Skip to content
Post Views: 1,417
ஆராதனா வாசுதேவன் 01
மூன்று வருடங்களுக்கு முன்னால்……….
Advertisement
“ஆரா…. எழுந்திரு. இட்ஸ் அல்ரெடி செவென்” எனது தோழி & ஹவுஸ்மேட் சோனா @ சோனாலி என்னை உலுக்கினாள்.
Advertisement
“ப்ளீஸ் சோனு டென் மினிட்ஸ்” என்றேன் கண் திறக்காமலே.
Advertisement
“இன்னிக்கு ஃபைனல் டீல் சைனிங் இருக்குன்னு சொன்ன” நான் இழுத்துப் போர்த்திக் கொண்டு சுகமாகத் தூங்குவதில் இந்த சோனாவுக்கு எப்போதும் பொறாமை.
Advertisement
“ம்ம்ம், டென் மினிட்ஸ்” என்று குப்புற புரண்டு படுத்தேன்.
“டென் மினிட்ஸ் என்ன டென் ஹவர்ஸ் கூட தூங்கு. பட் உன் லக்கி சார்ம் அது வரை இருப்பா…..” அவள் முடிக்கவில்லை. ஒரே பாய்ச்சலில் போர்வையை உதறி தள்ளி விட்டு பால்கனியை நோக்கி ஓடினேன்.
சிறு தூறலாய் மழை.
எனது முகத்தை மழை நோக்கித் திருப்பி அதன் ஸ்பரிசத்தை உள்வாங்கிச் சிலிர்த்தேன்.
இரவு முழுவதும் பெய்திருக்குமோ!. சாலைகளில் நீர் தேங்கி நின்றது. சோனா சொன்னது சரி தான். இன்னும் பத்து நிமிடங்களில் மழை நின்று போகவும் கூடும்.
“ஒஹ் சோனா ஒஹ் சோனா ஐ லவ் யூ லவ் யூ டா” என்று என் தோழியின் தோள் பற்றி ஒரு சுற்று சுற்றினேன்.
“இன்னும் எனக்கே ஐ லவ் யூ சொல்லிட்டு இரு” என்று அவள் ஆரம்பிக்கவும் “ஒஹ் லேட் ஆச்சு ஜானேமன். நான் ரெடி ஆகிட்டு வரேன். வாட்ஸ் ஃபார் ப்ரேக்ஃபாஸ்ட்” என்றபடியே பாத்ரூமில் புகுந்து கொண்டேன்.
நான் தயாராகி வர என்னை மேலும் கீழும் பார்வையால் அளந்தாள் என் உயிர்த் தோழி.
“இஸ் சம்திங் ராங்” என்னையே ஒரு முறை குனிந்து பார்த்துக் கொண்டேன்..
எம்எஸ் ப்ளூ கலரில் பிங்க் பார்டர் வைத்த வீகன் சில்க் புடவை மிகப் பாந்தமாகவே படிந்திருந்தது. ப்ளீட்ஸ் கூட சரியாகத் தான் இருந்தது.
“இட்ஸ் பர்ஃபெக்ட் அண்ட் யூ லுக் ரியலி கிரேஸ்ஃபுல் அண்ட் மெஜெஸ்ட்டிக். அண்ட் அட்வோகேட் ஆரா இஸ் ஹியர். உன்னை நேற்று தான் ஃபர்ஸ்ட் டைம் உன்னோட ஆஃபீஸில் பார்த்தேன். என்னோட ஃப்ரண்ட் ஆராதனா வா இல்ல அவ டுவின் ஆர் க்ளோனா என்று எனக்கு சந்தேகமே வந்தது. யூ வேர் டோட்டல்லி எ டிஃப்ரென்ட் பெர்சன்” என்றாள் ஆச்சரியமாக.
சோனாவும் நானும் ஐந்து வருடங்களாக இந்த மும்பை நகரத்தில் இதே வீட்டில் வசித்து வருகிறோம். எனது அலுவலகம் எங்கள் அபார்ட்மன்ட்டிற்கு அருகில் இருந்த போதும் அவள் ஒரு முறை கூட என் அலுவலகத்திற்கு வரும் சந்தர்பம் அமையவில்லை.
நேற்று வீட்டுச் சாவியை அவளது ஆஃபீசில் மறந்து வைத்து விட்டிருந்தாள். அவளை என் ஆஃபீசிற்கு வந்து சாவியைப் பெற்றுக் கொள்ளச் சொன்னேன்.
சோனாலி ஃபேஷன் டிசைனர் கம் மாடல். சோஷியல் மீடியாவிலும் அவள் பிரபலம்.. எங்களது ஐடி டீமில் இருந்த பெண்கள் அவளை சோஷியல் மீடியாவில் ஃபாலோ செய்பவர்கள் போலும். அவளைப் பார்த்ததும் அடையாளம் கண்டு சிறிது நேரம் அவளோடு பேசிக் கொண்டிருந்தனர்.
நான் வழக்கம் போல என் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். என்னை ஏதோ புதிதாகப் பார்ப்பது போல பார்த்து வைத்தாள். அதற்குத் தான் இப்போது விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறாள்.
“வீட்டில், உன்னிடம் மற்ற ஃப்ரண்ட்ஸ் கூட இருப்பது போல அலுவலகத்தில் எப்படி இருக்க முடியும் சோனா”
“ஹே. ஆஃபீஸில் அப்படி இருக்க முடியாது. எல்லோரும் அப்படித் தான். பட் யூ வேர் லைக் அனதர் பர்சன் பேப்ஸ்”
“உன்னுடைய பிரிய லட்டு கோபால் கோகுலத்தில், பிருந்தாவனத்தில் நண்பர்களோடு, கோபிகைகளோடு ராதாவோடு குறும்பு செய்து கொண்டு சுட்டித்தனமாய் இருந்தது போலவா ஹஸ்தினாபுரத்தில், குருஷேத்திரத்தில் இருந்தார். ப்ரோ எவ்வழியோ சிஸ்ஸூம் அவ்வழியே” என்றேன் அவள் கன்னம் தட்டி.
“அது என்னவோ உண்மை தான். ஆனாலும் ஆரா. அந்த மாயக்கண்ணனை அண்ணன் என்று கொண்டாட உன்னால் தான் முடியும்” என்றாள்.
“கிருஷ்ணா இஸ் மை ப்ரோ” என்று அவளிடம் முதல்முறை நான் சொன்னதும் அவள் என்னை வேற்று கிரகவாசி போலப் பார்த்ததும்…. மறக்கவே முடியாது!
ஐந்து வருடங்கள் முன் சோனாவை முதல் முறையாக இதே வீட்டில் தான் நான் சந்தித்தேன்.
அப்போது நான் மும்பை வந்த புதிது. ஓர் ஏஜென்ட் மூலம் அலுவலகத்தின் அருகிலேயே வீடு தேடி கொண்டிருந்தேன்.
ஏஜென்ட் செய்த சிறு குளறுபடியால் ஒரு ஞாயிறு காலை இதே வீட்டின் காலிங்பெல்லை அடிக்க ஓர் அழகுப் பெண் (சோனாவே தான்) கதவைத் திறந்தாள்.
கதவிற்கு நேராக லிவிங் ரூமில் இருக்கும் கண்ணனுடைய அழகோவியம் பளிச்சென்று என் கண்களில் பட்டது.
“பியூட்டிஃபுல்” என்றேன் ஓவியத்தைப் பார்த்தபடியே.
கதவைத் திறந்தவள் பின்னால் ஒரு முறை பார்த்துவிட்டு முகம் நிறைந்த புன்னகையோடு “எஸ்” என்றாள்.
அடடா நான் என்னை அறிமுகம் செய்து கொள்ளவில்லையே என்று சில நொடிகளுக்குப் பின் தான் உரைத்தது.
என்னை அறிமுகம் செய்து கொண்டு, “ஏஜென்ட் நீங்கள் இன்னும் காலி செய்யவில்லை என்று என்னிடம் சொல்ல மறந்து விட்டார் போல. நீங்கள் அனுமதி தந்தால் உள்ளே வந்து பார்க்கலாமா’ என்று அவளிடம் கேட்டேன்.
“வாட். என்ன ஏஜென்ட். நான் எதற்கு காலி செய்யணும்” என்று குழப்பமாய் கேட்டுக் கொண்டே “கம் இன்” என்று உள்ளே அழைத்தாள்.
அவளுடன் பேசிய பிறகு தான் தெரிந்தது நான் பார்க்க வந்தது பக்கத்துக்கு ஃப்ளாட் என்று.
“ஐ ஆம் சோ சாரி” என்று அவளிடம் மன்னிப்புக் கேட்க “இட்ஸ் ஓகே” என்றவள் “உங்களுக்கும் கிருஷ்ணா ஃபேவரைட் கடவுளா” என்று வினவினாள்.
நான் எதுவும் சொல்லாமல் இருக்கவும் “ஓவியத்தைப் பார்த்ததும் உங்கள் முகம் மலர்ந்து விரிந்தது. அதனால் உங்களுக்கும் கிருஷ்ணா பிடிக்கும் என்று நினைத்துவிட்டேன்” அவள் குரலில் சிறு ஏமாற்றம் தொனித்தது.
“எனக்கும் கிருஷ்ணா ரொம்ப பிடிக்கும். ஆனால் கடவுளா இல்லை. ஹி இஸ் மை ப்ரோ” என்றேன்.
முதல்முறை பார்க்கும் அந்நியப் பெண்ணிடம் என்னுடைய தனிப்பட்ட உணர்வை வெளிப்படையாக நான் சொன்னது எனக்கே ஆச்சரியம் தான்.
ஆனாலும் ‘கிருஷ்ணாவை உனக்கும் பிடிக்குமா’ என்று கேட்ட அந்த ஆர்வம், கிருஷ்ணா மேல் அவளுக்கு இருந்த பிரியம் அவளிடம் ஒரு அன்யோன்னியத்தை உண்டு பண்ணியது.
“கிருஷ்ணா இஸ் வாட்?” நான் சொன்னது விளங்கவில்லை என்பது போன்ற பாவனையுடன் மீண்டும் கேட்டாள்.
“கிருஷ்ணா என்னோட பிரதர் அதனால எனக்கும் ரொம்ப பிடிக்கும்ன்னு சொன்னேன்” என்று நான் சொல்லவும் விநோதமாகப் பார்த்தாள்.
“உங்க பிரதர் நேம் கிருஷ்ணாவா?” என்று வெகுளியாக அவள் கேட்கவும் எனக்கு சிரிப்பு வந்தது.
நான் என் அம்மா அப்பாவிற்கு ஒரே பெண். என் பேர் ஆராதனா வாசுதேவன். வாசுதேவன் என் அப்பா பேர். இதோ இந்த ஓவியத்தில் இருக்கும் கிருஷ்ணன் தான் என்னுடைய அண்ணன் என்று அவளுக்கு பொறுமையாக எடுத்துச் சொல்லியும் அவளிடம் தெளிவில்லாத ஒரு பாவம்.
“டெல் மீ. கிருஷ்ணாவோட அப்பா யாரு” என்று அவளைக் கேட்டேன்.
மிக சின்சியராக “வாசுதேவன் ரியல் டாட். நந்தகோபால் வளர்ப்பு தந்தை” என்று பதில் சொன்னாள்.
“கிருஷ்ணாவோட அப்பா வாசுதேவன். என்னுடைய அப்பாவும் வாசுதேவன். சோ கிருஷ்ணா இஸ் மை பிரதர். சிம்பிள்” என்று நான் தோளைக் குலுக்கவும்
“ஒஹ் மை குட்நெஸ். பீப்பில் ஃபால் இன் லவ் வித் கிருஷ்ணா. நண்பனாகவும் கூட பாவிப்பாங்க. ஆனா அண்ணன் என்று சொல்லும் பெண்ணை இப்போது தான் பார்க்கிறேன். அதுவும் அப்பா பேர் வாசுதேவன் அதனால தான் என்ற காரணம். இட்ஸ் அனதர் லெவல்” என்றவள் “ஐ லைக் யூ சோ மச்” என்று என்னைக் கட்டிக் கொண்டாள்.
இவளுக்காகவே பக்கத்து வீட்டை எப்படியும் பேசி முடித்து விட வேண்டும் என்று நான் மனதில் நினைத்துக் கொண்டிருக்க அவளோ என்னை ஹவுஸ்மேட்டாக இருக்கச் சொல்லிக் கேட்கவும் உடனே சரி என்று நான் சொல்வேன் என்று எதிர்பார்த்தாளாம். அவ்வப்போது அதைச் சொல்லிக் காட்டுவாள்.
சரி என்று மனதில் தோன்றிவிட்ட போதும் அதை உறுதியாகச் சொல்ல இரண்டு தினங்கள் எடுத்துக் கொண்டேன்.
“கிருஷ்ணா எதையும் நிதானமாக ஆலோசித்து தான் முடிவெடுப்பார் இல்லையா. ப்ரோ எவ்வழியோ சிஸ்ஸூம் அவ்வழியே” பின்னாளில் அவளிடம் விளக்கம் சொன்னேன்.
என்னவோ நேற்று நடந்தது போல இருக்கிறது. ஆனால் ஐந்து வருடங்கள் கடந்து விட்டன.
“நாளைக்கு நீ ஃப்ரீயா” சோனா கேட்கவும் சாண்ட்விச்சை கடித்துக் கொண்டே “ஏன்” என சைகையில் வினவினேன்.
“ஆலிபாக் வரியா போவோம். டே டைம் அங்கே ஷூட் இருக்கு. நீ வந்தா ரெண்டு நாள் ஸ்டே பண்ணிட்டு வரலாம்” என்றாள்.
“கண்டிப்பா வரேன். ஷ்யாம் ஊரில் இல்லாத போது தான் என் தோழி கூட வீக்எண்ட் என்ஜாய் பண்ண சான்ஸ் கிடைக்குது, அதை மிஸ் செய்வேனா” என்று அவளைச் சீண்டினேன்.
ஷ்யாம் பெயரைச் சொன்னாலே சோனாவின் முகம் பூரிப்பில் ஒளிரும். அதைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.
“சும்மா வம்பு பண்ணாதே. உனக்கு நேரமாகல. கிளம்பு சீக்கிரம்” என்று விரட்டினாள்,
அலுவலகம் அருகில் இருப்பதால் பொதுவாக நடந்து தான் செல்வேன். மிஞ்சிப் போனால் பத்து நிமிடங்கள் தான் ஆகும்.
மழை பெய்திருப்பதால் காரை எடுத்தேன். ரேடியோவை டியூன் செய்யவும் “ராதா கைசே நா ஜலே” என்று லகான் படப் பாடல் ஒலித்தது.
அடடா. இன்று என்ன கிருஷ்ணாவுடன் ராதாவும் என்னைச் சுற்றி வராங்க.
ஏனோ தெரியவில்லை. எனக்கு கோகுல கிருஷ்ணனை விட, ராதா கிருஷ்ணனை விட கீதை உரைத்த கண்ணனைத் தான் பிடிக்கும்.
சிறுவயதில் எப்படியோ நினைவில்லை. ஆனால் வளரும் பருவத்தில் மகாபாரதத்தின் மேல் ஓர் ஈர்ப்பு.
கண்ணன் பாண்டவர்கள் சார்பாக தூது சென்றான். எப்படி சமரசம் செய்ய முயன்றான். யார் பக்கமும் இன்றி தர்மத்தின் பக்கம் நின்றான் என்பதெல்லாம் ஆழப் பதிந்து போனதால் தான் சட்டம் பயில விருப்பம் கொண்டு கார்பரேட் லாவில் ஸ்பெஷலைஸ் செய்து இப்போது ‘MERGERS AND ACQUISITIONS’ பிரிவில் NEGOTIATION செய்து கொண்டிருக்கிறேனோ! .
இதற்கு முன் இப்படி எல்லாம் நான் யோசித்துப் பார்த்தது கூட இல்லை. எனக்கு என் வேலை ரொம்பவே பிடித்தம். ஆனால் இப்போதெல்லாம் கொஞ்சமே கொஞ்சம் போரிங்கா இருப்பது போல ஒரு உணர்வு.
என் பாஸ் மற்றும் நான் வேலை செய்யும் லால் அண்ட் ஷர்மா லீகல் கன்சல்டன்சியின் உரிமையாளர்களில் ஒருவரான ஷர்மா எனக்கு முன்பே அலுவலகத்தில் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
மில்லியன் டாலர் டீல் உறுதி செய்யப்படவிருக்கிறது. அதில் எங்கள் நிறுவனத்திற்கும் தான் நிறைய லாபம்.
ஜெர்மனியின் ஹெல்த் கேர் நிறுவனம் ஒன்று இங்கே தனது கிளைகளைப் பரப்ப எண்ணம் கொண்டு, நலிந்த நர்சிங் ஹோம்களை குறி வைத்து கபளீகரம் செய்யும் ACQUISITION PROCESSஐ பொறுப்பேற்று, ஆறு மாதம் இரவு பகலாக பாடுபட்டு அவர்களுக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறோம்.
இரு தரப்பும் அவரவர் டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸை முன்வைக்க பல கட்ட பேச்சுவார்த்தைகள் மூலம் சமரசம் பேசி ஒருமித்த ஒரு ஒப்பந்தத்திற்கு அவர்களை சம்மதிக்க வைக்கும் பெரும் பொறுப்பு எனது.
டீல் வெற்றி பெற்றதில் குளிர்ந்து போன ஜெர்மன் கம்பனியின் சேர்மேன் மில்லர் அடுத்த ACQUISITIONS எல்லாவற்றையும் எங்களிடமே ஒப்படைக்க முடிவு செய்திருக்கிறார் என்று கேள்வி.
அதனால் தான் ஷர்மா முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பின் வெளிச்சமோ.
“ஹியர் கம்ஸ் மை ஷேர்னி.. நெகோஷியேஷன் செய்வதில் சிங்கக்குட்டி” என்னுடைய மற்ற கலீக்ஸ் முன் வெளிப்படையாக பாராட்டினார்.
அது ஒன்றும் புதிதல்ல. வெற்றிக் கனியை அவர் கையில் யார் கொடுத்தாலும் பாராட்டத் தான் செய்வார்.
“ஆர் யூ நாட் ஹாப்பி?” எந்தவித உணர்ச்சிகளையும் பிரதிபலிக்காமல் புன்னகையை மட்டும் சிந்திக் கொண்டிருந்தேன் நான்.
“உங்களுடைய சந்தோஷம் எங்கள் அனைவரின் சந்தோஷம் சர்” என்றேன் சமயோசிதமாக.
“மில்லர் டீல் சைன்னிங்கிற்கு இன்று வருகிறார்” என்றவர் கான்பரன்ஸ் ஹாலுக்குச் செல்வதாகக் கூற அவருடன் எனது ஜூனியர் கரணை அனுப்பி வைத்து ஐந்து நிமிடத்தில் அங்கிருப்பதாக சொல்லி என் கேபின் நோக்கிச் சென்றேன்.
நர்சிங் ஹோமின் உரிமையாளர்கள் மற்றும் மில்லர் கையொப்பமிட டீல் வெற்றிகரமாக முடிந்ததன் அடையாளமாக அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டினர்,
டேக் ஓவர் செய்தவர் டேக் ஓவர் செய்யப்பட்டவர் இருவர் முகத்திலும் நிறைந்த மகிழ்ச்சி. உண்மையில் அவர்கள் மகிழ்ச்சியைக் கண்டு நான் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்க வேண்டும்.
ஆனால் என் மனதில் அமைதியும் நிறைவும் மட்டுமே. என் பணியை நான் சரியாகச் செய்து முடித்திருக்கிறேன் என்ற நிம்மதி. அவ்வளவு தான்.
“மேம், ஹவ் டூ யூ டு இட். மெர்ஜெர் என்றால் கூட புரிந்து கொள்ளலாம். ஆனால் இட்ஸ் டேக் ஓவர். எப்படி இரண்டு பார்ட்டிகளாலும் சந்தோஷமாக இருக்க முடிகிறது. நானும் இரண்டு வருடங்களாக கவனித்துக் கொண்டு இருக்கிறேன். இன்று உங்களிடம் கேட்டே விட்டேன்”
MERGERS AND ACQUSITIONS துறையில் லீகல் டீம் மட்டுமல்லாமல் ஃபைனான்ஸ் டீம், ஐடி டீம், சப்போர்டிங் டீம் என்று பல வகை துறையினரும் அடக்கம். இப்படி என்னை கேட்டுக் கொண்டிருப்பது ஃபைனாஸ் ஹெட் அஷ்வத்.
“ஐ டூ வாட்ஸ் ரைட். மற்றபடி உங்கள் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை” என்றேன் பணிவாக.
நர்சிங் ஹோம் உரிமையாளர்கள் மற்றும் மில்லர் இருவரும் என்னிடம் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்து பாராட்டும் தெரிவித்தனர்.
“ஸீ யூ அட் தி பார்ட்டி டு நைட்” என்று கூறி விடைபெற்றனர்.
மணி மதியம் ஒன்று தான் ஆகியிருந்தது. மொத்த டீமுக்கும் ஷர்மா லஞ்ச் ஏற்பாடு செய்திருந்தார்.
லஞ்ச் முடிந்ததும் அனைவருக்கும் அரை நாள் விடுமுறை அளித்து பார்ட்டியில் சந்திப்பதாகச் சொல்லிச் சென்றார்.
என் ஜூனியர் கரண் வீட்டிற்குச் செல்லாமல் என்னுடன் என் கேபின் வரவும் அவனை ஏன் என்பது போலப் பார்த்தேன்.
“அன்று ஏன் மேம் இட்ஸ் குட் பட் லிட்டில் போரிங் என்று சொன்னீங்க. அப்போவே கேட்டிருப்பேன். டீல் முடியவும் கேட்கலாம் என்று காத்திருந்தேன்”
கரண் கேட்கவும், ‘ஆஹா இப்போதெல்லாம் அடிக்கடி இந்த சிந்தனை வந்து கொண்டிருக்கிறதே’ என்று நினைத்துக் கொண்டேன்.
“டீல், நெகோஷியேஷன். இட் வாஸ் ஈஸி. உனக்கு அப்படித் தோன்றவில்லை?“ அவனிடமே கேள்வி கேட்டேன்.
கரண் எனக்குத் தான் ஜூனியர். ஆனால் நிறுவனத்தில் சீனியர் லீகல் அட்வைசராக இருக்கிறான். பல முன்னணி சட்ட நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவன். பல டீல்களை அவன் தலைமையில் வெற்றிகரமாக முடித்தும் இருக்கிறான்.
“மேம்” என்ன பதில் சொல்லாமல் என்னிடம் கேள்வியைக் கேட்டு வைக்கிறீர்கள் என்பது போல இருந்தது அவன் முகபாவம்,
“நோபடி சாலஞ்சஸ் மீ. கொஞ்சம் அழுத்தம் கொடுத்து பாயின்ட்டை விளக்கிச் சொன்னதும் சுலபமாக ஒத்துக் கொண்டு விடுகிறார்கள். அது உனக்குப் போரிங்காக இல்லை” மீண்டும் கேள்வி கேட்டு வைத்தேன்.
“மேம். யூ ஆர் சோ யுனிக். இப்படி கூட ஒருவர் ஃபீல் செய்வாங்களா”
“யூ நோ சம்திங். மகாபாரதத்தில் கிருஷ்ணருக்கே டஃப் கொடுத்தவர் யார் தெரியுமா. தி கிரேட் சகுனி மாமா. அவர் இல்லைனா மகாபாரதமே இல்லை. குருஷேத்திர போர் நடந்திருக்காது, கீதாசாரம் இந்த உலகத்திற்குக் கிடைத்திருக்காது. எ ஸ்ட்ராங் அப்போனன்ட் மேக்ஸ் யுவர் விக்டரி வொர்த் இட். சிங்கம் முயலை வேட்டையாடுவதில் என்ன பெரிய வெற்றி இருக்க முடியும். ஒரு புலியோடு மோதும் போது தான் அதை வெற்றிக் கொள்ளும் போது தான் காட்டின் ராஜா நான் என்று பெருமை பட்டுக் கொள்ள முடியும்” நான் சொல்வதை மறு பேச்சில்லாமல் கவனமாகக் கேட்ட போதும் என்னை வினோதமாகப் பார்த்தான்.
“லீவ் இட்.. கியர் அப் ஃபார் தி பார்ட்டி” அவனை கிளம்பச் சொல்லி நானும் வீடு வந்து சேர்ந்தேன்.
“எப்படியும் பார்ட்டி ட்ரஸ் போட மாட்டே. அதே புடவையை தான் சுற்றிக் கொண்டு போகப் போற” என்று கிண்டலாகக் கூறினாள் சோனா.
சோனா என்னை ஒரு டம்மியாக்கி அவள் டிசைன் செய்யும் ஆடைகளை அணிவித்து பார்ப்பது வழக்கம். ஆனால் அதை எல்லாம் அலுவலக பார்ட்டிக்கு ஒரு போதும் அணிந்து செல்ல மாட்டேன் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும்.
“யாருமே பார்ட்டிக்குப் புடவை கட்டிக் கொண்டு போக மாட்டாங்க தெரியுமா” சோனா விவாதம் செய்யத் தொடங்கினாள்.
“யூ ஆர் ரைட். பட் லால் சர் வைஃப் சாரி தான் உடுத்திக் கொண்டு வருவாங்க. ஃபோட்டோஸ் பார்த்திருக்கிறாய் தானே” என்றேன்.
பி.கே.லால் எங்கள் நிறுவனத்தின் இன்னொரு உரிமையாளர். சிவில், கிரிமனல் கேஸ் அவரது ஸ்பெஷாலிட்டி.
கார்பரேட் பக்கம் அவர் மூக்கை நுழைப்பதில்லை என்ற போதும் இது போன்ற பார்ட்டிகளுக்கு வருகை தருவார்.
“அது எல்லாம் சாரியில் சேர்த்தியே இல்லை” சோனா என்னைப் பார்த்து நக்கலாகச் சொல்லவும் இருவரும் வாய்விட்டுச் சிரித்தோம்.
“யூ வில் பி ஆட்(ODD) மேன் அவுட். தேர். உனக்கு வியர்டா இருக்காதா”
“வானம் முழுக்க நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டு இருக்கு. நான் மட்டும் நிலவா இருக்கேனேன்னு நிலா ஆட்(ODD) மேன் அவுட்டா நினைக்குதா என்ன”
“நீ லாயர் என்பதை நான் மறுந்துட்டேன் டார்லிங். நான் என் கேஸை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்” என்று அவள் சொல்லவும் அதற்கும் சேர்ந்து சிரித்தோம்.
பார்ட்டி எப்போதும் போல வழக்கமாக சென்று கொண்டிருந்தது.
ஷர்மா சிறு சொற்பொழிவிற்குப் பின் ஷேம்பெயினை ஓபன் செய்ய ஒஹ் என்ற ஆரவாரத்தோடு அனைவரும் கொண்டாட்ட மூடில் திளைத்தனர்.
லால் மற்றும் அவரது மனைவியுடன் நான் பேசிக் கொண்டிருந்த போது யாரோ என்னையே கவனித்துக் கொண்டிருப்பது போல ஓர் உள்ளுணர்வு.
சற்றே நான் திரும்பிப் பார்க்க என் பார்வையில் பட்டார் அந்த மனிதர். அவரைப் பார்த்ததும் என் கண்களில் மின்னல்.
நான் அவரை அடையாளம் கண்டு கொண்டதை அவரும் அறிந்து கொண்டு லேசாகப் புன்னகை புரிந்தார்.
ஷர்மா மற்றும் மில்லருடன் பேசிக் கொண்டிருந்தார் அவர். இவர் எப்போது வந்தார். நான் கவனிக்கவே இல்லையே என்று நினைத்துக் கொண்டே அவரை நோக்கிச் சென்றேன்.
அவரும் அவர்களிடம் இருந்து விடை பெற்று ஆரவாரம் அற்ற காரிடர் நோக்கி நடந்தார்.
காரிடரின் கண்ணாடி ஜன்னலில் முத்து முத்தாய் மழைத் துளிகள்.
அதை பார்த்துக் கொண்டிருந்தவர் நான் அருகில் வரவும் மீண்டும் புன்னகைத்தார்.
நர்சிங் ஹோமின் நிறுவனர். சிறு க்ளினிக்காக ஆரம்பித்து சிறுகச் சிறுக விரிவாக்கம் செய்து நர்சிங் ஹோமை உருவாக்கி ஒரு சேவையாக செய்து வந்த டாக்டர்.
வாரிசுகள் மருத்துவம் பயிலவும் இல்லை. சேவையைப் பற்றி சந்திக்கவும் இல்லை. வாய்ப்பு கிடைத்தவுடன் ஜெர்மன்காரனுக்கு தாரை வார்த்துக் கொடுக்க முடிவு செய்துவிட்டிருந்தனர்.
மகன்கள் கட்டாயப்படுத்த டாக்டரும் வேறு வழியின்றி சம்மதித்து இருக்க வேண்டும், மகன்களுக்கு பவர் எழுதிக் கொடுத்தவர் முற்றிலும் ஒதுங்கியே இருந்தார்.
இந்த விவரங்கள் அனைத்தையும் நான் அறிந்திருந்த போதும் டாக்டரை நேரில் இன்று தான் பார்க்கிறேன்.
இரு கரம் கூப்பி நான் அவரை வணங்கவும் என் கரம் பற்றிக் கொண்டு என் கண்களைப் பார்த்துப் பேசினார்.
“இன்று மதியம் தான் அனைத்தையும் படித்துப் பார்த்தேன். ஒரு நிமிடம் என் கண்களை என்னால் நம்பவே முடியவில்லை. இதை எப்படி எல்லோரும் ஒப்புக் கொண்டார்கள் என்ற கேள்வி என்னைக் குடைந்து கொண்டே இருந்தது. உன்னை இதற்கு முன் நான் பார்த்தது கூட இல்லை. ஆனால் இதை நீ டீல் செய்கிறாய் என்று அறிந்து முகம் அறியாத உன் மேல் துளி வருத்தம் இருந்தது. ஆனால் டீலை வாசித்ததும்…… மிஸ் வாசுதேவன் ரைட்?” அவர் பேசப் பேச என் மனதில் குட்டி குட்டியாக மகிழ்ச்சி குமிழ்கள்.
“ஆராதனா…. ஆராதனா வாசுதேவன்” என்றேன் நிறைந்த புன்னகையோடு.
“ஏன்? எதற்கு? எப்படி?” வெகு சுலபமாக மூன்றே வார்த்தைகளில் ஒராயிரம் கேள்விகளைக் கேட்டுவிட்டார்.
என்னிடம் அனைத்திற்கும் ஒரே பதில்.
ஸ்வதர்ம மபிசாவேக்ஷ்ய ந விகம்பிதுமர்ஹஸி
தர்ம்யாத்தி யுத்தாச் ச்ரேயோன்யத்
க்ஷத்ரியஸ்ய ந வித்யதே (பகவத் கீதை 2:31)
{ஒரு போர்வீரனின் கடமையைக் கருத்தில் நீ கொள்வாயேயானால் நீ தளரக் கூடாது. உண்மையில், ஒரு போர்வீரனுக்கு நீதியை நிலைநிறுத்துவதற்காக போராடுவதை விட சிறந்தது எதுவும் இல்லை}
“லாயர்களுக்கும் இது பொருந்தும் தானே”
நான் சொல்லவும் புரிந்து கொண்டதன் அடையாளமாக ஆசிர்வதிப்பது போல என் தலையில் கரம் பதித்தார்.
திஸ்….திஸ் இஸ் மை ரியல் ஹாபினஸ்.,.
error: Content is protected !!