யுகத்தின் தலைவன் அத்தியாயம் 18
யுகத்தின் தலைவன்
அத்தியாயம் 18
மத்திய சிறையில் அடையாள அட்டை இல்லாததால் திருப்பி அனுப்பப்பட ஏமாற்றத்துடன் திரும்பினர்.
புதன் கிழமை காலை எல்லா ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு கிளம்பினர்.
அதே சோதனைகள், அதே கேள்விகள் எல்லாம் எதிர் கொண்டு மூவரும் லைனில் ஏக்கத்தோடு நிற்க,காத்திருந்த தருணம் இதோ வந்துவிட்டது.
Advertisement
இந்த முறை சிவராமன் சிறை கம்பிகளின் பின்னே,பார்த்ததும் மூவர் கண்களிலும் நீர்.
எதுக்கு இப்போ மூணு பேரும் அழுதுட்டு இருக்கீங்க? நான் இங்கே நல்லாதான் இருக்கே.
எதுக்கு ரெண்டு புள்ளைங்களையும் போலீஸ் ஸ்டேஷன் கூட்டிட்டு வந்தே?
Advertisement
இன்னைக்கு ஏன் ரெண்டு பேரும் ஸ்கூல் லீவு போட்டீங்க?
Advertisement
மூவருக்கும் பேச்சே வரவில்லை. கண்ணீர் மட்டும் தாரை தாரையாக வழிந்தது.
நான் எத்தனை தடவை சொல்லறது?நமக்கு படிப்பு தான் முக்கியம்.
இல்லப்பா எங்களுக்கு நீதான் முக்கியம் என்றாள் கங்கா.
Advertisement
கங்கா, பதினைஞ்சு நாளுலே அப்பா வெளியே வந்துருவே.நீ இதை நினைச்சு அழுதுட்டு இருக்காதே. ஸ்கூல்க்கு லீவு போடாமே போங்க.
‘சரிப்பா’ என்றாள் கெளசி கண்ணீரை துடைத்த வாறே.
லட்சுமி வீட்டுல அரிசி இருக்கா?
இருக்கு..
சரி அடுத்த டைம் வரும் போது எனக்கு மாத்த ரெண்டு துணி எடுத்துட்டு வா.
அதற்குள் டைம் முடிந்தது என கூற அழுது கொண்டே மூவரும் வீட்டிற்கு வந்தனர்.
சிவராமனை ஜாமினில் எடுக்க லட்சுமி தன் வீட்டிற்கு மகள்களை அழைத்து சென்று கேட்டார்.
அவனுக்கு வர வர திமிரு அதிகமாயிட்டே வருது.இன்னமும் கொஞ்ச நாள் உள்ளே இருக்கட்டும்.நீங்க மூணு பேரும் போய் உங்க வேலைய பாருங்க என்று கைவிரித்து விட்டனர்.
சரி லட்சுமி வீட்டில்தான் இப்படி என்றால், சிவராமன் வீட்டில் இருப்பவர்கள் ஒருபடி மேலே,
அவனே ஜாமினில் எடுக்க நாங்க ரெடி ஆனா பூர்வீக சொத்துல எங்களுக்கு பாதி தரணும்,இல்லயா நீங்க தனியா இடம் வாங்கி இருக்கீங்களே அதை என் பேருல எழுதி கொடுங்க என சிவராமனின் தங்கை கணவன் பேரம் பேச லட்சுமி கலங்கிய கண்களோடு மகள்களை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார்.
இனி இருபக்க உறவுகளையும் நம்பி பயனில்லை.கணவருக்காக சட்டப்போராட்டம் நடத்த துணிந்து விட்டார்.
இருமகள்களையும் பள்ளிக்கு அனுப்பி விட, கங்கா மட்டும், “அம்மா நான் உன்கூட வரே’ என்றாள்.
வேண்டா கங்கா அப்பா என்ன சொல்லிருக்கு. நமக்கு படிப்புதான் முக்கியம்.நீ ஸ்கூல்க்கு போ அம்மா எல்லாத்தையும் பாத்துக்கறே என தைரியம் சொல்லி அனுப்பி விட்டார்.
எப்படி கணவரை வெளியில் எடுப்பார்?
வீட்டு வேலையை தவிர வேறு எந்த வேலையும் தெரியாது.கையில் பணமும் இல்லை. சுற்றமும் ஒதுக்கி விட்டது. அவருக்கும் இருக்கும் ஒரே சொந்தம் சிவராமன் மட்டுமே.
மீண்டும் மத்திய சிறைக்கு கணவரிடம் சென்றார்.என்னதான் மகள்கள் முன் தைரியமாக காட்டிக் கொண்டாலும், சிவராமனை பார்த்தும் கதறி அழுது விட்டார்.
லட்சுமியை தேற்றி, அழாதே. பதினைஞ்சு நாள் இங்கே வேலை செஞ்சா காசு கிடைக்கும் அதை வெச்சு நானே ஜாமின்லே வெளியே வரலானு நினைச்சே. உன்னை யாரு உங்க வீட்டு ஆளுங்க கிட்டையும்,எங்க வீட்டு ஆளுங்க கிட்டையும் கேட்க சொன்னாங்க?
என்னாலே நீ இல்லாமே இருக்க முடியாது.நானும் உள்ளே வந்தறே.
நீயும் வந்துட்டா ரெண்டு புள்ளைகள யாரு பாத்துப்பா?
உன்னோட ரெண்டு கம்மலையும் அடமானம் வை.நம்ம ஊரு ராஜூ வக்கிலை போய் பாத்து ஜாமீனுக்கு ஏற்பாடு பண்ணு.நான் வெளிய வந்ததும் கம்மல் திருப்பிக்கலாம் என்று தைரியம் ஊற்றி அனுப்பினார்.
என்னதான் சிவராமன் தைரியம் சொல்லி அனுப்பினாலும்,எங்கே போவது? யாரை பார்ப்பது?எவ்வளவு பணம் கொடுப்பது? என எதுவும் தெரியவில்லை.
கங்காவும் கெளசியும் பள்ளி முடிந்து வந்தவுடன் வக்கில் ஆபீஸிற்கு அம்மாவுடன் சென்றனர்.
பாப்பம்மாள் அமைதியாக இவர்கள் பேசுவதை கவனிப்பார். மூவரும் வெளியில் கிளம்பும் போது அவர்கள் தலை மறையும் வரை வாசலில் நின்று அவர்களையே பார்த்துக் கொண்டிருப்பார். மாலையில் வீடு திரும்பும் போது மகன் வருகிறானா? என்று ஏக்கத்தோடு காத்திருப்பார்.
அவர்கள் மூவரும் மட்டுமே திரும்ப ஏமாற்றத்தோடு மெளனமாக அழுவார்.
சிவராமனின் வண்டியை தொட்டுப் பார்த்துக் கொண்டு படுக்க சென்றுவிடுவார்.
கங்கா அவரிடம் சைகை மொழியில், “அப்பா நல்ல இருக்கு. உன்ன கேட்டனு சொல்லுச்சு. நல்லா சாப்பிட சொல்லுச்சு. சீக்கிரம் வந்துரும்” என்று சொல்லி ஆறுதல் படுத்தினாள்.
கோர்ட்கு ஆறு நாட்கள் அரசு விடுமுறை வழங்கப்பட, பதினைந்து நாள் இருபத்தியோர் நாளானது.
மூவரும் கோர்ட், கேஸ், வக்கில் ஆபீஸ் என அலைந்து திரிந்து அவரை வெளியே கொண்டு வந்தனர்.
அந்த இருபத்தி ஓர் நாட்களில் லட்சுமி வீட்டில் இருந்து ஒருவர் கூட வந்து இவர்களை எட்டி பார்க்கவில்லை. இவர்கள் அவர்களிடம் எதிர்பார்ப்பது பணமோ,நகையோ பரிதாப பார்வையோ அல்ல. ஆறுதலான ஒரு வார்த்தை மட்டுமே. ஆனால் அதை கூட யாரும் சொல்ல முன்வரவில்லை.
கொஞ்ச நாட்களில் வீட்டில் எல்லாம் இயல்பானது. சுமதியின் அப்பாவும், கங்காவின் அப்பாவும் கூட பேச ஆரம்பித்து விட்டனர்.
லட்சுமியின் சொந்தமும்,சிவராமனின் சொந்தமும் கூட திரும்ப வந்து ஒட்டிக் கொண்டது.ஆனால் இந்த முறை லட்சுமி பழனியம்மாளை விடவில்லை.
என் புருஷன் உனக்கு என்ன பாவம் செஞ்சுது?என நாக்கை பிடிங்குவது போல் நாலு கேள்வி கேட்டு விட்டார்.
இப்போது லட்சுமி தனி ஆள் இல்லையே தோலுக்கு மேல் வளர்ந்த இரண்டு பெண் பிள்ளைகள் அவருக்கு துணையாக நின்று,அவர்களது அப்பாவிற்கு நீதி கேட்க கொஞ்சம் அடங்கினார் பழனியம்மாள்.
இருந்தும் இந்த லட்சுமி பிறந்த வீட்டின் பாசமும், பத்து மாதம் சுமந்து பெற்ற தாயையும்,அதே சமயம் சிவராமனையும் விட மனதில்லாமல் திரும்ப அனைவருடனும் ஒட்டிக் கொண்டார்.
ஆனால் கங்காவிற்கு முன்பு இருந்தது போல் இருக்க முடியவில்லை. லட்சுமியின் வீட்டிற்கு செல்வதை குறைத்துக் கொண்டாள்.
சுமதியிடமும் பழைய படி பேச முடியவில்லை.
இருபத்தியோர் நாட்கள் அவர்கள் அலைந்த அலைச்சல், சொந்தபந்தங்களின் உண்மை முகம் என எல்லாம் மன அழுத்தத்தை தர, அந்த வயதில் யாரிடம் போய் தன் ஆதங்கங்களை காட்டுவது என தெரியாமல் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டாள்.
சுமதியும் இந்த நிலையை எப்படி கையாள்வது எனத் தெரியாமல் மெளனமாக இருந்தாள். கங்கா அவளை விட்டு முழுதாக விலக ஆரம்பித்தாள்.
பள்ளியின் இறுதி வருடம் தீவிரமாக பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்தனர்.
கங்காவிற்கு ஒரு பழக்கம். ஏதாவது தாங்க முடியாத துக்கம் ஏற்பட்டால் அதிலிருந்து வெளியே வர வேறு எதிலாவது கவனம் செலுத்துவாள். இப்போதும் அப்படியே எப்படியாவது நல்ல மார்க் வாங்க வேண்டும் என அதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டாள்.
திடீரென பள்ளியில் கேரளா டூர் அரேஞ்ச் செய்யப்பட்டது. எல்லோரும் அவரவர்களின் பெயர்களை பதிவு செய்தனர். இது இறுதி வருடம் என்பதால், எல்லோரும் போகலாம் என முடிவு செய்யப்பட்டது.
கங்காவிற்கு அப்பாவிடம் டூர் செல்ல பர்மிசன் கேட்க விருப்பம் இல்லை. எப்படியும் அவர் அனுமதிக்க மாட்டார் .
ஸ்கூலில் டூர் போறாங்க நானும் போறே என எவ்வளவோ தடவை கேட்டுள்ளாள்.
முடியவே முடியாது என சிவராமன் மறுத்து விடுவார். பின் சமாதானம் செய்ய புளியோதரையும், தக்காளி சாப்பாட்டையும் கட்டிக் கொண்டு பள்ளியில் எங்கே அழைத்து சென்றார்களோ அங்கே அழைத்துச் செல்வார்.
பிள்ளைகளும் அவர் போக்கிலேயே வளர்ந்துவிட்டனர். ஆனால் இது கடைசி வருடம். டூர் போக கங்காவிற்கு ஆசைதான்.ஆனால் அவரிடம் கேட்க விரும்பாமல் விட்டு விட்டாள்.
அப்போது இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை கரண்ட் கட் ஆவது வழக்கம். இப்போது உள்ள ஆன்ட்ராய்டு போன், வாட்சப் வசதியெல்லாம் அப்போது இல்லை. வீதிக்கு எங்காவது மூன்று இடங்களில் ஒரு ரூபாய் காயின் போன் வசதி. இல்லை யென்றால் அவர்களின் அப்பா நெம்பரை பறிமாறிக் கொள்வார்கள். அப்பாக்கள் இரவு வேலை முடிந்து வந்தவுடன் தோழிகள் பேசிக் கொள்வார்கள்.
அன்றிரவு கங்காவும், கெளசியும் திரிவிளக்கு வெளிச்சத்தை தன் பக்கம் திருப்பி சண்டை போட்டுக்கொண்டே எழுதினர். லட்சுமி வெங்காயம் உரித்து கொண்டிருந்தார். சிவராமன் அப்போதுதான் கடையில் இருந்து வந்தார்.’கங்கா உன் ப்ரெண்ட் யாரோ கூப்பிடாங்க என்னனு கேளு’ என தனது நோக்கியா போனை கொடுத்தார்.
‘ஷீலா கூப்பிட்டு இருக்கா’ என கூறி அவள் நம்பருக்கு திரும்ப டையல் செய்தாள். ஷீலா எடுத்து,” கங்கா நம்ம வினோதினி டூர் போக வீட்டுலே பர்மிசன் கேட்ருக்கா. அவங்க அம்மா வேண்டானு சொல்லிருச்சு. அவ விளக்குல இருந்த மண்ணெண்ணையை குடிச்சுட்டு வாந்தி எடுத்துருக்கா”என்றாள்.
கங்கா பதறி “அச்சச்சோ என்ன ஆச்சு?” என்றாள். அவ வீட்டுல ஹாஸ்பிடல் கூப்பிட்டு போய் காப்பாத்திட்டாங்க.
சரி டூர் தானே போனு சொல்லி அவங்க வீட்டுலையும் ஓகே சொல்லி காசு கொடுத்துட்டாங்க.
இனி நீ,சுமதி,ரேவதி மூனு பேருதான். பேலன்ஸ். நீ வந்தா சுமதி கண்டிப்பா வருவா. அப்பாகிட்ட இன்னொரு டைம் கேளு ,நீ வேணா போன் கொடு. நன் பேசறே என்றாள்.
‘இல்ல ஷீலா நா வரலே. நீங்க எல்லோரும் போங்க’ என்று போனை வைத்து விட்டாள். லட்சுமி என்ன ஆச்சு? என கேட்க , நடந்ததை கூறினாள். அதை கேட்ட சிவராமன்,’ இந்த காலத்து புள்ளைகளுக்கு எல்லா சொன்னா புரியாது, நீங்க போயிட்டு வர வரைக்கும் நாங்க மடிலே நெருப்பை கட்டிட்டு இருக்கனு’ என்றார்.
கெளசி,’ நீ ஏப்பா மடிலே நெருப்பை கட்றே?அவ போயிட்டு வரட்டும் விடு. அடுத்த வாரம் எங்களையும் தஞ்சாவூர் கூட்டிட்டு போக போறங்க நானும் போவேன்’ என்றாள்.
சில செல்ல சண்டை , சமாதானம் என அன்றிரவு தூங்க சென்றனர் .
