Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

27. MTB. Varsha - என் காதலும் என்னாகுமோ

NKN-3

“காதலிக்கும் ஆசை இல்லை

கண்கள் உன்னை காணும் வரை

உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால்

பட்டினத்தார் பாடல் மட்டும்

பாடம் செய்து ஒப்பித்தேன்

கண்ணே உன்னை காணும் முன்னாள்”

என்ற பாடலை காரில் ஒலிக்க விட்டு அதனுடன் சேர்ந்து பாடிக் கொண்டுவரும் செலினை முறைத்துப் பார்த்தாள் விழி.

 

 அதுவரை அமைதியாக வெளியில் வேடிக்கை பார்த்து வந்தவள் கவனம் தன்னை நோக்கி திரும்பியதால் உற்சாகமானவன் இன்னும் கொஞ்சம் சத்தமாக பாட, “யோவ் நீ எல்லாம் ஒரு மனுசனா வந்ததுல இருந்து நான் எவ்வளவு கொஸ்டின் கேட்டேன். ஏதாவது ஒன்னுக்கு ஆன்சர் பண்ணுனியா. இவ்வளவு நேரம் அமைதியா இருந்துட்டு இப்ப பாட்டு கேட்டதா” என்று சத்தமாக சொல்லியவள், “அந்த கருமம் புடிச்ச காதலால தான் இவ்வளவு பிரச்சனையும்” என்று தனக்குள் முனங்கினாள்.

 

“என்னங்க இப்படி அபாண்டாமா பொய் சொல்றீங்க. கார்ல ஏறுனதுல இருந்து என் மூஞ்ச கூட பாக்காம ஏதோ ஏதிரி நாட்டு மன்னன் மாதிரி அந்த பக்கம் திரும்பி உட்கார்ந்து இருக்கீங்க. இதுல நீங்க கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்லலையா. அவ்வா எப்படி இப்படி பொய் பொய்யா பேசுறீங்க” என்றான் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு



Advertisement

 

“கடவுளே யாரு பொய் சொல்றது. எப்படிங்க இப்படி பச்ச குழந்தை மாதிரி நடிக்கிறீங்க. நான் உங்க கிட்ட எந்த கொஸ்டினும் கேட்கல அப்படித்தான” என்றாள் கோபமாக

 

Advertisement

“அதுதாங்க உண்மை நீங்கதான் என்கிட்ட பேசவே இல்லையே” என்றான் நமட்டு சிரிப்புடன்

Advertisement

 

“ஓஓ… நான் உங்ககிட்ட எந்த கொஸ்டினும் கேட்கல அப்படித்தான” என்று அவன் முகத்தை பார்க்க, அதற்கு “ஆமாம்” என்பது போல் தலையாட்டினான் அவன்.

 

Advertisement

“சரி ஓகே அப்படின்னா இப்ப சொல்லுங்க நீங்க எப்படி இங்க வந்தீங்க. இது யாரோட காரு. அதோட ஃபர்ஸ்ட் நான் இங்க வரேன்னு உங்களுக்கு எப்படி தெரியும் யார் உங்களுக்கு சொன்னது” என்று படப்படவென கேள்வி கேட்க

“அப்பா எத்தன கேள்வி எனக்கே மூச்சு வாங்குது முதல்ல இந்த வாட்டர குடிங்க” என்று வாட்டர் பாட்டிலை எடுத்து அவளிடம் நீட்ட

 

 அதை கடுப்பானவள் அந்த பாட்டலால் அவன் தலையில் அடிக்க செல்ல, “யம்மா தாயே உண்மையை சொல்லிடுறேன் எங்க அம்மாவுக்கு நான் வேற ஒத்தைக்கு ஒரு பையன் நீ பாட்டுக்கு அந்த பாட்டலால என் தலையில போட்டு கொன்னுட்டா எங்க அம்மாவுக்கு எனக்கு அப்புறம் யாரு இருக்கா” என்று போலியாக அவன் நடிக்க

“எது இந்த சின்ன பாட்டிலால அடிச்சி உங்களை கொல்ல போறேனா. எங்க லைட்டா உங்கள அடிக்கிற மாதிரி ஆக்சன் தான பண்னேன் அதுக்கு போய் இப்படியெல்லாம் பொய் சொல்லுறீங்க. இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தோணல ”

 

“எங்க இது சின்ன பாட்டலா எவ்வளவு பெரிய பாட்டில் தெரியுமா இதோட எட்ஜ் (EDGE) எவ்வளவு ஷார்ப்பா இருக்கு தெரியுமா. நீங்க பாட்டுக்கு இருக்கிற கோவத்துல வேகமா என் தலையில போட்டுட்டீங்கனா”

 

“போட்டனா”

 

“என்னங்க போட்டனா.. போட்டனா பொட்டுன்னு போயிருவேன். இல்லனா ஏதாவது படக்கூடாத இடத்துல பட்டு நான் கோமாவுக்கு போயிட்டனா எங்க அம்மாவுக்கு யாரு இருக்கா. நானே ஒத்தைக்கு ஒரு பிள்ளை எங்க அம்மாவுக்கு எனக்கு அப்புறம் யாரு இருக்கா” என்று அவன் சென்டிமென்ட் பிழிய

 

“இயேசுவே என்னை கொஞ்சம் காப்பாத்துப்பா. நீங்க எந்த கொஸ்டினுக்கும் ஆன்சர் பண்ண வேண்டாம். தயவு செஞ்சி கொஞ்ச நேரம் உங்க வாயையும், அந்த பாட்டையும் ஆப் பண்ணுங்க. தல வலிக்குது” என்று சீட்டில் சாய்ந்து கண்களை மூடி கொண்டாள்.

 

 அவளின் முகத்தை ஆழமாக பார்த்துக் கொண்டு,

“இந்தக் கண்மணியும் சேர்த்து உன் இமைக்குள்ள வச்சுக்க ரெடியா இமைமா” என்றான் கரகரப்பான குரலில்

 

 அந்தக் குரலின் வசியம் ஏதோ செய்ய கண்களைத் திறந்த விழி, “ஏதாவது சொன்னீங்களா” என்றாள் அவன் கண்களைப் பார்த்து

 

“நானா நான் ஒன்னு சொல்லலையே”

 

“இல்லையே ஏதோ கண்மணிய விழி அப்படின்னு கேட்டுச்சே”

 

“ஆமா சொல்றது அப்படியே கேட்டுட்டாலும் கடவுளே இந்த டியூப்லைட் எப்படி தான் நான் எரிய வைக்க போறனோ” என்று தனக்குள் அவன் பேச

 

“எங்க யாரு டியூப் லைட்” அவன் அருகே வந்து அவள் கேட்க

 

“வேற யாரு நீ தான்”என ஏதோ யோசனையில் அவன் சொல்லிவிட

 

“என்ன சொன்னீங்க” என்றாள் கோபமாக

 

“அம்மா பரம தேவதை நீ இல்லம்மா  டியூப்லைட் வெளிய கல்யாண வீட்ல நிறைய டியூப்லைட் கட்டி இருக்காங்கன்னு சொன்னேன் அங்க பாரு” என்று கார் ஜன்னல் வழியாக அந்த திருமண வீட்டைக் காட்ட

 

 அப்போதுதான் கார் நின்றுக்  கொண்டு இருப்பதையும்  அவர்கள் வந்து சேர வேண்டிய இடத்திற்கு வந்து விட்டனர் என்பதையும் உணர்ந்து கொண்ட விழி அவன் காட்டிய வழியே அவளும் பார்க்க அங்கே மணமக்கள் போஸ்டர் பெரிய கட் அவுட் ஆக வைக்கப்பட்டு இருந்தது. அதனைப் பார்த்துக் கொண்டு வந்தவள் ஒரு இடத்தை விட்டு கண்கள் நகராமல் அதனைப் பார்த்துக் கொண்டிருக்க

 

 அதுவரை தன்னிடம் சண்டை போட்டுக்கொண்டு வந்தவள் முகம் மாறுவதை கண்ட செலின், “இவளுக்கு என்ன ஆச்சு இவ்வளவு நேரம் நல்லா தானே இருந்தா” என்று அவள் பார்வை சென்ற இடத்தை அவனும் நோக்க அங்கே நின்றவனை பார்த்து பெருமூச்சு விட்டுட்டு, “சகிமா எப்படிம்மா என் இமைய இதிலிருந்து வெளியே கொண்டு வர போறேன். கடவுளே சரியோ தப்போ இதுவரைக்கும் இவள கூட்டிட்டு வந்துட்டேன் இனிமே நடக்க போறத நீ தான் கூட இருந்து பாத்துக்கணும்” என்று மனதினுள் வேண்டி விட்டு மறுபடியும் விழியின் முகத்தை பார்த்தான். அவள் கண்களில் தெரிந்த வருத்தத்தை பார்த்து, “இமைம்மா என்னடா இதுக்கே இப்படி கலங்கினா எப்படி இறங்கி உள்ள போ. உன்னால இதெல்லாம் ஃபேஸ் பண்ண முடியும். எதையும் மனசுக்குள்ள அடச்சி வைக்காதே. உனக்கு இப்போ என்ன தோணுதோ அத செய். உன் கூட உன் கண்மணி இருக்கான் எதுக்கும் உன்ன கலங்க விடமாட்டேன். உன் கூடவே தான் இருப்பேன். இறங்கி போடா இத நீ தனியா பேஸ் பண்ணி தான் ஆகணும்” என்றான் ஆழ்ந்த குரலில்

 

 அவனின் அந்த ஆழ்ந்த குரலுக்கு  எதுவும் பதிலளிக்காமல் அவன் கண்களை ஆழமாக நோக்கி கொண்டிருந்தவள், “இனிமே என்கிட்ட இப்படி நம்பிக்கை தர்ற மாதிரி எதுவும் பேசாதீங்க. உங்க யாரோட இந்த நம்பிக்கை பேச்சும் எனக்கு வேண்டாம். ஏன்னா இப்படி கூடவே இருப்பேன் சொன்னவங்க எல்லாம் என் வாழ்க்கையில சின்ன தூசியா கூட இப்ப இல்ல. சோ ப்ளீஸ் ஃபியூச்சர்ல என்ன வேணாலும் நடக்கலாம். நீங்க என் கூட வரலாம் இல்ல வராம விட்டுட்டு கூட போகலாம். அதனால தயவு செஞ்சு உன் கூடவே இருப்பேன். நீ இல்லனா நான் இல்ல இந்த மாதிரி எந்த மூவி டயலாக்கும் என்கிட்ட சொல்லாதீங்க. இந்த மாதிரி நிறைய டயலாக் கேட்டுக் கேட்டு எனக்கு ரொம்ப வெறுப்பாக்கி போச்சி. என் லைஃப்ல யாரும் என்கூட கடைசி வரைக்கும் வர வேண்டாம். என்னால என்ன பாத்துக்க முடியும். என்னால எதையும் தனியா பேஸ் பண்ண முடியும். அதனால தயவு செஞ்சு இந்த மாதிரி இன்னொரு தடவை என்கிட்ட பேசாதீங்க” என்று பற்களை கடித்துக்கொண்டு கோபமாக அவனிடம் பேசிவிட்டு சீட்டில் சாய்ந்து கண்களை இறுக மூடிக் கொண்டவள், “ப்ளீஸ் கண்மணி இப்படியே என்ன விட்டுட்டு போயிருங்க என் லைஃப்குள்ள வர முயற்சி பண்ணாதீங்க. ஏன்னா என் மனசு சுக்கு நூறா உடைஞ்சு ரொம்ப வருஷம் ஆகிட்டு. இப்பல்லாம் எனக்கு இந்த காதல் கல்யாணம் அப்படிங்கற வார்த்தையை கேட்டாலே வெறுப்பு தான் வருது. நீங்க எதுக்காக முயற்சி பண்றீங்கன்னு எனக்கு புரியுது ஆனா என் மனசுக்குள்ள நிறைய வெறுப்பு குவிஞ்சி கிடக்குது. நிறைய நிறைய கேள்விகள் உள்ள புதைஞ்சி கிடக்கு. அது எல்லாம் வெளிய வந்துச்சின்னா கண்டிப்பா எனக்கு எதிரே இருக்குறவங்கள காயப்படுத்தாம போகாது. இதோ இப்ப கூட யாரோ மேல உள்ள வெறுப்ப உங்க மேல கொட்டுறேன். இந்த மாதிரி தான் என்னை நீங்க கல்யாணம் பண்ணா கடைசி வரைக்கும் என்னோட இந்த வெறுப்ப நீங்க தாங்கி தான் ஆகணும். யாரோ  பண்ண தப்புக்காக நீங்க ஏன் தண்டனை அனுபவிக்க நினைக்கிறீங்க என்ன விட்டு போயிருங்க அதுதான் உங்களுக்கு ரொம்ப நல்லது. கண்டிப்பா என்னால இந்த வெறுப்பில இருந்து வெளியே வர முடியாது. அதனால ப்ளீஸ் என் லைஃப்ல இருந்து வெளிய  போயிடுங்க” என்றாள்  உணர்ச்சிகரமாக

 

“அப்படியா சூப்பர் டயலாக் அடிப் போலி மா” என்று கைகளை தட்டியவன், தனது வலது கைகளால் அவள் முகத்தை இறுக்கப்பற்றி தனது முகத்தை பார்க்கும் படி வைத்துக் கொண்டவன், “இப்போ நீ சொன்னது எல்லாத்தையும் கண்ணத் தொறந்து என் கண்விழிய பாத்துச் சொல்லு நான் உனக்கு வேண்டாமா. இந்தக் கண்மணி உன் இமைக்குள்ள வர வேண்டாமா. என்ன பிடிக்கலைன்னு ஒரு வார்த்தை சொல்லு நான் இப்பவே உன்னோட லைஃப்ல இருந்து வெளியே போயிடுறேன்.” என்றான் அழுத்தமாக

 

 அதற்கு பதில் சொல்லாமல் கண்களை இறுக்க மூடிக் கொண்டவளை, “சொல்லுடி உனக்கு வாழ ஆசை இல்லையா. வாய் திறந்து சொல்லுடி உனக்கு கல்யாணம், குடும்பம், குழந்தைங்க அப்படின்னு வாழ இஷ்டம் இல்லையா சொல்லுடி பதில் சொல்லு” என்று அவள் தாடையை இன்னும் அழுத்த

 

 அவன் அழுத்ததில் வலி தாங்க முடியாமல் கண்ணீர் சிந்தியவள் கோவமாக அவன் கைகளை தட்டி விட்டு, “சொல்லு சொல்லுனா ஆமா எனக்கு வாழ்றதுக்கு ஆசை இருக்கு. உன்ன எனக்கு பார்த்த உடனே பிடிச்சிருச்சி. என்ன பாக்க உன்ன பார்த்தவுடனே எனக்கு பிடிச்சிருச்சி போதுமா. நீ இமைமா கூப்பிடறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. உன்னோட சேர்ந்து நீ நான் நம்ம பசங்க அப்படி வாழனும் எனக்கு ஆசை இருக்கு. ஆமாம் மனசுக்குள்ள அவ்ளோ ஆசை இருக்கு நானும் மத்தவங்கள மாதிரி வாழணும்னு. ஆனா என்ன பண்ண அதோ நிக்கானே அவன் நெனப்பு அப்பப்போ வந்து என் மனசுக்குள்ள இம்சை பண்ணுது. எல்லாத்தையும் மறந்துட்டு ஒரு வாழ்க்கை வாழனும்னு நினைக்கும் போது இல்ல நீ எதையும் மறக்கலன்னு சுத்தி இருக்கிற ஏதாவது ஒரு விஷயம் எனக்கு அவன ஞாபகப்படுத்து. நான் என்ன செய்ய நான் எல்லாத்தையும் மறக்கணும் தான் நினைக்கிறேன். ஆனால் திரும்பத் திரும்ப ஏதாவது ஒன்னு அத ஞாபகப்படுத்து சில சமயம் என்ன நெனச்சா எனக்கே அசிங்கமா இருக்கு. இது எல்லாத்துலயும் இருந்து எனக்கு விடுதலை கிடைக்காதன்னு எத்தன நாள் நைட்டு அழுது புலம்பி இருக்கனு தெரியுமா. என்னால முடியல ஏதாவது ஒரு ஆக்சிடெண்ட் நடந்து என் மைண்டுக்குள்ள இருக்கிற எல்லா மெமரிஸ் அழிஞ்சி போகணும்னு எத்தனை தடவை வேண்டி இருக்கேன் தெரியுமா. அது எப்படி டா நீங்க மட்டும் தான் உண்மையா லவ் பண்ணுவீங்களா. உங்களால் மட்டும் தான் அதெல்லாம் மறந்துட்டு மூவ் ஆன் ஆக முடியாதா.  ஏன் ஒரு பொண்ணு லவ் பண்ணா ஈஸியா எல்லாத்தையும் மறந்துட்டு மூவ் ஆகுனு சொல்லுவீங்களா. பசங்க உங்களால மறக்க முடியாது ஆனா பொண்ணுங்க நாங்க மட்டும் எல்லாத்தையும் மறந்துட்டு உங்க கூட சேர்ந்து ஒரு வாழ்க்கை வாழணுமா. போடா மத்த பொண்ணுங்க எப்படின்னு எனக்கு தெரியாது என்னால எதையும் மறக்க முடியல அதிலிருந்து வெளியே வர முடியல”

 

“எனக்கும் வாழனும் நெஞ்சிமூட்ட ஆசை இருக்கு ஆசை இருந்து என்ன பண்ண என்னால முடியல. போடா நீங்க யாரு எனக்கு வேண்டாம் நான் தனியாவே இருந்துக்கிறேன்” என்று கண்ணீருடன் கதறியவள் அந்தக் கார் கதவை திறந்து கொண்டு வேகமாக வெளியே செல்ல, “ஏய் இமைமா எங்க போற” என்று கத்தி இவன் கதவை திறந்து கொண்டு வெளியே வருவதற்குள், “ஏய் விழிக்குட்டி” என்று சத்தத்தில் வேகமாக சென்று கொண்டிருந்தவள் அப்படியே அதிர்ந்துப் போய் நின்றாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!