Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

27. MTB. Varsha - என் காதலும் என்னாகுமோ

NKN-7

“ஐய் விழி அண்ணி” என்று ஆசையுடன் ஓடி வந்து தன்னை கட்டிக்கொண்ட ப்ரியாவை பார்த்து அதிர்ந்துப் போனாள் விழி.

 

 இவர்கள் இருவரும் காதலிக்கும் போது தனது குட்டி தங்கை பிரியாவிடம் விழியை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறான். மேலும் விழி அவளை தனது குட்டி தங்கை போல பார்ப்பாள். இருவரும் சேர்ந்து அன்புவை கழட்டிவிட்டு நிறைய நேரங்கள் மொபைலில் கதை பேசியிருக்கிறார்கள். அவளுக்கு தனது உடன் பிறந்த சகோதரிகளிடம் கிடைக்காத ஏதோ ஒன்று அவளிடம் கிடைத்தது. பிரியா அவளை தனது வருங்கால அண்ணியாக பார்க்காமல் அக்காவைப் போன்று பார்த்தாள். அதனால் தானோ என்னவோ அவளை பார்த்தவுடன் பாய்ந்து வந்து கட்டிக் கொண்டாள். அவளுக்கு தன் அண்ணனின் முன்னாள் காதலி அவள் என்றெல்லாம் தெரியவில்லை. வளர்ந்திருந்தாலும் சிறு குழந்தை போன்று அவளுக்கும் நடிக்க தெரியவில்லை. ஆனால் எல்லோரும் அப்படி என்ன மாட்டார்களே முக்கியமாக செலின் என்ன நினைப்பானோ என்று அவனை தான் முதலில் திரும்பி பார்த்தாள் விழி.

 



Advertisement

 ஏனென்றால் தற்போது இந்த அழைப்பினை விழியால் ஏற்க முடியவில்லை. இப்போதுதான் அவள் வாழ்க்கையில் ஏதோ ஒரு அடி எடுத்து வைத்திருக்கிறாள். அப்படி இருக்கும்போது அவளின் அந்த அழைப்பு அதுவும் அன்பைக் கொண்டு என்னும் போது ஒரு மாதிரி ஒவ்வாமையை உருவாக்கியது.

 

 ஒருவேளை ஒரு ஐந்து வருடங்களுக்கு முன்பு அவளை இப்படி அழைத்து இருந்தால் கண்டிப்பாக நுனி நாக்கு வரை தித்தித்திருக்கும் ஆனால் இன்று அவன் வேறொத்தியின் கணவன் மட்டுமல்லாது ஒரு குழந்தையின் தகப்பனாகவும் அல்லவா இருக்கிறான் அப்படி இருக்கும்போது அவனோடு எந்த விதத்திலும் அவள் சம்பந்தப்படுவதை விழி விரும்பவில்லை.

Advertisement

 என்னதான் அவனை எதிர்கொள்ள தயாராகி விட்டாலும் மனதில் எங்கோ ஒரு மூலையில் அவன் தந்து விட்ட சென்ற துரோகம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. அது மட்டும் இல்லாமல் செலின் என்று ஒருவன் அவள் வாழ்க்கையில் வரவில்லை என்றால் கண்டிப்பாக அவனுடன் இந்த சந்திப்பு நிகழ்ந்து இருக்காது. என்னதான் அவன் ஆயிரம் கதை சொன்னாலும் ஒரு பெண்ணின் இதயத்தை உடைத்தது எவ்வளவு பெரிய குற்றம் என்பது அவனுக்கு இன்னும் புரியவில்லை. அதோடு செலின் என்னதான் அவளை புரிந்து கொண்டாலும் இது போன்ற ஏதோ ஒரு சம்பவம் அவனை பாதித்துவிட்டால் தனது வருங்காலம் எப்படி இருக்குமோ என்ற பயம் அவளிடத்தில் அதிகமாகவே உள்ளது.

Advertisement

 

 அந்த பயத்தோடு தான் செலினை அவள் பார்க்க ஆனால் அவனோ, “அட போடி உனக்கு வேற வேலையே இல்லை” என்பது போல் அவளை சிறிதும் கண்டுகொள்ளாமல் தனது அருகில் வேகமாக வந்து நின்றவளை தான் பார்த்து நின்றான்.

 

Advertisement

 அவன் மட்டும் இல்லாது அங்கு நின்ற அனைவரும் புதிதாக வந்தவளை குழப்பம் மற்றும் அதிர்ச்சியுடன் பார்த்து நிற்க வந்தவளோ பயங்கரமான சிரிப்புடன் கைகளைத் தட்டிக்கொண்டு, “ ஓ சூப்பர் சூப்பர் அண்ணியா என்ன சொன்ன… அண்ணி.. அண்ணிதான.. சொன்ன சொல்லுடி அண்ணிதான சொன்ன” என்று அந்நியன் போல சொன்னதே திரும்பத் திரும்ப சொல்லி பிரியாவின் இரு கைகளையும் பிடித்து உலுக்கி கத்தினாள் சுரபி.

 

“என்னடி ஒன்னும் சொல்லாம நிக்க உண்மைய சொல்லு யார் உனக்கு அண்ணி சொல்லுடி யார் உனக்கு அண்ணி” என்று மறுபடியும் அவள் முகத்துக்கு நேராக கத்த

 

 அவளை இப்படி செய்ததும் பயந்து போன பிரியா, “ அண்..ணி…அ..து வந்து..” என்ன சொல்ல என்று தெரியாது தன் அன்னையின் முகத்தை பார்க்க

 

“என்ன பதில் சொல்லாம அங்க பாக்க அப்போ உங்க அம்மா தான் சொல்லிக் கொடுத்தாங்களா. என்னத்த நீங்கதான் சொல்லிக் கொடுத்தீங்களா. அவங்க இவளுக்கு அண்ணினா அப்ப நான் யாரு. சொல்லுங்க அத்தை ஏன் வாயை மூடிட்டு இருக்கீங்க. தயவு செஞ்சு வாய தொறந்து பேசுங்க இங்கே என்ன நடக்குது” என்று தனது மாமியாரிடம் கேட்டாள்.

 

“அது வந்து சுரபி நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்லமா. அவ ஏதோ சின்ன பொண்ணு தெரியாம கூப்பிட்டா அத பெருசு பண்ணாத. என்னதான் இருந்தாலும் இப்போ உன்னோட நாத்தனார் கல்யாணம் நடக்குது. அதனால தயவு செஞ்சு எந்த பிரச்சினையும் பண்ணாதம்மா. எல்லோரும் நம்மளை தான் பார்க்கிறாங்க” என்றார் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சொந்தங்களை பார்த்து சுரபியிடம் கெஞ்சலாக.

 

 

 

“இல்ல எனக்கு புரியல. உங்க பொண்ணுக்கு விசேஷம் நடக்க போகுது அதனால நான் பேச கூடாதா. அது எப்படி உங்க பொண்ணு ஒன்னும் தெரியாத பொண்ணு அவ வந்து யாரோ ஒருத்தங்கள எல்லாம் அண்ணினு கூப்பிடுவா. அத வெக்கமே இல்லாம குடும்பத்தில் உள்ள எல்லாரும் பார்த்துட்டு இருப்பீங்க அப்படித்தான” என்றாள் காட்டமாக.

 

“சேச்சே என்னம்மா இப்படி எல்லாம் பேசுற. அந்த பொண்ணு அன்போட பிரண்டா இருக்கும். இவளுக்கு கண்டிப்பா அவன் அறிமுகப்படுத்தி வச்சிருப்பான் அதனாலதான் இவ்வளவு உரிமையா கூப்பிடுறா. அதனால நீ இப்படி தப்பா பேசாத மா.” என்றார் சமாதானமாக.

 

 கைத்தட்டி வேகமாக சிரித்தவள் “குட் ஜோக் அத்த சான்சே இல்ல. எப்படி உங்க பையனோட பிரண்டு உங்க பொண்ணு அண்ணின்னு கூப்பிடுவா அது வந்து நீங்க பெருசு பண்ண கூடாதுன்னு சொல்லுவீங்க. அத கேட்டுட்டு நான் அமைதியா இருக்கணும். சரி ஓகே நீங்க சொல்ற மாதிரியே நான் அமைதியா இருக்கேன்னு வச்சுக்கங்க நான் யாரு உங்க பொண்ணுக்கு அவளோட அண்ணன் பொண்டாட்டி தானே. நீங்க சொல்ற மாதிரியே எடுத்துக்கிட்டாலும் நான் அவளுக்கு உரிமை உள்ள அண்ணி என்ன ஒரு நாளாவது அவ அண்ணின்னு கூப்பிட்டு இருப்பாளா. அப்படி இருக்கும்போது இவங்க யாரோ எவரோ இன்னைக்கு தான் இந்த வீட்டுக்கே வந்து இருக்காங்க. அவங்கள பார்த்து அண்ணினு கூப்பிட்டா எனக்கு தப்பா தோணாதா பாத்திருக்க நீங்க எல்லா பேரும் சாட்சி உங்களுக்கு எந்த தப்பும் இதில் தெரியலையா நீங்களே சொல்லுங்க நீங்களாம் பெரியவங்க தானே” என்று சுற்றி இருந்தவர்களை பார்த்து சொல்லிவிட்டு, “அவங்கள விடுங்க அத்த நீங்க சொல்லுங்க உங்களுக்கு இதுல எந்த தப்பும் இருக்கிறதா தெரியவே இல்லையா. நான் உங்க பையன் கையால கழுத்துல இத்தனை பேரும் சாட்சியா வச்சு தாலி வாங்கி இருக்கேன் தானே என்ன இந்த விசேஷத்திற்கு உங்கள்ல யாராவது ஒருத்தர் கூப்பிட்டீங்களா. யாருமே என்ன கூப்பிடல சரி இந்த வீட்டில் இருந்து உங்க பையன் கிட்ட ஏதோ ஒரு விஷயத்துக்காக நான் சண்டை போட்டு போயிட்டேன் ஓகே. ஆனா நீங்க பெரிய மனுஷி தானே நீங்க என்ன பண்ணி இருக்கணும் எங்க ரெண்டு பேருக்குள்ள சமாதானம் பண்ணி வச்சிருக்கணும் சரி அதுதான் பண்ண முடியல ஓகே விடுறேன். இப்போ இந்த வீட்ல பிறந்த ஒருத்திக்கு கல்யாணம் நடக்குது அவளுக்கு அண்ணன் பொண்டாட்டியா அவளோட அண்ணியா நான் வந்து அவளுக்கு முறை செய்யணும் தான இதுக்காவது என்ன கூப்பிட்டு இருக்கலாம் இல்ல அத்தை. உங்க கிட்ட கேட்டு என்ன செய்ய உங்க பையனே என்ன ஒரு மனுஷியா மதிக்கிறது கிடையாது அப்படி இருந்தா என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருப்பாங்க. அட்லீஸ்ட் நீ வா அப்படின்னு ஒரு போன்காலாவது பண்ணி இருப்பாங்க. இப்படி எதுவுமே பண்ணாம மானங்கெட்ட போய் நான் திரும்ப வந்து நின்னா என்ன ஒரு வார்த்தை வரவேற்காம யாரோ ஒருத்திய உங்க பொண்ணு அண்ணின்னு கூப்பிட்டு வருவா அதை நீங்க எல்லாரும் அசையாம நின்னு வேடிக்கை பார்ப்பீங்க. நான் அத பாத்துட்டு எதுவுமே கேட்கக்கூடாது அதான் உங்க பாஷையில அமைதியா இருக்கிறதா அர்த்தம் அப்படித்தானே” என்றாள் கோவமாக

 

 அவள் இதுவரை பேசியதே அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த செலின், “ஹலோ மிஸ் தேவை இல்லாம வார்த்தை விடாதீங்க. நீங்க யாருன்னு எனக்கு தெரியுது. ஆனா என் விழிய பத்தி நீங்க இப்படி பேசக்கூடாது. அதோட உங்களுக்கும் இந்த ஃபேமிலிக்கும் தான் கலெக்சன் இருக்கு. நீங்க உங்க பேமிலி கிட்ட எதனாலும் கேளுங்க அதுல எந்த தப்பும் இல்லை ஆனா ஒரு வார்த்தையில கூட என்னோட விழி பெயரு வரக்கூடாது ஓகே” என்றான் காட்டமாக

 

 அவன் சொல்வதைக் கேட்டு அவனிடம் திரும்பிய சுரபி ஒன்றும் பேசாமல் அவன் முகத்தையும் விழி முகத்தையும் பார்த்துவிட்டு மீண்டும் தனது அத்தை பார்த்து திரும்பி, “பாத்தீங்களா அத்தை ஆம்பளனா இப்படி இருக்கணும். அவருக்கு சொந்தமான ஒரு பொண்ணு மேல ஒரு சின்ன கரை கூட வர விடாம எப்படி தில்லா நின்னு பேசுறார் பாத்திங்களா. இத்தனைக்கும் அவருக்கும் இந்த ஊருக்கும் சம்பந்தம் இல்லை தனியா தான் வந்திருக்காரு இருந்தும் தன்ன நம்பி வந்த பொண்ணுக்கு இந்த ஊரையே எதிர்த்து நிற்பார் போல. ஆனா பாருங்க நீங்க ஒசத்தியா நினைக்கிற உங்க பையன் கிட்ட அவர்கிட்ட இருக்குற இந்த குவாலிட்டி கொஞ்சமாவது இருக்கா” என்றாள் சாட்டையடியாக

 

 சுரபி பேச்சில் உள்ள உண்மையை உணர்ந்து கொண்ட விழி, “கடவுள் நம்மளுக்கு உண்மையிலே நல்லது தான் பண்ணியிருக்கிறாரோ. ஒருவேளை நான் பட்ட கஷ்டத்தை எல்லாம் பார்த்து என்ன தாங்குறதுக்காக என்னோட அப்பா இவரை அனுப்பி வைத்திருக்கிறாரோ” என்று முதல் முதலாக காதலுடன் செலினை பார்க்க தொடங்கினாள்.

 

 அதற்கு பதில் பார்வை பார்க்க வேண்டியவனோ, “இங்க இவ்ளோ பிரச்சனை நடந்துட்டு இருக்கு இந்த அன்பு பைய எங்க என்ன பண்ணிட்டு இருக்கான்” என்று இல்லாத அன்பை திட்டிக் கொண்டு நின்றான்.

 

 இவனின் இந்த தீட்டு அவனை சென்று அடைந்ததோ என்னவோ இவ்வளவு நேரம் விழி பற்றிய ஆராய்ச்சியில் தன் முன்னை கோபமாக உள்ள சென்ற தனது மனைவியை கூட கவனிக்காமல் இருந்தவன் இப்போதுதான் பொறுமையாக உள்ளே நுழைந்தான்.

 

 அவனைப் பார்த்ததும் இவ்வளவு நேரம் எதுவும் பேசாமல் நின்ற தமிழரசி வேகமாக அவனிடம் ஓடி வந்து, “அண்ணா பாருங்க ண்ணா இந்த அண்ணிய அன்னைக்கு என்னைய பத்தி தப்பா பேசினாங்க. இன்னைக்கு விழியையும் உங்களையும் தப்பா பேசுறாங்கனா. அதுவும் விழிய என் புருஷனுக்கு உனக்கு என்ன சம்பந்தம் அப்படின்னு கேட்டாங்கனா. அம்மாவ பாத்தி நீங்களும் ஒரு பெரிய மனுஷியா கேக்குறாங்க” என்று ஒன்றுக்கு பத்தாக அவனிடம் மாற்றி சொன்னாள் தமிழரசி.

 

 அவள் சொல்வதைக் கேட்டு ஏற்கனவே விழி தன்னிடம் பேசாதற்கு இவள் தான் காரணம் என்று அவள் மீது கோபமாக நின்றவன் எதைப்பற்றியும் ஆராயாமல் சுரபியின் கையை பிடித்து இழுத்து ஓங்கி ஒரு அரை கன்னத்தில் வைத்து, “நீ யாருடி என் விழி பத்தி தப்பா பேச உனக்கு யாரு அந்த உரிமைய கொடுத்தது. அவ யார் தெரியுமா உனக்கு. நீ மட்டும் நடுவுல வராம இருந்திருந்தா எங்க வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் தெரியுமா” என்று கோபத்தில் வார்த்தையினை விட்டு விட்டான் அந்த பொறுமையின் சிகரமான அன்பரசன்.

 

  அவன் சொன்னதை கேட்டு அனைவரும் அதிர்ந்து நிற்க அதனைக் கேட்டு சந்தோசப்பட வேண்டியவளோ, “கண்டிப்பா இப்ப நான் சந்தோஷப்படுற மாதிரி என்னோட வாழ்க்கை இருந்திருக்காது” என்றாள் ஆத்திரமாக கண்மணியின் இமைவிழி.

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!