Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

74. ஆன் ஜோ - நன்னிலவு நீ தண்நிழல் நான்

நன்னிலவு நீ…தண்நிழல் நான்…-13

.

அத்தியாயம் 13

“அத்தனை ஆதரவற்றுக் கிடந்தும், இத்தனை ஆதரவாய்ப் பூத்து விடுகிறது அந்தச் சாலையோரச் செடி.. து யாரும் நினையாத ஆன்மாவிற்கானப் பிரார்த்தனை.பெயரிடப்படாததும் …அன்பு”



Advertisement

மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு ஒரு போர்க்களத்தைப் போல காட்சியளித்தது. சக்கர நாற்காலிகளின் சத்தமும், நர்சுகளின் அவசர ஓட்டமும் ஆதிரையின் செவிப்பறைகளைத் தாக்கின. மித்ரன் கவினைத் தன் கைகளில் ஏந்தியிருந்த விதம், ஏதோ ஒரு உயிராதாரமான பொருளைப் பறி கொடுத்துவிடக் கூடாது என்பவன் போல இருந்தது. அவனது சட்டை முழுவதும் கவினின் வியர்வையும், கண்ணீரும் படிந்திருந்தது.

“டாக்டர்! ப்ளீஸ்… சீக்கிரம் பாருங்க! அவனுக்கு மூச்சு திணறது…” மித்ரனின் குரல் அந்த ஹாலில் எதிரொலித்தது.கவின் ஸ்ட்ரெச்சரில் ஏற்றப்பட்டு உள்ளே கொண்டு செல்லப்பட்ட அந்த நொடி, ஆதிரைக்கும் மித்ரனுக்கும் இடையே இருந்த உலகம் இரண்டாகப் பிளந்தது. கதவுகள் அடைக்கப்பட்டன. சிவப்பு விளக்கு எரிந்தது.

மித்ரன் அப்படியே சுவரோரம் சாய்ந்து தரையில் அமர்ந்தான். அவனது கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. ஆதிரை அருகில் செல்லத் துணிவின்றிச் சற்று தள்ளி நின்றாள். மித்ரன் தலைநிமிர்ந்து அவளைப் பார்த்தான். அந்தப் பார்வை அவளைச் சுட்டது.

Advertisement

“சந்தோஷமா ஆதிரை? நீ கேட்ட கேள்விகளுக்குப் பதில் கிடைச்சிருச்சா? ஒரு பிஞ்சு குழந்தையை இப்படியா வார்த்தைகளால சிதைப்ப? அவன் உன்னை எப்படிக் கொண்டாடிட்டு இருந்தான் தெரியுமா?” மித்ரனின் குரல் தாழ்ந்திருந்தது, ஆனால் அதில் ஒரு எரிமலைக்குரிய வேகம் இருந்தது.

Advertisement

ஆதிரை பேச முடியாமல் தவித்தாள். “மித்ரன்… நான்… நான் அப்படி ஆகும்னு நினைக்கல…”

“நினைக்கலையா? வார்த்தைகளை எறியும்போது அது யாரைக் காயப்படுத்தும்னு யோசிக்கிறதே இல்லை நீ.”

“டாக்டர் உங்களைக் கூப்பிடுறார்…”  நர்ஸின் அந்த ஒற்றை வாக்கியம், ஆதிரையின் இதயத் துடிப்பை ஒரு நிமிடம் நிறுத்தியது. இந்த வார்த்தைகள் மருத்துவமனையில் எப்போதும் ஒருவித நடுக்கத்தையே தரும்.

Advertisement

ஆதிரை தட்டுத்தடுமாறி எழுந்து நின்றாள். அவள் கைகள் நடுங்கின. மித்ரன் அவளைத் திரும்பிப் பார்த்தான். அவனது பார்வையில் இப்போது கோபம் இல்லை, மாறாக ஒரு பயம் இருந்தது. இருவரும் அந்த நீண்ட வெள்ளை நடைபாதையில் நடந்தபோது, காலடிச் சத்தம் கூட அவர்களுக்கு நடுக்கத்தை தந்தது.

டாக்டர் ன் அறைக்குள் நுழைந்தபோது, அவர் சில எக்ஸ்-ரேக்களையும், கவினின் இதயத் துடிப்புப் பதிவுகளையும் (ECG) பார்த்துக் கொண்டிருந்தார்.

“உட்காருங்க மித்ரன்… ஆதிரை நீங்களும் உட்காருங்க,” என்றார் டாக்டர் குரலைத் தாழ்த்தி.

“டாக்டர்… கவின் எப்படி இருக்கான்? ஏன் திடீர்னு மயங்கி விழுந்தான்?” மித்ரன்  குரல் விம்மலில் தழுதழுத்தது.

டாக்டர் ஒரு நீண்ட பெருமூச்சை விட்டுவிட்டு, ஒரு காகிதத்தை அவர்கள் முன்னால் நகர்த்தினார். ” கவின் ஒரு சாதாரணக் குழந்தை இல்லை. அவனுக்கு இருக்கிற மெடிக்கல் கண்டிஷன் பேர் ‘Vasovagal Syncope’ வித் ‘Emotional Trauma Trigger’. அதாவது, அவனோட இதயத் துடிப்பும், அவனோட மனநிலையும் ஒன்னோடு ஒன்னு பின்னிப் பிணைஞ்சது. அவன் எப்போதெல்லாம் ரொம்ப அதிகமா உணர்ச்சிவசப்படுறானோ, அப்போ அவனோட ‘வேகஸ் நரம்பு’ (Vagus Nerve) அதீதமாத் தூண்டப்பட்டு, இதயத் துடிப்பை திடீர்னு குறைச்சுடும். இதனால மூளைக்குத் தேவையான ரத்தம் போகாம அவன் மயங்கி விழுந்துடுறான்.”

அவர் சற்று நிறுத்தி ஆதிரையைப் பார்த்தார். “இன்னைக்கு அவனுக்கு ஏதோ ஒரு பெரிய எமோஷனல் ஷாக் கிடைச்சிருக்கு. யாராவது அவனை நிராகரிச்சாலோ இல்ல கோபமா பேசினாலோ, அவனுக்கு ஒரு  பயம் அவனோட சப்கான்ஷியஸ் மைண்ட்ல இருக்கு. அந்தப் பயம் தான் இன்னைக்கு அவன் இதயத்தை ஒரு நிமிஷம் முடக்கிடுச்சு. இது ஒரு விதமான ‘மினி கார்டியாக் அரெஸ்ட்’ மாதிரிதான்.” மித்ரன் தன் அலைபேசியில் கவினின் பழைய மெடிக்கல் ரிப்போர்ட்டுகளை டாக்டரிடம் காட்டிக்கொண்டிருந்தான். அந்தத் திரையில் தெரிந்த வரைபடங்களும், எண்களும் ஆதிரைக்கு ஏதோ ஒரு புரியாத மொழியில் எழுதப்பட்டது போலத் தெரிந்தன.

அவளால் அதற்கு மேல் அந்த அறைக்குள் இருக்க முடியவில்லை., டாக்டரின் ஒவ்வொரு விளக்கமும் அவளது நெஞ்சில் பாரத்தை ஏற்றின. ‘மினி கார்டியாக் அரெஸ்ட்’ – அந்த வார்த்தை ஆதிரையின் தலையில் இடியாக இறங்கியது.அவள் மெதுவாக அந்த அறையை விட்டு வெளியே வந்து, அந்த ‘ட்ரஸ்ட்’ மருத்துவமனையின் நீண்ட நடைபாதையில் நடந்தாள். அந்த மருத்துவமனையின் ஒவ்வொரு சுவரிலும் இயேசு கிறிஸ்துவின் திருவுருவப் படங்கள் நிறைந்திருந்தன.

ஒரு சுவற்றில், இயேசு கிறிஸ்து ஒரு சிறிய ஆட்டுக்குட்டியைத் தன் தோளில் சுமந்து கொண்டு, மிகுந்த கருணையோடு நின்றிருந்தார்.  இன்னொரு பக்கத்தில், அவர் குழந்தைகளால் சூழப்பட்டு, அவர்களை அரவணைத்துத் தலைவருடி நிற்கும் திருவுருவம் இருந்தது.

அந்தக் கனிவின், கருணையின் திருவுருவம், அந்தச் சுவரிலிருந்த கிறிஸ்துவின் கண்கள் அவளையே ஊடுருவிப் பார்ப்பது போல அவளுக்குத் தோன்றியது. “சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்” என்ற அந்தப் புனிதமான வாசகம் அவள் காதுகளுக்குள் ஓயாமல் ஒலிப்பது போலத் தவித்தாள். அவளது கண்களிலிருந்து கண்ணீர் முத்து முத்தாகத் தரையில் விழுந்தது.

மித்ரன் மேல இருந்த கோபத்தை ஓர் குழந்தை மேல காட்டி, அந்தப் பிஞ்சு மனசைத் துடிக்க வச்சுட்டேனே!’ என்ற குற்ற உணர்ச்சி அவளைக் கொத்திக் குடைந்தது.

“கடவுளே! நானா இது? ஒரு குழந்தையோட இதயத்தையே நிறுத்துற அளவுக்கு நான் அரக்கத்தனமா நடந்துக்கிட்டேனா? அம்மா என்று அழைத்து என்னிடம் வந்த அந்த இதயத்தையா நான் துடிக்கவிட்டேன்? யாருக்காகவும் இல்லையென்றாலும், அந்தக் குழந்தையிடம் நான் அன்பாக இருந்திருக்க வேண்டாமா? குழந்தைகள் கடவுளின் மறு உருவம் என்பார்களே… நான் இன்று அந்தக் கடவுளையே மரணத்தின் வாசல் வரை அனுப்பி வைத்திருக்கிறேனே!’’

அவளது கண்கள் கட்டற்றுப் பெய்தன. “மித்ரன் மீது எனக்குக் கோபம் இருந்தால் அவனிடம் காட்டியிருக்கலாம். “அந்தச் சந்தியாவோ, மந்தியாவோ… அவள் யாராக இருந்தாலும் இப்போது எனக்கு அவளைப் பற்றித் துளியும் கவலையில்லை! அவள் மித்ரனின் கடந்த காலமோ, நிகழ்காலமோ… எதுவாகவும் இருந்துவிட்டுப் போகட்டு ‘சந்தியா யார் என்பது இப்போது எனக்கு முக்கியமல்ல.”

ஆதிரை தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள். “மித்ரன் எப்போது உண்மையைச் சொல்கிறானோ அதுவரை நான் காத்திருப்பேன்”.

ஆதிரை நேராகக் கவினின் அருகில் சென்றாள். அவன் அப்போதுதான் மெல்லக் கண்களைத் திறந்து சுற்றும் முற்றும் பார்த்தான்.

அந்த ஒரு நொடி அந்த அறையில் நிலவிய நிசப்தம் காவியமானது.. கவின் அப்போதுதான் முழுமையாகக் கண் விழித்து, தன் கையில் குத்தப்பட்டிருந்த அந்த ஊசியையும் குளுக்கோஸ் பாட்டிலையும் மிரட்சியுடன் பார்த்தான். பின் அவன் ஆதிரையையே இமைக்காமல் பார்த்தான்.ஆதிரை அவனது  விரல்களைத் தன் கைகளுக்குள் பொத்திப் பிடித்துக் கொண்டு, தழுதழுத்த குரலில் பேசத் தொடங்கினாள்.

“ஐம் வெரி சாரி கண்ணா… ஏதோ ஒரு கோபத்துல உன்கிட்ட காட்டிட்டேன். அந்த நேரத்துல நான் என்ன பேசறேன்னு எனக்கே தெரியலடா தங்கம். இந்த அம்மாவை மன்னிச்சிருப்பா…” என்று சொல்லும்போதே அவளது விம்மல் ஒரு கண்ணீர்த் துளியாக கவினின் கையில் விழுந்தது.

கவின் திடுக்கிட்டு அவளைப் பார்த்தான். ஆதிரை தன்னை ‘அம்மா’ என்று சொன்ன அந்த ஒரு வார்த்தை அவனது மொத்த வலியையும் மறக்கச் செய்தது. அவனது  முகம் சட்டென்று ஒரு பெரிய மனுஷத் தோரணையை எடுத்தது.

“அய்யோ… அம்மா! நான் ஓகே-மா. ஏன் அழுறீங்க? நீங்க என்னைத் திட்டினதை எல்லாம் நான் எப்போவோ மறந்துட்டேன். நீங்க ஃப்ரீயா விடுங்கம்மா… எனக்கு ஒன்னும் இல்ல,” என்று தன் சின்னக் கைகளால் அவளது கண்ணீரைத் துடைத்தான்.

ஆதிரை ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தாள். ஒரு குழந்தையிடம் இத்தனை பெரிய மன்னிக்கும் குணமா?

கவின் மெல்லச் சிரித்துக்கொண்டு, “ஆனா ஒரு கண்டிஷன் மா…” என்று இழுத்தான்.

“என்னடா கண்ணா? எதுவா இருந்தாலும் சொல்லு, அம்மா செய்றேன்,” என்றாள் ஆதிரை ஆர்வமாக.

“இனிமேல் நீங்க என்னைத் திட்டும்போது மட்டும்… அப்படியே கோபமா பார்க்காம, கொஞ்சம் சிரிச்சுட்டே திட்டுங்கமா. ஏன்னா, உங்க கோபத்தைப் பார்த்து நான் நிஜமாவே பயந்துட்டேன். நீங்க சிரிச்சாதான் எனக்குத் தைரியம் வரும்,” என்று அவன் சொல்ல, ஆதிரை அவனது நெற்றியில் முத்தமிட்டாள்.

“இல்லடா இனி உன்னை யாரும் திட்ட மாட்டாங்க. உன்னை இனி ஒருபோதும் பயமுறுத்த மாட்டேன்,” என்று அவள் அவனை அணைத்துக் கொண்டாள். கண்மணியும் ஓடி வந்து கவினைப் பார்த்ததும் அப்படியே ஆதிரையையும் கவினையும் சேர்த்து ஒரு சேரக் கட்டிக்கொண்டாள்.”கவின்! உனக்கு ஒன்னும் இல்லையே? நானும் ரொம்ப பயந்துட்டேன் மா…” என்று கண்மணி அழுகையும் சிரிப்புமாகக் கூற, ஆதிரை இருவரையும் அணைத்துக் கொண்டாள்.

மிகவும் குழப்பத்தோடும், நெஞ்சில் ஒருவித வலியோடும், ஆதிரையின் மீதான தீராத கோபத்தோடும் கவினைத் தேடி அறைக்குள் வந்த மித்ரனுக்கு, முதலில் அங்கே நடப்பது எதுவுமே புரியவில்லை. ஒரு நிமிடம் அவன் அப்படியே சிலையாக உறைந்து நின்றான்.

வாசல் கதவருகே நின்றிருந்த அவனுக்கு, தன் கண்ணையே நம்ப முடியவில்லை. “சிறிது நேரத்திற்கு முன்பு வரை கனல் கக்கிய கண்கள், வார்த்தைகளால் ஈட்டி எறிந்த அதே ஆதிரையா இது?” ஆதிரையைப் பார்க்கப் பார்க்க மித்ரனுக்குள் இருந்த கோபம் மெல்ல மெல்லக் கரையத் தொடங்கியது. அவள் கவினிடம் மன்னிப்புக் கேட்பதும், அவனை ‘அம்மா’ என்று அழைக்கச் சொல்வதும் மித்ரனின் காதுகளில் விழுந்தபோது, அவன் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நிம்மதிப் பெருமூச்சை விட்டான்.

‘இது ஆதிரை தானா?’ – அவனது உள்மனம் கேட்டது. பின்னர்தான் அவனுக்குத் தெளிந்தது… ‘ஆம், இதுதான் என் ஆதிரை!’

அவளது கோபம், பிடிவாதம் எல்லாவற்றையும் தாண்டி, அவளுக்குள் இருக்கும் அந்த மகாசமுத்திரம் போன்ற அன்பு மீண்டும் கரைபுரண்டு ஓடுவதைக் கண்டான். மித்ரன் தனக்குள் லேசாகச் சிரித்துக்கொண்டான்.

“இந்த ஆதி லூசு… ஏதோ தப்பா நினைச்சுட்டு இவ்வளவு நேரம் ரணகளம் பண்ணிட்டு இருந்திருக்கா! அந்த ‘சந்தியா’ங்கிற பெயர் தான் இவளை இந்த அளவுக்குப் போட்டு வறுத்திருக்கு. இவ மண்டைக்குள்ள என்னென்னவோ கற்பனை பண்ணி வச்சிருக்கான்னு இப்போ புரியுது’” என்று நினைத்தவனுக்கு, அவள் மீது இருந்த கோபம் போய் ஒருவிதமான பரிதாபமும் காதலும் சேர்ந்தே வந்தது..

“இவளோட கிரியேட்டிவிட்டி வேற லெவல்ல தான் போயிருக்கும்!”

“கண்டுபிடிக்கிறேன்… இவ என்னவெல்லாம் திங்க் பண்ணி, அந்தத் தன்னோட குட்டி மூளயப் போட்டு பாடுபடுத்திருக்கான்னு பார்ப்போம்”.

அவன் மெல்ல அடிமேல் அடி வைத்து கவின் படுத்திருந்த கட்டிலின் அருகில் வந்தான். ஆனால், அவள் தன்னை இவ்வளவு தூரம் சந்தேகப்பட்டதை நினைக்கும்போது அவனுக்குள் ஒரு குறும்புத்தனமான ஆத்திரம் எட்டிப் பார்த்தது.

‘இருக்குடி உனக்கு… இனிமே தான் என்னோட எல்லா இம்சையும் ஆரம்பமாகப் போகுது. உன்னோட இந்தச் சந்தேகப் பேயை எப்படி ஓட்டுறேன்னு பாரு!, உன்னோட எல்லா தியரியையும் இனி நான் பிரேக் பண்ணப்போறேன். ரெடியா இரு!” என்று தனக்குள் சவால் விட்டுக்கொண்டான்.

“என்ன கவின் குட்டி…  ரொம்பக் குஷியா இருக்கீங்க போல? கவினுடன் அவள் பேசிக் கொண்டிருந்த அந்த மென்மையான தருணத்தை, மித்ரனின் இந்த அதிகாரக் குரல் சட்டென்று உடைத்து எறிந்தது. அவன் கவினின் தலையைத் தடவிக்கொடுத்துவிட்டு, மெதுவாக அவர்கள் அருகில் வந்தான். ஆதிரை அவனை நிமிர்ந்து பார்த்தபோது, அவளது கண்களில் ‘என்னை மன்னித்துவிடு’ என்ற வேண்டுதலும், கவின் மீதான பேரன்பும் தெரிந்தது.

அவன் கண்கள் இப்போது அவளை ஒரு அந்நியரைப் பார்ப்பது போலப் பார்த்தன. அதில் காதல் மறைந்து, ஒருவிதமான விறைப்பும், தூரமும் வந்து அமர்ந்திருந்தது.

“கவினை இன்னும் ஒரு வாரம் ‘அப்சர்வேஷன்’ல (Observation) வச்சிருந்துதான் கிளம்பணுமாம். உங்களால முடிஞ்சா நீங்க எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாம் மிஸஸ். ஆதிரை!,” என்றான் மிடுக்காகவும், ஆத்திரமும் கலந்த குரலில்.

‘மிஸஸ். ஆதிரை’… ‘உங்களால முடிஞ்சா’… ‘நீங்க’…

இந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஆதிரையின் காதுகளுக்குள் ஈட்டியாகப் பாய்ந்தன. அவளை ‘நீ’ என்றும், ‘ஆதீ’ என்றும் உரிமையோடு அழைத்த அந்த மித்ரனா இது? ‘மிஸஸ். ஆதிரை’ என்ற அந்த அந்நியமான அழைப்பு, அவர்களுக்கு இடையே ஒரு பெரிய சுவரை எழுப்பிவிட்டதை அவள் உணர்ந்தாள். அவள் திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள்.

ஆனால் மித்ரன் அவளது கண்களைப் பார்க்கவில்லை. பதிலைக் கூட எதிர்பார்க்காமல், அவளுக்கு முதுகைக் காட்டி ஜன்னல் ஓரம் போய் நின்றான். அவனது தோள்கள் விறைப்பாக இருந்தன, கைகள் பின்னால் கட்டப்பட்டு முட்டிகள் இருகி இருந்தன.

மித்ரன் மனதுக்குள் நினைத்துக்கொண்டான், ‘இருக்கடி உனக்கு… நீ நினைச்ச மாதிரி நான் உன்கிட்ட சண்டை போட மாட்டேன். இந்த ‘மிஸஸ். ஆதிரை’ ட்ரீட்மென்ட்லயே உன்னைத் துடிக்க விடுறேன். நீயே வந்து உன் சந்தேகத் தப்பை ஒப்புக்கொள்ற வரைக்கும், இந்த மித்ரன் கிட்ட இருந்து உனக்கு இந்தத் தூரம்தான் பரிசு!’”

“அடியே ஆதீ… நீயே ஒரு கதையெழுதி அதுல என்ன வில்லனாக்குன இல்ல? இப்போ பாரு, நான் உன்னோட அதே ஸ்கிரிப்ட்டை எப்படி மாத்தி எழுதுறேன்னு. சந்தேகம்ங்கிற மேகம் விலகி, நீ என் மார்புல சாய்ஞ்சு அழப்போற அந்தத் தருணத்துக்காகத் தான் நான் இந்த விளையாட்டை ஆடுறேன்,’” என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.

மருத்துவமனையின் அந்த இரவு, ஒரு அழகான காதலின் மௌனப் போராக உருவெடுத்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!