Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

20. கல்பனா செந்தில்குமார்-என் ஜீவன் உன்னை சேருமா

என் ஜீவன் உன்னை சேருமா 27 1

என் ஜீவன் உன்னை சேருமா
 அத்தியாயம்  -27


Advertisement

Advertisement

Advertisement

   ரதி உலகநாதன் வீட்டிற்கு வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது..

Advertisement

 இன்று தான்   மாயா ரதியிடம் பேசி  புரிய வைத்து ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் வந்திருந்தாள்..
 ஏழு நாட்களில் ரதியின் தோற்றத்தையே  முற்றிலும் மாற்றி இருந்தாள் மாயா..
  ரதியை  சல்வார்  அணிய பழக்கி இருந்தாள்..
 உலகநாதன் கட்டிய மஞ்சள் கயிறு இப்போது  தங்கச் செயின் தாலியோடு   மாறி இருந்தது..
 காதில் கம்மல் அணியாமல் இருந்த ரதியின் காதில் வைரத்தோடுகள் மின்னிக் கொண்டிருந்தன,, கையில்  இரண்டு தங்க வளையல்கள், நெத்தியில்  மெருன் கலர் பொட்டு, நெத்தியின்  வகுட்டில்  குங்குமம் வைத்து   உலகநாதனின் மனைவியாக  ரதியை மாற்றி இருந்தாள் மாயா..
  ரதிக்கு  ஆண்களைப் போல  முடி இருக்க,, அதை  செயற்கை முடியை கொண்டு நீளமாக மாற்றி இருந்தாள்..
ரதி  பழய டீச்சர்  ரதியாக ஒரு வாரத்தில் மாறி இருந்தாள்..
 உலகநாதனுக்கு இப்போதுதான் ரதியை பார்ப்பது போல் இருந்தது..
 மாயா ரதியிடம் நான் சொல்வதை கேட்டால் தான் குழந்தையை தருவேன் என்று மிரட்டி,,   பேசிப்பேசியே ரதியை மிரட்டி  அழகு படுத்தி இருந்தாள்..இல்லை என்றாள் ரதி இதற்கு சம்மதித்து இருக்க மாட்டாள்,,…
 மூன்று பேரும் ஹாஸ்பெட்டலுக்கு வந்திருந்தனர்,,மாயா ரதியிடம் நீங்கள் எப்பையும் போல இருங்கம்மா டாக்டர் கேட்டதுக்கு உங்க மனசுல என்ன  தோணுதோ அதை  பதிலா சொல்லுங்க,, பயப்படக்கூடாது  என்று ரதியை டாக்டர்  ரூம்பிற்கு அனுப்பி வைத்திருந்தாள்…
 டாக்டர் கேட்ட எல்லா  கேள்விகளுக்கு  பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் ரதி..
 ரதிக்கு அனைத்து டெஸ்ட்களும் எடுக்கப்பட்டன, டெஸ்ட் ரிசல்ட் வர கொஞ்ச நேரம் ஆகும் என்று மூன்று பேரும் வெளியில்  காத்திருக்க..
 மாயாவுக்கு தெரிந்த ஒரு லேடி  டாக்டர் அவளை பார்த்து “மாயா எப்படி இருக்க?” என்று கேட்க.
“நான் நல்லா இருக்கேன் மேம்” என்றவள்.
 அவர் ஏதாவது சொல்லி உளறி விடுவார் என்று பயந்து “நான் நாளைக்கு ஹாஸ்பெட்டல் வரேன் டாக்டர் ” என்று அவரின் பேச்சைக் கத்தரித்து அனுப்பி இருந்தாள்.
 “யார் இவங்க” என்று  உலகநாதனையும், ரதியையும்  பார்த்து   டாக்டர் கேட்க..
“என் அப்பா, அம்மா”….
“ஓ அப்படியே” என்றவர்.. “நாளைக்கு வரும்போது உன் ஹஸ்பண்டை  கூட்டிட்டு வா மாயா பேசணும்” என்று டாக்டர் கூறிவிட்டு  செல்ல…
” சரி மேம்” என்றவளிடம்..
“யாரு மாயா இவங்க” என்று உலகநாதன் கேட்க,,.
 “தெரிந்த டாக்டர் பா” என்று மாயா கூறினாள்…
 டாக்டர் உலகநாதனை  அழைத்திருந்தார் ரதியின் ரிப்போர்ட் வந்திருப்பதாக..
  ‘”மாயா ரதியை பார்த்துக்கோ” என்று சொல்லி விட்டு ‘….
 உலகநாதன்  டாக்டர் அறைக்கு  செல்ல..
டாக்டர் உலகநாதனிடம்
“அவங்களுக்கு எத்தன வருஷமா இப்படி  இருக்கு” என்று டாக்டர் உலகநாதனிடம்  கேட்க..
” 20 வருஷத்துக்கு மேல இருக்கும் டாக்டர்”.. என்றவர்..
” ஏதாவது பெரிய பிரச்சனையா  டாக்டர்,  ரதிக்கு” என்று பயந்து போய் உலகநாதன் கேட்க…
” நத்திங் சீரியஸ்,  அவங்கள செக் பண்ணதுல அவங்க தலையில பெருசா அடிபட்டு நிறைய சிச்செஸ் தலையில போட்டு இருக்காங்க,, அது எதனாலன்னு தெரியுமா..
 முதல்ல அதை பத்தி எனக்கு டீடெயில்ஸ் வேணும்,,  அவங்கள செக் பண்ணதுல்ல அவங்களுக்கு உடம்புல எந்த பிரச்சினையும் இல்லை,,  அவங்களுக்கு எப்போ அடி பட்டுச்சு, அத சொல்லுங்க” என்று டாக்டர் கேட்க.
” எனக்கு  தெரியாது டாக்டர்,, நான் வேணா அவங்க சொந்தக்காரங்க கிட்ட கேட்டு சொல்றேன்” என்று கூற…
 “அதை மட்டும் கேட்டு சொல்லுங்க அதுக்கப்புறமா  அவங்களை எப்படி ட்ரீட்மெண்ட்  பண்ணி, நார்மல் ஆகா மாற்றலாமுன்னு   நான் சொல்கிறேன்” என்றார்….
 “வேற எந்த பிரச்சனையும்,  மாயாவுக்கு இல்லையே டாக்டர்” என்று உலகநாதன் கேட்க..
 “அவங்க நார்மளா  தான் இருக்காங்க உடம்புல எந்த பிரச்சினையும் இல்ல,,
ஆனா நம்ம தலையில பாசிட்டிவ், நெகட்டிவ் என்று இரண்டு சுரப்பி சுரக்கும்,,
அதில்   நமக்கு பாசிட்டிவ் சுரபி சுரக்கும்  போது நடக்குறது எல்லாம் சரியா நடக்குற மாதிரி  தோன்றும்,
சிலருக்கு நெகடிவ் சுரபி  அதிகமா சுரக்குது போது,  எல்லாமே தப்பா தான் தெரியும்,, நமக்கு தோன்றது கூட நெகடிவ் மாதிரி  தான் இருக்கும்..
 அதே மாதிரி  தான் ரதிக்கும் நெகட்டிவ் எனர்ஜி அதிகமா சுரக்குது முதல்ல அத கண்ட்ரோல் பண்ணனும், என்றவர் சில மெடிசன் எழுதி தர்ரேன் அதை ரதிக்கு  கொடுங்க,, மெடிசன் சாப்பிட்டா நெகடிவ் சுரப்பி சுரக்கிறது, கம்மியாகி பாசிட்டிவ் திங்கிங் அதிகமாகும், அதனால கண்டிப்பா மாத்திரை  சாப்பிட வேண்டும் அப்போதான் சரியாகும்,, நீங்களும்  பேஷன்ட் கிட்ட  பாசிடீவ்வா பேசுங்க….
அப்புறம் அவங்களுக்கு எப்படி தலையில் அடி பட்டுச்சு, அதக்கப்பறம் எப்படி ரதி பிகேவ் பண்ணாங்கன்னு கேட்டு சொல்லுங்க” என்று டாக்டர் கூறி விட..
 “ஓகே டாக்டர் ” என்று உலகநாதன் வெளியே வந்தவர், மாயாவிடம் “போலாமா?” என்று கேட்க..
 மாயா  தந்தையின் முகத்தையே பார்த்தாள்,,
” மெடிசன் கொடுத்திருக்காங்கடா சரியாகிடும்” என்று உலகநாதன் கூற,,
” சரிப்பா” என்று மூன்று பேரும் வீட்டிற்கு கிளம்பினார்கள்..
 காரில் வரும்போது  ரதி முகத்தை தூக்கி வைத்திருக்க..
உலகநாதன் அதை  பார்த்தவர் “உங்க அம்மாவுக்கு என்ன கோபம்” என்று கேட்டார்.
” அது நாம அம்மாவை டாக்டர் கிட்ட கூட்டிட்டு போய் செக் பண்ணோம்முல  அது அம்மாவுக்கு புடிக்கலையாம்,,  டாக்டர் நிறைய கேள்வி கேட்டாராம்,  அதனால அம்மா கோவமா  இருக்காங்களாம்”.. என்றாள் மாயா..
” உங்க அம்மா கோபத்தை குறைத்து விடலாமா” என்ற  உலகநாதன் இருவரையும் ஒரு ஐஸ்கிரீம் பார்லருக்கு அழைத்துச் செல்ல..
 மாயாவுக்கு சிரிப்பு வந்தது.. ரதிக்கு ஐஸ்கிரீம் பிடிக்கும் என்பதை தெரிந்து கொண்ட உலகநாதன் ஐஸ் கிரீம் கடைக்கு அழைத்து வந்திருந்தார்..
 கடையை பார்த்ததும் ரதி சந்தோஷமாகி  “எனக்கு ரெண்டு மூணு ஐஸ்கிரீம் வேணும்” என்று கேட்க.
உலகநாதனுக்கு  ரதி கேட்டதும்  சிரிப்பு  வந்தது,, “சரி வாங்கி தரேன் வா” என்று உலகநாதன் அழைத்துச் சென்றார்..
 மாயா அந்த கடையில் போடப்பட்டிருந்த  சோபாவில் உட்கார்ந்து கொண்டு “எனக்கும்  வாங்கிட்டு வாங்க” என்று சோபாவில்  சாய்ந்து  அமர்ந்து கொண்டாள்..
 ரதியை அழைத்து சென்ற உலகநாதன் “உனக்கு என்ன வேணும் பாரு” என்று ரதியிடம் கூற.
 ரதிக்கு அங்கு நிறைய  ஐஸ்கிரீம் பிளேவர்கள்  இருந்ததால், எதை சொல்வதென்று அவளுக்கு   தெரியவில்லை “இது,  அது” என்று நிறைய ஐஸ்கிரீம் பிளேவர்களை அவள் கேட்க..
 உலகநாதன் அனைத்தையும் ஒரு கண்ணாடி பவுலில்  வைத்து தருமாறு அங்கே உள்ள பணி  செய்பவரிடம்  சொல்ல..
 கடைசி வரிசையில் பழக்கலவையில் ஆன ஐஸ்கிரீம் வைத்திருக்க,,  அதை பார்த்த ரதி..
 உலகநாதன் கையை பிடித்து இழுத்துச் சென்று ரதி  “எனக்கு  அதுவும் வேணும்” என்று ஒரு குழந்தை போல்  அவரிடம் கேட்க..
 அதையும் சேர்த்து அந்த கண்ணாடி பௌலில் வைத்து தரச் சொன்னார் உலகநாதன்…
 பெரிய கண்ணாடி பவுலில்  ஐஸ்கிரீம் நிறைய  வைத்து அதன் மேல் பொடி பண்ணிய நட்சை தூவி அழங்காரம் பண்ணி, ஐஸ்கிரீமை  பணியாள் தர….
  உலகநாதன் அதை வாங்கி ரதியிடம்  தந்தார்..
 ரதிக்கு மிகவும் சந்தோஷம் பெரிய பவுலில்  கலர் கலரா ஐஸ்கிரீமை பார்த்தவள்..
 ஐஸ் கிரீமை  ஒரு கையில்  வாங்கிக் கொண்டு..
இன்னொரு கையை உலகநாதன் கையோடு  கோர்த்துக் கொண்டவள்..
நன்றியோடு அவரை பார்க்க..
 “வேற ஏதாவது வேணுமாடா ரதி”என்று  உலகநாதன் கேட்க..
 ரதி சிரித்தபடி ” தாங்யூ வளந்தவனே    இது போதும்” என்றவள்…
” மாயா பொண்ணுக்கு” என்று கேட்க..
 “நீ போயி சாப்பிடு நான் மாயாவுக்கு  வாங்கிட்டு வர்றேன்” என்றவர்.
 மகளுக்கு  பிடித்த ஐஸ்கிரீமை வாங்கிக் கொண்டு  அவர்களிடம் வந்து அமர…
 ரதி   ஐஸ்கிரீமை   ரசித்தபடியே உண்டு கொண்டிருந்தாள்.
 உலகநாதன் மாயாவிடம்  ஐஸ்கிரீம்  கொடுத்து விட்டு  அவர் ஐஸ்கிரீம் இல்லாமல் அமர..
 “உங்களுக்கு ஐஸ்கிரீம் இல்லையா” என்று  ரதி கேட்டவுடன்  உருகியவர்..
 “எனக்கு வேண்டாம் ரதி,  நீ சாப்பிடு” என்று கூற.
“நீங்களும் சாப்பிடுங்க” என்றவள்  தன் பௌவுளை  நகட்டி உலகநாதன் முன் வைக்க..
” எனக்கு வேண்டாம் ரதி நீ சாப்பிடு” என்றார்..
 “எனக்கு மட்டும் நீ இவ்வளவு வாங்கி தருவ,  நீ சாப்பிட மாட்டியா?  ஏன் உன் கிட்ட காசு இல்லையா”?.. என்று ரதி கேட்க..
 “காசு எல்லாம் இருக்குடா நீ சாப்பிடுமா” என்றார்..
 “நீங்க சாப்பிட்டா  தான் நானும் சாப்பிடுவேன்” என்றவள் உலகநாதன் வாய்யருகே ஐஸ்கிரீமை  கொண்டு போக..
 “வேண்டாம்” என்று மறுத்தவரின் வாயில்  ஐஸ்கிரீம்   திணித்திருந்தாள் ரதி..
 ஐஸ்கிரீமில் உள்ள குளிர்ச்சி போல.. உலகநாதனின்   மனதும் வயிரும்  குளிர்ந்திருந்தது, ரதி ஐஸ்கிரீமை ஊட்டியதும்.. ரதியிடமிருந்து ஐஸ்கிரீமை வாங்கிக் கொண்டவர்..
 மாயாவை பார்க்க..
“நான் எதுவும் பார்க்கலை” என்று சிரித்தவள்,,  தன் போனில்  கண்களை வைத்திருந்தாள்….
 ரதி   உலகநாதனின் வீட்டுக்கு வந்ததில் இருந்து..   உலகநாதன் ரதியை மிரட்டுவது போல் பேச.. அது ரதிக்கு பிடிக்காமல் அவரை  முறைப்பது போல்  பார்த்திருந்தாள்…
இரண்டாவது நாள் மாயா ரதியை இதை போடு, அதை பண்ணு இப்படி  பண்ணுங்க  என்று  அன்பு தொல்லை பண்ண..
 ரதி உலகநாதனிடம்  தான் புகார் சொல்வாள், “இது எனக்கு வேண்டாம் ” என்று..உடனே உலகநாதன் மாயாவிடம்.
“போதும் டா, அவ இஷ்டபடி அவள் இருக்கட்டும் விடு” என்பார்..
மாயா  ரதியை கொஞ்சம், கொஞ்சமாக மாற்றிக்கொண்டு இருந்தாள்,, ரதிக்கு மாயா பண்ணுவது பிடிக்கவில்லை என்றாலும்,, மாயா பாப்பாவை தன்னிடம்  தருவாள் என்று அவள் சொல் படி கேட்க….
 ரதியை பியூட்டி பார்லர் அழைத்துச் சென்றிருந்தாள் மாயா,,.
 ஒரு சிலது செய்யும் போது ரதி அமைதியாக இருக்க,, ஒரு சிலது பண்ணும் போது  அவளுக்கு வலியை தர “எனக்கு வேண்டாம்” என்று கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணியிருந்தாள் ரதி..
 “நீங்க பண்ணி தான் ஆகணும் ரதிம்மா  அப்போதான் என் பாப்பாவை  உங்களுக்கு தருவேன்” என்று மாயா மிரட்ட..
 “எனக்கு ஒன்னும் வேண்டாம் போ” என்று அழுது கொண்டே  பார்லரை விட்டு வெளியே வந்தார் ரதி..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!