Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

68. சரண்யா கீதா - உளமாற உனதாகிறேன்

உளமாற உனதாகிறேன் – 3(1)

உளமாற உனதாகிறேன் – 3(1)

 

இருள் சூழ்ந்த பாதையில் சென்று கொண்டிருக்கும் போலீஸ் ஜீப்பில் அமைதி மட்டுமே நிலவி கொண்டிருக்க… அதனை கலைக்கும் விதமாய் பேச்சை ஆரம்பித்தார் பெருமாள்.

 



Advertisement

“என்ன தம்பி எப்போ சென்னையில் இருந்து வந்திங்க… நீங்க வந்தது தெரிஞ்சிருந்தா நானே உங்களை பார்க்க வந்திருப்பேன்”

 

“நீங்க என்ன நான் கட்டுன பொண்டாட்டியா… நான் வந்தது தெரிஞ்சவுடனே வந்து பார்க்க…” என்ற வார்த்தைகளில் ஜர்காகி அவனை பார்த்திட… அவனோ சீட்டில் சாய்ந்தபடி விரல்களில் தாளம் போட்டுக் கொண்டு இருந்தான்.

Advertisement

 

Advertisement

“இல்ல தம்பி… சும்மா ஒரு மரியாதைக்காக அப்படி சொன்னேன்…”

 

“அப்போ தெரிஞ்சிருந்தா நிஜமா பார்க்க வந்திருக்க மாட்டிங்க… எல்லாம் வெறும் பேச்சு… ம்ம்…”

Advertisement

 

“அய்யோ அப்படியில்லை தம்பி…” என்று வார்த்தை வராமல் தவித்திட…

 

“சரி அதை விடுங்க… நீங்க பொண்ணுக்கு என்ன வேணும்…”

 

“என்ன தம்பி..‌. அதுக்குள்ள மறந்துட்டிங்களா…  நான் பொண்ணுக்கு தாய்மாமன்… அது மட்டுமில்ல அந்த வீட்டோட மூத்த மாப்பிள்ளை… நான் இல்லாம அங்க துரும்பு கூட அசையாது…” என்றிட… அவரை மேலும் கீழுமாய் பார்த்தவன்…

 

“ஆமா என்ன வேலை பார்க்குறீங்க”

 

“என்ன தம்பி இப்படி கேட்புட்டிங்க… நம்ம கட்சியில தான் இருக்கேன்” என்று பெருமையாய் உரைத்தவரை நக்கலாய் பார்த்தவன்…

 

“அப்போ வேலைக்கு போகாம மாமனார் வீட்டுல ஓசி சோறு தின்னுட்டு இருக்கிங்க…” என்றிடவும் முழி பிதுங்கி போனது… இதே இதை வேறு‌ யார் சொல்லி இருந்தாலும் நடப்பதே வேறு… ஆனாலும் இப்போது மெல்லவும் முடியாது முழுங்கவும் முடியாது தவித்திட… சரியாய் வீடும் வந்துவிட… ‘அப்பாடா’ என்று அப்போதைக்கு நிம்மதி பெருமூச்சு விட்டவர் அறியவில்லை… இனி அவரால் நிம்மதியாக இருக்க இயலாது என்று!

 

பல ஏக்கர் பரப்பளவில் பல்ப் செட்… பூ அலங்காரம் என ஜகஜோதியாய் ஜொலித்துக் கொண்டிருந்து அவ்வில்லம்.  திருமண வீடு என்பதை கூறும் வகையில் அவ்வீடே உறவினர்களால் குழுமியிருக்க… அதற்கு எதிர்விதமாய் மொட்டை மாடியில் தனித்து இங்கும் அங்குமாய் உலாவிக் கொண்டு இருந்தார் வளையாபதி… அதாவது எம்.எல்.ஏ வளையாபதி என்று சொன்னால் சரியாக இருக்கும்…

 

“என்னங்க வீடு முழுக்க ஆளுங்க நிறைஞ்சு இருக்காங்க… நீங்க என்னடான்னா இங்க வந்து தனியா உலாத்திட்டு இருக்கிங்க… எல்லாரும் உங்களை தான் கேட்கிறாங்க” என்றபடியே படியேறி வந்தார் மங்களம்… வளையாபதியின் துணைவி!

 

அவரோ அவனின் கேள்வியை கிடப்பில் போட்டுவிட்டு… மகனை பற்றி விசாரனையில் இறங்கினார்.

 

“எங்கடி உன் பையன்… நாளைக்கு கல்யாணத்தை வைச்சிட்டு இன்னும் வீட்டுக்கு வராம என்ன செய்றான்… நாளைக்கு மட்டும் நான் நினைச்ச மாதிரி கல்யாணம் நடக்கல… பையன்னு கூட பார்க்கமாட்டன்” என்று பேசிக் கொண்டு இருக்கும் போதே வாயில் சுவிங் கம்மை மென்றபடி மேலேறி வந்துக் கொண்டிருந்தான் வாசு.

 

மகனை கண்டதும் அதுவரை இருந்த கோபம் மறைந்து ஆசுவாசம் நிறைந்திட… அடுத்து அவன் பேசிய பேச்சில் கடுப்பின் உச்சிக்கே சென்றுவிட்டார் வளையாபதி!

 

“என்னவாம் ம்மா உன் புருஷனுக்கு… அவரு பார்த்த பொண்ணை எல்லாம் என்னால கட்டிக்க முடியாது… என்ன பண்ணிடுவாரு” என்று திமிராய் கேட்டபடி காக்கி சட்டையின் மேல் இரண்டு பட்டன்களை கழட்டியபடி சுவற்றின் மீது சாய்ந்து நிற்க… பார்வையோ தந்தையிடம் மட்டுமே!

 

“டேய் வாசு” என்று இப்போது அதட்டலாய் ஒலித்தது மங்களத்தின் குரல்!

 

“என்ன நினைச்சு இப்படி பேசிட்டு இருக்க நீ… இதெல்லாம் நிச்சயம் முடிஞ்சு… தேதி குறிக்கிறதுக்கு முன்னாடி சொல்லி இருந்திருக்கனும்… இப்போ வந்து இப்படி பேசுற… இது ரொம்ப தப்பு… நீயும் உங்க அப்பனும் உருட்டி விளையாட ஒரு பொம்பிளை பிள்ளை வாழ்க்கை தான் கிடைச்சுதா” என்று அதட்டலிட… நெற்றியை கீறி கொண்டான் வாசு.

 

“பொண்ணை பார்த்து பூ வைச்சிட்டு வந்தது நீங்க… அதெல்லாம் நிச்சயமா கன்சிடர் பண்ண முடியாது” என்று அவன் முறுக்கி கொள்ள‌…

 

“அப்போ வீடியோ கால்ல பொண்ணை மட்டும் இல்லாம… அவங்க பேமிலி மொத்தத்தையும் எதுக்கு மீட் பண்ண”

 

‘ப்ச்ச்’ என்று சலித்துக் கொண்டாலும்.‌.. அன்றைய நிகழ்வு இன்னும் நினைவில் நிழலாடியது!

 

நிச்சயத்திற்கு மாப்பிள்ளை வரவில்லை என்றவுடனே உறவுகளிடம் பல பேச்சுக்கள் எழுந்திட… இதற்கு முடிவு கட்டும் விதமாய் வளையாபதியே அன்று மகனுக்கு வீடியோ கால் அழைத்தார்.

 

வேண்டுமென்றே அவர் அழைப்பை ஏற்காது போக்கு காட்டிக் கொண்டு இருந்தவன்… இறுதியில் தாயிடம் இருந்து அழைப்பு வந்ததும் மறுக்க முடியாது அழைப்பை ஏற்றான்… அழைப்பை ஏற்றானே தவிர… எதுவும் பேசவில்லை…

 

வாசகியோ மகன் அழைப்பை ஏற்றது மட்டுமே போதும் என்பதாக செல்பேசியை எடுத்துக் கொண்டு பெண் இருக்கும் அறைக்கு செல்ல… அங்கோ கண்ணுக்கினியாள் வெண்பாவாவின் அலங்காரத்தை கலைக்க உதவிக் கொண்டு இருந்தாள்.

 

“அக்கா மாமா போட்டோலே சும்மா டக்கரா இருந்தாரு… நேருல அவரை சைட் அடிக்கலாம்னு வந்தா இப்படி என்ன ஏமாத்திப்புட்டாரே… ம்ம்… பேசாம நானே இரண்டாவதா பொறந்து இருக்கலாம்” என்று பெருமூச்சு விட… கதவை தட்டியபடியே உள்நுழைந்தார் வாசகி…

 

“அட வாங்க அத்தை…” என்று அவரை ஆர்ப்பாட்டமாக வரவேற்ற இனியாளின் முகமே முதலில் அவனுக்கு காட்சியளித்திட… அவளின் பேச்சும் அச்சுபிசகாமல் அவனின் செவியை நிறைத்தது!

 

செல்பேசியில் அவன் முகத்தை கண்டதும் அமைதியாகியவள்…

 

“அக்கா உனக்கு தான் போன்… மாமா தான் வீடியோ கால்ல… பேசு க்கா” என்றிட… வெண்பாவும்… வாசுவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டார்களே தவிர எதுவும் பேச முனையவில்லை. அவ்வமைதியை கலைப்பது போன்று பிரபாவே அவனிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

 

“நல்லா இருக்கிங்ளா தம்பி… அத்தை சொன்னாக உங்களுக்கு வேலை அதனால வர முடியலன்னு…” என்றபடி தன் குடும்பம் அனைவரையும் அறிமுகப்படுத்தி வைக்க… அவனிடம் சிறு புன்னகை மட்டுமே!

 

அனைவரையும் தன் விழிகளில் நிறைத்து கொண்டிருந்தவன்… கேட்ட கேள்விகளுக்கு பதில் பேசினானே தவிர வேறெதுவும் பேச முனையவில்லை…

 

‘மாப்பிள்ளை ரொம்ப அமைதி போல’ என்று பெண் வீட்டினர் அவர்களாகவே அர்த்தம் கொண்டு விட… அவ்விடயம் அப்படியே அமிழ்ந்து போனது!

 

“இப்போ என்ன தான் சொல்ல வர வாசு… நாளைக்கு உனக்கு‌ கல்யாணம்… அந்த நினைப்பு இருக்கா… இல்லையா… உன் மனசுல என்ன இருக்குன்னு வாயை திறந்து சொல்லு” என்று மங்களத்தின் அதட்டலில்…

 

“ப்ச் அம்மா நீங்க வேணும்னா ஸ்கூல் பிரின்சியா இருக்கலாம்… அதுக்காக என்ன உங்க ஸ்கூல் பசங்க மாதிரி டிரீட் பண்ணாதீங்க… என் மனசுல என்ன இருந்தா உங்களுக்கு என்ன… அதைப்பத்தி உங்களுக்கும் கவலை இல்லை… உங்க புருஷனுக்கும் கவலை இல்ல… அப்புறம் எதுக்கு கேட்குறிங்க” என்று சீறியவன் அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட செல்லும் அவனின் முதுகையே கவலையாக பார்த்திருந்தார் மங்களம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!