உளமாற உனதாகிறேன் – 3(2)
உளமாற உனதாகிறேன் – 3(2)
“விடு மங்களம் அதுதான் வந்துட்டான் இல்ல… படிக்கிறேன்னு சென்னைக்கு போன பிள்ளை… இப்போ தான இங்க வந்திருக்கான்… போக போக அவன் கோவம் குறையும்… எப்படியும் ஒரு விஷயத்துல கமிட் ஆகிட்டா அவ்வளவு சீக்கிரம் பின்வாங்க மாட்டான்” என்ற வளையபதியை வெறித்து நோக்கியவர்…
“அவனா வரல… நீங்க தான் வர வைச்சிருக்கிங்க… நீங்க பார்த்த பொண்ணை நான் காட்டமாட்டேன்னு சொன்னதுக்காக தான இப்போ இவ்வளவு சீக்கிரம் இந்த சம்பந்தத்தை பேசி முடிச்சிங்க… உங்க எண்ணம் எனக்கு புரியாதா… எதுக்கு என் புள்ளையை இந்த பாடு படுத்துறீங்க…” என்று கத்த…
Advertisement
“அவன் தான் புரியாம பேசிட்டு இருக்கானா… நீயும் அப்படியே பேசுற… எவன் அரசியல்ல ஜெயிலுக்கு போகாம இருந்திருக்கிறான்… அவன் பனிரெண்டாவது படிக்கும் போது நடந்த விஷயய்… அதெல்லாம் ஒரு விஷயம்னு உன் மகன் இன்னும் அதைப்புடுச்சி தொங்கிட்டு இருந்தா விட்ருவேனா நான்… கட்டம் கட்டி தூக்கிட்டேன் இல்ல” என்று மீசையை முறுக்கி கொள்ள…
Advertisement
“ரொம்ப ஆணவத்துல ஆடாதீங்க… அவனா நினைச்சதால மட்டும் தான் இங்க இருக்கான்… இல்லைன்னா நீங்க மேலிடத்துல டிரான்ஸ்பர் பண்ணது தெரிஞ்சும் ஏன் அமைதியா இங்கயே வரனும்… அவனுக்கு பிடிக்கலன்னா இந்த வேலையை தூக்கி போட்டுட்டு வேற எங்கேயும் போகவும் முடியும்… அதை மனசுல வைங்க…” என்று படபடத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார் மங்களம்.
Advertisement
மனைவி உரைத்தது எத்தனை உண்மை என்று அவரும் அறிந்தவர் தானே!
Advertisement
‘செஞ்சாலும் செய்வான் திமிரு புடிச்சவன்’ என்று மனதில் வசைப்பாடினாலும் மகனை நினைத்து புன்னகையே!
இவர்களின் பேச்சை எல்லாம் கேட்டபடியே படியின் ஓரத்தில் நின்றிருந்த பெருமாளுக்கு வாசுவை நினைத்து முழி பிதுங்கியது! ஏற்கனவே வண்டியில் வைத்து தன்னை கிழி கிழியேன கிழித்திருக்க… வேலியில போன ஓணானை வேட்டிக்குள்ள விட்டுகிட்டோமோ… என்றதாய் தான் அவரின் நினைப்பு இருந்தது!
“யோவ் பெருமாளு… என்னய்யா பேய் அடிச்ச மாதிரி நின்னுட்டு இருக்க… என்ன விஷயம் காலையில கல்யாணத்தை வைச்சிட்டு இந்நேரத்துக்கு வந்திருக்க” என்று வளையாபதியின் குரலில் நினைவுலகம் மீண்டவருக்கு என்ன செல்வதென்றே தெரியவில்லை…
என்ன சொல்வார்… என்னதான் சொல்ல முடியும்… தன் மாமனிடம் தனக்கும் உங்களுக்கும் நெருங்கிய பழக்கம் உள்ளது என்பதை கண்பிக்கவே உன் மகனோடே கிளம்பி வந்தேன் என்று சொல்லவா முடியும்! அதனால் தலையை சொறிந்து கொண்டிருந்தாரே தவிர வேறேதும் பேச இயலவில்லை!
“சரி பெருமாளு வந்தது வந்துட்ட… கொஞ்சம் சமையல் வேலை எல்லாம் எப்படி போகுதுன்னு பாரு போ” என்று அவருக்கு வேலை ஏவி அனுப்ப…
‘நா எல்லாம் என் வீட்டுலே வேலை செய்ய மாட்டான்… இந்த கல்யாணம் மட்டும் முடியட்டும்’ என்று பொறுமிக் கொண்டே தான் அங்கிருந்து நகர்ந்தார் பெருமாள். ஆனால் மனதில் தன் கணக்கு சரிமாக வருமா என்று யோசனை ஓடிக் கொண்டிருந்தது.
சிறு வயதில் இருந்தே அரசியலில் பெரும் ஆர்வம் கொண்ட பெருமாள்… அவ்வூரிலே அப்போது எக்ஸ்.எம்.எல்.ஏ வா இருந்த ஒருவரிடம் உதவியாளனை சேர்ந்தவர்… சிறு சிறு எடுபுடி வேலைகளை செய்து கொண்டிருந்தார்.
அப்படி வேலை செய்துக் கொண்டே கட்சியில் தன்னை வளர்த்துக் கொண்டவருக்கு ஆளுங்கட்சியில் சேரும் வாயப்ப்பு கிடைத்திட… கெட்டியாய் அதை பிடித்துக் கொண்டார். அப்படி கட்சி விடயமாய் அடிக்கடி சென்னை வந்து கொண்டு இருந்தவர் தங்குவதெல்லாம் தாய்மாமன் வீட்டில் தான்.
அப்படி வந்து போய் கொண்டிருந்தவருக்கு பிரபாவை பிடித்து போய் விட… தன் தாயின் மூலம் தன் விருப்பத்தையும் நிறைவேற்றி கொண்டார். பிடித்தம் ஒரு காரணம் என்றால் சொந்தமாய் இருந்தால் தான் வேலைக்கு செல்லவில்லை என்றாலும் தன்னை யாரும் கேள்வி கேட்க முடியாது என்று நினைத்திட… அவர் நினைப்பை மெய்பிப்பது போன்றே இருந்தது நமச்சிவாயத்தின் செய்கைகள் அனைத்தும்.
மகன் இல்லாத அவருக்கு மருமகன் என்றால் கொள்ளை பிரியம்… அந்த பிரியத்தை தனக்கு சாதகமாக்கி கொண்டவர் நமச்சிவாயத்தின் குடும்பத்தில் அனைத்து முடிவுகளிலும் தலையிட ஆரம்பித்தது… இப்போது தான் இல்லை என்றால் அந்த குடும்பமே இல்லை என்றளவிற்கு அவரின் செய்கைகள் இருந்தது!
அந்த சுதந்திரத்தை யாரும் பறிக்க கூடாது என்பதற்காகவே வெண்பாவிற்கு தானே மாப்பிள்ளை பார்த்தார். குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதையாக… வளையாபதி தன் மகனுக்கு பெண் தேடிக் கொண்டு இருக்கும் செய்தி இவருக்கு எட்டிட… அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்.
சம்பந்தம் கிடைத்தால் அதன் மூலம் கட்சியில் இன்னும் மேல் செல்லலாம்… அப்படி இல்லை என்றாலும் கவலையில்லை. வளையாபதியிடம் தன்னை அறிமுகப்படுத்தி கொள்ளலாம்.
தெரிந்த நண்பர் ஒருவர் மூலம் வளையாபதியை சந்தித்து சம்பந்தத்தை பேசிமுடித்திடவே நாக்கு தள்ளியது என்றால்… தன் மாமனை இந்த வரனிற்கு தலையாட்ட வைப்பதற்குள் மனிதன் ஒருவழியாகி விட்டார்.
“மாமா இன்னும் என்ன யோசனை… நம்ம வெண்பாக்கு இந்த பையன் பொறுத்தமா இருப்பான் மாமா… தேனீயிலே பெரிய குடும்பம்… ஒரே பையன்… எந்த பிக்கல் பிடுங்கலும் இல்ல… அரசு உத்தியோகம்… புள்ள நம்ம கண்ணு முன்னாடியே இருப்பா… இன்னும் வேறென்ன மாமா” என்றிட… அப்போதும் நமச்சிவாயத்திற்கு யோசனை தான்…
“அதில்ல மாப்பிள்ளை… பையன் நல்ல அம்சமா தான் இருக்கான்… ஆனா அவரு அப்பா பெரிய அரசியல்வாதி… ஜெயிலுக்கு எல்லாம் போய் இருக்காருன்னு பேச்சு அடிப்படுது… அதுதான் ஒரே யோசனையா இருக்கு”
‘அய்யோ இந்த மனுஷனுக்கு எப்படி அந்த விஷயம் தெரிஞ்சது… டேய் பெருமாளு உன் மாமனை இதுக்கு மேல யோசிக்க விட்ட… அவ்வளவு தான்’ என்று நினைத்தவர்…
“ஏன் மாமா… அந்த விஷயம் நடந்து எத்தனை வருஷம் ஆகுது… இன்னும் சொல்ல போனா அதெல்லாம் ஒரு விஷயமா… அரசியல்ல ஜெயிலுக்கு போகாதவன் எவன் இருக்கான் சொல்லுங்க… அதை தவிர வேற எதாவது நல்ல காரணம் சொல்லுங்க மாமா…” என்றாலும் அவரிடம் அமைதியே பதிலாய் கிடைத்திட…
“சரி மாமா நீங்க இவ்வளவு யோசிக்கும் போது நானே அவங்ககிட்ட வேண்டாம்னு சொல்லிடுறேன்… என் மேல நீங்க வைச்ச நம்பிக்கை இவ்வளவுதாங்கிறது தான் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று வருந்தி பேச… அதற்கு மேல் எங்கே அவர் யோசிப்பது… மருமகன் சொன்ன அனைத்திற்கும் மண்டை ஆட்டிட… இதோ விடிந்தால் நாளை கல்யாணம்!
இப்படி அனைத்தையும் தன் சுயநலத்திற்காக செய்து கொண்டவர்… தான் பார்த்த வரன் என்பதால் தனக்கு கீழ் தான் அவன் இருப்பான் என்று நினைத்துவிட்டார் போலும். ஆனால் காரில் நடந்த நிகழ்வு… அவனின் நடத்தை தன் கணக்கு பொய்துவிடமோ என்று அச்சத்தை அவருள் விளைவித்தது உண்மையே! இருந்தும் தன் மாமன் வீட்டில் தான் வைத்தது தானே சட்டம்… இவனால் என்ன செய்திட முடியும் என்றவரின் இறுமாப்பு நாளை விடியலுக்காக காத்திருந்தது!
தொடரும்…
