Skip to content
Post Views: 2,182
“எல்லாம் எடுத்து வச்சாச்சு. மேடம் நீங்க வாங்க” என்று அழைத்தான் மாதேஷ்.
புது நிதி வருடக் கணக்கு ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கும் போது அவர்கள் ஆபிசில் அவர்கள் எப்போதும் செய்யும் பூஜை!
ரேஷ்மாவின் ஸ்ரீமதி பொட்டிக் ஊழியர்களும் கூட அதற்கு வந்திருந்தார்கள்.
மதுராவுக்கு ரேவந்த் நடந்து கொண்ட முறையால் வருத்தம் என்றாலும் ரேஷ்மாவுக்காக
Advertisement
அவள் சொல்லியிருந்தபடி அலுவலகம் வந்து பூஜைக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டிருந்தாள் வழக்கம் போலவே!
ஆனால் ரேஷ்மாவால் தான், மதுராவுக்கு அளித்திருந்த உறுதி மொழியைக் காப்பாற்ற முடியாதபடிக்கு
பிடிவாதமாய் ரேவந்த் அந்த பூஜைக்கு வருவேன் என்று அடம்பிடித்தான்!
Advertisement
வேறு வழியில்லாமல் ரேஷ்மாவும் சம்மதித்து விட்டு மதுராவிடம் சாரியும் கேட்டு விட்டாள்!
Advertisement
“அய்யோ.. பரவாயில்ல மேம்.” என்றே சொல்லி விட்டாள் மதுராவும்!
நாம மென்டலி ஸ்டாராங்கா இருந்தா அவனுக்கு ஏன் பயப்படனும்?
ஓடி ஒளிஞ்சு இருக்கணும்?
Advertisement
அவன் பக்கத்திலேயே நின்றாலும் நாம சலனப்படாம இருக்கணும் அது தான் கெத்து என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டு விட்டாள்!
ஓ..அப்படியா என்று அவள் மனசாட்சி ஒருபுறம் கேலியும் செய்தது தான்!
மனசோ , உள்ளுக்குள் ஒரு மூலையில் ஒரு பக்கம், அவன் பக்கத்தில் இருந்தா நல்லா தான் இருக்கும் என்று மானம் கெட்டத் தனமாய் ஆசையும் பட்டது!
இன்னொரு மனசோ அவன் இருக்கும் இடத்தில் இருக்காதே விலகிப் போ என்றும் சொன்னது!
இரு மனசாக அவள் அள்ளாடிக் கொண்டு இருந்தாள் உள்ளுக்குள்!
மாதேஷ் போய் சொன்னதும் ரேஷ்மாவும் கூடவே ரேவந்தும் மதுராவின் கேபினுக்குள் வந்தார்கள்!
அங்கே தான் சுவாமிப் படங்கள் வைக்கப்பட்டு விளகேற்றப்பட்டு பூஜை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
உள்ளே வந்தவன் நேரே போய் மதுராவை உரசியபடி தான் நின்றான் ரேவந்த்!
அவளால் நகர்ந்து போக முடியாதபடிக்கு எல்லோரும் நெருக்கமாகவே நின்று கொண்டிருக்க,
கேபின் கதவு திறந்து வைக்கப்பட்டு வெளியிலும் ஆட்கள் நின்று கொண்டிருந்ததால், அவளால் அவனைத் தாண்டிக் கொண்டும் வெளியே செல்ல முடியவில்லை!
அவள் முழங்கையோடு தன் கைகள் உரச நின்று கொண்டிருந்தவனின் உடலில் இருந்து வந்த பெர்ஃபுயும் வாசனை வேறு அவளை பாடாய்படுத்தியது!
அவன் கைகளோடு கைக் கோர்த்துக் கொண்டு அவன் தோளில் சாய்ந்து கொள்ள பரபரத்த மனதை மிகவும் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு இருந்தாள் மதுரா!
ச்சே.. என்ன இது? நாம இவ்வளவு தானா?
அய்யோ! மனசே.. அவன் கிட்ட போகாதேயேன்.. நான் என்னைப் பத்தி ரொம்ப பெரிசா தான் நினச்சுட்டு இருந்திருக்கிறேனா?
ஏன் இப்படி எல்லாம் அலை பாயுது?
திரும்ப திரும்ப அவன் கிட்டயே போய் போய் நிக்குதே, இந்த மானங்கெட்ட மனசு!
உள்ளுக்குள் தவித்துக் கொண்டு வெளியே அமைதியாக நின்று கொண்டிருந்தாள் மதுரா!
இவள் மனத்தைப் பாடாய் படுத்திக் கொண்டிருப்பது தெரியாமல் அவனோ அடிக்கடி தன் வாட்சை பார்த்துக் கொண்டு, யாருக்கோ போன் பண்ணிக் கொண்டு அவர்கள் வருகைக்குக் காத்த்திருந்தான்!
“யாரை ரேவந்த் தேடிட்டு இருக்கே? யாரும் வரணுமா? வெயிட் பண்ணனுமா?”
“ம்ம். ஆமா..என்னோட லக்கி ஏஞ்சல் வரேன்னு சொல்லியிருக்கா!
அவளுக்கு தான் காத்திட்டு இருக்கேன்! ஆன் த வேன்னு டெக்ஸ்ட் பண்ணியிருக்கா! வந்திடுவா..” என்றான் முகமெல்லாம் சந்தோசமாக!
மதுரா முகம் கறுத்தாள்!
யார் அது அவ்வளவு முக்கியமான ஆள் அவனுக்கு?
லக்கி ஏஞ்சலாமே?
அப்படிய எல்லாம் ஒருத்திய நினைக்கிறவன், என்னை ஏன்டா தொட்டு தூக்கின, ஹக் பண்ணின? அப்ப நான் யாரு உனக்கு? அவள் உள்ளுக்குள் அவனைத் திட்டினாள்.
அவன் ஆம்பளை. அதுவும் பணக்காரன்! அவனுக்கு நிறைய கேர்ள் பிரண்ட்ஸ் இருப்பாங்க. அதுல யாராவது ஒருத்தியா இருக்கும்!
ஏன் லவ்வரா கூட இருக்கலாம்! இல்ல பியான்சியா கூட இருக்கலாம்!
ரேஷ்மா அவங்க வீட்டு விசயம் எல்லாத்தையும் நம்ம கிட்ட சொல்ல தான் வேணுமின்னு என்ன ஒரு கட்டாயம் இருக்கு?
அவனுக்கு நீ பத்தோட பதினொன்னு! அதான் அவன் ஹக் பண்ணினப்போ நகராம நின்னுட்டு இருந்தியே வெக்கமே இல்லாம?
இதோ இப்ப கூட அவன் தோளில் சாஞ்சுக்க தானே ஆசைப்பட்டுட்டு இருக்க?
அவள் உள்ளுக்குள் பொருமிக்கொண்டு இருந்த போது,
“ரேஷ்மா, அவ வந்துட்டா.. நான் போய் ரிசீவ் பண்ணி கூட்டிட்டு வரேன்” என்று சொல்லி வெளியே போனவன் அழைத்து வந்தது லக்கியை!
லக்கியைக் கண்டதும் மதுரா அதிர்ந்தே போனாள்!
ஓ. அப்போ.. லக்கியோட அந்த ரேவ் டுயுட்டும் கடைசியில் ஊட்டி தானா?
அப்போ அவள் நேற்று பர்மிசன் வாங்கியது இங்கே வர தானா?
ரேவந்த் நினைவாக மதுரா வைத்திருந்த பொருட்களை எல்லாம் குப்பையில் போட்டு விட்டதாக லக்கி சொன்னவுடன் தாங்க முடியாத ஆற்றாமையில் லக்கியை அடித்து விட்ட மதுரா, கொஞ்ச நேரம் சென்றே நிதானத்துக்கு வந்து,
பின் தான் லக்கியை அவள் அடித்தே விட்டது நினைவுக்கு வந்து வருந்தினாள்.
அவள் பிறந்த தினத்தில் இருந்து அப்போது வரை லக்கியை அவள் அடித்ததே இல்லை!
யாரையும் அடிக்க விட்டதும் இல்லை!
அப்படிப்பட்டவளைப் போய் தான் அடித்து விட்டதுக்காக மனம் வருந்தி, அவளைக் காண சென்றவள், அழுதுக் கொண்டே படுத்துக் கொண்டிருந்த தங்கையை!
அவளைப் பார்த்ததும் இன்னும் அதிகமாகவே அழுதாள் லக்கி!
(அத்தனையும் நடிப்பா கோபால்!)
அவளை சமாதானம் செய்ய பெரும்பாடு பட்டாள் மதுரா.
அப்போது தான் அவள், “அக்காவ மன்னிச்சுடுடா.. இனி இப்படி பண்ண மாட்டேன். சாரி… நீ என்ன சொன்னாலும் நான் கேக்குறேன்” என்று சொல்லி தாஜா செய்ய முயல, சந்தர்ப்பத்தை விடுவாளா லக்கி, உடனே,
“அப்ப.. நீ நான் ரேவ் டுயூட் கூட அவர் ஆபிஸ் பூஜைக்கு போக பர்மிசன் கொடுக்கணும்”. என்றாள்.
“இது என்ன புது பழக்கம் லக்கி? ஏதோ க்ளப்ல விளையாடுற.. சரி.. என்னிக்காவது அவர் வண்டியில வர சரி..
இப்போ ஆபிஸ்க்கு எல்லாம் கூட போகணுமா?
அப்புறம் வெளியே எங்கியாச்சும் கூப்பிட்டுக் கொண்டே இருக்க போறாரு? அதெல்லாம் வேண்டாம்” என்றே சொல்லி விட்டாள் மதுரா.
“சரி.. எங்கயும் போகல! இப்படியே இங்கயே அடைஞ்சு கிடக்குறேன். போதுமா?” அழுது மாய்மாலம் பண்ணினாள் லக்கி!
அவள் அழுவதைப் பொறுக்க முடியாமல்,
“சரி.. என்ன இப்போ.. கட்டாயம் போயே ஆகணுமா? பார்த்து ஜாக்கிரதையா பழகனும் லக்கிம்மா.
இந்த உலகம் பொல்லாதது!
நீ சின்ன பிள்ளை!” என்று மதுரா பேச தொடங்கையிலேயே தடுத்து,
“நான் நாளைக்கு ரேவ் கூட போகணும். விடுவியா மாட்டியா?” என்றாள் லக்கி!
“சரி போ.. பத்திரமா போயிட்டு வா.. இனி மேல் இப்படி போக விட மாட்டேன்! இது தான் லாஸ்ட்” என்று நிபந்தனையுடன் அனுமதி தந்திருந்தாள் மதுரா!
ஆனால் இப்போது, அவள் ஆபிஸுக்கே வருவாள் என்று கனவிலும் நினைக்க வில்லை அவள்!
ஆனால் நடந்து விட்டதே!
அவள் லக்கியை அழைக்கும் முன்னரே,
“ஹாய் எவ்ரிபடி.. இது லக்கி.. என்னோட லக்கி ஏஞ்சல்! என்னோட பிக்கில் பால் கோச்.
இப்ப எனக்கு குரு.. பல விசயத்தில்!” என்று சொல்லி குறும்பாக சிரித்து லக்கியைப் பார்த்து கண்ணடித்து விட்டு, அனைவருக்கும் அவளை அறிமுகப்படுத்தினான் ரேவந்த்.
அவன் கண்ணடித்து சொன்னதை மதுராவும் பார்த்து விட்டாள்.
“வெல்கம் மேடம்” என்று மற்றவர்கள் சொல்ல,
“அய்யோ மேடம்னு எல்லாம் சொல்லி என்னை பெரிய ஆள் ஆக்கிடாதீங்க. நான் உங்க மதுரா மேமோட சிஸ்டர் தான்” என்றாள் லக்கியும் சிரித்துக் கொண்டே!
மதுரா ஒன்றும் சொல்லாமல் மேற்கொண்டு பூஜை வேலையில் ஈடுபட்டாள்.
ரேஷ்மாவுக்கு கைக்கு தோதாக பூஜை பொருட்களை எடுத்துக் கொடுக்க தொடங்கினாள்!
“ரேஷ்மா, உன்னோட பொட்டிக்கில் முதல் சேல்ஸ் லக்கி கையால நடக்கட்டும்.
நான் பே பண்றேன். அவளுக்கு ஒரு குர்தி செட் பில் போட சொல்லு” என்று சொல்லி அவன் வாலட்டில் இருந்து பணம் எடுத்துக் கொடுத்தான்.
“அதெல்லாம் வேணாம் டுயுட்” என்ற லக்கியை அடக்கியபடி பில் போட்டான்.
லக்கி கொஞ்சம் பயத்துடன் அக்காவைப் பார்த்தாள்.
மதுராவின் மனமோ பொருமிக்கொண்டு இருந்தது!
அய்யோ லக்கி.. சின்னப் பெண் அவள்! இவன் சிரித்துப் பேசுவதை எல்லாம் நிஜம் என்று நினைத்துக் கொண்டு ஏதாவது ஆசையை வளர்த்துக் கொண்டு விடப் போகிறாள் என்ற பயம் மேலோங்கியது!
அவள் பயத்துக்கும் காரணம் இருந்தது!
அது ரேவந்தின் வசீகரத் தோற்றம்!
அவனது ஆளுமையான குரல்!
எல்லோருடமும் இலகுவான பேச்சு!
இந்த ஆபிஸுக்கே இன்று தான் வந்திருக்கிறான்.
ஆனால் இங்கு இருக்கும் எல்லோரும் அவனிடம் வலிந்து போய் பேசினார்கள்!
அக்கவுண்ட்ஸ் டிப்பார்ட்மென்ட் மெர்சி மேடமில் ஆரம்பித்து, ரிசப்சனிஸ்ட் ரேவதி, ஹவுஸ் கீப்பிங் கவிதா வரை!
மெர்சி அவரது வேலை விவரங்களை எல்லாம் அவனுக்கு எடுத்து சொல்ல,
ரேவதியோ, ரிசப்சனில் வைத்திருக்கும் ஃபெங்சூயி – சீன வாஸ்து பொம்மைகள் பற்றி சொல்லி அவனிடம் பேசிக் கொண்டிருந்தாள்!
இப்படி ஓவ்வொருவராக, அவரவர் வேலை விபரங்களை எல்லாம் அவனை அழைத்து அழைத்து சொல்லிக் கொண்டிருந்தார்கள்!
நல்லவேளை கவிதா மட்டும் தான் பாக்கி!
விட்டால் அவளும் கூட சொல்லியிருப்பாள் தான்!
இப்படி தான் சார் மாப் பண்ணுவேன். வாரம் ரெண்டு தரம் பண்ணுவேன் என்று கூட சொல்லி இருப்பாள்!
எல்லோருக்கும் அவனிடம் பேச அவ்வளவு ஆசை!
எல்லோரும் அவனிடம் பேசிக் கொண்டிருப்பதை ரேஷ்மாவின் கேபின் அறையில் இருந்த சிசிடிவியில் பார்த்து பார்த்து கொதித்துக் கொண்டிருந்தாள் மதுரா.
ரேஷ்மாவுக்கும் அவளுக்கும் கொஞ்சம் வேலை இருந்தது. அதை முடித்து விட்டு எல்லோருமாக சேர்ந்து உணவு உண்ண இருந்தார்கள்.
மதுரா ஏற்கனவே அதற்கு ஆர்டர் செய்து இருந்தாள்!
தன் கூடவே எல்லா இடத்துக்கும் லக்கியைக் கூட்டிக் கொண்டு தான் போனான் ரேவந்த்.
“இப்ப இவங்க பேசுறது எல்லாம் உங்கக்கா ரேஷ்மா ரூமில் இருந்து பார்த்துட்டு தான் இருப்பா!”
“பார்க்கட்டும்.. ஏதாச்சும் ரியாக்ஷன் வரட்டும்!” என்றாள் அவன் காதில் மெல்ல!
இதையும் பார்த்துக் கொண்டு தான் இருந்தாள் மதுரா.
“கொஞ்ச முன்னாடி பூஜை செய்யும் போது என்னோட நெத்தி வியர்வையை துடைச்சு விட்டீங்கல்ல, உங்க கர்ச்சீப் கொண்டு! அப்பவே அக்கா முகம் மாறிச்சு!”
“ஹேய்.. நான் எதும் தப்பா நினைச்சு அப்படி செய்யல!” ரேவந்த் பதற,
“நானும் அப்படி நினைக்கல. ஏன்னா எங்கப்பா அப்படி தான் அவரோட தோள்ல போட்டுருக்கிற துண்டுல எனக்கு இப்படி தான் துடைச்சு விடுவாரு!
எனக்கு இப்ப அப்படி தான் இருந்துச்சு!” என்று லக்கி சொல்ல, அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டான் ரேவந்த்!
“நீ எனக்கும் அப்படி தாண்டா லக்கி டியர்” என்றான் ரேவந்தும்!
இதையும் டிவி வழியே பார்த்த மதுரா மனம் பதறினாள்.
ஐயோ என்ன இது இவ்வளவு க்ளோசா பழகுறா லக்கி இவன் கிட்ட? ஏமாந்து போய்ட போறா? அவள் தாய் மனம் தப்பு தப்பாய் நினைத்து பதறியது!
ஒரு வழியாக எல்லா இடங்களையும் சுற்றி பார்த்த பின், எல்லோரும் சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் அந்த ஹாலுக்கு வந்து சேர,
ரேஷ்மாவுக்கும் மதுராவுக்கும் இன்னமும் வேலை முடிந்து இருக்க வில்லை!
எனவே அவர்கள் இன்னமும் வந்திருக்க வில்லை!
“என்ன மாதேஷ்.. எல்லாம் ரெடியா? எல்லோரும் வந்தாச்சா?” என்று ரேவந்த் கேட்க,
“எல்லோரும் வந்தாச்சு சார்”. என்றான் அவன்.
ரேவந்த் அங்கு வருவதற்கு முன் மாதேஷ் அங்கு இருந்தவர்களிடம் பேசியிருந்தான்.
“நம்ம ஆபிஸ், எல்லா ஆபிஸ் போல இல்ல. நாம எல்லாம் ஒரு குடும்பம் மாதிரி தான்!
உங்க கிட்ட எல்லாம் ஒரு முக்கியமான விசயம் நான் பேசணும்
நம்ம மதுரா மேம் ரேவந்த் சாரோட சைல்ட்ஹுட் பிரன்ட்!
இன்னமும் சொல்ல போனா சின்ன வயசிலேயே அவருக்கு பேசி வச்சிருந்த அவரோட முறைப் பொண்ணும் கூட!
அவங்க ரெண்டு வீட்டு பேரன்ட்ஸ் இன்னிக்கு இன்னிக்கு உயிரோட இருந்திருந்தா அவங்க கல்யாணமும் இந்நேரம் நடந்திருக்கும்!
சாருக்கு , மதுரா மேம் இங்க வேலை செய்றது இப்ப தான் கொஞ்சம் முன்னாடி தெரியுமாம்!
அதனால இப்ப என்ன சொல்ல வரேன்னா.. மதுரா மேம் இப்ப இருக்கிற மனநிலை உங்க எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும்.
கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டு இருக்கிறவங்க அவங்க!
ஆனா அவங்க சிஸ்டர் லக்கியும் ரேவந்த் சாரும் சேர்ந்து எப்படியாவது அவங்க மனசை மாத்தி மதுரா மேம் ரேவந்த் சாரை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்க வைக்கனும்னு ட்ரை பண்றாங்க.
ரேஷ்மா மேமும் யுவி சாரும் பத்து நாள் பிசினெஸ் ட்ரிப்பா சிங்கப்பூர் மலேசியா போகப்போறாங்க.
இந்த பத்து நாளும் ரேவந்த் சார் நம்ம ஆபிஸுக்கு வரப் போறார்.
நாம எல்லோரும் அவருக்கு சப்போர்ட் பண்ணனும்னு லக்கி ரிக்வெஸ்ட் பண்ணி இருக்காங்க” என்றான்.
“கண்டிப்பா பண்ணுகிறோம்” என்றார்கள் அவர்கள் எல்லோருமே!
அதன் பின் நடந்த மதிய உணவின் போதும் லக்கி அருகில் அமர்ந்து சாப்பிட்டான் ரேவந்த்!
மதுராவுக்கு லக்கியை தர தர வென்று இழுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி விட மனம் துடித்தது!
அடக்கிக் கொண்டு சாப்பிட்டு முடித்தாள்.
பின் லக்கியை அவனே வீட்டில் கொண்டு போய் விடுகிறேன் என்று கூட்டியும் சென்று விட்டான்!
—-
அன்றிரவு முழுவதுமே மதுராவை தூங்க விட வில்லை லக்கி!
“இன்னிக்கு நாள் சூப்பரா போச்சு இல்ல அக்கா! எனக்கு தெரியாது அக்கா, ரேவந்த் ரேஷ்மா மேமோட ஓன் ப்ரதர்ன்னு!
கடைசியில உன் ஆபிசுக்கே வந்தப்போ எனக்கு ரொம்ப ஹேப்பியா இருந்துச்சு!
ரேவ் டுயுட் ரொம்ப நைஸ் இல்லக்கா.?
அவ்வளவு பணக்காரங்களா இருந்தும் கொஞ்சம் கூட திமிர் இல்ல பாரேன்!
ஆள் பார்த்தில்ல அக்கா! செம ஹேண்ட்சம்!
அப்படி ஒரு மேன்லி நெஸ்!
சான்சே இல்லை” என்று மீண்டும் மீண்டும் அவன் புகழ் பாடிக் கொண்டிருந்தாள் லக்கி!
மதுராவுக்குள் பயம் பெரிய விருட்சமாகவே வளர்ந்து விட்டது!
இவ மனசுல அவனைப் பத்தி என்ன நினச்சுட்டு இருக்கான்னு தெரியலையே!
இவ பாட்டுக்கு அவனை லவ் ஏதும் பண்ணி வச்சுட்டா, பின்னாடி அது நடக்காதப்போ ரொம்ப உடைஞ்சு போயிடுவாளே!
அவ கண்ணில் மட்டும் தண்ணீர் வந்துச்சு என் கண்ணில் ரத்தமே இல்ல வந்திடும்!
இவ கிட்ட போய் லவ் பண்றியான்னு கேக்கவும் முடியாது!
ஒரு வேளை அப்படி இல்லாம இருந்தா, என்னை தான் பூமர்ன்னு சொல்லி திட்டுவா!
அவங்க ஜெனரேசன் ஜென்ஸி பிள்ளைங்க லவ்வுக்கும் ப்ரன்ஷிப்புக்கும் நடுவிலே ஏதேதோ ரிலேஷன்ஷிப் பேர் சொல்லுங்க வேறே!
சரி அப்படியே பழகட்டும்னு விடவும் என்னால முடியல!
என்ன பண்ணலாம்?
இவ தான் சின்னப் பொண்ணு!
ஆனா ஊட்டிக்கு அறிவு வேண்டாம்!
அவன் வயசு என்ன? இவ வயசு என்ன?
அவளை சின்ன பிள்ளைல தூக்கி கூட வச்சுட்டு இருப்பான் அவன்!
இவ கிட்ட பேசுறத விட பெட்டர், அவன் கிட்டயே நேரில் போய் ப்ளீஸ் என் தங்கச்சிய விட்டுடுன்னு சொல்லிட்டு,
இந்த வேலையையும் சீக்கிரம் விட்டுட்டு வேற பக்கமா கிளம்பிடனும்! என்று ப்ளான் பண்ணி முடித்தவுடன் தான் அவளுக்கே தூக்கமே வந்தது!
மறுநாள் ரேஷ்மாவும் யுவியும் சிங்கப்பூர் கிளம்பி விட்டார்கள்!
ரேவந்த் மட்டும் தான் வீட்டில் அப்போது இருந்தான்.
அடுத்த நாள் காலையிலேயே மதுரா ரேவந்த்தைப் பார்க்க துணிந்து அவன் ஃபிளாட்டுக்கே போய் விட்டாள்!
காலிங் பெல்லை அடித்து விட்டு காத்திருந்தாள்.
ரேவந்த் வந்து கதவைத் திறந்தான்.
அவளைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தவனாய்,
“ஹேய்.. வாட் எ சர்ப்ரைஸ்! வா.. வா,, ஸ்வீட்டி” என்று உள்ளே அழைத்தான்.
சட்டை போடாமல் வெறும் த்ரீபோர்த் ஒன்றை அணிந்திருந்த அவனை நேராக பார்க்க மதுராவுக்கு கூச்சமாக இருந்தது!
அதை உணர்ந்து அவனும் உள்ளே போய் ஒரு டி ஷர்ட்டை அணிந்து கொண்டு வந்தான்.
“உங்க.. உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்” என்றாள் மதுரா திக்கி திக்கி!
அவளுக்கே அவள் பேசுவது விநோதமாக இருந்தது!
நான் தானா இது? இந்த ஊட்டி முன்னால் மட்டும் தான் இப்படி ஆகுது! அந்த காலத்தில் இருந்தே!
இப்படி எல்லாம் அவள் வேறு யாரிடமும் பேசியதே இல்லையே!
“பேசு” என்றான் அவள் தவிப்பை ரசித்துக் கொண்டிருந்தவன்!
டக்கென்று அவன் எதிர்பாரா வண்ணம் அவன் காலில் விழுந்தாள் மதுரா!
“ப்ளீஸ் என் லக்கியை விட்டுடுங்க. நீங்க அவளைப் பத்தி என்ன நினைப்புல இருக்கீங்கன்னு தெரியல!
ஆனா அவ சதா உங்க புராணம் பாடிட்டு இருக்கா! அவ மனசுல என்ன இருக்குன்னும் எனக்கு சரியா விளங்கல!
உங்க ரெண்டு பேரு மனசுலயும் என்ன இருக்குன்னு எனக்கு சத்தியமா புரியல!
ஆனா நீங்க அவ கூட இப்படி க்ளோசா பழகுறது மட்டும் எனக்கு தப்பா படுது!
அதனால ப்ளீஸ் அவளை விட்டு விலகிடுங்களேன்!
என் தங்கச்சி எனக்கு மக மாதிரி! எந்த சூழ்நிலையிலும் அவ கண் கலங்குகிறத என்னால பார்க்க முடியாது!” அவள் சொல்ல, ரேவந்துக்குள் கோபம் எட்டிப்பார்த்தது!
மனதுக்குள்ளேயே அவளைத் திட்டினான்!
“உனக்கு மக மாதிரின்னா எனக்கு மட்டும் என்னடி? எனக்கும் மக மாதிரி தாண்டி இடியட்!
லூஸு கிறுக்கி!
லக்கி சொன்னது சரிதான்! அவ சொன்ன மாதிரியே தான் இவளும் என்னைப் பார்க்க வந்திருக்கா!” என்று மனதுக்குள் லக்கியையும் பாராட்டியவன், லக்கி சொன்ன மாதிரியே பேச ஆரம்பித்தான்.
“ஸோ.. இப்ப என்ன சொல்ல வர?”
“நீங்க.. நீங்க அவளை விட்டு விலகனும்!”
“அது முடியாது! அவ என்னோட ஸ்ட்ரெஸ் பஸ்டர்! அவ வந்தப்புறம் தான் எனக்கு டென்சனே இல்ல இப்பவெல்லாம்!”
“அதுக்கு என் தங்கச்சி தான் கிடைச்சாளா? பிளீஸ் விட்டுடுங்க! இது மட்டும் செய்யுங்க!
நீங்க என்ன சொன்னாலும் செய்றேன்!”
“என்ன சொன்னாலும் செய்வியா?”
“ம்ம் செய்றேன்.”
“ப்ராமிஸ்?”
“ப்ராமிஸ்!”
“எங்க லக்கி மேல ப்ராமிஸ் பண்ணு பார்ப்போம்!”
“அதெல்லாம் மாட்டேன்! வேணுமின்னா என் பேர்ல பண்றேன்!”
“நான் நம்ப மாட்டேன்!”
“நம்பனும்னா என்ன பண்ணனும்?”
“ம்ம்.” என்று குறும்பாக சிரித்தவன்,
“என்ன வேணுமின்னாலும் செய்வேன்னு சொல்லி விட்டு பேச்சு மாற மாட்டியே? அப்புறம் நான் லக்கியை விட மாட்டேன் பார்த்துக்கோ!”
“இல்ல ஏமாத்த மாட்டேன்! நம்புங்க”.
“நம்பனும்னா, இப்போ என் கிட்ட வந்து நல்லா டைட்டா ஹக் பண்ணி என் கன்னத்தில் ஒரு கிஸ் பண்ணு பார்ப்போம். அப்ப தான் நான் உன்னை நம்புவேன்!”
மதுரா திகைத்தாள்!
“ஏன் இப்படி?”
“ஏன் இப்படின்னா.. எனக்கு ஒண்ணு லக்கி வேணும். இல்ல நீயாச்சும் வேணும்!
நான் லக்கியை விட்டுடனும்னா, நீ நான் சொல்றபடி எல்லாம் கேக்கணும்!
கேப்பியா?”
“ம்ம்”
“அப்ப நான் சொன்னத செய்”, என்றவன் மனதுக்குள்,
கடைசியில என்னையும் அரசியல்வாதி ஆக்கிட்டீங்களேடா என்று முதல்வன் அர்ஜுன் சொல்வது போல
கடைசியில என்னையும் ஆண்ட்டி ஹீரோ ஆக்கிட்டாங்களே? என்று நினைத்துக் கொண்டவனை
வேகமாக அருகில் வந்து இறுக்கி கட்டிக் கொண்டு
அவன் இரு கன்னங்களிலும் மாறி மாறி ஆவேசமாக முத்தமிட்டாள் மதுரா!
பத்துக்கும் மேற்பட்ட முத்தங்களை கொடுத்தவள்,
“போதுமா? இப்ப நம்புறீங்களா?” என்றாள் அழுதபடியே!
“நம்புறேன். ஆனா நீ ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்! நானும் கொஞ்சம் நல்லவன் தான்!
எனக்கும் சில எத்திக்ஸ் இருக்கு! நான் உன் கிட்ட கன்னத்தில் ஒரு கிஸ் தானே கேட்டேன்!
ஆனா நீ கேட்டதுக்கு மேலேயே கொடுத்துட்ட!
நான் ஒண்ணும் பேராசைக்காரன் அல்ல!
அதனால நீ கேட்டதுக்கு மேல கொடுத்த கிஸ்சை எல்லாம் உனக்கே திருப்பிக் கொடுத்துடறேன்” என்று சொல்லி அவளை இழுத்து தன்னருகே கொண்டு வந்து அவள் கன்னத்தில் முத்தமிட தொடங்கினான் அந்த நேர்மையாளன்!
error: Content is protected !!