உளமாற உனதாகிறேன் – 1(2)
உளமாற உனதாகிறேன் – 1(2)
“ஏய் என்னடி நேத்தே உன் தங்கச்சி வந்துட்டான்னு சொன்ன… இன்னும் வரலைன்னு உங்க அப்பா சொல்றாரு… என்ன பொய் பித்தலாட்டம் பண்ற நீயி…” என்று எகிறி குதிக்க…
Advertisement
“ஐய்யோ மாப்பிள்ளை அதை பத்தி அப்புறம் பேசுவோம்… இப்போ இன்னும் சின்னவளை காணோமே” என்று நவச்சிவாயம் பதட்டபட அவரின் பதட்டம் இவனுக்கு மெல்ல அவலானது… அதை வைத்து ஒரு பிரசங்கமே நடத்த தயாரானான்.
“பொம்பிள்ளை பிள்ளையை தனியா வரவிட்டு இப்போ பதட்டபட்டா ஆச்சா… இந்த விஷயம் முன்னாடியே தெரிஞ்சிருந்தா என் தம்பியை சென்னைக்கு அனுப்பி இருப்பேன்…” என்று மனைவியை முறைத்தபடியே பேச…
Advertisement
Advertisement
‘ம்க்கும் உன் தம்பி கூட வர விருப்பம் இல்லாமதான்யா அவளே வரேன்னு என் அப்பாவை சரிகட்டுன்னா’ என்று மனதுக்குள் நொடித்து கொண்டாலும்…
“இல்லைங்க எனக்கே இங்க வந்த அப்புறம் தாங்க அவ நேத்து வரலன்னு தெரியும்… தெரிஞ்சிருந்த உங்ககிட்ட சொல்லாம இருப்பேனா”
Advertisement
“தெரிஞ்சிருந்தாலும் மறைச்சிருப்படி நீயி… இப்படி எங்க வாயை பாத்துட்டு நிக்காம போய் அவ ஊரு வந்துட்டாலான்னு போனை போட்டு கேளு… நான் என் தம்பியை பஸ் ஸ்டேன்ட்க்கு அனுப்பி விசாரிக்க சொல்றேன்” என்றிட திருதிருவென முழித்தாள் பிரபா.
“ஏய் எதுக்கு இப்புடி திருதிருன்னு முழிச்சிட்டு இருக்க… போய் போனை போடுடி”
“இல்லைங்க இங்கிருந்து ரெண்டு எட்டு தான் பஸ்ஸ்டேன்ட் அவளே வந்துடுவா… இதுக்கு எதுக்கு உங்க தம்பிக்கு வேலை வைக்கனும்”
“ஏய் வாய் மூடின்னு உன் தங்கச்சிக்கு போன் பண்ணுடி… என்ன செய்யனும்னு நீ சொல்லாத” என்று அதட்டிட உள் சென்று தன் செல்பேசியில் தங்கைக்கு அழைத்தாள் பிரபா. அழைப்பு சென்று கொண்டே இருந்ததே தவிர அதை அவள் எடுத்தபாடில்லை.
••••••••••••••
“நான் ஆணையிட்டால்
அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப்படமாட்டார்…
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்...
கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்...”
என்று செல்பேசியில் பாடல் ஒலித்துக் கொண்டிருக்க அதை கண்கள் மூடி ரசித்து கொண்டு இருந்தவனின் கரங்களோ அவன் தலையை தாங்கி கொண்டிருந்தது. போட்டிருந்த காக்கி சட்டை அவன் உடலை ஒட்டியிருப்பதிலே அறிந்து கொள்ள இயலும் தன் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருப்பவன் என்று… அணிந்திருந்த சட்டையில் இடம்பெற்றிருந்த நேம் பேட்சில் அழகாக மின்னியது வாசு கீர்த்தனன்… இன்ஸ்பெக்டர்… என்று
“அட அட பழைய பாட்டுன்னா… பழைய பாட்டுத்தான்யா… என்னாமா எழுதியிருக்காங்க” என்று சிலாகித்து கொண்டிருந்தவனை கலைத்தது ஒரு குரல்…
“சார் இந்தாங்க டீ” என்று பவ்யமாய் டேபிள் மீது டீயை வைத்தார் ஏட்டு வேலு
“அட ஏலக்காய் போட்ட டீயா… வாசனையே சும்மா தூக்கலா இருக்கு” என்றபடி கை தூக்கி சோம்பலாய் உடலை வளைத்தவன்… துளி துளியாய் அதனை பருகினான்.
“என்ன வேலு அண்ணே நைட்டு ஒன்பது மணியாச்சா… சரி வாங்க ஒரு ரவுண்ட்ஸ் போவோம்”
“அது வந்து… சார் நாளைக்கு உங்களுக்கு” என்று பேச வந்தவரை கை நீட்டி தடுத்தவன்...
“போய் ஜீப் எடுங்க வேலு” என்றவனின் கட்டளையில் வெளியே செல்ல முயன்றவரின் பார்வை தானாய் லாக்கப் பக்கம் செல்ல அங்கோ இரண்டு இளைஞர்கள் வயிற்றில் கைவைத்தபடி சுருண்டு படுத்திருந்தனர். ஏனெனில் வாசுவின் டீரிட்மெண்ட் அப்படி!
ஜீப்பை செலுத்தி கொண்டிருந்த வேலுவின் யோசனை இப்படியாக தான் இருந்தது!
‘இவன் எல்லாம் மனுஷனா… நாளைக்கு கல்யாணம்… பொண்ணு கூட கடலை போடுடான்னா… என்னை கூட்டிட்டு சுத்துறான்’
“என்ன வேலுண்ணா… இவன் எல்லாம் மனுஷனே இல்லைன்னு தானே நினைக்குறிங்க” என்றதும் ஜெர்க்கானவர்…
“அய்யோ இல்ல சார்” என்று வேகமாக மறுத்ததும்…
“சரி அதைவிடுங்க… கொஞ்சம் முன்னாடி பாருங்க…” என்றதும் அங்கு ஒரு பெண்ணிடம் வாலிபன் ஒருவன் வம்பிழுத்து கொண்டிருந்தான்.
‘அடப்பாவமே… போயும் போயும் இவரு கண்ணுலயா மாட்டனும்… இப்போதான் இவ் டீசிங் கேஷூல ரெண்டு பேரை வெளுத்தாரு… அடுத்து இவனா’ என்று மனதில் நினைத்து கொண்டிருக்க…
“அப்புறம் மைண்ட் வாய்ஸ் ஓட்டுவிங்க… இப்போ அங்க வண்டியை நிறுத்துங்க” என்ற வாசுவின் வார்த்தையில் தானாய் வண்டியை முன்னே செலுத்தினார் வேலு.
“வேண்டாம் அர்ஜூன்… இவ்ளோ தூரம் வந்த எனக்கு என் வீட்டுக்கு போக வழித் தெரியும்... நீ வழியை விடு” என்றாள் கண்ணுக்கினியாள். பேச்சில் எரிச்சல் மண்டி இருந்தது.
“நேத்தே நீ வந்துட்டேன்னு எங்க அண்ணா சொன்னாங்க… பார்த்தா இன்னைக்கு வர… என்ன விஷயம்”
“ஹம்ம்… உன்கூட வரப்பிடிக்கல அதுதான் விஷயம்… போதுமா… இப்போ வழியை விடு” என்றவளின் பேச்சில் அதுவரை பொறுமையாய் இருந்தவன்…
“என்னடி ரொம்ப தான் பண்ற… எப்படியும் நான் தானே உன்னை கட்டிக்க போறவன்… உனக்கு பிடிக்கலனாலும் எங்கண்ணனை மீறி யாரும் எதுவும் பண்ண முடியாது… அதை மனசுல வைச்சிட்டு இப்போ என்கூட வா” என்றவனின் கரம் அவளை தீண்டுவதற்கு முன்பே வாசுவிடம் சிக்கியிருந்தது.
காக்கி சட்டையை கண்டதும் கொஞ்சம் அதிர்ந்து தான் போனான் அர்ஜூன். அவனை போன்றே கண்ணுக்கியாளும் அதிர்ந்து தான் போனாள். ஆனால் அதன் காரணம் வேறு. தன்னை பார்க்கும் அவனின் பாவனையில் தான் யார் என்று அவன் அறியவில்லை என்பதை உணர்ந்தவள்… அடுத்தடுத்து அவன் செயலில் அவள் உணர்ந்தது ஒன்று தான்…
‘இவரையா ஏட்டு ஏகாம்பரம்னு நினைச்சோம்… இவரு ஏட்டு ஏகாம்பரம் இல்ல… காண்டாமிருகம்’ என்று மனதில் அலறிக் கொண்டிருக்க வாசுவோ சிறப்பாக தன் பணியை செய்து முடித்திருந்தான்.
தொடரும்…

Superb start 😍😍😍😍