Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

79. M and V - வான் தழுவிடிலோ வெண்ணிலவே

வான் தழுவிடிலோ வெண்ணிலவே 15(01)

ஆராதனா வாசுதேவன்

ஒவ்வொரு நகரத்திற்கும் தனி அழகு உண்டு. ஆனால் ஒவ்வொரு சீசனிலும்  நியூயார்க் நகரத்தின் அழகு, வாவ்!!

தினமும் காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்து முன் தினமே சமைத்து ப்ரிட்ஜில் வைத்திருக்கும் உணவை சூடு செய்து எடுத்து கொண்டு ஏழு மணிக்கெல்லாம் வீட்டை விட்டு கிளம்பினால் நடந்தே ஆஃபீஸ் செல்ல சரியாக இருக்கும்.

ஆஃபீஸ் போகும் வழியில் ஒரு காபி ஷாப்பை கண்டுபிடித்து வைத்திருக்கிறேன். பெரிய ப்ராண்ட் எல்லாம் இல்லை. சிறிய காபி ஷாப் தான். மும்பையில் என்னுடைய பிரியமான காபி ஷாப்பை நினைவுபடுத்தியது இது. தினமும் அங்கே காபியை கோ டு கப்பில் வாங்கிக் கொண்டு ஆஃபீஸ் போவதை வழக்கமாக்கிக் கொண்டேன்.



Advertisement

காபி என்னுடைய பர்ஸ்ட் லவ். ஒரு முறை எதேச்சையாக விக்ரமிடம் சொல்லியிருந்தேன்.

‘காரமல் காபுசினோ’ என்னுடைய பேவரைட். எல்லா இடங்களிலும் கிடைக்காது. ஆனால் எப்படித் தான் தருவிப்பானோ! அவன் லண்டனில் இருந்த சமயம் கூட காபி எப்போதும் என் டேபிளில் இருக்கும்படி பார்த்துக் கொண்டான்.

நான் இங்கே வந்து கிட்டத்தட்ட பத்து மாதங்கள் ஆகப் போகின்றன. ஒரு நாள் கூட விக்ரமை நினைக்காமல் கடக்கவில்லை.

Advertisement

ஆரம்பத்தில்  இரண்டே வாரங்கள் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இங்கே வந்தேன்.

Advertisement

நான் தங்குவதற்கு முழுவதுமாக ஃபர்னீஷ் செய்யப்பட்ட, அபார்ட்மென்ட்டை ரெடியாக வைத்திருந்த எட்வர்ட், முதல் நாள் ஆஃபீசிற்கு அவனே வந்து என்னை அழைத்துச் சென்றான்.

ஆஸ்டர் & ஆஸ்டர் லா ஃபர்ம் லால் & ஷர்மாவை விட பல மடங்கு பெரிய சட்ட நிறுவனமாக இருந்தது.

நேராக அவன் ஆபீசிற்கு அழைத்துச் சென்றான்.

Advertisement

“இதோ நீ கேட்ட ஃபைல்ஸ்” என்னிடம் ஒரு கத்தையைக் கொடுத்தான்.

முப்பது வருடம் முன்னால் நிலம் ஒன்றை ஒரு நிறுவனம் பர்சேஸ் செய்தது. அதன் லீகல் டாகுமன்ட் எல்லவற்றையும் ஆஸ்டர் தான் சரி பார்த்து கொடுத்தது. இப்போது அந்த நிலத்தின் ஒரு பகுதியை ஒரு NGO சாலன்ஜ் செய்திருக்கிறது.

அந்த தன்னார்வ நிறுவனத்திற்கு முதியவர் ஒருவர் உயில் எழுதி வைத்திருப்பதை சுட்டிக் காட்டி நிலம் NGOக்கு சொந்தம் என வாதம்.

இப்போது அந்த நிறுவனத்தார் ஆஸ்டர் டாகுமன்ட்டை சரியாக வெரிபை செய்யவில்லை என்று வழக்கு தொடுக்க முடிவு செய்திருக்கிறது.

“அப்போ அங்கிள் தான் டீல் செய்தார். அங்கிள் இஸ் நோ மோர் நவ். நானும் எல்லா பைல்ஸூம் செக் செய்து விட்டேன். எனக்கு ஒன்றும் புரியவில்லை” எட்வர்ட் படபடத்தான்.

“காம் டவுன் எட்வர்ட். NGO சார்பில் வழக்கை யார் போட்டிருக்காங்க. நாம அவங்ககிட்ட பேசிப் பார்க்கலாம்” என்றேன்.

“நோ யூஸ் பெல்லா. வேறு வழி இருந்தா சொல்” என்றான் விட்டேத்தியாக.

நான் மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை. கிட்டத்தட்ட ஒரு வாரம் கடந்த நிலையில் எனக்கு ஒரு சிறு இழை கிடைத்தது.

ஆனால் எதிர்தரப்பினரை ஒரு முறை சந்தித்துப் பேசினால் ஈசியாக சால்வ் செய்யலாம் என்று எனக்குள் ஒரு எண்ணம் தோன்றிக் கொண்டே இருந்தது.

“பெல்லா மாம் & டாட் உன்னை பார்க்க வேண்டும் என்றார்கள். உன்னை இன்ட்ரோ செய்து வைக்கிறேன்” என்று என்னை ஒரு ஸ்டார் ரெஸ்டாரன்ட்க்கு அழைத்துக் கொண்டு போனான் எட்வர்ட்.

எட்வர்ட் அப்பா வில்லியம் ஆஸ்டர், லீடிங் கிரிமினல் அட்டர்னி, அம்மா ஒலிவியா சிவிலில் பிரபலமானவர். இவன் கார்பரேட் பிரிவை லீட் செய்கிறான். மூவருமே அவரவர் கரியரில் பிசியாக இருப்பதால் ஃபேமிலி டைம் என்று முன்பே ஃபிக்ஸ் செய்து கொள்வார்களாம்.

என்னைப் பார்த்ததும் ஒலிவியா லேசாக அணைத்து “வெல்கம் டியர்” எனப் பிரியமாக வரவேற்க வில்லியம் புன்னகையோடு கை குலுக்கினார்.

ஜெசப் மூட் காம்படீஷனை நான் வின் செய்ததிலிருந்தே அவர்களுக்கு என்னைத் தெரியும் என்றார்கள்.

“பெல்லா என்று எட் உன்னை ஏன் அழைக்கிறான் என்று நேரில் பார்த்ததும் தான் தெரிகிறது” என்று வில்லியம் சொல்ல மெலிதாக புன்னகைத்தேன்.

இவன் என்னை பெல்லா என்று அழைப்பது அவன் அம்மா அப்பாவிற்கு கூட தெரிந்திருக்கிறது.

லஞ்ச் முடித்துக் கொண்டதும் எட்வர்ட் அவன் அப்பாவுடன் சென்று விட நானும் ஒலிவியாவும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அப்படி பேசிக் கொண்டிருந்த போது தான் ஆஸ்டர் மேல் வழக்கு தொடுத்திருப்பது யார் என்று எனக்குத் தெரிந்தது. ஒலிவியா விவரங்கள் சொல்லச் சொல்ல சிக்கலை அவிழ்க்கும் முனையைப் பற்றியிருந்தேன்.

உடனடியாக அதை செயல்படுத்தவும் செய்தேன்.

 “எப்படி செய்தாய் பெல்லா?” எட்வர்ட் திரும்பத் திரும்பக் கேட்டான்.

“தட்ஸ் சீக்ரெட்” சிரித்தேன்.

“அவர்கள் நெகோஷியேஷன் செய்ய ஒத்துக் கொண்டார்கள் பெல்லா. தட்ஸ் க்ரேட். அதையும் நீயே முடித்துக் கொடு” என்றவனிடம்

“நோ எட்வர்ட். நீ தான் செய்ய வேண்டும். டோன்ட் வொர்ரி. ஜஸ்ட் கோ. எல்லாம் சரியாக வரும்” நான் சொல்லவும் ஒத்துக் கொண்டு விட்டான்.

விக்ரமிடமும் இப்படித் தானே சொன்னேன். ப்ரஸ் மீட் போது வழக்கத்திற்கு மாறாக மிகவும் டென்ஷனாக இருந்தான்.

“டோன்ட் வொரி. ஜஸ்ட் கோ. எல்லாம் சரியா வரும்” என்று நான் சொல்ல சரி என்று தலையாட்டி மேடை ஏறினானே!

“பெல்லா, ஐ காட் டு கோ. உன்னை வீட்டில் டிராப் செய்யவா?” எட்வர்ட் கேட்கவும் சென்ட்ரல் பார்க்கில் இறக்கி விடச் சொன்னேன்.

அன்று மாலையே மிகுந்த சந்தோஷமாக கால் செய்தான் எட்வர்ட்.

“பெல்லா, யூ ஆர் மை டார்லிங். கெட் ரெடி உன்னை டின்னருக்கு அழைத்துக் கொண்டு போகிறேன்” என்றவன் அரை மணி நேரத்தில் வீட்டிற்கு வந்து விட்டான்.

எல்லா ப்ராப்ளமும் சால்வ் ஆகிவிட்டது என்று என்னை ஹக் செய்யவும் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.

அன்று டின்னர் சென்ற போது தான் எட்வர்டிடம் கேட்டேன்.

“இங்கேயே இன்னும் கொஞ்ச நாள் இருக்க முடியுமா எட்வர்ட்?”

இந்த இரு வாரங்களில் ஒவ்வொரு நாளும் விக்ரமிடமிருந்து மெசேஜ் இல்லை கால் கண்டிப்பாக வரும் என்று நான் எதிர்பார்த்து ஏமாற்றம் கொண்டதை எட்வர்டிடம் சொல்லவில்லை.

சென்னைக்கு சென்று எல்லோரையும் சந்திக்கும் மனநிலையில் இல்லை நான்.

“பெல்லா. இது என்ன கேள்வி. கொஞ்ச நாள் என்ன எவ்வளவு நாள் வேண்டுமானாலும் ஸ்டே ஹியர்” என்றான் எட்வர்ட்.

மூன்று வருடங்கள் முன்பே நான் இங்கே வர எல்லா ஏற்பாடுகளும் செய்து வைத்திருந்தான். அதனால் விசா, வொர்க் பர்மிட் எல்லாம் ஒரு ப்ராப்ளமும் இல்லை என்றான்.

“அந்த விக்ரமிடம் மட்டும் திரும்பிப் போகாதே பெல்லா” என்று அவன் சொல்ல தலையை மட்டும் ஆட்டினேன்.

எப்படி போவேன் நான். நோ என்றால் நோ தான் என்பதில் அவன் உறுதியாக இருக்கும் போது நான் என்ன வேண்டி என்ன பயன்.

பெயருக்கு ஒரு போஸ்ட் க்ரியேட் செய்த போதும் என்னை சீனியர் லீகல் அட்வைசராக தான் எல்லோரிடமும் அறிமுகம் செய்து வைத்தான்.

நான் நாள் முழுக்க என்ன செய்வது என்று யோசித்து அவர்களின் முந்தைய டீல்ஸ் பற்றிய ஃபைல்ஸ் வேண்டும் என்று எட்வர்டிடம் கேட்டு அதை  அனலைஸ் செய்து நோட்ஸ் எடுக்க ஆரம்பித்தேன்.

ஒரு நாள் அதை எட்வர்டிடம் காட்டவும், “இதை பிரசன்டேஷனாக செய்யலாமே. எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும்” என்றவன் வெள்ளிக் கிழமை மதியம் ‘கேஸ் ரெவ்யூ’ என்று எல்லோருக்குமே மெயில் அனுப்பினான்.

ஆரம்பத்தில் ஜூனியர் லாயார்ஸ், பாராலீகல் டீம் தான் அட்டன்ட் செய்தனர். சீனியர் லாயர்ஸ் யாரும் கண்டுகொள்ளவே இல்லை. ஆனால் மூன்று, நான்கு வாரங்களுக்குப் பின் சீனியர் லாயர்ஸூம் வர ஆரம்பித்தனர்.

என்னுடைய அப்ரோச், நான் வேறு என்ன வழிகளில் இதை டாக்கில் செய்யலாம் என்று சொன்னது இவற்றை ஜூனியர்ஸ் பொதுவாக பேசிக் கொண்டிருந்தது ஆஃபீஸில் பரவ சீனியர்களும் அப்படி என்ன தான் சொல்கிறாள் இவள் என்று அறிந்து கொள்ள தான் வந்தார்களாம்.

“ஆரா, எட்வர்ட் உன்னைப் பத்தி சொன்ன போது ஹைப் செய்கிறான் என்றே நினைத்தோம். Your strategies are unique”  என்றனர்.

“இதைப் பற்றி என்ன நினைக்கிறாய்” என்று என்னிடம் டிஸ்கஸ் செய்யவும் ஆரம்பித்தனர்.

“நான் ஒருவன் இங்கே இருக்கிறேன் என்பதையே எல்லோரும் மறந்து விட்டாகள் போல” எட்வர்ட் கிண்டலாக சொன்னாலும் அவனுக்கு அவ்வளவு சந்தோஷம்.

எல்லா அலுவலகங்களிலும் இருப்பது போல ஆஃபீஸ் காஸிப் இங்கேயும் இருந்தது.

‘ஆரா எட்வர்டின் கர்ல் ஃப்ரண்டா இல்லை வெறும் ஃப்ரண்டா’ என்ற விவாதம் நான் வந்த நாளிலிருந்தே நடந்து கொண்டிருப்பது எனக்குத் தெரியும். ஆனால் ஒருவரும் என்னிடம் நேரில் எதையும் கேட்டதில்லை.

எட்வர்ட் என்னை வீக்என்டில் கூட தனியாக இருக்க விட்டதில்லை. எதையாவது யோசித்து மனதை குழப்பிக் கொண்டிருப்பாய் என்று ஊர் சுற்றக் கூட்டி போய் விடுவான்.

கிட்டத்தட்ட தினமும் ஃபோனில் அம்மா, அப்பாவிடமும், சோனாவிடமும் பேசினேன்.

இங்கே இன்னும் கொஞ்ச நாள் இருக்க வேண்டிய சூழ்நிலை என்று மட்டும் சொன்னேன்.

“ருக்மணி கூட சொன்னாங்க. விக்ரமும் ரொம்ப பிசியாக இருக்கிறாராம்” அம்மா சொல்ல சரி என்று கேட்டுக் கொண்டேன்.

ஆக அவன் இன்னும் அங்கே யாரிடமும் எதையும் சொல்லவில்லை. ஏனாம்? என்ன வேண்டும் அவனுக்கு?

ஆனால் எத்தனை நாட்களுக்கு என்னால் மறைக்க முடியும். அம்மா அப்பாவிடம் மட்டுமாவது சொல்லிவிட வேண்டும்.

ஆனால் எப்படி?

எனக்குத் தெரியவில்லை.

“அவர்களை இங்கே வரச் சொல் பெல்லா. டூரிஸ்ட் விசா ஏற்பாடு செய்து வரவழைக்கலாம். நேரில் பேசு” எட்வர்ட் தான் தீர்வு சொன்னான்.

ஒரே மாதம் தான். எட்வர்ட் எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டிருந்தான். நாங்கள் இருவரும் அம்மா அப்பாவை ரிசீவ் செய்ய ஏர்போர்ட் சென்றிருந்தோம்

அம்மாவும் எட்வர்டும் ஏதோ பல நாள் பழகியது போல பேசிக் கொண்டு வந்தனர். அப்பா தான் என் தலையை வருடி விட்டு “ரொம்ப சோர்ந்து போயிருக்க பட்டு” என்றார்.

அப்பாவை கட்டிக் கொண்டு அழ வேண்டும் போல இருந்தது எனக்கு. மிகவும் கஷ்டப்பட்டு கண்ட்ரோல் செய்து கொண்டேன்.

அன்றிரவே அம்மா அப்பாவிடம் நானும் விக்ரமும் நிச்சயத்தை முறித்துக் கொண்டோம் என்று சொல்லி விட்டேன்.

“ப்ளீஸ் என்ன ஆச்சு என்றெல்லாம் கேட்காதீங்க. அங்கே யாருக்கும் சொல்ல வேண்டாம். விக்ரம் அவராக சொல்லட்டும். நான் இங்கேயே கொஞ்ச நாள் இருக்கேன், எட்வர்ட் எல்லா ஏற்பாடும் செய்துட்டான்” நான் சொல்லவும் அம்மாவும் அப்பாவும் ஒன்றும் கேட்கவில்லை.

வார நாட்களில் வேலைக்குச் சென்று வந்ததும் பழைய கதைகள் ஏதேனும் பேசிக் கொண்டிருப்போம்.

வீக்என்ட் நயாகரா, வாஷிங்டன், சிகாகோ என்று சுற்றினோம்.

எட்வர்ட் காரும் டிரைவரும் ஏற்பாடு செய்து கொடுத்திருந்ததால்  என்னை எதிர்பார்க்காமல் நியூயார்க், நியூஜெர்சி போகப் பழகிக் கொண்டனர்.

“அருமையான பையன். யார் இப்படி பார்த்து பார்த்து செய்வா” அம்மா அப்பாவிற்கு எட்வர்ட் மேல் மிகுந்த பிரியம்.

“தே லைக் யூ சோ மச்” என்றேன் அவனிடம்.

“என்னை யாருக்குத் தான் பிடிக்காது” என்று பெருமை அடித்துக் கொண்டான்.

“நீ உடனே கிளம்பி வரச் சொன்னதால் எல்லாத்தையும் அப்படியே விட்டுட்டு வந்துவிட்டோம் பட்டு” இரண்டு மாதங்கள் என்னுடன் இருந்துவிட்டு ஊருக்கு கிளம்பிச் செல்ல முடிவு செய்தனர்.

அம்மா அப்பா எல்லாவற்றையும் பேக் செய்து கொண்டிருந்தார்கள்.

“எவ்வளவு  நாள் இங்கேயே இருக்க போகிறாய் பட்டு” அப்பா தான் கேட்டார்.

“தெரியல அப்பா” என்றேன்.

“குழந்தைய ஏன் சங்கடமா கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க. இங்கே வேலை செய்யுறா. எட்வர்ட் பார்த்துக் கொள்கிறான். அவ ப்ரீயா இருக்கட்டும்” அம்மா சொல்லவும் அவரைக் கட்டிக் கொண்டேன்.

நடுவில் சோனா அடிக்கடி பேசினாள். அவளிடமும் சொல்லிவிட்டிருந்தேன்.

“லவ் என்றால் கொஞ்சம் என்ன நிறையவே சண்டை வருவது தான் ஆரா. நானும் ஷ்யாமும் எவ்வளவு சண்டை போட்டிருப்போம். நிறைய கருத்து வேறுபாடுகள் இருக்கத் தான் செய்யும்” அவள் சொல்வதைக் கேட்டுக் கொண்டேன்.

“திஸ் இஸ் மை வே ஆப் சேயிங் ஐ லவ் யூ” விக்ரமின் குரல் ஒலித்தது என் மனதில்.

உண்மையில் இந்த காதல் எனக்கு புரியத் தான் இல்லை. என்ன இருந்தாலும் இப்போவே கல்யாணம் பண்ணிக் கொள் என்று கட்டாயப்படுத்துவது தான் காதலா?

எப்போதும் போல எட்வர்ட் டெலிபதி வேலை செய்தது. நான் குழப்பத்தில் இருக்கிறேன் என்று தெரிந்து கொண்டானோ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!