Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

20. கல்பனா செந்தில்குமார்-என் ஜீவன் உன்னை சேருமா

என் ஜீவன் உன்னை சேருமா 31 1

என் ஜீவன் உன்னை சேருமா



Advertisement

அத்தியாயம் – 31

Advertisement

Advertisement

 பார்வதிக்கு  சந்தோஷம் தாங்க முடியவில்லை மூன்று பேரபிள்ளைகளா என்றவர்.

 மாயாவை  தன்னோடு அருகில் அமர வைத்துக்கொண்டவர்  அவளின் உச்சன் தலையில்   முத்தம் வைத்தவர் “சந்தோஷமடா”  என்று அணைத்துக்  கொண்டவருக்கு பேச்சே வரவில்லை,,

Advertisement

 ‘அவர் கண் கலங்குவதை உணர்ந்தவள்..

” அத்தை அழாதீங்க” என்றாள்..

   மாயாவின்  அருகில்   அமர்ந்த  நிலாவுக்கும்  சந்தோஷத்தில் பேச்சே வரவில்லை,, ” மாயா மாயா” என்ற  நிலா அழுதே விட்டாள்..

 தன் அண்ணனுக்கு மூன்று பிள்ளைகளா? என்றவளுக்கு சந்தோஷத்தை வெளிப்படுத்தவே முடியவில்லை,, மகள் அழுவதை  பார்த்த பார்வதி.

“அழக்கூடாதுடா நிலா” என்ற அவர் மகளின் கண்ணை துடைத்து விட்டார்.

 “ரொம்ப சந்தோஷம் மாயா” என்று அவளை அணைத்துக் கொண்டாள் நிலா..

 மாயாவுக்கு பார்வதியும்,  நிலாவும் நடந்து கொண்டதை பார்த்தவளுக்கு தன் பிள்ளைகளை வரவேற்க எத்தனை உறவுகள் இருக்கிறது என்று எண்ணி சந்தோஷப்பட்டவள்..

 அக்னியை பார்த்தாள்..

அவன் சொல்ல முடியாத வேதனையில்  இருப்பது போல் தெரிந்தது..

 இவருக்கு சந்தோஷமே  இல்லையா?  ஏன் இவர் முகம் இப்படி இருக்கு என்று அவள் யோசிக்க ..

 அக்னிக்கு  பெரும் வேதனையாக இருந்தது.. தன்னவள்  எப்படி மூன்று குழந்தையை  தாங்குவாள்.. மாயா பாவம் ஏன் கடவுளே  என் மாயாவை இப்படி கஷ்டப்படுத்துற,

 ஐயோ என்று புலம்பிக்கொண்டு இருந்தான் மனதில்..

 பார்வதி  மகனை பார்த்து “ஏன்டா  அக்னி இப்படி முகத்தை வச்சுக்கிட்டு இருக்க?,  உனக்கு சந்தோஷமே  இல்லையா”?. என்று பார்வதி கேட்டதும்,,.

” ஆமாம்” என்று தலையாட்டி  இருந்தான்.

 “ஏண்டா இப்படி சொல்லுற ஒரு குழந்தை பிறக்கிறதே, இந்த காலத்துல கஷ்டம் ஆனா கடவுள் உனக்கு மூன்று குழந்தை கொடுத்திருக்காரு  சந்தோஷப்படாம”  என்று மகனை முறைக்க..

 அக்னி அமைதியாக யோசித்துக்கொண்டு  அமர்ந்திருந்தான்..

 மாயாவுக்கு மனதில் இவனெல்லாம்  ஒரு மனுஷனா இந்த விஷயத்த கேள்வி பட்டு துள்ளி குதிக்க வேண்டாமா?.

 எனக்கு மூன்று பிள்ளைகள் பிறக்கப் போகுது என்று சந்தோஷப்படாம இப்படி கல்லு மாதிரி உட்கார்ந்து இருக்கான் பாரு,  என்று மனதில் அவனைத் திட்டிக் கொண்டிருக்க..

 “அண்ணா உனக்கு சந்தோஷமில்லையா மாயா கிட்ட வா,  வந்து பேசு” என்று நிலா அவனை அழைக்க..

 அக்னி அமைதியாக இருந்தானே தவிர தங்கைக்கு பதில் கூட, கூற வில்லை..

 பார்வதி மகனை பார்த்து “அவனுக்கு கம்ப்யூட்டர் கூட வேலை பார்த்து,பார்த்து ரோபோ மாதிரி ஆகிட்டான்.. எந்த  உணர்ச்சி இல்லாம எப்படி உட்கார்ந்து இருக்கான்  பாரு” என்று மகனை திட்ட..

 பார்வதியையும்,, நிலாவையும் பார்த்தா  அக்னி..

 “ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் சும்மா இருக்கீங்களா.. ஒரு குழந்தைக்கே  நிலா படாது பாடு படுர,, இதுல மாயா மூணு குழந்தைகளை  எப்படி சுமப்பாள் அவள் பாவம் இல்லையா..

 அவ கஷ்டப்படுவதை பார்த்து என்னை சந்தோஷப்பட சொல்றீங்களா” என்று அவன் பேசியதும்..

 பார்வதியும்,  நிலாவும் அப்படியே அமைதியாகி விட்டனர், இப்படி யாரும் யோசிக்கவில்லையே மாயா கஷ்டப்படுவதை உணர்ந்து தன் மகனை பார்த்த பார்வதி மெச்சிக்  கொண்டார்..

“பார்த்தியா உன் புருஷனை நாங்க குழந்தையை நினைத்து சந்தோஷப்பட்டு கிட்டு இருந்தோம்,, ஆனா அவன் உன்னை மட்டும்தான் நினைச்சிருக்கான்,,  அவன் உன் மேல எவ்வளவு பாசம் வைத்திருந்தா குழந்தையை விட நீ தான் முக்கியமுன்னு  நெனச்சிருப்பான்..

 எனக்கு  இப்பதான் ரொம்ப சந்தோஷமா இருக்கு, அக்னி  உன்னை நெனைச்சு” என்று பார்வதி சந்தோஷப்பட்டவர்.. .

 “சம்பந்தி” என்று உலகநாதன் முகத்தை பார்க்க.. அவரோ ஏதோ சொல்ல வருவது போல் தெரிய.

 “சொல்லுங்க சம்பந்தி மாயாவும்,  குழந்தைகள் எப்படி இருக்காங்க ஸ்கேன் பண்ணீங்களா? குழந்தைகள் எப்படி இருக்காங்க” என்று  பார்வதி கேட்க..

 உலகநாதன்  டாக்டர் சொல்லியதை ஒன்று விடாமல்  அனைத்தையும் கூறிவிட்டார். மாயாவால் மூணு  குழந்தைகளை பெத்துக்க முடியாது ஒரு குழந்தையை வெளியில் எடுக்க சொல்றாங்க டாக்டர் என்று கூற..

 “ஈஸ்வரா  இது என்ன சோதனை”. என்று பார்வதி கலங்க…

 “வேற ஆப்ஷன் இல்லையா மாமா” என்றான் அக்னி..

 “இல்ல  அக்னி , டாக்டர் உங்களை வர சொன்னாங்க உன்கிட்ட பேசனுமுன்னு, நீங்க டாக்டரை பார்க்க வரணும்” என்று உலகநாதன் கூற..

 “என்கிட்டயா, எதுக்கு மாமா?” என்றான்..

 “மாயா குழந்தைகள் விஷயமா  உன்கிட்ட பேசி, ஒரு முடிவு எடுக்க சொன்னாங்க டாக்டர்” என்று கூற.

 ‘அதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன் எனக்கு என் மூணு குழந்தைகளும்  வேணும்”  என்று மாயா  கூற..

 பார்வதி  உலகநாதனிடம்  “நீங்க சொல்றது எனக்கு புரியல”,? என்று டாக்டர் சொல்லியதை  அனைத்தையும்   உலகநாதன் விளக்கமாக பார்வதியிடம் கூறி முடிக்க, அதை கேட்டு முடித்தவர்..

“மாயா கொஞ்சம் யோசிடா,,  உன்  ஹெல்த் ரொம்ப முக்கியம் இல்லையா,, ஒரு உயிரா,?  இல்ல மூணு உயிரான்னு?  கேள்வி வந்தால் நீ என்ன  பதில் சொல்லுவ மூணு உயிருன்னு  தானே சொல்லுவ.

 மூணு குழந்தைகள் கஷ்டப்பட்டு பெத்துக்கிறது பதில் இரண்டு  குழந்தைகள்   போதும்டா டாக்டர் சொல்றத  கேளுடா கண்ணு” என்றார் பார்வதி கூறி மாயாவின் தலையை வருடி விட..

 “உங்களுக்கு இந்த மாதிரி நடந்தா  என்ன பண்ணுவீங்க அத்தை?…

 ஒரு குழந்தை செத்தா சாகட்டும் எனக்கு ரெண்டு குழந்தை  மட்டும் போதும்னு  சொல்லுவீங்களா இல்ல கஷ்டப்பட்டு 3 பிள்ளைகளை பெத்துருப்பீங்களா?..

 பதில் சொல்லுங்க..

 நான் செத்தாலும் பரவாயில்லை என் குழந்தைகளை  நான் சாகடிக்க  மாட்டேன்”… என்றவள் தேம்பி, தேம்பி அழ..

“அழாத மாயா  இப்படி  கஷ்டப்பட்டு பெத்துக்கணுமாடா  நீ வேணுமேடா  எங்களுக்கு, உனக்கு எதுவும்  ஆகிடக்கூடாது மாயா யோசிடா”  என்று கூற..

” நான்”  என்றவளுக்கு  பேச்சே வரவில்லை,,  மூச்சை இழுத்து விட்டு தன்னை  சமன் செய்தவள்…

” நான் சாகடிக்கிறது எங்க அம்மாவை கூட இருக்கலாம்?.. என்னால எப்படி முடியும் சொல்லுங்க அத்தை” என்று கூறியவள்..

 “என் அம்மா தான் எனக்கு மகளாக பிறக்க போறாங்க, அதை நெனைச்சு நான் சந்தோஷமா இருக்கேன்.. நீங்க எல்லாம்  ஏன் தப்பு தப்பா பேசுறீங்க எனக்கு நல்லபடியா மூணு குழந்தை பிறக்கும்” என்று மாயா கூறி, தன் பேச்சைமுடித்துக்கொள்ள .

அங்கே உள்ளவர்  மாயா   வருத்தப்பட்டு பேசியதை கேட்டு அமைதியாக இருக்க….

 “அக்னி நீ எடுத்து சொல்லு மாயா கிட்ட ” என்று உலகநாதன் கூற..

 “மாயா இஷ்டப்படியே மூன்று புள்ளைய பெத்துக்கிட்டு மாமா,, அவளே இவ்வளவு கான்ஃபிடண்டா பேசும்போது நாம எதுக்கு பயப்படனும்..

 நாம எல்லாரும் சேர்ந்து  சந்தோஷமா அவளை பார்த்துக்கணும்.

மெடிக்கல் ஃபீட் எவ்வளவோ உயர்ந்திருக்கு ஒரே பிரசவத்தை ஆறு குழந்தைகள்,  அஞ்சு குழந்தைகள் பிறக்குது., மாயாவுக்கு  3 குழந்தைகள்  தானே மாமா..

மாயா தான் இதில் வருத்தப்படணும் அவளே  இவ்வளவு கான்ஃபிடண்டா இருக்கும் போது நமக்கு என்ன கவலை..

 எனக்கு இப்போ  ரொம்ப சந்தோஷமா இருக்கு, என் மாயாவை  நெனச்சு”  என்று அக்னி கூறி முடிக்க..

 ‘நீயா பேசியது ‘என்பது போல் மாயா அக்னியை பார்த்தாள்..

 “என் பொண்டாட்டி கிட்ட நான் கொஞ்சம் தனியா பேசணும்” என்றவன்.

 ” வா மாயா”  என்று  அவள் அருகில் வந்து  கை பிடித்து அழைக்க..

 மகுடிக்கு  ஆடிய பாம்பு போல் அவன் பின்னாடி சென்றாள் மாயா..

 மாயாவின் அறைக்கு  அவளை அழைத்து வந்தவன், அறை கதவை சாத்திவிட்டு மாயாவை மென்மையாக அணைத்துக் கொண்டான்..

 மாயாக்கு அக்னியின் மேல் உள்ள கோபம் மெல்ல மெல்ல கரைவது போல் தெரிந்தது..

 அவனும்  அனைவரும் சொல்லுவது  போல ஒரு குழந்தை எடுத்து விடலாம் என்று அவன் சொல்வான் என்று மாயா நினைத்திருக்க..

 அவன் நம்பிக்கையாக பேசியதும்  உருகிவிட்டாள் மாயா, தனக்காக நினைக்குறானே, தன்னிடத்தில் இருந்து யோசிக்குறானே என்று அவள் அமைதியாக நிற்க..

 தான் அணைத்ததும்  மாயா தன்னை தள்ளி விடுவாள் என்று அக்னி  நினைத்திருக்க..

 அவள் எந்த எதிர்ப்பும் காட்டாமல் தன்னோடு இணக்கமாக நின்றவளை   அலேக்காக  தூக்கியவன்,  அவள் பெட்டில் அவளை அமர வைத்து கீழே மண்டியிட்டு  அவள் முன் அமர்ந்து கொண்டான்..

 மாயா நிமிர்ந்து அவனைப் பார்க்க..

” இப் யூ டோன்ட் மைண்ட், என் பிள்ளையை நான் பார்க்கலாமா” என்று அனுமதி கேட்க..

 என்ன சொல்கிறான்  இவன் என்று மாயாக்கும் முதலில் புரியவில்லை அவள் வயிற்றில் மேல்  அவன் கையை வைத்ததும்.. புரிந்து கொண்டவள்…

தன் இரவு  உடை சட்டையின் பட்டனை  வயிற்றுபகுதியில் இருந்து கலட்டி லூஸ் பண்ணி  விட்டவள்…

கட்டிலில் கைவைத்து சாய்ந்து கொள்ள.

மாயா தன் உடையை தளர்த்தவும்…

மெல்ல கைவைத்து   நன்கு மேடிட்ட அவள் வயிற்றை தொட்டு தடவி  பார்த்தவன், “என் செல்லங்களா, இங்கே தான் இருக்கீங்களா” என்றவன், தன் பிள்ளைகளுக்கு முத்தம் வைத்து தடவி கொடுத்தவன்,, தன் முகத்தை  மாயாவின் வயிற்றில் புதைத்தான்..

மாயாவுக்கு  உடல் சிலிர்த்தது.. அவன்  பிள்ளைகளை என் செல்வங்களாம் என்றதும் கலங்கிவிட்டாள் மாயா…

 அவனின்  சூடான கண்ணீர் தன் வயிற்றில் பட, அப்படியே சாய்ந்து அமர்ந்தாள்..

“அப்பாடா, அப்பா தெரியுதா” என்றவன்…

மாயாவின் வயிற்றை தொட்டு தடவி பேசியவன்,,.

மாயாவை பார்த்து சிரித்தவன்…

“உங்க  அம்மா உங்க தாத்தா மேல எவ்வளவு பாசம் வைச்சிருக்க தெரியுமா, டாடி டாடியின்னு கூப்பிடுவா அவர் மேல அவ்வளவு பிரியம் அவருன்ன உயிரே விடுவா,  அதே மாதிரி நீங்களும் என் மேல பாசமாய் இருப்பீங்களா?. என்னை டாடியின்னு  கூப்பிடுவீங்களா?”..

என்று  பிள்ளைகளோடு பேசிக் கொண்டிருந்தான் அக்னி..

 பிள்ளைகளை கொஞ்சும் போது கூட என்னை வம்புக்கு இழுக்காம இவனால இருக்க முடியாது போல என்று மாயா புலம்ப, அது நன்றாக கேட்டது அக்னிக்கு..

 மாயாவின் வயிற்றில் சிறு அசைவு, துடிப்பை உணர்ந்த  அக்னி மாயாவை பார்க்க..

 மாயாவுக்கும் இவை  இன்ப அதிர்ச்சியாக  இருந்தது, அவள் துடிப்பை உணர்ந்திருக்கிறாள். ஆனால் அசைவை உணர்ந்ததில்லை இன்றுதான் பிள்ளைகளின்  அசைவை உணர்ந்தவள் வயிற்றின் மேல் கை வைத்து பார்க்க.. குழந்தை துடிப்பது நன்றாக மேலே தெரிய,, மகிழ்ந்து போனவள்,,

அக்னியை பார்க்க, அவனோ குழந்தைகள் துடிப்பதை அவளிடம் காட்டி  மகிழ,, அவளுக்கு ஆச்சரியம் அக்னி பேசியதை கேட்டுத்தான்  பிள்ளைகள் அசைந்திருக்கிறார்கள் என்று உணர்ந்தவள்..

தன் கையை பிள்ளையின் அசைவு பக்கம் வைத்தவள், அக்னி முகத்தை பிள்ளை அசையும் பக்கம் வைக்க,, பிள்ளையின் அசைவையும், துடிப்பையும் உணர்ந்தவன், தன் முகத்தை மாயாவின் வயிற்றில் புதைக்க, அவன் முகத்தோடு தன் முகத்தையும் சேர்த்து வைத்துக்கொண்டாள், மாயா…

இருவரும் சிறிது நேரம்ஏதும் பேசவில்லை, அமைதியாக இருக்க,, மெல்ல  நிமிர்ந்து அமர்ந்தாள் மாயா..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!