Skip to content
Post Views: 722
மனசு 2
நொய்டா கம்பெனி பிராஜெக்டை தேர்ந்தெடுக்கும் நாள் வந்தது. அனைத்து நிறுவனத்தினரும் வந்திருந்தனர்.
காரிலிருந்து ப்ளூ கோர்ட்டு பேண்டில் ஆளை அசரடிக்கும் அழகில் வந்து இறங்கினான் உதய்கிருஷ்ணா. உடன் விதார்த்தும் அவர்களின் டீம் ஆட்களும் வந்தனர்.
Advertisement
மற்ற நிறுவன ஆட்களிடம் கை குலுக்கி பேசிக் கொண்டிருந்தனர் விதார்த்தும் உதய்கிருஷ்ணாவும். பேசி அவர்கள் இடத்திற்கு வந்து அமர்ந்தனர்.
Advertisement
வேகமாக வந்த மெர்சிடிஸ் பென்ஸில் இருந்து கண்ணில் கூலரை போட்டு இறங்கினாள் இன்பவேணி. அவளும் அவ்விடத்தினுள் நுழைந்தாள். அனைவர் கவனமும் அவள் மீது. உதய்கிருஷ்ணா மனதில் மெல்லிய மழைச்சாரல். விதார்த் அதிர்ந்து வேகமாக எழுந்தான்.
Advertisement
அவன் கை பிடித்து உதய்கிருஷ்ணா அமர வைக்க,
அண்ணா..இன்னு..
Advertisement
ம்ம்! அமைதியா இரு..
கூலரை இறக்கி இவர்களிடம் ஏளனமான பார்வை சிந்தி அவள் சென்று அமர்ந்தாள்.
விதார்த் நம்ப முடியாமல் இன்பவேணியையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் கண்டுகொள்ளவேயில்லை.
விதார்த்தின் தோழியும் உதய்கிருஷ்ணாவின் காதலியும் இன்பவேணியே!
சிலமணி நேர பேச்சுகளின் பின் வெற்றி பெற்றவர்களை அறிவித்தனர்.
இரு நிறுவனங்கள் தேர்வானது. தற்பொழுது வோட் வைத்து தேர்வு செய்யலாம் என்ற தொகுப்பாளினி…தேர்வான நிறுவனங்கள் என்று “யூ கே இ” மென்பொருள் நிறுவனமும் “ஹனி சாப்ட்வேர் சொல்யூசனும்” என்று அறிவித்தனர்.
உதய்கிருஷ்ணாவும் இன்பவேணியும் மேடை ஏறினர். நாற்காலியில் கை ஊன்றி உள்ளங்கையில் தாடையை வைத்து ஆச்சர்யத்தை முகத்தில் காட்டி தன் தோழியையே பார்த்துக் கொண்டிருந்தான் விதார்த்.
எத்தன தடவை இது போல ஆடை எடுத்து கொடுத்தேன். உடுத்தவேயில்ல…இப்ப பாரு டாப் டக்கரா வந்து நிக்குறா? மனதில் தோழியை பொறிந்து தள்ளினான்.
“ப்பா….” வாயிலில் குரல் கேட்டு அனைவரும் அப்பக்கம் திரும்ப, சித்ரா கையில் அழுத முகத்துடன் ஜான்வி இருந்தாள். தந்தையை பார்த்தவள் சித்ராவிடமிருந்து இறங்கி ததக்க பொதக்கென ஓடி வர, விதார்த் எழுந்தான்.
அவனுக்கு முன் மேடையிலிருந்து உதய் கிருஷ்ணா மகளிடம் வர..கை நீட்டி அழுது கொண்டே வந்தாள் ஜான்வி.
என்னடா ஜானும்மா? …பிள்ளையை தூக்கினான். அவன் முகத்தில் பதட்டம் குடியேறியது.
அவன் எண்ணியது போல அவனை நெருங்கிய சித்ரா..அவன் காதருகே வந்து,
“தம்பி, பாப்பாவை வச்சிட்டு இருந்தேன். அவங்க வந்து பாப்பாவ புடிச்சி இழுத்துட்டாங்க. நான் விடல. பாப்பா ரொம்ப பயந்துட்டா. விதார்த்தும் அவர்களிடம் வர, சித்ரா உதய் முகம் மாறி இருப்பதை கண்டு, யாரால் என்று புரிந்து கொண்டான்.
விது…நீ பாத்துக்கோ…
“அண்ணா, இப்ப இங்க வேண்டாம்” விதார்த் இன்பவேணியை காட்டினான்.
பெருமூச்சுடன், “ஜானும்மா அப்பாட்ட வந்துட்டீங்கல்ல? பாப்பாவ நான் தொட விட மாட்டேன்” என்று பேசி குழந்தையின் அழுகையை கரைத்தான்.
கொஞ்ச நேரம் எங்கிட்ட இருக்கட்டும். அவங்க போயிட்டாங்கல்ல?
போயிட்டாங்க தம்பி..
“வெயிட் பண்ணுங்க” விதார்த்தை பார்த்து குழந்தையுடன் மேடை ஏறினான்.
உதய்கிருஷ்ணா மகளுக்காக இறங்கியதும் அவனின் அவள் மீதான பாசமும் அங்கே இன்பவேணியை.. ஐ மீன் உதய்கிருஷ்ணாவின் ஹனியை கொதிக்க வைத்தது. குழந்தை என்றும் எண்ணாமல் பொறாமையுடன் பார்த்தாள்.
மேடையில் அவன் ஏறிய பின் இன்பவேணியை கண்ட ஜான்வி, ம்மா…என்று அவள் மீது தாவினாள்.
அம்மாவா? அங்கு சலசலப்பு கூடியது.
“அய்யய்யோ! மாட்னேன்டா” விதார்த் தன் கோர்ட்டால் முகம் மறைத்து அமர்ந்திருக்க, உதய்கிருஷ்ணாவை வெறித்திருந்த இன்பவேணி அவன் விழிகள் சென்ற திசை பார்த்து கடுப்பானாள்.
ஜான்வி விடாமல் அழுது கொண்டே கை நீட்ட,
“சாரி மிஸ் இன்பவேணி” சாதாரணமாக பேசிய உதய்கிருஷ்ணா விதார்த்தை முறைத்த முறைப்பில் சித்ரா குழந்தையை தூக்கி கொண்டாள். ஜான்வி அழைப்பதை விடவில்லை..
ம்மா..ம்மா..ம்மா…என நிறுத்தாமல் அழ, ஒரு காலத்தில் காதலித்தவனின் குழந்தை என்றாலும் வேற பொண்ணுடன் வாழ்ந்தவனாயிற்றே! கடுப்புடன் இன்பவேணி கீழிறங்க எத்தனிக்க…
சாரி மிஸ் இன்பவேணி. எம் பொண்ணு இதுக்கு முன்னாடி யாரையும் அம்மான்னு கூப்பிட்டதேயில்ல. சாரி…
பிராஜெக்ட் தேர்ந்தெடுக்கும் நிறுவனத்தினரிடம், “மேடமிற்கே பிராஜெக்டை கொடுங்க சார். நான் எம் பொண்ண பாக்கணும்” யார் பதிலையும் எதிர்பாராமல் சென்று விட்டான். இன்பவேணிக்கு அவள் எதிர்பார்த்து வந்த எதுவும் நடக்கவில்லை.
“தகுதி பணம்னு பேசியவர்கள் முன் நிக்கணும். முட்களில் ஏறி கடந்து வந்த அனைத்தும் இவனால். இவன் முன் பெருமையுடன் நிற்கவே, இவனோ கண்டுகொள்ளாமல் செல்கிறான்” தீயாய் கனன்றது அவளது மனம்.
தன்னை கண்டு குற்றவுணர்ச்சியில் தவிப்பான் என்று ஏதேதோ கனவு கண்டு வந்த இன்பவேணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவன் மனைவி இறந்தது கூட இன்னும் இவளுக்கு தெரியாது. தன்னை ஏமாற்றி மனைவி, குழந்தைன்னு மகிழ்ச்சியா வாழ்றான்னு நினைச்சிட்டு இருக்கா..
அவளை பார்த்த உதய்கிருஷ்ணாவின் மென்மையான புன்னகை, குழந்தைக்காக பிராஜெக்டே வேண்டாம்னு போனது அவளுக்கு கஷ்டமாக இருந்தது.
உண்மையில் சொல்லப் போனால் இதற்கு முன் நடந்த மீட்டிலே அவள் வருவாள் என்று அறிந்து கொண்டான் உதய்கிருஷ்ணா. அவளின் உயர்வு அவனுக்கு பெருமையாகவே உணர வைத்தது.
விதார்த்தும் அவர்கள் டீமும் வெளியே செல்ல, இன்பவேணிக்கே அந்த பிராஜெக்ட் சென்றது.
அவளிடம் அந்நிறுவத்தினர்கள் பேச, “சார் ஆபிஸ்ல மீட் பண்ணலாம் வாரேன்” என்று மறுநொடியே அவளும் வெளியேறினாள்.
“என்ன செஞ்சு வச்சிருக்க விது? இது எப்ப?” தமையனிடம் சீறினான் உதய்கிருஷ்ணா.
அண்ணா, நம்ம பழைய போட்டோஸ எடுத்து அடிக்கடி பார்ப்பேன். பாப்பா கேட்டா..அதான்…தலைகவிழ்ந்தான்.
ம்ச்ச்ச்..
“என்ன சார் இப்படி பண்ணீட்டீங்க?” எம்பிளாயி ஒருவர் கேட்க,
நான் ஏற்கனவே நம்ம பிராஜெக்ட யார்ட குடுக்கணும்னு டிசைட் பண்ணி இருக்கேன். அதுல ஒண்ணும் பிரச்சனையில்ல..
அண்ணா, முன்னாடியே தெரியுமா?
ம்ம்!
இவர்களை பார்த்துக் கொண்டே வந்தாள் இன்பவேணி.
“ஹலோ சார், உங்க தகுதிக்கு நாங்க சமமான ஆள் தான். நீங்க எதுக்கு விட்டு கொடுக்கணும்?” உதய் கிருஷ்ணாவை நெருங்கினாள்.
“மேம் சார் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? தகுதின்னு பேசுறீங்க?” உதய்கிருஷ்ணாவிடம் வேலை செய்பவன் கோபமாக பேச, அவள் நக்கலாக அவனை பார்த்தாள்.
விதார்த்திற்கு கோபம் வர, “வா அண்ணா…..” அவன் கை பிடிக்க..
“ப்பா…ம்மா…ம்மா..ம்மா..வா…” இன்பவேணியை அழைத்தாள் ஜான்வி.
“வா…” இன்பவேணி கை நீட்ட, உதய்கிருஷ்ணாவும் எதுவும் சொல்லவில்லை.
விதார்த் கோபமாக, “பட்டு புரிஞ்சுக்காதவங்கட்ட பேசுறதே வேஸ்ட்” என்றான்.
“யாரும் உன்ட பேச வரல” பட்டென கொடுத்து வேண்டுமென்றே பாப்பாவை தூக்கினாள்.
“அக்கா…” அழகிய தமிழில் அழைத்தவாறு பெண்ணொருத்தி பாவாடை தாவணியில் ஓடி வந்தாள்.
அம்மா…பேசுங்க… அவள் பின் வந்தவனை பார்த்து உதய்கிருஷ்ணாவும் விதார்த்தும் திகைத்து குழந்தைக்கு அரணாக வந்து நின்றனர்.
திடீரென இருவரின் நெருக்கமும் இன்பவேணியை சிந்திக்க வைத்தது.
அப்புறம் பேசிக்கிறேன்.
மேம் கார் ரெடியா இருக்கு. யாருக்காக குழந்தைக்கு அரணாக வந்தார்களோ அவன் இன்பவேணியிடம் பேச, புரியாமல் இருவரும் அவளை பார்த்தனர்.
ஓ.கே முரளி. இப்ப வந்துடுறேன்..
“முரளியா? இவனா?” இருவரும் ஒன்றாக அவனை பார்க்க, அவர்களை பார்த்து ஒற்றை கண்ணடித்தான் அவன். அவன் பிரியங்காவின் சித்தப்பா மகன் கௌதம்.
“பாப்பா யாரு மேம்?” தெரியாதவன் போல கேட்க, அவளும் பதிலளித்தாள்.
கௌதமானவன் ஜான்வியை தூக்க இன்பவேணியை நெருங்க, கத்தி அழுதாள் ஜான்வி.
மறுநிமிடம் பிள்ளையை இன்பவேணியிடமிருந்து வாங்கி இல்லை… இல்லை… பறித்து, “வா விது. நாங்க முன்னாடி போறோம்” வேகமாக நகர்ந்தான் உதய்கிருஷ்ணா.
ஜான்வியை பிடுங்குவான் என எதிர்பார்க்காத இன்பவேணிக்கு முகத்தில் அடித்தாற் போல இருந்தது. அவளுக்கு நடக்கும் எதுவும் தெரியவில்லை.
இன்பவேணியை வைத்து குழந்தையை தன்னிடமிருந்து பிரித்து விடுவார்களோ என்ற பயத்தில் குழந்தையை பிடுங்கி சென்று விட்டான் உதய்கிருஷ்ணா. என்ன தான் கோர்ட்டில் குழந்தை தந்தையிடம் தான் இருக்க வேண்டும் என்றாலும் குழந்தையை பார்க்கும் அனுமதி கொடுத்திருந்தனர்.
வீட்டு பெரியவர்களை வைத்து அவர்களிடம் குழந்தையை கொடுக்க முடியாது என பேசி இருந்தான். அவன் நிலை புரிந்து ஒத்துக் கொண்டனர். கடந்த ஒரு வருடங்களாக இப்படி தான் செல்லும் இடத்திற்கு யாராவது வந்து ஜான்வியை அழ வைத்துக் கொண்டிருந்தனர்.
விதார்த் கௌதமை முறைத்து பார்க்க, இன்பவேணி இப்பொழுது தான் இருவரையும் பார்த்தாள்.
“ஹாய் சார், ஐ அம் முரளி” என்று அவன் கை நீட்ட,
பல்லை கடித்து இன்பவேணியையும் முறைத்து நகர்ந்தான் விதார்த். இவர்கள் எண்ணம் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள் இன்பவேணி.
ஆனால் அந்த பெண் சாயாலி அனைவரின் செயல்களையும் முன்னிருந்தே கவனமாக பார்த்திருந்தாள்.
காரில் ஜான்வியுடன் ஏறிய உதய்கிருஷ்ணா, கௌதம் இன்பவேணி இருவரையும் புகைப்படமாக்கி காவல்துறையில் இருக்கும் தன் நண்பனுக்கு அனுப்பி விசாரிக்க சொன்னான்.
என்ன மேம் அந்த சாருக்கு கொஞ்சம் கூட மேனர்சேயில்ல…
“அவங்க அப்படித்தான்” இன்பவேணி கூறினாலும் நடந்ததே ஓடிக் கொண்டிருந்தது. சாயாலி அவளையும் கௌதமையும் பார்த்துக் கொண்டே காரில் ஏறினாள்.
“அம்மான்னு யாரையும் கூப்பிட்டதில்லைன்னு ஏன் சொன்னான்??? விது ஏன் இவனை முறைக்கிறான்?” மனதினில் எண்ணியவாறு செல்ல, வீட்டிற்கு வரவும் தன் தாயை காண சென்றாள்.
அம்மா…
“ஏன் கால் பண்ணா எடுக்க மாட்டீயா?” திட்டினார் கோசலை.
ஒண்ணுமில்லம்மா…போன வேலை சக்சஸ் என்றாள் முகத்தில் கொஞ்சமும் சந்தோசமில்லாமல்..
“முரளி நீ கிளம்பு. நாங்க பாத்துக்கிறோம்” அவனை இன்பவேணி கிளம்ப வைக்க, ஓடி வந்து இன்பவேணியையும் அவள் தாய் கோசலையையும் இழுத்து அறைக்கு சென்று கதவை அடைத்தாள் சாயாலி.
“என்னடி? எதுக்கு அம்மாவையும் இப்படி இழுத்துட்டு வர்ற?” இன்பவேணி காட்டமாக கேட்டாள்.
“அம்மா…அவர நான் பாத்துட்டேன்” குதித்தாள் சாயாலி.
யார?
அதான் ..மாமா..
“சாயா…” கோபமாக அழைத்தார் கோசலை.
குஜராத்தி பெண்ணவள் சாயாலி. சரளமாக இவர்கள் தான் தமிழ் பேச கற்றுக் கொடுத்திருந்தனர். அவள் கண்டதை கூறத் தொடங்கினாள்.
அம்மா, நான் உங்கட்ட பேசும் போது பாப்பா அழும் சத்தம் கேட்டதுல்ல. அது உதய் மாமா பாப்பா. முரளி பாப்பாவ தூக்கவும் பாப்பா கத்துனா.
அவன் விடாமல் கோபமா ஏதோ சொன்னான். பாப்பாவுக்கு அம்மா இல்லை. கூட இருந்தவங்க பாப்பாவ பாத்துக்கிறவங்களாம். நான் பேசினேன்..
“என்ன சொல்ற?” பெண்கள் இருவரும் அதிர்ந்து கேட்டனர்.
ஆமா, முரளிய மாமாக்கும் அவர் தம்பிக்கும் ஏற்கனவே தெரியும் போல இருக்கு.
அவன் மாமா பாத்து கண்ணடிச்சான். மாமா கோபப்பட்டாங்க. பாப்பாவ அழ வைப்பான்னு தான் நீங்க பாப்பாவ வச்சிருந்தப்ப பக்கத்துல வந்தாங்க.
நீ எதுக்குடி தூக்குன?
அம்மா, விது பாப்பாட்ட என்ன அம்மான்னு சொல்லி வச்சிருக்கான். பாப்பா என்ன அம்மான்னு கூப்பிட்டு அழ ஆரம்பிச்சுட்டா..
விடு. யாரும் எதுவும் செய்யட்டும். இந்த முரளிய மட்டும் என்னன்னு பாரு. எனக்கும் அவன் நடவடிக்கை தப்பா தெரிஞ்சது. தனியா போய் பேசுறான். நாம பக்கத்துல போனா உடனே போன வச்சிடுறான். செத்துப் போன எம் புள்ள முரளி மாதிரி இருக்கான்னு சேர்த்தா இது சரிப்படாது. அவன விசாரி..
அக்கா, அவன்ட பேசாதீங்க. அவனோட பார்வையே சரியில்ல. வேற யார்டவாது….ம்ம்! மாமாட்ட கூட கேக்கலாமே!
“சும்மா மாமா மாமான்னு சொல்லாத சாயா” கண்டித்தார் கோசலை. இன்பவேணியின் தாய்.
ஓ.கேம்மா…அவன்ட எதையும் காட்டிக்காம பேசுங்க…
மூவரும் வெளியே வந்தனர்.
பேய் போல முன் வந்தான் கௌதமான முரளி.
முரளி, நான் உன்ன கிளம்ப சொன்னேன்.
மேம், ட்ரீட் இல்லையா?
நீ கிளம்பு. நான் ஆபிஸீக்கு வந்துடுறேன்.
அவன் செல்லவும் அவளது கம்பெனி ஆள் ஒருவனை அழைத்து முரளிக்கு தெரியாமல் அவனது பேக்கிரவுண்டை விசாரிக்க சொன்னாள் இன்பவேணி.
கோசலை செய்த இனிப்பை உண்டு இன்பவேணி உதய் அவளுக்காக விட்டுக் கொடுத்ததை பேசினாள்.
“வேண்டாம்டா. அவங்கள விட்டு விலகியே இரு. இதுக்கு முன்னாடி பட்டதே போதும். அம்மா பேச்ச கேளுடா. அம்மா மாப்பிள்ள பாக்குறேன். ஒத்துக்கோடா” கெஞ்சினார்.
“இல்லம்மா, அஞ்சு வருசமாச்சு. ஆனாலும் என்னால கிருஷ மறக்க முடியல. அவன பழி வாங்கணும்னு நினச்சு தான் ரொம்ப கஷ்டப்பட்டு என்ன வருத்திட்டு இந்த நிலைக்கு வந்தேன். ஆனா அவன பாக்கவுமே என்னால கோபம் கூட பட முடியல. பொண்ணு மேல அவ்வளவு பாசமா இருக்கான். அப்ப பிரியா மேலயும் பாசமா தான இருந்திருப்பான். என்னால ஏத்துக்கவே முடியல…” தேம்பி தேம்பி அழுதாள் இன்பவேணி.
அழுறத நிறுத்துங்க. நிஜமா சொல்றேன். மாமா பொண்டாட்டி உயிரோட இல்ல. அவங்க வீட்ல வேல பாக்குறவங்க நேம் சித்ரா. மாமா தம்பி மாமாவோட செகரட்டரி பொண்ண லவ் பண்றாரு.. மாமா வெளிய போனா பாப்பாவ முழுசா அவர் தான் பாத்துப்பார்…அப்புறம் முக்கியமான விசயம்..மாமாவும் அவர் தம்பியும் அவங்க அப்பா கூட அதிகம் பேசுறதில்லையாம்..
“நிஜமா பிரியா உயிரோட இல்லையா???” சாயாலியிடம் கேட்டாள் இன்பவேணி.
ஆமா..
வேணிம்மா போதும். கண்டதையும் யோசிக்காத..
“அம்மா, அக்காவ மாமாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்ல?” சாயாலி கேட்க, கொதித்தார் கோசலை.
அந்த வீட்டு சகவாசமே வேணாம் சாயா. முதல்ல மாமான்னு கூப்பிடுறத நிறுத்து. மாமா..மாமான்னு சொல்லீட்டே இருக்க. அந்த வீட்டு பெரியவங்க யாரும் பெரியவங்க மாதிரி நடந்துக்கல. உன்னோட அக்காவ அடிச்சி அவமானப்படுத்தி அவ வாழ்க்கையவே கேள்வி குறியாக்கிட்டாங்க. இனி அவங்கள பத்தி யாராவது பேசுனா என்ன உயிரோட பாக்கவே முடியாது…
“அம்மா..!!” இரு பெண்களும் சத்தமிட்டனர்.
“சரிம்மா…” அமைதியாக கூறி வருத்தமுடன் ஆபிஸ் கிளம்பினாள் இன்பவேணி. வெளியே கோபமுகம் காட்டினாலும் உதய்கிருஷ்ணாவை மனதில் வைத்து தவித்துக் கொண்டிருந்தாள் இன்பவேணி.
மதியத்தின் பின் உதய்கிருஷ்ணா மற்றும் இன்பவேணிக்கு அழைப்பு வந்தது. இருவருக்கும் அவர்கள் கேட்ட விவரம் அளிக்கப்பட்டது.
இருவரின் மனமும் ஆறவில்லை. உலைகலனாய் கொதித்துக் கொண்டிருந்தது.
இன்பவேணி கௌதம் சந்திப்பு பற்றி விசாரிக்க சொன்ன உதய்கிருஷ்ணாவிற்கு அவன் நண்பன் அளித்த பதில் உவப்பானதாக இல்லை..
இரு வருடத்தின் முன்…
இன்பவேணி நன்றாக உயர வாய்ப்பு கிடைத்த போது அவ்வாய்ப்பு கை நழுவிப் போனது. காரணம் கௌதம். பணம் வைத்து இன்பவேணி வளர்ச்சியை தடுத்தான். அதுதெரியாமல் மேலும் மேலும் அவள் முயல..தோல்வி தான் கிடைத்தது. மனம் துவண்ட ஒரு இரவு நேரத்தில் அடிப்பட்டு கீழே மயங்கியது போல நடித்த கௌதமின் நடிப்பை கூட அறியாமல் அவனை மருத்துவமனையில் சேர்த்து உதவினாள் இன்பவேணி.
இன்பவேணிக்கு தம்பி ஒருவன் இருந்தான். அவன் பெயர் முரளி. சிறுவயதில் விபத்தில் இறந்தான் அவன். இதை பயன்படுத்தி தன் பெயர் முரளி என்றும் தான் . அநாதை என்றும் இவளுக்கு உதவுவதாக அவளுடன் சேர்ந்தான்.
அவன் திட்டம் தன் அக்கா பிரியங்காவிற்காக இன்பவேணியை திருமணம் செய்து அவளை கொடுமைப்படுத்துவது தான்…
அதன் முதல் படி…அவள் முன்னேற்றத்திற்கு வழிவிடுவது..
அடுத்ததாக அவளுடன் பார்ட்னர்ஷிப். ஆனால் இன்பவேணி அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. அவனுக்கென எல்லா வசதிகளும், வீடு, சொத்து என கொடுத்தாள்.
அனுபவித்தாலும், அவள் தனக்கு செய்வதா???? என்ற திமிர் அவனுள் அதிகம்..
ஒரு வருடம் செல்ல, மறு வருடமே சென்னை செல்ல ஏற்பாட்டை இன்பவேணி தொடங்க, அவளை இங்கே வர விடக் கூடாது என இவனே ஆட்களை வைத்து அவளை ஆக்சிடன்ட் செய்தான். அடிபலமில்லை என்பதால் இன்பவேணி தப்பி விட்டாள்.
தன் அக்கா இறப்பு வேற அவனை உருக்குலைத்து இருக்க, தன் தங்கையை இதில் சேர்த்தான். அவள் பத்து வயதில் பாரின் சென்றவள். அவளும் பாரினிலிருந்து வந்தாள். அவளை யாருக்கும் அதிகம் தெரியாது என்பது அண்ணன், தங்கை இருவருக்கும் வசதியாகிப் போனது..
அந்த பெண் குறி வைத்தது உதய்கிருஷ்ணாவை. மாட்டியது விதார்த். ம்ம்! ஷோபனா தான் கௌதம், பிரியங்காவின் தங்கை. ஆபிஸ் வரை வருவாளே தவிர குடும்ப விசயத்தில் வர மாட்டாள். அவள் வீட்டினருக்கே அவள் பாரினிலிருந்து வந்தது தெரியாது. இது தெரியாமல் விதார்த்தும் அவளுடன் பழகி வருகிறான்..
தற்பொழுது இச்செய்தியும் உதய்கிருஷ்ணாவை எட்டியது. உதய்கிருஷ்ணா ஆபிஸிற்கு ஷோபனா இண்டர்வியூ வரும் போதே அவன் அவளை கண்டு கொண்டான். வேலையாக மட்டும் இவன் பார்க்க, தன் தம்பியிடம் அவள் காட்டும் நெருக்கம் மனதை நெருடிக் கொண்டு தான் இருந்தது. அதற்காக காரணம் இப்பொழுது தெரிந்து விட்டது.
தன்னை வளைத்து ஜான்வியை அவனிடமிருந்து பிரிக்கும் முயற்சியை ஷோபனாவும், பிரியங்காவிற்காக பழி வாங்க அவள் இறக்கும் முன்னமே இன்பவேணியிடம் கௌதம் சென்றிருப்பது தெளிவாக புரிந்தது உதய்கிருஷ்ணாவிற்கு. ஆனால் அவனது அடுத்த திட்டம் அவளுடனான திருமணம் என்பதை அவன் அறியவில்லை.
இங்கே நம் இன்பவேணிக்கோ முரளி என்பவன் கௌதம் என்றும் பிரியங்காவின் சித்தப்பா மகன் என்றும் உதய்கிருஷ்ணாவை காதலித்த காரணத்தால் தன்னை பழி வாங்க வந்திருக்கிறான் என்று மட்டுமே செய்தி எட்டி இருந்தது. அதிலே அவள் கொதித்து இருந்தாள்.
தன் தம்பியின் பெயர் வைத்து, அநாதை என்று தில்லாலங்கடி வேலை பார்த்த கௌதம் தன்னை முட்டாளாக்கி இருக்கிறான் என்று கொல்ல வேண்டுமென்ற ஆத்திரம் அவளுக்கு.
கேபினிலிருந்து வெளியே வந்து கௌதமை இன்பவேணி விசாரிக்க, உணவிற்காக போயிருக்கார் மேம் என்று கூறவும் கேண்டினுக்கு சென்று கொண்டிருந்தாள்.
“காதல் நீ
காயம் நீ நீ
கானல் நீயே மறைந்தாயே!
வேஷம் நீ
பொய்கள் நீயே!
மாற்றம் நீ
நான் உடைந்தேனே!”
error: Content is protected !!