Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

68. சரண்யா கீதா - உளமாற உனதாகிறேன்

உளமாற உனதாகிறேன் – 7

உளமாற உனதாகிறேன் – 7

இந்த விடியல் இவ்வாறு இருக்குமென்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை அர்ஜூன்… தன்னவள்… தனக்குறியவள் என்று கற்பனை கோட்டை கட்டி வாழ்ந்த கொடண்டிருந்தவனின் கோட்டை ஒரே நாளில் சரியும் என்று கனவிலும் நினைக்கவில்லை… வீட்டிற்கு வந்ததும் விழுந்த முதல் செய்தியே தலையில் பெரும் இடியாய் விழுந்தது.

நேற்று வெண்பாவை பெங்களூர் பேருந்தில் ஏற்றி விட்டவன்… அப்படியே நண்பர்களோடு ஊர் சுற்ற கிளம்பிவிட்டான். ஆனால் அது எத்தனை பெரிய தவறு என்று இப்போது புலப்பட… ஒன்றும் செய்ய முடியாத ஆத்திரத்தில் வீட்டில் இருக்கும் பொருள்களை எல்லாம் தூக்கி போட்டு உடைக்க… அதன் சத்தத்தில் வந்துவிட்டார் ஞானசெல்வி.

“டேய் அர்ஜூன் எதுக்குடா எல்லா பொருளையும் போட்டு உடைக்குற… டேய் நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன்.‌‌.. பதில் சொல்லுடா…” என்ற கேள்விக்கு விடை கூறாமல் தன் கோபத்தை கொட்டுவதிலே குறியாக இருந்தான். சின்னவனின் செய்கை அச்சத்தை கிளப்ப பெரியவனுக்கு போனை மோட்டார் ஞானசெல்வி.



Advertisement

சில நேரங்களிலே வீடே அலங்கோலமாக மாறியிருக்க… வேட்டையாடும் மிருகம் போன்றே நடந்துக் கொண்டிருந்தான் அர்ஜூன். அப்போது தான் வேக வேகமாக வீட்டின் உள்ளே நுழைந்தான் பெருமாள்.

“டேய்… அர்ஜூன்… என்னடா பண்ணி வைச்சிருக்க… இப்போ எதுக்கு எல்லா பொருளையும் தூக்கி போட்டு உடைச்சிருக்க… பதில் சொல்லுடா…” என்ற கேள்விக்கு எகிறினான் அர்ஜூன்.

“ஏன் உனக்கு தெரியாதா…‌ யாரை கேட்டு இனியாளை அந்த போலீஸ்காரனுக்கு கட்டி வைச்ச… சின்ன வயசுல இருந்தே அவ எனக்குன்னு முடிவு பண்ணது தானே…”

Advertisement

“பர்ஸ்ட் கொஞ்சம் பொறுமையா நான் சொல்றதை கேளுடா… எல்லாம் என் மாமன் பெத்த இரண்டாவது கழுதையால தான்… அவ ஓடி போவான்னு யாரு கண்டா… இந்த வளையாபதி ஒன்னு‌ கல்யாணம் நடக்கனும் இல்ல உனக்கு கருமாதின்னு சொல்றான்… வேற என்ன செய்ய சொல்ற”

Advertisement

“அதுக்கு… அதுக்கு எனக்கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்காம முடிவு பண்ணுவியா…”

“ஆமா நீ எங்க இருந்த உன்கிட்ட கேட்க… நேத்துல இருந்து உன்னை காணல… என்னை என்ன செய்ய சொல்ற” என்ற பதிலில் அப்படியே அமர்ந்துவிட்டான் அர்ஜூன்.

திருடனுக்கு தேள் கொட்டியதை போன்று தன் செய்கையை அண்ணன்னிடம் கூற முடியாது மௌனமாக இருந்தான் அர்ஜூன்.

Advertisement

தான் ஒன்று நினைக்க நடந்ததோ வேறு… கல்யாணம் நின்று வாசு அசிங்கபடுவான் என்று நினைத்தால் காட்சியே வேறாக மாறியிருக்க தலையை பிடித்து ஆவென்று கத்த தொடங்கிவிட்டான்…

“டேய் அர்ஜூன்… எதுக்குடா இப்போ இப்பிடி கத்துற… அவ இல்லைன்னா என்ன வேற பொண்ணே உனக்கு அமையாதா… அவளை விட நல்ல பொண்ணா பார்க்குறேன்” என்று தம்பியின் தோளில் ஆதரவாக கை வைக்க… அதனை வேகமாக தட்டி விட்டவன்…

“நீ ஒன்னும் பண்ணாத… என்ன செய்யனும்னு எனக்கு தெரியும்…” என்று பெருமாளிடம் கூறியவன் வேகமாக வீட்டிலிருந்து வெளியேறிட…

“பெருமாளு இவனை நினைச்சா எனக்கு பயமா இருக்குடா” என்ற தாய்க்கு எதுவும் சொல்லாது…
செல்லும் தம்பியை கவலையாக வெறித்தது பெருமாளின் விழிகள்.

அர்ஜூனோ முதல் வேளையாக வெண்பாவுக்கே அழைக்க… சில ரிங்குகள் சென்றே அழைப்பேசியை எடுத்தாள் அவள்.

“என்ன வெண்பா பெங்களூர் ரீச் ஆகிட்டியா… எப்படியும் ஆகிருப்பா… நல்ல வேளை நீ தப்பிச்ச… இல்லைன்னா அந்த போலீஸ்காரன் குடும்பத்துல சிக்கி சின்னா பின்னம் ஆகியிருப்ப‌… ஆனா பாவம் நம்ம இனியாள் தான் மாட்டிக்கிட்டா… ப்ச்ச்… என்ன செய்றது எல்லாம் அவ தலையெழுத்து” என்று உச்சுக் கொட்ட… கேட்டு கொண்டு இருந்தவளுக்கு தான் ஒன்றும் விளங்கவில்லை…

“ப்ச்ச் அர்ஜூன் எது பேசுறதா இருந்ததாலும் தெளிவா பேசு… இப்படி பொடி வைச்சு பேசுனா… எனக்கு என்ன புரியும்” என்றவளின் குரலில் எரிச்சல் மிகுந்து இருந்தது…

“நீ இல்லைன்னுதும்… அந்த எம்.எல்.ஏ உன் தங்கச்சியை அவன் பையனுக்கு கல்யாணம் பண்ணி வைச்சுட்டான்…”

“வாட்…” என்று உண்மையில் அதிர்ந்து போனாள் வெண்பா. இதில் அர்ஜூன் நடந்த அத்தனையையும் ஒன்றுக்கு இரண்டாக திரித்து கூறியிருக்க… திகைத்து போய்விட்டாள் வெண்பா.

இன்னும் வீட்டினரோடு பேசி இருக்கவில்லை… எப்படி பேசுவது என்று தான் இத்தனை நேரம் முழித்து கொண்டிருந்தாள். இந்நேரம் திருமணம் நின்றிருக்கும்… ஆனால் வீட்டிலிருந்து ஒரு அழைப்பேசி கூட வரவில்லையே என்ற யோசனையோடு அமர்ந்து இருந்தவளுக்கு தான் அர்ஜூன் அழைத்து பேசியது…

“நீ கால் கட் பண்ணு அர்ஜூன்… நான் என்னன்னு பார்க்குறேன்” என்று அழைப்பை துண்டித்துவிட்ட… கொழுத்தி போட்ட சிறு தீப்பொறி பற்றிக் கொள்ள காத்திருந்தான் அர்ஜூன்.

•••••••••••

தலையை துவட்டியபடியே கண்ணாடியில் தன் முகம் பார்த்துக் கொண்டு இருந்தாள் இனியாள். நெற்றியில் கமழும் குங்குமம்… கழுத்தில் மின்னும் மஞ்சள் கயிறும்… அவளுக்கே தன்னை புதிதாய் காட்ட… தன் பிம்பத்தையே கண்ணாடியில் உற்று பார்த்துக் கொண்டு இருந்தாள்.

எழுந்ததிலிருந்து அவள் செய்கையை பார்த்து கொண்டு இருந்தவன்… மெல்ல பூனை நடையிட்டு அவள் பின்னே வந்து தோள்கள் உரச நின்றவன்…

“யூ லுக்கிங் பியூட்டிபுல் இனி”என்ற வார்த்தைகளில் அவன் மூச்சு காற்று அவள் தேகத்தின் மீது மோத… தன் மூச்சை உள்ளிழுத்து கொண்டாள் இனியாள்…

“ஜஸ்ட் ரிலாகஸ் இனி” என்று வார்த்தைகளில் பட்டென்று அவள் புறம் திரும்பியவள்…

“என்னை அப்படி கூப்பிடாதிங்க… ஜஸ்ட் கால் மீ இனியாள்…”

“எனக்கு நீ ஆர்டர் போடாத… எனக்கு எப்படி பிடிக்குமோ… அப்படி தான் கூப்பிடுவேன்…”

“இந்த திமிரு பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல”

“எஸ்… அதுதானே உனக்கு பிடிச்சதும்” என்றவனின் கரங்கள் மீசையை முறுக்கி கொள்ள… தன்னையே மறந்து அவனையே பார்த்திருந்தாள் இனியாள்.

செல்போன் இசைத்திட மெல்ல தன் நினைவு திரும்பியவள் வேகமாக அவனிடமிருந்து விலகியவள் மேஜை மீதிருந்த தன் போனை எடுத்து பார்க்க… அதில் வெண்பா என்ற பெயர் மின்னயதை கண்டு பட்டென்று அழைப்பை துண்டித்துவிட்டவள்… நகத்தை கடிக்க ஆரம்பித்துவிட்டாள்.

“யாரு இனியா போன்ல… உன் சிஸ்டரா” என்று கேட்டபடி அந்த கண்ணாடியின் மீது சாய்ந்து நிற்க… அதிர்ந்த அவள் விழிகளே சொல்லாமல் சொல்லியது அவள் தான் என்று!

“எடுத்து பேசு கால் பண்ணிட்டே இருக்காங்க பாரு” என்று கேஷ்வலாக  சொன்னவனை யோசனையோடு பார்த்து கொண்டே அழைப்பேசியை எடுத்தாள்.

“சொல்லு வெண்பா… என்ன இவ உயிரோடு இருக்காளா இல்ல செத்தாளான்னு தெரிஞ்சுக்க போன் பண்ணியா…” என்று எடுத்ததும் சீறிய தங்கையின் பேச்சில் மௌனம் சாதித்தாள் வெண்பா.

“பேசு வெண்பா… பேசுறதுக்கு தானே கால் பண்ண… இப்போ எதுக்கு அமைதியா இருக்க… எப்படி பேச முடியும்… நம்ப வைச்சு கழுத்தை அறுத்துட்ட இல்ல” என்றவளுக்கு என்ன முயன்றும் கண்களில் நீர் நிறைந்து கொண்டது.

“ப்ச் என்னை மட்டும் தப்பு சொல்லாத இனியா… அந்த முட்டாள் மாமா தான் கல்யாணம் பண்ணிக்க கட்டாயம் பண்ணா… நீ எதுக்கு பண்ணிக்கிட்ட… என்னை மாதிரி ஓடி வர வேண்டியது தானடி… எதுக்கு பலியாடு மாதிரி தலையை கொடுத்திட்டு நின்ன” என்று இவள் எகிற…

“என்ன செய்றது உனக்கு நான் ஹெல்ப் பண்ண மாதிரி எனக்கு யாருமில்லையே” என்று அமைதியாக வார்த்தைகள் வந்து விழ… தங்கை படும்பாட்டில் இவளுக்கு அய்யோ என்றானது… கல்யாணம் நிற்கும் என்று நினைத்து செய்தாளே தவிர… தங்கை இதில் மாட்டுவாள் என்று அவள் நினைக்கவில்லை… என்னவோ தங்கையை இப்போதே காண வேண்டும் என்று உந்துதல் ஏற்பட…

“கால் கட் பண்ணிட்டு விடியோ கால் பண்றேன்… பிளிஸ் அட்டன்ட் பண்ணுடி” என்று துண்டித்துவிட்டு விடியோ கால் போட… இனியாளும் அதை ஏற்றிருந்தாள்.

இனியாளின் முகத்தையே ஆராய்ச்சியாக பார்த்திருந்த அவள் விழிகள் இப்போது நெற்றியில் கம்ழ்ந்து கொண்டிருக்கும் குங்குமத்தின் மீது பார்வை சென்றது… என்னவோ தங்கையே புதிதாக தெரிந்தாள்.

“ஏன் வெண்பா இப்படி பண்ண… எனக்கு காரணம் சொல்லு… கண்டிப்பா உனக்கு அவரை பிடிக்காம இல்ல… ” என்ற வார்த்தைகளை சொல்வதிற்குள் சிரமப்பட்டு போக… அதை வெண்பா கவனித்தாலும் பெரிதாக கண்டுக் கொள்ளவில்லை

“எஸ் பிடிச்சிருந்தது தான்… அதுக்காக எல்லாத்தையும் என்னால விட முடியாது இனியா…”

“இதெல்லாம் ஒரு காரணமா… மேரேஜ்க்கு முன்னாடியே எல்லாம் தெரிஞ்சு தானே ஓ.கே சொன்ன… இப்ப என்ன” என்றவளின் குரலில் எரிச்சல் மிகுந்து இருந்தது.

“எஸ் தெரியும் தான்… பட் இப்போ தான் எனக்கு ஜெர்மன் போற ஆப்பர் கிடைச்சிருக்கு… நான் அதை மிஸ் பண்ண விரும்பல”

“ஹவ் செல்பிஷ் நீ… உன்னுடைய ஆசைக்கு இங்க ஒருத்தருடைய ஆசையை நிராசை ஆக்கியிருக்க… உனக்கு புரியுதா அது…”

“எதை மீன் பண்ற… யாரை சொல்ற வாசுவையா… நோ வே கண்டிப்பா அவரு பீல் பண்ணி இருக்க மாட்டார் நான் போனதுக்கு… பிகாஸ் நான் போனதை அவரே பார்த்தாரு” என்ற பதிலில்

“வாட்ட்ட்…” என்று பெரிதாய் அதிர்ந்தாள் இனியாள்.

“என்ன சொல்ற நீ… ஒருவேளை ரெண்டு பேரு சேர்ந்து போட்ட பிளானா இது…”

“இல்லடி… ஜஸ்ட் நான் காருல போனதை தான் அவரு பார்த்தாரு… பட் பார்த்தவரு எந்த ஒரு ஆக்ஷனும் எடுக்கல… இதுலே தெரியல அவருக்கு என்னை பிடிக்கிலன்னு… ஜஸ்ட் சிம்பிள்…” அவள் சாதாரணமாக முடிக்க… கேட்டு கொண்டுவளுக்கு தான் அதை ஜீரணிக்க இயலவில்லை…

“ஹலோ… இனியா… ஏய் இனியா… லைன்ல இருக்கியாடி” என்று வெண்பா கத்திக் கொண்டு இருக்க… எதுவும் பேசாது அணைப்பை துண்டித்தவள் வாசுவை பார்த்த பார்வையில் என்ன இருந்தது என்று தெரியவில்லை…

“அப்போ பிளான் போட்டு பண்ணி இருக்கிங்க… எதுக்கு இப்படி பண்ணுனிங்க… உங்க பின்னாடி சுத்திட்டு இருந்த போது கண்டுக்காத மாதிரி இருந்திங்க… இப்போ எதுக்கு இந்த போர்ஜரி வேலை…”

“லுக் இனியா… நான் எந்த பிளானும் போடல… உன் அக்கா போனதை ஜஸ்ட் நான் பைக்ல சும்மா ஒரு ரவுண்ட் போகும் போது பார்த்தேன்… தட்ஸ் இட்… அண்ட் உங்கக்கவுக்கு பதில் உன்னை பொண்ணு கேட்டது எங்கப்பா… அதே மாதிரி உன்னை கல்யாணத்துக்கு போர்ஸ் பண்ணது உன் பேரண்ட்ஸ்… இதுல என் தப்பு எங்க இருக்கு… நான் ஜஸ்ட் எனக்கான வாய்ப்பை பயன்படுத்திக்கிட்டேன்” என்றவன் மறந்தும் தன் அப்பாவை சீண்டி அவளை பெண் கேட்க வைத்ததை மூச்சு விடவில்லை..

அவன் பேசுவதை நிதானமாக பார்த்தவள்…

“அப்போ எங்கக்கா ஓடிப் போகாம இருந்தா அவளை மேரேஜ் பண்ணி இருப்பிங்க ரைட்…” என்ற கேள்விக்கு

“நீ அப்படி நினைக்குறியா…” என்று புருவம் உயர்த்தி வினவ… அதற்குள்ளே கீழிருந்து மங்களத்தின் குரல் கேட்டது…

“இனியா… உன் அக்காவும்… மாமாவும் வந்திருக்காங்க பாரு… கீழே வாம்மா…” என்ற குரலில் அவளும் கீழே செல்ல… ‘அடுத்த என்டர்டெயின்மென்ட் கிடைத்துவிட்டது’ என்ற ரீதியில் வாசுவும் பின்னோடு வந்தான்… அப்பேச்சும் அப்படியே பாதியில் நின்றது… இவர்களின் உறவை போல!

தொடரும்…

 

One thought on “உளமாற உனதாகிறேன் – 7

  • Divyalakshmi Sugumar

    Vasu 😍😍😍😍

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!