ஓசை ❤️ 54 ( இரண்டாம் பாகம்)
பெண் பார்த்து வந்த மாலையே நிரவி டெல்லி கிளம்ப அர்ஜுனன் உடன் செல்கிறேன் என கூற அவரை தடுத்து விட்டு சசி “அண்ணா நான் போறேன்… உங்களுக்கு அலுப்பா இருக்குனு சொன்னிங்கள.. எனக்கு டெல்லில ஒரு வேலை இருக்கு அப்படியே நானும் முடிச்சிட்டு வந்துறேன்” என்று கூறி நிரவியோடு டெல்லி கிளம்பிவிட்டார்…
டெல்லி சென்ற பின் நிரவியை ஆஷா வீட்டில் விட்டவர் அவர்களிடம் விடைபெற்று அடுத்த விமானத்தில் ஊருக்கு வந்துவிட்டார்… டெல்லியில் ஒரு வாரம் கழித்து சந்திக்கும் நிரவியை ஆஷா கொண்டாடி தீர்த்துவிட்டார்.. இரவு அவளுக்கு பிடித்த உணவை சேமித்து அவளுக்கு தானே ஊட்டி விட்டார்…
அவர் ஊட்டி விட்டு இருக்கும் போதே ரியாஸ் வீட்டுக்கு வர அவள் வந்து இருப்பதை பார்த்து சந்தோஷமாக அவள் அருகில் வர அவளோ முகத்தை திருப்பி கொண்டு சொகுசாய் அப்துல் மேல் சாய்ந்து கொண்டு டிவி பார்த்து கொண்டே ஆஷா ஊட்டுவதை சாப்பிட்டு கொண்டு இருந்தாள்..
Advertisement
சிறிது நேரம் கழித்து பேசலாம் என எண்ணி அறைக்கு சென்று குளித்து விட்டு வர அதற்குள் அவள் அறைக்கு சென்று இருந்தாள்… ஏமாற்றத்தோடு உண்டு விட்டு அறைக்கு சென்றுவிட்டான்…
அடுத்த நாள் காலையும் அவன் எழுவதற்கு முன் அவள் வாக்கிங் சென்று இருக்க பெரிய பார்க்கில் அவளை தேட முடியவில்லை… அதே போல் வாக்கிங் முடித்ததும் அறைக்கு சென்றுவிட்டாள்… அவன் கிளப்பும் வரை அறையை விட்டு வெளியே வரவில்லை.. அவர்கள் கண்ணாமூச்சி ஒரு வாரம் தொடர அதுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நாளும் வந்தது…
அப்துலின் சொந்தங்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் இருக்க அவர்களின் நெருங்கிய சொந்தத்தில் ஒருவர் இறந்து விட தமிழ்நாடு சென்றே ஆகா வேண்டிய கட்டாயம்.. எனவே அப்துலும் ஆஷாவும் நிரவியிடம் ஆயிரம் பாத்திரம் சொல்லி ஊருக்கு கிளம்பி இருக்க நிரவி தனியாக இருப்பாள் என அன்று ரியாஸ் சீக்கிரமாகவே வீட்டிற்கு வந்து இருந்தான்.. அவன் வர தாமதமாகும் என எண்ணி அவள் சமைத்து கொண்டு இருக்க சமயலறையில் சத்தம் கேட்டு அங்கு சென்ற ரியாஸ் நீண்ட நாட்கள் கழித்து அவளை பார்த்து அப்படியே நின்றுவிட்டான்..
எதோ அரவம் உணர்ந்து திரும்பி பார்த்தவள் அவன் நின்று இருப்பதை பார்த்து விட்டு பார்த்தும் பார்க்காதது போல் நின்று கொண்டாள்.. அதில் அவன் தான் காயம்பட்டு போனான்..
Advertisement
அவளையே ஆழ பார்த்தவன் அறைக்கு சென்றுவிட்டான்.. பேசிவிடுவோமா என்று கூட எண்ணிவிட்டாள்.. பிறகு கொஞ்சம் கெஞ்சட்டும் என்று விட்டுவிட்டாள்.. அவன் உண்ண வருவான் என எண்ணி அவள் காத்திருக்க மணி பத்தாகியும் வரவில்லை அவன்.. இவளுக்கு பசி உயிர் போக அவனை பார்க்க அறைக்கு சென்றாள்..
Advertisement
அங்கு அவனோ இறுக்கமான முகத்துடன் எதையோ படித்து கொண்டு இருக்க இவள் நிற்கும் அரவத்தில் தலை நிமிர்ந்து பார்த்தான்…அவள் முகம் பசியில் வாடி இருப்பதாய் பார்த்தவுடன் கண்டு கொண்டவன் தலையில் அடித்து கொண்டு “பாப்பு சாரி.. நீ இன்னும் சாப்பிடலையா.. மணி என்ன ஆகுது இன்னும் சாப்பிடாம இருக்க நீ… வா முதல்ல வந்து சாப்பிடு.. எனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காதா பாப்பு..” என்று கூறி அவளுக்கு அவனே தட்டில் எடுத்து வைத்தான்…. அவளோ அவனை மௌனமாக பார்த்து கொண்டு இருக்க அவளின் பார்வையின் பொருள் உணர்ந்து அவனும் எடுத்து வைத்து உண்ண அமர்ந்தான்…
அவன் உண்ண ஆரம்பித்த பின் தான் அவள் உண்ண ஆரம்பித்தாள்.. இருவரும் உண்ட பின் நிரவி பாத்திரத்தை எல்லாம் சிங்கில் போட்டு கழுவ போக ரியாஸ் அங்கு வந்து அவளை தடுத்து அவள் எவ்வளவு கூறியும் கேட்காமல் கழுவி வைத்தவன் அவளை பார்த்து சிரித்து விட்டு அறைக்கு சென்று விட்டான்.. அவள் தான் போகும் அவனை பார்த்து கொண்டு இருந்தாள்..
அடுத்த நாள் அவள் தனியாக இருப்பாள் என அவன் விடுமுறை எடுத்து கொண்டான்.. காலை இருவரும் வாக்கிங் சென்று விட்டு வீடு திரும்பினர்.. அவன் வேளைக்கு செல்ல வேண்டும் என அவள் வேகமாக குளித்து விட்டு வர அவளுக்கு முன் குளித்து விட்டு வீட்டில் அணியும் ஆடை அணிந்து கொண்டு சமைத்து கொண்டு இருந்தான்..
Advertisement
அவனை யோசனையாக பார்த்து கொண்டே அவன் அருகில் சென்று நிற்க அவளின் அரவம் உணர்ந்து அவளை பார்த்தவன் அவள் கண்களில் தோன்றிய கேள்வியில் “இன்னிக்கு நான் லீவு பாப்பு..” என்று கூறி சமையல் வேலையை தொடர்ந்தான்…
அவளோ அவனை தான் கண் இமைக்காமல் பார்த்து கொண்டு இருந்தான்.. நிரவியே “ஏன் அன்னிக்கு சொல்லாம கிளம்புன” என கேட்க அவன் அமைதியாய் இருந்தான்…
“கேட்குறேன்ல சொல்லு.. ஏன் சொல்லாம வந்த” என்று அவள் கேட்க “சொல்லிட்டு வந்து இருந்தா அன்னிக்கு உன்னையும் கையோட கூட்டிட்டு வந்து இருப்பேன்” என்று பட்டென்று கூறினான்…
“புரியல” என்று அவள் குழப்பமாய் கூற “உன்னை பார்த்து சொல்லி இருந்தா உன்னையும் கையோட கூட்டிட்டு இங்க வந்து இருப்பேன்.. உன்னை விட்டுட்டு என்னால இங்க இருக்க முடியல போதுமா” என அவள் ஒருவித இறுக்கத்தோடு கூற “இன்னும் ஒரு வருஷம் தானே நான் திரும்பியும் தமிழ்நாடு போயிட்டா என்ன பண்ணுவ” என கேட்க அவன் அமைதியாய் நின்றான்…
“சொல்லுடா” என்று அவள் கோவமாக கூற “உன்னை அனுப்ப மாட்டேன் பாப்பு நீ எனக்கு மட்டும் தான்..” என்று உறுதியாய் கூறினான்..
அவன் கூறியதை கேட்டு திகைத்த அவள் “நீ சொல்றதுக்கு அர்த்தம் புரியுதா ரியாஸ்” என்று கோவமாக கேட்டாள்…
அவன் அமைதியாய் இருக்க “சொல்லுடா நீ சொல்ற அர்த்தம் புரிஞ்சு தான் பேசுறியா” என கேட்க அவன் சத்தமாய் “ஆமா ஆமா புரிஞ்சு தான் சொல்றேன்.. உங்கிட்ட பேசாத இந்த நாட்கள் தான் உன்மேல இருக்குற காதலை புரிய வெச்சது… இது தப்புனு புரியுது ஆனா என்னால முடியல.. போடி” என்று கூறி முகத்தை மூடி அமர்ந்து கொண்டான்…
அவளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை… “மாமு” என்று அவன் அருகில் அமர “சாரி பாப்பு அப்செட்ல பேசிட்டேன்.. நீ எதுவும் நினைக்காம படிக்குற வேலையை பாரு” என்று கூறி அறைக்கு செல்ல பார்க்க அவன் கையை பிடித்து தடுத்து
நிறுத்தியவள்” நீ பாட்டுக்கு உன் லவ் சொல்லுவ.. அப்பறம் எதுவும் நினைக்காம போய் படினு சொல்ற… உனக்கு எப்படி என்மேல லவ் இது தப்பு இல்லையா” என்று அவள் புரியாமல் கேட்டாள்..
“போய் படிக்குற வேலையை பாரு..” என்று கூறியவன் “லவ் தப்பா துப்பான்னு கேட்டுட்டு வந்துட்டா” என்று முனுமுனுப்பாக கூறினாலும் அவளுக்கு கேட்டது.. அவன் சமையலறை சென்றுவிட்டான்..
அவள் தான் யோசனையாக சோபாவில் அமர்ந்துவிட்டாள்.. இந்த காதல் சரி வருமா என்று யோசித்து கொண்டு இருந்தாள்… அவள் யோசனை அவன் சமைத்து முடித்து வரும் வரை அமர்ந்து இருந்தாள்.. அவன் தான் பாப்பு இந்த சாப்பிடு.. என்று கூறி அவனே ஊட்டி விட்டவன் தானும் உண்டு முடித்து கழுவி வைத்தவன் அவள் அருகில் வந்து அமர்ந்தான்..
அவள் கையை எடுத்து தன் கைக்குள் பொத்தி வைத்து கொண்டவன் “பாப்பு நீனா ரொம்ப பிடிக்கும்.. எவ்வளோ பிடிக்கும்னு வார்த்தையால சொல்ல முடியாது… லீவுக்கு நீ இங்க டெல்லி வருவல ரொம்ப சந்தோசமா இருப்பேன் தெரியுமா.. நீ இங்க இருக்குற வரைக்கும் ரொம்ப ஜாலியா இருப்பேன்.. ஆனா கிளம்பி போறப்ப ரொம்ப வருத்தமா இருப்பேன்.. நீ சிவா அண்ணனை லவ் பண்றனு சொன்னதும் எனக்குள்ள எதோ உடைஞ்சு போன உணர்வு.. ஆனா உங்க உறவை பார்த்ததும் தான் அது காதல் இல்லைனு புரிஞ்சது.. அன்னிக்கு நான் ரொம்ப சந்தோசமா இருந்தேன்.. அன்னிக்கு மார்னிங் கால் பேசிட்டு இருந்தப்ப கத்துனியே உசுரே போயிடிச்சு.. ஆனா நீ உன் அண்ணனை பார்த்ததும் என்னை மறந்துட்டியே… போடி” என்று கூறி தன்னை நிலைப்படுத்தி கொண்டான்..
“அப்போ கூட எனக்கு லவ் தோணல.. அன்னிக்கு உன் அக்கா வளைகாப்புல புடவை கட்டிட்டு வந்தியே நான் அப்பயே பிளாட்.. தேவதை மாதிரி இருந்தடி.. அந்த இடத்துல தான் என் லவ் புரிஞ்சது.. அதுதான் அடுத்த நாள் உன்னை பாக்காம கிளம்பினேன்.. உன்னை பார்த்து இருந்தா கையோட தூக்கிட்டு வந்து இருப்பேன்… நீ இல்லாத பத்து நாள் எப்படி இருந்தது தெரியுமா.. போடி என் பீலிங்ஸ் புரியாம நீ வேற இங்க வந்தும் மூஞ்சு காட்டி என்ன ரொம்ப கஷ்டப்படுத்திட்ட…” என்று கூறி அவள் கையிலேயே முகத்தை புதைத்து கொண்டான்…
அவள் தான் சிலையை அமர்ந்து இருந்தாள்… அவன் காதல் அவளை திகைக்க வைத்து இருந்தது… அவள் மெதுவாக “மாமு என்னை பாரு..” என்று கூற அவன் நிமிரவே இல்லை… பின் அவனே தன்னை திடப்படுத்தி கொண்டு “பாப்பு நான் சொல்ல கூடாது தான் இருந்தேன்.. ஆனா என்னால முடியல சொல்லிட்டேன்.. ஆனா நீ பண்ண வேண்டியது நிறைய இருக்கு.. அதுக்கு என் காதலும் நானும் உறுதுணையா இருப்போமே தவிர உன் கனவை அழிக்க மாட்டேன்… நீ உன் கனவை நினைவாக்கு.. அதுக்கு அப்பறம் நம்ம வாழ்க்கையை பாக்கலாம்..” என்று கூறி நெற்றியில் முத்தமிட்டவன் அறைக்கு சென்றுவிட்டான்..
இவள் தான் சிலை போல் அமர்ந்துவிட்டாள்…. ஒரே குழப்பமாய் இருந்தது… இவளுக்கு குழப்பம் என்றால் ரியாஸிடம் தான் கேட்பாள்.. ஆனால் இன்றோ அவனே குழப்பி விட்டு இருக்க எதுவும் புரியாமல் அவளே அறியாமல் சிவாவுக்கு அழைத்து இருந்தாள்.. அழைத்த பின் தான் அதிர்ந்து கட் செய்ய பார்த்தாள்.. அதற்குள் அவன் அழைப்பை ஏற்று இருந்தான்..
அவள் அலைபேசி வாங்கிய பின் முதன் முதலில் அழைத்து இருக்கிறாள்.. அழைப்பது யார் என பார்த்து ஆச்சர்யம் அடைந்து அழைப்பை ஏற்று “ஹலோ குட்டி” என்று பாசமாக அழைத்தான்.. அந்த குரலில் கட் செய்ய போனவள் கட் செய்யாமல் அமைதியாக இருந்தாள்..
“குட்டி” என்று அவன் மீண்டும் அழைக்க அந்த குரலில் அவளே அறியாமல் “மாமா” என்று அழைத்து இருந்தாள்..
“சொல்லுடா நீ நல்லா இருக்க தானே.. ரியாஸ் எப்படி இருக்காரு..” என்று கேட்டான்..
“நான் நல்லா இருக்கேன் மாமா.. அவ..அவனும் நல்லா இருக்கான் மாமா.. நீங்களும் அக்.. அக்காவும் எப்படி இருக்கீங்க என கேட்டாள்..
நான் நல்லா இருக்கேன்டா.. ரித்துவும் நல்லா இருக்கா.. நீ அவளை விசாரிச்சனு சொன்னா ரொம்ப குஷி ஆகிடுவா” என்று சந்தோஷமாக கூறினான்..

