இதோ லட்சுக்கான விடியல் இனிதே விடிந்தது.ஒவ்வொரு ஆணுக்கும், ஒவ்வொரு பெண்ணுக்கும் உள்ள நுண்ணிய உணர்வுகள் அதிகம் ஆர்ப்பாட்டம் செய்யும் தருணம் என்று தான் திருமணத்தைச் சொல்ல வேண்டும்.எதிர் காலத்தைக் கொண்டு பயம் இருந்தாலும் பல கனவுகள் கொண்டு இரு உள்ளங்கள் இணைந்து புது உறவை இணைத்துக் கொள்ளும் பந்தம்.
லட்சுமணனுக்கும் அப்படித் தான் போலும் சிரித்த வண்ணமாக ஒவ்வொரு நிகழ்வையும் ரசித்துக் கொண்டிருந்தான்.மீனாள் நாற்காலியில் அமர்ந்திருக்க அவளுக்குப் பக்கவாட்டில் வள்ளியப்பனும்,கண்ணாத்தாளும் நின்று இருந்தார்கள்.சின்னப்பன், சுந்தரம், சுப்பிரமணியன் அவர்களது மனைவிமார்கள் எல்லாம் மணமகன் பக்கம் நின்று இருந்தார்கள்.
Advertisement
முதலில் மணமகன் மாமன் முன்னெடுத்து மணமேடையில் வலம் வர வேண்டும்.மாமன் முறை என்றதும் லட்சுவின் பார்வை வள்ளியப்பனை தீண்டி நிற்க.
Advertisement
“ஐயா! அப்பாவே உங்களுக்கு வேண்டி நாங்க நிக்கிறோம். நீக என்ன அங்கனையே பாக்குறீக கொஞ்சம் பொறுக.தாரைவார்த்து கொடுத்த கையோட உங்க மாமனையும் தாரோம் சந்தோசமா கூட்டிகிட்டு போக” வழமை போல் குறும்பாகச் சுந்தரம் லட்சுவை கிண்டல் செய்தார்.
Advertisement
அவர் கேலிக்கு ஈடு செய்யும் பொருட்டு லட்சுவும்,”ஆஹான்! அந்த நேரத்துக்குத் தேன் காத்துக் கிட்டேன் ஐயா.இப்போ நான் முறைக்கு மாமனை அழைக்கிறேன் என் தாய்க்கு அண்ணனா” என்றதும்இன்னும்புன்னகைவிரிந்ததுபெரியவர்களுக்கு.
Advertisement
“ரொம்பத்தேன் மாமனாரை தாங்கி நிக்கிறீக உங்களுக்கு வேண்டி முறை செய்யக் குடும்பமா வந்து நிக்கிறோம்” என்றவரை இடை மறைத்து.
“முறைக்கு அப்பனா சின்னப்பா பெரியப்பா, தாத்தனுக்கு நீக அப்பத்தாளுக்கு அவுக சுந்தரம் மற்றும் சுப்பிரமணியன் மனைவியைச் சுட்டி காட்டி சொன்னவன். தாய் மாமன் முறைக்கு எங்கன போக. அதுக்கு இருக்குற ஒரே உறவு மாமாதேன்” என்றவனைப் பார்த்து சிரித்து.
“சரியான ஆளா இருக்கீகளே!வரவுக முன்னுக்கே இது போலப் பேச்சு கட்டுவாக. அப்படி கட்டுனா படக்குன்னு பதில் சொல்லி வைக்கனுமுனு யோசனை பண்ணி வச்சிருப்பீகளா?” என்றதும் கல கலவெனச் சிரித்தான் லட்சுமணன்.
கழுத்திரு என்பது கழுத்தில் அணியும் மங்கல சங்கிலி. இறைத் திருவுருவங்கள் பொறிக்கப்பட்டுள்ள கழுத்திரு அணிவிப்பதன் மூலம், கழுத்தில் லக்ஷ்மியைதங்கவைப்பதாகநம்பிக்கையும், மணமக்களுக்கு இறைவன் எல்லா தருவான்என்றநம்பிக்கையும் உண்டு.சிலதினங்களுக்குமுன்பொன்உருக்கும்நிகழ்வின்பொது.இதுபோல்பயம்வந்துகாய்ச்சல்கண்டாள் சாலா,இதுஇரண்டாம்முறை.
திருமணத்தில்மனம்ஒன்றமுடியாமல்உடல்அனல்படுத்திஎடுத்தது.உற்றார், உறவினர்புடைசூழ லட்சுமணனுக்கு எதிரில் சாலாவை நிற்க வைக்க.முத்துப் பற்கள் தெரிய சிரித்துக் கொண்டே மங்கள சங்கலியை பூட்டி தன்னுடன் வலுவாக இணைத்துக் கொண்டான் பொல்லா மருத்துவன்.
அதன் பின் பிள்ளை வரம் வேண்டி ஆசி பெறுதல். அவர்களுக்கே உண்டான சடங்குகள் என்று நேரம் ரெக்கை கட்டி பறந்து கொண்டிருந்தது.சரியாக உச்சி பொழுதின் போது பந்தி தொடங்க.லட்சுவையும், சாலாவையும் அருகில் அமர்த்தி உணவிட ஒருவருக்கு ஒருவர் உணவை ஊட்டி விடும் போது தான் அவளது உடல் நிலையை உணர்ந்தவன்.
“சாலா!”
“ஹ்ம்ம்” குனிந்து கொண்டே பதில் சொல்லியவளை மீண்டும் அழைத்தான்.
“சாலா! கொஞ்சம் பாருக” என்றதும் அவனை ஏற்றிட்டு பார்க்க அப்போது தான் அவள் கண்களைப் பார்த்தான் போலும்.
“காய்ச்சல் அடிக்குதா?”
“ஹ்ம்ம்!”
“ஏன் சொல்லல?”
“எப்படி சொல்றது இருந்த பதட்டத்துல ஆத்தா கிட்ட கூடச் சொல்லல”
“சரி கொஞ்சம் ரசம் மட்டும் சாப்புடுகஊசி போட்டு விடுறேன்”
குனிந்து கொண்டே,”வலிக்கும்” என்றதும் சிறு புன்னகையுடன்.
“வலிக்காம போடுறேன் இப்போ கொஞ்சமா சாப்புடுக” என்றவனும் விரைந்து உணவை முடித்துக் கொண்டு தனது அறைக்குள் சென்று விட்டான்.
ஒரு கட்டத்திற்கு மேல் சாப்பிட முடியாமல் கண்களைமூடிஅமர்ந்திருந்தவளைநெருங்கிய கண்ணாத்தாள்,”சாலா!” என்று அவள் தோளை உலுக்க அப்போது தான் மூடிய கண்களைத் திறந்தாள்.
“என்னஇது?முன்னுக்கேசொன்னஎன்ன?சரி! சரி! எழுந்திருக செத்த ஓய்வேடுக” என்றவள் சுற்றும், முற்றும் பார்த்து.ஒரு இளம் பெண்ணை அழைத்தாள்.இவள் சாலாவுக்குத் தங்கை முறை போலும் அப்பெண்கண்ணாத்தாள்அருகில் வரவும்.
“சாலாக்கு காய்ச்சல் அடிக்குது நீக மேல உள்ள அறைக்குக் கூட்டிட்டு போக நான் மாத்திரை எடுத்துட்டு வரேன்” என்றவர் வேகமாக மாத்திரை எடுக்கச் செல்ல.அதற்குள் பாதிவழியில்இவர்கள்கண்டலட்சுமணன் அங்கு வந்து சாலாவை அழைத்துக் கொண்டு யார் கவனத்தையும்கவராமல் தனது அறைக்கு அழைத்துச் சென்று விட்டான்.
அந்த தங்கை முறை பெண் ஓர்,இருநிமிடம்திரு,திருவெனமுழித்துவிட்டு பின்புஓடிசென்றுமெதுவாகச் செய்தியைகண்ணாத்தாள்காதில் சொல்ல,”ஆத்தி எதுக்கு அவுக அறைக்கு அனுப்பி வச்சீக?”
“மச்சான்வந்து நான் பார்த்துக்கிடுறேன் ஊசி போடனும் சொல்லும் போது நான் என்னத்த செய்யப் பெரியம்மா?”
“இது என்ன? இவுக கிட்ட பேச போனா நான் அம்புட்டுதேன் என்பேச்சைவச்சுஎன்னையேதிருப்பிவைப்பாகமருமகனைஎண்ணிபுலம்பி கொண்டே சென்றவள், சென்றவேகத்தில்மீண்டும் அந்த அரிவையிடம் வந்து.
“தங்கம் இந்தச் சங்கதிய ஆரு கிட்டையும் பேசிகிட்டு இருக்க வேணாம் என்ன?” என்றதும் பெரிதாகத் தலையை ஆட்டி.
“எனக்குத் தெரியாத பெரியம்மா சொல்லமாட்டேன்” என்றவள் கன்னம் வழித்துக் கொஞ்சி லட்சு அறையை நோக்கி ஓட மீண்டும்சாலாவைபடுக்கவைத்துவிட்டுபாதி வழியில்வந்தவன் கண்ணாத்தாளைகண்டு.
“எங்கன அயித்த இத்தினி வேகம்?”
“சாலா!”
“அவுக செத்த படுத்து ஓய்வு எடுக்கட்டும் நம்ப மத்த வேலையைப் பார்க்கலாம்”
“அதேன் கீழே உள்ள அறையில இருந்தா அப்பப்போ பார்த்துக்கலாம் அதுக்குத்தேன்”
“வேணாம் கீழே ஆளும், பேருமா பேச்சா கிடக்கும் தூக்கம் புடிக்காது அவுக மேலையே இருக்கட்டும்” என்றவனிடன்அடுத்து என்ன சொல்வது என்று தடுமாறி கொண்டிருக்க கண்ணாத்தாள் நிலையை உணர்ந்தார் போல.
“அவுக என் வீட்டம்மா” என்று போட்டானே ஒரு போடு.அதற்கு மேல் எங்குக் கண்ணாத்தாள் வாய் அடிக்க ஒரு வார்த்தை திரும்பப் பேசாமல் வந்த வழியே ஓடி சென்று விட்டாள்.
அதன் பின் வந்த நேரங்கள் அனைத்தும் காலில் சக்கரத்தை கட்டி கொண்டு ஓடியது.அதற்குள் ஒரு தூக்கம் போட்டுவிட்டு எழுந்து வந்த சாலா மீண்டும்லட்சுகண்ணில்பட்டால்.மகளைமருமகன்முன்வைத்துஎதுவும்பேசவேமுடியாதுஎன்பதுதிண்ணம்அதனால்அவசரமாகசாலாவைதன்னுடன் அழைத்துசென்று விட்டாள் கண்ணாத்தாள்.
இரவு பத்து மணி வரையிலும் கல கலவென இருந்த லட்சுவின் வீடு.மெல்ல, மெல்ல அமைதியானதுவந்தஉறவினர்கள் சொல்லி கொண்டு கிளம்பச் சரியாகப் பதினோரு மணிக்கு அனைவரும்விடைபெற்றுவீட்டுஆட்களும்.மூன்று பெண் வேலையாட்கள் மட்டுமே இருந்தனர்.
இரவு வேளை யாரு கண்ணும் உறுத்தாதவாறு இயல்பான கைத்தறி புடவையில் லட்சுவின் அறைக்கு அனுப்பிவைக்கப் பட்டாள்சாலா.உடல் சூடு சற்றுத் தணிந்திருந்தாலும் அதன் தாக்கம் இன்னும் இருந்தது போலும் அரிவைக்கு, கண்கள் சிவந்து, உதடு காய்ந்திருந்தது.
அங்குஅறையில்கோரை பாயில் அமர்ந்திருந்தவன். சாலாவின் அரவம் கேட்டுப் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டு.அவளது கண் நோக்கி இரு கரம் விரித்து ‘வாக!’ என்பது போல் செய்கை செய்ய, மெல்ல அவனது கைகளுக்குள் அடங்கிக் கொண்டாள்.
“இப்போ எப்படி இருக்கீக?”
“ஹ்ம்ம்! தேவலை, ஆனா உடம்புதேன் வலி கொடுக்குது”
“அது அப்படித் தேன் இருக்கும் இன்னும் இரண்டு நாள் ஆகும் அப்புறம் சரியா போகும்” என்றவனை அமர்திருந்த வாக்கிலே திரும்பி லட்சுவைபார்த்தவள் தயக்கமாக.
“அடுத்து என்ன?” அத்தனை மெல்லமாகக் கேட்க.
“என்ன புரியல?” என்றவன் நன்றாகச் சரிந்து தனது கன்னத்தை அவளது உதட்டில் வைத்து அழுத்தி இப்போ சொல்லுக காதுல கேட்கல”
அவள் வாய் அசைத்தாலே முத்தி வைப்பது போல் ஆகும் அல்லவா.அவனது செயலில் கொஞ்சமாக நெளிந்தவள் தனது தலையைப் பின்னால்நகர்த்திப் பார்க்க.அவள் நகரும் இடம் பார்த்து அவனும் தனது கன்னத்தை நகர்த்தி வைத்தான் கள்ளன்.
மருத்துவன் சேட்டையை உணர்ந்துஅவனிடம்மல்லுக்கட்டதரணியின்றி,அவளது மூக்கு லட்சுவின் கன்னம் தீண்ட,”அடுத்து என்னான்னுகேட்டேன்?” அவள்இதழ் அசைவில் சிறு எச்சிலும் அவன் கன்னம் தீண்டி வைத்தது.
“அடுத்து என்ன? தூக்கந்தேன்” என்றவன் அவளை இறுக்க அனைத்து அவளை ஆழ நுகர்ந்து கட்டி, கழுத்தில் முத்தி வைத்து.சாலாவை பார்த்துக் குறும்பு புன்னகையுடன்,
“இரண்டு நாள் போகட்டும் அடுத்து என்னான்னு சொல்லுறேன் இப்போ தூங்குங்க” என்றவன் அவளுக்குப் படுக்கத் தோது செய்து கொடுக்க.
“நீக?”
“கொஞ்சம் படிக்கனும் ஒரு வாரம் ஆகுது புத்தகத்தைத் தொட்டு” என்றதும் அமைதியாகப் படுத்துக் கொண்டு லட்சுமணன் செயல்களைப் பார்த்து கொண்டிருந்தவள் சிலமணிநேரத்திற்குபிறகு.
“லட்சு!” அவளது அழைப்பில் இதழ் பிரிய திரும்பியவன்.
“என்னக சாலா ஆச்சி!”
“சில சங்கதி புரியவே மாட்டிங்குது”
“என்ன புரியனும் சொல்லுக? புரிய வைக்கிறேன்”
“நல்லாதிறமை பட்டு நிக்கிறவரு, சமூகத்துல ஒரு நல்ல நிலைமையில இருக்குறவரு, பெரிய மருத்துவரு, இத்தினி இருந்தும் படிக்காத என்னைக் காட்டி நிக்கிறது அதுவும் அத்தினி தடங்கல் தாண்டி, இந்த இடந்தேன்இடிக்குது” என்றவளுக்கு விளக்கம் சொல்லும் பொருட்டு லட்சுமணன் வாய்யை திறக்க போக அதற்குள் அவளே முந்தி கொண்டு.
“விரும்பும், காதல்னு சொன்னா நான் ஏத்துக்கவே மாட்டேன்.சிறுசுல தொடங்கிப் பருவம் பார்த்து நிக்கிறவரை உங்க பார்வை ஐயோ இவாளான்னு தேன் என்னைபார்த்து வைக்கும் அதுனால உண்மைய சொல்லுக” என்றதும் வாய் விட்டு சிரித்தவன்.
“இன்னும் இரண்டு நாள் போகட்டும் உங்க கேள்விக்குப் பதில் தாரேன் என்ன? இப்போ எதையும் எண்ணி வைக்காம தூங்குக” என்றவன் மீண்டும் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கி விட்டான்.மேலும்சிலநொடிகள்அவனையேபார்த்திருந்தவள்தன்னைஅறியாமல்தூங்கிபோனாள்.