Skip to content
Post Views: 2,325
அத்தியாயம் – 21
சற்று முன் தான் விடியல் கண்ட வானம் போலும்.கதிரவன் மெல்ல மெல்ல விழிக்கப் பார்க்க அந்த அமைதியான வேளையில் தலையில் இடி விழுந்தது போல் அமர்ந்திருந்தார் அண்ணாமலை.
“மாமா!”
Advertisement
“ஏன் பழனிச்சாமி? இது எப்போ உங்களுக்குத் தெரிய வந்தது”
Advertisement
“மச்சான் நான் அன்னைக்கு எதார்த்தமா பொருள் வாங்க வந்திருந்தேன். அப்போதேன் சோமுவும், அவுக மகனும் பேசி நிற்கிறதை பார்த்தேன்”
Advertisement
“தெரிஞ்சும் உடனே நீக ஏன் சொல்லல?”
Advertisement
“நான் உங்கள நேருல கண்டா சொல்ல எண்ணி வச்சேன் மாமா”
“அப்போ சொத்தை மகேன் பேர்ல எழுத்து வச்சு புட்டாகளா? ஐயா வேணாம், தாத்தா வேணாம், ஆனா அவுக சொத்து வேணுமோ? பல வருஷம் பங்குடு பண்ண பூமி என் பேத்திக்கு எழுதி கொடுக்க எண்ணி வச்சேன்.
அதைக் கொண்டு பத்திரத்தை எடுத்துட்டு போனா வேற பேருல மாத்தி வித்தாச்சுன்னு சொல்றாக.இதெல்லாம் என்ன? இப்பவே போறேன் நிக்க வச்சு அத்தினி கேள்வி கேட்டாரு இப்போ நான் கேக்குறேன்” என்ற அண்ணாமலை மீண்டும் தவறான ஒரு அத்தியாயத்தைத் தொடங்கி வைத்தார்.
கோபமாக வெளியில் செல்லும் கணவனிடம் விரைந்த உண்ணாச்சி,”ஏக செத்த பொறுமை கொடுக.என்ன? ஏதுன்னு? விசாரிக்காம வார்த்தையைக் கொட்டிப்புட்டா கொஞ்சம், நஞ்சம் ஒட்டிக்கிட்டுக் கிடக்குறதும் போயிடும்”
பேரன் கோபத்தைப் பற்றி அறிந்தவள் ஆயிற்றே.இனி ஒரு முறை லட்சுமணன் மன்னிப்பு அளிக்க மாட்டான் என்பது திண்ணம்.இந்த முறை சறுக்கினால் காலத்துக்கும் அவனை மனதால் மட்டுமே கொண்டாடி நிற்க முடியும். அதனை எண்ணி பயந்தவராக உண்ணாமலை கணவனைத் தடுத்தாள்.
“இங்க பாருக அத்தினி பேச்சு பேசுனாரு சபையில. அதுவும் அவுக ஆத்தாவ சாமியாக்கி, என் மகனை தாழ்த்தி வச்சு எத்தினி பேச்சு.அப்போ உரிமை கேட்டு நிக்கும் போது எங்க ஐயாவை பார்த்து பேசுனேனு சொல்ல வேண்டியது தானே” என்ற அண்ணாமலையைச் சலிப்பாகப் பார்த்த உண்ணாமலை.
“இரண்டு பேரும் பார்த்து பேசுனதைதேன் அவுக பார்த்தாத சொன்னாக அப்போ அதை பத்தி மட்டும் கேளுக. சொத்தை பத்தி எதுக்குக் கேட்கணும்?” என்றவள் இவர்கள் வாக்கு வாதத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அவளது அண்ணன் முறை உள்ள பழனிசாமியை பார்த்து.
“ஏக அண்ணே நீக அவுக சொத்தை பத்தி பேசுனதை கேட்டீகளா?”
“இல்லம்மா தூரத்துல நின்னு இரண்டு பேரும் பேசுனதை பார்த்தேன்”
“அவுக சொன்னதைக் கேட்டீகளா? சும்மா கூடப் பேசி இருக்கலாம் அவன் முடிவை தேடிய நேரம் மகனை பார்க்க கூட எண்ணி வச்சிருக்கலாம் தானே” என்றவளது பேச்சை கருத்தில் கொள்ளாமல்.
“நீக பேரனுக்கு ஒசரம் பரிஞ்சுக்கிட்டு வராதீக” என்றவர் கோபமாக மச்சானையும் அழைத்து கொண்டு அந்த மூவரிடம் வந்து நின்றார். ஒரே நாளில் அவர் பிடித்த பிடியில் நிற்க. மீண்டும் லட்சுமணனுக்கு அழைப்பு வைக்க. இந்த முறை குடும்பத்துடன் கிளம்பி விட்டான் லட்சுமணன்.
சங்கதி இன்னது என்று வள்ளியப்பனுக்குத் தகவல் போக.தகவல் கேட்ட நொடி வேர்க்க விறு விறுக்க வீட்டுக்குள் நுழைந்து கொண்டே, “லட்சு!” என்றழைக்க
அப்போது தான் லட்சுமணன் சாப்பிட்டு விட்டு அவனது அறைக்குள் நுழைந்தான்.அதற்குள் மாமன் அழைப்பு கேட்டு கூடத்துக்கு வந்து விட்டான்.அவர் குரல் கொஞ்சம் ஓங்கி ஒலிக்க வீட்டுப் பெண்கள் கூட அங்கு கூடி விட்டனர்,
“என்னங்க சாலாப்பா?”
“லட்சு ஐயா தாத்தா சுந்தரம் அண்ணே வூட்டுல இருந்து ஆள் விட்டு இருக்காரு. என்னவோ பேசிக்கிறாக இந்த முறை சிதம்பரம் அண்ணே அந்தப் புள்ள வள்ளியும் இருக்கு” என்றதும் புருவம் சுருக்கி யோசித்து நின்றான் லட்சுமணன்.
“இவுகளுக்கு என்ன வேணுமா அண்ணே? என்னையும் என் மகனையும் என்ன செய்யக் காத்துருக்காக? இத்தினி வருஷம் இல்லாத உறவு இப்போ என்னத்துக்கு .வம்பு செய்யன்னே?”
“மீனா எதையும் போட்டு அலட்டி வச்சு உடம்புக்கு நோவ இழுத்து வச்சுக்காதீக முதல என்ன? ஏதுன்னு? போயித்தேன் பார்ப்போம்.நமக்குள்ள பேசிக்கிட்டா இதுவா, அதுவான்னு தேன்கிறுக்கு புடிக்கும்”
“மாமா!”
“சொல்லுக லட்சு?”
“கார் எடுத்துட்டு வரீகளா?”
“நம்ப இரண்டு பேர் கணக்குதேன் பஸ்ல போயிடுவோம் லட்சு”
“இல்ல அம்மா, அயித்த, சாலா எல்லாரும் வரட்டும்” என்றதும் மறுப்பாகத் தலையை ஆட்டிய வள்ளியப்பன்.
“இவுகள கண்டா இன்னும் வம்பு பேசி நிப்பாக லட்சு”
“இங்கன விட்டுட்டு நம்ப வரவரை அங்கன என்னவோன்னு தவிச்சு நிப்பாக எதுக்கு அது? அதுவும் போக நம்பக் குடும்பத்துக்குள்ள என்ன ஒளிவு மறைவு என்னத்தேன் சொல்றாகன்னு பார்ப்போமே” என்றவனுக்கு இம்முறை கோபம் உச்சத்தில் தான் நின்றது.
“சரி அப்போ நான் கார் எடுத்துட்டு வரேன்” என்ற வள்ளியப்பன் சொன்னது போலச் சரியாகப் பத்து நிமிடத்தில் காருடன் வர அனைவரும் அதற்குள் கிளம்பி நின்றனர் பல பதட்டங்களுடன் சுந்தரம் வீட்டை நோக்கி பயணப்பட்டனர். சரியாக அரைமணி நேரத்தில் சுந்தரம் வீட்டை அடைந்தவர்களை வரவேற்று அவர்களை அண்ணாமலைக்கு எதிரில் அமர வைக்க. லட்சுவை முறைத்து வைத்தார் அண்ணாமலை.
“தம்பி எப்படி இருக்கீக கல்யாண வாழ்க்கை எப்படிப் போகுது?” சுப்பிரமணியன்.அவர் அருகில் சின்னப்பன், சிதம்பரம் மற்றும் சுந்தரம் அமர்ந்திருந்தனர்.
“ஈசன் புண்ணியத்துல நல்ல போகுது ஐயா ” என்றவனைப் புன்னகையுடன் பார்த்து.
“உங்க எண்ணத்துக்கு நல்ல இருப்பீக” என்ற சுப்பிரமணியன் அண்ணாமலையை பார்த்து.
“அண்ணாமலை தம்பி முன்னுக்கு நிக்குது என்ன பேசணுமோ பேசுக, என்ன கேட்கணுமா கேளுக என்றவர் ஓர் நொடி மௌனம் கொண்டு இதுதேன் கடைசிப் பஞ்சாயம இருக்கனும். அடிக் கடி குடும்ப விஷியத்தைப் பந்தி வச்சா அது நல்லா இருக்காது” கொஞ்சம் கடினமாகத் தான் பேச்சை தொடங்கினர்.
லட்சுவை நேர் கொண்டு பார்த்து, “அன்னைக்கு அத்தினி நியாயம் பேசி வச்சீக.உங்க ஐயா இறப்புக்கு முன்னாடி உங்களைக் கண்டு பேசி இருக்காரு.அதுவும் போகப் பல சொத்துக் கை மாறிப் போயிருக்கு.
என் பேத்திக்கு கொடுக்க எண்ணி வச்ச இரண்டு நிலமும் இப்போ இல்ல.ஐயா வேணாம், தாத்தா வேணாம் அவுக வூட்டுச் சொந்தம் வேணாம், ஆனா சொத்து மட்டும் வேணுமோ? இது எந்த வித நியாயம்?” என்றதும் சிறு அதிர்வு கொண்டு தனது தாத்தனை பார்த்தான் லட்சுமணன்.
அவனே எண்ணி பார்க்காத புதுக் கோணத்தில் இவர் வம்பை தொடங்க லட்சுமணன் ஓர் நொடி பதறி தான் போனான்.அவன் அதிர்ச்சியில் நடப்பு மறந்து நிற்க.
“என்ன பேச்சை காணல கையும் காலுமா பிடிபட்ட பிறகு எப்படிப் பேச்சு வரும் சொல்லுக?” இன்னும் அவன் அண்ணாமலையை வெறித்துப் பார்க்க.
“அத்தினி நியாயம் பேசி நின்னீக இப்போ எங்கன போச்சு பேச்சு?” என்று கேலி பேசியவரை ஆழ்ந்து பார்த்து நின்றவனைக் கலைத்தார் சுந்தரம்.
“அண்ணாமலை என்ன சொல்றாக நீக உங்க ஐய்யனை பார்த்தீகளா? எதுக்கு? ஏன்?”இன்னும் தெளியாமல் நின்றவனைக் கண்டு புருவம் சுருக்கி வள்ளியப்பனை பார்க்க.மருமகன் நிலை உணர்ந்து அவனது அருகில் சென்று கைகளைப் பற்ற, அப்போது தான் உணர்வுக்கு வந்தான் லட்சுமணன்.
“என்ன அப்பாவு யோசனை” சுப்பிரமணியன் வாஞ்சையாகக் கேட்க.
“இல்லங்க ஐயா விளங்க சொல்லுக”
“சோமு இறப்புக்கு முன்னாடி நீக போயி பார்த்தீகளா?”
“ஆமா ஐயா அவுகத்தேன் என்னைப் பார்க்க வர சொல்லி ஆள் விட்டாக”
“என்ன காரணம் அப்பாவு?” என்றதும் லட்சுமணன் மீண்டும் மௌனம் கொள்ள.அவனது உணர்வை புரிந்து கொண்ட மீனா தவித்துப் போனாள்.வெளியில் சொல்ல கூடிய சங்கதியா இது? இறந்தும் தன்னைப் படுத்தி வைக்கும் சோமுவின் மீது இன்னும் ஆத்திரம் வந்தது மீனாளுக்கு.
“பார்த்தீகளா? எங்கன பேச்சு வரும்? சொத்து அவுக பேருக்குதேன் போயிருக்கு.என் மகனை அத்தினி குறை பேசி நின்னாக இப்போ அவுக சொத்து மட்டும் ஆகுமா? அதுக்கு மட்டும் எங்கன இருந்து உரிமை வருது?” என்ற அண்ணாமலையை வெறுப்புடன் பார்த்தனர் பேரிளம் பெண்கள்.
சாலாவுக்குச் சங்கதி தெரியாது என்பதால் உள்ளுக்குள் கலவரம் கண்டு நின்றாள் ‘இவுக என்னத்துக்கு அவுக கூடப் போயி பேசி வச்சாக என்கிட்ட கூட எதுவும் சொல்லலையே?’
லட்சுவின் அமைதியை எண்ணி இன்னும் அவனைத் தவறாகக் கணித்த அண்ணாமலை பேரன் மேல் உள்ள ஆற்றாமையைச் சந்தர்ப்பம் பார்த்துக் கொட்ட.மகனை நிற்க வைத்து பேசி நிற்கும் மாமனார் பேச்சு எல்லை தாண்டி நிற்கவும் அதுவரை அமைதியாக இருந்த மீனாள்.
“நிறுத்துங்க” என்று கத்த அவளது செயலை எதிர்பார்க்காத சாலா மீனாவிடம் நெருங்கி நின்று தோள்களைப் பிடித்துக் கொண்டாள், கோபம் கொண்டு அவர் உடம்பு நோக்காடு கண்டு நிற்குமோ என்ற பயம் வேறு.
“என்ன? கேட்க ஆளு இல்லன்னு எம்புள்ளையைப் பேசிகிட்டே போறீக? நான் இருக்கேன் என்னைத் தாண்டித்தேன் அவுககிட்ட பேச்சு போகணும்.இப்போ என்ன உங்க மகேன் கடைசியா பேசுனது என்னான்னு தெரியணும் அதானே?” என்றவளை பார்த்து.
“அது மட்டும் இல்ல சொத்து என்ன ஆச்சுன்னு தெரியணும்? அது யாரு பேருல இருக்குனு தெரியணும். மகன் பாசத்துல அவுக பெயரில, இல்ல குற்ற உணர்வுல உங்க பெயரில எழுதி வச்சிருந்தா?” என்றவர் பேச்சை கேட்டு வள்ளியப்பன் சலிப்பாகத் தலையை ஆட்ட.
“அது சரி” என்று முனகி கொண்டாள் கண்ணாத்தாள்.
அண்ணாமலையின் பேச்சுக்கு சில நொடிகள் மீனா அவரை வெறிக்க,” என்ன உங்களுக்கும் பேச்சு மறந்து போச்சா ?” என்று நக்கல் செய்தவரை பார்த்து.
“புள்ள வளர்க்க தெரியாம வளர்த்து விட்டு அடுத்தவுக பாவத்தை வாங்கி வைக்கிற நீக இம்புட்டு நக்கல் பேச்சு பேசி வைக்கும் போது.ரா, பகலா செதுக்கி வச்சிக்குறேன் என் மகனை நான் எம்புட்டு பேசி நிக்கனும்?
என்ன சொன்னீக? மகேன் பாசம்? குற்ற உணர்வா? அதெல்லாம் மனுஷ ஜென்மங்களுக்கு உங்க மகனுக்கு இல்லை” என்றதும் “ஏய்! ” என்று கூவி விருட்டென எழுந்து மீனாளை அண்ணாமலை நெருங்க.
வள்ளியப்பன்,லட்சுமணன் இருவரும் ஒன்று போல் அவர் நெருங்கும் முன் மீனாளுக்கு அரணாக நின்று கொண்டார்கள் அண்ணாமலை செயலில் பதறிய சுந்தரம் மற்றும் பெரியவர்கள்.
“என்ன அண்ணாமலை இது?”.
“மாமா என்ன செயிரீக ஆச்சி என்ன சொல்லிவிட்டாக என்றான் பழனிச்சாமி.
“இந்த வயசுக்கு இத்தினி வேகம் ஆகாது அண்ணாமலை வேகத்தைக் குறைக ” என்ற சுப்பிரமணியன் லட்சுவிடம் திரும்பி.
“உங்க ஐயா என்னத்த பேசுனாருன்னு உடைச்சு சொல்லிடுக. எதுக்கு மருகி நிக்கிறீக அப்பாவு? எங்களுக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு. அதுவும் போக உங்க ஆத்தா மேல நல்ல எண்ணமிருக்கு.
உங்க அமைதித்தேன் இவுக எண்ணத்தைக் கொண்டு கண்டதை பேச சொல்லுது. வார்த்தை எல்லை தாண்டி போகுது அப்பாவு சொல்லுக? சோமு உங்களைப் பார்த்து என்னத்த பேசி வச்சாரு?” என்றதும் லட்சுமணன் அவரை நேர் கொண்டு பார்த்து…
error: Content is protected !!