Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

42. Lavanya Rajesh - நெஞ்சமெல்லாம் நிலவாக நீ

நெஞ்சமெல்லாம் நிலவாக நீ – 20

“ஏய்.. லக்கி.. சீக்கிரம் வாடி.. வந்து இந்த ப்ளவுஸ் நாட்டை பின் பக்கம் கட்டி விடு.

இதுக்கு தான் நான் இந்த மாதிரி எல்லாம் இத்தனை நாளா போடாம இருந்தேன்!” மதுரா குளித்துக் கொண்டிருந்த லக்கியைக் கூப்பிட்டு கொண்டிருந்தாள்.

அப்போது அவளை பின்னிருந்து அணைத்தன இரு கரங்கள்!

வேறு யார்?



Advertisement

அவளின் ஊட்டி தான்!

அவன் எப்படி இங்கே? அதுவும் இந்த நேரத்தில்? அவள் அதிர்ச்சியோடு யோசித்து கொண்டு அப்படியே சிலையாக நிற்க,

அவனோ அவள் பின் கழுத்தில் முத்தமிட ஆரம்பித்தவன் அடுத்து அவள் தோளில் இருந்த அவனால் ஏற்பட்ட அந்த தழும்பில் முத்தமிட்டுக் கொண்டே,

Advertisement

“இரு. .நான் போட்டு விடுறேன்” என்று சொல்லி அவன் போட்டு விட முயல, அவள் வேண்டாமென்று அவனைத் தடுத்து கட்டிலில் தள்ளி விட்டாள்!

Advertisement

அவனோ அவளையும் சேர்த்து இழுத்து விட்டு விட்டான்! மதுராவும் சேர்ந்து விழுந்து விட்டாள்!

“அய்யோ” என்று என்று மெல்லியக் குரலில் கத்தியவாறு திடுக்கிட்டு  எழுந்து அமர்ந்தாள் மதுரா!

கனவு!

Advertisement

அத்தனையும் கனவு!

ரேவந்தைக் கனவில் கண்டு தான் கட்டிலில் இருந்து கீழே விழுந்து இருந்தாள் அவள்!

நல்லவேளை கனவு தான் என்று அவளுக்குள் சொல்லிக் கொண்டே எழுந்தவள்,

அருகே படுத்திருந்த லக்கியின் போர்வையை சரி செய்து விட்டு அப்படியே உட்கார்ந்து கொஞ்சம் தண்ணீர் குடித்தாள்!

என்ன நல்லவேளை? அவள் மனது திருப்பிக் கேட்டது!

ரேவந்தை உன் மனம் இவ்வளவு தேடுதா?

கடந்த நாலு நாட்களாக ரேவந்த் சென்னையில் இல்லை!

திருப்பூர் சென்றிருந்தான்.

அங்கு இருக்கும் கார்மென்ட் பேக்டரியில் ஒரு தொழிலாளிக்கு வேலை நேரத்தில் கொஞ்சம் அடிபட்டு விட்டது!

உடனே நிர்வாகத்துக்கு வேண்டாதவர்கள், தொழிற்சங்க யூனியன் ஆட்களை தூண்டி விட்டு, பிரச்சினை செய்ய வைத்தார்கள், ரேவந்த் அங்கு இல்லாததை பயன்படுத்திக் கொண்டு.

ரேவந்த் இருக்கும் வரை யூனியன் ஆட்களால்  பெரிய அளவில் பிரச்சினைகள் ஏற்படாமல் தான் இருந்தது!

எல்லாவற்றையும் சரிவர நிர்வகித்து தான் வந்து கொண்டிருந்தான்.

தான் இல்லா விட்டாலும் வேலைகள் அதன் அதன் போக்கில் நடக்கும் வண்ணம் சீர்ப்படுத்தியும் இருந்தான்.

நவீன் இருப்பதால், அன்றாட உற்பத்தி வேலைகளும் குறைவர நடந்து கொண்டு தான் இருந்தன.

ஆனால் இப்போது நவீனால் இந்த பிரச்சினையை சமாளிக்க முடியவில்லை!

எனவே ரேவந்த் தான் அங்கே போய் இருந்து கொண்டு பேச்சு வார்த்தை நடத்தி சரி செய்து கொண்டிருந்தான்!

அதனால் அவனால் மதுராவிடம் போனில் கூட பேச நேரமில்லாது போய் விட்டது!

லக்கியிடமும் அவன் பேச வில்லை!

ஆனால் இப்போது மதுரா தான் அவனைக் காணாமல் தவித்து போய் விட்டிருந்தாள்!

அவன் போன் நம்பர் கூட அவள் வாங்கி இருக்க வில்லை!

லக்கியிடம் கேட்கவும் தயக்கம்!

அவனை தன் மனம் இவ்வளவு தேடுகிறதா?

ஏன்?

இத்தனை வருடம் அவன் நினைவு உள்ளுக்குள் இருந்து கொண்டிருந்தாலும், அதனை உள்ளேயே வைத்துக் கொண்டு நடமாடிக் கொண்டு இருந்தவளுக்கு, இப்போது ஏன் முடியாமல் போய் விட்டது?

நீ ஏண்டா இப்ப இங்க வந்த?

இப்படி என்னைப் பாடாக படுத்தவா?

அவன் வந்தது இருக்கட்டும்!

 நீ ஏண்டி இப்படி மாறின?

அவன் உன்னை சும்மா சும்மா ஹக் பண்ணி கிஸ் பண்ணிட்டே இருக்கான்!

ஆபிசில் கூட அவளை சோபாவில் உட்கார்ந்து லாப் டாப்பில் வேலை  பார்க்க சொல்லி விட்டு அருகில் வந்து நெருக்கமாக தான் உட்கார்ந்து கொண்டு பேசுகிறான்!

அத்தனையையும் நீ எப்படி அனுமதிக்கலாம்?

என்ன தான் அவன் லக்கியைக் காட்டி உன்னை பயமுறுத்தி இருந்தாலும், அந்த இடத்தில் வேறு ஒருவன் இந்நேரம் இருந்திருந்தால், நீ இப்படியா இருந்திருப்ப?

ஒண்ணு அவன் கன்னம் பழுத்திருக்கும்!

இல்லை போலீசில் மாட்டி விட்டுருப்ப!

ரெண்டுமே செய்யாமல் நீ அவனிடம் வெக்கப்பட்டு நின்னுட்டு இருந்தா, அவன் இன்னமும் அட்வான்டேஜ் எடுத்துக்க தான் செய்வான்!

அவன் உன்னை லவ் பண்றேன்னு எப்பவாச்சும் சொன்னானா?

இல்லை சின்ன வயசில் மதி அத்தையும் உன் அப்பாவும் ஆசைப்பட்ட மாதிரி கல்யாணம் பண்ணிக்கிற முடிவில் இப்படி பழகுறானா?

எதுவுமேயில்லை!

அப்புறம் எப்படி நீ அவனை இவ்வளவு தூரம் அனுமதிக்கலாம்?

உன் கேர்கடரே இங்கே அடி வாங்கி கொண்டிருப்பது உனக்கு தெரியலையா?

அவள் மனசாட்சி கண்டபடி திட்டியது!

நான் என்ன பண்ண? அவன் கிட்டே வந்தாலே எனக்கு அவனைக் கட்டிக்க தானே தோணுது!

இத்தனை வருஷ காத்திருந்த்தே அதற்கு தான்றது போல!

அதுக்கு?

 இப்படியா பண்ணுவ? நீ வெட்கம் கெட்டுப் போய் இருப்ப அவனிடம்!

அவள் மனம் அவளைக் கண்டபடி திட்ட, தூக்கம் வராமல், பால்கனிக் கதவைத் திறந்து கொண்டு வெளியே போய் நின்றாள்!

மழை பெய்து ஏற்கனவே அங்கு ஈரமாக இருக்க, அங்கே போய் வெற்றுத் தரையில் அப்படியே அமர்ந்தாள்.

பகல் பூராவும் கோடையின் வெம்மை அளவுக்கு அதிகமாக இருக்க முன் இரவில் முழுவதும் லேசாக பெய்த மழை, அவள் இப்போது அங்கு வந்து அமர்ந்தவுடன் தன் வேகத்தை அதிகரித்தது!

யோசித்துக் கொண்டே ஈரம் சொட்ட சொட்ட  அப்படியே அமர்ந்து இருந்தாள் மதுரா மீதி இரவு முழுவதுமே!

விடியற்காலை மூன்று மணிக்கு மேல் தான் அவள் சுய நினைவுக்கு வந்ததே!

விடிந்து கொண்டிருப்பதை உணர்ந்தவள் உள்ளே போய் கட்டிலில் ஈர உடையோடு படுக்க கூடாது என்று நினைத்து, கட்டிலுக்கு அருகே கீழே தரையில் படுத்துக் கொண்டாள்.

காலை ஐந்தரைக்கு அவளின் அலாரம் அடிக்கவும் கண் விழித்தவள், உடையை மட்டும் மாற்றிக் கொண்டு வந்து மீண்டும் கட்டிலில் படுத்துக் கொண்டாள்!

ஆறு மணிக்கு எழுந்து கொள்ளலாம் என்று நினைத்து படுத்தவளால் எழவே முடியவில்லை!

ஏற்கனவே அந்த திடீர் வானிலை மாற்றத்தால், முன்தினமே அவளுக்கு லேசாக காய்ச்சல் இருந்தது!

இரவே ஒரு மாத்திரை போட்டுக் கொண்டு தான் படுத்திருந்தாள்!

இப்போது ரொம்ப நேரமாய் ஈரத்தில் உட்கார்ந்து இருந்தது இப்போது அதன் வேலையைக் காட்டி விட்டது!

கை கால்களில் வலி, தலையில் பாரம்! கண்ணையே திறக்க முடியில்லை அவளால்!

லக்கி ஆறு மணிக்கு எழுந்தவள், அக்கா இன்னமும் படுத்து இருப்பதை பார்த்து ஆச்ச்சர்யமுற்று, அவள் நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள்!

அனலாக அடித்தது!

“அக்கா.. அக்கா.. என்னக்கா இப்படி ஃபீவர் அடிக்குது?” என்றவளுக்கு வெறும் அனத்தல் மட்டுமே பதிலாக!

“சரிக்கா நீ தூங்கு” என்று சொல்லி விட்டு போர்வையை இழுத்து போர்த்தி விட்டு சென்றவள் அக்காவை தொந்திரவு செய்ய வேண்டாம் என்று அவளே குக்கரில் சாதமும் உருளைக்கிழங்கை வைத்து விட்டு ரசத்துக்கு புளியை ஊறப் போட்டு விட்டு குளிக்க சென்றாள்.

குக்கர் விசில் சத்தம் கேட்டும் அக்கா விழிக்காததால், அவளே மீதி சமையலும் செய்து பேக் செய்து கொண்டு தனக்கு தோசை ஊற்றிக் கொண்டே அக்காவுக்கு சாதத்தை குழைத்து ரசம் விட்டு கரைத்து ஒரு கிண்ணத்தில் வைத்து விட்டு வெளியே வந்தாள்.

“அக்கா.. அக்கா” என்று எழுப்ப இப்போது கண் திறந்த மதுராவிடம்,

“அக்கா நாம ஹாஸ்பிடல் போலாமா பாரு.. உனக்கு இப்படி ஃபீவர் அடிக்குது” என்றிட,

“இல்ல வேண்டாம். அங்க போனா ரொம்ப நேரம் உக்காரணும். நான் பாராசிட்டமால் போட்டுக்குறேன்.

நீ கிளம்பு. காலேஜுக்கு எல்லாம் லீவ் போட வேண்டாம்!”

“நீ மேனேஜ் பண்ணிக்குவியா அக்கா? உன்னால முடியுமா?”

“ஏய்.. போடி.. கொஞ்சம் பீவர் அத நான் பார்த்துக்க மாட்டேனா? விடு” என்றாள் பலவீனமான குரலில்.

“ரசம் சாதம் கரைச்சு வச்சுருக்கேன். கொஞ்சமாச்சும் சாப்பிட்டு டேப்லெட் போட்டுக்கோ!

நீ பாட்டுக்கு ஆபிஸ் கிளம்பி போய்டாதே ரெஸ்ட் எடு!” என்று சொல்லி மனமில்லாமல் தான் கல்லூரிக்கு சென்றாள் லக்கி.

அவள் சென்ற அடுத்த ஒரு மணி நேரத்தில் காலிங் பெல் அடித்தது!

என்ன இது? லக்கி காலேஜுக்கு போகாம திரும்பி வந்துட்டாளா? என்று நினைத்தவாறே கலைந்து போய் இருந்த தலை, முகெமல்லாம் சோர்வோடு மெல்ல நடந்து சென்று கதவைத் திறந்தாள் மதுரா!

வெளியே நின்று கொண்டிருந்தான் ரேவந்த்!

அவள் இருக்கும் நிலைக் கண்டு பதறியவன்,

“என்னடி இது இப்படி இருக்க ஸ்வீட்டி? என்ன ஆச்சு உனக்கு?

நான் ஊரிலிருந்து எட்டு மணிக்கு தான் வந்தேன். வந்தவுடனே அவசரமா கிளம்பி உன்னைப் பார்க்க ஆபிஸ் போனேன் சீக்கிரமே!

அங்கே உன்னை காணோம்னு, உனக்கு போன் அடிச்சேன் சுவிட்ச்டு ஆஃப் ல இருந்துச்சு.

அதான் இங்க கிளம்பி  வந்துட்டேன்! என்னடி பண்ணுது உனக்கு?” அவளைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தான்.

“பெரிசா ஒண்ணுமில்ல. லேசா ஃபீவர்!”

“என்ன லேசா ஃபீவரா?

என் மேல அடிக்குது அனல்! அவ்வளவு டேம்ப்ரேச்ச்சர் இருக்கு உனக்கு! லேசா ஃபீவர்ன்னு சொல்லிட்டு இருக்க. முதல்ல கிளம்பு நாம ஹாஸ்பிடல் போகலாம்!”

“அதெல்லாம் ஒண்ணும் வேணாம். டேப்லெட் போட்டு தூங்கினா  சரியாகிடும்!”

“அப்ப போடு..”

“போடணும் இதோ.. நான் பார்த்துக்கிறேன். நீங்க போங்க. உங்களுக்கு வேலை இருக்கும்!”

“அதெல்லாம் உன்னை பர்ர்க்கிற வேலையை விட பெரிசா ஒண்ணுமில்ல! நீ டேப்லட் போடு” என்றவன்,

“ஏய்.. இரு,, இரு,, நீ சாப்பிட்டியா முதல்ல..?”

“இல்ல.. இன்னும் இல்ல..”

“முதல்ல சாப்பிடு.. அப்புறம் டேப்லெட் போடு.

என்ன இருக்கு உனக்கு சாப்பிட? நான் வேணுமின்னா ஆர்டர் பண்ணட்டா?”

“இல்ல வேணாம். ரசம் சாதம் இருக்கு.”

“அப்ப.. இரு எடுத்துட்டு வர்றேன். நீ சாப்பிடு” என்று லக்கி வைத்து விட்டு சென்றிருந்ததை ஸ்பூன் போட்டு எடுத்து வந்து அவளுக்கு ஊட்ட போனான்.

“இல்ல வேண்டாம். நானே சாப்பிட்டுக்கிறேன்” என்று அவன் கையில் இருந்து வாங்கி உண்டவலுக்கு நாலு வாய்க்கு மேல் செல்ல வில்லை!

வேண்டாம் என்று கீழே வைத்தாள்.

“ஏன் வச்சுட்ட?”

“இல்ல போதும். வாயெல்லாம் கசக்குது!”

“ஓ. வாய் கசக்குதா? அப்ப இனிக்க வைக்கட்டுமா?”, என்று சொல்லி அவளை இழுத்து முத்தமிட முயல,

“இல்ல.. இல்ல .. நான் சாப்பிட்டுடறேன்” என்று மீண்டும் சாதத்தை எடுத்து உண்ணத் துவங்கினாள்.

“அது..” என்று சொல்லி சிரித்தான் ஊட்டி.

அவள் சாப்பிட்டு முடித்த பின், கிண்ணத்தை எடுத்துப் போய் உள்ளே போட்டு விட்டு,

“ஏய். ஏய்.. உடனே படுக்காதே..” என்று படுக்க போனவளைத் தடுத்தான்.

“இல்ல.. முடியல.. நான் படுத்துக்கறேன்”.

“படுக்க வேண்டாம்.. வா.. இப்படி என் மேல சாய்ஞ்சுக்கோ.”‘ என்று அவளைத் தன் மேல் சாய்த்துக் கொண்டான் அவன்.

“ப்ளீஸ் என்னை விட்டுடுங்களேன்”

“விட மாட்டேன். பத்து நிமிஷம் இப்படி இரு, அப்புறம் டேப்லெட் போட்டுட்டு படுத்துக்கோ”.

“நான் இப்ப இருக்கிறத சொல்லல. எப்பவுமே சொல்றேன்!”

“எனக்கு புரியல!” என்றான் ரேவந்த் அவள் நெற்றியில் முத்தமிட்டவாறு!

“இத.. இத தான் சொல்றேன். என்னை விட்டுடுங்களேன். ப்ளீஸ்.

ஏன் இப்படி என்னை.. இப்படி..

 என்னைப் பார்த்தா பாவமா இல்லையா உங்களுக்கு?”

“ம்ம்.. பாவமாவா.. ம்ம்.. இல்லையே.. அப்ப என்ன பண்ணலாம்? பேசாம கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்றான் குறும்புடன்!

“ப்ளீஸ் விளையாட வேண்டாம்.. கொஞ்சம் சீரியஸா பேசணும் நான்!

எங்களுக்கு அம்மா அப்பா சொந்தம் பந்தம்னு இப்ப யாருமே இல்லை!

நான் பாட்டுக்கு நான் என் தங்கச்சிங்கன்னு ஒரு கூட்டுக்குள்ள இருக்கிற மாதிரி இருக்கேன்!

லக்கி எனக்கு ஒரு குழந்தை மாதிரி! அவ பொறந்தப்போ கையில் வாங்கினதே நான் தான்!

அன்னைலிருந்தே அவ எனக்கு மகள் மாதிரி!

குழந்தைங்க யாராவது அடிச்சாலோ இல்ல திட்டினாலோ அம்மான்னு தானே அழும்!

ஆனா லக்கி சீட்டின்னு என் பெயர் சொல்லி தான் அழும்!

இனியா கல்யாணத்துக்கு அப்புறம் தான் என்னை அக்கானு கூப்பிடவே ஆரம்பிச்சு இருக்கு!

அவள காட்டி, அவ  பேர சொல்லி சொல்லி, அவளை வச்சு என்னை மிரட்டி, நீங்க இப்படி நடந்துக்கிறது சரியா?

என்னைப் பார்த்தா உங்களுக்கு பாவமா இல்லையா?

நான் அப்படி பட்ட பொண்ணா? என்னை உங்களுக்கு சின்ன வயசுல இருந்தே தெரியுமில்ல!

என் மேல கொஞ்சம் இரக்கம் காட்ட கூடாதா?

நீங்க கேக்கலாம்! நான் கட்டிப்பிடிச்சா நீ ஏன் விலகிப் போகலைன்னு! எதிர்க்கலன்னு..

ஆனா அது தான் என்னால் முடியலையே!”

என்று சொல்லி விசும்பியவள்,

“எனக்கு உங்களை சின்ன வயசுல இருந்தே ரொம்ப பிடிக்கும்!

இப்பவும் ரொம்ப ரொம்ப பிடிக்குது தான்!

அதனால தான் உங்களைத் திட்டவோ தண்டிக்கவோ எனக்கு மனசு வர மாட்டேங்குது!

அதே சமயம் நீங்க பண்றது எல்லாம் சரியில்லையே!

ஒரு பொண்ணுக்கு அவ பேர் கெட்டுப் போறது ரொம்ப வலி இல்லையா!

உங்களுக்கு.. நீங்க இருக்கிற ஸ்டேட்டஸ்க்கு ஆயிரம் பொண்ணுங்க.. என்னை விட அழகா.. வசதியா, நிறைய படிச்ச பொண்ணா கிடைப்பாங்களே!

இல்லை.. இந்த மாதிரி லைஃப் ஸ்டைல்ல வாழ ஆசைப்படுற எத்தனையோ பேர் உங்களுக்கு கிடைப்பாங்களே!

 அவங்களை எல்லாம் விட்டுட்டு.. ஏன் இப்படி என்னை.. என் கிட்ட..

 என்கிட்ட போய் ..ஏன்.. இப்படி?” அவள் மெல்ல சத்தமிடாமல் அழுதாள்.

அழுத அவள் தலையை தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டு கேட்டான் ஊட்டி.

“பேசி முடிச்சிட்டியா? இல்ல இன்னும் ஏதாச்சும் இருக்கா?

என்ன சொன்ன?

உனக்கு யாரும் இல்லைனா.. அப்பா எனக்கும் ரேஷ்மாவுக்கும் மட்டும் யாரு இருக்கா?

ரேஷ்மாவுக்கு உன் கூட்டில் இடம் கொடுத்த இல்ல?

அப்ப என்னையும் உன் கூட்டுக்குள்ள சேர்த்துக்கோ.

நானும் அப்பா அம்மா இல்லாத பையன் தான்!

அப்புறம் என்ன சொன்ன?

லக்கி உனக்கு பொண்ணு மாதிரின்னா?

அப்ப எனக்கு யாருடி அவ?

பத்து வயசுல அவளை நீ குழந்தையா கையில் வாங்கினா, அப்ப பதினாலு வயசுல அவளைத் தூக்கி வைச்சுருந்த எனக்கும் மகள் மாதிரி தாண்டி!

அப்புறம் என்ன சொன்ன?

என்னை உனக்கு ரொம்ப பிடிக்கும்னு!

எனக்கும் உன்னை ரொம்ப.. ரொம்ப பிடிக்கும்டி!

அதனால தான் நான் இன்னுமும் கல்யாணமே பண்ணிக்காம இருக்கேன்!

ஏன்னா.. எனக்கு உன்னைத் தவிர வேற எந்த பொண்ணையும் எனக்கு பிடிக்கவே இல்லை!

 இனியும் பிடிக்காது தான்!

ஆனா எனக்கு நீ எங்க இருக்கிற..  எப்படி இருக்கிற ஒரு விசயமும் தெரியாது!

ஒரு வேளை உனக்கு இந்நேரம் கல்யாணம் கூட ஆகி இருக்கும்னு தான் நினைச்சுட்டு இருந்தேன்!

ஆனா அன்னிக்கு ரேஷ்மாவோட உன்னைப் பார்த்த பிறகு தான் எனக்கு மீண்டும் நம்பிக்கை வந்துச்சு!

ஆனா நீயோ விலகி ஓடின..

அதான் உன்னை என்கிட்ட வர வைக்க, சும்மா லக்கியை வச்சு உன்னை மிரட்டினேன்.

நீயும் அப்ப தான என்கிட்ட வந்த?

ஆனா என்னாலையும் ரொம்ப நாள் அந்த வில்லன் வேஷம் எல்லாம் போட முடியலடி!

உன் விசயத்துல நான் ரொம்ப டம்மி பீசு தான்!

என்னையும் உன் கூட்டுகுள்ள வச்சு, கண் கலங்காம காப்பாத்த வேண்டியது உன்னோட பொறுப்புடி என் டார்லிங்!” என்று சொல்லி அவளை இறுக்கிக் கொண்டான் ரேவந்த்.

ஹாங்.. என்று கண்ணை விரித்து அவனை நிமிர்ந்து பார்த்தாள் மதுரா!

“என்ன அப்படி பார்க்கிற?”

“இப்படியெல்லாம் பார்த்து வச்சா, காய்ச்சல் உடம்புக் காரின்னு கூட பார்க்க மாட்டேன்! பீ கேர்ஃபுல்!” என்று அவளை செல்லமாக எச்சரித்தான்!

அவளை தன்னுடன் இறுக்கிக் கொண்டே கேட்டான்.

“நான் கேட்டதக்கு இன்னும் பதில் வரலையே உன்கிட்ட இருந்து?”

“என்ன?”

“அதான் கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டேனே” என்றான் ரேவந்த் அவள் முகம் நிமிர்த்தி!

அண்ணன் காரன் இப்படி மதுராவிடம் கேட்டுக் கொண்டிருந்த அதே கேள்வியை தங்கையும் யுவியிடம் கேட்டுக் கொண்டிருந்தாள் இந்தியா திரும்பும் அந்த விமான பயணத்தின் போது அவன் தோளில் சாய்ந்து கொண்டு!

ஆனால் வேறு  தீய சக்திக்கும் ரொம்ப சரியாக மூக்கு வியர்த்தது!

அது..

அவர்களின் கார்டியன் – கேர் டேக்கர் ராம் அங்கிளின் மனைவி பார்வதி தான்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!