Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

இடம் தருவாயா மனசுக்குள்ளே?? 21

மனசு 21
வீட்டிற்கு அனைவரும் செல்ல, சித்ரலேகா இரு ஜோடிகளுக்கும் ஆராத்தி எடுத்து அவர்களை உள்ளே அனுப்பினாள்.
மூத்த மருமகள் விளக்கேற்றி வீட்டை பிரகாசிக்க செய்ய, இரு ஜோடிகளுக்கும் பால் பழம் கொடுத்தனர். பின் ஓய்வெடுக்க சென்று விட்டனர்.


Advertisement

மாலை நேரம் விதார்த் பாட்டியை தனியே அழைத்து, பாப்பாவ கண்டிப்பா அண்ணா அவனறைக்கு கூட்டிட்டு போக தான் பிளான் போட்ருப்பான். பாப்பாவ சித்ராக்காட்ட குடுத்து பாத்துக்க சொல்லுங்க. அண்ணா கைக்கு பாப்பா இரவு மட்டும் போகாம பாத்துக்கோங்க…

Advertisement

சரியா சொன்ன விது. இவன் செஞ்சாலும் செய்வான். சித்ராவ பாத்துக்க சொல்லலாம்.

Advertisement

“யாரும் சொல்ல வேண்டாம். பாப்பா ஒரு மாசத்துக்கு என்னோட தான் தூங்கப் போறா…” சித்ரலேகா குரலில் இருவரும் திடுக்கிட்டனர்.

Advertisement

இப்படி தான் ரகசியம் பேசுவீங்களா? உதய் மட்டும் பார்த்திருக்கணும்…அவ்வளவு தான்..
அதான் அண்ணா பாக்கலையே!
இன்பவேணி ஜான்வியுடன் பேசிக் கொண்டிருக்க, இருவரையும் அவ்வப்போது கவனித்துக் கொண்டிருந்தான் உதய்கிருஷ்ணா.
கோசலையும் மானவ்வும் வந்தனர்.
ராமநாதனும் பாட்டியும் அவர்களை முறையாக வரவேற்க, “வாங்க ஆன்ட்டி” என்பதோடு உதய்கிருஷ்ணா நிறுத்திக் கொள்ள, விதார்த் அவரிடம் வந்து…
ஆன்ட்டி முகம் பொலிவா இருக்கு. சும்மா மின்னுறீங்க போங்க..ஃபேஸ் கிரீம் எதுவும் போட்டீங்களா?
அவர் புன்னகைக்க, பாட்டி விதார்த் காதை திருகி…
“கோசலை இனிமே உன்னோட மாமியாரு. பாத்து பேசு இல்ல சாயாவ அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுவாங்க” கேலி செய்தார்.
கோசலை மீண்டும் புன்னகைக்க, மகள் தாயின் புன்னகையில் மனதில் மகிழ்ந்தாள்.
சாந்தி முகூர்த்தம் பாக்க சொன்னீங்கல்லம்மா…அதான் நேரம் குறிச்சிட்டு வந்துருக்கோம்…
“குடும்மா..” பாட்டி வாங்கி பார்க்க, தாத்தா குறுகுறுவென உதய்கிருஷ்ணாவை பார்த்தார்.
“யாருக்கோ??” என்பது போல அவன் அமர்ந்திருந்தான்.
பாட்டி தாத்தாவை முறைக்க, கோசலை பார்க்கவும் முகத்தை மாற்றிக் கொண்டார் தாத்தா.
மானவ் அனீஷை தூக்க, இரவு அவன் சாப்பிடவும் அவன நான் உங்க வீட்ல விட வாரேன் என்றாள் சித்ரலேகா.
மானவ் அனீஷை பார்க்க, அவன் வேகமாக ஓடி மானவ்வை தூக்க சொன்னான்.
சித்ரலேகா அவனை புரியாமல் பார்க்க, எல்லாரையும் பார்த்த மானவ்வின் பார்வை தாத்தாவிடம் நிலைத்தது. சித்ரலேகாவிற்கு புரிந்து போனது. தாத்தா அவனை ஏதோ கூறி இருக்கிறார் என்று. அவளால் தாத்தாவிடம் எப்படி பேச முடியும்? மௌனமானாள்.
“இன்னிக்கு நைட் அனீஷூக்கு பிடிச்ச குஜராத்தி டிஸ் பண்ணப் போறேன். சொல்லி இருந்தேன். அதான் புள்ள எங்கட்ட வந்துட்டான்” சமாளித்த கோசலை,
“சரிம்மா, நாங்க வாரோம்” என இரு மகள்கள் கையில் மானவ் கையிலிருந்த கவரை திணித்து, “சந்தோசமா இருங்க” என வாழ்த்தி சென்றாலும் இன்பவேணியை திரும்பி ஒரு பார்வை பார்த்தார். அவள் புன்னகைக்க சென்று விட்டார்.
சித்ரலேகா பெருமூச்சுடன் அவளை பார்த்து, “பாப்பாவுக்கு உணவு கொடுக்கணும்”..என ஜான்வியை வாங்க,
மருமகள்கள தயார் படுத்துவன்னு பாத்தா..??? ஜானுவ நான் பாத்துக்கிறேன். நீ அவங்கள தயார் படுத்து” என பாட்டி சொல்ல, இருவருடன் சித்ரலேகா அவரறைக்கு சென்றார்.
விதார்த் உதய்கிருஷ்ணாவை பார்க்க இதழ் வளைத்தான் அவன்.
“என்ன செய்யவிருக்கிறானோ?” என விதார்த் தயாராக சென்றான். அனைவருக்கும் உணவு அவரவர் இடத்திற்கே புது வேலையாளிடம் உணவை கொடுத்து விட்டார் பாட்டி.
இரு பெண்களும் பாட்டியிடம் ஆசி பெற்று மாப்பிள்ளை அறைக்கு சென்றனர்.
இன்பவேணி உதய்கிருஷ்ணா அறைக்குள் நுழைய, படுக்கையில் சாய்ந்து கண்மூடி அமர்ந்திருந்தான். மனைவி வந்ததை உணர்ந்து அவன் விழிகள் திறக்கப்படவில்லை.
சில நொடிகளே அவனை பார்த்த இன்பவேணி பால் செம்பை அவனருகே இருந்த மேசை மீது வைத்து படுக்கையின் மறுபக்கம் அமர்ந்தாள்.
விழிகளை திறந்து அவளை பார்த்தான் உதய்கிருஷ்ணா.
ஒப்பனையுடன் அழகான பெண்மையில் மிளிர்ந்தாள் அவள். விழிகளை இறுக மூடி திறந்து பேசினான்.
“நீ என்ட எந்த உரிமையும் எடுக்கணும்னு நினைக்காத. சிறு தொடுதல் கூட நம்மட்ட இருக்கக் கூடாது. முழுக்க முழுக்க நம் திருமணம் ஜான்விக்காக தான். அவள ஒழுங்கா பாத்துக்கோ. யார் முன்னாடியும் நடிக்கணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை. அவங்க பாக்குறாங்க அவங்களுக்காகன்னு என்னை நெருங்க நினைக்காத. தேவையில்லாம என்ட பேசாத. போன ரெண்டு வாரமா பேசுறேன்னு என்ன கொன்னுட்ட. படுத்துக்கோ” என்று எவ்வித பதிலும் எதிர்பாராமல் படுத்து விட்டான்.
வழிந்த நீரை துடைத்து எழுந்து ஆடை மாற்றி வந்து படுத்தாள் இன்பவேணி.
அவ்வளவு தான் இனி என் வாழ்க்கை. அருகிலிருந்தாவது வாழலாம் என எண்ணி திருமணம் செய்ய இன்பவேணி உதய்கிருஷ்ணாவிடம் கேட்டாலும் மனதினுள் அவனுடன் வாழும் வாழ்க்கையை கோட்டை கட்டி இருந்தாள். மொத்தமாக இடித்து தகர்த்தி விட்டது அவனது வார்த்தைகள். அதுவும் தாலி கட்டிய மறுநிமிடமே!
உறங்க முடியாமல் இன்பவேணி எழுந்து அவள் ஆடைகள் வைத்திருந்த அலமாரியை திறந்து சிறிய கண்ணாடி பாட்டிலை திறந்து அதிலிருந்த மாத்திரை ஒன்றை வாயில் போட்டு உதய்கிருஷ்ணா இல்லாதது போலவே அவனருகே வந்து செம்பில் இருந்த பாலை அருந்தினாள்.
அவள் எழும் அரவம் தெரிந்து விழித்திருந்த உதய்கிருஷ்ணா அவளை பார்க்காமலே, என்ன செய்கிறாள் கவனித்தான். அவனுக்கு அவள் மாத்திரை போட்டது தெரியவில்லை. அலமாரியில் ஏதோ எடுக்கிறாள் என்று நினைத்தவன் இன்பவேணி அருகே வரவும் மனம் அடித்துக் கொண்டது. ஆனால் அவளோ உணர்வில்லா ஜடம் போல பாலை அருந்தி போர்வையை முழுதாக இழுத்து மூடி படுத்து விட்டாள்.
தூக்க மாத்திரையின் உபயோகத்தால் நன்கு உறங்கி விட்டாள் இன்பவேணி. உதய்கிருஷ்ணா விழித்து அடிக்கடி அவளை கவனிக்க, அவள் நகர்ந்தாலில்லை. அவனும் உறங்கி விட்டான்.
 “காயமே வாழ்க்கையா
 என் பிழை இல்லையே!
  போதுமே ஏக்கமும்
  கீறுதே என்னையே
 கானலாகிப் போகுமா
 காலமும் சேருமா???
 ஆழமான ஆசைகள்
 வானமாகித் தூருமா???”
விதார்த் அறைக்கு சாயாலி செல்ல, அவளுக்காக காத்திருந்த விதார்த் அவள் பாலை கொடுக்கவும் வாங்கி மேசை மீது வைத்து பட்டென அவள் காலில் விழுந்து விட்டான்.
“விது மாமா, என்ன பண்றீங்க?” பதறி சாயாலி முன் இரு கால்களையும் மடக்கி அமர்ந்தாள்.
அவளது மடியில் முகம் புதைத்து, சாரி சாரி சாயா…நான் மட்டும் பப்புக்கு போகலைன்னா நீ கஷ்டப்பட்டிருக்க தேவையில்லை. அண்ணா, பாட்டி, ஆன்ட்டி….எல்லாரும் உன்னை ரொம்ப திட்டி அடிச்சிட்டாங்க…அவள் முகம் பார்த்தான்.
முடிஞ்சது எதுக்கு மாமா. எழுந்துருங்க. எனக்கு உங்க கெல்ப் வேணும்..
ஆமா எனக்கும் சாயா..
அக்காவையும் மாமாவையும் சேர்த்து வைக்கணும். ஏதாவது செய்யணும். பிளான் எதுவும் வச்சிருக்கீங்களா? படுக்கையில் அமர்ந்தாள்.
விதார்த் அவளையே பார்த்தான்.
என்ன மாமா???
இல்ல, இன்னு என்னோட சைல்டுகுட் ப்ரெண்டு, சொந்த அண்ணா. நான் அவங்க வாழ்க்கையில நல்லா இருக்கணும்னு தீவிரமா இருக்கேன். ஆனா நீ எப்படி??
அண்ணாவையும் நீ பாத்ததில்ல. இன்னுவ ஒரு நாலு வருசமா உனக்கு தெரியுமா? அதுக்குள்ள எப்படி இவ்வளவு உரிமையா நடந்துக்கிற? உன் வாழ்க்கையை விட அவங்க வாழ்க்கைய பத்தி யோசிக்கிற??
இத மட்டும் கேக்காதீங்க மாமா. இதுக்கு பதில் அக்காட்ட தான் இருக்கு. அவங்க தான் உங்களுக்கு சொல்லணும்..
இன்னுட்ட கேட்டுக்கிறேன்.
அது அவ்வளவு சாதாரண விசயமில்லை. அக்காட்ட அத பத்தி மட்டும் வாங்கவே முடியாது…
ஏன்???
நீங்க அவங்கட்டவே ட்ரை பண்ணுங்க மாமா..
சரி, நாளைக்கு கோவிலுக்கு போகணும். அவங்க இருவரும் பிரிந்து நிற்க கூட கூடாது. புரியுதுல. ஏதாவது செஞ்சு இருவரும் பக்கத்துலவே இருக்க வைக்கணும்..
அதெல்லாம் இருப்பாங்க மாமா..
ஏய்ய்..என்னோட அண்ணாவ உனக்கு தெரியாது. அந்த பிரியங்கா ஒரு நாள் கூட அண்ணா பக்கத்துல நின்னது கூடயில்ல. அப்படி நடந்துட்டான்..
என்ன செஞ்சாங்க???
அவன் பார்வையிலே பிரியங்கா ஓடிருவா..
அக்காட்ட அதெல்லாம் நடக்காது.
ம்ம்!! முன்னாடின்னா நீ சொல்றது சரி. ஆனா இப்ப இல்ல. அண்ணா இப்படி குடும்ப மானம், கௌரவம்னு பிரியங்கா செஞ்சத மறைச்சு வாழ்ந்திருக்கான். ஒரு வேளை இதே குடும்ப மானம் கௌரவத்துக்காக அன்று இன்னு குடும்பத்துடன் பிரச்சனை வரலைன்னாலும் இன்னுவ கை விட்ருப்பானோன்னு தோணுது. பாவம் அவ அவனோட வார்த்தையில உடைஞ்சு போயிட்டா. பாத்தேன். அவ்வளவு வலி அவ கண்ணுல தெரிஞ்சது…
சாயாலி மௌனம் காத்தாள்.
“நீ எதையும் யோசிக்காத. நாளைக்கு நாம மத்தத பாத்துக்கலாம்..” என்று அவளை உச்சி முதல் பாதம் வரை விழிகளால் வருடினான்.
மாமா இப்படி பாக்காதீங்க. எனக்கு ஒரு மாதிரி இருக்கு.
இப்படி அழகா இருந்தா நான் எப்படி பாக்காம இருப்பேன்? மேடம் என்னோட பொண்டாட்டி. நான் பாக்க மட்டுமல்ல என்ன வேணும்னாலும் செய்யலாம். எனக்கு லைசன்ஸ் கிடைச்சிருச்சே! குறும்புடன் கூறினான்.
ச்சீ..போ மாமா..
“அதெப்படி அழகான பொண்டாட்டிய விட்டு போவேன்” சாயாலியை அணைத்துக் கொண்டான் விதார்த். இருவருக்கும் அவ்விரவு தூங்கா இரவாகிப் போனது.
பாட்டி அறையில் தாத்தா கால் மீது கால் போட்டு எம் பேரன் அப்படியே என்னை போல என்றார் மிடுக்குடன்.
பாட்டி அவரை கண்டுகொள்ளாமல் இருக்க, எம் பேத்திக்கு அம்மா வேணும்னு தான் கல்யாணம் பண்ணிட்டான். சாந்தி முகூர்த்தமெல்லாம் எதுவும் நடக்காது. எம் பேரன் நடக்க விடவும் மாட்டான் என்றார் தலைக்கு பின் கை கட்டி.
கொதித்த பாட்டி, தலையணையால் தாத்தாவை அடித்தார்.
“பாவி மனுசா..புள்ளைங்களுக்கு இன்னிக்கு முதலிரவு. புள்ளைங்க நல்லா இருக்கணும்னு நினைக்காம உன்ன மாதிரி உதய் இருக்கான்னு சந்தோசப்படுற. அவனுக்கு பிடிச்ச பொண்ண கல்யாணம் பண்ணி வச்சிருக்கேன் கிழவா. நீ நினைக்கிற மாதிரி இப்ப நடந்தாலும் காலம் உதய்கு எல்லாத்தையும் புரிய வைக்கும். எம் பேரன் உதயும் எம் பேத்தி வேணியும் சந்தோசமா வாழப் போறாங்க. நீ பாக்க தான் போற…” முந்தானையை உதறி மீண்டும் சொருகினார்.
பகபகவென தாத்தா சிரிக்க,
அலமாரியை திறந்து பைல் ஒன்றை தாத்தாவிடம் கொடுத்து, இது நம்மோட விவாகரத்து பத்திரம். கையெழுத்து போட்டு தாரேன்னு சொன்னேல்ல.. போடு..போட்டுட்டு போய்ட்டே இரு…
தாத்தா முகம் சீரியசாக, என்னால கையெழுத்து போட முடியாது என்றார்.
ஏன் முடியாது?
நீ நம்ம வீட்டுக்கு வா..
“எனக்கு விருப்பமில்லை. எனக்கு கையெழுத்து போட்டு குடுத்திருங்க. ரொம்ப கஷ்டப்பட்டு வக்கீல் புடிச்சிருக்கேன் “என சொல்லி சித்ரலேகா அறைக்கு சென்று படுத்துக் கொண்டார்.
பாட்டி, இங்க என்ன பண்றீங்க?
கம்முன்னு படுடி..
விழித்து அவரை பார்த்து வெளியே வந்தாள். கோசலை வீடு பூட்டி இருந்தது. வெளியே கயிற்றுக் கட்டிலில் நிலவை பார்த்தவாறு மானவ் படுத்திருந்தான்.
“இவனிடம் சொல்லலாமா? வேண்டாமா?” அவனை பார்க்க, அவன் அவளை கவனிக்கவேயில்லை. உள்ளே சென்று பாட்டியுடன் படுத்து விட்டாள்.
காலை விடியலில் சித்ரலேகா, பாட்டி, கோசலை, மானவ் பரபரப்புடன் வேலை செய்து கொண்டிருக்க, “சித்ரா மானவ்வோட போய் மாலையும் பூஜை சாமானும் வாங்கிட்டு வா” என்றார் பாட்டி.
“வேண்டாம் பாட்டி. நானே போயிட்டு வாறேன்” காதை கடித்தாள் சித்ரலேகா.
“போடி…நேரமாகுது. மானவ் சித்ராவை அழைச்சிட்டு போ” பாட்டி சொல்ல, அவன் கோசலையை பார்த்தான்.
போயிட்டு வா மானவ். எங்களுக்கு இங்க வேல இருக்கு…என்றார்.
முணுமுணுத்தவாறு மானவ் காரில் சித்ரலேகா ஏறினாள்.
சீட் பெல்ட் போடு என்றான்.
சித்ரலேகா போட தெரியாமல் மானவ்வை பார்க்க, அவன் போட்டு விட்டு இடத்தை அவளிடம் கேட்டு மேப் போட்டு சென்றான்.
குழந்தைகள் இருவரும் விளையாட, ஜான்விக்கு அனீஷூடன் விளையாடுவது பிடித்திருந்தது. இருவரையும் பார்த்துக் கொண்டே கோசலை வேலைக்காரம்மா போட்டு வைத்திருந்த தேனீரை மகள், மருமகன்களுக்கு கொடுக்க எடுத்து அவர்கள் அறை நோக்கி செல்ல, கீழே மேக்னா வந்திருந்தாள்.
உதய் அறை அருகே கோசலை வர, உதய்கிருஷ்ணா கதவை திறந்து தயாராகி வந்தான். மனம் வருத்தமானது. திருமண தம்பதியினர் இவர்கள். ஏழு மணிக்கே உதய் தயாராகி நிற்க, கோசலை மனம் கசந்தது.
மாப்பிள்ள டீ எடுத்துக்கோங்க…
எடுத்து கீழே சென்றான்.
அறையினுள் வந்தவர் மகள் ஆபிஸ் செல்லும் ஆடையில் இருப்பதை பார்த்து, “என்னடி டிரஸ் பண்ணி இருக்க?” கோபமானார் கோசலை.
ஆபிஸ்கு போகணும்..
மாப்பிள்ள வீட்டு குலதெய்வம் கோவிலுக்கு போகணும்டி..
யாரும் என்ட சொல்லலை..
“சரி சரி…புடவைய மாத்தி புறப்பட்டு வா…” என தேனீரை மகளிடம் கொடுத்து, “கொஞ்ச நாள் மாப்பிள்ள இப்படி தான் இருப்பார். அப்புறம் சரியாகிடும்” என்று மகள் தலையை ஆதூறமாக வருடினார்.
அன்னையை ஒரு பார்வை பார்த்து ஏதும் சொல்லாமல் புடவையை எடுத்து சென்றாள்.
பெருமூச்சுடன் விதார்த் அறைக்கு சென்று கதவை தட்டினார்.
“மாமா..எழுந்திருங்க. யாரோ கதவ தட்டுறாங்க. என்னால போக முடியாது” விதார்த்தை எழுப்பினாள் சாயாலி.
தூங்க விடு சாயா..
“மாமா..கோவிலுக்கு போகணும்னு சொன்னாங்க. நான் குளிக்க போறேன். நீங்க யாருன்னு பாருங்க” என குளியலறைக்குள் புகுந்தாள்.
விதார்த் கதவை திறக்க, மாப்பிள்ள சாயா..
ஆன்ட்டி என்னை எப்போதும் போல விதுன்னே கூப்பிடுங்க.
“இல்லை” தலையசைத்தவர், கோவிலுக்கு போகணும். சாயா எங்க மாப்பிள்ள?
“உஃப்” ஊதி, குளிக்க போயிருக்கா ஆன்ட்டி..
அவனை பார்த்து புன்னகைத்தவர், “சீக்கிரம் வந்துருங்க…சீக்கிரம்” என்பதை அழுத்தி கூறி இருவருக்கும் தேனீர் கொடுத்து மலர்ந்த முகத்துடன் சென்றார்.
விதார்த் வெட்கமுடன் தலை கோதி அறையினுள் சென்றான்.
இன்பவேணி புடவை நகை என நேர்த்தியாக வந்தாள். அவளை பார்க்கவும் விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகள் இருவரும் அவளிடம் வந்து கட்டிக் கொண்டனர்.
ஜான்வியை இன்பவேணி தூக்க, அனீஷ் அவளை பார்த்து குஜராத்தி மொழியில், “ரொம்ப அழகா இருக்க வேணி” என்றான்.
எல்லாரும் அவனை பார்க்க, விழிகள் கலங்க ஜான்வியை இறக்கி விட்டு அனீஷ் கன்னத்தில் முத்தமிட்டு அவனை தூக்கி விழிகளால் மானவ்வை தேடினாள்.
மானவ்வும் சித்ரலேகாவும் உள்ளே வந்தனர். இரு கையிலும் பொருட்கள் இருந்தது.
இது வேற..என வேஷ்டி அணிந்து நடக்க முடியாமல் வந்து கொண்டிருந்தான் மானவ்.
இன்பவேணி அனீஷை தூக்கிக் கொண்டு அவனிடம் ஓடி வந்தாள். புடவை தட்டி சித்ரலேகாவை மோத, அவள் கையிலிருந்த பொருட்களுடன் அவள் தடுமாற, சித்ரலேகாவை பிடித்த மானவ்…
“எதுக்கு இவ்வளவு வேகமா ஓடி வர்ற?” இன்பவேணியை அதட்டினான்.
சித்ரலேகா மானவ்வை பார்க்க, அவளை நகர்த்தி இன்பவேணியை பார்த்தான்.
மானவ்..அனீஷ் அனீஷ்..பேசுனான்..என அவன் கூறியதை சொல்ல, மானவ்விற்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.
கையிலிருந்த பொருட்களை கீழே வைத்து அனீஷை தூக்கி, அனீஷ்..பேசு பேசு…என அவனை மானவ் ஊக்க, ஊஹூம்..அனீஷிடம் பதிலில்லை.
ஏமாற்றமுடன் இன்பவேணியை பார்த்தான் மானவ்.
“பாட்டி, அம்மா நீங்க பாத்தீங்கல்ல? அனீஷ் பேசுனான்ல?” இன்பவேணி உணர்ச்சி வசப்பட,அங்கே ஒருவன் நாடகம் பார்ப்பது போல பார்த்துக் கொண்டிருந்தான்.
ஆமா மானவ் அனீஷ் பேசுனான். கவலைப்படாத…சீக்கிரம் பேசுவான்..
அனீஷ் மானவ்விடமிருந்து இறங்கி சித்ரலேகா அருகே அவள் முந்தானையை பிடித்து நின்று கொண்டான்.
மனச்சோர்வுடன் மானவ் உதய்கிருஷ்ணாவிற்கு எதிரே அமர்ந்தான்.
கோசலை வேகமாக நீர் எடுத்து வந்து மானவ்விற்கு கொடுத்தார்.
“இவன் ஆன்ட்டிக்கு இவ்வளவு முக்கியமா?” என கோசலையையும் மனைவியையும் பார்த்தான் உதய்கிருஷ்ணா.
விதார்த் சாயாலி வரவும் குடும்பமாக கோவிலுக்கு கிளம்பினார்கள்.
கோவிலில் பொங்கல் வைத்து வழிபாட்டை தொடங்க, உதய்கிருஷ்ணா தம்பதியினரிடம் மாலையை பூசாரியிடம் கொடுக்க சொன்னார் பாட்டி.
உதய் மாலையுடன் அருகே செல்ல, இன்பவேணியையும் பிடித்து கொடுக்க சொன்னார்கள்.
இன்பவேணி விரல் உதய்கிருஷ்ணா கையில் படவும் அவன் கையிலிருந்த மாலை தவறியது. பூசாரி அவனை கோபமாக பார்த்தார். இன்பவேணிக்கு மேலும் மனம் இறுகியது.
“உதய்…” தாத்தா கோபமாக அழைத்தார்.
மாலையை எடுக்க சென்ற உதய்கிருஷ்ணாவை நிறுத்திய பூசாரி, சித்ரலேகாவை கையாலே அழைத்து அதனை ஒரமாக வைக்க சொல்லி அறிவுறுத்தினார்.
“மானவ் மாலை ஒண்ணு வாங்கிட்டு வா” பாட்டி சொல்ல,
அவரை தடுத்து, மற்ற மாலைகளை எடுத்து சுவாமிக்கு போட்டு தரிசனம் முடித்து விபூதி குங்குமம் கொடுத்து இரு தம்பதியினரை அழைத்தார் பூசாரி.
விதார்த் சாயாலிக்கு ஒவ்வொரு மாலையாக கொடுத்து, உதய்கிருஷ்ணா இன்பவேணி ஜான்வி மூவருக்கும் சேர்த்து ஒரே மாலையை அவர்களுக்கு போட்டு விட்டார். உதய்கிருஷ்ணாவிற்கு கடுப்பாக இருந்தது. ஆனால் பெரியவர்கள் மனம் நிறைந்தது.
பூசாரிக்கு நன்றி தெரிவித்த பாட்டி, “சித்ரா பொங்கலை இங்க எல்லாருக்கும் கொடு” கூறினார்.
“ஏம்மா..இங்க வா” சித்ரலேகாவை அழைத்தார் பூசாரி.
சொல்லுங்கய்யா?
பெரிய மாப்பிள்ள பொண்ண அழைச்சிட்டு வா. அவங்க கொடுப்பாங்க..
சித்ரலேகா இருவரையும் அழைத்து வர, அவர் கூறவும் அவரை முறைத்து பார்த்தான் உதய்கிருஷ்ணா. வந்ததிலிருந்து அனைவரையும் கவனித்தார் பூசாரி.
ஒட்டுதல் இல்லாத பெரிய மருமகள், இருவரையும் சேர்க்கும் முயற்சியில் சிறியவர்கள்..என இவர்கள் அடித்த லூட்டியை பார்த்த பூசாரிக்கு நடப்பது புரிந்து இருவரையும் மற்றவர்களுக்கு பொங்கல் கொடுக்க செய்தார்.
பின் இருவரையும் அழைத்து உபதேசம் அளிக்க, “வேணும் அண்ணா உனக்கு” மனதினுள் எண்ணிக் கொண்டான் விதார்த்.
இது போலவெல்லாம் வழிபாடு செய்து பார்த்திராத சாயாலி மானவ் அனீஷீக்கு அக்கோவில் மிகவும் பிடித்து விட்டது. சித்ரலேகாவிற்கு இது போன்ற வழிபாடு பூஜை, வேலைகளெல்லாம் நல்ல பழக்க என்பதால் சாதாரணமாக எடுத்து செய்தாள்.
பாட்டி, ராமநாதன், கோசலை ஒரு வித நிம்மதி உணர்வுடன் சென்றனர். மறுநாள் இதே போல இன்பவேணி குடும்பத்தினருடன் அவர்கள் குலதெய்வ வழிபாட்டிற்கு செல்ல, அங்கே கலகலப்புக்கு பஞ்சமில்லை. எப்போதும் அனைவரையும் கலகலப்புடன் வைத்திருக்கும் இன்பவேணி அமைதியாகவே இருந்தாள்.
கடவுளை திட்டவில்லை என்றாலும் உதய்கிருஷ்ணாவின் வார்த்தைகளின் தடிப்பு மட்டும் இனி இருக்கக் கூடாது என வேண்டிக் கொண்டாள். பின் ஒரு வாரம் விருந்து என சொந்தபந்தங்கள் வீட்டிற்கு சென்று வந்தனர் இரு தம்பதியினர்களும். அதன் பின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!