Skip to content
Post Views: 1,103
ஆராதனா வாசுதேவன் 06
“விக்ரம். விக்ரம் பார்த்தசாரதி” என் காதில் மீண்டும் மீண்டும் எதிரொலித்துக் கொண்டிருந்தது.
இவனா! விக்ரம்! விக்ரம் பார்த்தசாரதி! இவன் இங்கே எப்படி!
நானும் தான் எப்படி மிஸ் செய்தேன். சஞ்சயிடம் இவனைப் பற்றிய தகவல் சேகரிக்க சொன்ன போது நான் தான் போட்டோ, பர்சனல் லைப் பற்றிய விவரங்கள் எல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டிருந்தேன். இருந்தும் அவர் அர்ஜூனை மென்ஷன் செய்திருந்தார்.
Advertisement
எனக்குத் தேவையான தகவல்கள் அனைத்தும் கிடைத்துவிடவே ஆன்லைனில் இவனைப் பார்க்க கூட தோன்றவில்லை எனக்கு.
இல்லையென்றால் இப்படி அதிர்ச்சியாக அமர்ந்திருக்க மாட்டேன் நான். திஸ் இஸ் எ லெசன்.
லால் சர் இவ்வளவு பெரிய நிறுவனத்தை நிறுவியவர் மட்டுமல்ல ஐம்பது வயதான அனுபவமிக்க லீடிங் கிரிமினல் லாயரும் கூட.
Advertisement
அவரை விட வயதில் மிகவும் சிறியவன் ஒரு கையை உயர்த்தி அவரைப் பேசாதே என்று நிறுத்தக் கூடுமானால் இவன் உண்மையில் பவர்ஃபுல் பர்சனாக இருக்க வேண்டும் என்பதை நான் அப்போதே உணர்ந்து இருக்க வேண்டும்.
Advertisement
இவனை தெரியவில்லை என்று நான் சொல்லவும் எல்லோரும் ஏன் அதிர்ச்சியாகப் பார்த்தனர் என்று இப்போது புரிகிறது.
எனது அதிர்ச்சியையும் குழப்பத்தையும் கண்டு கொண்டு விட்டான் என்பதை அவனது பரிகாச பார்வை உணர்த்தியது.
சோ இது அவனது வியூகம். என்னை எப்படியோ தெரிந்து கொண்டிருக்கிறான்.
Advertisement
நான் அபிமன்யூ இல்லை அவனது வியூகத்தில் சிக்கிக் கொண்டு விட. நான் ஆராதனா வாசுதேவன்.
“நைஸ் டு மீட் யூ விக்ரம். விக்ரம் பார்த்தசாரதி” மலர்ந்த புன்னகையோடு அவன் முன் கரம் நீட்டினேன்.
ஒரு கார்பரேட் லாயரின் தொழில் தர்மம் தனது க்ளையன்ட்டிற்குச் சாதகமாக டீலை முடித்துத் தருவது.
அதே சமயம் எனது க்ளையன்டிற்குச் சாதகமாக அமைவது எதிர்தரப்பினருக்குப் பாதகமாக அமைந்து விடக் கூடாது என்பதில் நான் மிகுந்த கவனமாக இருப்பேன். எனது வெற்றிகளை விட அந்த வெற்றிகளை எப்படி அடைகிறேன் என்பது எனக்கு ரொம்பவே முக்கியம்.
ஐ ஆம் நாட் ரிஜிட். கார்பரேட் லாவில் நெளிவு சுளிவுகள், லூப் ஹோல்ஸ் இதில் சாதகமானதைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். . ஆனால் ஒரு போதும் எதிக்ஸ் மீறியதில்லை.
எதிக்ஸ்ஸை மீறி காம்ப்ரமைஸ் செய்யும் சூழ்நிலை இது வரை எனக்கு ஏற்பட்டது இல்லை. அப்படி ஏற்பட நான் விட்டதில்லை என்று சொல்லலாம்.
இதற்கு முன் சில ப்ராஜக்ட்களை நான் ஏற்க மறுத்திருக்கிறேன். க்ளையன்ட்டின் கண்டிஷன்ஸ் எதிக்ஸ்ஸை மீறிய ஒன்றாக இருந்த சமயங்களில். அப்போதல்லாம் என் கருத்துக்கு மதிப்பு கொடுத்து ஷர்மா க்ளையன்ட்டையே தவிர்த்து விடுவார். தவிர்க்க முடியாத ஓரிரு சூழ்நிலைகளில் அவரே டீல் செய்து கொள்வார்.
விக்ரமின் கண்டிஷன்ஸ் நெறிமுறைகளை மீறியது என்று ஷர்மாவிடம் எடுத்துச் சொல்லி என்னால் இந்த டீலை ஏற்க முடியாது என்று மறுக்க முடியும்.
லால் பகிரங்கமாக விக்ரமை க்ளையண்டாக அறிவித்து விட்டார். அவனை தவிர்ப்பது என்பது நாட் பாசிபிள். ஷர்மா இதை டீல் செய்து கொள்வார் தான். ஆனால் விக்ரம் எங்கள் நிறுவனத்தின் க்ளையன்ட் எனும் போது ஷ்யாமிற்கு ஆதரவாக என்னால் எதுவும் செய்ய முடியாது.
அப்படி செய்தால் என் தொழில் தர்மத்திற்கு என் நிறுவனத்திற்கு எதிராக நான் செயல்படுவதாக ஆகிவிடும்.
எனக்கு சோனாவும் ஷ்யாமும் முக்கியம். அவர்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறேன். இந்த டீலில் உதவுவதாக ப்ராமிஸ் செய்திருக்கிறேன்.
நான் அறிந்த வரையில் ஷ்யாம் பக்கம் நியாயம் இருக்கிறது. இல்லையென்றால் அவனுக்கு உதவுதாக நான் ப்ராமிஸ் செய்திருக்கவே மாட்டேன், அவனைத் திருத்தவும் செய்திருப்பேன்.
நான் ஏன் விக்ரமிற்கு எடுத்துச் சொல்லக் கூடாது. அவன் செய்வது மாரலி சரியில்லை என்று சொன்னால் கேட்டுக் கொள்வானா?
முயற்சி செய்து பார்க்காமல் அவன் கேட்பானா மாட்டானா என்று எனக்கு எப்படித் தெரியும்.
ஷ்யாம் மூலம் விக்ரம் எனக்கு அறிமுகம் ஆகாமல் இருந்திருந்தால் நானும் விக்ரமும் பேமிலி ஃப்ரண்ட்ஸ் என்ற முறையில் சந்தித்திருப்போம்.
நவராத்திரி லீவிற்கு தான் அடுத்து சென்னை வருவேன் என்று நான் பார்த்தசாரதி அங்கிளிடம் சொன்ன போது அவர்கள் வீட்டு கொலுவிற்கு கண்டிப்பாக வரணும் என்று இன்வைட் செய்தாரே. நல்ல சூழ்நிலையில் நண்பர்களாக நாங்கள் சந்தித்திருப்போம்.
விக்ரமை நேரில் பார்க்கும் வரை அவனை எதிராளியாகத் தான் நினைக்கத் தோன்றியது.
போர்ட் ரூமிற்குள் நுழைந்த போது என்னைப் பார்த்த துளைக்கும் பார்வை அவன் யார் என்று நான் கேட்ட போது ஆச்சரியமாக மாறியது. இப்போது என்னை இக்கட்டில் சிக்க வைத்து விட்டதில் வெளிப்படும் பரிகாசம் கலந்த வெற்றிப் பார்வை.
அவன் சொல்லிக் கொண்டிருக்கும் எதற்கும் நான் எதுவும் ரியாக்ட் செய்யாமல் அமைதியாகத் தானே இருக்கிறேன். அதில் அவனுக்கு கொஞ்சம் ஆச்சரியம் வந்திருக்குமோ?
ஒரு டிராமா எதிர்பார்த்து வந்திருப்பானோ! ஷர்மா வேறு ஷேர்னி என்று என் புகழ் பாடிக் கொண்டிருக்கிறார். பெண் சிங்கம் போல கர்ஜிப்பேன் என்று எதிர்பார்த்தானோ!
நெகோஷியேஷன் செய்யும் போது எதிர்தரப்பினர் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் அவர்கள் மனதில் என்ன எதிர்பார்ப்பு இருக்கிறது என்று யூகிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
விக்ரமின் மனதில் என்ன எண்ணங்கள் ஓடிக் கொண்டு இருக்கக் கூடும் என்று என்னால் கெஸ் செய்ய முடிகிறது.
என்னைக் கார்னர் செய்து விட்ட பெருமிதம், நீ இனி என்ன செய்து விட முடியும் என்ற பரிகாசம் நிச்சயம் இருக்கிறது. அவன் மகிழ்ச்சியாக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
ஆனால் இது வெறும் மகிழ்ச்சி என்று தோன்றவில்லை எனக்கு. அவனுக்கு ஏற்படும் மகிழ்ச்சி என்னை வெல்வதாலா? இல்லை ஷ்யாமை வெல்வதாலா?
எது எப்படி என்றாலும் அவனிடம் நான் ஏன் பேசிப் பார்க்கக் கூடாது. அவனைப் பொறுத்த வரை என்னை சிக்க வைக்க அவன் வகுத்த வியூகமாக இருக்கலாம். ஆனால் எனக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.
இங்கேயே இப்போதே ஷ்யாமின் டீலைப் பேசி முடித்து விடலாம். அப்புறம் விக்ரம் எங்கள் க்ளையண்டாக இருக்கும் பட்சத்தில் இட் வில் பி இன்ட்ரஸ்டிங் டு வொர்க் வித் ஹிம்.
லாயர் என்ற வகையிலும், ஃபேமிலி ஃப்ரண்ட் என்ற வகையிலும் அவன் தவறான முடிவுகள் எடுத்தால் நான் திருத்த முயற்சி செய்ய முடியும்.
கிருஷ்ணர் செய்யவில்லையா! கவுரவர்களிடம் தூது சென்றாரே! அவர்களுக்கு எடுத்துச் சொல்லி நல்வழிப் படுத்த முயற்சி செய்தாரே!
ஐ ஷூட் ஃபாலோ மை ப்ரோ.
முதலில் இந்த போர்ட் ரூமை விட்டு வெளியேற வேண்டும். இவ்வளவு ஆடியன்ஸை வைத்துக் கொண்டு என்னால் விக்ரமிடம் பேச முடியாது.
“சர் மீட்டிங் அஜெண்டா இது மட்டும் தானா இல்லை வேறு ஏதேனும் இருக்கிறதா” லாலிடம் நான் கேட்க “இது மட்டும் தான்” என்றார்.
“தென் ஷால் வி டேக் இட் ஃபரம் ஹியர் ஷர்மா சர். உங்கள் சேம்பரில் மிஸ்டர் விக்ரமுடன் விரிவாக விவாதிக்கலாம்” விக்ரமின் முகத்திலிருந்து என் பார்வையை அகற்றாமலே ஷர்மாவிடம் சொல்ல ஷர்மாவோ விக்ரமிற்கு ஓகேவா என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
“வை நாட்” ஷர்மாவிற்கு பதில் சொன்னாலும் அவன் பார்வை என் மீது தான் இருந்தது. அந்தப் பார்வையில் வெற்றிப் பெருமிதம் கொட்டிக் கிடந்தது.
மீட்டிங் முடிந்து விட்டது என்று லால் அறிவிக்க மற்ற அனைவரும் எழுந்து சென்றனர்.
நகுலும் அஷ்வத்தும் நான் வருகிறேனா என்று சைகையில் வினவ “யூ கேரி ஆன்” என்று அவர்களிடம் சைகையிலேயே சொல்லவும் அவர்கள் அங்கிருந்து சென்றனர்.
அந்த அறையில் இருந்த புதியவர்கள் இருவர் விக்ரம் அருகில் வந்து நின்றனர்.
அவர்களிடம் அவன் என்ன சொன்னானோ அவர்களும் அங்கிருந்து வெளியேறினர்.
“ஷர்மாவும் ஆராதனாவும் உங்களுக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருப்பார்கள், நான் விடைபெறுகிறேன்” என்று லால் அவனிடம் கைகுலுக்கியபடியே அவன் அனுமதியைக் கேட்டு நின்றார்.
வெறுமனே தலையை மட்டும் அசைத்தான்.
பெரியவர் என்ற கர்டஸி கூட இல்லாமல் இதென்ன பிஹேவியர். ரொம்பவே திமிர் பிடித்தவன் தான் இவன். இவனிடம் பேசி புரிய வைப்பது கஷ்டம் தான். பட் தட்ஸ் தி சேலேஞ்.
ஷர்மா முன் நடக்க நான் எனது லாப்டாப்பை எடுத்துக் கொண்டு டேபிளை சுற்றி வந்து விக்ரம் எழுந்து வருவதற்குக் காத்திருந்தேன்.
அவனது கிரட்சை ஒரு கையில் மாட்டிக் கொண்டு மற்றொரு கரத்தால் டேபிளை ஊன்றி மெல்ல எழுந்தான்.
“ப்ளீஸ் கம்” என்று அவனுடன் சேர்ந்து நடந்தேன். அவனுக்காக கதவைத் திறந்து அவன் நடைக்கு ஏற்ப அவனுடன் சேர்ந்தே நடந்து வந்தேன்.
நான் விக்ரமுடன் வருவதைக் கண்ட ஷர்மா ஃபோனில் யாருடனோ பேசிக் கொண்டே முன்னே சென்று விட்டிருந்தார்.
லிஃப்ட் வந்ததும் அவனை முன்னே செல்லவிட்டு நான் பின் நுழைந்து எங்கள் தளத்திற்கான பட்டனை அழுத்தினேன்.
“அப்புறம் விக்ரம். அங்கிள் நல்லா இருக்காங்களா” நானும் அவனும் மட்டுமே லிஃப்டில் இருக்கவும் அவனிடம் தமிழில் பேசினேன். ஓர் அதிர்வுடன் என்னைப் பார்த்தான்.
“அங்கிள்?” கேள்வியாக அவன் கேட்ட வார்த்தையில் சிறு தடுமாற்றம் இருந்தது.
“பார்த்தசாரதி அங்கிள்” நான் சொல்லவும் அவன் முகத்தில் புரிந்து கொள்ள முடியாத பாவனைகள். ஆனாலும் எதையும் காட்டிக் கொள்ளாமல் “ஹி இஸ் ஃபைன்” என்றான்.
அவன் அப்பாவின் ஃப்ரண்ட் வாசுதேவன் பொண்ணு நான் என்று அவனுக்குத் தெரியதோ! அவன் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
எங்கள் தளம் வந்ததும் அவனை முன்னே செல்ல விட்டு நான் வெளியேறினேன்.
“இந்தப் பக்கம்” என்று நான் வழிகாட்ட ஷர்மாவின் அறையை நோக்கி நடந்தோம்.
ஷர்மா ஏற்கனவே அவர் அறையில் அமர்ந்திருந்தார்.
எங்களைக் கண்டதும் எழுந்து நின்று விக்ரம் அமர இருக்கையைக் காட்டி அவன் அமர்ந்ததும் அவரின் இருக்கையில் சென்று அமர்ந்தார்.
ஆக மகாராஜா சிம்மாசனத்தில் உட்கார்ந்த உடன் தான் மற்றவர்கள் உட்கார வேண்டும் போல.
நான் எனது இருக்கையை விக்ரம் பக்கமாக திருப்பி அவனைப் பார்த்தவாறு அமர்ந்து கொண்டேன்.
ஷர்மா அங்கிருந்தததால் ஆங்கிலத்திலேயே பேச ஆரம்பித்தேன்.
“மிஸ்டர் விக்ரம். லால் சர் சொன்னது போல நீங்கள் எங்கள் க்ளையண்டாக இருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. உங்களுக்கு நிறைய டீல்ஸ் முடித்துக் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” நான் சொல்லவும் ஷர்மா ஆமாம் என்று தாளம் போட்டார்.
இதைத் தான் நான் எதிர்பார்த்தேன் என்றது அவனது பார்வை.
“மிஸ்டர் விக்ரம். தி பெஸ்ட் திங் இஸ் உங்களோட முதல் டீலை இப்போதே முடித்துக் கொள்ள முடியும். ஷ்யாம் இஸ் மை ஃப்ரண்ட். அந்த டீல் பற்றிய எல்லா விவரங்களும் எனக்குத் தெரியும், உங்கள் முதல் மீட்டிங் உட்பட” ஷர்மாவிடம் ஷ்யாம் யார் அவன் எனக்கு எப்படித் தெரியும் என்று சொல்லி டீலின் விபரங்களையும் சொல்லி முடித்தேன்.
“ஒரு லாயராக டீலில் சரியில்லாத டெர்ம்ஸ் பற்றி க்ளையன்ட்டுக்கு எடுத்துச் சொல்வது எங்கள் கடமை. உங்கள் எக்ஸிட் கிளாஸ் சரியானது இல்லை மிஸ்டர் விக்ரம், அண்ட் ஷ்யாம் சிக்ஸ்டி பர்சென்ட் அவரிடம் வைத்துக் கொள்ள கேட்பதும் நியாயமான ஒன்றே” நான் சொல்லி முடிக்கவில்லை. மேஜை மீது ஓங்கித் தட்டினான் விக்ரம்.
“லுக் ஆராதனா. உன்னை ஹையர் செய்திருப்பது என் டெர்ம்ஸ் படி டீலை முடித்துக் கொடுக்கத் தான். ஹவ் டேர் யூ டிக்டேட் மீ” கோபத்தில் சிவந்தே போனது அவன் முகம், அப்படி ஒரு உஷ்ணம் அவன் கண்களில்.
திமிர் பிடித்தவன், அகங்காரம் கொண்டவன் என்பதோடு கோபக்காரனுமா இவன்!. இன்னும் வேறென்ன நல்ல்ல்ல்….ல குவாலிடீஸ் எல்லாம் வைத்திருக்கிறானோ!
ஷர்மா பாவம் அதிர்ந்து போய்விட்டார்.
“மிஸ்டர் விக்ரம். ஆராதனா என்ன சொல்ல வருகிறா என்றால்” என்று அவனிடம் ஷர்மா விவரிக்க முயல அவரைப் பார்த்தான் ஒரு பார்வை.
“மிஸ்டர் ஷர்மா. யூ டூ வாட் ஐ சே. நான் எப்படி சொல்கிறேனோ அப்படித் தான் டீலை முடித்துக் கொடுக்க வேண்டும்” மிக அழுத்தமாக விக்ரம் சொல்லவும் ஷர்மா என்னைப் பார்த்தார்.
நான் முடியாது என்று பார்வையாலேயே அவரிடம் சொன்னேன்.
என்ன செய்வது என்று அவரும் பார்வையிலேயே என்னிடம் கேட்டுக் கொண்டிருந்த போது அவர் நல்ல நேரம் அவரின் மொபைல் ஒலித்தது. முக்கியமான கால் என்று சொல்லி அவனிடமிருந்து தப்பித்தால் போதும் என்று அங்கிருந்து வெளியேறினார்.
நான் இன்னும் நன்றாக அவன் பக்கமாகத் திரும்பி இரு கைகளையும் குறுக்கே கட்டிக் கொண்டு நிதானமாக அவனைப் பார்த்தேன்.
என் பார்வையில் என்ன கண்டானோ! கண்களை ஒரு முறை இறுக மூடினான். அவன் கோபம் மெல்ல வடிந்தது.
“மிஸ்டர் விக்ரம் திஸ் இஸ் நாட் ரைட். ஷ்யாம் என் ஃப்ரண்ட் என்பதால் நான் அவன் பக்கம் பேசவில்லை. யூ ஆர் ஆல்சோ மை ஃபேமிலி ஃப்ரண்ட். ஷ்யாம் இதே போல சரியில்லாத டெர்ம்ஸ் வைத்திருந்தால் அவனுக்கும் எடுத்துச் சொல்லியிருப்பேன். உங்கள் பக்கம் நின்றிருப்பேன். யூ ஷுட் அன்டர்ஸ்டான்ட்” மிகவும் பொறுமையாக ஒவ்வொரு வார்த்தைக்கும் அழுத்தம் கொடுத்துச் சொன்னேன்.
நான் சொல்வது சரி என்று அவன் உணர்ந்தது போல இருந்தது ஒரு நொடி தான். எதையோ நினைத்துக் கொண்டவன் போல லேசாக தலையை அசைத்தவன்,
“எது சரி என்று நீ சொல்லித் தெரிந்து கொள்ள நான் ஷ்யாம் இல்லை. நான் விக்ரம். விக்ரம் பார்த்தசாரதி. உனக்கு வேறு வழியில்லை பெண்ணே. இந்த விக்ரம் சொல்லும் வழியில் நடப்பதைத் தவிர உனக்கு வேறு வழியில்லை” மிகவும் அதிகாரமாகச் சொன்ன போதும் அதில் கோபம் இருக்கவில்லை.
செய்வது தவறு என்று அவனுக்கும் தெரிந்தே தான் இருக்கிறது. அப்படியும் ஏன் இப்படிச் செய்கிறான்.
“மிஸ்டர் விக்ரம். நான் சொன்னதை கன்சிடர் பண்ணுங்க. உங்களுக்கே நான் சொல்வது சரி என்று புரியும். டேக் யுவர் டைம்” அவன் நல்ல மூடில் இருக்கும் போதே மீண்டும் வலியுறுத்தினேன்.
“ஆராதனா” என்றவன் குரலில் இப்போது கோபம் திரும்பி இருந்தது.
“ஷ்யாம் பாவம் காத்திருக்கான். எனக்காக. என் சொல்லுக்காக… நீ அவனைக் குழப்பாமல் இருந்திருந்தால் இந்நேரம் டீல் முடிந்திருக்கும். அவனும் சந்தோஷமாக இருந்திருப்பான். நானும் உனக்கு டைம் கொடுக்கிறேன். இரண்டு நாட்கள் எடுத்துக் கொள். மன்டே வி வில் மீட் இன் மை ஆஃபீஸ். ஷ்யாமுடன் டீல் முடிக்கத் தயாராக வா. என் லாயராக” இதற்கு மேல் பேச ஒன்றும் இல்லை என்பதாக எழுந்தான் அவன்.
நான் இருக்கையிலேயே அமர்ந்திருந்தேன். என்னை நோக்கி ஒரு பார்வையை வீசியவன் கதவை நோக்கி நடந்தான். நான் அப்போதும் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை.
கதவின் ஹான்டிலில் ஒரு கரம் பதித்தபடி திரும்பி என்னைப் பார்த்தான்.
“நீ ஷேர்னியாக இருக்கலாம். ஆனால் புலியின் முன் சிங்கமும் அடிபணிந்து தான் போக வேண்டும்” திமிரும் ஏளனமும் அவனது குரலில் ஒலிக்கத்தான் செய்தது.
அதற்கு மேல் எதையும் சொல்லாமல் அறையின் கதவை திறந்து கொண்டு வெளியேறினான் விக்ரம் பார்த்தசாரதி. மூடிய கதவைப் பார்த்தபடியே சிறிது நேரம் அமர்ந்திருந்தேன்.
கோபத்தில் டேபிள் மேல் கையை ஓங்கி அடித்தானே. அவனுக்குத் தானே வலித்திருக்கும். அது ஏன் அவனுக்குப் புரியவில்லை.
தவறான வழியில் ஒரு காரியத்தைச் செய்தால் ஒரு நாள் அது திரும்பத் தாக்கும் என்று ஏன் அவனுக்குத் தெரியவில்லை.
எவ்வளவு கோபம். அது அவனைத் தான் எரிக்கும், ஹி வில் கெட் ஹர்ட்.
ஆனால் நான் என்ன செய்ய முடியும். என்னால் முடிந்த வரை முயற்சி செய்து விட்டேன்.
கிருஷ்ணரும் முயற்சி செய்தார். கவுரவர்கள் அவர்கள் தவறைத் திருத்திக் கொள்ள வாய்ப்பு கொடுத்தார். அவரின் முயற்சியே வெற்றி பெறவில்லை. போரைத் தவிர்க்க முடியவில்லை.
விக்ரம் இரண்டு நாள் டைம் கொடுத்திருக்கிறான். ஆனால் முடிவை தீர்மானித்து விட்டு தான் அவனிடம் நான் பேசவே செய்தேன் என்று அவனுக்குத் தெரியாது.
அவன் விக்ரம் என்று தெரிந்த நொடியிலேயே அவனது வியூகத்தை கணித்து விட்டிருந்தேன். கூடவே என் முடிவையும் தீர்மானித்து விட்டிருந்தேன்.
யாரையும் ஹர்ட் செய்யாத வகையில் எல்லோரும் சந்தோஷமாக என் முடிவை ஏற்றுக் கொள்ள வைக்க வேண்டும். அதை எப்படிச் செய்வது என்று யோசிக்க எனக்கு கொஞ்சம் டைம் தேவை தான்.
ஷர்மா திரும்பியிருந்தார், விக்ரம் சென்றுவிட்டதை உறுதிப்படுத்திக் கொண்டே திரும்பியிருக்கிறார்.
“ஒஹ் மிஸ்டர் விக்ரம் சென்றுவிட்டாரா” என்று கேட்கவும் எனக்கு சிரிப்பு தான் வந்தது.
ஷர்மாவிடம் விக்ரம் என் பேமிலி ஃப்ரண்ட் என்பதைத் தவிர ஷ்யாம் பற்றி அவன் ஸ்போர்ட்ஸ் சேனல் பற்றி விக்ரம் இன்வெஸ்ட் செய்ய முன்வைத்து என எல்லாவற்றையும் சொல்லிமுடித்தேன்.
ஷர்மா மிகவும் சிறந்த கார்பரேட் லாயர். மிகுந்த அனுபவசாலி. என்னை ஷேர்னி என்று அவர் சொன்னாலும் உண்மையில் ஷேர் அவர் தான்.
எனது மொபைலில் இருந்த பிடிஃஎப் ஃபைலையும் அவருக்கு அனுப்ப உடனடியாக அதை அவரின் டெஸ்க்டாப்பில் படித்தார்.
“உன்னுடைய பாயிண்ட்ஸ் மிகவும் சரி. நான் அதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் ஆரா. ஹி இஸ் எ டேஞ்சரஸ் மேன். நிறைய கனக்ஷன் இருக்கு அவருக்கு. லால் இஸ் இன்வால்வ்ட். நமக்கு வேறு வழியில்லை மை கர்ல்” அவர் குரலில் எப்போதும் இருக்கும் உற்சாகம் இல்லை.
“ஐ அண்டர்ஸ்டாண்ட் சர், உங்கள் கைகள் கட்டப்பட்டு இருக்கின்றன. நான் விக்ரமின் டீலை எடுத்துக் கொள்ள மறுத்தாலும் நீங்கள் ஏற்க வேண்டியதாக இருக்கும். அது இங்கே ப்ராபளம் இல்லை” என்று நான் நிறுத்த என்னை கேள்வியாகப் பார்த்தார்.
“ஐ ஹாவ் டு ஸ்டான்ட் அப் ஃபார் ஷ்யாம். ஆனால் விக்ரம் நம் க்ளையண்டாக இருக்கும் பட்சத்தில் என்னால் ஷ்யாம் பக்கம் நிற்க முடியாது. சோ” என்று முடிக்காமல் நான் விட்டதை ஷர்மா புரிந்து கொண்டார்.
ஷர்மாவின் முகம் சட்டென வாடிப் போனது. தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற இயலாமை அவர் முகத்தில் தெரிந்தது.
என் வெற்றிகளில் எப்படி உற்சாகமாக மகிழ்ந்தாரோ இப்போது என் முடிவில் கலங்கியும் போயிருக்கிறார். பேருக்கு சீனியர் ஜூனியர் என்றாலும் குரு சிஷ்யையின் சம்பந்தம் அவருக்கும் எனக்கும்.
இது ஆரம்பம் தான். மன்டே நடக்கப் போவது இன்னும் கடினமானதாக இருக்கப் போகிறது எங்கள் இருவருக்குமே.
என் முடிவை சோனா ஷ்யாம் அறிந்து கொள்ளும் போது அவர்களுக்கு கில்டியாக இருக்கக் கூடும்.
இன்னும் எங்கள் டீமிற்கு மற்ற எல்லோருக்கும் தெரிய வரும் போது தே வில் பி சேட்.
இந்த உலகில் எதுவும் நிலையானது இல்லை என்று எல்லோருக்குமே தெரியும். ஆனால் அதை ஃபேஸ் செய்யும் போது இட் ஹர்ட்ஸ்.
“சர். இப்போதைக்கு இது பற்றி யாரிடமும் எதுவும் சொல்ல வேண்டாம். நான் வழி கண்டுபிடிக்கிறேன். என் முடிவை எல்லோரும் சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளும் ஒரு வழியைக் கண்டுபிடிக்கிறேன்” நான் சொல்லவும் ஷர்மாவின் முகத்தில் தெளிவும் நம்பிக்கையும் வந்தது,
அவரிடம் விடைபெற்று எனது சேம்பருக்கு வந்திருந்தேன்.
‘உனக்கு வேறு வழியில்லை பெண்ணே. இந்த விக்ரம் காட்டும் வழியில் நடப்பதைத் தவிர உனக்கு வேறு வழியில்லை” விக்ரம் சொன்னது என் காதில் ஒலித்தது.
எனக்கான வழியை கிருஷ்ணா எப்போதோ காட்டிவிட்டார் விக்ரம். எனக்கு மட்டுமில்லை. இந்த உலகத்திற்கே வழி காட்டியிருக்கிறார்.
உனக்கும் ஒரு நாள் அவர் வழி காட்டுவார். உன் ஈகோ, திமிர் எல்லாவற்றையும் விடுத்து நல்ல பண்புகளை ஏற்கச் செய்வார். அப்போது நானே உன் சாரதியாக இருப்பேனோ என்னவோ!
mukta-saṅgo ‘nahaṁ-vādī dhṛity-utsāha-samanvitaḥ
siddhy-asiddhyor nirvikāraḥ kartā sāttvika uchyate (BG18;26)
(அவர் அல்லது அவள் அஹங்காரம் மற்றும் பற்றுதல் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு, உற்சாகம் மற்றும் உறுதியுடன், வெற்றி மற்றும் தோல்வியில் சமநிலையுடன் இருக்கும்போது நற்பண்புடையவர் என்று கூறப்படுகிறது)
error: Content is protected !!