Skip to content
Post Views: 1,112
பூவே 1
Advertisement
அதிகாலை நேரம் மாடியறையிலிருந்து ஒரு உருவம் மெல்ல கீழே இறங்கி வரும் போதே! அந்த இருளில் சுற்றி முற்றி பார்க்க. இன்னும் அந்த வீட்டின் பின் பக்க கதவு திறக்காமலிருக்கவும் நிம்மதி பெருமூச்சு விட்டு நிமிர்ந்து நின்றான்.
Advertisement
Advertisement
இவன் அரவம் கெட்டு தொழுவத்திலிருந்த ‘காளைகள் இரண்டும் தங்கள் தலையை வேகமாக , ஆட்டியதும் அதன் கொம்பில் கட்டியிருந்த மணி கிண்கிணி சத்தமிட்டது’.
“அடேய்… அடேய் சத்தம்காட்டாதீங்கடா” எனக் பதறிக்கொண்டு அவர்களிடம் ஓடிவந்தான்.
Advertisement
தங்கள் எஜமான் அருகில் வந்ததை பார்த்து. மீண்டும் தங்கள் தலையை ஆட்ட பார்க்க, தன் இரண்டு கைகளாலும் காளைகளின் மூக்கணாங்கயிறை பிடித்தவன்.
“ஏண்டா, இன்னைக்கு இப்படி படுத்துறீங்க. சத்தம் போட்டு மாட்டி விடாதீங்கடா” மீண்டும் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினான்.
இவன் பேசுவதை கண்டு சற்று தள்ளியிருந்த பசு அடுத்து சத்தம் கொடுத்தது.
“என்ன திடீர்னு என்மேல உனக்கு பாசம் பொங்குது.. உனக்கு அவ ஒருத்தி தானே! உன் கண்ணுக்கு தெரிவா” என்று பசுவிடம் குற்றப்பத்திரிக்கை வாசித்தவனை கண்டு,
‘கோவமாக தலையை திருப்பிக்கொண்டது’.
“சரி சரி கோவிச்சுக்காத லட்சுமி” என அதனிடமும் சமாதன பேச்சு வார்த்தையை முடிச்சிட்டே அங்கேயிருந்து நகர்ந்தான்.
அந்த வீட்டை சுற்றிக்கொண்டு வந்தவன். ஜன்னல் திறந்திருப்பதை கண்டு சற்று எட்டிப்பார்க்க அங்கே அவனின் தேவதையோ! ‘உட்கர்ந்தபடி ஒரு காலை மடக்கி தலைக்கு தலைகாணியை வைத்துக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தாள்’ அவளின் செயலில் உதட்டோரம் சிறுபுன்னகை தவழ அந்த இடத்திலிருந்து சத்தம்காட்டாமல் வாசல்பக்கம் வந்தான்.
அதற்குள்ளே ‘சதக்.. சதக்’ என்ற சத்தமும் கூண்டில் அடைபட்டிருந்த சேவல் விடுதலை கிடைத்த உணர்வில் ‘கொக்கரக்கோ’ சத்தமும் அவன் காதுகளில் விழுந்தது. ‘இந்த கோடியம்மா கெழவி தூங்குமா , தூங்காத இன்னேரத்துல சாணி தெளிக்க தொடங்கிடிச்சு’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு தன் மோட்டர்பைக்கை ஸ்டேன்ட் எடுத்து தள்ளிக்கொண்டு வந்தான்..
பாதையில் சிறு வெளிச்சம் தெரிந்தது. பத்து வீட்டுக்கு ஒரு தெரு விளக்கு மின்னி மின்னி எரிந்தது. இவனை கண்டு தெரு ஜிவன்கலெல்லாம் தன் தலையை தூக்கிப்பார்த்துட்டு திரும்பி படுத்துக்கொண்டனர்.
‘நல்லவேளை இதுங்க சத்தம் போடல’ என்று நினைத்தபடி தன் வண்டியை இன்னும் ரெண்டு தெரு தள்ளிக்கொண்டு வந்து நிறுத்தியவனுக்கு. மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.
சற்று தள்ளி வண்டியை ஸ்டென்ட் போட்டு திரும்பி பார்த்தவன் பார்வையில் விழுந்தான் அந்த அப்பாவி ஜீவன். இவனுக்கு இந்த ஜென்மத்தில் நண்பணாக பிறப்பெடுத்தவன்.
தன்னை நோக்கி ஒரு புயல் வருவது கூட தெரியாமல் அந்த ‘ஓட்டு வீட்டின் திண்ணையில் தை மாதத்தின் பின் பனிக்கு அடக்கமாக இரண்டு போர்வையுடன் தூங்கிக்கொண்டிருந்தவனை.’ நெருங்கினான்.
மெல்ல “மாறா” என்று அவனை தட்டி எழுப்ப,
தூக்கத்தில் இருந்தவனோ ‘இந்த கொசு தொல்லை தாங்கலன்னு சொல்லி, தலையையும் சேர்த்து போர்த்திக்கொண்டு தூக்கத்தை தொடங்கினான்.
“இவனை” என்று பல்லைக்கடித்தவன். தலையில் சற்று வலிக்கும்படி கொட்டினான்.
வழியில் “ஆ” எனக்கத்த போனவனின், வாயை பொத்தி “டேய் கத்தாதடா நான் தான் வெற்றி” என்றதும்.
வலியில் பாதி தூக்கம் தெளிந்தவன். அவன் யாரென்று தெரிந்ததும் மீதி தூக்கமும் கலைந்த கடுப்பில் , அவன் கையை தட்டி விட்டு ‘முறைத்தான்’.
“என்ன மச்சி அப்படி பாக்குற”.
“தூ , தள்ளி போடா” என்றவன். ஏதோ! ஞாபகம் வந்து மீண்டும் கத்த போனான்.
“டேய் கத்தி தொலைக்காதடா எருமை” என்று மீண்டும் அவன் தலையில் கொட்டி வைக்க கை தூக்கவும்.
கப்பென்று வாயை மூடியவன். “எருமை காலையிலே உம்மூஞ்சியில முழிச்சு தொலைச்சிட்டேன்டா, ஐய்யோ! இன்னைக்கு என்ன பாடு பட போறேன்னு தெரியல” என்றான் மாறா என்கிற மணிமாறன்.
அவனை முறைத்தவன் “எழுந்து வெளியே வாடா” என்றான் வெற்றி என்கிற வெற்றிவேந்தன்
“எது! இந்த குளிர்ல, என்னைய எங்கடா கூப்பிடுற ஜன்னி வச்சிடும்டா” என்று ஏதேதோ காரணம் சொன்னவனை கொஞ்சமும் கண்டுக்காது.
கையை பிடித்து இழுத்துக்கொண்டு வந்து. வண்டியில் ஏற்றினான்.
“அடேய்! என்னைய எங்கடா கடத்திட்டு போற , எங்காம்மாகிட்ட சொல்லாம எங்கேயும் வரமாட்டேன்னு” இவன் புலம்பிய எதுவும் காதில் வாங்காமல்.
‘வண்டியை சாவி போட்டு ஸ்டார்ட் பண்ணினான்’ வெற்றி
பின் பக்கம் அமர்ந்திருந்தவனோ! குளிருக்கு இதமாக கையோடு கொண்டுவந்திருந்த போர்வையை தலையில் முக்காடு போட்டுக்கொண்டு அமர்ந்தவனை கண்டு , தெரு ஜீவன்கள் குலைக்க தொடங்கியது.
“ஏய்! ச்சூ நான் தான் ஓடிப்போ” என்று மாறான் சொன்னதை , அந்த ஜீவன் கேட்டதாக தெரியவில்லை.
அவனை சுற்றி வந்தே குலைத்தது. “அடேய் , என்ன பாத்துட்டு இருக்க. இதுங்கிட்ட இருந்து என்னை காப்பாத்துடுடா” என்று புலம்பினான்.
“எருமை ! அந்த போர்வையை தூக்கி போடுடா, அதை பார்த்து தான் குலைக்குது” என்றான் வெற்றி
“அடேய் இது கூட இல்லைன்னா, இந்த குளிர்ல என் கை, காலெல்லம் வெரச்சிக்கும்னு” சொன்னான்.
“இப்ப நீ! இதை தூக்கிப்போடலனா, இன்னைக்கு இடுப்பை சுத்தி பதினாறு ஊசி போட வேண்டி வரும் எப்டி வசதி” என்றவனை , வாய்க்குள்ளே திட்டிக்கொண்டு போர்வையை திண்ணையில் சுருட்டி போட்டேன்.
இப்போது வண்டி வேகமெடுத்து, தெற்கு நோக்கி போகவும். மீண்டும் அலற தொடங்கினான் மாறன்.
“டேய் எதுக்குடா சுடுகாட்டுக்கு போற! போன வரம் தாண்டா சின்னசாமி தாத்தா செத்தாரு , அவரு ஆவி கூட சுத்துதுடா” என்று
இவன் புலம்பினதை காதிலே வாங்காமல்.
அவன் வரவேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தான்..
‘ஆற்றோரமிருந்த ஒற்றை வீட்டை பார்த்தபடி ‘, பைக்கை ஸ்டேண்ட் போட்டு பாக்கெட்டிலிருந்த நோக்கியா போனை எடுத்தான். வெற்றிவேந்தன் அவனை பார்த்ததுமே சொல்லிவிடலாம் இவன் கிராமத்தின் ‘காளை’ என்று படிக்கட்டு தேகம் இல்லையென்றாலும் அளவான உடல் தான் விவசாயம் அவனுக்கு தண்ணிபட்டபாடு நேரம் இப்போது 5.30 தாண்டி சிலநொடிகள் கடந்திருந்தது.
“ எதுக்குடா, இங்க வந்திருக்கோம்” என்று சுற்றி பார்த்துக்கொண்டே கேட்டான்.
“இன்னைக்கு ,எனக்கு கல்யாணத்துக்கு ஜாதகம் பாக்க போறாங்க” என்றான்.
“ஓ! அதை கலைச்சி விடுறதுக்கு தான் தூங்கிட்டிருந்த என்னை இழுத்துட்டு வந்து . இஇங்க காவகாக்க வைக்கிற” என்றான் மாறன்
“சும்மா நிக்கிறதுல உனக்கு என்னடா கடுப்பு”
“ஏண்டா! சொல்ல மாட்டா எள்ளு தாண்டா எண்ணெய்க்கு காயனும். எலி புழுக்கையும் ஏண்டா காயனும்” என்று குளிரின் தாக்கத்திலிருந்து தப்பிக்க தன் இரு கைகளையும் ஒன்றோடு ஒன்று சேர்த்து தேய்த்தான்.
‘நீ என்னவோ ! பண்ணிக்க’ என்ற ரீதியில். அவன் அந்த ஒற்றை வீட்டை பார்ப்பதும். கையிலிருந்த போனில் பாம்பு கேம் விளையாடுவதுமாக இருந்தான்.
தன் பொறுமையை கொஞ்சம் கொஞ்சமாக களவு போக தொடங்கியது மாறனுக்கு “ஏன்? மாப்ள இந்த பொழுது விடிஞ்சி வந்து பேசுனா, உன் வாக்கு பலிக்காதுன்னா! என்னை இன்னேரத்துல இழுத்து வந்து ரோதனை பண்ணுறன்னு” தன் கையில் கடித்த கொசுவை அடித்துக்கொண்டு கேட்டான் மாறன்.
அவன் சொன்னதை கேட்டு திரும்பி பார்த்தவன். போனை பாக்கெட்டில் போட்டு ‘ மீண்டும் தன் பார்வை அந்த ஒற்றை வீட்டின் மீது நிலைத்தது’.
அந்த வீட்டிலிருந்த வந்த பெண்மணி தன் வழமையான வேலைகளை தொடங்கிய சிறிது நேரத்தில் தோளில் துண்டை போட்டுக்கொண்டு வெளியே! வந்தார் அந்த மனிதர்.
அவரை பார்த்ததும் இருவரும் ஒதுங்கி நின்றனர். ‘அந்த மனிதரோ! தன் காலை கடன்களை முடித்து. ஆற்றில் குளித்து கிழக்கு நோக்கி தன் இரு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி நின்று சூரியநஸ்காரம் செய்துவிட்டு கண்களை திறக்க தன் எதிரே நின்றவர்களை கண்டு சற்று பயந்து தான் போனார்.
“யாருப்பா, நீங்க எதிர்ல வந்து பயம்காட்டுறீங்க” என்றார்.
“சொல்லுறோம் ஜோசியரே அதை சொல்ல தானே வந்திருக்கோம்” என்றான் வெற்றிவேந்தன்.
“ஜோசியம் பாக்க வந்தீங்களா ப்பா! நான் காலையிலே பார்க்கிறது இல்ல சூரியன் மேட்டுக்கு வந்தப்புறம் வாங்க” என்றார். ஏதோ? இவர்கள் ஜோசியம் பார்க்க வந்ததாக எண்ணிக்கொண்டு.
“யோவ்! நாங்க சொல்ல வந்ததை முழுசா , கேட்கமாட்டியா நீ!” என்று மணிமாறன் கைலியை ஏத்தி கட்டிக்கொண்டு முன்னே வந்தான்.
பின்னே அவன் கவலை அவனுக்கு. நல்லா தூங்கிட்டு இருந்தவனை என்ன சேதின்னு சொல்லாமலே! இழுத்து வந்து இவன் வீட்டு வாசல்ல காவகாத்த கடுப்பில் இவன் இருக்க. இது தெரியாமல் ஜோசியர் வேறு கடுப்பேற்றவும் கத்தினான்.
உள்ளுக்குள் பயத்தில் இருந்த ஜோசியரோ? இப்போது முகத்திலே அந்த பயத்தை காட்டினார்.
“மாறா, அமைதியாயிரு” என்ற வெற்றி ஜோசியரிடம் திரும்பி “உங்களால எனக்கு ஒரு வேலையாகணும்” என்று தன் தேவையை சொன்னதும்.
“மன்னிச்சிடுங்க தம்பி என் தொழிலுக்கு விரோதமா, நான் எதுவும் சொல்ல மாட்டேன்” என்று ஜோசியர் சொன்னதும்.
இதுவரை சாந்தமாக நின்றிருந்த வெற்றிவேந்தன். தன் கைலியை ஏத்திகட்டி தன் அருகிலிருத்தவனுக்கு கண்ணை காட்டவும்.
மணிமாறன் சிரிப்புடனே அங்கேயிருந்து நகர்ந்தான்.
இருவரின் பார்வை பரிமாற்றம் புரியாமல் திருதிருவென முழித்த ஜோசியருக்கு சிலநொடிகளில் புரிந்து போனது..
“அய்யோ! என்ன பண்ணுறீங்க என்னை விடுங்க” என்று இவர் கத்தினதை கொஞ்சம் கூட கணக்கில் எடுக்காமால்.
இருவரும் சேர்ந்து ஜோசியரின் கைகளை கட்டி, குத்த உட்கார வைத்தவர்கள். அவர் கால்முட்டியில் கைகளை மாட்டி கை முட்டிக்கும் ,கால் முட்டிக்கும் இருந்த சிறு சந்தில் சிலம்பு குச்சியை சொறுகியிருந்தனர்.
“அடே ஜோசியரே! ஒரு நல்ல பட்டாபட்டி டவுசர் வாங்கி போட்டாதான் என்னவே! ஐய்யோ! என் கண்ணு அவிஞ்சிடும்போல இருக்குடா மாப்ள” என்று மணிமாறன் புலம்பினதை அவன் கணக்கிலே எடுத்தமாதிரி தெரியல, மற்றோரு சிலம்பு குச்சியை தூக்கிகெண்டு அவன் முன்னே நின்றான்…
“அய்யோ? காப்பாத்துங்க. காப்பாத்துங்க என்னை” என்று சொல்லும்போதே பயத்தில் நடுங்கியது ஜோசியரின் குரல்.
சற்றும் கண்டுக்காது சிலம்பு குச்சியை பிடித்துக்கொண்டு நின்றான் வெற்றி.
“அடியே மல்லி எங்கடி போய் தொலைஞ்ச” என்று மீண்டும் கீழே கிடந்தவன் கத்தவும்.
கத்தினவன் வாயில் ஒரு துணியை வைத்து அடைத்தான் வெற்றிவேந்தன்,
“ஏலே மூச் சத்தம் வெளியே வந்திச்சு…
தொலைச்சுப்புடுவேன் தொலைச்சு”…
“ம்கூம்… ம்கூம்” என தலையை தலையை ஆட்டவும்…
“இப்ப சொல்லு, நான் சொன்னமாதிரி பண்ணபோறீயா, இல்லை” என இன்னொரு சிலம்பு குச்சியை தூக்கிகாட்டினவனை, கண்டு இவன் மிரண்டே போனான்…
“எலே ஜோசியரே ,உம்ம நல்லதுக்கு தாம்ல சொல்லுறோம் கேட்டுக்கையா, எம்மாப்ள சொல்லுற மாதிரி நீ! நடந்துக்கிட்டா… உமக்கு ஆயுசு கெட்டி” என்று மணிமாறன் வேறு பயமுறுத்தினான்.
இங்கு கை, கால் கட்டப்பட்டவனோ! பயத்தில் உடல் முழுவதும் வியர்க்க ஆரம்பித்தது… ‘இவர்கள் சொல்லுறதையே செய்வதாக தலையை ஆட்டினான்’…
‘அது’ என அவன் கட்டுகளை தளர்த்தினான்…
“ஏன் ப்பா, உனக்கு கலியாணம் பண்ணுற வயசு தானே!” என கைகட்டு அவிழ்ந்ததும் இவன் கேட்க…
‘ஆமாம்’ என தலையாட்டினான் வெற்றிவேந்தன்…
“அப்புறம் ஏம்ய்யா ஜாதகம் சேராதுன்னு சொல்ல சொல்லுறீங்க” எனவும்…
“ஆனா, நான் கட்டிக்கப்போறவ இன்னும் வயசுக்கே வரலையே”? என்றான்…
“எது” என வாயில் கை வைத்தார்.
அவன் முதுகிலே ஒரு அடி போடவும் “அம்மா” என அலறிக்கொண்டே முதுகை தேய்த்தவன்… திரும்பி பார்க்க
“என்ன , அதிர்ச்சி எம்மாப்ள சொல்ல வர்றதை முழுசா கேட்டுட்டு இன்னும் அதிர்ச்சியாகு” என்றவனை , ஒன்னும் பண்ண முடியாமல்… எதிரே நின்றவனை பாவமாக பார்த்து வைத்தான்…
வெற்றியும் “எங்க ஊர் நெல்லூர். ஆத்தா பேரு காளியம்மா கூடவே என் நடக்காவும் வருவாங்க… ஜாதகம் கொடுத்ததும் நீரு என்ன சொல்லுறன்னா, இந்த ரெண்டு ஜாதகம் சேராதன்னு சொல்லனும்…”
“நான், சொன்னதும் அவங்க நம்புவாங்களா”…
“ நம்ம மாட்டாங்க தான்… அதுக்கு ஏத்தது போல நீ ! நம்புற மாதிரி சொல்லனும்… மவனே எதாவது மாத்தி சொன்னென்னு வை இப்ப சில்லாகோல் தான் பாய்ச்சினேன் அடுத்து எங்க சிலம்பு குச்சியை விடுவேன்னு எனக்கே தெரியாது” என பல்லைக்கடித்தான் வெற்றி.
“அட, என்ன மாப்ள நீ ! இவ்ளோ பேச வேண்டியே அவசியமே இருக்காது… அதெல்லாம் ஜோசியர் சரியா பண்ணிடுவாரு, இல்லையா ஜோசியரே” என அவன் பங்குக்கு மிரட்டினான்.
“இல்லப்பா, நீங்க சொன்ன மாதியே நான் பேசிடுறேன்னு” வாக்கு தந்தான்.
“அது ஞாபகம் இருந்தா சரி போ” என்று வெற்றி சொல்லி முடித்தானோ? இல்லையோ விழுந்து வாராதகொறையாக அங்கிருந்து ஓடினான்…
“ஏன்? மாப்ள இது சரி வருமா?”.
“ஏண்டா, இப்படி கேக்குற” என்று சொல்லியபடி சைட் ஸடேண்ட் எடுத்து வண்டியில் அமர்ந்தான்.
அவன் பின்பக்கம் அமர்ந்த மணிமாறனும் “இந்த விக்கட் அவுட் பண்ணிட்ட ஆனா! இன்னொரு விக்கட் இருக்கேடா, அதுக்கும் இதே காரணத்தை சொன்னா நால்லாவா இருக்கும்னு” , சொன்னவனை முறைத்து பார்த்தவன்.
“கொஞ்சம் கீழே இறங்கு”
“ ஏன்? மாப்ள வண்டி ஸ்டார்ட் ஆகலையா… நா வேனா தள்ளி விடுறேன்னு” சொல்லி கீழே இறங்கினானோ? இல்லையோ? வண்டியை ஸ்டார்ட் செய்தவன்.
“நடந்தே ஊரு வந்து சேரு அப்பதான் கொழுப்பு குறையும்னு” என்றான்
“அடேய் கொலகார நில்லுடா பத்து கிலோமீட்டர்டா , என் காலு புண்ணாபோகும்டா” எனக் இவன் கத்திய கத்தல் எதுவும் அவன் காதில் விழவில்லை.
‘உனக்கு வாய்ல தாண்டா சனி அவனை பத்தி தெரிஞ்சும் வாயை திறந்த பாரு உனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்னு’ தனக்கு தானே புலமபிக்கொண்டு ஊர் எல்லைக்கு வந்தான்.
வழிலே தன் வண்டி நிறுத்தி பார்த்திருந்தான் வெற்றி… “என்ன பாக்குற வண்டியிலே ஏறு”,
“ ஒன்னும் தேவையில்ல, நா நடந்தே வரேன். நீ ! இருக்குற கடுப்புக்கு போற வழியில் என்னை தள்ளி விட்டு போனாலும் போவ” என்று இவன் முறுக்கிக்கொண்டான்.
“ஓ! அப்ப சாரு என்கூட வரமாட்டீங்க அப்படித்தானே”? என்று ஒரு மார்க்கமாக வெற்றி இழுத்து சொன்னதை , கேட்டவனுக்கு இவன் இவ்ளோ? நல்லவன் இல்லையே? என்ற யோசனை தான்.
“என்ன யோசனை மச்சி”
“ஒன்னுமில்லை” என்று முகத்தை திருப்பினான்.
அதே நேரம் இவர்கள் அருகே இன்னொரு பைக் வந்து நின்றது. “என்ன பங்காளி , மாப்ள கூட தனியா இருக்குற” என வந்தவன் கேட்டதும்.
“சும்மா தான் பங்காளி எந்தப்பக்கமிருந்து வர்ற” என்றான் மாறன்.
“நேத்து மாமாவுக்கு மேலுக்கு முடியலன்னு செஞ்சிக்கு போயிட்டு இராத்தங்கிட்டு வெள்ளனவே கிளம்பிட்டேன் பங்காளி. நீங்க என்ன இந்தபக்கம் வந்திருக்கீங்க” என்றான் சிவா
“அது ஒன்னுமில்லை பங்காளி மாப்பிள்ளைக்கு சளி புடிச்சிக்கிச்சு , அதன் ஜோசியருகிட்ட வைத்தியம் பாக்கலாம்னு வந்தோம். நீ வண்டியை எடு” என்று பின்பக்கம் அமர்ந்தவன். வெற்றியை . ஒழுங்கு காட்டி சென்றான்.
அவன் பண்ண அலும்பில் இவனுக்கு சிரிப்பு தான் வந்தது.
வாய் விட்டு சிரித்தவன் வண்டியில் அமர்ந்து வேகத்தை கூட்டியவன்.
மாறனுக்கு ‘ஆப்பு வைக்க’ அவன் வீட்டு திண்ணையில் அமர்ந்திருந்தான்…
error: Content is protected !!