Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

84. சரோ - கோட்டையின் கொடிநிலா

கோட்டையின் கொடிநிலா – 6(2)

“நான் வர்றதுக்கு கொஞ்சம் லேட்டாகும். சித்தார்த் எனக்கு இன்னொரு வேலையும் குடுத்துருக்காரு. நான் அது என்னன்னு பார்த்துட்டு வரேன். நீங்க முன்னாடியே போய்டுங்க” என்ற வருணன் வாசலை நோக்கி நடந்தார்.

படியில் இறங்குவதற்கு முன் ஞாபகம் வந்தவராய், தேவராஜனிடம் திரும்பி,



Advertisement

“ப்பா, சொல்ல மறந்துட்டேன். வசு வருவா. பார்த்துக்கோங்க” என்க,

“ஏங்கண்ணு அம்மணிய இப்படி படுத்தி எடுக்கறீங்க. இப்ப அவங்க எதுக்கு கட்சிக்கூட்டத்துக்கு வரணும். எல்லாம் முன்னாடியே பேசினது தானே. 

Advertisement

Advertisement

இதுக்கு தான் வேண்டாம்னு தலைப்பாடா அடுச்சுக்கிட்டேன். குருவி தலைல பனங்காய வைச்ச மாதிரி என்ற மருமக கைல இவ்ளோ பெரிய பொறுப்பைத் தூக்கி குடுத்துட்டீங்க. 

என்ற தங்கச்சி நம்மள தான்டா கேள்வி கேக்கும்” என்றார் தேவராஜன் சற்று கவலையாக. 

Advertisement

“ப்பா, டோண்ட் வொரி. அதெல்லாம் மேடம் தனியாளாவே சூப்பரா சமாளிப்பாங்க. அதுக்கும் மேல நாமெல்லாம் கூட இருக்கோம். அப்டியெல்லாம் ஈசியா விட்ருவோமா. எல்லாம் பிளான் படி தான் போகுது. 

முடிஞ்சா…உங்க மருமகக்கிட்ட நாம சொல்ற விஷயத்தை மட்டும் கொஞ்சம் காது கொடுத்து கேட்க சொல்லுங்க. இப்போதைக்கு அது போதும்” என்றார் வருணன் சிரித்துக் கொண்டே. 

“ஏங்கண்ணு அப்டி சொல்ற? அம்மணிக்கும் உனக்கும் எதுவும் சண்டையா என்ன?” என்றார் தேவராஜன் மகனை ஆராய்ச்சியாகப் பார்த்துக் கொண்டே. 

“அதானே. உடனே என்னைய தான் தப்பு பண்ணிட்ட மாதிரி பார்ப்பீங்க. நானெல்லாம் ஒன்னும் சண்டை போடலீங்கப்பா! 

உங்க அம்மணி தான், சித்தார்த் ஏன் இந்த போஸ்ட்க்கு வந்தாரு. நாம என்ன தகிடுதத்தம் பண்ணோம்னு தான் என்கிட்ட குறுக்கு விசாரணை பண்ணிட்டு முறுக்கிட்டு போறாங்க. இப்ப சொல்லுங்க, யாரு மேல தப்பு?”

“போ கண்ணு, இதெல்லாம் ஒரு விஷயமா. நான் கூட ஏதோ பெருசா நினைச்சு பயந்துட்டேன். அதெல்லாம் போகப் போக சரி ஆகிடும். நீ வேலையப் பாரு” என்று விட்டு சிரித்தபடி உள்ளே சென்று விட, ‘இது வேறா’ என்பது போல் வருணன் தலையை குலுக்கியபடி வெளியேறினார்.

அப்போது தான் சூரியன் மெல்ல மேற்கே இறங்க ஆரம்பித்திருக்க, புது தில்லியின் வானம், நிலவை வரவேற்க ஆரஞ்சு வண்ணம் பூசி அலங்கரித்திருந்தது. வாகனத்தின் சாளரத்தின் வழியாக அதைக் கண்டிருந்த வருணனுக்கு அதன் அழகு கருத்தில் ஏனோ பதியவில்லை. 

அவர் மனமெல்லாம் வசுந்தராவின் மீதே இருந்தது. காலையில் வசுந்தரா, ‘நீயுமா?’ என்பது போல் பார்த்த பார்வை, வருணனை வெகுவாக அசைந்திருந்தது.  குடியரசுத் தலைவர் மாளிகையை கடக்கும் போது ஒரு நொடி இறங்கி அவரைப் பார்த்து விடலாமா என்னுமளவுக்கு எண்ணங்கள் பேயாட்டம் போட்டாலும், காலத்தின் கையில் அனைவரும் சூழ்நிலைக் கைதிகளே என உணர்ந்தவராய் பயணத்தைத் தொடர்ந்தார் வருணன். 

தன்னால் ஒருவரது மனம் ஊஞ்சலாடுவதை உணராத வசுந்தராவோ, அவரின் அன்றைய நிகழ்ச்சிகள் சிறிது மாற்றி அமைக்கப்பட்டதை லலிதா அவரிடம் தெரிவித்தார்.

“ஓகே லலிதா. நானே நினைச்சேன் தான். நீங்க என்கூட வந்துடுங்க. வழியிலேயே இன்னிக்கு பெண்டிங் ஐட்டம்ஸ் பார்த்துடலாம். சித்தார்த் எங்க?”

“சார் நம்ம ஆபிஸ்க்கு போய்ட்டாங்க மேம்”

“ரைட், நாளைக்கு ஸ்கெட்யூல் அவர் பார்க்கட்டும். நீங்க இங்கிருந்தே வீட்டுக்குப் போயிடுங்க”

“நோ இஸ்யூஸ் மேம்” என்றவர் ஞாபகமாக, வாகனத்திலேயே வசுந்தரா உண்ணுவதற்கு அவருக்கு பிடித்த உணவை எடுத்துக் கொடுத்தார். 

“வாவ், தேங்கஸ் லலிதா. யூ ஆர் அ லைவ் சேவர்” என்று ஒரு நொடி குதூகலித்தவர்,

“சிக்கன் ரோல் என்னோட ஃபேவரிட் வொர்க்கிங் லஞ்ச். உங்களுக்கு எப்படி தெரியும்?”

“சித்தார்த் சார் தான் மேடம் நான் வர்றப்போ எடுத்துட்டு வர சொன்னார். அவருக்கு உங்களை காலேஜ்லயே தெரியுமோ?” என்று கேட்டார் லலிதா. 

அதற்கு வசுந்தரா பதிலளிக்கும் முன்னரே லலிதாவின் அலைபேசி ஒலிக்க,

“ஆயுசு நூறு. சார் தான் மேம். எடுக்கவா?” என்று அனுமதிக்காகக் காத்திருக்க, 

“ம்ம்ம், ஸ்பீக்கர்ல போடுங்க லலிதா” என்றார் வசுந்தரா.

அதில் இருக்கும் உள்குத்து தெரியாமல், வசுந்தரா சொன்னதை செய்த லலிதா சித்தார்த்திடம் அலைபேசி ஒலிபெருக்கியில் பேசுவதை தெரிவிக்க மறந்து விட்டார்.

அழைப்பை ஏற்றதுமே, 

“மேடம் கிளம்பிட்டாங்களா லலிதா? ஒன்னும் பிரச்சனையில்லையே?” என்றார் சித்தார்த்.

அப்போது தான் தன் தவறு புரிய, வசுந்தராவை சங்கடமாகப் பார்த்த லலிதா,

“அதெல்லாம் ஒன்னும் இல்ல சார். சின்ன சேஞ்சஸ் தானே. மேனேஜ் பண்ணியாச்சு. தாரா மேம் கிட்ட பேசுறதுக்கு சீக்கிரமே கிளம்பிட்டோம். 

நான் இன்னிக்கு தேவையான ப்ரீஃபிங் பண்ணிட்டு அப்டியே வீட்டுக்கு போக சொல்லிட்டாங்க மேடம். நாளைக்கு ஸ்கெட்யூல் உங்களைப் பார்த்துக்க சொல்லிருக்காங்க” என்று சித்தார்த் கேட்பதற்குள்ளயே கடகடவென பேசி முடித்து அழைப்பைத் துண்டிக்கப் பார்த்தார்.

அவரது வேகத்தில் வசுந்தரா உண்ணுவதை நிறுத்தி விட்டு, லலிதாவைப் பார்க்க, நடப்பது எதுவும் தெரியாத சித்தார்த்,

“ஈசி லலிதா, ஏன் இவ்வளவு அவசரம்?” என்றார் சிரித்துக் கொண்டே.

“மேடம் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க சார், அதான்”

“ஓ ரைட். ஒரு குவிக் அப்டேட், உதயன் கிட்ட வருணன் தேவராஜன் பேசிருக்காரு. தாரா மேமை வைச்சி விக்ரம் அண்ட் மித்த பார்ட்டி லீடர்ஸ் கிட்டயும் பேச சொல்லிருக்கேன். 

சோ மேடம் ஒரு ஃபார்மாலிட்டிக்காக தலைய காண்பிச்சிட்டு வந்தா போதும். ரொம்ப இன்வால்வ் ஆக தேவை இல்லை. அது மட்டும் கன்வே பண்ணிடுங்க. தேங்க்ஸ் ஃபார் டுடே, சீ யூ டுமாரோ!”

“நான் கேட்டுட்டு தான் இருக்கேன் சித்தார்த்” என்றார் வசுந்தரா அடக்கப்பட்ட சீற்றத்துடன்.

அவரது குரலின் பேதம் லலிதாவிற்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். சித்தார்த்திற்கு தான் அத்துப்படியாயிற்றே. 

ஆனால் எதையும் வெளிக்காட்டாமல்,

“தேட்ஸ் ஈவன் பெட்டர் மேம்! தாரா மேம் கூட மீட்டிங் எப்டி போச்சுன்னு, ப்ளீஸ் லெட் மீ நோ. அவங்களுக்கு ஏதாச்சும் கன்செர்ன்ஸ் இருந்தா வீ’ல் அட்ரெஸ் இட் அஸ் அ பிரியாரிட்டி. குட் லக்” என்றவர் படக்கென அழைப்பைத் துண்டித்த பின்னரே நிம்மதிப் பெருமூச்சு விட்டார். 

சிட், உன்னோட க்ரைம் லிஸ்ட் ஏறிக்கிட்டே போகுதுடா. கொஞ்சம் அடங்கு’ என மனசாட்சி ஒருபக்கம் எச்சரித்தாலும், ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ என்று அதைப் புறந்தள்ளி அடுத்த வேலையில் கவனம் செலுத்தினார் சித்தார்த்.

கடுகடுவென்ற முகத்துடன் அவரது கட்சி தலைமையகத்தை அடைந்த வசுந்தராவின் முகம், தாரா தேவியைக் கண்டதும் சட்டென மலர்ந்தது. 

“வெல்கம் ஹோம், மேடம் ப்ரைம் மினிஸ்டர்!” என்றார் தாரா தேவி ஆர்ப்பட்டமாக.

அவரை கை கூப்பி வணங்கி, ஆசிகளைப் பெற்றுக் கொண்டார் வசுந்தரா.

“இப்ப தான் தேவாஜி பேசினார், நீ கட்சி மீட்டிங் வரப் போறன்னு. அதுக்குள்ள நீ சீக்கிரம் வர்றதா என் பி.ஏ சொல்றார். வாட் இஸ் ஹேப்பனிங்? எதுவும் பிரச்சனையா வசுந்தரா?” என்றார் தாரா தேவி சற்று யோசனையாக.

“அதெல்லாம் இல்ல மேம். நேத்து செரிமனில பெருசா எதுவும் பேச முடியலை. நைட் கால் பண்ணனும்னு நெனச்சேன். பட் இட் வாஸ் டூ லேட் அண்ட் ஐ வாஸ் எக்சாஸ்டட். அதான் நேர்ல பாத்துட்டு உங்க பிளசிங்க்ஸ் வாங்கிட்டு பார்ட்டி மெம்பர்ஸையும் மீட் பண்ணிட்டு போகலாம்னு வந்தேன்” என்றார் வசுந்தரா, எதையும் வெளிக்காட்டாமல்.

அவரை சில நொடிகள் ஆழ்ந்து பார்த்த தாரா தேவி,

“ஏதோ பிரச்சனைன்னு தெரியுது, பட் நீயே சமாளிக்கணும்னு பாக்குற. அது ஓகே தான் வசு பேட்டி” என்று நிறுத்தி சில நொடிகள் அமைதி காத்தவர்,

“நான் உன்னை பேட்டின்னு கூப்பிடுறது பேருக்காக இல்ல. மனசார தான் கூப்பிடுறேன். எத்தனை மணினாலும் நீ எனக்கு கூப்பிடலாம். தேர் இஸ் நோ டைம் டிஸ்டண்ஸ் பிட்வீன் அஸ். 

வீட்ல ரெண்டு தலைமுறை பிரதமர்களைப் பார்த்து தான் வளர்ந்திருக்கேன் இல்லையா. எனக்கு இதெல்லாம் பழக்கம் தான். சோ நீ எனக்காக யோசிக்க தேவை இல்லை. ஐ’ல் பீ தேர் வென் யூ நீட் மீ. புரியுதா?” என்றார் கனிவாக.

“ஐ நோ மேம்” என்று வசுந்தரா திடமாக பதிலளித்தாலும், கண்கள் லேசாகக் கலங்குவது போலிருந்தது. 

அவர் மேலும் ஏதாவது பேசுவார் என தாரா தேவி பார்த்திருக்க, வசுந்தராவோ மௌனத்தை தத்தெடுத்துக் கொண்டார். 

“ரைட், நீ பிரச்சனை என்னன்னு சொல்ல வேண்டாம். நான் சொல்றது மட்டும் கவனமா கேளு வசு. யூ ஆர் த ஃபேஸ் ஆஃப் த கவர்ன்மெண்ட். சோ நீ சொல்ற ஒவ்வொரு விஷயம், செய்ற விஷயம் எல்லாமே நியூஸ் ஆகும். 

ஐ நோ யூ ஆர் ஆம்பிசியஸ். பட் எல்லாமே நீயே செய்யணும்னு நினைச்சா இம்பாசிபிள். அதுக்கு தான் கூட நம்பகமான ஆட்கள் வச்சிருக்கோம். யூ ஸுட் ஹெல்ப் தெம் டு ஹெல்ப் யூ!

அண்ட் ‘அரசு இயந்திரம்’னு சும்மா ஒன்னும் சொல்லல. அது நிஜமாவே இயந்திரம் தான்! 

நீ பட்டனை தட்டினா வேலை நடக்கணும். எந்த பட்டனை எப்பத் தட்டணும் அப்டின்றது தான் நீ மாஸ்டர் பண்ண வேண்டிய ஒரே வேலை! அது தான் வெற்றியின் இரகசியமும் கூட” என்று தன் கருத்துக்களைப் பகிர, வசுந்தரா அவரை ஆச்சரியமாகப் பார்த்தார்.

வசுந்தராவை சிரிப்புடன் பார்த்த தாராதேவி,

“வாட், வொய் ஆர் யூ லுக்கிங் சர்ப்பிரைஸ்ட்?” என்றார் கேலியாக. 

“நத்திங். நீங்க இந்த மாதிரி செண்டிமெண்டலா லெக்‌ஷர் அடிக்கிற மாதிரி எல்லாம் பேச மாட்டீங்களேன்னு பார்த்தேன். திடீர்னு வேற யாரோட ஆவி புகுந்துட்ட மாதிரி இருந்தது” என்று குறும்பாகக் கண்சிமிட்டினார் வசுந்தரா. காலையில் இழந்த உற்சாகம் சற்று மீண்டிருந்தது. 

“ஹம்ம்ம், என்ன பண்றது? யாரோட ஆவின்னும் நீயே சொல்லிடு” என்று வசுந்தராவை சீண்டிய தாரா தேவி,

“சியர் அப் கேர்ள்! இந்தப் பதவி சும்மா ஒன்னும் உன்கிட்ட வந்திடல. யூ ஹேவ் அ பர்ப்பஸ் அண்ட் யூ டிசர்வ் திஸ். 

ஆப்பர்சூனிட்டி கிடைச்சாலும், யூ வேர் பிரிப்பேர்ட் டு டேக் இட். சோ இக்னோர் ஆல் நாய்ஸஸ் அரௌண்ட்! எதுன்னாலும் பார்த்துக்கலாம்” என்று அவர் தோளில் தட்டிக் கொடுத்தார். 

“வொய் மீ?” என்று வசுந்தரா அப்போதும் கேள்வியெழுப்ப,

“வொய் நாட் யூ?” என்று மற்றொரு கேள்வியால் பதிலும் அளித்து, அந்த உரையாடலுக்கு முற்றுப் புள்ளியும் வைத்து விட்டார் தாரா தேவி!



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!