தென்றலாய் என் காதல் – 18
தென்றல் – 18
சிந்துவின் பேச்சு விக்ரம் மனதை வதைத்தது.
தன் செயலை எண்ணி தன்னையே நொந்துகொண்டான்.
Advertisement
“ச்ச…. நம்ம ஏன் இப்படி எல்லாம் ரஞ்சி கிட்ட பேசினோம். அவங்க என்னப்பத்தி என்ன நினச்சு இருப்பாங்க.
கொஞ்சம் அளவுக்கு அதிகமா அவங்க கிட்ட உரிமை எடுத்துக்கிட்டோமே!நான் பேசுனது ஒரு வேலை அவங்களுக்கு பிடித்து இருக்காதோ?
மனசு எதுவும் கஷ்டப்பட்டு இருந்தா?”
Advertisement
“ச்ச…நான் எப்படி இப்படி மாறுனேன்.
Advertisement
ஒரு பொண்ணு மனசுல என்ன இருக்குனு தெரிஞ்சுக்காம எப்படி இப்படி என்னால பேச முடிந்தது”.
“நான் யாரிடமும் இப்படி நடந்துக்கொண்டது இல்லையே. இனி எந்த விதத்திலும் நான் அவர்களை காயப்படுத்த மாட்டேன்”.
“என் மனதில் உருவான அவர்களுக்கான நேசத்தை என் இதயத்தில் போட்டு புதைத்துக்கொள்கிறேன். என் காதல் என்றும் என் ரஞ்சிதாவை காயப்படுத்தாது” என்று தன் வேலையைத் தொடர்ந்தான்.
Advertisement
விக்ரம் மனதில் அவள் மீதாக எழுந்த விருப்பம் சிந்துவிற்கு தெரிந்தும் அவள் அதை கண்டுக்கொள்ளாமல் தன் பணியை தொடர்ந்தாள்.
அவள் வாழ்வில் காதலுக்கோ, திருமணத்திற்கோ இடமே இல்லை.
அவள் வாழ்கிறாள் என்றால் ஒரே காரணம் இறந்து யாருக்கும் பயன்படாமல் போவதை விட தான் இருந்து மற்றவர்களுக்காக வாழ்ந்து இறப்பது மேல் என்று தான் இத்தனை துயரங்களுக்கு பின்னும் இவள் இன்னும் உயிரை கையில் பிடித்து வைத்து இருக்கிறாள்.
விக்ரம் பேசியதை எல்லாம் ஒரு பெருமூச்சு விட்டு கடந்தவள் அடக்கலைக்குள் புகுந்தாள்.
கீதா சமையல் வேலையை எந்த வித பரபரப்பும் இன்றி செய்துக்கொண்டு இருந்தார்.
“கீதா அக்கா என்ன பிஸியா” என்றவள் அடக்கலை திண்டின் மேல் ஏறி அமர்ந்தாள்.
கையில் ஒரு கேரட் எடுத்து கடித்தாள், சிந்துவை கண்டு புன்னகைத்து “என்னம்மா அம்மா தூங்கிட்டாங்களா” என்றார் கீதா.
“ஹ்ம்ம் ஆமாம் அக்கா,மாத்திரை கொடுத்திருக்கேன் அதான் தூங்கிட்டாங்க” என்றவள் காலை ஆட்டிக்கொண்டு மீண்டும் கேரட்டை கொறித்தாள்.
“அக்கா….
என்ன சிந்து
மாமாவுக்கு உடம்பு சரியில்லை போய் பார்க்கணும் சொன்னிங்க போகலையா?” என்றாள்.
“எங்க சிந்து! நீ தான் பார்த்தாய் அல்லவா இங்கே என்னென்ன நடக்கிறது.
இப்போது எப்படி நான் சென்று பார்க்க முடியும்” என்று வருத்ததோடு கூறினார் கீதா.
ஹ்ம்ம்…புரிகிறது அக்கா என்றாள்.
சரி இப்போ அண்ணாக்கு எப்படி இருக்கு என்று வினாவினாள்.
“ஹ்ம்ம்…. நைட் ஃபோன்ல பேசுனேன். இப்போ கொஞ்சம் பரவாயில்லை” என்றப்படி காய்க்கறிகளை நறுக்கினார்.
“சரி…. அக்கா இலக்கியா யாரு?” என்று கேட்டாள் சிந்து.
காய்க்கறிகளை நறுக்குவதை நிறுத்தினார் கீதா.
“என்ன அக்கா என்ன ஆச்சு?”நான் “எதுவும் கேக்கக்கூடாதா கேள்வியை கேட்டுவிட்டேன்னா. சொல்ல கூடாது என்றாள் நீங்கள் சொல்ல வேண்டாம்” என்றாள் சிந்து.
“ச்ச ச்ச.. அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை சிந்து. இனியா சுசிலா அம்மாவோட பொண்ணு.நம்ம விக்ரம் தம்பிக்கு தங்கச்சி” என்றார்.
“அப்படியா” என்று ஆர்வமிகுதியால் “கண்கள் மின்ன இப்போ அவங்க எங்க இருக்காங்க? ஃபாரின் எதுவும் படிக்கப்போய் இருக்காங்களா “என்றாள் சிந்து.
“இல்லை” என்றார் கீதா.
இல்லைனா?”என்று கேள்வியாய் பார்த்தாள் சிந்து.
“இப்போ அவங்க உலகத்திலே இல்ல” என்றார் கீதா.
நீண்ட மௌனம்.
“என்ன ரஞ்சிதா நீங்க மட்டும் தான் இருக்கீங்க,உங்க பிரண்ட் சிந்து எங்கே?”
“நேத்து நைட் எங்க போனீங்க ஆளையே காணோம் என்று கேட்டான்” ஆதவ்.
“அது பெரிய கதை சார், உங்க விக்ரம் சாரால தான் எல்லாம்.
தெரியாம என் ஃபிரண்ட உங்க சார் கிட்ட வேலைக்கு அனுப்பிட்டேன்”. “இப்போ மாட்டிக்கிட்டு விழிக்கிறோம்” என்றாள் ரஞ்சிதா.
“ஹ்ம்ம்…சீக்கிரம் எல்லாம் சரியாகிவிடும் ரஞ்சிதா. கவலைப்படைதீர்கள். அதற்குள் நானே சிந்துவிற்கு நல்ல வேலை பார்த்து கொடுக்கிறேன்” என்றான் ஆதவ்.
“ஹ்ம்ம்…தேங்க்ஸ் ஆதவ் சார் எனக்கு டைம் ஆச்சு நான் இப்போ ஆபீஸ் கிளம்பறேன்” என்று அவனைக் கடந்துச் சென்றாள்.
“இந்த காலத்துல சிந்து மாதிரியான நல்ல பொண்ணுங்களை பார்ப்பது எல்லாம் அரிதினும் அரிது”.
எப்படியாவது சிந்துவை மணம் முடிக்க வேண்டும் என்று அவன் மனதில் ஆசை எழுந்தது.
தன் தாய் தந்தையுடன் இதைப்பற்றி கூறியும் விட்டான் ஆதவ்.
அவன் ஆசை நிறைவேறுமா? கடவுளுக்கு தான் வெளிச்சம்.
“என்ன சொல்றிங்க கீதா அக்கா?”
“இனியா இப்போ உயிரோட இல்லையா. அப்படி என்ன நடந்தது சொல்லுங்க கீதா அக்கா” என்றாள்.
“ஹ்ம்ம்…சொல்றேன் டா சொல்றேன்.
சுசிலா அம்மாவை இப்போ பாக்குறீங்களே ஆனால் அது அவங்க உண்மை முகம் எப்படி இருக்கும் தெரியுமா? அவங்க பேசுனா ஆண்களின் சபையே அமைக்திகாக்கும்”.
அப்படி பட்ட ஆளுமை கொண்டவர் நம் சுசிலா.
“அப்படிப்பட்ட சுசிலா அம்மா தன் அன்பு மகளை தன் கண் முன்னே பறிகொடுத்தப்பின் இப்படி மன நலம் பாதிக்கப்பட்டு இப்படி இருக்கிறார்.
இனியா இறந்து பல வருடங்கள் ஆனபோதும் சுசிலா அம்மாவால் தன் மகள் இறந்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இன்றும் இனியா இங்கு எங்கோ தான் இருக்கிறாள் என்று நினைத்து தினமும் இனியா இனியா என்று சத்தமாக அழைத்து கூப்பிடுவார்.
இனியாவின் வருகை ஏற்படாததால் ஆகோரோசம் அடைந்து கத்துவார்.
“அக்கா.. இனியா எப்படி செத்தாங்க?.
இனியா ஒரு கார் ஆக்சிட்டேன்ல இறந்துட்டாங்க.அப்போ நம்ம விக்ரம், தம்பிக்கு பனிரெண்டு வயது. “ஹும்…”அதெல்லாம் நினைச்சாலே இப்போக்கூட நெஞ்சு பதறுது.
அதெல்லாம் பழைய கதை. இனி அதைப்பத்தி பேசி என்ன ஆகப்போகுது என்று சலித்துக்கொண்டார்.
சிந்து இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்தே வெளியே வரவில்லை.நான் இனியாவை பார்க்கலாமா என்றாள் சிந்து.
ஒரு நிமிடம் யோசித்தவர் ஹ்ம்ம்…வா என்று அழைத்துச்சென்றார் கீதா.
இங்க பாரு சிந்து இப்போ வீட்டுல நம்ம விக்ரம் தம்பி இல்லை.
அதனால தான் நீ கேட்டதும் உடனே கூட்டிட்டு கிட்டு வறேன். நீ எதுவும் இனியா பத்தி தம்பிக்கிட்ட கேட்டுக்காத, அவருக்கு இந்த விஷயம் தெரியவே வேண்டாம் என்றார்.
அவள் தலையை அசைத்து ஏன்? தெரிந்தால் என்ன ஆகும் என்றாள்.
அவருக்கு தெரிஞ்சா ரொம்ப கோபம் கொள்வார் சிந்து.
இனியா இறந்தவுடன் சுசிலா அம்மா சுயநினைவை இழந்து விட்டார்.
அதனால் விக்ரம் தம்பிக்கு கிடைக்க வேண்டிய தாப்பாசம் கிடைக்காமலே போனது.
அதனால் தான் இனியா பயன்படுத்திய பொருட்கள் பொம்மைகள் எல்லாம் இந்த அறையில் பூட்டி வைத்து இருக்கிறார் என்று கீதா பூட்டை திறந்துக் கொண்டே கூறினார்.
ஓ…. ஆனா இனியா மேல கோபப்பட்டு என்ன புண்ணியம் என்று அறைக்குள் நுழைந்தாள் சிந்து.
அந்த அறை முழுவதும் இனியாவின் பழைய பொருட்கள் அடங்கி இருந்தது.
மெல்ல அவ்வறையை சுற்றி வந்தாள்.
சில பொருட்களை கையில் எடுத்து பார்த்தாள்.
விக்ரம் சார் ஏன் இப்படி நடந்துக்கறாரு? சுசிலா அம்மாக்கு இப்படி ஆனதுக்கு யார் என்ன செய்ய முடியும்.
அது அவங்களோட விதி என்றாள் சிந்து.
ஹ்ம்ம்…அது அவருக்கு புரியனுமே சிந்து என்றவர் ஐயோ நான் அடுப்புல வச்சி இருந்ததை மறந்துட்டேன். பொரியல் கருகிவிடும் என்று அடக்கலையை நோக்கி ஓடினார் கீதா.
அவள் மேலும் உள்ளே முன்னேறினாள்.
ஒரு பெரிய சுவற்றில் பாதி அளவில் இனியாவின் புகைப்படம் இருந்தது.
நல்ல சிரித்த முகத்தோடு, அழகாய் கள்ளம் கபடம் இன்றி தெய்வீதம்மான முகம். பார்க்கையில் உடல் பரவசம் அடைந்துச் சிலிர்த்துது.
எவ்ளோ அழகா இருக்காங்க. சோ பியூட்டிபுல் என்று அந்த புகைப்படத்தை தன் கையால் வருடினாள்.
ஏய்…. என்ற சத்தத்தில் சிந்துவிற்கு உடல் அதிர்ந்தது.
இங்க என்ன பண்ணிட்டு இருக்க என்ற கேள்வியில் உடல் நடுங்க திரும்பினாள்.
அங்கே அசுரனாய் கோபம் கொப்பளிக்க நின்று இருந்தான் விக்ரம்.
“ஐயோ…இவர் என்ன இவ்ளோ சீக்கிரம் வந்துட்டாரு.
மணி இன்னும் ஆறு ஆகலையே” என்று எண்ணியவள் “ஆஞ்சநேயரே இப்படி என்ன கோத்து விட்டு வேடிக்கை பாக்கறியே?”
“இது தகுமா?
இப்போ நான் என்ன செய்வேன். எப்படி இந்த ஆள் கிட்ட இருந்து தப்பிப்பேன்.
பார்த்தாலே சும்மாவே எரிஞ்சு விழுவாரு”.
“நம்ம வேற அவர் பெர்மிசன் இல்லாம இனியா அக்கா ரூமுக்கு வேற வந்துட்டோம் செத்தோம்.
எது நடந்தாலும் சும்மா அசையாம நின்னுற வேண்டியது தான்”என்று நின்று இருந்தாள்.
‘ஏய்…உனக்கு இங்க என்ன வேலை.
மொதல்ல நீ ஏன் இன்னும் இங்க இருந்து போகாம இருக்க.
வேர் இஸ் ரஞ்சிதாவை கொஞ்சம் கூப்பிடுங்க கீதா” என்று கத்தினான்.
குரல் கேட்டு ஓடி வந்த கீதா “புரியாமல் விழித்தார்.
ஐயோ…இவர் என்ன அஞ்சறைக்கி எல்லாம் வந்து இருக்காரு” என்று எச்சிலை விழுங்கினார்
“கீதா நீங்க என்னப் பண்றிங்க?இப்படி கண்டவங்க இனியா அக்கா ரூமுக்கு போறாங்க. இதெல்லாம் கவனிக்காமல் நீங்க என்ன பண்ணிட்டு இருந்திங்க? “ என்று கீதாவை சத்தம் போட்டு திட்டினான் விக்ரம்.
“தம்பி அது வந்து” என்று வார்த்தையை விழுங்கினார் கீதா.
“ஏய்…உனக்கு அறிவு இல்ல. இப்படி தான் தெரியாதவங்க வீட்டுல எந்த ரூம் திறந்து இருந்தாலும் நாய் மாதிரி புகுந்துருவியா?” என்று முகத்தில் அறைந்தாற்போல் கூறினான் விக்ரம்.
சிந்துவிற்கு அவ்வார்த்தை மிக வலித்தது.
கண்ணீர் அருவியானது.
“ஐயோ தம்பி…அந்த பொண்ணு எதுவும் செய்யல, நான் தான்” என்று சொல்ல வர,
“போதும் நிறுத்துங்க அக்கா. நானும் பார்த்துகிட்டே இருக்கேன் இந்த பொண்ணுக்கு ரொம்ப சப்போர்ட் பண்றிங்க?”
“இது மாதிரி பொண்ணுங்களை எல்லாம் தயவு செஞ்சி நம்பாதீங்க” என்றதும் சித்துவால் அதற்கு மேலும் கேட்டுக்கொண்டு இருக்கா முடியவில்லை.
பொங்கிவரும் அழுகையை அடக்கிக்கொண்டு அறையை விட்டு வெளியே ஓடினாள் சிந்து.
“தம்பி ஏன் இப்படி அந்த பொண்ண எப்போ பார்த்தாலும் வெறுக்குறீங்க?”
“பாவம் அந்த புள்ள,ரொம்ப மனசு உடைஞ்சு போய் இருக்கும்”என்று கூறி அவரும் அறையை விட்டு வெளியேறினார் கீதா.
தென்றல் மீண்டும் வீசும்….

