Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

19. தாமரை - பாறையில் மலர்ந்த தாமரையே

பாறையில் மலர்ந்த தாமரையே! 16

சந்தான லஷ்மி வந்து ஏறியதும் காரை ஸ்டார்ட் செய்தான் வாத்சல்யன்.

என்றைக்குமில்லாத திருநாளாக இன்று கணவனின் முகத்தை குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தவள்.. “முகத்தை இப்படி உர்றுன்னு வச்சுக்காதீங்க வாத்து.. பார்க்க சகிக்கல..!” மூக்கை சுருக்கியபடி அவன் கன்னம் கிள்ளினாள்.

வெகு நாள் கழித்து மனைவியின் துள்ளல் உற்சாகம்.. அவனுக்குள் நிம்மதியை தந்தாலும்.. அவள் கேட்ட கோரிக்கை கைகேயி தசரதனிடம் வேண்டிய வரத்தை விட மோசமானது என்ற உண்மை அவ்வப்போது மனதோடு மோதி கோபத்தை வரவழைக்க.. அவள் மகிழ்ச்சியில் பங்கு கொள்ள முடியாது.. இறுகித் தெரிந்த முகத்தோடு அமர்ந்திருந்தான் வாத்சல்யன்.

“என்ன மேடம்! அந்த வீட்டுக்கு போயிட்டு வந்த மாதிரி தெரியுது..!” மனைவியின் இந்த செயல் சுத்தமாக பிடிக்கவில்லை. ஆனாலும் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டிய நிலை..



Advertisement

“ஆமா..! அங்க போய் அவங்க குடும்ப நிலவரம் என்னன்னு தெரிஞ்சிட்டு வந்தேன்..”

“எதுக்காம்..! அதான் நீ உன் முடிவுல உறுதியா இருக்கியே! அப்புறம் எவன் குடும்பம் எப்படி போனா நமக்கென்ன..?” வருத்தமும் எகத்தாளமும் வழிந்தோடிய வாத்சல்யனின் குரல் லஷ்மியின் முக பாவனையை மாற்றியது.

“ஏன் இப்படி வார்த்தையால காயப்படுத்தறிங்க வாத்சா..! எல்லாத்துக்கும் ஒத்துப்பட்டு நீங்க சரின்னு சொன்ன பிறகுதானே நான் அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்க ஆரம்பிச்சிருக்கேன்.”

Advertisement

“ஆமா..! சரின்னு சொன்னேன். எப்பவும் உன் கூட நிப்பேன்னு சொன்னேன்.. ஆனாலும் மனசாட்சி குத்திட்டே இருக்கு.. என்னால நார்மலா இருக்க முடியல சந்தா..!”

Advertisement

“இவ்வளவு பாரத்தை மனசில வச்சுக்கிட்டு எனக்காக நீங்க எதுக்கும் துணை நிக்க வேண்டாம்.. நடக்கறது நடக்கட்டும்.. என் மனக்குமுறலை உங்க கஷ்டமா பார்த்திருந்தா.. நான் வேற நீங்த வேற இல்லைன்னு நினைச்சிருந்தா.. இப்படி குற்ற உணர்ச்சி பாவம் புண்ணியம்னு என்கிட்ட கதை பேசிட்டு இருக்க மாட்டீங்க..! எத்தனை காலம் மாறினாலும் பொம்பளைங்க வலியை அந்த ஆம்பளைங்களால புரிஞ்சுக்கவே முடியாது..”

“மறுபடியும் ஆரம்பிக்காத..! எனக்கு கொஞ்சம் டைம் கொடு..! கண்டிப்பா கொஞ்சங் கொஞ்சமா மனச மாத்திக்க முயற்சி பண்றேன். அதுவரைக்கும் தேவையில்லாம சண்டை போட்டு உன்னை கஷ்டப்படுத்திகிட்டு என்னையும் வேதனைப்படுத்தாதே..!”

சந்தா முகம் கடுகடுக்க.. மறுபக்கம் திரும்பிக் கொண்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

Advertisement

“சரி சொல்லு அந்த வீட்டுக்கு போனியே எதுக்கு..?”

“அதான் சொன்னேனே! அன்னைக்கு அவங்க சண்டை போட்டதுல மனசு கேக்கல.. ஏதாவது உதவி வேணுமானு கேட்டுட்டு அப்படியே அந்த குடும்ப நிலவரம் என்னன்னு பாத்துட்டு வரலாம்னு போனேன்.”

“என்ன குடும்ப நிலவரம்.. மூணு குழந்தைங்க..! அழகான குடும்பம் சந்தோஷமா வாழ வேண்டியதுதானே..! எல்லாரும் பார்க்க வாசல்ல நின்னு சண்டை போடற அளவுக்கு அப்படி என்ன பிரச்சனையாம் அவங்களுக்குள்ள..?”

“அந்த பொண்ணு பேரு மீனாட்சி.. அவளோட கணவர் ரொம்ப குடிக்கிறாராம்..! வாங்கற சம்பளத்தையெல்லாம் ஒயின்ஷாப்புக்கு அழுதுட்டு வர்ற மாதிரி தெரியுது.. குழந்தைகளோட படிப்புச் செலவு வீட்டு வாடகை மளிகை எல்லாத்தையும் தனி ஆளா சமாளிக்க முடியலன்னு அழறா.!”

“அதானே! எல்லாரும் என்னை மாதிரி பொறுப்பான புருஷனா இருந்துடுவாங்களா..?”

“ஹலோ.. வாத்து! நீங்க ரொம்ப உன்னதமான புருஷன்னு ஒன்னும் தம்பட்டம் அடிச்சுக்க வேண்டாம். பொறுப்பா இருக்கறதும் நல்லவனா வாழறதும் உலக மகா சாதனை இல்லை.. அது மனுஷனா பொறந்த ஒவ்வொருத்தவனோட கடமை.. இந்த உலகத்துல ஆடு மாடு கோழி.. ஏன் ஈ.. எறும்புக்கெல்லாம் கூட அது படைக்கப்பட்டதற்கான ஒரு பொறுப்பும் கடமையும் இருக்கு.. எல்லாம் அதுங்களோட வேலையை சரியா செய்யுதுங்க.. ஆனா மனுஷன் மட்டும் தேவையில்லாத உலக ஆசைகளில் மூழ்கி போய் தன்னோட கடமையை மறந்துடறான்..”

“ஆத்தா.. போதும் லக்சர்.. தெரியாம சொல்லிட்டேன் என்னை மன்னிச்சிடு..”

“ப்ச்.. என்னை பொறுத்த வரைக்கும் குடும்பத்தையும் குழந்தைகளையும் நல்லபடியா பாத்துக்க முடியாம அவங்க நிம்மதியை கெடுத்து தினம் தினம் சித்திரவதை செய்யற இந்த மாதிரி ஆளுங்க மனுஷ வகையறாலயே சேர்த்திக்க இல்ல..!”

“கூல் சந்தா..! பாதி ஆம்பளைங்க இப்படித்தான் இருக்காங்க.. குடிப்பழக்கத்தினால குடும்பமே நாசமா போகுது.. நீ சொல்றதும் சரிதான்.. என்னோட சந்தோஷம்தான் முக்கியம்னு நினைக்கிறவங்க எதுக்காக கல்யாணம் பண்ணிக்கணும் குழந்தைகளை பெத்துக்கணும். அவங்களை நல்லபடியா வளர்க்கணும் பாதுகாப்பா ஒரு எதிர்காலத்தை அமைச்சுக் கொடுக்கணும்னு ஒரு பயம் வேண்டாமா..! என்ன தகப்பன் இவன்.?”

சந்தான லஷ்மி அமைதியாக இருந்தாள்.

“ஆனாலும் நான் நல்ல புருஷன்தான் நீ அதை ஒத்துக்கத்தான் வேணும்.”

“நல்ல புருஷன் பொண்டாட்டி சொன்னதுக்கு மறு பேச்சு பேசாம அவளோட ஆசையை நிறைவேத்துவார்.. அவ மனசை புரிஞ்சுக்குவார்..”

“இப்ப என்னடி உன் மனச நான் புரிஞ்சுக்கல..! அதான் நீ சொன்னதுக்கேல்லாம் தஞ்சாவூர் பொம்மை மாதிரி தலையாட்டிக்கிட்டே இருக்கேனே..! என் மனசுக்கு முரண்பட்டு அது தப்புன்னு தெரிஞ்சாலும்.. உனக்காக உன் கூட நிக்கறேன் அது போதாதா..!”

“அதுதான் இங்க பிரச்சனையே..! உங்களுக்கு சுத்தமா இதுல இஷ்டமில்லை.. ரெண்டு பேரும் மனசார ஆசைப்பட்டு ஒன்னு சேர்ந்து அந்த வரத்தை கேட்டாத்தான் கிடைக்கும்னு உங்களுக்கு தெரியும். விருப்பமில்லாம என் கூட வர்ற மாதிரி நடிச்சு.. என் ஆசையை பொய்யாக்க பாக்கறீங்க..!”

“சரி இத பத்தி நாம அப்புறமா பேசுவோம்.. நீ அந்த குடும்பத்தை பத்தி சொல்லு. சோ இப்போ அவங்களுக்கு பணப்பிரச்சனை..!”

“ஆமா..! அதுமட்டுமில்லை குடும்பத்தில் கொஞ்சம் கூட நிம்மதி இல்லை.. அந்த பொண்ணால மூணு குழந்தைகளை வைச்சு சமாளிக்க முடியல.. வேலைக்கு போகணும் பிள்ளைகளை பாக்கணும்.. சமைக்கணும் வீட்டு வேலை செய்யணும்.. எதுலயுமே அவ புருஷன் கூட துணை நிக்கறதா தெரியல.. இந்த மாதிரி சூழ்நிலையில் வளரக்கூடிய குழந்தைகளோட மனநிலைன்னு எப்படி இருக்கும்னு யோசிச்சு பாருங்க.?”

“அந்த காலத்துல இதைவிட மோசமான சூழ்நிலையில் வளர்ந்த குழந்தைகள் இருக்காங்க.. இப்படிப்பட்ட குடும்ப சூழ்நிலையிலிருந்து வர்ற குழந்தைகள்தான் படிப்போட அருமையை உணர்ந்து வாழ்க்கையில முன்னேறுவாங்க.”

“அதுக்கான ஊக்கத்தையும் உத்வேகத்தையும் கொடுக்க வேண்டியது பெத்தவங்களோட கடமை இல்லையா..? இங்க ரெண்டு பேரும் நவகிரகம் மாதிரி ஆளுக்கொரு திசையில் நின்னா குழந்தைங்க எப்படி தன்னுடைய எதிர்காலத்தை பற்றி நினைச்சு பார்க்கும். இதுல அந்த மூணாவது குழந்தை தீப்தியை மீனாட்சி ஒரு சுமையாத்தான் நினைக்கிறா..!”

“பெத்தவங்க என்னிக்குமே தான் பெத்த குழந்தைகளை சுமையா நினைக்க மாட்டாங்க சந்தா..”

“இல்ல.. அவ வாயால சொன்னதை கேட்டேன். இந்த குழந்தை பிறக்காமலேயே இருந்திருக்கலாம் அப்படிங்கற மாதிரிதான் அவ பேச்சு இருந்தது..”

“அது ஆத்தாமையில வந்த வார்த்தைகளா இருந்திருக்கலாம்.. இதையெல்லாம் வச்சு நாம எந்த முடிவுக்கு வர முடியாது..”

வெய்ட்! எந்த முடிவுக்கும் வர முடியாதுன்னா என்ன சொல்ல வரீங்க நீங்க..”

“நமக்கு குழந்தை வேணும் அதனால அந்த கனவு தேர்ந்தெடுத்து கொடுத்த பாதையில போறோம்.. ஆனா அந்த குடும்பத்தோட இயலாமையை சாதகமா வச்சு அதுக்காகத்தான் இப்படி ஒரு முடிவு எடுத்தோம்னு சொல்றது எனக்கு சரின்னு படல..!”

“வாட் யூ மீன்?”

“நீ எடுத்த முடிவு நியாயமானதுன்னு காட்டிக்க காரணங்களை தேடறியா சந்தா..?”

“காரணங்களை நான் தேடல அங்க நிலவரமே அப்படித்தான் இருக்கு.. அந்த குழந்தை அப்படி ஒரு சூழ்நிலையில் வளர்றது நல்லது இல்லைன்னு எனக்கு தோணினது இதனாலத்தான்.! தீப்தியை கவனிக்கவோ அன்பு செலுத்தவோ அக்கறை காட்டவோ அங்கு யாருக்கும் நேரமில்லை.. இப்படி ஒரு சூழ்நிலையில் வாழக்கூடிய குழந்தையை குடும்பத்திலிருந்து பிரிச்செடுத்து, நல்ல அன்பான அப்பா அம்மாவுக்கு பிறக்க வச்சு, ஒரு ராஜகுமாரியா வளரனும்னு கடவுள் ஆசைப்படறார். அதை தடுக்க நமக்கென்ன உரிமை இருக்கு.!”

வாத்சா சிரித்தான்.. “இங்கே எல்லாருக்கும் ஒரு காரணம் இருக்கு சந்தா..! குற்றவாளிகள் கூட தன் பக்கம் நியாயமா ஒரு காரணத்தை வச்சிருப்பாங்க.. நீயும் அப்படித்தான் உனக்கு ஏத்த மாதிரி நியாயம் கற்பிக்க பாக்கற..”

“அப்போ என்னை குற்றவாளின்னு சொல்றீங்களா..? இல்லை கொலைகாரின்னு சொல்ல வரீங்களா..?” அவள் சீறத் தொடங்கினாள்.

“உன் ஆபீஸ் வந்துடுச்சு இறங்கு..!”

சந்தா தலை தாழ்ந்து அமைதியாக அமர்ந்திருந்தாள்.

“ஏய்.. என்னாச்சு..! இறங்குமா எனக்கும் நேரமாகுது..!”

அவள் கண்களிலிருந்து சொட்டு சொட்டாய் வடிந்த கண்ணீர் உள்ளங்கரத்தில் விழுந்தன..

“ஏய் என்னடி ஆச்சு..! நான் ஏதாவது தப்பா பேசி உன்னை ஹர்ட் பண்ணிட்டேனா..?” அவள் முகத்தை தன் பக்கமாக திருப்பி நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் வாத்சா.

“வேண்டாம் வாத்சா..! நமக்கு அந்த குழந்தை வேண்டாம்..”

“ஏன்டி? என்ன தீடீர்னு..! நான் சொன்னதுனாலயா..?” அவள் முகத்தை நிமிர்த்தி தன் கண்களை பார்க்கச் செய்தான்.

“ஒரு பிள்ளை இல்லாட்டி போனாலும்.. நம்ம ரெண்டு பேருக்கும் இடையில வேற எந்த பிரச்சனையும் இல்லை வரவிட்டதும் இல்லை.. மத்தவங்க என்ன சொன்னாலும் குழந்தை இல்லாத குறை தெரியாம என்னை உயிரோடு வாழ வச்சுட்டு இருக்கறது உங்களோட அன்பும் காதலும் மட்டும்தான்.. உங்களோட சண்டை போட்டாலும் நாள் கணக்குல பேசாம இருந்தாலும்.. நமக்கிடையில் உள்ள காதல் அப்படியே இருக்கும்னு ஒரு நம்பிக்கையிலதான் இந்த உயிர் உடம்புக்குள்ள ஒட்டிக்கிட்டு இருக்கு..”

“ஏய்.. என்னடி..?”

“இருங்க.. நான் பேசி முடிச்சிடறேன்.. அந்த குழந்தையை வரமா வாங்கி உங்களோட அன்பையும் காதலையும் இழந்திடுவேனோன்னு எனக்கு பயமா இருக்கு..”

“அசடு.. பைத்தியம் மாதிரி பேசாதடி..”

“அதுதான் உண்மை..! இப்பவே பாருங்க.. உங்க கண்கள் என்னை குற்றவாளியா பார்க்க ஆரம்பிச்சிட்டது.. நான் இரக்கம் இல்லாதாவனு நினைக்கறீங்க.. ஒரு கட்டத்துல கொஞ்சம் கொஞ்சமா உங்க அன்பு காணாம போற நேரத்துல.. நான் தப்பு செஞ்சுட்டதா பெரிய குற்ற உணர்ச்சி எனக்குள்ள வந்துடும்.. என்னால குழந்தை இல்லாம கூட வாழ முடியும்.. ஆனா என் வாத்சாவோட காதல் காணாமல் போகற அந்த நொடி நான் அப்பவே செத்துடுவேன்..”

பதறிப் போனவனின் கரம் அவளை வலிமையாய் இறுக அணைத்துக் கொண்டது.

அவன் ஏதோ சொல்ல வாயேடுக்க பேசவிடாமல் மேற்கொண்டு தொடர்ந்தாள் சந்தா.

“எனக்கு நீங்க தான் முக்கியம்.. ஏதோ நான் அனுபவிச்ச வேதனை வலி.. இந்த வேகத்தில் அப்படி ஒரு முடிவெடுக்க துணிச்சிட்டேன்.. அரை மனசா உங்க உணர்வுகளை கொன்னுட்டு எனக்காக துணை நிற்கணும்னு நீங்க முடிவெடுக்கும் போது.. உங்களுக்காக என் வெறுப்பு வெறுப்புகளை ஆசைகளை விட்டுக் கொடுக்கலாம்னு தோணுது..”

“சந்தா.. நான் அப்படி சொல்ல வரலடா.. தயவு செஞ்சு நான் சொல்றத கொஞ்சம் கேளு..!”

“திரும்பத் திரும்ப நான் சொல்றதும் அதே விஷயம்தான் வாத்சா..! என்னால குழந்தை இல்லாத வலியோட காலம் முழுக்க வாழ்ந்துட முடியும்.. நான் உங்க முன்னாடி ஒரு குற்றவாளியா உங்க வெறுப்பை சுமந்துகிட்டு ஒரு நிமிஷம் கூட உயிரோடு இருக்க முடியாது.. நமக்கு அந்த குழந்தை வேண்டாம்.‌ அவ எங்க இருந்தாலும் சந்தோஷமா இருந்துட்டு போகட்டும். இனிமே அதை பத்தி பேச வேண்டாம் யோசிக்க வேண்டாம். விட்டுடலாம்..!” கண்ணீரோடு சிரிக்க முயன்று.. எச்சில் கூட்டி விழுங்கியவள்.. மெல்ல எக்கி.. அவன் நெற்றியில் முத்தமிட்டு விட்டு காரை விட்டு இறங்கி போனாள்.

தொடரும்.

5 thoughts on “பாறையில் மலர்ந்த தாமரையே! 16

  • Revathy Dhanda

    இவங்க பிரச்சனை நல்லபடியா சுமூகமா முடியனும், இரண்டு பேருமே நல்லங்க அதா ரொம்ப கஷ்டபடறாங்க 🤧🤧. சந்தா வோட வலி, கண்ணீர தீர்த்து வைக்க சீக்கிரம் ஒரு நல்லது அவங்களுங்கு நடக்கட்டும்,

    Reply
  • Krishnaveni

    ஒரு பக்கம் இந்த குழந்தை பிரச்சினை வந்து மனசு ரொம்ப அழுத்தி கட்டுக்கடங்காத வேதனையை தருது 🤧🤧🤧
    ஆனா இன்னொரு பக்கம் இவங்க ரெண்டு பேரோட இந்த அபரிதமான அந்நியோன்யம் புரிதல் காதல் இதை எல்லாம் பார்க்கும் போது ரொம்ப பெருமையா அதே சமயம் பொறாமையாவும் இருக்கு 😍😍😍
    ரொம்ப ரொம்ப சிக்கலான இந்த சூழ்நிலைக்கு எப்படி முடிவு வரும் எப்படி கொண்டு போக போறீங்க ன்னு ரொம்ப ஆவலா இருக்கு 🙏🏼🙏🏼🙏🏼

    Reply
  • Shilaja sankaran

    ரொம்ப கஷ்டமான சூழ்நிலை தான் இரண்டு பேருக்கும், இதில் இருந்து பாவம் எப்படி மீண்டு வரப்போறாங்களோ இருவரும், இவங்களோட அன்பை பார்க்கும் போது ரொம்ப நிறைவாக இருக்கு❤️❤️

    Reply
  • Super super super ❤️

    Reply
  • Divyalakshmi Sugumar

    Vatsa and santha
    Evako😟porattam
    Adhaiyum face panna avanga ready irundhallum
    Indha ulagam avangalai summa irukka vidavae vidathu

    Evalo Mentally disturb pannudhu avanga life ah

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!