Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதயத்தின் ஓசை கேட்குதோ ❤️ ( இரண்டாம் பாகம் )

ஓசை ❤️ 52 ( இரண்டாம் பாகம்)

வளைகாப்பு காலை நல்லபடியாக விடிய அனைவரும் சந்தோசமாக கிளம்ப ஆரம்பித்து இருந்தனர்நிரவி காலை எழுந்ததும் ரியாஸுக்கு அழைத்து பார்க்க அவன் எப்போதும் போல் எடுக்கவில்லைஅன்று போல் ஆஷா ரியாஸின் நண்பன் யார் சொல்லியும் கேட்காமல் அவளை தவிர்த்து வந்தான்

அன்று காலை மூவரும் வருவதா ஆஷா நேற்றே கூறி இருக்க அவனை பார்க்க ஆர்வமாக இருந்தாள்.. ஆனால் வந்தது என்னவோ அப்துலும் ஆஷாவும் மட்டும் தான்.. உடனே அவள் முகம் வாடிவிட்டது.. அதனை கண்ட ஆஷா பாப்பா அவனுக்கு திடீர்னு ஒரு கேஸ் வந்துருச்சு அதுனால வர முடியல.. என்று சமாதானம் கூறினார்.. அவளும் அதை ஏற்றுக்கொள்ளுமாறு தலையசைத்து விட்டு அமைதியாய் கார்த்திகாவுடன் சென்று அமர்ந்துவிட்டாள்

வாணன் பூர்விக வீட்டில் வளைகாப்பு களைகட்ட ரித்திகாவை நல்லநேரம் பார்த்து நாற்காலியில் அமர வைக்கப்பட்டாள்.. அவளுடனே சிவாவும் அமர வைக்கப்பட்டான்இருவருக்கும் நலங்கு வைக்கப்பட்டு ரித்திகாவிற்கு கண்ணாடி வளையல் போடு விட்டு அனைவரும் சென்றனர்கடைசியில் ரித்திகாவிற்கு சிவா நலங்கிட்டு தங்க வளையலிட்டு நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான்.. அதை கண்டு சிறியவர்கள் ஓவென சத்தமிட்டு தங்கள் சந்தோசத்தை வெளிப்படுத்தினர்



Advertisement

நிரவி சந்தோசமாக இருந்தாலும் ரியாஸ் பேசாமல் இருப்பது கஷ்டமாக இருந்தது.. அப்போது அவள் அருகில் எதோ அரவம் கேட்க பக்கத்தில் யார் இருக்கிறார் என்று நிமிர்ந்து பார்த்தாள்…. தன் அருகில் நின்று இருந்தவனை பார்த்து அவள் முகம் உடந்தையாக பளிச்சென்றானது..

மாமு என கூறி கொண்டே அவன் கையை பிடிக்க போக அவன் உடனடியாக அவளை விட்டு தள்ளி நின்று கொண்டான்.. அவளுக்கு அவன் வந்தடஹெய் போதுமானதாக இருக்க அநேரம் கழித்து பேசிக்கொள்ளலாம் என எண்ணி அமைதியாகிவிட்டாள்

ரித்திகாவை ஆரத்தி எடுத்து எழ வைத்தவர்கள் வேறு இடத்தில அமர வைத்து அவளுக்கு ஏழு வகை சோறு கொடுத்து சிறிது நேர ஓய்வுக்கு அனுப்பி வைத்தனர்

Advertisement

சிவா சிறிது நேரம் பரிமாறும் வேலை பார்த்தவன் பின் ரித்திகாவுடன் இருக்க சென்றுவிட்டான்அவள் கட்டிலில் சாய்ந்து கால் நீட்டி அமர்ந்து இருக்க சிவாவை பார்த்ததும் பளிச்சென்று புன்னகையை வெளிப்படுத்தினாள்..

Advertisement

ரிதும்மா கால் வலிக்குதா என்று கேட்டு அவள் பாதத்தை பார்த்தான்.. கொஞ்சம் வீக்கமாக இருக்க அவள் பாதத்தை தன் மாடி மேல் வைத்து மென்மையாக பிடித்து விட்டான்..

மாமா.. திருவிழா முடிஞ்சு கண்டிப்பா நீங்க பெங்களூர் போய் தான் ஆகனுமா.. இங்கயே இருங்களேன்என்று பாவமாக கேட்க அவன் அவளை அணைத்து கொண்டு ரிதும்மா.. இன்னும் டூ மந்த் போய்ட்டு வந்துட்டா பேபி பிறந்து த்ரீ மந்த்ஸ் ஆகுற வரைக்கும் என் பொண்டாட்டி கூட தான் இருப்பேன்.. ஓகேவா என்று கேட்டு அவள் உச்சியில் முத்தமிட்டு கேட்டான்

அவள் அமைதியாக சரி என்று தலையாட்டி அவனை அணைத்து கொண்டாள்இருவரும் அவர்களின் உலகில் இருக்க கதவு தட்டும் ஓசை கேட்டது.. அவள் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டு விட்டு கதவை திறக்க அங்கு ஜனனி நின்று இருந்தார்.. சிவா நேரமாச்சு நல்ல நேரம் முடியுறதுக்குள்ள ரித்தியை அய்யனார்புரம் அனுப்பனும்நீ வெளிய வர கூடாது.. இங்கயே இரு.. என்று கூறி ரித்திகாவை அழைத்து கொண்டு ஹாலுக்கு சென்றார்..

Advertisement

பக்கத்துக்கு ஊர் தான் என்றாலும் அவர்களை விட்டு செல்ல அவளுக்கு கஷ்டமாக இருந்ததுதன்னை கட்டுப்படுத்தி கொண்டு தன் பெற்றோர் வீட்டிற்கு சென்றாள்அடுத்த நாளே சிவாவும் அர்ஜுனன் வீட்டுக்கு வந்து இருக்க வளைகாப்பு முடிந்ததும் ரியாஸ் குடும்பம் ஊருக்கு கிளம்பி இருந்தது.. நிரவிக்கு அவனிடம் பேச நேரமே இல்லை.. அவள் எழுவதற்கு முன்பே மூவரும் கிளம்பி இருக்க அவளால் பேச முடியவில்லை.. காலையில் எழுந்ததும் அவள் தேட அவர்கள் ஊருக்கு சென்றுவிட்டரைகள் என்று தான் தகவல் கிடைத்தது.. அவள் உடனே ஆஷாவுக்கு அழைத்து என் கிட்ட சொல்லாம கூட கிளம்பிட்டீங்க.. போங்க உங்க மேல கோவம் என்று கோவம் போல் பேசினாள்

அவரும் அவளை கொஞ்சி சமாதானம் செய்து தன் மகனை வகையாக மாட்டி விட்டு இருந்தார்.. பாப்பா நாங்க உன்கிட்ட சொல்லிட்டு போகலாம்னு தான் சொன்னோம்.. ரியாஸ் தான் விடிஞ்சதும் கிளம்பலாம்னு சொல்லிட்டே.. எதுவா இருந்தாலும் அவன்கிட்ட பேசிக்கோ என்று கூறி வைத்துவிட்டார்அவளும் கோவத்தில் அவனுடன் பேசுவதை விட்டு இருந்தாள்….

அவன் தான் அவள் குரல் கேட்காமல் தவித்து போய் விட்டான்அவன் பேசாமல் இருந்தாலும் தினமும் அவனுக்கு அழைப்பது குரல் செய்தி போடுவது என இருந்தாள்.. ஆனால் இவன் தான் விடியற்காலையில் அழைத்து சென்றுவிட்டான் என தெரிந்தவுடன் இவனிடம் பேசுவதை அவள் தவிர்த்துவிட்டாள்

அவள் மேல் கோவம் இல்லை தான்..அந்த நேரத்து கோவம் தான்.. அவனே அடுத்த நாள் பேசி விடலாம் என்று தான் இருந்தான்.. ஆனால் அவள் இவனிடம் இப்படி கொஞ்சுவது பிடித்து இருந்தது.. எனவே ஊருக்கு வரும் போது பேசலாம் என இருந்தான்அடுத்த நாள் முக்கியமான கேஸ் ஒன்று இருக்க கிளம்ப வேண்டிய கட்டாயத்தில் இருவரையும் அழைத்து கொண்டு சென்றுவிட்டான்..

கேஸ் எல்லாம் முடித்து விட்டு அவள் அழைத்து இருக்காளா என்று பார்க்க அவள் அழைக்கவில்லை.. வீட்டுக்கு செல்லும் போது தான் பேச்சுவாக்கில் ஆஷா நிரவியிடம் கூறியதை கூற அவனால் பல்லை மட்டுமே கடிக்க முடிந்தது

அதன்பின் கதை வேறாகி போக இவன் அழைக்க அவள் எடுக்காமல் போக்குக்காட்டி கொண்டு இருந்தாள்வளைகாப்பு முடிந்த அடுத்த நாள் விடியற்காலையே வந்து நின்ற சிவாவை பார்த்து அனைவரும் சிரித்துவிட்டனர்.. பெரியவர்கள் மட்டும் எழுந்து இருக்க வெட்கப்பட்டு கொண்டே ரித்திகாவின் அறைக்கு ஓடிவிட்டான்

அங்கு அவளின் மனையாளோ அவனின் சட்டையை அணிந்து கொண்டு உறங்கி கொண்டு இருந்தாள்அவளை அள்ளி தன் மீது போட்டு கொண்டு உறங்கிவிட்டான்அவனின் வாசம் உணர்ந்து எழுந்த ரித்திகா அவனை பார்த்து சிரித்து விட்டு உறங்கிவிட்டாள்

திருவிழா வேலை களைகட்ட தொடங்க ஆண்கள் அனைவரும் அந்த வேலைகளை பார்க்க சென்றுவிட்டனர்.. சிறிது நேரம் உறங்கிய சிவா கூட எழுந்து குளித்துவிட்டு அவர்களுடன் வேலைகளை கவனிக்க சென்றுவிட்டான்

அதன்பின் பெண்கள் அமர்ந்து பேசி கொண்டு இருக்க ரித்திகா மெதுவாக மேலிருந்து கீழே வந்து கொண்டு இருந்தாள்.. நீராவியும் அப்போது கீழே வர நடக்க முடியாமல் கீழே வரும் ரித்திகாவை கை பிடித்து மெதுவாக அழைத்து வந்தாள்.. நிரவி தன் கை பிடித்து அழைத்து வருவது மகிழ்ச்சியாய் இருந்தது

இரண்டு நாட்கள் கடந்து இருக்க இன்று திருவிழாஅர்ஜுனன் வீடே பரபரப்பாக தயாராகி கொண்டு இருந்தது.. அனைவரும் கோவிலுக்கு சென்றனர்அங்கு எப்போதும் போல் அர்ஜுனனுக்கு முதல் மரியாதை செய்து பூஜைக்கு கொடுத்தனர்.. அதன் பின் மற்றவர்கள் பூஜைக்கு கொடுத்தனர்.. பெண்கள் அனைவரும் வீட்டிற்கு கிளம்ப ஆண்கள் கோவிலிலேயே தங்கிவிட்டனர்

மதியத்துக்கு மேல் ஆண்கள் வீட்டிற்கு கிளம்பினார்.. அனைவரும் மதிய உணவை முடித்துவிட்டு உறங்கிவிட்டனர் இரவு பூஜைக்கு செல்ல வேண்டும் என்பதற்காகமெல்ல நேரங்கள் ஓடி ரா பூஜைக்காக அனைவரும் கூடி இருந்தனர் ரித்திகாவை தவிர்த்து அவளுடன் நந்தினியும் இருந்தார்.. அவர்கள் இருவரையும் தவிர்த்து வீட்டினர்கள் அனைவரும் கோவியலுக்கு சென்றுவிட்டனர்.. அர்ஜுனனை கையில் அருவாளை கொடுத்து உறுமியை அடிக்க அய்யனார் அர்ஜுனன் உடல் மீது வந்து இறங்கினார்

எப்போதும் போல் ஆக்ரோஷமாக இறங்காமல் நிதானமாக இறங்கி இருந்தார்எப்போதும் ஆக்ரோஷமாக இறங்குபவர் இன்று நிதானமாக இறங்கியது அனைவர்க்கும் கொஞ்சம் பயத்தை கொடுத்ததுஏனென்றால் இவ்வாறு அய்யனார் நிதானமாக இறங்கினால் அடுத்த வருடம் அய்யனார் அவர்கள் உடலில் இறங்க மாட்டார்.. ஒன்று அந்த நபர் அடுத்த வருடம் உயிரோடு இருக்க மாட்டார்.. இல்லை என்றால் அவரின் வாரிசின் மேல் இறங்குவார்.. அதுதான் அனைவருக்கும் பயமாக இருந்ததுஇதுவரை இப்படி நடக்கும் போது எல்லாம் அவர்கள் இறந்துவிடுகின்றனர்..

நிதானமான முகத்துடன் அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவர் சசி மற்றும் கர்ணனிடம் எங்க உங்க வீட்டு பொண்ணுங்களை காணோம்.. என் மேல பயமா என கேட்டார்.. அவர்கள் இருவரும் அமைதியாய் இருக்க போங்க போய் கூட்டிட்டு வாங்க என்று கூறினார்.. ஆகாஷ் சென்று அழைத்து வருவதாக கூறி வீட்டிற்கு சென்று அழைத்து வந்தான்

அனைவருக்கும் அவரின் நிதானம் பயத்தை கொடுத்ததுஊர் மக்களுக்கு வாக்கு கூற ஆரம்பித்து இருக்க ஒவ்வொருவராக கேட்க ஆரம்பித்தனர்.. அனைவருக்கும் கூறி முடித்தவர் அர்ஜுனன் குடும்பத்தை பார்த்தார்அனைவரும் பயமும் குழப்பமுமாக பார்க்க ரித்திகா நிரவி மற்றும் மற்ற சிறியவர்களை அழைத்து திருநீறு பூசி விட்டவர் வழக்கம் போல் நிரவியின் கையில் சாமி கயிறை கட்டி விட்டவர் அவர்களை கிளம்ப கூறிவிட்டு அனைவரையும் தீர்க்கமாக பார்த்துஒரு உயிர் போக போது.. நீ தான் எல்லாரையும் வழி நடத்தனும்..” என்று ஆரவை பார்த்து கூறியவர் அர்ஜுனன் உடம்பில் இருந்து இறங்கி இருந்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!