Skip to content
Post Views: 2,766
அத்தியாயம் – 22
அண்ணாமலை அத்தனை பேசியும், பெரியவர்கள் அத்தனையாக கேட்டும் லட்சு மௌனம் சாதிக்க.மகனை பற்றி நன்கு அறிந்தவளாக இனி லட்சு பேசுவது என்பது நடவாத ஒன்று என்று எண்ணி மீனாள் சூழ்நிலையை தன் கையில் எடுத்து கொண்டாள்.
“அவுக சொல்ல மாட்டாக ஒருத்தவுக சறுக்கி வச்ச இடத்தை அவுக முகத்துக்கு நேர பேசித்தேன் பழக்கம் அவுக இல்லாதப்ப பேசி எங்களுக்கு பழக்கம் இல்லை அதுவும் என் மகேனுக்கு அந்த பழக்கம் சுத்தமா இல்ல” அத்தனை பெரிதாக வந்தது மீனாளின் குரல்.
Advertisement
“மீனா கொஞ்சம் பொறுமை எடும்மா மேலுக்கு முடியாம இருந்துகிட்டு எதுக்கு இத்தினி சத்தம் திரும்ப நோக்காடு பட்டு போயி நின்னா பிள்ளைங்கதேன் அலைமோதி நிக்கும்” சுப்ரமணியன் தன்மையாக மீனாளுக்கு சொல்ல கொஞ்சமாக தணிந்தாள்.
Advertisement
“பெரியப்பா!”
Advertisement
“சொல்லுக?”
Advertisement
“அவர் இறப்புக்கு முன்னுக்கு லட்சுவை பார்க்க வேண்டி தகவல் சொல்லி விட்டுருக்காக, லட்சுவும் போய் பார்த்திருக்காக. இந்த சங்கதி எனக்கே அவுக இறப்புக்கு பிற்பாடு தான் தெரியும். இப்போ அவுக என்னத்த எண்ணி வச்சு பேச கூப்பிட்டாக? அதானே இங்கன பெரிய பேச்சா இருக்கு?”
” எதுக்கு இத்தினி கதை? படக்குன்னு இதுதேன்னு இப்பவும் சொல்ல முடியல பாருக” இடையில் புகுந்த அண்ணாமலையை சலிப்பாக பார்த்து தலையை ஆட்டி கொண்டார் சுந்தரம்.
சின்னப்பன், “அண்ணே அவுகள பேச வுடுக பிற்பாடு உங்க பேச்ச பேசுக” சலிப்பாக சொல்லியவர் மீனாளிடம் திரும்பி.
“என்னத்துக்கு மீனா கூப்பிட்டாக அங்கனதேன் கிடக்கேன் எனக்கே சங்கதி தெரியல”
“அது ஊர் கூட்டி சொல்லுற சங்கதி இல்ல அண்ணே அதேன். பெரியவுக சொன்ன கணக்கா அவுக குற்ற உணர்வுல தேன் பார்க்க வந்திருக்காக, ஆனா அவுக எண்ணி வச்சது போல எனக்கும் என் மகேனுக்கும் பிராயிச்சித்தம் பண்ண இல்லை.அவுக பிரிஞ்சு நின்னா நியாய வரலாறு பேச” மீனாளுக்கு பேச்சில் நக்கல் சிதறி நின்றது.
பொறுத்தது போதும் என்று எண்ணினாலோ அல்லது இத்தனை வருட ஆதங்கம் சுமையை கடந்து வந்த பாதையை எண்ணினாலோ தெரியவில்லை இன்று அண்ணாமலை வாய்ப்பை அள்ளி கொடுக்க இறுக்க பற்றி கொண்டாள்.அத்தனையும் ஒன்று திரட்டி பெரும் இரைச்சல் கொண்ட மழையாக கொட்டி தீர்த்தாள் மீனாள்.
இன்னும் சொல்றேன் கேளுக.அப்போ நாங்க அவுக கூட இருந்த காலத்துல இவுக பணம் பண்ணதேன் அடிக்கடி நேபால் போறதா நான் எண்ணி வச்சேன், ஆனா சங்கதி அதில்லை.
அவுக சூது விளையாட போயிருக்காக அதுவும் சொத்தை பனையாம வச்சு. இவுக சம்பாரிச்சு காசு, அவுக ஐயா தேடுன காசு அத்தினியும் சூது கவ்வி வச்சிருச்சு.கடன் கழுத்தை நெறிக்கவும் எங்கன ஊருல இருந்தா பெருசா வண்டவாளம் தண்டவாளம் ஏறி வைச்சுரும்முனு.
அவுக செஞ்சதை எங்க தலையில தூக்கி வச்சுட்டு.துண்டை உதறி தோளுல போட்டுக்கிட்டு போயாச்சு.பழிய அவுக வச்சுக்கிட்டு அதுக்கு உண்டான பாவத்தை எங்ககிட்ட தள்ளியாச்சு.
இந்த கதையை சொல்ல தேன் அவுக கூப்புட்டுருக்காக.இதை எப்படி நம்பி வைக்குறதுன்னு பெரியவுக யோசிச்சு வைப்பாக.அதுனால இதோ இங்கன நிக்கிறாரகளே அவுங்களை கேளுக மனசாட்சினி ஒன்னு அவுகளுக்கு கிடந்தா அவுக உண்மையை சொல்லட்டும் சொல்லுக” இத்தனை நேரம் பதுங்கி நின்ற வள்ளியை பேச்சில் முன் நிறுத்தினாள் மீனாள்.
“மா! வள்ளி சொல்லுக நீங்களும் சோமு கூட வாழ்ந்திருக்கீக” என்றதும் வள்ளி பதறி வேகமாக தலையை ஆட்டிய தினுசில், அண்ணாமலை முதற்கொண்டு திடுக்கிட்டு போனார்.
“என்னம்மா? தலையை இப்படி ஆட்டி வச்சா நாங்க என்னான்னு எண்ணி வைக்குறது? “, சுந்தரம்.
“அவுக கூட இல்லைக ” அடுத்த வார்த்தை பேச தடுமாறி நின்றவள். ஒரு வாறாக சோமுவின் வாழ்விலும் தன்னுடைய வாழ்விலும் நடந்தவற்றை சொல்லி முடிக்க அனைவரது பார்வையும் அண்ணாமலையிடம் மட்டுமே நிலைத்து நின்றது பார் உன் மகனின் அழகை என்பது போல.
“விளங்குச்சா அண்ணாமலை?”, சுந்தரம்.
“இத்தினி நேரம் தண்ணில இருந்து வெளில எடுத்த மீன் கணக்கா அந்த துள்ளு துள்ளி வச்சீக இப்போ பேசுக?” என்றார் சுப்பிரமணியன் அவருக்கு அண்ணாமலையை எண்ணி அத்தனை கோபம் வந்தது.
“இதெல்லாம் எதுக்கு அண்ணாமலை அண்ணே? அந்த புள்ள வாய திறக்கமா இருந்து மீனா குணத்தையும், வளர்ப்பு தரத்தை தூக்கி நிறுத்திடுச்சு பெத்தா புள்ளைய இப்படித்தேன் பெக்கனும். இந்த இரண்டு கண்ணால அவுக கஷ்டத்தை பார்த்திருக்கேன் காரைக்குடிக்கு அவுக வந்த நேரம் ரா தூக்கம் புடிக்காம வேலை செஞ்சு கிடப்பாக.
மகனை எண்ணி அத்தினி கனவு மீனாவுக்கு. அவுக பட்ட பாட்டை சேர்த்தே காரியம் பண்ணி உச்சில மகனை கொண்டு வந்து நிறுத்தி வச்சுட்டாக.இப்படி இருக்குற புள்ளையை ஆதரிக்க மனசு வரலைன்னா பேசாமயாவது இருக்கலாம் தானே” என்றார் சின்னப்பன்.
“அண்ணாமலை!” சுப்பிரமணியன் கொஞ்சம் குரலை பெரிதாக்கி அழைக்கவும்.அதிர்ச்சியில் உறைந்து நின்றவர் உடல் ஒரு முறை தூக்கி வாரி போட சுப்பிரமணியனை திரும்பி பார்த்தார்.
” எங்க கிட்ட முதல் முதல வந்தப்போ என்ன சொல்லி சிபாரிசுக்கு பேச சொன்னீக?” என்றதும் அவர் மௌனம் கொள்ள
“ப்ச் சொல்லுக”
“பேரனை எங்க கூட! ” என்றவர் அதற்கு மேல் பேச முடியலாம் நிறுத்தி விட்டார்.
“வார்த்தைய கூட முழுசா முடிக்க முடியல தப்பு தடுக்குது, சரி இத விடுக. பேச்சுக்கு பேச்சு என் பேரன் என் பேரன் எங்க கூட கிடந்தா சொத்து அத்தினியும் அவுங்களுக்குதேன் யானை, குதிரைன்னு சொன்னீக.இப்போ சொத்தை உங்க மகேன் எப்படி எழுதி வைக்கலாம்ன்னு சண்டை கட்டுறீக? உண்மைக்கும் பாசம் வச்சவரை இப்படித்தேன் பேசி வைப்பாகளா? சொல்லுக அண்ணாமலை?” என்றார் சுப்ரமணியன்
“உங்க உரிமை பேச்சுல பேரன்னு வரல என் பேத்தி, என் மகேன்னு தேன் வருது. இந்த அழகுல அவுக அப்புச்சி, ஐயா தாத்தான்னு எப்படி ஒட்டி வருவாக? அதை எப்படி நீக எதிர்பார்பீக ? இங்கன எதிர்பார்ப்பே தப்பா கிடக்கே” இது சுந்தரம்.
“அந்த புள்ள அய்யன் மானத்தை காப்பாத்தி வைக்க மூடி மறைக்க எண்ணி வச்ச சங்கதிய. ஊர் கூட்டி கடை பரப்பி சங்கதிய சந்திக்கு கொண்டு வந்து விட்டுடீக. செத்தவுகள பழி சொல்லி நிக்குறது நல்லா இருக்காதுன்னு எண்ணி அமைதியா இருந்திருக்காக புள்ள. இந்த குணம் ஆகுமா உங்க சொத்துக்கு ஈடு போங்ககையா” என்றார் சின்னப்பன்.
கண்ணாத்தாள்,வள்ளியப்பன்,சாலா மூவரும் பார்வையாளராக மட்டுமே நின்று இருந்தனர்.அமைதியாக இருந்தாலும் மீனாளின் பக்கம் இரு பெண்களும் ஆதரவாக நிற்க,லட்சுவின் பக்கம் வள்ளியப்பன் அரணாக நின்றதை கண்டும் காணாமல் கண்டிருந்தனர் பெரியவர்கள்.
உங்க வயசுக்கு எதையும் யோசனை பண்ணி பேசி வைக்கனும் அண்ணாமலை.முதல உங்க மனசை நேர் பண்ணி வைக.உங்களைக் கொண்டுதேன் அடுத்து வர தலைமுறை பாடம் படிக்கும் அதை எண்ணி வச்சு நடங்க” என்றார் சுப்பிரமணியன் பேச்சில் அத்தனை கடுமை காட்டி தான் பேசினார்.
அதுவரை அமைதியாக நடப்பதை அதிர்ச்சியுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பழனிச்சாமி அண்ணாமலையை நெருங்கி,”மாமா! வாகப் போவோம் அத்தினி தப்பையும் நம்ப வச்சுக்கிட்டு நியாயம் பேச வந்ததே தப்புதேன்” என்றவர் சுப்பிரமணியனை பார்த்து.
“அண்ணே! எனக்கு என்ன சங்கத்தினு முழுசா விளங்கள, ஆனா மாமா சொத்து மாறி போச்சு வாக மச்சான்னு சொல்லவும் தேன் நான் போனேன்.என் யூகமும் மாமா சொன்ன கணக்காதேன் இருந்துச்சு.ஏன்னா சோமுவும் லட்சுவை சுட்டி காட்டி இவுகளும் பேசுனதை நாந்தேன்பார்த்தேன்.மாமா கிட்ட சொன்னதும் நாந்தேன்.
எந்த கெட்ட எண்ணத்தையும் வச்சு சொல்லல.ஒரு வேளை சோமு மனம் திருந்தி மீனாவுக்கு லட்சுமணனுக்கு எழுதி வச்சிருப்பாரோன்னுதேன் எண்ணி வச்சேன் அது இத்தினி பெரிய சங்கதியை கொண்டு வந்து நிறுத்தும்னு எண்ணி வைக்கல” என்று வருந்தியவரை பார்த்த சுந்தரம்.
” இதுவும் ஒரு வகைல நல்லதுதேன் பழனி உண்மை வெளில வந்துடுச்சு, எத்தினி நாள் அவுகளே சிலுவை சுமக்க சொல்லு?” என்றவர் அண்ணாமலையை முறைத்து நின்றார்.
சின்னப்பன்,”அண்ணாமலை அண்ணே போனது போகட்டும் விடுக இனி என்ன பண்ணுறதுன்னு எண்ணி வைக.முதல என்ன இடம் இருக்கு, என்ன இல்ல.எத்தினி பணம் போச்சு அதையெல்லாம் பாருக. வயசு போகுது அதுனால உங்க மருமகனை கொண்டு காரியம் பண்ணுங்க ” என்றதும் குனிந்த தலை நிமிராமல் எழுந்து நின்றவர்.
“நான் வாரேன்” என்று விட்டு செல்ல பார்க்க. அவரது தற்போதைய மனநிலையை எண்ணி யாரும் அவரை அத்தனையாகக் கேள்வி கேட்க வில்லை.அவரிடம் மறுமொழி பேசவில்லை, அவரை தடுக்கவும் இல்லை. வயதில் பெரியவராக இருந்தாலும் தவறு செய்து விட்டேன் என்று ஒப்பு கொள்ள இன்னும் மனமற்று நின்றவரிடம் இனி என்ன பேசி? என்ன பயன்?”
“பத்திரமா போய் வாக” சுந்தரம் மட்டும் வாய் திறக்க நிமிர்ந்து பார்க்க முடியாமல் திரும்பி விடு விடுவேன சில அடிகள் சென்றவரை உரக்க குரல் கொடுத்து அழைத்தான் லட்சுமணன்.
“ஐயா தாத்தா!” அவனது அழைப்புக்கு உடல் மட்டுமே பதில் பேசி நிற்க.திரும்பாமல் அப்படியே நின்றார் அண்ணாமலை.நேருக்கு நேர் முகத்தைப் பார்த்து பேசும் தைரியம் இப்போது அவரிடம் இல்லை.
“எங்க ஐய்யனை கொண்டு இனி எந்தக் காலத்துலையும் உரிமை பேசி நிற்க மாட்டேன். நீக இனி பயந்துக்க வேணாம் ஏன்னா உங்க பரம்பரை சொத்து பேசி நிற்கிறத விட. எங்க ஆத்தா உழைப்பு பல மடங்கு சொத்து பேசி நிக்குது.அதுனால பயந்துக்க வேணாம் என்ன?” என்றதும் கண்களை மூடி திறந்தவர் மீண்டும் செல்ல பார்க்க.
“ஐயா தாத்தா!” மீண்டும் அதே போல் அழைக்க இந்த முறை சடாரென திரும்பி பேரனை நேர் கொண்டு பார்க்க அவனும் அவரது கண்களை கூர்ந்து பார்த்து..
“எப்பவும் உங்க பேரந்தேன் மன்னிக்கிற அளவு மனசில்லை, ஆனா மறக்குற அளவுக்குக் கொஞ்சமா இருக்கு” என்றதும் இடது விழி ஓரம் நீர் கசிய சில நொடிகள் அவனை ஆழ்ந்து பார்த்தவர் மறுநொடி நிற்காமல் நடந்து விட்டார்.
அண்ணாமலை பின்னே வள்ளி, அவளுடன் துணை நின்றவர், பழனியப்பன் என்று அனைவரும் சென்று இருக்க.எஞ்சி நின்றது லட்சுவின் குடும்பம் அந்த மூன்று பெரியவர்கள் மட்டுமே.
“மீனா தங்கம் போ புள்ளைக்குச் சுத்தி போடுக பாவி பைய என்ன காரியம் பண்ணி வச்சிருக்கான்” சுந்தரம் சோமுவை எண்ணி தலையை உலுக்கி வைக்க.
“உண்மைய அப்பவே சொல்லி வச்சுத் தீர்வு கண்டிருந்தா மீனா வாழ்க்கை பொழைச்சுக்கிடக்கும்” என்றார் சின்னப்பன்.
“அந்த எண்ணமே அவுகளுக்குக்கு இல்லையே சுயநலமா அவுகளை மட்டுமே வச்சு எண்ணி வச்சிருக்காக சாகும் போது கூட எண்ணத்தை பாரும் ” சலிப்பாக தலையை ஆட்டி கொண்டார் சுந்தரம்.
இத்தனை நேரம் அமைதியாக இருந்த வள்ளியப்பன் மெதுவாக லட்சுவை நெருங்கி அவன் எதிர்பாரா சமயம் அனைத்து கொள்ள.இதற்காகவே காத்திருந்தவன் போல அவரை இறுக்கி அனைத்துக் கொண்டான் லட்சுமணன்.
இத்தனை நேரம் அழுத்திய பாரம் தற்போது குறைவது போல் இருந்தது அவனுக்கு.இவர்களது பிணைப்பை ஆச்சிரியமாகப் பார்த்து நின்றனர் பெரியவர்கள்.அதன் பின் கொஞ்சமாகப் பேசி நிறைவாக விடை பெற்று.இனி எல்லாமே சுபம் என்றளவில் காரைக்குடி நோக்கி சென்றனர் ஐவரும்.
error: Content is protected !!