்னும் என்ன செய்வாங்களோன்னு எனக்கு தான் பயமா இருந்தது. ஓரளவு சமாளிச்சான்..கடைசி பாப்பா பிறந்து அதன் பின்னும் அவ உன்ன பத்தி பேச…அண்ணா ஆத்திரம் தாங்காமல் டிவோர்ஸ் பத்தி பேச, விபத்தாகி அவ செத்துட்டா…அண்ணா சீரியசா இருந்தான். ரெண்டு மாசமா ஹாஸ்பிட்டல்ல தான் இருந்தான். பாப்பாவ பாக்கவும் தான் இப்ப ஓ.கே என்று விதார்த் நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தான்.

“கிருஷ் இவ்வளவு கஷ்டப்பட்டானா? ஏன் எங்களுக்கு மட்டும் இந்த சோதனை?” மனதினுள் எழுந்த கேள்வியுடன் கண்ணீருடன் அவனை ஏறிட்டாள் இன்பவேணி. தனியாக அழுகுரல் ஒன்று கேட்க, எல்லாரும் பாட்டியை பார்த்தனர்.

“பாட்டி அறைக்கு போங்க” உதய்கிருஷ்ணா அதட்ட,

“நாங்களும் கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கணும்” கோசலை பாட்டி அருகே வர, பல்லை கடித்தான் உதய்கிருஷ்ணா.

“எங்க வீட்ல அவ்வளவு பேசியும் நீங்க எப்படிம்மா இங்க இருக்க முடியும்? எல்லாம் விதி தான்…” மேலும் அழுதார் பாட்டி.

“அழுறத நிறுத்தீட்டு எல்லாரும் வேலைய பாருங்க..” உதய்கிருஷ்ணா குழந்தையுடன் மாடி ஏற காலை எடுத்து வைக்க, அவன் கரம் பற்றினாள் இன்பவேணி.

உதய்கிருஷ்ணா அவளை முறைக்க, கிருஷ்…நான் இப்படி ஆகும்னு நினைக்கல..

“முடிஞ்சது முடிஞ்சது தான். யாராலையும் மாத்த முடியாது…நீங்க எல்லாரும் கிளம்பலாம்” அவள் கையை தட்டி விட்டான்.

கண்ணீரை அழுந்த துடைத்து, முடியாது….போக மாட்டேன். என்னால மாத்த முடியும் என்றாள் திமிறாக.

கனல் கக்கும் விழிகளால் அவளை எறித்தவன், மரியாதையா போயிடு..

மரியாதையா? அது தான் என்னிக்கோ போயிடுச்சே! இப்ப என்ன நீ என்னை வீட்டை விட்டு வெளிய தள்ளப் போறீயா? எகத்தாளமாக கேட்டாள்.

ஹனி என கூற வந்தவன், மிஸ் இன்பவேணி…வெளிய போங்க…

ஊகூம் வாய்ப்பேயில்லை மிஸ்டர் உதய்கிருஷ்ணா. உங்க பொண்டாட்டியா தான் இனி வெளிய போவேன்…

சித்ராக்கா…வெளிய அனுப்புங்க…கத்தினான்.

முடியாது தம்பி. எனக்கு என்னை காப்பாற்றிய உதய்கிருஷ்ணாவின் வாழ்க்கை முக்கியம். நான் வெளிய செல்ல நினைத்தது. ஊரார் நம்மை தப்பா பேசுறாங்கம்னு. இனி அது நடக்காமலிருக்க எனக்கும் ஒரு வாய்ப்பு இருக்கு…

“அக்கா….” உதய்கிருஷ்ணா கத்த, எல்லாரும் சித்ரலேகாவையும் இன்பவேணியையும் பார்த்தனர்.

சாரி தம்பி…

கோபமாக உதய்கிருஷ்ணா செல்ல,

“கிருஷ்…” வேகமாக படியில் ஏறி, “சீக்கிரமே நம்ம மேரேஜூக்கு தயாரா இரு” என்று அவனை நெருங்கி கூற, வெகு வருடத்தின் பின் அவளை நெருக்கமாக பார்த்த உதய்கிருஷ்ணா அப்படியே நிற்க, நச்சென அவன் கன்னத்தில் முத்தமிட்டு குழந்தையை தூக்கி கீழே ஓடி வந்தாள்.

ஏய்ய்ய்ய்ய்…உதய்கிருஷ்ணா கர்ஜிக்க, பலத்த கை தட்டும் ஓசை கேட்டு அனைவரும் வாயிலை பார்த்தனர்.

அண்ணா, அண்ணீ…குழந்தையை வைத்து அதிர்ந்து இன்பவேணி நிற்க, தோரணையுடன் கைகட்டி வாயிலில் நின்றிருந்த உற்ற தோழன் கார்த்திக்கேயனை கண்டு உதய்கிருஷ்ணா கீழிறங்கி வந்தான்.

“மாமூ….சும்மா இரு” கார்த்திகேயன் மனைவி மகாலட்சுமி தடுக்க தடுக்க, கேளாதவனாக நண்பனை சரட்டுமாரியாக அடித்தான்.

கார்த்திக்…என்ன பண்ற? கோசலை தடுக்க..

“விடுங்க சித்தி. ராஸ்கல் இவன கொன்னுடுறேன்” மேலும் அடிக்க பாய்ந்தான். எல்லாரும் அவனை பிடித்து தடுத்தனர்.

வேணி, உங்க காதல் விசயம் ஏற்கனவே சித்தப்பாவுக்கு தெரியும் என்றான்.

அனைவரும் அதிர, “என்ன சொல்றீங்கண்ணா?” விதார்த் கேட்டான்.

“ஆமா, அவருக்கு தெரியும். நேரம் வரட்டும்னு இருந்தார். அதுக்குள்ள என்னன்னமோ நடந்துருச்சு” முந்தானையால் கண்ணீரை துடைத்தார் கோசலை.

அம்மா, அப்பாவுக்கு தெரியுமா? இன்பவேணி தாயை நெருங்க,

ம்ம்! எனக்கு தான் தெரியாது. அவர் இறந்ததுக்கு காரணம் உன்னை பற்றிய கவலை மட்டுமல்ல அவர் கம்பெனிய கவர்மென்ட் சீஸ் பண்ணீட்டாங்க. உங்ககிட்ட தான் வித்துட்டதா பொய் சொல்லீட்டார்…கோசலை அழுதார்.

என்ட..அம்மா..அப்பா…திணறினாள் இன்பவேணி.

விசுவமூர்த்திக்கு அவர் கம்பெனியை உயர்த்த பட்ட பாடு தான் எல்லாருக்கும் தெரியுமே! இன்பவேணி உதயை பார்க்க, அவன் அமைதியாக இருந்தான்.

            “கண்ணீர் வேண்டாம்

            காயங்கள் வேண்டாம்

          ஆறு மாதப் பிள்ளை போல

             மடியிலே மடியிலே

               உறங்கி விடு”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!