Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அசுரனின் தாலாட்டு இவள் 💜

அசுரனின் தாலாட்டு இவள் 💜 (அறிமுகம்)

“நீங்க மட்டும் என்ன தெய்வ பிறவியா நீங்களும் சாதாரண மாமியார் தானே … அது தான் யார் யாரோ சொல்றதை நம்பி என் அம்முவை நான் இல்லாத நேரமா பார்த்து வீட்டை விட்டு அனுப்பி இருக்கீங்க…. என் அம்மு மட்டும் என்கிட்ட வரட்டும்… அதுக்கு அப்பறம் எல்லாரையும் பார்த்துக்கறேன்….” என்று கோவமாக கத்தி விட்டு தன் ஜீப்பை எடுத்து கொண்டு அங்கிருந்து வேகமாக தன் காதல் மனைவியை தேடி கிளம்பினான் கௌதம் வாசுதேவ் சக்ரவர்த்தி….

**********************************************************

“எப்படிங்க அவளோ ஈஸியா மன்னிக்க சொல்றிங்க… உங்க பெரிய பொண்ணு பண்ணது சின்ன விஷயமா… சொந்த தங்கச்சியை கடத்த சொல்லி இருக்கா… கொலை பண்ண சொல்லி இருக்கா அதை எப்படிங்க மனசாட்சி இல்லாம மன்னிக்க சொல்றிங்க… ஒரு நல்ல அம்மாவா இருந்தா உங்க பெரிய பொண்ணை போலீஸ்ல ஒப்படைச்சு இருக்கணும்… நீங்க இங்க வந்து மன்னிப்பு கேட்குறீங்க… சைந்தவி உங்க சொந்த பொண்ணு தானு… ஏங்க அவளை இப்படி வெறுத்து ஒதுக்குறிங்க… ஆனா உங்களை திட்டவும் முடியல… தயவு செஞ்சு கிளம்பிடுங்க… சைந்தவி இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா சரி ஆகிட்டு வரா..அவ வரதுக்குள்ள கிளம்பிடுங்க… அவளே கொஞ்சம் கொஞ்சமா மாறுவா… அப்போ நாங்க மன்னிக்குறோம்… இப்போ கிளம்பிடுங்க..”



Advertisement

***********************************************************

சஹானா தான் வைத்து இருந்த துப்பாக்கியால் சைந்தவியை சுட்டு இருந்தாள்…. வாசு “அம்மு” என்ற அலறலுடன் அவளை தாங்கி இருந்தான்… வேகமாக ஓட பார்த்த சஹானாவை தன் கையில் இருந்த துப்பாக்கியால் பாவம் பார்க்காமல் சுட்டு இருந்தான்… சைந்தவி “மாமா” என்று கூறிக்கொண்டே மயங்கி இருந்தாள்…. வாசு சைந்தவியை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு வேகமாக சென்றான்….

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!