Skip to content
Post Views: 2,482
உனதன்பில் சரணாகிறேன் 20.2
அவ்வீட்டிற்கு பலமுறை வந்திருந்தாலும், ம்ருதவ்வின் அறைக்குள் மித்யுகா வருவது இதுவே முதல்முறை.
“இந்த ரூமுக்கு மேடம் வர எவ்வளவு வலியை கடந்துவர வேண்டியதாகிருச்சு” என்ற ம்ருதவ்,
“வெல்கம் டூ அவர் ஹெவன்” என்று அவளை பின்னிருந்து அணைத்தான்.
Advertisement
தயக்கமோ தடுமாற்றமோ இருவரிடமும் இல்லை. வேண்டி கிடைத்த நிமிடங்கள்.
காத்திருப்பின் தவத்தால் கிடைத்த வரம் இருவரின் இணைவு.
இயல்பான நெருக்கதோடு இருந்திடவே விரும்பினர்.
Advertisement
நெஞ்சோடு சுமந்திருக்கும் காதலே அவர்களின் இயல்புக்கு காரணமாய்.
Advertisement
“ஷ்ஷ்… ஆ.. ம்ருது” என்றவள் அவனிலிருந்து வேகமாக விலகியிருந்தாள்.
“ஒண்ணுமே பண்ணலடி அதுக்குள்ளவா!” என்ற ம்ருதவ், “ஹக் பண்ணவே இந்த ரியாக்ஷன் அநியாயம். லவ்ல உன் அதிரடிலாம் நினைச்சு என்னென்னவோ எக்ஸ்பெக்ட் பண்ணேன்” என்று உதடு சுளித்தவனாக மெத்தையில் அமர்ந்தான்.
“அச்சோ ம்ருது, நீங்க ஹக் பண்ணதுக்கு கத்தல. முதுகுல என்னவோ குத்துச்சு” என்றவள், “உங்க பாக்கெட்டில் என்னவோ இருக்கு” என்றாள்.
Advertisement
“இதை எடுத்து வைக்க மறந்துட்டேன்” என்று சட்டை பையிலிருந்து ஜிமிக்கியோடு சேர்ந்திருக்கும் சாவியை எடுத்து மேசை மீது வைத்தான்.
“எப்பவும் பேண்ட் பாக்கெட்டில் தான் வச்சிருப்பேன். வேஷ்டி வியர் பண்ணதால இங்க வச்சேன்” என்று அவன் சாதரணமாக மொழிய,
“ம்ருது” என்று விசும்பலோடு ஓடி வந்தவள் அவனின் மடியில் கை வைத்தவளாக, அவனது பாதத்தின் கீழ் மண்டியிட்டிருந்தாள்.
“ஹேய் யுகா, என்ன பண்ற?” என்று அவளின் தோள்கள் பிடித்து தூக்கி தனதருகில் அமர்த்தினான்.
“ரொம்பவே கஷ்டம் கொடுத்துட்டேன்ல?”
“நீ கொடுக்கிறது வலியா இருந்தாலும் எனக்கு சந்தோஷம் தான். இருக்கும்போதே ஒருத்தரோட நினைப்போட வாழ கொடுத்து வைக்கிறதெல்லாம் வரம். அப்படியான வரத்தைக் கொடுத்தவ நீ! எல்லாம் அந்த மலையிலே முடிஞ்சுப்போச்சு. இனி நடந்து முடிஞ்சதை எப்பவும் பேசக்கூடாது. நினைக்கக்கூடாது” என்றவன், “என்னை மட்டும் நினைடி பொண்டாட்டி” என்று அவளின் கன்னம் ஏந்தி நெற்றி முட்டினான்.
அவளது இமை நீர் அவனது இமை தழுவியது. அவனது கரங்கள் அவளையும்.
“இதை ரொம்பவே மிஸ் பண்ணேன். என்கிட்ட அதிகபட்சமா நீங்க காட்டின நெருக்கமே இதுதான்” என அவளும் அவனின் நெற்றி முட்டினாள்.
“தி லவ் லாங்குவேஜ் ஆஃப் ஃபோர்ஹெட் கிஸ்” என மீண்டும் நெற்றி முட்டி நிறுத்தியவன், இருவரின் இமை இழைகள் இணக்கம் கொள்ள, மென்னிதழ் விரிப்போடு, “இட்ஸ் அ சைலண்ட் பிராமிஸ்… ஸ்டே க்ளோஸ்” என்றான்.
(நெற்றி முத்தம் என்பது ஒருவர் நெற்றியில் இன்னொருவர் இதழால் முத்தம் கொடுப்பது அல்ல. நெற்றியோடு நெற்றி முட்டுதல்.)
(Forehead kiss : A silent promise. Stay close.)
“ம்ருது” என்று நெகிழ்வாய் சொல்லியவளின் இதழ் குவிதலில் உண்டான சுவாசம் அவனது அதரம் தீண்ட…
“ஹார்ட் ப்ரீஸிங் யுகா” என்று மெல்ல விலகினான்.
“உங்ககிட்ட ஒன்னு கேட்கணுமே!” என்ற மித்யுகா… உங்களுக்கு ஏன் இது செக்கண்ட் மேரேஜ் சொன்னீங்க?” எனக் கேட்டாள்.
அவளின் விரல்களோடு விரல்கள் கோர்த்து இன்னும் நெருங்கி அமர்ந்தவன்,
“என் பொண்டாட்டி அவளுக்கு செக்கெண்ட் மேரேஜ்ன்னு சொன்னா(ள்). அவளுக்கு செக்கெண்ட் அப்படின்னா எனக்கும் செக்கெண்ட் தான?” என்று மின்னலென இரு புருவத்தையும் ஏற்றி இறக்கியவனின் கன்னத்தில் தனது கன்னம் அழுந்த உரச முத்தம் வைத்திருந்தாள்.
“ஹேய் யுகா… இட்ஸ் டெம்டிங்.”
“சீக்ஸ் கிஸ்க்கு மீனிங் தெரியுமா?” என குவிந்த புன்னகையோடு வினவியவள், பற்கள் தெரிய இதழ் விரித்து,
“யூ மேக் மீ ஸ்மைல் இன்சைட்” என்றாள்.
இருவரின் அதரங்களும் மதுரமாய் குறுநகை கொண்டன… ஒருவருள் ஒருவர் அடக்கமாய்.
இதழ்கள் நெருக்கம், ஜீவ சங்கமத்திற்கு வழி வகுத்தது.
மென் தீண்டல்களுக்கே தடை விதிப்பவன், விரல் தீண்டல்களில் பாதை அமைத்து இதழ்களால் ஊர்வலம் நடத்தி, உடல் ஸ்பரிசத்தில் பெண்ணவளை களவாடியிருந்தான்.
“ம்ருது” என்றவளின் முனகல்கள் யாவும், “யுகா” என்ற அவனின் அக விளிப்போடு உயிரில் கலந்தது.
காதலில் வேரூன்றியவர்கள் இன்று அதன் ஆழம் வரை நுழைந்து தெவிட்டா இன்பத்தில் கரை சேர்ந்தனர்.
தனது இதயம் சேர்ந்தவள் இன்று உயிரில் சேர்ந்திருக்க, நெற்றி முட்டலில் மேலும் அவளுடன் நெருங்கிப் படுத்து கண்களை மூடினான்.
அவனது கையணைவில் அடங்கியிருந்தவள், வெற்று மார்பில் அழுத்தமாக இதழ் பதித்தாள்.
“லவ் யூ ம்ருது.”
“ஹெவன்லி ஹேட் யூ யுகா” என்றவன் அணைப்பைக் கூட்டியிருந்தான்.
காதல் என்றும் காதலாய் அவர்களுள் ஜீவித்திருக்க…
இரவு விடியலை துறந்தது.
திறந்திருந்த சன்னல் வழி பறவைகளின் ஒலி செவி நிறைத்திட, முதலில் கண் விழித்தாள் மித்யுகா!
இரவு முழுவதும் அவனது கையணைவில். ஆழ்ந்த உறக்கத்திலும் அவனது பிடி தளரவில்லை.
இனி எப்போதும் மித்யுகா ம்ருதவ்வின் கைகளுக்குள் மட்டுமே என்பதையே அவனது செயல்கள் அவளுக்கு உணர்த்துகின்றன.
பேரின்பத்தின் ஊற்றாய் அவளது முகம்.
அவனது மார்பு கவிழ்ந்திருந்தவள் விழிகள் உயர்த்திட தென்பட்ட அவனது நாடியில் முத்தம் வைத்தாள்.
“தூங்குடி…” இன்னும் இன்னுமாய் அவளை தனக்குள் சுருட்டிக்கொண்டான்.
“எவ்வளவு நேரத்துக்கு… விடிஞ்சிருச்சு” என்றவள், “டயர்டா இருக்கா?” எனக் கேட்டாள்.
“அந்தக் கேள்வியை நான் தான் உன்கிட்ட கேட்கணும்” என்றவன், “எழுந்துட்டா இப்படி இவ்ளோ நெருக்கத்துல நீ இருக்கமாட்டியே” என்றான்.
“அதுக்கு…”
“இப்படியே இருந்திடலாம் யுகா!”
“அதுசரி” என்றவள் அவனின் மார்பில் பற்கள் பதிய கடித்திருந்தாள்.
துள்ளி எழுந்தமர்ந்திருந்தான்.
“ராட்சசி… வலிக்குதுடி…”
“ஆஹான், வலிக்கட்டும். வலியா இருந்தாலும் நான் கொடுக்கிறதா இருந்தா பிடிக்கும் சொன்னீங்க… இதையும் அனுபவியுங்க” என்று சிரித்தவளின் சிரிப்பு அவனுள் தொலைந்திருந்தது.
மீண்டும் இருவரும் விலகிய நேரம்…
“என் ஜிமிக்கி கொடுங்க?” என அவன் முன் கை நீட்டியிருந்தாள்.
“ஜிமிக்கியா… போட்டிருந்தது பெட்ல விழுந்திருச்சா?” என்ற ம்ருதவ், “ஜூவெல் எல்லாம் நீதான ரிமூவ் பண்ண” என்றான்.
“அச்சோ ம்ருது… நீங்க எனக்கு கொடுத்தது. திரும்ப வாங்கிக்கிறேன் சொன்னேன்ல” என்றாள்.
இருவரின் நினைவும் ஒன்றாய் அந்த இரவுப் பயணத்தை ரசித்து மீண்டது.
“என்கிட்ட இல்லை” என்று இறங்கி நின்றவன், அவளின் கெஞ்சல் பார்வையை கண்டுகொள்ளாதவனாய், “என்னோட வா” என்று அறைக்குளிருக்கும் பக்க கதவை திறந்து, சிட்அவுட்டுக்கு அழைத்து வந்தான்.
அங்கிருந்துப் பார்க்க, தோட்டம் முழுவதும் நிரம்பியிருந்த மரங்களும், செடிகளும் அவ்விடத்தை குட்டி வனம் போல் காட்சியளித்தது.
அங்கிருக்கும் பழ மரங்கள், மலர்ச்செடிகள் யாவும் அவனுடன் இணைந்து அவள் வைத்தது. இன்று பூத்து குலுங்கியது.
“ம்ருது…” மனதின் குளுமை அவளின் அழைப்பில் பிரதிபலித்தது.
“எல்லாமே நம்ம காதல் மாதிரியே உயர வளர்ந்தாச்சு” என்ற ம்ருதவ் தானியங்கள் அடங்கிய டப்பாவை எடுத்து அவளின் கைகளில் கொடுத்து, கை நிறைய அள்ளி தோட்டத்து புல் தரையில் விசிறினான்.
அடுத்த நொடி அங்கு தங்களின் கூட்டுக்குள் பதுங்கியிருந்த பலதரப்பட்ட பறவைகள் தரையிறங்கி தானியங்களை கொத்தத் துவங்கின.
“வாவ் ம்ருது… அழகா இருக்கு” என்றவள், “இதுங்கதான் சத்தம் போட்டு எழுப்பினதா?” என்றாள்.
“ஆமா… என்னோட தனிமைக்கான சொந்தக்காரங்க” என்றவன், அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து, அவளை தன் மடி அமர்த்தினான்.
“இனி நம்மளோட சொந்தக்காரங்க” என்றவன், அவள் கேட்ட ஜிமிக்கியை தானே அவளுக்கு அணிவித்தான்.
தான் அவனுடன் இல்லையேத் தவிர, தானின்றி அவனது அணுவும் அசைந்திடவில்லை என்பதை அவனை மீண்டும் சந்தித்த கணம் மூலம் அவனது சிறு சிறு செயல்களிலும் அறிபவளுக்கு முன்பென்றால் குற்றவுணர்வு ஏற்பட்டிருக்கும், முழுதாய் அவனது காதலுக்கு உரித்தவளானவளுக்கு கர்வமாக இருந்தது.
இருவரிடம் அந்நேர இதத்தை மனதோடு சேர்பித்தவர்களாக அமைதியில் மூழ்கியிருந்தனர்.
“அம்மாவை எப்படி மீட் பண்ணீங்க?” அவனாக சொல்வானென்று எதிர்ப்பார்த்தவள் தானே கேட்டிருந்தாள்.
“வன் இயர் முன்னாடி… உன் ஆபீஸ் பார்ட்டி போட்டோஸ்ல கமல் உன்னைக் காட்டினான். கமல் ஸ்கூல் ஃப்ரெண்ட் அங்கதான் வொர்க் பண்றான். அவன் மூலமா கமல் உன்னைபற்றி விசாரிச்சு, உனக்கு மேரேஜ் ஆகிடுச்சு, ரெண்டு குழந்தைங்க இருக்காங்கன்னு சொன்னான். என்னால நம்ப முடியல. உண்மையாவே இருந்தாலும் அந்த நேரம் உன்னை பார்க்கணும் அப்படின்னு ஒரு மாதிரி அப்செஸ்… கமல் எவ்வளவோ சொல்லியும் உன் ஆபீஸ் வந்தேன். இல்லைன்னு சொன்னாங்க. உன் அட்ரஸ் வாங்கி வீட்டுக்கே வந்துட்டேன். அத்தை மட்டும் தான் வீட்டிலிருந்தாங்க. என் பெயர் சொன்னதுமே, அத்தை என்கிட்ட எல்லாமே சொல்லிட்டாங்க. ஆனா நீ இன்னும் நடந்ததிலிருந்து வெளிவரல, வெயிட் பண்ணுங்க சொன்னாங்க. நீ மாறவே மாட்டன்னு தெரிஞ்சதோ என்னவோ, மேரேஜ் ஏற்பாடு பண்ணலாம் சொன்னாங்க… சோ பிளான் பண்ணோம். உன்னை என்கிட்ட கொண்டு வந்தாச்சு” என்று முடித்தான்.
“ம்ருது…”
தவிப்போடு தனது இதயம் சாய்ந்தவளை காதலாய் சுவீகரித்துக்கொண்டான்.
*****************************
“டேய் இன்னும் என்னடா பண்ணிட்டு இருக்கான் உன் அப்பா?”
கமலேஷ் தனது பொறுமையை முழுவதும் இழந்தவனாக சிவேஷ்ஷிடம் கேட்டிருந்தான்.
“அவங்க என்ன பண்ணா உங்களுக்கு என்ன?” என்ற சிவேஷ், “நீ வா ம்ருணா” என கமலேஷ் மடியிலிருந்த தனது தங்கையை தூக்கிக்கொண்டு செண்பகத்திடம் சென்றான்.
“என்னவாம் அவனுக்கு… கோபமா இருக்கான்.” கமலேஷ் சிவன்யாவிடம் கேட்டான்.
“அம்மாவோட ஜிமிக்கி டிரெஸ்ஸிங் டேபிலிலிருந்ததை கவனிக்காம அவன் கண்ணாடியை எடுகிறன்னு அங்கிருந்த எல்லாத்தையும் இழுத்து விட்டுட்டான். கம்மல் எங்கையோ விழுந்திருச்சு. அப்பாவும், அம்மாவும் அவனை ஒண்ணுமே சொல்லல. ஆனால் அவங்க இன்னும் அதை தேடிட்டு இருக்கிறதால், ரொம்ப இம்பார்டன்ட் திங்க் தொலைச்சிட்டோம்னு ஃபீல் பண்றான்” என்று விளக்கமாகக் கூறினாள் சிவன்யா.
“இந்த ஜிமிக்கு இவங்ககிட்ட (இந்த கதையில்) படாதபாடு படுது…” என்று எழுந்து ம்ருதவ்வின் அறை வாயிலில் நின்று,
“டேய் போதும்டா உங்க அக்கப்போரு… டைம் ஆச்சுடா. நல்ல நேரத்துல கோவில் போக வேண்டாமா?” என்றான்.
“கொஞ்ச நேரம் கமல் அண்ணா” என்ற மித்யுகா, டிரெஸ்ஸிங் டேபிலுக்கு கீழ் லைட் அடித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அவன் தான் தினம் ஒண்ணு வாங்கித்தரானே அப்புறம் என்ன?”
“எத்தனைமுறை எவ்ளோ வாங்கித்தந்தாலும் எல்லாமே ஸ்பெஷல் தான்.”
“ரைட்டு” என்ற கமலேஷ், ரதி அழைக்கவே அவளிடம் சென்றான்.
பூஜைக்கு வேண்டிய பொருட்களையெல்லாம் ரதியும், செண்பகமும் எடுத்து வைத்திருந்தனர்.
“இதையெல்லாம் கார்ல கொண்டுபோய் வைங்க” என்ற ரதி, “ஷா என்ன பண்றாள்?” என அவர்களின் நான்கு வயது பெண் பிள்ளையை கேட்டாள்.
“சிவன்யாவோட விளையாடிட்டு இருக்காள்” என்ற கமலேஷ் பெண்கள் இருவரும் உதவவே அனைத்தையும் எடுத்துச்சென்று காரில் வைத்து முடிக்க, ம்ருதவ், மித்யுகா அறைக்குளிருந்து வெளியில் வந்தனர்.
“என்ன கிடைச்சுதா?” ரதி கேட்க மித்யுகா கண்கள் ஒளிர தலையாட்டினாள்.
சிவேஷ் ம்ருணாவுடன் முன் வந்து…
“சாரிப்பா” என்க,
“இப்போ யாரு சாரி கேட்டாங்களாம்” என்று தங்களின் ஒரு வயது குழந்தையோடு நின்றிருந்த சிவேஷ்ஷை தூக்கியிருந்தான்.
“என்மேல கோவமில்லையா?”
“எதுக்காம்?” என்று ம்ருதவ் அவனின் நெற்றி முட்டிட, அருகிலிருந்த மித்யுகா தொண்டையை செருமினாள்.
“உன் அம்மா பொறாமைப்படுறா, நாம முன்னாடிப் போலாம்” என்று காரில் ஏறினான்.
“எல்லாம் எடுத்து வச்சாச்சா?” என்று செண்பகம் வீட்டை பூட்டிவிட்டு வந்து கமலேஷின் காரில் ஏறினார்.
“ஷா அந்த காரில் ஏறிட்டாளா?”
“பிள்ளைங்களாம் அதுல இருக்காங்களே” என்றாள் ரதி.
கமலேஷின் காரினைத் தொடர்ந்து ம்ருதவ்வின் காரும் மலைக்கோட்டை நோக்கிப் பயணித்தது.
அன்று ம்ருணாவின் முதல் பிறந்தநாள். உச்சிப் பிள்ளையார் கோவிலில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்திருக்க அதற்கே ஒன்றாகப் புறப்பட்டிருந்தனர்.
“பேபியை கொடு சிவேஷ்… நான் வச்சிக்கிறேன்.”
பிள்ளைகள் நால்வரும் பின்னிருக்கையில் அமர்ந்திருந்தனர்.
“இல்லம்மா நானே வச்சிக்கிறேன். சமத்தா பிடிச்சிப்பேன்” என்றவன் மித்யுகா பலமுறை கேட்டும் கொடுக்கவில்லை.
“அவன் நல்லாவே கேர் பண்ணிப்பான்… ஃப்ரீயா விடு” என்று ம்ருதவ் சொல்ல, மித்யுகா நேராகத் திரும்பியிருந்தாள்.
வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்தாலும் அவனின் பார்வை அடிக்கடி அவளின் கன்னம் உரச ஊஞ்சலாடும், அவளது ஜிமிக்கியில் பதிந்தது.
“என்னவாம்… சைட் அதிகமா இருக்கு” என்று மித்யுகா கேட்க…
“அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே…” என கண்கள் சிமிட்டினான்.
“எது உங்க மேல நான் விழுந்ததா?”
“அதேதான்… எல்லாத்துக்கும் காரணம் இந்த ஜிமிக்கித்தான்” என்று விரலால் அவள் அணிந்திருந்த ஜிமிக்கியை சுண்டிவிட்டு…
“ஹேட் யூ ஃபாரெவர் யுகா” என்றான்.
“இப்படியே வாழ்க்கை முழுக்க போலாமா ம்ருது?” என்று மேலும் மேலும் அதிகரித்திருக்கும் காதலோடு மித்யுகா வினவ…
“யுகா கூட வர்றாள் அப்படின்னா… பூமிக்கு அந்தப்பக்கமா இருந்தாலும் ம்ருதுக்கு ஓகேதான்” என்றான்.
இருவரின் விழிகளும் நேசப் பெருவெளியாய் தங்களின் காதலை கடத்திய நொடி…
கியர் லிவர் மீது படிந்திருந்த ம்ருதவ்வின் கரத்தின் மீது தனது கரத்தை அழுத்தமாக வைத்தாள்.
புன்னகையோடு அவள் பக்கம் சரிந்தவன், அவளின் நெற்றி முட்டி விலகியிருந்தான். அவனது பேரன்பின் வெளிப்பாடு நெற்றி முத்தம்.
அவனது அன்பில் அவளென்றும் சரணாகதியே!
‘நீளும் வாழ்க்கைப் பயணத்தில்
முடிவுறா காதலாய் அவர்களின் வாழ்வு.’
‘வெறுப்பெல்லாம் என்றைக்குமில்லை…
என்னவாயினும்,
நான் உன்னை…
விரும்பியதல்லவா?!’
உனதன்பில் சரணாகிறேன்…
அன்பின் நிறைவு ❤️
நட்புடன் 💞
பிரியதர்ஷினி S
error: Content is protected !!