Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

26. கல்பனா சரவணன் - யுகத்தின் தலைவன்

யுகத்தின் தலைவன் அத்தியாயம் 36

யுகத்தின் தலைவன்
அத்தியாயம் 36

குளிர் ஜுரம் மேலும் அதிகமாக, முடியாமல் வீட்டிற்கு வந்துள்ளார் சிவராமன்.கதவு பூட்டியிருக்க தலை சுற்றி கீழே அமர்ந்து விட்டார் .

பக்கெட்டோடு உள்ளே வந்த கங்காவிற்கு சிவராமனை பார்த்து அதிர்ச்சி.அவ்வளவு சீக்கிரமாக எங்கேயும் தண்ணீர் கூட வாங்கி குடிக்க மாட்டார். ஒருநாளும் அவரை இப்படியெல்லாம் பாரத்ததே இல்லை. இன்று இப்படி கீழே அமர்ந்திருப்பதை பார்க்க ஒரே பதற்றம்.

அருகே வந்து என்ன ஆச்சுப்பா?என்றாள்.



Advertisement

தலை சுத்துது கங்கா என்றார்.

கையை பிடித்து உள்ளே அழைத்து வந்து சேரில் அமர வைத்தாள்.

கங்கா,” குடிக்க தண்ணி எடுத்துட்டு வா.”

Advertisement

செம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.நெற்றியை தொட்டுப் பார்க்க அனலாக உடல் கொதித்தது.

Advertisement

என்ன ஆச்சுப்பா?எதாச்சு வேணுமா?

ஒன்னு வேண்டா. அம்மா எங்க?

அப்புச்சி வீட்டுக்கு கோதுமை அரைச்சு எடுத்துட்டு போய்ருக்கு.

Advertisement

ஃபோன் பண்ணி வர சொல்லு.

இவளும் லட்சுமிக்கு அழைத்து விவரம் சொன்னாள்.

கங்கா நான் கொஞ்ச நேரம் தூங்கறே.அம்மா வந்தா எழுப்பி விடு.

சரிப்பா.

படுத்தவர் மீண்டும் எழுந்து அமர்ந்து கொண்டார்.

ஏன்ப்பா?எதாச்சு வேணுமா?

இங்க வா கங்கா.

தனது இடது கால் பெரு விரலின் காயத்தில் இருந்து,ஒரு சிறிய கல்லை எடுத்து தந்தார்.

கங்காவிற்கு அதிர்ச்சி. என்னப்பா இது?

முந்தாநாள் கடை முன்னாடி தண்ணீ தேங்கி நின்னதுனாலே,அது போக வழி வெட்டி விட்டே..அப்போ கல்லு உள்ளே போய்ருச்சு போல என்றார்.

என்னப்பா இது இவ்ளோ சாதாரணமா சொல்றே?வா ஹாஸ்பிடல் போலம்.

இல்ல கங்கா, வேண்டா.மாத்திரை போட்டா சரி ஆயிடும்.

“அப்பாவிற்கு உடம்பு சரியில்ல” என்று கங்கா சொன்னவுடன் பதறியடித்து லட்சுமியும் வந்து சேர்ந்தார்.

கங்கா விவரம் சொல்ல,அவரும் “ஹாஸ்பிடல் போலாம் வா” என்றார்.

“இல்ல.நீ காபி வெச்சு கொடு.கொஞ்ச நேரம் தூங்குனா சரி ஆயிடும்”என்றார்.

மழை முன்பைவிட அதிகமாக பெய்தது. சிவராமனுக்கும் முன்பைவிட ஜூரமும் அதிகமானது. கெளசி மாலை வீட்டிற்கு வந்து இரண்டு அதட்டு அதட்டிய பின் காரை புக் செய்து ஹாஸ்பிடல் சென்றனர் நால்வரும்.

காலை பரிசோதித்த டாக்டர்.”காயம் ரொம்ப ஆழமாக உள்ளது. முழங்கால் கீழே கொஞ்சம் வெட்டி எடுக்க வேண்டும். இனியும் தாமதித்தால், இடது கால் முழுவதும் இழக்க நேரிடும்” என்றார்.

சிவராமன் மறுத்து விட்டார். மணமாகாத இரண்டு மகள்களை வைத்து கொண்டு, காலை எடுத்து விட்டால்.யார் அவர்களை கரையேற்றுவது?
“முடியவே முடியாது” என வீடு வந்து விட்டார்.

இரண்டு நாட்களில் கால் முழுவதும் வாழைப்பழ தோல் மாதிரி அழுகியது. வீடு முழுவதும் துர்நாற்றம். கெட்ட பாக்டீரியாக்கள் சிறுநீரகம்,நுரையீரல் வரை தங்கள் ஆதிக்கத்தை செலுத்த அவரால் முடியவில்லை.

கங்காவும்,லட்சுமியும் அவரது உடன்பிறப்புகளுக்கு அழைத்து விஷயத்த சொல்ல..இருவரும் வந்து விட்டனர்.

சிவகாமி அண்ணனை இரண்டு திட்டு திட்டி தன் மருமகன் மூலம் திருச்செங்கோடு ஹாஸ்பிடலுக்கு கூட்டிச் சென்றார்.

ஆம்புலன்ஸ் மூலமே அவரை கூட்டிச் சென்றனர். பயணத்தில் கங்கா அவரது கையை இறுக்கி பிடித்துக் கொண்டாள்.

மாலை ஏழுமணி ஹாஸ்பிடல் போய் சேர்ந்தவுடன்,
எமர்ஜென்சி வார்டில் அனுமதிக்கப்பட்டார் சிவராமன்.

இவரை பற்றிய தகவல்களை உள்ளே இருந்த டாக்டர் கேட்க, கங்கா சொல்லிக் கொண்டிருந்தாள்.

ஈசிஜி சத்தத்தில், ஆக்ஸிஜன் குழாய் உடன் படுத்திருந்தவர் கங்காவை பார்த்து கையை உயர்த்தி ‘வா’ என அழைத்தார்.

கண்களில் நீரோடு ஏன்ப்பா?

கங்கா,” எனக்கு என்ன ஆனாலும் அவிநாசிலதான் என்னை அடக்கம் பண்ணனும்.எனக்கு எதாச்சுனா என் அண்ணன் பையன்தான் காரியம் பண்ணுவா.ஆனா எனக்கு என் பேரன் வந்துதான் எல்லா பண்ணனும் ஆசை”.

எங்க அண்ணனையும், தங்கச்சியையும் உள்ளே வர சொல்லு கங்கா.எனக்கு எதாச்சு ஆயிடுச்சுனா அவங்கள பாக்க முடியாம போய்றே போது,நான் அவங்கள கடைசியா ஒரு தடவை பாத்துக்கறே.

“அப்பா! உனக்கு ஒன்னு ஆகாதுப்பா. நான் உன்னை எப்படியாச்சு சரி பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு போய்ருவேம்ப்பா” என உறுதி அளித்தாள்.

இரண்டு நாட்கள் கடந்த நிலையில் ஆட்டி பையாடிக்குகளின் உதவியால் பாக்டீரியாக்களின் தாக்கம் குறைந்தது. மேலும் தொற்று ஏற்படாமல் இருக்க ஐசியூவில் வைத்து விட்டனர்.

கங்காவை டாக்டர் அழைத்து,இரண்டு நாட்களாக ஆட்டி பையாடிக் கொடுத்து பார்த்தோம். பாக்டீரியா மற்ற பாகங்களுக்கு செல்வதை தடுக்க முடிந்ததே தவிர,காலை காப்பாற்ற முடியவில்லை.அதை எடுத்தால்தான் மேலும் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும் என்றனர்.

கங்கா ஏற்றுக் கொள்ள வில்லை. “எப்படியாச்சு காலை காப்பாத்தி கொடுங்க.எங்க அப்பாக்கு ஐம்பது வயசுதான் ஆகுது. இனியும் முப்பது வருஷம் அவரு கால் இல்லாம இருக்க முடியாது” என அழுக ஆரம்பித்தாள்.

இது எமோஷனல் ஆகற விஷயம் இல்ல. இன்டலிஜன்ட்டா முடிவு எடுங்க.இப்போ இடது கால்லே பாதிதான் வெட்டி எடுக்கப் போறோம்.இப்போ டெக்னாலஜி எவ்வளவோ வளர்ந்துருச்சு.
ஆர்டிபிசியல் லெக் வெச்சுக்கலாம்.ஆனா நீங்க தாமதப்படுத்தறே ஒவ்வொரு நொடியும் அவரது கால் முழுமையா எடுக்க வேண்டி வரும்.

வெளியே அமர்ந்திருந்த ஒரு அம்மாவை காட்டி, “அதோ அங்கே அமர்ந்திருந்திருக்கிறாரே,அவரது பையன் ஏக்ஸிடன்டில் முழு காலையும் இழந்து விட்டார்.உங்கள் அப்பாவாவது ஐம்பது வயதை அடைந்து விட்டார். ஆனால் அவரது மகனுக்கு இருபது வயதுதான். பேனிக் ஆகாமல் புத்திசாலித்தனமாக முடிவு எடுங்கள்” என அறிவுரை வழங்கினர்.

கங்கா,மனதை தேற்றி.. சிவராமனிடம் சொல்ல இந்த முறையும் மறுத்து விட்டார்.காலை எடுத்துட்டா உங்க மூனு பேரையும் யார் பாத்துக்குவா? நான் எப்படி உங்க கல்யாணத்துக்கு எல்லாம் பத்திரிக்கை கொடுக்க போவேன்?

அப்பா நான் எல்லாம் பாத்துக்கறேப்பா. இனியும் விட்டா காலை முழுசா எடுக்கணும்னு சொல்லிருக்காங்கப்பா என்றாள் கங்கா.

நீண்ட வாக்குவாதத்திற்கு பின், “சரி என்னமோ பண்ணித் தொலைங்க” என இவர்கள் மூவர் முகத்தையும் பார்க்க தவிர்த்து விட்டார். ஆபரேசன் தியேட்டர் கொண்டு செல்லப்பட, லட்சுமி நெற்றியில் திருநீறு பூசிவிட்டார். அப்போது கூட முகத்தை பார்க்க தவிர்த்து விட்டார் சிவராமன்.

மூவரும் ஆபரேசன் தியேட்டர் வாசலில் அமர்ந்து கொண்டனர். இரண்டு மணிநேரம் கழித்து ஒருவரை வெளியே கொண்டு வந்தனர்.சிவராமனோ? என எழுந்து நிற்க அவரில்லை.மேலும் இரண்டு மூனு பேர் வந்தனர். அனைவரும் மயக்க நிலையில் இருந்தனர்.

இறுதியாகதான் சிவராமன் வந்தார். கண்களை திறந்து கொண்டே..

அப்பா உடம்புக்கு எப்படி இருக்கு?எதாச்சு கஷ்டமா?என கேட்க முகத்தை திருப்பி வைத்துக் கொண்டார்.

கங்கா நேரே டாக்டரிடம் சென்று அவரின் உடல்நிலை பற்றி விசாரித்தாள்.

நலமா இருக்கிறார்.

சார் ஆப்ரேசன் தியேட்டர்ல இருந்து வெளியே வந்த எல்லாரும் மயக்க நிலையில் இருந்தாங்க.அப்பா மட்டும் கண்ணை திறந்துட்டே வந்தார். மயக்க மருந்து கொடுக்கவில்லையா?

சிரித்து கொண்டே, “நாங்க கொடுத்தோம் ஆனா அவருக்கு மயக்கமே வரலே.நான் இதுவரைக்கும் சர்ஜரி செய்ததிலேயே சிவராமன் வித்யாசமானவர்.நான் அவரிடம் பேசிக் கொண்டேதான் சர்ஜரி செய்தேன்.ரொம்ப புத்திசாலி,அதே சமயம் தைரியமானவரும் கூட..அவரது பேச்சிலே தெரிகிறது.நல்ல நிர்வாக திறமையானவர் என்று..
“ஹி ஸ் டோட்டலி டிஃப்ரன்ட்”.இவ்வளவு நாளா உங்கள பாத்துக்கிட்டார் இனி நீங்க அவரை குழந்தை போல பார்த்துக் கொள்ளுங்கள்” என்றார்.

இரண்டு நாட்களில் இயல்பு நிலைக்கு வந்தார்.அனைவரிடமும் பேசினார். கங்காவும் கெளசியும் வார நாட்களில் வேலைக்கு சென்றுவிட்டு விடுமுறை நாட்களில் ஹாஸ்பிடல் வந்தனர்.

அன்றிரவு நல்ல மழை. ஹாஸ்பிடல் வராண்டாவில் கங்கா அமர்ந்து கொண்டு மழையை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள். விடிந்தால் சல்மானுக்கு பிறந்தநாள்.அன்று முறுக்கை வாங்கி சென்றவன் தான் அதன்பிறகு எந்த அழைப்பும் மெசேஜும் அவனிடம் இருந்து இல்லை. அவனுடைய ரிசர்ச் வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டதாக தகவல் சொன்னாள் நித்யா.

இரண்டொரு முறை பிஎச்டி சம்பந்தமாக கங்கா அழைக்க.. முகத்தில் அடித்தது போல பேசி வைத்து விட்டான்.ஏன் இவன் இப்படி எரிந்து விழுகிறான்? என்ற கேள்வி.

என்னதான் அவனிடம் இருந்து விலகி இருக்க நினைத்தாலும் முடியவில்லை.
அவன்மீது தனக்கு இப்படிப்பட்ட எண்ணம் வந்தது தவறுதான். அந்த எண்ணத்தை அழிக்கவே அவனை விலக நினைத்தாளே தவிர,நல்ல நண்பனாக அவனை இழக்க விரும்ப வில்லை.

இந்த பிறந்தநாளுக்கு அவனுடைய ஃபோட்டோவை ஃபிரேம் செய்து, ஒருவர் மூலமாக அவனிடம் கொடுக்கும்படி கொடுத்து விட்டாள்.

கடந்த முறை அவனது பிறந்த நாள் கொண்டாட்டம் நினைவில் வந்தது.

சல்மான்!” என்பர்த்டே ல இருந்து ஐம்பதாவது நாள்ல உன் பர்த்டே வருது.”

எண்ணி பாத்தியா?

ஆமா.உனக்கும் எனக்கு கேக் வெட்டுனோம் இல்ல அங்கையே கேக் வெட்டலாம்.

சரி..

சொன்னபடியே சல்மான் பர்த்டே விற்கும் அங்கே கேக் வெட்ட ஏற்பாடு செய்தனர்.அன்றும் நல்ல மழை. சல்மான் வேறு ஃபோன் எடுக்கவே இல்லை. மாலை ஆறு மணிக்கே எடுத்தான்.

ஏன் ஃபோன் எடுக்கல?

எங்க வீட்டுக்கு ‘ஷோகேஸ்’ வாங்க போனே லேட் ஆயிடுச்சு கங்கா.

சரி ரெஸ்டாரன்ட் வா.

மணி ஆறு. இந்த டைமுக்கு நீ வருவையா.மழை வேற வருது.

ஆமா அதுதா நான் மதியம் இருந்து கூப்பிட்டு இருக்கே. நீயும் ஃபோன் எடுக்கல.இந்த மழை இன்னைக்கு ஒருநாள் லீவு எடுத்துக்க கூடாது.

கங்கா என் பர்த்டே அப்போ எப்பவுமே மழை வரும்.எனக்கு அது ரொம்ப பிடிக்கும்.

சரி சல்மான்! புயலே அடிச்சாலும், நான் வரே.நீ கிளம்பு.

நித்யாவிற்கு அழைக்க அவள் வரவில்லை. மாலதி மட்டுமே வந்தாள்.வந்தவள் “கேக் வேண்டாம் சல்மானுக்கு அதெல்லா பிடிக்காது” என்றாள்.

“இவளை அழைக்காது நான் மட்டுமே வந்திருக்க வேண்டும்” என கங்காவிற்கு தோன்றியது.

ஃபுட் ஆர்டர் செய்ய, மெனு கார்டை பார்த்து ஆலோசனை தொடங்கியது. சல்மான்!” இது புரட்டாசி மாசம் நான் நான்வெஜ் சாப்பிட மாட்டேன்.நீயும் மாலதியும் வேணா நான்வெஜ் சாப்பிடுங்க” .

சரி நானும் வெஜ்ஜே சாப்பிடறே.

வேண்டா சல்மான். உனக்கு நான்வெஜ் தானே ரொம்ப பிரியம். நீ அதையே ஆர்டர் பண்ணு.

“வேண்டா கங்கா, எனக்கும் வெஜ்ஜே போதும்” என அதையே ஆர்டர் செய்து சாப்பிட்டனர்.

பின் உரையாடல் எங்கெங்கோ சென்று தங்களுக்கு பிறக்கும் பிள்ளைகள் மீது வந்து நின்றது.

சல்மான் தனக்கு ஒரு பெண் பிள்ளை மட்டும் போதும் என்றான்.

ஒருவேளை பையன் பொறந்தா என்ன பண்ணுவே?

அது நமக்கு பொறந்த பையன் இல்லைனு என் ஃவைப்பே கூட்டிட்டு வந்துருவே.

அடப்பாவி.ஏன் பொண்ணு மட்டும் போதும்?

பொண்ணுதான் அப்பா மேலே பாசமா இருப்பாங்க.பையன் எல்லா அம்மா மேலதா பாசமா இருப்பாங்க.

இவன் முறை முடிந்தது. அடுத்து மாலதி உனக்கு?என்றாள் கங்கா.

எனக்கும் ஒரு பொண்ணு மட்டும் போதும் கங்கா என்றாள் சல்மானின் வார்த்தைகளை பிடித்துக் கொண்டே…

“அப்போ உனக்கு” என இவளிடம் திருப்பி விட்டாள் மாலதி.

எனக்கு பையன்ப்பா. நான் சொல்லுவே, “எனக்கு ஒரு மகன் இருக்கா.சிங்கம் மாதிரினு..”நான் அவனே கன்னு குட்டினு தான் கூப்பிடுவேன்.
அப்பறோம் நானும் என் பையனும் மாடித் தோட்டம் வெச்சுக்குவோம். மோட்டு பட்லு கூட பாப்போம்…

“ஏய்! உங்க ரெண்டு பேரை பத்தி மட்டும் பேசறே.உன் ஹஸ்பண்ட் பத்தி சொல்லவே இல்ல”என கேட்டாள் மாலதி.

ஆமா நாங்க மாடித்தோட்டம் வெச்சு, மோட்டு பட்லு பார்க்க எல்லாம் காசு வேணும் இல்ல.அதுனால அவனே வேலைக்கு போடானு அனுப்பி வெச்சிருவோம் என்றாள் சிரித்துக் கொண்டே.

“என்ன சல்மான் முறைக்கறே மாதிரி இருக்கு?”என கேட்டாள் கங்கா.

“ஒன்னு இல்ல கங்கா” என்றே பதிலே வந்தது.

அந்தநாளின் நீங்கா நினைவு அவள் எண்ணங்களில் மின்னியது.

ஹாஸ்பிடல் துப்புரவு பணியாளர்.தனது ஃபோனில் பழைய பாடல்களை கேட்டுக் கொண்டிருந்தார்.

அதில் பெண் தனக்கு தன்னுடையவன் மீது ஏற்பட்ட காதலை பாடல் மூலம், விளக்க..அவன் இது தவறு என்னை மறந்துவிடு என்பதை போல வந்தது. அந்த வரிகளில் கங்காவின் கவனம் சென்றது.

“பெண்: இரவும் பகலும் உன்னுருவம் அதில் இங்கும் அங்கும் உன் உருவம்

ஆண்: அடக்கம் என்பது பெண்ணுருவம் அதை அறிந்தால் மறையும் என்னுருவம்

பெண்: மறைக்க முயன்றேன் முடியவில்லை.
உன்னை
மறக்க முயன்றேன் நடக்கவில்லை

ஆண்: நினைக்கும் நிலையிலும் நான் இல்லை.உன்னை நெருங்கும் ஆசையும் எனக்கில்லை

பெண்: ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் அந்த உறவுக்குப் பெயரென்ன?

ஆண்: காதல்…

பெண்: நினைத்தவன் அவளை மறந்து விட்டால் அந்த நிலைமையின் முடிவென்ன?

ஆண்: துயரம்…”

–தலைவன் வருவான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!