Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

73. வேணு கானமிதுContest Stories 2026

வேணு கானமிது

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.



Advertisement

வாழ்க்கை, அர்த்தமுள்ளதாகவும், பயனுள்ளதாகவும் இருக்க வேண்டுமானால், நமக்கு அமையவிருக்கும் துணையின் மீது அசைக்க முடியாத அன்பையும் எந்நிலையிலும் தவறாத அறத்தையும் பெற்றிருப்பது அவசியமானது. 

Advertisement

இல்வாழ்க்கையில் அறம் என்பது, ஒழுக்கத்தோடு இல்லறக் கடமைகளைச் செய்து வாழ்வதாகும்.

Advertisement

அன்பும் அறமும் நாணயத்தின் இரு பக்கம் போன்றது. ஒன்றோடொன்று பிரிக்க இயலாதது. அறமற்ற அன்பும், அன்பற்ற அறமும் எந்த விதத்திலும் உதவாது. யாருக்கும் உயர்வையும் சேர்க்காது. 

Advertisement

திருமண வாழ்க்கையில் இவ்விரண்டும் அத்தியாவசியம் என்கிறார் திருவள்ளுவர். தான் அறத்துடன் நடந்து கொண்டு, தன் துணையிடம் காட்டும் நேசம் அளப்பரியது. சதவீதங்கள் கூடக் குறைய இருந்தாலும் கூட்டுத் தொகை முழுமையாக 100 ஐ எட்டி இருக்க வேண்டும்.

அஃது அப்படி இல்லாது, ஒன்றை விட்டு ஒன்று எதிர் எதிர் திசைக்கு இழுக்கப்பட்டால்?? திருமண வாழ்க்கையின் கதி!! அதிலும் இல்லறக் கடமையென்றால் இல்லாளின் மீது ஆதிக்கம் செலுத்துவதும், அடிமையாக நடத்துவது என்ற தலைவன் இருந்தால்?

அந்த பந்ததில் இருக்கும் பெண்ணின் நிலை? இந்த பந்ததில் இருந்து விடுப்பட்டு தனக்கெனவும் தன் பிள்ளைக்கெனவும் வாழ நினைக்கும் மங்கையின் மறுமணக் கதை இது… 

விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு, கடமையாய் உயிர் வாழ்வுக்கு உணர்ச்சியையும் உணர்வையும் கொடுத்து, அவளின் வாழ்வில் வேணு(புல்லாங்குழல்) கானம் இசைக்க வருபவனின் கதை தான் இது… 

வேணு கானமிது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!