Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

60. மதி இனியாள் - சின்னஞ்சிறு பூவே

சின்னஞ் சிறு பூவே

பூவே 3

 

 

 



Advertisement

 

 

      அறக்கப் பறக்க அவளின் வேலைகளை செய்துக்கொண்டிருந்தாள் வேல்விழி.

Advertisement

ஒரு கண் கொடத்திலும் இன்னொரு கண் எதிர் வீட்டு கடிகார முட்களிலும் இருந்தது..

Advertisement

கிட்டத்தட்ட  மணி எட்டை தாண்டி சில நொடிகள் கடந்திருந்தது.. ‘இன்னும் மூனு  கொடம் தான் இருக்கு.. இதை மட்டும் புடிச்சு வச்சிட்டு, பள்ளிக்கொடம் கிளம்பிட வேண்டியது தான்’ என எண்ணிக்கொண்டு  கொடத்தை  தூக்கி இடுப்பில்  வைத்தவள் கை தவறி கொடம் கீழே! விழுந்ததில் தண்ணீரோடு சேர்ந்து கொடமும் சிதைந்தது..

Advertisement

‘அச்சோ! புது கொடம்’ என்று இவள் தலையில் கை வைத்தாள்..

“ஏன் புள்ளை இம்புட்டு பெரிய கொடத்தை, நீ தூக்கிடுற மாதிரி தான் தூக்கிட்டு வந்திருக்க.. தள்ளி வா கால்ல எதுவும் அடிபடலையே!” என்று சிறியவளை பார்த்து கேட்டாள் அமலா

“இல்லைக்கா” என்றாள் உள்ளே சென்ற குரலில்..

“சரி விடு வேற கொடத்துல புடிச்சிட்டு போ!” என்று அவளின் கொடத்தை எடுத்துட்டு சொன்னதும்..

அவளும் ஏற்கனவே உடைத்த அதே! அளவிளான மற்றோரு கொடத்தை வைத்தாள்..

“எம்மாடி ,‌எந்தாதன்டி இருக்கு.. இதை தூக்கி இடுப்புல வச்சா இடுப்பு என்னாத்துக்கு ஆவுறது” என்று சொல்லிக்கொண்டு வந்தாள் வைதேகி.

“அது நேத்து தான் க்கா , பாட்டி வாங்கினாங்க” எனக் மெல்ல சொன்னாள் சிறியவள்..

கொடம் ரொம்பினதும் “அக்கா , இதை கொஞ்சம் தூக்கி விடுங்க க்கா”..

அமலா கொடத்தை தூக்க வர, “ அடியே! நீ இருடி”என்று வைதேகியே , சிறியவளுக்கு கொடத்தை தூக்கி விட்டாள்..

பாவம் வேலுவிழிக்கு மூச்சு முட்டி போனது.. அவளோட உடல் எடையை விட கொடத்தோட எடை அதிக கணம் கணத்தது..

தம்கட்டி மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து போனவளை பார்த்து இருவருக்கும் சற்று பாவமாக இருந்தது..

“க்கா, இந்தபுள்ளையால எப்படிக்கா இவ்ளோ! பெரிய கொடத்தை தூக்க முடியும்னு கொடுத்து விட்டாங்க” என்றாள் அமலா

“அப்பன், ஆத்தா கூட இல்லன்னா! இப்டி தான் அவதி  படனும் போலடி” என்ற வைதேகி பெருமூச்சு விட்டு தண்ணீர் பிடிக்கும் வேலையில் இறங்கினாள்..

‘சிறியவளை எண்ணியபடி மரம் மாதிரி நின்றவளை’ பார்த்து

“நீ, ஏண்டி இப்படி நிற்கிற கொடத்தை தூக்கிட்டு போடி, காலையிலே உம்மாமியா எட்டூருக்கு பாட்டு பாடிச்சு.. இப்டி நின்னு இன்னும் வாங்கி கட்டிக்காதடி” என்றாள்..

“போ க்கா” என்று கொடத்தை தூக்கிக்கொண்டு போனாள்..

வைதேகி சிரித்தபடி அடுத்த கொடத்தை  மாத்தி வைக்க அந்த கொடம் முழுவதும் நிரம்பாமலே நின்று போனது..

“போச்சு போ! இதுக்கும் சேர்த்து இந்தபுள்ளை என்ன பேச்சு வாங்க போகுது!” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு நடந்தவள் காதில் விழுந்தது. காளியம்மாவின் குரல்,

அந்த வாசல் படியை  கதவை பிடித்து ஏறி உள்ளே வந்தவள். தடுமாற்றத்தோடு கொடத்தை கீழே! இறக்கி வைத்தவளை தான்.

இமைமூடாமல் பார்த்திருந்தார் காளியம்மா “என்னாதுக்குடி துணியை இப்படி நெனைச்சிட்டு வந்திருக்கவ” என்றதும்

“அது கொடம் உடைஞ்சிடிச்சு பாட்டி” என்று சிறு குரலில் சொன்னாள்..

“என்ன”  என நெஞ்சில் கை வைத்தவர். “விளங்கதவளே! அந்தக்கொடத்தோட வெலை  என்னென்னு தெரியுமாடி உனக்கு.. என்னவோ! உன் அப்பனாத்தா சமாதிச்ச மாதிரி , அசால்ட்டா உடைச்சிட்டேன்னு வந்து சொல்லுற” என்றவருக்கு கோவம் நெஞ்சளவுக்கு நின்றது..

இவரின்  வார்த்தைகளை கேட்டு கண்கள் இரண்டும் கண்ணீரில் மிதந்தது வேல்விழிக்கு.. ‘அவளும் என்ன செய்வாள். இதுவரை அவள் தூக்கி பழகின கொடத்தை விட இந்த கொடம் அவ்வளவு பெரிசு கிட்டத்தட்ட இருபது லிட்டர் தண்ணீர் கொள்ளளவு இருக்கும்.. வயதுக்கு  மீறின பாரம்  அவளால்  , சமாளிக்க முடியாமல் தவறி போனதை ! எதோ கொலைகுற்றம் செய்தது போல் கத்திக்கொண்டிருந்தவரை பார்த்து அவளுக்கு பயம் தான் வந்தது..

இதுவரை ஒரு வார்த்தை கூட இவளிடம் பாசமாக வந்ததில்லை, அந்த வீட்டில் மற்றவர்களின் பாசத்தை கூட அவள் பார்த்திருக்காள்.

ஆனா, இவரின் பாசத்தை மட்டும் பார்த்ததில்லை ஒருவேளை இவரின் குணமே இப்படிதானோ? என்றால்..  அதுவுமில்லை மற்ற பேத்திகளான காவ்யா, அபிராமி மீது காட்டும் பாசம்  கூட இதுவரை இவள்  மீது காட்டியதில்லை..

இன்னும் காளியம்மாவின் சத்தம் கூடிபோனதே தவிர குறைந்த வழியை காணோம்! எதிரே நின்றவள் நிலை தான் மோசமானது..

தன் ஊன்றுகோலை பிடித்துக்கொண்டு உள்ளே வந்த மயிலம்மா , ‘பேத்தி  ‘ கண்ணீரோடு இருப்பதை கண்டு,

“இப்ப என்னாத்துக்குடி , எம்பேத்தியை நிற்க வச்சு கத்திட்டிருக்கவ ” என்ற மாமியாரை பார்த்து..

“நேத்து தான்  ஒரு டஜன் புடவை போட்டு கொடம் வாங்கினேன்.. அதை இன்னைக்கு ஒடைச்சிட்டு வந்து நிக்கிறவளை , நான் கேட்கக்கூடாதா” என்றார் காசியம்மா

“நீயாடி, கொடம் கொடமா தண்ணீ தூக்கி கொட்டுறவ! அவ தானே, தண்ணீ தூக்குறா!  அப்ப கொடத்தை அவளுக்கு ஏத்த  மாறி தானே!  வாங்கணும்.. அதை விட்டு  எருமை கணத்துக்கு கொடத்தை நீ, வாங்கி வச்சிட்டு அவளை பேசுவியா” என்றார் விடாமல் மயிம்மாவும்.

“அதுக்கு தூக்க முடியாதுன்னு , சொல்லவேண்டியது தானே! கொடத்தை வீட்டுலே வச்சு..  மத்த கொடத்துல தண்ணீ புடிச்சு ஊத்த சொல்லியிருப்போனே”! என்றார்…

” ஆமாடி, நீ அப்படியே சொல்லிட்டு தான் மறுவேலை பாக்குறவ! உம்பகுமானத்தை பீத்திக்க  கொடத்தை கொடுத்து விட்டு இப்ப அவளை திட்டி தீர்க்க வழி பாத்திருக்க” என்ற மாமியாரை மனதுக்குள்ளே திட்டினார்..

“என்னடி சத்தத்தை காணோம்”..

“ஆமா எனக்கு ஆசை பாருங்க, இவ கொடத்தை ஒடைச்சிட்டு வந்தா நா! எப்படா திட்ட காத்திட்டிருக்க மாறி போசுறீங்க…

ஒரு டஜன் புடவை கொடுத்து  மேல்கொண்டு  இருவது ரூவா,  கொடுத்து  வாங்கினேன்.. அதை  ஒடைச்சிட்டு வந்தவளை கேள்வி கேக்காம, என்னைய கேக்குறீங்க.. என்ன இருந்தாலும் உங்க சின்னபுள்ளையோட இரத்தம்னா மட்டும் பாசம் கொறையாதே”! என்று கடைசி வாக்கியத்தை வாய்க்குள்ளே  முழுங்கினார்  காளியம்மா.

இங்கு காரசாரமான வாக்குவாதம் நிகழ்ந்த நேரத்தில் , கையில் மணியோசையுடன் உள்ளே வந்தார் ராமைய்யா.. மயிலம்மாவின் மூத்த மகன்  வாய்ப்பேச்சு இல்லாதவர்..

மணிச்சத்தம் கேட்டு மூவரும் திரும்பி பார்க்க , ‘நறைத்த தலையும் , வெள்ளை வேட்டி  சட்டையணிந்திருந்தவர் தோளில் கிடந்து துண்டில்  மூட்டைகட்டியிருந்ததை , பார்த்து இவர்கள் மூவரும் அமைதியாக இருக்க..

அவர்களை நெருங்கிய  ராமைய்யா கண்களில் தாரமும், தாயும் பதியவில்லை அங்கே! கலங்கிய விழிகளுடன் நின்ற பேத்தியை நெருங்கி அவள் முகத்தை கைகளில் ஏந்தியவர் ‘என்னாச்சு’ என்று சைகையிலே கேட்க,

” ஒன்னுமில்லை தாத்தா, தண்ணீ தூக்கும்போது கொடம் ஒடைச்சிட்டேன்..‌ அதான் கண்ணெல்லாம் கலங்குது” என்ற பேத்தியை  பார்த்து , திரும்பி தன் மனைவியை முறைக்கவும் தவரவில்லை ‘பார்வையாலே’!

அவர் பார்வையின் அனலை கண்டு சற்று திகைத்துதான்  போனார் காளியம்மா ‘எந்தளவுக்கு தன் கணவர் சாதுவோ! கோவம் வந்தால்  அவரை சமாளிக்க முடியாது..

‘அது போனா போயிட்டு போது’ பேத்தியின் முகம் தடவி சொன்னவர், தன் தோளில் கிடந்த துண்டின் முடிச்சி  கழட்டி பேத்தி கைகளில் கொடுத்தார்..

“என்ன தாத்தா” என்று மறைந்திருந்து மேல் துணியை எடுத்து பார்த்தாள்.. ‘அதில் வாழையிலையில் மூன்று இட்லியும் , கெட்டி சட்னியும் இருக்க கூடவே மெது வடையும் இருந்ததை’ பார்த்து..

“நீங்க சாப்பிடலையா தாத்தா”..

‘நான் அங்கேயே! சாப்புட்டு உனக்கு தனியா கொண்டு வந்தேன்னு..’ சைகையில் சொன்னார்..

” சீக்கிரம் சாப்பிட்டு  கிளம்பு  வேலு பள்ளிக்கொடம் நேரமாச்சு” என்றார் மயிலம்மா.

“இதோ! பாட்டி” என்று கையிலிருந்த பொட்டலத்தை தன் தாத்தா கைகளிலே கொடுத்தவள்..

“தாத்தா இதை நீங்களே வச்சியிருங்க, நான் குளிச்சிட்டு வந்து சாப்பிடுறேன்னு” தன் அறைக்கு ஓடியவள், பள்ளி யூனிபார்மை எடுத்துக்கொண்டு வயல்பக்கம் பம்பு செட்டை நோக்கி போனாள்..

இங்கு மயிலம்மா திண்ணைக்கு திருப்பினார்..

“ம்கூம் , வீட்டுல நானும் ஒரு மனிஷி இருக்கேன்னு.. யாருக்கு தெரியுது” முணங்கிக்கொண்டு திரும்பி போக போன மனைவியின் கை பிடித்து ‘அந்த துண்டின் மறுமுனையில் இருந்த மூட்டையை பிரித்து கொடுத்தார்’..

அதை பார்த்த காளியம்மாவுக்கு உதட்டோரம் சிறு புன்னகையை தந்தது.. ‘அதில் அவருக்கு பிடித்த ஜாங்கிரி’ இருப்பதை கண்டு,

ராமைய்யாவே , ஒரு முழு ஜாங்கிரியை எடுத்து. தன் கைகளாலே  மனைவிக்கு ஊட்ட போனார்.

“என்ன வெஸ்தை கட்ட வேலை பாக்குறீங்க யாராவது வந்தா , என் மானம் போகும்.. நீங்க வைங்க நானே ! சாப்புட்டுக்கிறேன்னு” சொல்ல,

அவர் வம்படியாய் தன் தூக்கின கையை கீழே! இறக்காமல் மனைவியையே பார்த்திருந்தார்..

‘இந்த  மனிஷனுக்கு புத்தி கெட்டு தான் போச்சினு’ சன்னமாய் மனதில் புலம்பிக்கொண்டு ‘தன் வாயை திறக்க , அந்த முழு ஜாங்கிரியும் ஊட்டி விட்டே , கையை கீழே இறக்கியவர்’..

தன் கையிலிருந்த மூட்டைகளை மனைவியிடம் கொடுத்து வெளியே போனார்..

அவரும் இட்லியும், ஜாங்கிரியும் தனித்தனியாக மூடி வைத்தவர் தன் வேலையை செய்ய சமையலறை பக்கம் நகர்ந்தார்…

இங்கு  ஒருவித வாட்டமா அமர்ந்திருந்த அன்னையருகே வந்த ராமைய்யா ‘தாயின் முகத்தை நிமிர்த்தி , ஏன் சோகம்’ என்று கைகளை ஆட்டி கேட்க,

தன் மகனை நிமிர்ந்து பார்த்தவருக்கு , ஏனோ! இன்று காலையிலிருந்து சின்ன மகனின் எண்ணமும் வாட்டி எடுத்தது.. ‘அவன் ஒருத்தன் இப்ப உயிரோடு இருந்திருந்தா, என் பேத்திகளின் வாழ்வு இப்படி அவதிக்கு அளாகி இருக்காதே! நா வணங்குன சாமிக்கு கண்ணில்லாம போச்சோ!’ ஏதேதோ எண்ணங்களில் இருந்தவரை , இப்போது மணிசத்தம்  நிகழ்வுக்கு கொண்டு வந்தது.

மகனை தலைதூக்கி பார்த்தவர் ” எய்யா , என்னை குலதெய்வ கோயிலுக்கு கூட்டி போறீயாய்யா” என்றார்..

அன்னை சொன்னதை  கேட்டு மனிதர் பதறி தான் போனார்.. ‘என்று சின்ன மகன் தவறி , பேத்தியின் வாழ்க்கை சீரழிந்து  போனதை கண்டாரோ! அத்தோடு குலதெய்வ கோவிலுக்கு போவதையே! நிறுத்திருந்தார்.. கிட்டத்தட்ட ஒரு வனவாசம் கண்டது. இவரின் காலடிபட்டு அந்த கோவில்.. இன்று திடீனு கேட்கவும்… ‘

தன் கைகளால், அன்னையின் முகத்தை தாங்கியவருக்கு மனம் இப்போது படபடவென அடித்துக்கொண்டது..

“ஒன்னுமில்லைய்யா, சின்னவன் ஞாபகமாவே இருக்குய்யா , அதான் திக்கட்டவங்களுக்கு தெய்வம் தானைய்யா துணை அதுக்காகதான்” என்றார். மகனின் பரிதவிப்பான முகத்தை கண்டு..

‘இரு ம்மா, வரேன்னு மனைவியை தேடி போனார்’..

மனைவியின் பின்னே நின்றவர்  இடுப்பிலிருந்து மணியை ஆட்டினார்..

சத்தம் கேட்டு திரும்பியவர்  “என்னங்க” என்று அருகே வந்தார்..

‘அம்மாவும் , “நானும் குலதெய்வ  கோவிலுக்கு போறோம்னு’ சைகையில் சொன்னார்..

“என்ன திடீர்னு” என்றார்.

“ஒன்னுமில்லை , தன்னை காட்டி கைகளை சின்னதாக்கி  தன் தம்பியின் எண்ணமாக இருப்பதாக” சொல்லி அங்கேயிருந்து நகர்ந்திருந்தார்..

‘என்ன இவங்க கோவிலுக்கு போறேன்னு சொல்லூறாங்க, இன்னைக்கு ஜோசியரை பாக்க போகனுமே’ என்று நினைத்தபடி வெளியே  வந்தவர்..

வாசலில் அமர்ந்திருந்த மாமியாரை நெருங்கி “அத்தை நீங்க வர நேரமாவுங்களா” எனக் இழுத்து கேட்டார்..

“தெரியல எதுக்கு கேக்குறவ”,

” இல்லத்தை இன்னைக்கு காவ்யாவுக்கு ஜாதகம் பாக்க போகனும்னு.. நேத்தே  சரசு சொல்லி விட்டா , நீங்க வரப்போ! நா கிளம்பிடுவேன்னு” பாதி உண்மையை மட்டும் சொல்லி முடித்தார்..

“வீட்டை பூட்டி நிலப்படி மேல சாவியை வச்சிட்டு போ! நாங்க வரோம்னு” மகனின் கையை பிடித்தபடி மெல்ல நடந்தார்..

இங்கு வேல்விழி அவசரவசரமாக குளித்து நனைந்த ஆடைகளை துவைத்துக்கொண்டிருந்த நேரத்தில்,

“ச்சே! இன்னைக்கும் மிஸ் பண்ணிட்டேன்னு” ஆடவன்  குரல் கேட்டு திரும்பி பார்க்க , வாய் நிறைய பற்களை காட்டி சிரித்துக்கொண்டிருந்தான்  ராஜன்.

‘அவனை கண்டு புசுபுசவென கோவம் வந்தாலும்’ அமைதியாக தன் ஆடைகளை கைகளில் எடுத்துக்கொண்டு நகர போனவளை , கை நீட்டி பாதையை மறைத்தான்..

“பரவாயில்ல ஆளு கொஞ்சம் பளபளப்பு கூடுது” இவன் விசமமாக  ஏதோ! சொல்ல வந்தான்..

அதுக்குள்  பின்னே வந்தவன். அவன்  சட்டையை பிடித்து இழுத்து “நீ போம்மா” என்று அவள் போக வழியை ஏற்படுத்திக்கொடுத்தான்..

“ஏண்டா , அவளை போக விட்ட” என்று பின் இருந்தவனிடம்  கத்தினான்..

“உனக்கு கட்டம்  கடைசியா, ஒன்னு சொல்லுறேன்.. கேட்டுக்கடி மாப்புள்ள அந்தபுள்ளைகிட்டயிருந்து தள்ளியே இரு அதை விட்டு நீ! நெருங்க நெனைச்ச , உம்பங்காளி உனக்கு பாடைகட்ட ஏற்பாடு பண்ணிடுவான்” என்று சிவா சொன்னதும்..

“அவனால  , என்னை என்ன பண்ண முடியும்னு” சொல்லி தேனாவெட்டாக நடந்தான்..

“மவனே ! உன் வண்டவாளம் தெரியுற அன்னைக்கு தீவாளி தாண்டி மாப்புள்ள” என்றான் அவனும்..

“அவனுக்கு விஷயம் தெரியுறதுக்குள்ள , போனவளை தட்டி தூக்கிட மாட்டேன்” என்றான் பெருமூச்சு விட்டபடி,

“எனக்கு என்னவோ! இது சரியாபடல , உன் சங்காத்தமே, எனக்கு வேணாம்… நல்லதுக்கு சொன்னா கேட்டுக்கிட மாட்டுற” என்று நகர்ந்தவனை,

தடுத்து “அட என்ன  மச்சி நீ! இதுக்கெல்லாம் கோச்சிக்குற, இனி அந்தப்புள்ளை இருக்குற பக்கம் கூட ! என் பார்வை திரும்பாது” என்று அவன் தோளில் கை போட்டு நடந்தவன் பார்வை வயல் வரப்பில் அவசரமாக நடந்து போனவளின் மீது தான் இருந்தது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!