Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

20. கல்பனா செந்தில்குமார்-என் ஜீவன் உன்னை சேருமா

என் ஜீவன் உன்னை சேருமா 25 1

 என் ஜீவன் உன்னை சேருமா
 அத்தியாயம் – 25


Advertisement

     அக்னி   உலகநாதனை முறைத்தப்படியே  “அத்தை இங்கே வா” என்று அழைக்க.

Advertisement

Advertisement

” அப்பு குட்டி” என்று சென்றவளை, விடமாட்டேன் என்பது போல ரதியின் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டார்  உலகநாதன்.

Advertisement

“மரியாதையா  என் அத்தையின் மேலிருந்து கையை எடுடா” என்றான் அக்னி..
” போதும் எல்லாரும் சொல்லுறதை நம்பி நான் என் ரதியை விட்டு இருந்தது போதும்,, இனியும் அவளை  விட முடியாது” என்றவர் அவள் இரண்டு கையையும் பிடித்து தன்னோடு வைத்துக் கொள்ள..
 “விடு  என்னை விடு, நான் அப்புகுட்டி கிட்ட போகனும்”என்று  ரதி கூற..
” உலகநாதன் உனக்கு அவ்வளவு தான் மரியாதை விடு என் அத்தை கையை”..
” விட முடியாது என் ரதியை  இனி மேல் யாரையும் நம்பி நான் விட முடியாது”..
 அக்னி கோபமாக உலகநாதன் அருகில் வந்தவன்..
 ரதியை  அவரிடம் இருந்து பிரிக்க முயல..
  உலகநாதன் ரதியை  விடுமாட்டேன் என்பது   போல் ரதியை தன்னோடு இழுத்து வைத்துக்கொள்ள..
 உலகநாதன்  ரதியின் கையை விடாமல்  இறுக்கமாக பிடித்துக் கொண்டு இருக்க..
அக்னி  இருவரையும் பிரிக்க முடியாமல் கோபம் கொண்டவன், உலகத்தின் சட்டையை கொத்தாக பிடித்து “விடு என் அத்தையை,”என்றவன்.
” இவ்வளவு நாள் எங்கேடா போயிருந்த? வந்துட்டான்.. எங்க அத்தை உயிரோட இருக்கிறது உனக்கு  பிடிக்கலையா அவங்கள  கொல்ல பாக்குறீயா”… என்று அக்னி கோபமாக உலகநாதனை  தாக்க..
மாயா பயந்து போனாள்.. எங்கே இவன் அடித்து தன்   தந்தைக்கு முடியாமல்  ஆகிவிடமோ என்று இருவரின்  நடுவில் வர..
மாயா வரவும் “தள்ளி  போடி, கிட்ட  வந்தே, உனக்கு விழும் போடி” என்று அவளை மிரட்டி, உலகநாதனை அடிக்க..
 “நான் பண்ணுனதுக்கு எனக்கு என்ன வேணுமுன்னாலும்  தண்டனை குடு,,  ஆனா என் ரதியை  நான் விடமாட்டேன்” என்று உலகநாதன் கூற…
“என்னது  உன் ரதியா?   என் அத்தை பேரை சொல்ல கூட உனக்கு உரிமை இல்லை எங்கேடா போன  இத்தனை வருஷமா? என் அத்தையே  மணமேடையில அம்போன்னு விட்டுட்டு போயிட்டு இப்போ  வந்து என் ரதி, என் ரதியின்னு சொல்லுறீயா, கொன்னுடுவேன் உன்னை” என்று அவரை அடிக்க..
 மாயா தந்தைக்கு ஏதாவது ஆகிவிடும் என்று பயந்தவள்..
“விடுங்க என் டாடியை” என்று அக்னியின் பின்னே நின்று மாயா அவனின் தோளில் அடிக்க..
 “போடி” என்று மாயாவை திரும்பிப் பார்த்தவன் அவள் பெரிய ஷால் தோளில்   போட்டு வயிறை  மறைத்திருக்க அக்னிக்கு அவள் மாசமாக இருப்பது தெரியவில்லை….
 “என் அப்பாவை விடுங்க” என்று அக்னியை தோள் மீது அடித்துக் கொண்டே இருக்க..
“மாயாம்மா சும்மா இரு,,  அவன்  என்ன பண்ணுறான்னு நானும் பார்க்கிறேன்” என்றார் உலகநாதன்..
 “உன்னை கொன்னா கூட என் ஆத்திரம்  அடங்காது,, எவ்வளவு  துணிச்சல், தைரியம்  இருந்தா எங்க ஊருக்கு வந்து இருப்ப,,”.. என்றவன் அங்கே கிடந்த கொய்யா மரத்தின் கட்டையை வைத்து உலகநாதன் அடிக்கப் போக..
” அக்னி”  என்று மாயா கத்தியவள்..  அவனை அடிக்க வர பளார்  என்று மாயாவை அறைந்து கீழே தள்ளி இருந்தான் அக்னி..
 இவ்வளவு நேரம் அக்னி அடித்த அடியே வாங்கிக் கொண்டு இருந்த உலகநாதன்.. அக்னி  தன் மகளை அடித்ததும் “டேய்” என்று அக்னியின் சட்டையை பிடித்தவர்  “என் பொண்ணை அடிக்க உனக்கு என்ன உரிமைடா இருக்கு”…. என்று அவனை இவர் அடிக்க..
 இருவரும் சரிசமமாக சண்டை போட மாயாவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை..
 இருவருமே அவளுக்கு முக்கியம் இருவரின் ஒருவருக்கு ஏதாவது நேர்ந்தாலும் கஷ்டப்படுபவள் இவள் தானே..
 அவள் கீழே விழுந்ததில்,, அவளின் சுடிதார் துப்பட்டா அங்கேயே விழுந்து கிடக்க வேகமாக  எழுந்தவள்..  இந்த சண்டையை எப்படி நிப்பாட்டலாம் என்று சுத்தி முத்தி பார்த்து  யோசித்தாள்..
 நேராக காருக்கு சென்றவள்  காரின் கதவின் மீது அவளின் தலையை வைத்து பலமாக முட்ட..
அவள் பலமாக முட்டிக் கொண்டிருந்ததை பார்த்த ரதி..
” ஏய் பொண்ணு முட்டாத” என்று அவள் அருகில் வர.. மாயா வேக, வேகமாக தன் தலையை கார் டோரின் மீது  முட்டிக் கொண்டிருந்தாள்,,
 ரதியின் சத்தம் கேட்டு உலகநாதனும், அக்னியும் திரும்பி பார்க்க அங்கு  மாயா டம், டம் என்று காரின்  மீது முட்டுவதை பார்த்த  இருவரும் சண்டை போடுவதை நிருத்தி விட்டு  இவளிடம்  ஓடி வந்தனர்..
 அதற்குள் ரதி  “வேண்டாம் பொண்ணு,  வேண்டாம் பொண்ணு,,  என்று அவளை கையை பிடித்து இழுத்து இருக்க..
 உலகநாதன் மகளிடம் “டேய் மாயாம்மா” என்று அவள்  அருகில் வந்து அவளை தடுக்க பார்க்க..
 உலகநாதனை தள்ளிவிட்டவள் மீண்டும் காரின் மீது தலையை வைத்து முட்ட, கீழே விழுந்து கிடந்தார் உலகநாதன்..
 அவர் எழுவதற்குள் அக்னி  மாயாவை  பார்த்து “ஏய் லூசு” என்று அவளை தடுக்க வர,, அவனையும் தள்ளிவிட்டவள்..
 “நான் செத்துப் போறேன் நீங்க ரெண்டு பேரும் அடிச்சிக்கிட்டு சாவுங்க”  என்றவள் மீண்டும்  காரில் கதவில் மேல் வேகமாக முட்ட அக்னிக்கு தெரிந்தது, அவள் தன்னை காயப்படுத்தவே முட்டுகிறாள் என்று தெரிந்து கொண்டவன்..
 “மாயா” என்று அவளை தடுக்க, அவள் பின்னாடி இருந்து தூக்க எண்ணி..
அவளை தூக்க, அப்போது தான் அவளை சரியாக பார்த்தான்,,  அக்னி  அவளின் மேடிட்ட வயிறை அவனின் கைகள் உணர….
அவளை பின்னிருந்து தூக்கியவன், தன்  முன்னாடி அவளை நிருத்தி பார்க்க..
அவளோ மேடிட்ட வயிறுடன், தலையில் ரத்தம் வடிய நின்றவளை பார்த்தவனுக்கு..
அதிர்ச்சியாகி  ஒரு நிமிடம் அப்படியே  நின்றிருந்தவன்..
“என்னடி இது கோலம், என்ன இது மாயா”  என்றான்.
 அப்படியே அவளை பார்த்தவாறே  கீழே அமர்ந்தவன்  “என்னடி இது”  என்றவனுக்கு வாயில் வார்த்தைகள்  வரவில்லை….
“மாயா” என்றான் தான் தந்தையாக போகும் செய்தியை எனக்கு நீ சொல்லவில்லை என்று..
அவளுக்கு அவனிடம் பேசப்பிடிக்காமல் முகத்தை திருப்பி கொள்ள…
 அவள் பக்கம் வந்து நின்றவன்.. “என்னடி  இது, ஏண்டி என்கிட்ட சொல்லல” என்று கேட்க..
 “நான் சொல்லத்தான் வந்தேன்,  நீங்க தான் கேட்கக்கூடிய மனநிலையில் இல்லை, என்னை போ, போன்னு விரட்டுறதுலேயே குறியா  இருந்தீங்க”.. என்றாள்..
 அக்னிக்கு குற்ற உணர்வாக இருக்க தோய்ந்து போனவனாக அப்படியே மண்டியிட்டு அமர்ந்தவன் முகத்தை மூடி கொண்டு அழுதான்..
என் பிள்ளை உருவாகியதை கூட தெரியாமல் இருந்திருக்கேன்,, என்ன மனுஷன் நான்,, என்று புலம்பியபடியே இருக்க..
 உலகநாதன் மகளின் அருகில் வந்தவர் தன் கர்சிப்பைக் கொண்டு மகளின் முகத்தில் இரத்தம்  வடிந்திருப்பதை துடைத்து விட்டுக் கொண்டிருந்தார்…
 அதைப்  பார்த்து அக்னி “எல்லாம் உன்னால தான்” என்று  உலகநாதனை  அடிக்க வர..
பளார் என்று அக்னியின்  கன்னத்தில் அடித்திருந்தாள் மாயா…
 அக்னி கன்னத்தில் கை வைத்தபடியே நிற்க..
” என் அப்பா மேல் கைய வெச்ச கொன்னுடுவேன் உன்னை” என்றாள்..
 “ஏய் இவனால தாண்டி இவ்வளவு பிரச்சனை, இவன் இல்லன்னா நம்ம ரெண்டு பேரும் சந்தோஷமா வாழ்ந்திருக்கலாம்” என்று கூற..
 “என் அப்பா இல்லாத வாழ்க்கை எனக்கு தேவையில்லை” என்றாள்..
 “மாயா” அது  என்று அக்னி அவள் அருகில் வர “தள்ளிப் போ, என் பக்கத்தில் வராத”  என்றாள்..
 அதற்குள்  உலகநாதன்  வந்திருப்பது அவர்கள் ஊரில் உள்ளவர்களுக்கு, தெரிந்து ஒவ்வொருவராக வர தொடங்க..
  அக்னி  மாயாவை பார்த்தபடியே  இருந்தான், அவன் மனது பாரம் ஏறியது போல் தெரிந்தது..
ஞானபிரகாஷ்  உலகநாதன் ஊருக்குள்  வந்து ரதியை பத்தி விசாரிச்சதை  கேள்வி பட்டவர்,, ரதியின் பின்னாடி உலகநாதன்  சென்றதை  அறிந்து கொண்டு, உலகநாதனை  கொல்லும் கோபத்தில் அவர் வர..
ஊருகாரர்கள்  சிலர் வந்து “நீ உலகநாதன் தானே ,,  எங்க ரதியை ஏமாத்திட்டு போனது நீ தானே, மறுபடியும் எதுக்கு  இங்க  வந்த?” என்று அவரை அடிப்பது  போல் கேள்விகள் கேட்டு கொண்டு இருக்க..
ஞானபிரகாஷ்  வேகமாக வந்தவர், “எவ்வளவு தைரியமிருந்தா ரதியை தேடி வந்து இருப்ப”  என்று  உலகநாதனை பிடித்து இழுத்து அடிக்க போக..
“அங்கிள் எங்க அப்பாவை அடிக்காதீங்க அங்கிள்,” என்று ஞானபிரகாஷ் முன்பு வந்த  நின்ற மாயா  கைகூப்பி, கதறி அழ….
மாயாவை  முதலில் முறைத்து பார்த்தவர்,,  பின்பு அவளின் மேடிட்ட  தோற்றத்தை  கண்டு வியந்து நின்றவர்..
அண்ணன் மகனை  கொலை வெறியில் பார்த்தார்….
ஞானபிரகாஷ் உலகநாதனின் மேலே வைத்திருந்த  கையை எடுக்காமல் இருக்க..
“அங்கிள்  அப்பாவை விட்டுடுங்கள் அங்கிள், எனக்கு இருக்குறது  என் அப்பா மட்டும் தான், அவர் செத்து பொளச்சு வந்திருக்காரு, அவரை எதுவும் பண்ணிடாதீங்க” என்று ஞானபிரகாஷின் முன் மண்டியிட்டு அழ..
அவளின்  கலங்கிய கோலத்தை பார்க்க முடியாதவற்கு உலகநாதனின் மேல் இருந்த கையை எடுக்க…
“ஏன்மா உங்க  அப்பா பண்ணது மட்டும் சரியாமா,, உங்க  அப்பா கல்யாணம் பண்ணிக்கிறேன்னு  எங்க ஊரு பொண்ண ஏமாத்திட்டு போயிட்டாரு, அந்த பொண்ணு குடும்பமே அழிஞ்சு போனமாதிரி ஆகிபோச்சு,, இதோ பாரு இந்த பொண்ணு ரதி  பித்து பிடிச்சு  ஊருக்குள்ள திரியுறா, அதுக்கு காரணம் உங்க அப்பா தானே அதுக்கு  என்ன பதில் சொல்ல போற”?.. என்று கேட்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!