லட்சுக்கும்,சாலாக்கும்திருமணம்முடிந்து சரியாகஒருமாதம்கடந்தநிலையில்.இன்னும்வெகுவாகப்பின்னைந்துஇருந்தனர்ஐவரும் அதாவது வள்ளியப்பன் தொடங்கி, மீனா தொட்டு, சாலா வரை.முரண்டுபிடித்தகண்ணாத்தாள்கூடகாரைக்குடியில் அழகாகப்பொருந்திபோனாள்.
ஒவ்வொருமுறையும்அவள்தடுமாறும்போதும்மீனாள்தான்மருமகளுக்கு பக்கமிருந்து பக்குவமாக சொல்லிகொடுத்தாள்.என்னதான்ஒன்றாகஇருந்தாலும்கொஞ்சம்விலகலைகடைபற்றிநின்றாள்கண்ணாத்தாள்.ஒரு சொல் பேச்சுக்கு இனி ஆளாகி நிற்க கூடாது என்பது அவளுடைய உறுதி இதில் வள்ளிபன்னுக்கும் பங்குண்டு.
“லட்சுஐயா அப்போ எல்லாம் அடிக்கடிநேபால்போயிவருவாரு.நானும்தொழில்சங்கதினுஇருந்தேன், ஆனாஅவுகசூதுஆடஅங்கனபோயிருக்காகமதனி.நல்லாபணம்கொண்டவுகபொழங்குறஇடம் போல மதனி.அள்ளி கொட்டி அத்தனையும் கோட்டை விட்டாச்சு.
“அவுகசாகமுன்னுக்குலட்சுவைவெளிலசந்திக்கவரசொல்லி,ஆள்விட்டுதனியாபேசிருக்காக.காசுபோனதும்இல்லாமஅவுகஐயாசொத்துஅவருக்கேதெரியாமவித்துவச்சிருக்காக.இந்த நொடி வரை சொத்து போனது தெரியாது போல.இவுகவிட்டதைப்பிடின்னுஅத்தினியும்போச்சு.அந்தவெறுப்பைஎங்ககிட்டவச்சுதள்ளிநிறுத்தியாச்சு“
“இதுஎன்னஅநியாயமாஇருக்குஅவுகசெஞ்சதுக்குநீகஎன்னசெய்வீக.சரிமீனாஅந்தப்புள்ளஅங்கனவந்த கதை என்ன கதை?“
சுத்தமுட்டாள்தனம்மது,மாது,சூதுமூன்றும்நெறிதவறியஒன்றுஇதனைத்தொட்டால்அழிவுஎன்பதைப்பெரியோர்கள்நித்தம்நித்தம்சொல்லி படிப்பினை வைத்து கொண்டு தானே இருக்கிறார்கள்.அதையும் மீறி உள்ளே விழுந்தால்? திடமான மனம் இல்லை என்று தானே அர்த்தம் இந்த சோமுவும் அப்படி தான் போலும்.
“என்ன சொல்லுறதுனே தெரியல இத்தினி வருஷம் செண்டு இதை சொல்லிக்கிட்டு அவர் முடிவையும் தேட வேண்டிய அவசியந்தேன் என்ன?இதுனாலயாருக்குஎன்னலாபம்?” பெரும் குழப்பமாக இருந்தது கண்ணாத்தாளுக்கு.
“போகும் போது நல்லவருனு பேர் வாங்கி நாங்க கையெடுத்து கும்பிட்டு இருப்போமுன்னு எண்ணம் போல மதனி.இந்த சங்கதி சொல்லாம இருந்தாலாவது லட்சு கொல்லி சட்டி தூக்கிருப்பாக இதை கேட்ட உடனே அவுங்களுக்கு இன்னும் கோபம்.இதை அவுகளே சொன்னாக.
‘ஆத்தா ஐயா இதை பேசாம இருந்திருக்கலாம் அவரை கொண்டு நல்லவன்னு காட்டி நிற்க உண்மையை சொல்லி கோழைனு பேர் வாங்கி நின்னது தான் மிச்சம்.
“விடுக மீனா அவர் பாடு இப்படித்தேன் முடியும்ன்னு இருக்கு.என்ன இதை லட்சுவை கூப்புட்டு சொன்னதுக்கு அவுக ஐயாவ கூப்புட்டு வச்சு சொல்லிருக்கலாம்” அண்ணாமலை பேச்சு இங்கணம் நியாபகம் வந்து பெரும் எரிச்சலை கொடுத்தது கண்ணாத்தாளுக்கு.
இப்படி பட்ட மகனை வைத்து எத்தனை ஜம்பம் பேசி வைத்தார். அதுவும் சபையில் அத்தனை பெரியவர்கள் முன்னில்.கணவன்,மகள் என்று பாரபட்சம் இல்லாமல் அவர் பேசியது இன்னும் கண்ணாத்தாளுக்கு வடுவாக தான் இருந்தது.அதனை எல்லாம் எண்ணி உள்ளம் கொதித்தாலும் நேர் குணம் கொண்டவளாக.
“மீனா இதை நீக எல்லாத்துக்கும் சொல்லிக்கிட்டு இருக்காதீக ஒருத்தர் எண்ணம் போல ஒருத்தர் எண்ணம் சரியா இருக்காது உங்க அண்ணன் உற்பட சொல்லவேண்டியஅவசியம்இல்லை”
“இல்ல மதனி லட்சு எனக்கு மட்டுந்தேன் தெரியும் லட்சு வள்ளி அண்ணன் கிட்ட கண்டிப்பா சொல்லி இருப்பாக உங்ககிட்ட நான் என்னத்த மறைஞ்சு பேசிருக்கேன் அதேன் சொன்னேன்”
“ஹ்ம்ம்! இந்தப் பேச்சை வச்சு இன்னும் பொருமிக்கிட்டு நொந்து கிடக்க வேண்டியதில்லைவிடுக நம்ப பொழைப்பைபார்ப்போம்” என்ற கண்ணாத்தாள் மீனாவையும் யோசிக்க விடாமல் வேலையில் இழுத்து கொண்டாள்.
அதன் பின் நேரம் இறக்கை விரித்துப் பறக்க சரியாக நடு நாசி பிடிக்கும் வேளையில் ஊரில் இருந்து வந்தான் லட்சுமணன்.இரவில் வந்து கதவை தட்ட தூக்கம் சுழட்டி அடிக்க அதனை முயன்று தள்ளி விழித்தும் விழிக்காமல் வந்து கதவை திறந்தாள் சாலா.
கதவை திறந்த வேகத்தில் நிமிர்ந்தவன் தூங்கி வழியும் மனைவியைக் கண்டு சிறு புன்னகை கொண்டு,” என்ன சாலா ஆச்சி சாமி ஆடி வைக்கிறீக” என்றவன் கதவை மூடி தாழிட்டு திரும்பிஅவளை நெருங்கிநிற்க.
“வாக” என்றவள் மீண்டும் அறைக்குச் செல்ல தள்ளாடி செல்லநொடியில்அவளைகைகளில்அள்ளிகொண்டான்.
“என்ன ஆச்சி? போதை கண்டவன் கணக்கா இந்த ஆட்டம்” அவனதுபேச்சில் முயன்று முழித்து லட்சுவைமுறைக்க.
“என்னக?”
“ராகோழி கணக்கா வந்துட்டு என்னை ரேக்கி வைக்காதீக ஒன்னு விடிஞ்சு பஸ் ஏறி வரணும். இல்லையா பொழுதுக்கு ஏறி வந்திருக்கனும் அது என்ன ரெண்டுக் கட்டான் நேரத்துல வர்ரது”
“ஆஹா! புதுசா கல்யாணம் பண்ண மாப்பிள்ளை ராவுலதேன் வரணும்.வேலைமுடிஞ்சகையோட சாலாஆச்சியதேடிஓடிவந்தாபேச்சைபாருக? ” என்றதும் இன்னும் நன்றாக விழித்துகொண்டவள்.
“சாப்புடுக தோசை வார்த்து வைக்கிறேன்”
“சாப்பிட்டேன்” என்றவன் உள்ளே சென்று தன்னைச் சுத்த படுத்திக் கொண்டவன், உடைகளை மாற்றிக் கொண்டு சாலாவின் அருகில் வந்து அமர்ந்து கொள்ள.
அதற்காகவே காத்திருந்தவள் போல்அவனது நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.இருவரும் சில நொடிகள் மௌனம் கொண்டு இந்ததருணத்தைஅழகாக ரசித்து கடந்துகொண்டிருந்தனர்.முதலில் தெளிந்த சாலா அவனிடமிருந்து விலகி.
“வாக படுக்கலாம் என்றவள் படுத்து கொள்ள அவனும் அவள் அருகில் படுத்து கொண்டவன் அவளது விரல்களைப் பிடித்து மெல்லமாக நீவி நெட்டி எடுக்கச் சுகமாக இருந்தது.
இடது கையைக் கொடுத்தவள், இப்போது வலது கையையும் அவனிடம் கொடுத்து விடச் சிறு புன்னகையுடன் அத்தனையும் நீட்டி முறித்துக் கொண்டே,”ஏங்க சாலா ஆச்சி உங்களுக்குப் புத்தகம் படிக்கப் புடிக்குமா?”இரவுவேளையில்அதுவும்தூக்கம்சுழட்டஎதற்குஇந்தகேள்விஎன்றுதெரியவிட்டாலும்கணவனுக்குபதில்சொன்னாள்அரிவை.
“ஹ்ம்ம்! புடிக்குமே”
“அப்புறம் ஏன் இந்தபடிக்காம இருக்கீக” என்றதும் அவன் புறம் திரும்பி படுத்தவள்.
“என்ன புத்தகம்? எங்க இருக்கு?”
“உங்க கண்ணு முன்னுக்குத்தேன் லட்சுனுஒருபுத்தகம்” என்றதும் முதலில் புரியாமல் குழம்பியவள் பின்பு எதோ புரிய சிறு புன்னகையுடன் அவனதுநெஞ்சில்சரிந்து படுத்து கொண்டாள்.
“லட்சு புத்தகத்தைப் படிச்சாத்தேன் ஆதி முதல் அந்தம் வரை புரியும். நீக இந்தப் புத்தகத்தை வாங்குன கையோட கிடாசி வச்சுடீக”
லட்சுவின்பேச்சில்வெடுக்கென தலையைதூக்கிஅவனைபார்த்தவள்.அவனது கன்னத்தைக் கிள்ளி,” என்ன பேச்சு பேசுறீக? அப்பவும் புத்தகம் நினைப்புதேன் உதாரணம் கூடப் பொறுப்பா வருதே” என்றவள் இன்னும் கன்னம் கிள்ளி கொஞ்சி வைத்தாள் தனதுகள்ளனை.
“ப்ச்! பேச்ச மாத்தி வைக்காதீக உங்கள படிக்க ரொம்ப அவகாசமாகி போச்சு” என்றவன் அவள் கன்னத்தை மெல்ல வருடினான்.
“லட்சு உங்களை நான் இப்படியெல்லாம் பேசுற ஆளுன்னு எண்ணி வைக்கவே இல்ல தெரியுமா?பார்க்கசிரிச்சமேனிக்குசமத்தாஇருந்துகிட்டுபண்ணுறசேட்டைகொஞ்சம்நஞ்சம்இல்லை.வெளிலநான்சொன்னாகூடயாரும்நம்பமாட்டாக.உங்களைபத்திஎனக்குதெரியவேஇல்லை“சிறுசலிப்பாகசொன்னவளைசிரிப்புடன்பார்த்தவன்.
“அதேன் சொல்லுறேன் கூட வளர்ந்தே என்னைப் பத்தி எதுவும் தெரியாம இருக்கீக வாக சாலாஆச்சிஒருத்தரைஒருத்தர்முதல முழுசா படிச்சுக்கிடலாம் அப்போதேன்என்னைபத்திமுழுசாதெரியும்” என்றவன் கண் இமைக்கும் நேரத்தில் அவளை அனைத்து தூக்கிகொள்ள.
கொஞ்சமாகத் தடுமாறி அவனை பிடித்துகொண்டவளை நேர்பார்வைபார்த்து, “சாலா!”
“ஹ்ம்ம்!”
“படிக்கலாம்வாக”முகம்பார்த்துகேட்கஅவனில்புதைந்துகொண்டாள்.சாலாவைரசித்து, ரசித்துப் புசித்து நின்றான் லட்சுமணன்.மருத்துவன் பெரும் ரசனைகாரன் போலும் உச்சியில் தொடங்கி உள்ளங்கால் ரேகை வரை ஆராய்ச்சி செய்து ஒவ்வொரு வரியாக அவளையும் படிக்கச் செய்து தானும் படித்து தேர்ச்சிபெற்றான்.