Skip to content
Post Views: 1,026
ஞானபிரகாஷின் வயதான தோற்றத்தை பார்த்து ரதி.. “இது என் ஞானபிரகாஷ் இல்லை, இது என் ஞானம் அண்ணா இல்லை” என்றவள்..
“நீ யாரு” என்றாள்..
Advertisement
அக்னியை பார்த்து..
“அத்தை நான் தான் உன் அப்புக்குட்டி,, உன் மூத்த அண்ணன் பையன் அக்னி உன் அப்புக்குட்டி அத்தை” என்றான்…
Advertisement
Advertisement
உலகநாதனும், மாயாவும் அந்த அறைக்கு வந்து “என்னாச்சு அக்னி ஏன் ரதி ஒரு மாதிரி இருக்கா” என்று பக்கத்தில் வர..
“மாமா அத்தை என்னை யாருன்னு கேக்குறாங்க,, என்னை தெரியலன்னு சொல்றாங்க” என்றவனுக்கு அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை..
Advertisement
உலக நாதனும், மாயாவும் ரதி அருகில் வந்து அமர்ந்து.. “என்னாச்சு ரதி என்னம்மா,,அக்னி ஏதோ சொல்றான்” என்று உலகநாதன் கேட்க..
“நீங்க எல்லாம் யாரு புதுசு புதுசா இருக்கீங்க” என்றாள்…
“ரதி என்னாச்சுடா” என்று ரதியின் கைப்பிடிக்க உலகநாதன் வர. டக்கென்று தள்ளி அமர்ந்தாள் ரதி….
அவள் தள்ளி அமர்ந்ததும் , துடித்து போனார் உலகநாதன்
மாயா ரதியின் கைபிடித்து “என்ன ஆச்சும்மா ” என்று கேட்க..
மாயாவை பார்த்து “நீ யாரு” என்று கேட்டார் ரதி..
“நான் உங்க பொண்ணு மாயா மா” என்று கூற..
“பொண்ணா”?.. என்று ரதி புலம்பியபடி அமர்ந்திருக்க..
அக்னி ரதியை பார்த்து ” அத்தை எங்களை உங்களுக்கு தெரியலையா” என்றான்..
“தெரியவில்லை” என்று ரதி தலையாட்ட..
மாடிக்கு போன அனைவரும் கீழே வராமல் இருக்க..
பார்வதி மேலே வந்தார்..
” எல்லோரும் என்ன பண்றீங்க”? என்று பார்வதி அறையின் உள்ளே வர..
ரதி பார்வதியை பார்த்து “அண்ணி” என்று அழைக்க..
“என்னடா ரதி” என்று ரதி அருகில் வந்தார் பார்வதி..
“இவங்க எல்லாம் யாரு” என்றாள்..
“என்ன இவங்களை எல்லாம் யாருன்னு கேக்குற? உனக்கு இவங்களை தெரியலையா”?.
“தெரியல” என்று ரதி தலையாட்ட..
“என்னாச்சுடா அக்னி” என்று மகனிடம் பார்வதி கேட்க.
” அம்மா அத்தை நம்ம ஃபேமிலி போட்டோ பார்த்துட்டு இருந்தாங்க,, அவங்களுக்கு எல்லாம் பாதி மறந்துருச்சு போல எங்களை யாருன்னு” கேட்குறாங்க..
ரதி குழம்பி போய் அனைவரையும் நிமிர்ந்து பார்க்க..
“ரதி இதுதான் என் பையன் அக்னி இது உன் பொண்ணு மாயா,, இவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க, இது உன் புருஷன் உலகநாதன்”, என்று உலகநாதன் காண்பிக்க..
“இவரா” என்று ரதி உலகநாதனை பார்க்க..
” இவர் தான் உன் கணவர் உலகநாதன் ஞாபகம் இல்லையா உனக்கு” என்று கேட்க..
“இவங்க யாருன்னு எனக்கு தெரியலையே” என்றாள் ரதி…
“அக்னி உடனே டாக்டருக்கு போன் போடு” என்றார் பார்வதி..
அக்னி உடனே டாக்டருக்கு போன் செய்து வீட்டிற்கு அழைத்து இருந்தான்..
டாக்டர் வந்து ரதியை செக் பண்ணி பார்த்துவிட்டு நன்றாக பேசினார், அவளுக்கு என்னென்ன தெரிகிறது என்னென்ன பிரச்சனை என்று அனைத்தைதும் அவளிடமே கேட்டு அறிந்தவர்,, ரதியிடம் பேசிவிட்டு ஒரு ஊசியை போட்டு விட்டு வந்தார்…
அனைவரும் டாக்டர் என்ன சொல்லப் போகிறார் என்று கேட்க.. அவரோ சிரித்துவிட்டு..
“ரதிக்கு கொஞ்சம் கொஞ்சமா ஞாபகம் வருது, நல்லது தான் இப்ப கொஞ்சமா தான் ஞாபகம் வந்திருக்கு கூடிய சீக்கிரம் எல்லாம் ஞாபகம் வரும்.. ரதி தூங்குறதுக்கு இன்ஜெக்ஷன் போட்டு இருக்கேன்.. அவங்களை யாரும் டிஸ்டர்ப் பண்ணாதீங்க.. அவங்க எப்போ எழுதுக்குவாங்களோ அப்போ எழுந்து வரட்டும்.. தேவையில்லாம கேள்வி கேட்காதீங்க,,
அவங்க ஏதாவது கேட்டா அதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க சரியா” என்று டாக்டர் கிளம்பி விட்டார்..
உலகநாதன் நொந்து போனார் தன்னை யார் என்று கேட்டு விட்டாளே ரதி, என்னை ஞாபகம் இல்லையா அவளுக்கு.. என் ஞாபகம் வராமலே போனால் நான் என்ன செய்வேன், இவ்வளவு நாள் தன்னோடு இருந்துவிட்டு இப்போ தன்னை யார் என்று கேட்டாளே,,
நான் என்ன செய்வேன்.. அவளுக்கு ஞாபகம் வராமலே அப்படியே தன்னோடு இருந்திருக்கலாமே என்று அவர் வருத்தத்தோடு அமர்ந்திருக்க..
அக்னி உலகநாதனின் தோளில் கைவைத்து “மாமா அத்தைக்கு கண்டிப்பா உங்க ஞாபகம் வரும்” என்றான்..
“என்னை யாருன்னு கேட்டுட்டாளே அக்னி” என்று வருத்தப்பட..
“கண்டிப்பா உங்க ஞாபகம் வரும், மாமா” என்றவனுக்கு தன்னை யார் என்று ரதி கேட்டதை அவனால் தாங்கி கொள்ள முடியவில்லை,,. அனைவரும் சோகமாக இருக்க..
பார்வதி தான் அனைவரையும் உண்ண வைத்து.. “அவளுக்கெல்லாம் சரியாயிடும், ஞாபகம் வந்திடும் காலையில விசேஷம் இருக்கு எல்லாரும் போய் தூங்குங்க” என்று அனைவரையும் அனுப்பி வைக்க..
“அதெப்படி உங்களை மட்டும் அத்தைக்கு ஞாபகம் இருக்கு” என்றான் அக்னி,,
“நான் முன்னாடி இருந்த மாதிரி தான் இருக்கேன் டா, நீங்க எல்லாம் வளர்ந்துட்டிங்க, உன் சித்தப்பாவும் கொஞ்சம் எடை கூட்டிட்டாறு, அதனால மூஞ்செல்லாம் சேஞ்சு ஆகிடுச்சு, அது தான் ரதிக்கு அடையாளம் தெரியல,, நான் எப்படி 20 வருஷம் முன்னாடி இருந்தேனோ. அப்படியே அதே மாதிரி தான் இப்பையும் இருக்கேன்”.. என்றார் பார்வதி,,..
அனைவரையும் தூங்க சொல்ல..
மாயாவும், உலகநாதனும் ரதி இருக்கும் அறையிலே தங்கி கொள்ள..
ரதி ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள்….
மறுநாள் காலை அழகாக விடிந்தது, பார்வதியின் வீடு..
பார்வதியின் இளைய மகன் தேவ் வந்திருந்தான் தன் மனைவி, மகனோடு,, நிலாவில் கணவனும் மகளும் வந்திருக்க,,.. பார்வதி அதிகாலையிலே கல்யாணத்துக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்,,.
காலையில் சிறியதாக ஹோமம் பண்ணிவிட்டு பூஜையறை முன்பு இரண்டு மர பலகை போட்டு அக்னியையும், மாயாவைவும் அதில் அமரச் சொன்னார்கள்..
மாயா பட்டு சேலை உடுத்தி இருக்க, அக்னி பட்டு வேஷ்டி சட்டையில் ரெடியாகி வந்திருந்தான்..
அக்னி சந்தோஷமாக இருக்க, மாயா தன் வயிற்றை பிடித்துக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தாள்..
ஐயர் பூஜை செய்து தாலியை எடுத்து வந்து அக்னியிடம் தர,,அந்த தங்க தாலி செயினை மாயாவின் கழுத்தில் அணிவித்தான் அக்னி..
மாயா அமைதியாக கண் மூடி இருக்க, அவள் நெத்தியிலும் தாலியிலும் குங்குமத்தை வைத்தவன்,, மாயாவின் உச்சந்தலையில் முத்தம் வைத்து “சாரிடா” என்றான்..
மாயா எந்த உணர்ச்சியும் காட்டவில்லை அப்படியே அமர்ந்திருந்தாள் பொம்மை போல..
திருமணம் முடித்ததும், பத்து மணிக்கு மேல் வளைகாப்பு வைத்திருக்க அனைவரும் அதற்குண்டான வேலைகளை பார்க்க சென்றனர்..
மாயாவை அழைத்த அக்னி கீழே உள்ள ஒரு அறையில் ஓய்வெடுத்து சொல்லி விட்டு வந்தான்..
பார்வதி அதிகம் பேரை எல்லாம் அழைக்கவில்லை மொத்தம் 20,25 பேர் மட்டுமே இருக்க மிகவும் எளிய முறையில் அனைத்து விசேஷங்களும் நடந்து கொண்டிருந்தன..
அனைவரும் காலை உணவு உண்டு விட்டு..
வளைகாப்புக்கு வந்து அமர முதலில் நிலாவுக்கு வளையல் அணிவித்ததும் அடுத்து மாயாவுக்கு என்று இரண்டு பலகைகள் போட்டு இருவரையும் அமர வைத்தனர்..
கீழே விசேஷம் நடக்க மேலே மெல்ல விழித்திருந்தாள் ரதி.. பார்வதி அடிக்கடி சென்று ரதியை பார்த்துக் கொண்டு வந்திருந்தார்..
உலகநாதன் ரதி பக்கத்திலே அமர்ந்திருக்க.. மெல்ல விழிப்பு வந்து ரதி உலகநாதனை பார்த்து பயந்து ஓரமாக சென்ற அமர..
பார்வதி ரதி இருக்கும் மேல் அறைக்கு வந்திருந்தார்.. அவள் உலகநாதனை பார்த்து பயப்பட.. பார்வதி “பயப்படாதம்மா அவர் உன் கணவர் தான் வா வந்து குளிச்சிட்டு ரெடியாகு” என்று கூறி அவளை ரெடி பண்ண..
உலகநாதன் கீழே சென்று விட்டார்.. ரதி தன்னை பார்த்து பயந்ததை அவரால் தாங்க முடியவில்லை.
பார்வதி ரதியை ரெடி பண்ணி உணவு உண்ண வைத்து..கீழே பெண்களோடு அமர வைத்து விட்டு,, அவர் வேலையை பார்த்து கொண்டிருக்க..
பெண்களோடு பெண்ணாக அமர்ந்த ரதியை யாரும் கவனிக்கவில்லை..
முதலில் நிலாவுக்கு வளையல் அடக்கியவர்கள், அடுத்து மாயாவுக்கு வளையல் அடுக்க..
வளைகாப்பு இனியதாக நடந்து கொண்டிருந்தது.. வயதான பெண்மணி முதலில் தொடங்கி வைத்திருக்க ஒவ்வொருவராக மாயாவுக்கும், நிலாவுக்கும் வளையல் போட்டுக் கொண்டிருக்க.. ரதியை பார்த்த அந்த முதியவர் “இந்த பொண்ணு யாரு” என்று பார்வதியிடம் கேட்க..
அப்பொழுதுதான் அனைவரும் ரதியை பார்த்தனர்…
“என் நாத்தனார் ரதி” என்றார்…
“இந்த பொண்ணு வளையல் போடலையே, வாம்மா வந்து வளையல் போடு” என்று அழைக்க..
ரதி மெல்ல எழுந்து வந்து நிலாவுக்கு வளையல் போட போக,.
“உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா”?. என்று அப்பெரியவர் கேட்க…
“அத்தைக்கு கல்யாணம் ஆயிடுச்சு” என்றாள் நிலா..
“குழந்தை இருக்கா” என்று ஒரு முதியவர் கேட்க..
“இப்பதான் கல்யாணம் ஆச்சு, அத்தைக்கு இன்னும் குழந்தை இல்லை” என்று நிலா கூற…
“அப்படியா”? என்ற அந்த பெரியவர், ரதியை பார்த்து “நிலா பக்கத்தில் உட்காருமா உனக்கும் சேர்ந்து வளையல் போடலாம், அடுத்த வருஷம் உனக்கும் குழந்தை பிறக்கும் உட்காரு என்று சொல்ல”..
எல்லோரும் அதிர்ச்சியாகி ரதியை பார்க்க,, ரதிக்கு என்ன பேசுகிறார் என்று ஒன்றும் புரியாமல்,, பார்வதியை பார்த்தாள்..
‘”பெரியவங்க சொன்னா கடவுளே சொன்ன மாதிரி ரதி நீ நிலா பக்கத்துல உக்காரு” என்று பார்வதி கூற, நிலாவின் பக்கத்தில் அமர்ந்தாள் ரதி..
வயதான பெண்மணிகள் ரதிக்கு வளையல் போட்டுவிட்டு.
“உன் புருஷன் இருக்காறா” என்று ரதியை கேட்டதும், ரதி நிமிர்ந்து பார்த்தாள்..
“அப்பா உங்களை கூப்பிடுறாங்க” என்று மாயா உலகநாதனை அழைத்து இருந்தாள்..
“என்னம்மா” என்று உலகநாதன் மாயா அருகில் வர..
அப்பெரியவர் உலகநாதனை பார்த்து “உன் பொண்டாட்டியா”?. என்று கேட்க..
“ஆமாம் ” என்று உலகநாதன் கூற..
“சரி பக்கத்தில் உட்கார்ந்து வளையல், போட்டு நழுங்கு வை உன் பொண்டாட்டிக்கு” என்று கூற..
உலகநாதனுக்கு இது என்னடா எனக்கு வந்த சோதனை என்று நினைத்தவர், ரதியின் முன் மண்டியிட்டு வளையல் அணிவித்து விட,, உலகநாதனுக்கு பழைய ஞாபகம் வந்தது அவளுக்கு கல்யாணத்துக்கு முன்னாடி வளையல் வாங்கி அணிவித்தது ஞாபகம் வர..
அதேபோல இன்றும் அவளுக்கு மெதுவாக அணிவித்தார்.. இரண்டு கைகளிலும் வளையல் அணிவித்து விட்டு அன்று போலவே இரண்டு கைகளை சேர்த்து குலுக்கியவர்,, “சந்தோஷமா” என்று கேட்க..
ரதியின் மனதில் மின்னல் போல் ஏதோ ஒன்று தாக்க,, உலகநாதன் அன்று அவள் கைகளை ஒன்றாக சேர்த்து “சந்தோஷமா, அழகா இருக்குடா” என்று சொன்னது ஞாபகத்தில் வர..
திடீரென்று உலகநாதன் முகத்தை உற்றுப் பார்த்தாள் ரதி,,.
உலகநாதன் ஸ்பரிசம் அவள் கைகளில் பட்டதும்,, பழைய ஞாபகம் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக ஞாபகம் வர….
error: Content is protected !!