Skip to content
Post Views: 806
யுகத்தின் தலைவன்
அத்தியாயம் 32
கங்கா வழக்கம்போல பள்ளிக்கு கிளம்பினாள்.அன்று என்னவோ பொழுது அழகாக விடிந்திருந்தை போல இருந்தது அவளுக்கு. காலையிலேயே கருடன் தன் தரிசனத்தை தந்தான்.
ஒரு பச்சை நிற காட்டன் புடவை.அதில் சிறு சிறு ஸ்டோன் வைத்து அழகாக இருந்தது.பச்சை நிறம் அவளுக்கு ரொம்ப பிடித்த நிறம்.இன்று என்னவோ அந்த புடவையும்,நிறமும் அவளுக்கு எடுப்பாக தெரிந்தது.
பள்ளி சென்று பாடம் நடத்தினாள். மதியம் ஒருமணி நித்யா ஃபோன் செய்தாள்.
Advertisement
சொல்லு நித்யா.
நான் மாலதி பேசறே கங்கா.
அன்று பஸ் ஸ்டாப்பில் பார்த்தது நினைவில் வந்தது.
Advertisement
மாலதி எப்படி இருக்கே?
Advertisement
நல்லா இருக்கே கங்கா.
நீ?
நானும் நல்லா இருக்கே.
Advertisement
கங்கா,” இன்னைக்கு சல்மான் அம்மா பிரியாணி செஞ்சு கொடுத்து விடறாங்க. நித்யா என் வீட்டுக்கு வந்துட்டா.நீயும் வா எல்லாரும் ஒன்னா சாப்பிடலாம்”.
நா ஸ்கூல்ல இருக்கே மாலதி.
லீவு போட்டுட்டு வா.
ஐய்யோ.வீட்டுக்கு தெரியாம எல்லா என்னால வர முடியாது.
ஒரு பொய் சொல்லிட்டு வாடி .
பொய் சொல்ல எல்லாம் எனக்கு பயம். என்ன பொய் சொல்றது?
வீட்டுல எந்த பொய்யும் சொல்ல வேண்டா. ஸ்கூல் விடறே டைம் நீ வீட்டுக்கு போய்க்க.
ஸ்கூல்ல மட்டும் பாட்டிக்கு உடம்பு சரியில்ல, இறந்துட்டாங்கனு ஒரு பொய் சொல்லிட்டு வாடி.
என்னது.ஒரு ப்ளேட் பிரியாணிக்காக பாட்டி இறந்துட்டாங்கனு சொல்றதா.நா மாட்டேன்.
சல்மான் இவ சரிப்பட்டு வர மாறி தெரிலே என்றாள் மாலதி.
கங்கா கண்கள் பெரிதாக விரிய, சல்மான் நீ லைன்லதா இருக்கியா?
சொல்லு கங்கா.
உன்வீட்டுல இருந்துதானே பிரியாணி வருது. முறைப்படி பாத்தா நீதான் என்ன சாப்பிட வானு சொல்லனும்.
நான் கூப்பிட்டா நீ உடனே வரனும்.நீ வர மாட்டே. அதான் மாலதியை விட்டு கூப்பிட சொன்னே.
சரி பரவாயில்ல கங்கா.நீ உன் வொர்க் பாரு என,இவள் பதிலுக்கு கூட காத்திருக்காமல் கட் செய்து விட்டான்.
திரும்ப கங்கா அழைக்க எடுக்க வில்லை.ஒரு வேளை கோபம் போல என எண்ணினாள்.நேரே கோஆர்டினேடரிடம் சென்று பாட்டி இறந்துட்டாங்க லீவு வேண்டும் என்றாள். லீவு தரப்பட சல்மானை காண சென்றாள்.
மாலதி வீட்டில் விருந்து,ஃபோன் மூலம் அவள் வீட்டின் அட்ரெஸ் கேட்டு சென்று விட்டாள். இதோ வீட்டை அடைந்து விட்டாள்.
உள்ளே செல்ல, சோபாவில் ஒரு துண்டை எடுத்து தன் முகத்தை மூடி அமர்ந்து இருந்தான் சல்மான்.
சிரித்த முகமாகவே அவன் அருகில் சென்று,சல்மான் துண்டை எடுக்கவா?என்றாள்.
“இல்ல இல்ல நானே எடுக்கறே”என அவனே எடுத்தான்.
கருப்பு உடை. குறைந்தது ஆறு ஆடி உயரம் இருப்பான். நல்ல நிறம். கருமையான கேசம். ரொம்ப குண்டாக இருந்தான்.
ஹாய் கங்கா.என சிரிக்க வரிசையாய் பற்கள் மின்னியது.
முதல் சந்திப்பு இனிதாய் நடந்தது.இரு சோபாக்கள் ஒன்றாக போடப்பட ஒன்றில் சல்மானும்,அருகில் கங்காவும் அமர்ந்து கொண்டனர்.
நேர் எதிரில் இருந்த நீளமான சோபாவில் நித்யாவும் மாலதியும் அமர்ந்து கொண்டார்கள்.
சில இயல்பான உரையாடல்களுடன் பிரியாணி சாப்பிட ஆரம்பித்தனர். முஸ்லிம் பிரியாணியை பற்றி கூற வேண்டுமா என்ன?
சீரக சம்பா சிக்கன் பிரியாணி.அதோடு லெக் பீஸ்,கத்தரிக்காய் கொத்சு உடன் பாயாசம்…நல்ல சுவை.
சல்மான்,”உங்க அம்மா நல்லா சமைச்சு இருக்காங்க.அதோட தயிர் பச்சடிக்கு எவ்வளவு அழகா வெங்காயம் நறுக்கி இருக்காங்க. அப்பறோம் இந்த பாயாசம் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு. வித்தியாசமான பாயாசமா இருக்கே என்றாள்” கங்கா.
கங்கா இது பாயாசம் இல்ல.இது ‘கீர்’
‘ஓ!’ எனக்கு இது ரொம்ப பிடிச்சிருக்கு சல்மான்.
நித்யா, மாலதி, சல்மான் மூவரும் ஒருவருக்கொருவர் ஊட்டிக் கொண்டனர். சல்மான் கங்காவிற்கு ஊட்ட வர உள்ளூர பதட்டம்.
கண்களை விரித்து கருவிழிகளை இரண்டு பக்கமும் ஆட்ட,அவளது பதட்டத்தை உணர்ந்து அவனும் விட்டுவிட்டான்.
மேலும் நால்வரும் தங்களுக்கு பிடித்த விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். சல்மானுக்கு குலாப் ஜாமுன் ரொம்ப பிடிக்கும் என சொல்ல, அடுத்த டைம் வரும் போது நான் கொண்டு வரேன் சல்மான் என்றாள் கங்கா
திடிரென சல்மான் கங்காவின் பேக்கை எடுத்து,உள்ளே என்னவெல்லாம் உள்ளது என ஆராய ஆரம்பித்தான்.
அவளது பர்ஸ் கண்ணில் பட, கங்கா நிறைய பணம் வச்சிருக்கியா? என உள்ளே இருந்தை ஒவ்வொன்றாக எடுத்தான்.
உள்ளே சிறு சிறு பொட்டலங்கள்.என்ன கங்கா நீயும் கோகைன் சாப்பிடுவ போலவே என பிரித்தான்.
சல்மான் அதே பிரிக்காதே.
கேட்டால்தானே,பிரித்து விட்டான். கோவிலில் தரப்பட்ட திருநீரும், குங்குமமும். அவன் பிரிக்க மடியில் சிந்தி விட்டது.
என்ன சல்மான் இப்படி பண்ணிட்டே. குங்குமம் கீழே கொட்ட கூடாது.
ஏன் கொட்டுனா என்ன ஆகும்?
ஏன் எல்லாம் தெரியாது.கொட்ட கூடாது அவ்வளவுதான்.
மேலும் பர்சில் இருந்து, ஒரு சிறிய தீப்பெட்டியை எடுத்தான்.கங்கா உனக்கு ‘சிசர்’ குடிக்கறே பழக்கம் கூட இருக்கா என்றான் அதிர்ச்சியாக.
அது கோவில்லே தீபம் போட வச்சிருகிகே. நீ பர்ஸ்ட் அதெல்லா கொடு என பிடிங்கி வைத்து விட்டாள்.
நீ நிறைய சாமி கும்பிடுவ போலவே.
ஆமா.ஏன் கேக்கறே?
என்னனு கும்பிடுவே.
ஸ்லோகம் சொல்லுவே. அப்பறோம் நிம்மதியே கொடு கடவுளேனு வேண்டிக்குவே.
என்ன ஸ்லோகம் சொல்லுவே?என பக்கத்தில் இருந்த நோட்டை எடுத்து அதில் எழுத சொன்னான்.
‘திங்கட் பகவின்’ என்ற அபிராமி அந்தாதியை எழுதினாள்.
சரி.நான் ஒரு ஸ்லோகம் எழுதறே கொடு என வாங்கி இவனும் எழுதினான்.
“அஸத்தோமா ஷத் கமய…
தமஸோமா ஜோதிர் கமய…
ம்ரித்யோமா அம்ருதம் கமய…
ஓம் சாந்தி, சாந்தி ஓம்”
இதை படித்த கங்கா.பரவா இல்லையே சல்மான்.நீ முஸ்லிமா இருந்துட்டு. இந்து ஸ்லோகம் எல்லா தெரிஞ்சு வச்சிருக்கையே..
அவன் சிரித்து கொண்டே,”நீ இந்த அளவுக்கு மக்கா இருப்பைனு நான் நினைக்கல கங்கா”என இன்னமும் பலமாக சிரித்தான்.
ஏன் சல்மான்?
கங்கா இதை நல்லா பாரு,”புலி உறும்புது” பாட்டு .
தலையில் அடித்தவாறே.அட ஆமா என்றாள்.தனது அறியாமையை நினைத்து அவனோடு சேர்ந்து அவளும் வெகு நேரம் சிரித்தாள்.
மணி நான்கு என கடிகாரம் காட்டியது. இப்போ கிளம்புனாதா. வீட்டுக்கு சரியான நேரத்துல போய் சேர முடியும். நான் கிளம்பறே என்றாள். கூடவே நித்யாவும் கிளம்ப சல்மானும் கிளம்பினான்.
கங்கா, “இனிமே நிறைய பொய் சொல்ல கத்துக்க, நிறைய பர்மிஷன் போட கத்துக்க” என திரைப்பட பாணியில் கூற…
சிரித்த படியே ‘சரி’ என நால்வரும் ‘பை’ சொல்லி கிளம்பினர்.
அடுத்தநாள் ஞாயிற்று கிழமை.கங்கா எழும் போதே சல்மான் நினைவுகளுடனே எழுந்தாள்.
ஃபோனை எடுத்து பார்க்க,இவளுக்கு முன்பே அவன் குட்மார்னிங் என அனுப்பி இருந்தான்.
பதில் குட்மார்னிங் இவள் அனுப்ப,
கங்கா நீ குடும்ப பாங்கான பொண்ணு என ரிப்ளை செய்தாள்.
நீ ரொம்ப குண்டாக இருக்க சல்மான் என இவளும் பதில் ரிப்ளை செய்தாள்.
நா பர்ஸ்ட் ஒல்லியாதான் இருந்தே. இப்போதான் குண்டாயிட்டே.இதோ பார் இந்த ஃபோட்டோல நா எவ்வளோ ஒல்லியா இருக்கே என ஒரு ஃபோட்டோவை அனுப்பினான்.
பரந்து விரிந்த கடலின் முன்பு,ஆகாய வண்ண நிற கட்டம் போட்ட சட்டையும், அதே நிறத்தில் ஜீன்ஸ் பேண்ட்டும் அணிந்திருந்தான்.கைகளை பாக்கெட்டில் விட்டபடி சிரித்து கொண்டு நிற்க… கங்காவிற்கு அந்த போட்டோவை பார்த்தும் பிடித்து விட்டது. அதை சேவ் செய்து வைத்துக் கொண்டாள்.
சல்மான் இந்த ஃபோட்டோலே நீ ரொம்ப நல்லா இருக்கே.
இந்த ஃபோட்டோல இருக்கறே மாதிரி. உடம்பை குறைக்க போறேன் கங்கா.
சரி சல்மான். பெஸ்ட் ஆஃப் லக்.
இரண்டொரு நாட்களில் நித்யாவிடம் இருந்து ஃபோன், அவள் அம்மாவுடன் சண்டை என…
கங்கா அவளுக்கு சப்போர்ட் செய்ய அவளது வீட்டிற்கு சென்றாள்.
நித்யா அம்மா அவள் மீது குற்றப்பத்திரிக்கை வாசிக்க ஆரம்பித்தார்.
எந்த மாப்பிள்ளை பாத்தாலும் வேண்டாங்கறா.
இவளே பொறுத்தவரை மாப்பிள்ளைக்கு கூட பிறந்தவங்க யாரும் இருக்க கூடாதாமா. கல்யாணம் ஆன உடனே தனிக்குடித்தனம் வந்தரனுனு சொல்றா.
மேலும் பையன் நல்லா வசதியா.படிச்சு இருக்கனுனு எதிர்பார்க்கறா. நல்லா பாத்துகற பையன் இருந்தா போதாதா கங்கா என்றார்.
அவர் சொல்வது சரிதானே.நித்யா பணம் காசு எல்லாம் இப்போ இருக்கும் நாளைக்கு இல்லாம போகும்.ஆனா திறமை இருந்தா அவன் நம்மை நல்லா பாத்துக்குவா என்றாள் இவள் சிவராமனின் ஜெராக்ஸாக..
அதுமட்டுமல்ல கங்கா, நான் பிஎச்டி பண்ணிட்டு இருக்கே. அதுக்கு எண்பதாயிரம் பணம் தேவை படும் நீ கொடுத்தேனா.நான் உன்னை கல்யாணம் பண்றேனு பேரம் பேசிட்டு இருக்கா என்றார்.
நித்யா இந்த மாதிரி எல்லா எதிர்பார்க்காதே.
நல்லவனா இருந்தா போதும் கல்யாணம் பண்ணிக்க என அறிவுறுத்தி வீட்டிற்கு வந்தாள்.
இரவு சல்மானிடம் ஃபோனில்,நித்யா வீட்டில் நடந்ததை பகிர்ந்து கொண்டாள்.
சல்மான் இந்த நித்யா ரொம்ப எதிர்பார்ப்போடு இருக்கா.அது நல்லதுக்கு இல்ல. நாமதான் அவ கிட்ட பேசனும்.
கங்கா அது அவளோட பர்சனல் ஒரு அளவுக்கு மேல நம்மாள அதுல உள்ளே போக முடியாது.
அதுமட்டுமல்ல கல்யாணத்துக்கு ஃபோர்ஸ் பண்ண கூடாது.லைஃப் லாங் கூட வர போறவங்கள நிதானமா தேரந்தெடுக்கறதுல தப்பு இல்லையே.
சல்மான் இவ எதிர்பார்ப்பு ரொம்ப. ஒரு மாப்பிள்ளைக்கு சொந்த வீடும், பதினைந்தாயிரம் சம்பளமும், திறமையும் இருந்தா போதாதா.
அப்போ கல்யாணம் செய்ய ஒரு பையனுக்கு இது மட்டும் இருந்தா போதுமா? கங்கா
‘ஓ!’ போதுமே.
அப்போ என்கிட்ட இது எல்லா எதுமே இல்லையே கங்கா.
நீ இப்போதா பெரிய வீடு கட்டிருக்கீங்கனு மாலதி சொன்னாலே…
அது நான் கட்டுல கங்கா.எங்க அப்பா கட்டிருக்காரு.
அப்பாவோட பிராப்பர்ட்டி எப்படியும் உனக்குதானே வரும். அதும் நீ வீட்டுக்கு ஒரே பையனு வேற நித்யா சொன்னாலே.
அப்படி எல்லா இல்ல கங்கா.நானா சம்பாரிக்கறது மட்டும்தான் என்னுடையது.இந்த வீடு எங்க அப்பாவோடதுதான்.
பியூச்சர்ல ஒரு நல்ல புரோபசர் ஆகி அதுக்கு அப்பறோம் நான் சம்பாரிக்கற ஒவ்வொரு பணமும் தான் என்னுடையது. அப்பா காசுல சாப்பிட்டு,அவரோட உழைப்புல கட்டுனதே என்னோடதுனு சொல்லிக்க எனக்கு விருப்பமில்ல.
உன்னோட பார்முலா எனக்கு புரியவே இல்ல சல்மான்.
உனக்கு புரியவே வேண்டாம்.சரி ஏன் இன்னைக்கு இவ்ளோ நேரம் பேசிட்டு இருக்கே? உங்க அப்பா இன்னமும் வீட்டுக்கு வரலியா.
வந்துட்டாரு.நியூஸ் பாத்துட்டு இருக்காரு பேசறையா தரவா என்றாள்.
இல்ல வேண்டா.நா பேசுல.
சும்மா பேசு சல்மான். ஒரே தமாசா இருக்கும். நா கொண்டு போய் தரே.
சரி கொண்டு போய் கொடு.
இல்ல இல்ல வேண்டா.
சும்மா கொடு கங்கா. நான் பேசறே. ஒரே தமாசா இருக்கும்.
“ஒழுங்கா போய் சாப்பிட்டு தூங்கு” என ஃபோனை கட் செய்து வைத்து விட்டாள்.
மீண்டும் ஒரு ஜாதகம் கங்காவிற்கு வந்திருந்தது.ஆனால் சிவராமன் நிராகரித்து விட்டார்.
பையன் நல்லாதானே இருக்கான். நம்ம கங்காவுக்கும் பொருத்தமா இருக்கும் என லட்சுமி கேட்டார்.
ஆமாப்பா இந்த மாப்பிள்ளை கங்காவுக்கு ஏத்த மாதிரி இருக்கு,நீ ஏன் வேண்டானு சொல்றே என கெளசியும் லட்சுமிக்கு சப்போர்ட் செய்தாள்.
மாப்பிள்ளை அம்மாவாசைலே பிறந்து இருக்கான். அம்மாவாசைலே பிறந்தவன் எம்புள்ளைக்கு வேண்டா என்றார் சிவராமன்.
–தலைவன் வருவான்…
error: Content is protected !!