தென்றலாய் என் காதல் – 20
தென்றல் – 20
மிகுந்த களைப்புடன் வீட்டிற்குள் நுழைந்தாள் சிந்து.
“ஏய் சிந்து…வந்துட்டியா?” என்றாள் ரஞ்சிதா.
Advertisement
அவளை முறைந்தவள் தன் கைப்பையை தூக்கி எறிந்து விட்டு படுக்கையில் சரிந்தாள்.
அவள் மௌனமே ரஞ்சிதாவிற்கு எடுத்துக் கூறியது அவள் மனதின் வலியை.
“காஃபி” என்றாள் ரஞ்சி.
Advertisement
“ப்ளீஸ்….” என்றாள் சிந்து. உடனே எழுந்து போய் சூடான பில்டர் காஃபியை போட்டு கொண்டு வந்தாள்.
Advertisement
இருவருக்கும் ஒவ்வொரு கோப்பை,சிறு புன்னகையோடு எழுந்து அதை கையில் வாங்கியவள் “தேங்க்ஸ் டி” என்று ரசித்து சுவைத்தாள்.
அவள் மனம் அப்படியொரு நிம்மதியை அடைந்தது.
“என்ன ஆச்சு சிந்து எதுவும் பிரச்சனையா?” என்றாள் மெல்லிய குரலில்.
Advertisement
“ஹ்ம்ம்…பிரச்சனை இல்லை என்றால் தான் பிரச்சனை” என்றாள்.
“என்ன சொல்ற?”
“பின்ன என்னடி வாழ்க்கைல ஒரு பிரச்சனை இருந்தால் பரவாயில்லை. இப்படி வாழ்க்கையே பிரச்சனையாய் இருந்தாள் எப்படி?”என்று வலியோடு புன்னகைத்தாள் சிந்து.
“இப்ச்…என்னடி” என்று சலித்து கொண்டாள் ரஞ்சி.
“போ.. போய் படு” என்றாள் சிந்து.
“இல்ல நீ என்னவென்று சொல்” என்று கட்டாயப்படுத்தினாள்.
“நீ சொன்ன ஒத்த பொய்யால் தான் எனக்கு இத்தனை பிரச்சனையும்.
என்னால் அவர் பேசும் வார்த்தைகள் எதையும் தாங்கிக்கொள்ள முடியவில்லை”என்றாள்.
“சாரி டி…”என்று வருத்தத்துடன் கூறினாள்.
அதற்குள் அவள் அலைபேசி ஒலித்தது.
“துளசி கால் பண்றா இந்தா” என்று நீட்டினாள் ரஞ்சி.
“ஹ்ம்ம்…ஆமாம்,நான் அங்கே இருக்கும் போதே அழைத்து இருந்தாள் பேசமுடியவில்லை
கொடு”என்று வாங்கி பேசினாள்.
“சொல் துளசி” என்றதும் அழ துவங்கினாள்.
“ஏய்…என்ன என்ன ஆச்சு?ஏன் அழற” என்று பதஷ்டத்துடன் கேட்டாள்.
“அக்கா…அக்கா…. நான் பீஸ் கட்ட போனேன்ல அங்க எனக்கு மெடிக்கல் சீட் இல்லைனு சொல்லிட்டாங்க…க்கா…”என்று விம்மினாள்.
“என்ன சொல்ற ஏன் நீ மெரிட்டில் தேர்வு பெற்று இருக்கிறாய். அரசு மானியத்தில் தானே படிக்க வைப்பதாய் சொன்னார்கள்”என்றாள்.
“ஆமாம் அக்கா, ஆனா இப்போ என்னடானா இப்படி சொல்றாங்க. என் சீட்டை யாருக்கோ ஒரு பெரிய தொழில் அதிபர் பையனுக்கு கொடுத்துட்டாங்கலாம்.
ஏன்னு கேட்டா அடிக்க வராங்க. கேவலமா பேசறாங்க.
அடுத்தவருஷம் திரும்ப நீட் எழுதிவானு சொல்றாங்க அக்கா”என்று அழுது புலம்பினாள்.
“ஏய்…அழாதடி…ஒன்னும் இல்ல நாளைக்கே நான் அங்கே வந்து என்னனு கேக்குறேன்.”
“என்ன இது அராஜகம் ஏழைங்கனா என்ன வேண்டும்”என்றாலும் செய்வார்களா?
“நான் மீடியாவை அழைப்பேன். இதை யார் பண்ணி இருந்தாலும் நிச்சயம் நான் சும்மா விட மாட்டேன்” என்று கொந்தளித்தாள்.
“அம்மா எங்க துளசி.அம்மாக்கு இந்த விஷயம் தெரியுமா?”என்றாள்.
“அக்கா அவங்க அடிச்சதே அம்மாவை தான்” என்று தேம்பி அழுதாள்.
“என்ன சொல்ற துளசி” என்று பதறினாள்.
“ஆமாம் அக்கா அம்மா விஷயம் தெரிஞ்சு காலேஜ் நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
ஆனால் அங்கே எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை.
இங்க பாரும்மா இதெல்லாம் பெரிய இடத்து விவகாரம். ஒரு டாக்டர் சீட்டோட விலை என்னனு உனக்கு தெரியுமா சும்மா வந்து கெஞ்சிக்கிட்டு இருக்காத போமா மொதல்ல” என்று சாடினான்.
“ஐயா…என் பிள்ளை கஷ்டப்பட்டு படிச்சு இந்த இடத்துக்கு வந்துருக்கு. அவ கனவை பறிக்காதீங்க” என்று கை எடுத்து கும்பிட்டார் சிந்துவின் அன்னை அம்சவேணி.
“இந்தாம்மா உன் கிட்ட எத்தனை வாட்டி சொல்றது, இதெல்லாம் யாராலும் ஒன்னும் பண்ணமுடியாதுமா” என்றார் சற்றே இரக்கத்தோடு.
“இங்க பாருங்க நீங்க நினைக்குற மாதிரி எல்லாம் இங்க எல்லாம் எல்லாருக்கும் கிடைச்சுறாது.
எல்லாம் பணம் தான் புரியுதா.
உன் பொண்ணு நல்லா படிச்சு என்ன புண்ணியம். உன் கிட்ட தான் பணம் இல்லையே.”
விரக்தியாய்…. “ஆனா பணம் இருக்குறவனுங்களுக்கு படிப்பு ஏற மாட்டேங்குது.அதனால தான் உன் சீட் பல லட்சம் ரூபாக்கு விலைக்கு ஏலத்தில் போய் இருக்கு.”
“இவனுங்க எல்லாம் டாக்டராகி எத்தனை பேரை கொல்ல காத்திருக்கிறானுங்களோ தெரியல சமுதாயத்தை நினைச்சாலே பயமா இருக்கு”என்று முனுமுனுத்தார்.
ஆட்கள் வருவதை கண்டவர் தன் தோரணையை மாற்றினார்.
“யம்மா இங்க இருந்து இடத்தை காலிப்பண்ணுங்க.
நீங்க இங்க நிக்கிறதை விட மினிஸ்டர் வீட்டு வாசல்லப்போய் நில்லுங்கள்.
ஏன்னா அவர் தான் இந்த சீட்டுக்கு ரெக்மண்ட்”என்று அவசரமாக கூறியப்படி தலையை கவிழ்ந்துக் கொண்டு பதிவேட்டை திருப்பினார்.
அங்கு வந்த கல்லூரி நிர்வாகிகள் “ஏய்…உன் பொண்ண கூட்டிட்டு போய்டு. இல்லை என்ன நடக்கும் தெரியுமா?”
“நாளைக்கு காலைல நியூஸ்ல நீட் தேர்வில் மாவட்டத்தில் முதல் இடம் பிடித்த மாணவி அடையாளம் தெரியாத நபர்களால் நேற்று இரவு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை.
உயிர் இன்றி பெண் சடலம் எரியில் இருந்து மீட்பு என்று நியூஸ் வரும் உனக்கு ஓகே வா”என்றனர்.
“சீ நீங்க எல்லாம் மனுசங்களா? இப்படி ஏழைகளின் வயிற்றில் அடிக்குறிங்களே!” என்றதும் ஓங்கி கன்னத்தில் அறைந்தார் கல்லூரி தாளாலர்.
அதிர்ச்சியோடு இருவரும் ஏறிட “என்னங்கடி நானும் அப்போதில் இருந்து பாக்குறேன் சும்மா”. “போங்கடி பிச்சைக்கார முண்டைகளா” என்று தகாத வார்த்தைகளால் திட்டினார்.
“பணம் இல்லாம படிக்க உங்க அப்பன் வீட்டு காலேஜ்ஜா?”
“இது மெடிக்கல் காலேஜ்டி.
தெருல இருக்க உங்களுக்கு எல்லாம் டாக்டர் ஆகணும் கனவு இருந்தா! டாக்டர் பிள்ளைகள், என்ஜினீயர் பிள்ளைகள், அரசியல்வாதி பிள்ளைகளுக்கு எல்லாம் எப்படி சீட் கிடைக்கும்.”
“அது என்ன கருமமோ தெரியல பாமர வீட்டு பிள்ளைகளுக்கு தான் நல்லா படிப்பு வருது என்று சலித்தபடி கூறினார்.”
சற்றே குரலை உயர்த்தி துளசியைப் பார்த்து “நீங்க எல்லாம் கும்புடு போடணுமே தவிர, பட்டம் வாங்க கூடாது.”
“போ போய் ஏதாவது காட்டு வேலைக்கு, கூலி வேலைக்குப்போ. உன் தகுதிக்கு தகுந்த மாதிரி ஏதோ ஒரு கருப்பனோ, சுப்பனோ பார்த்து கல்யாணம் பண்ணி
குட்டிகளா போட்டுத் தள்ளு”என்று கேவலமாக பேசினார்.
“நீங்க எல்லாம் நல்லாவே இருக்க மாட்டிங்கடா. நாசமா போயிருவீங்க” என்று சாபம் விட அனைவரும் சிரித்தனர்.
“டேய் இது எத்தனையாவது சாபம்டா” என்றார் சிரித்து ஏளனமாய் கல்லூரியின் தாளாலர்.
“கணக்கே இல்லை அண்ணே”என்றான் அடியாள்.
அனைவரும் சிரிக்க
“ஏய் போங்கடா ஆணவத்தை அழிக்க ஒருத்தன் வருவான்….. நிச்சயம் வருவான்”என்று களைப்புடன் கூறி தளர்ந்தார் அம்சவேணி.
“அம்மா” என்று தாங்கி பிடித்தவள் “வாம்மா இவங்க கிட்ட பேசி எந்த பலனும்மில்ல நாம பேசவேண்டிய இடத்துல இருந்து பேச வேண்டியவங்க கிட்டத்தான் பேசணும்” என்று தன் அன்னை அம்சவேணியை அழைத்து சென்றாள் துளசி.
துளசி நடந்ததை சிந்துவிடம் சொல்லியதும் அவள் இரத்தம் கொதித்தது.
“துளசி அம்மாவை தைரியமா இருக்க சொல்லு நான் இருக்கேன்” என்று அழைப்பை தூண்டித்தாள்.
ஆழ்ந்தயோசனையுடம் அமர்ந்து இருந்தவளை “கவலைப்படாதாடி நாளை நானும் உன்னுடன் வருகிறேன்.
என்ன தான் செய்துவிடுவார்கள் என்று பார்க்கலாம்” என்று தன் தோழிக்கு பக்கத்துணையாய் நின்றாள் ரஞ்சிதா.
இரவு மெல்ல கரைந்தது.
சிந்துவின் மனப்போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போனது.
அவள் சுமையும் தான். எப்படியாவது தன் தங்கையை மருத்துவராக்கி சற்றே வாழ்வில் ஆசுவாசம் அடையலாம் என்று நினைத்துக்கொண்டு இருந்தவளுக்கு இப்போது பெரிய துலாபாரம் சுமக்க கடவுள் நிர்ணயித்து விட்டார் போலும்.
அந்த இரவு பாதி உறங்கியும் மீதி யோசித்துமென கடந்தது.
காலை ஒன்பது மணி.
“கீதா…ஏன் இன்னும் ரஞ்சிதா வரல. உங்க கிட்ட ஏதாவது சொன்னாங்களா?” என்று வினவினான் விக்ரம்.
“ஆமாம் தம்பி நேத்து நைட்டே என் கிட்ட ஃபோன் பண்ணி சொல்லிட்டாங்க. அவங்களால இன்னைக்கு வர முடியாதாம்” என்றார்.
“இப்ச்…ஏன் இப்படி பண்றாங்க? ரஞ்சிதா,அம்மாக்கு எவ்ளோ முக்கியமுன்னு தெரியாதா?
அவங்க இங்க இல்லைனா அம்மாவை எப்படி நம்மளால கட்ரோல் பண்ண முடியும்.”
“என் கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லாம எப்படி போனாங்க”என்றான் சற்றே கோபத்துடன்.
“இல்ல விக்ரம் தம்பி அவங்க சொல்றேன் தான் சொன்னாங்க நான் தான் நீங்க இந்த டைம்ல தூங்குவிங்க டிஸ்டர்ப் பண்ண வேண்டான்னு சொன்னேன்” என்று கூறினார் கீதா.
“ஹ்ம்ம்….” என்று சற்றே குரலில் தோய்வுடன் நகர்ந்தான்.
ஆனாலும் அவனுக்கு அவளை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று இருந்தது.
“எதுவும் உடம்பு சரி இல்லையா” என்றான் மீண்டும்.
“அதெல்லாம் ஒன்னும் இல்ல தம்பி. அவங்க சொந்த ஊருக்கு போறதா சொன்னுச்சு.
ஏதோ அங்க பிரச்சனையாம் எல்லாத்தையும் வந்து சொல்றேன், இப்போ பேச டைம் இல்லை சொன்னுச்சு தம்பி.
ஆனா அது குரல்ல ஏதோ ஒரு பதஷ்டம் தெரிஞ்சது தம்பி” என்றார் கீதா.
“அப்படியா?” என்று பதஸ்டதோடு “சரி அவங்க ஊரு எது.”
அடுத்த காட்சி
தன் தங்கை, அன்னை,ரஞ்சிதாவை அழைத்துக்கொண்டு மினிஸ்டர் வீட்டிற்கு சென்றாள் சிந்து.
“யேம்மா…யேம்மா…எங்க போறீங்க? நீங்க பாட்டுக்கு மினிஸ்டர் வீட்டுக்குள்ள வரீங்க. இப்படி எல்லாம் வரக்கூடாது போங்கமா.
மினிஸ்டர் இன்னும் கொஞ்சம் நேரத்துல கட்சி ஆபீஸ் போவாரு அப்போ வாசல்ல நின்னு மனு கொடுக்கறதா இருந்தா கொடுங்க” என்று வாட்சமேன் சொல்ல சொல்ல கேட்காமல் நால்வரும் உள்ளே சென்றனர்.
மினிஸ்டர் அச்சமயம் வெளியே வர அவர்களை கண்டு தன் அசிட்டேன்டிடம் “யாரு டா இந்த பொம்பளைக வீட்டு வாசல் வரைக்கும் வந்துருச்சுங்க. அந்த கிழவன் வாட்ச் மென் என்ன பண்றான் என்றார்.
ஐயா மன்னிச்சுக்கோங்க சொல்ல சொல்ல கேட்காமல் உள்ள வந்துட்டாங்க ஏம்மா இப்படி பண்றிங்க மொதல்ல வெளிய போங்கமா என்றார் வாட்ச் மென்.
போக முடியாது எங்களை விடுங்க என்று ஆவேசமாக கூறினாள் சிந்து.
“ஐயா…இவங்க தான் அந்த மெடிக்கல் சீட்” என்று அடியாள் வார்த்தையை இழுக்க
“ஓ…..” என்றவன் ஏளனமாய் “இப்போ என்னமா உங்களுக்கு பிரச்சனை” என்றார்.
“சார் என் தங்கச்சிக்கு அலார்ட்டான மெடிக்கல் சீட் இப்போ யாரோ ஒரு தொழில் அதிபர் பயனுக்கு கொடுத்து இருக்காங்க.” “மேனேஜ்மென்ட்ல கேட்டா நீங்க தான் அந்த சீட்டை வித்துட்டதா சொல்றாங்க.”
“ ஏன்னு கேட்ட என் அம்மாவை அடிச்சு துரத்தியிருக்காங்க இது தான் உங்க மக்கள் சேவையா?” என்றாள் அந்த இடமே அதிர.
அங்கு கூடி இருந்த பல ரௌடிகள் அவர்களை சூழ,
“ஏய்…ஏய்…அவசரப்படாதீங்கடா. பாப்பாக்கு இன்னும் உலகம்னா என்னனு புரியல.
நம்ம தான் சொல்லிப் புரிய வைக்கணும் போங்கடா” என்று வஞ்சகமாக சிரித்தார்.
“இங்க பாருங்க சார் இப்பவும் ஒன்னும் கெட்டுப்போகல ஒழுங்கா துளசிக்கு அவ உரிமையை திருப்பிக் கொண்டுங்க. இல்லைனா நாங்க பிரஸ், மீடியாணு போவோம்” என்றாள் ரஞ்சிதா.
“இது யாருடா என்று கேட்க,
ஐயா இது அந்த பொண்ணு அக்காவோட பிரண்ட்” என்றான் கையாள்.
“ஓ…. சரி சரி…பார்க்க மூனு பேரும் அழகா இருக்காளுக இன்னைக்கு வேட்டைத்தான்” என்றான் மினிஸ்டர்.
கையாள் ரகசியமாய் சிரித்தான்.
“சரி…. சரி…கத்தாதீங்கமா எதுவா இருந்தாலும் சாயும்காலம் பேசிக்கலாம்.”
“இப்போ ஐயாவுக்கு ஒரு கட்சி மீட்டிங் இருக்கு.
இப்போ போயிட்டு ஒரு ஆறு ஏழு மணியைப் போல வாங்க.
ஐயா உங்க கண் முன்னாடியே காலேஜ் மெனேஜ்மென்ட் கிட்ட பேசி உங்களுக்கு அலார்ட்டான மெடிக்கல் சீட்டை வாங்கி தருவார் இப்போ கிளம்புங்க’ என்றான் அடியாள்.
ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டானர்.
“என்ன யோசிக்கிறீங்க.
ஐயா சொன்னா சொன்னது தான் நம்பிக்கையா போயிட்டு வாங்க”என்றான்.
மனதில் ஒரு வித குழப்பத்தோடு நகர்ந்தனர்.
“எம்மா நில்லு” என்றவன் ஐயா இந்த பணத்தை கொடுக்க சொன்னாரு” என்று ஐந்துதாயிரம் ரூபாயை அம்சவேணி கையில் திணித்தான்.
“எதுக்கு பணம்.” என்றார் புரியாமல்.
“உன் ஹாஸ்பிடல் செலவுக்கு. உன்ன அடிச்சுட்டாங்கணு சொன்னாலே அதான் ஐயாவுக்கு மனசு கேக்கல அதான் கொடுக்க சொன்னார். போ போய் நிம்மதியா ஓய்வு எடு.
சாயிந்தரம் நீ பசங்க கூட வர வேண்டாம்.அவங்க மட்டும் வந்தா போதும். எல்லாம் ஐயாவே முடிச்சிருவாரு” என்று கூறி சென்றான்.
கையில் பணத்துடன் ஆலோசையோடு நகர்ந்தார் அம்சவேணி.
“அம்மா மினிஸ்டர் ரொம்ப நல்லவர். நான் கூட தப்பா நினைச்சிட்டேன்” என்றாள் ரஞ்சிதா.
ஆனால் அம்சவேணி எதுவும் பேசவில்லை.
“அம்மா என்ன இன்னும் யோசனை அதான் எல்லாம் சரி ஆயிடுச்சுல” என்றாள் துளசி.
“எனக்கு என்னவோ சந்தேகமா இருக்கு” என்றார் அம்சவேணி.
“எனக்கும் தான்” என்றாள் சிந்து.துளசி, மற்றும் ரஞ்சி புரியாமல் இருவரையும் பார்த்தனர்.
“வாங்க இங்க இருந்து மொதல்ல போகலாம்” என்று மினிஸ்டர் வீட்டில் இருந்து சென்றனர்.
தென்றல் மீண்டும் வீசும்….

