Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

68. சரண்யா கீதா - உளமாற உனதாகிறேன்

உளமாற உனதாகிறேன் – 8

உளமாற உனதாகிறேன் – 8

 

மாடியில் இருந்து புது மலராய் இறங்கி வந்தாள் இனியாள். வரவேற்பறையில் அக்கா மாமா அமர்ந்து இருப்பது தெரிந்தும் அவளின் பார்வை வாசல் பக்கம் செல்ல… அங்கோ வெறிச்சோடி இருந்தது… பெற்றோர் வரவில்லை என்ற நிதர்சனம் உரைக்க அனிச்சை மலராய் முகம் சுருங்கிட… தீடிரென்று தன் தோளின் மீது விழுந்த கரங்களில் தானாய் முகத்தை மேல்நோக்கினாள்.

 



Advertisement

“இனி உனக்கு எக்ஸ்பிரஸிவ் ஐஸ் தான்… பட் அதுக்காக என்னை டெம்ப்ட் பண்ணாத… ஐ கான்ட் கன்ட்ரோல்…” என்றவனின் இதழ்கள் அவள் செவி மடலில் உரச… தானாய் முகம் சூடாகியது…

 

நிச்சயம் பார்ப்போர் யாருக்குமே இது கட்டாய கல்யாணமா என்ற எண்ணத்தை தோற்ற வைப்பது போன்று இருந்தது அவர்களின் செயல்… அப்படி தான் பெருமாள் முதல் மங்களம் வரை அனைவரும் இருவரையும் ஆராயச்சியாக பார்த்துக் கொண்டு இருக்க… சூழல் உணர்ந்து அவனிடம் இருந்து விலகி நின்றாள் இனியாள்.

Advertisement

 

Advertisement

“வாக்கா வாங்க மாமா…” என்றவள் என்ன செய்வது என்று தெரியாது அமைதியாக நின்று விட்டாள்.

 

“எப்படி இருக்க டா… நீ ஓகே யா” என்றபடி பிரபா அவளின் கன்னம் கொண்டவள்…

Advertisement

 

“நல்லா இருக்கீங்களா தம்பி” என்று வாசுவிடமும் கேட்டுக் கொண்டிருக்க…  அறையில் இருந்து வெளி வந்தார் வளையாபதி. அவரை கண்டதும் தானாய் இருவரும் எழுந்து நிற்க… வாசுவோ கால்களை ஆட்டியபடி அமர்ந்து கொண்டு இருந்தான். அதை கண்டு பல்லை கடித்தாலும்… அமைதியாய் சுற்றம் நோக்கிட… தானாய் அவரின் முகம் சுருங்கியது…

 

“ஏய்யா பெருமாளு… எங்க உன் மாமன்… மறுவீடு அழைச்சிட்டு போக தானே வந்தீங்க… பெத்தவங்க வராம இதென்ன புதுசா… அவனவன் என் வீட்டுல சம்பந்தம் வைச்சுக்க போட்டி போட்டு திரிஞ்சான்… போயும் போயும் உன் குடும்பத்துல பொண்ணு எடுத்தேன் பாரு என்னை சொல்லனும்…”

 

“அய்யோ தலைவரை அப்படியென்றால் பேசாதீங்க… சின்னவ ஓடிப் போனதுமே கொஞ்சம் மனுஷன் இடிஞ்சு போயிட்டார்… இதுல கடைக்குட்டிக்கு தீடிர்னு கல்யாணம் ஆனதுல… கொஞ்சம் வருத்தத்துல இருக்காரு”

 

“என்ன வருத்தம்… ராஜாவாட்டம் பையன் இருக்க உன் மாமனுக்கு குடையுதோ”

 

“அது… அது… அப்படியில்ல தலைவரே” என்று மென்று முழுங்கிய பெருமாள் மனதுக்குள் மாமனை வறுத்து எடுத்தார்… பின்னே எத்தனை முறை ‘வாங்க மாமா… நீங்க வரலைன்னா மரியாதையா இருக்காது’ என்று அழைத்தும்…

 

“இல்ல மருமவனே… நீங்களும் பிரபாவுமே போயிட்டு வாங்க… எனக்கு அந்த வீட்டுக்கு வர மனசு ஒப்பல” என்று முற்றிலும் மறுத்து ஒதுங்கி கொள்ள… மெருமாளோ தானே ராஜாய் என்பதை பெருமையாய் இங்கு வந்தவர்… வளையாபதியிடம் வாங்கி கட்டிக் கொண்டார்.

 

“என்ன சகல… இப்படி மெண்டு முழுங்குறிங்க… பொண்ணு கொடுத்தே ஆகனும்னு மிரட்டுனது நீ… இப்போ என்னமோ நாங்க வந்து உங்க பையனை கேட்டு நாயை அலைஞ்ச மாதிரி பேசுறன்னு திருப்பி கேளுங்க… ம்ம்…” என்று எடுத்து கொடுக்க…

 

“என்னய்யா பெருமாளு… இதுதான் உன் மனசுல ஓடுதா… வாயை தொறந்து சொல்லு…” என்றதில் பதறி தான் போனார் பெருமாள்.

 

“தம்பி தான் அப்படி சொல்லறாருன்னா… நான் அப்படி நினைப்பேங்களா தலைவரே…” என்று பம்மிட மனதிலோ ‘அப்பனும் மவனும் என்னை ஒரு வழியாக்காம விடமாட்டாங்க போல’ என்று ஓடிக் கொண்டிருந்தது.

 

இதோ அனைத்தும் முடிந்து இனியாளின் வீட்டிற்கு காரில் பயணித்து கொண்டிருக்க… அவ்வமைதியை பிரபாவே கலைத்தாள்…

 

“அப்புறம் தம்பி… இனிமே இங்கே தான்னு சொன்னாங்க… ஏன் தம்பி சென்னைல இருந்து நீங்களே மாற்றல் வாங்கி வந்துட்டிங்களா” என்ற கேள்வியில் தானாய் அவன் உடல் இறுகியது. அவனின் தந்தை தானே அவனின் இடமாற்றத்திற்கு பின் நிற்பது! அதை சொல்ல பிடிக்காமல் வெறுமனே தலையை மட்டும் ஆட்டினான்.

 

“நீங்களும் படிக்கவே சென்னைக்கு வந்துட்டிங்கன்னு உங்கம்மா சொன்னாங்க… ஆனா பாருங்க நாங்க உங்களை பார்த்ததே இல்ல… எங்க தங்கியிருந்திங்க…”

 

“சாய்பாபா காலனி நகர்ங்க”

 

“அட நம்ம  பக்கம் தான்… ஆமா எங்க காலேஜ் முடிஞ்சிங்க” என்றிட அவனும் கல்லூரி பெயரை கூறினான்…

 

“அட மறுபடியும் பாருங்களேன்… இனியாவும் அங்கே தான் பி.ஏ முடிச்சா… பி.ஏ முடிச்சிட்டு அப்புறம் தான் பி.எல் சேர்ந்தா…” என்று

ஆச்சரியப்பட… அவனின் விழிகளோ இனியாளின் மீதே நிலைத்தது… அவளின் படபடப்பு தன்மை…  எங்கே அவன் பின்னே சுற்றியதை சொல்லி விடுவானோ என்ற பரிதவிப்பு எல்லாம் அவளின் முகத்தில் தெரிய தானாய் அவனிடம் புன்னகை.  இருவரின் முதல் சந்திப்பும் அவன் நினைவிடுக்கில் மெல்ல தோன்றியது!

 

•••••••••••••

 

அன்று!

 

சில்லென்ற காற்றும்… இளம் வெயிலும் நன்றாய் இருக்க… அதனை சுகித்தபடியே… அந்த அப்பார்ட்மெண்ட் பூங்காவில் உட்கார்ந்து கொண்டிருந்தாள் இனியாள்.

 

அவள் விழிகளோ மொபைல் போனை வெறித்திருந்தது… அதில் ஏதோ கொரியன் டிராமா ஓடிக் கொண்டிருக்க கவனத்தை அதில் வைத்து கொண்டிருந்தாள்…

 

ஆனால் மனம் மட்டும் ‘எங்க இந்த எருமையை இன்னும் காணோம்’ என்று தோழியை திட்டிக் கொண்டிருந்தது…

 

ஒரே மாதிரி உடை அணியலாம் என்று தோழி ஆர்டர் போட்டிருக்க… அதை இன்று அணிந்துக் கொள்ள வாங்கி போகவே வந்தாள். அவள் வீட்டில் இருந்து அத்தனை தூரம் இல்லை என்பதால்…  நடந்தே வந்திருந்தவள் பார்கில் அமர்ந்திருந்தாள்.

 

அப்போது தான்… தீடிரென்று அவள் பாதங்களின் முன்னே ஒருவன் வந்து விழ… பயந்து தான் போனாள் அவள்…

கீழே விழுந்தவனின் டீசர்ட்டை ஒரு முரட்டு கரம் ஒன்று  தூக்கிட… மெல்ல அவன் முகம் நோக்கினாள் இனியாள்.

 

“தொலைச்சுபுடுவேன் ராஸ்கல்… படிக்கிற வயசுல என்னடா காதல் வேண்டி கிடக்கு… அதுவும் ஸ்கூல் படிக்கிற பொண்ணை… முடியாதுன்னு சொன்னா ஆசிட் அடிப்பியாம்… ஆசிட் எடுக்க கை இருந்தா தானே” என்று கையை திருப்ப… அவன் அலறிய அலறலில் எல்லாரின் பார்வையும் இங்கே குவிந்தது…

 

“வேணாம் நான் காலேஜ் ஸ்டுடன்ட்… என் மேல கையை வைச்சிங்க… அப்புறம் நடக்குறதே வேற” என்று அப்போதும் அவன் மிரட்ட…

 

“படிக்கிற பையன்ங்கிறதால மட்டும் இந்தளவோடு விடுறேன்… இல்ல இந்நேரம் நீயிருக்க வேண்டிய இடமே வேற” என்ற மேலும் வெளுத்துவிட்டே அவனை விட… விட்டால் மோதுமென அவனும் ஓடிவிட்டான்.

 

அதற்குள்ளே… ஒரு முதிய பெண்மணியும்… பள்ளி சீருடையில் ஒரு சிறுமியும் அவனை நெருங்கியிருந்தனர்…

 

“ரொம்ப நன்றி தம்பி… இனி நான் ஸ்கூலே போலன்னு புள்ள வந்து அழுந்ததும் என்ன செய்றதுன்னு தெரியாம முழிச்சிக்கிட்டு இருந்தேன்… நல்ல வேளை நீங்க வந்தீங்க” என்று கையெடுத்து கும்பிட… அவனோ அவரை முறைத்து தள்ளினான்…

 

“ஏன்க்கா டெய்லி வேலைக்கு வரும்போதே புள்ளையையும் கூட்டிட்டு வந்திடுறிங்க… அதை தப்பு சொல்லல… புள்ளையை இங்க தனியா பார்க்ல விட்டுட்டு நீங்க அங்க வேலை செஞ்சா என்ன அர்த்தம்… அதுதான் கண்டவனும் வந்து இப்படிப் லவ் பண்றேன்னு புள்ளையை தொல்லை செய்றான்…”

 

“என்ன செய்றது தம்பி… நான் ஒரு வீட்டுக்கா வேலைக்கு வரேன்… புள்ளையை அந்த வீட்டுல விட… வீட்டுலேயும் தனியா விட்டுட்டு வர முடியாது என் பொழப்பு அப்படி” என்று வருந்த…

 

“சரிக்கா… நான் நம்ம அப்பார்ட்மெண்ட்லே எதாச்சும் ஏற்பாடு பண்றேன்… சாய்ங்காலம் வந்து அந்த பைனோட‌ அப்பா அம்மாக்கிட்டேயும் பேசிடுறேன்… அப்போ தான் கொஞ்சம் பயம் இருக்கும்” என்றவன் தங்களையே விழி சிமிட்டாது பார்த்துக் கொண்டு இருப்பவளை கண்டு… ‘என்ன’ என்று புருவம் தூக்கிட…

 

‘ஒன்னுமில்ல’ என்ற ரீதியாக தலையாட்டியவள் அங்கிருந்து வேகமாக செல்ல…

 

“ஒருநிமிஷம்” என்றவனின் குரலில் அப்படியே நிற்க… “கொலுசு உன்னுடையதா” என்ற கேள்வியில் அப்போது தான் கீழிருக்கும் கொலுசை பார்த்தவள்… வேகமாக எடுத்து கொண்டு சென்றுவிட்டாள்… தோழியிடம் ஆடை வாங்க வேண்டும் என்பதையும் மறந்து…

 

•••••••••••

 

கல்லூரியே அன்று ஜேஜேவென்று இருந்தது… புதிய மாணவர்களை வரவேற்கும் விழா நடக்கவிருப்பதால் எல்லாரும் சுற்றிக் கொண்டு இருந்தனர்…

 

“அடியேய்… அப்பார்ட்மெண்ட் பார்க்கில இருக்கேன்னு கால் பண்ண… நான் கீழ வந்து பார்த்தா ஆள காணோம்… போனை போட்டாலும் எடுக்கல…” என்று வந்ததும் திட்டிய தோழி நந்தினியை கண்டு முறைத்தாள் இனியாள்…

 

பின்னே பத்து நிமிடம் ஆகியும் அவள் தான் கீழ் வரவில்லை… அப்படி வந்திருந்தால் காலை நிகழ்வை பார்த்திருக்கவே தேவையில்லை… அந்த நெடியவனையும் சந்தித்திருக்க வேண்டிய அவசியமில்லை… இப்போதும் அவனுடைய ‘என்ன’ என்ற புருவசைப்பு நினைவில் தோன்றிட… தோழியை அடிக்க பாய்ந்தாள்… அதற்குள்ளே

‘எல்லாரும் ஆடிட்டோரியமில்  அசம்பல் ஆகுங்க’ என்ற அறிவிப்பில் தோழியோடு அங்கு சென்றாள்.

 

நிகழ்ச்சியும் ஆரம்பித்தது. முதலில் வந்திருந்த விருந்தினர்கள் எல்லாம் பேசி முடித்திட… கலை நிகழ்ச்சியும் ஆரம்பித்தது… பாட்டு… நடனம் என அமர்க்களமாக அடுத்து இனியாள் முறையும் வந்தது…

 

புல்லாங்குழல் வாசிப்பது அவளுக்கு மிகவும் விருப்பம்… அதுவும் குழலோடு பாடல் பாடுவது மிக விருப்பம்… கேட்போர் அத்தனை பேரையும் சிலிர்க்க செய்திடும்… அப்படி தான் அவளும் “கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை…” என்ற பாடலை புல்லங்குழலில் இசைத்து முடிக்க… கரகோஷம் அதிர்ந்தது…

 

நெஞ்சம் மகிழ அதையெல்லாம் பார்த்திருந்தவளை தடதடவென்ற பூட்ஸ் சத்தம் கலைத்திட… காக்கி உடையில் கம்பிரத்தோடு அவளை தாண்டி நடந்தவன் இருக்கையில் அமர்ந்தான்… அவனுக்கான வரவேற்பும் மைக்கில் அழகாய் ஒலித்தது…

 

நமது கல்லூரியின் முன்னாள் மாணவர்… இன்று இன்ஸ்பெக்டர்… மிஸ்டர் வாசு கீர்த்தனன் அவர்களை மீண்டும் கல்லூரி அன்போடு வரவேற்கிறது!

 

அவனும் அவளின் நெஞ்சில் நீங்காது சிம்மாசனம் இட்டு அமர்ந்துவிட்டான் என்பதை அறியாது வேகமாக தன்னை உறுத்து நோக்கும் அவன் பார்வையில் இருந்து தப்பித்து கூட்டத்தில் மறைந்தாள் இனியாள்…

 

தொடரும்….

 

One thought on “உளமாற உனதாகிறேன் – 8

  • Divyalakshmi Sugumar

    Superb 😍😍😍

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!