Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

26. கல்பனா சரவணன் - யுகத்தின் தலைவன்

யுகத்தின் தலைவன் அத்தியாயம் 37

யுகத்தின் தலைவன்
அத்தியாயம் 37

சிவராமனின் உடல்நிலையை கருத்தில் கொண்டு கெளசியும் வீட்டின் அருகே உள்ளே ப்ளே ஸ்கூலில் சேர்ந்து கொண்டாள்.கங்காவும் தற்போது அவருக்கு ஏற்ப சில மாறுதல்களை செய்தாள்.அவரது கடை அருகே ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து குடியேறினர்.

லட்சுமி ஹாஸ்பிடலில் சிவராமனுடன் இருக்க, “வீட்டுல யாராவது சமைக்கனுமே…” என்ற கட்டாயம் கங்காவை சமையலறைக்குள் தள்ளியது.

சமையலறை வாசலில் நின்றவளுக்கு… அது ஒரு போர்க்களம் போலவே தோன்றியது.



Advertisement

முன்பெல்லாம் “படிப்பு மார்க்” என சிவராமன் வீட்டு வேலைக்கு தடை போட்டு விட்டார்.அதன் பின் பள்ளி வேலைக்கு சென்றவள்.வீடு திரும்பியதும் டியூசன், அடுத்த நாளுக்கான தயாரிப்பு என வீட்டு வேலைக்கு முழுக்குதான்.

இதுவரை “அம்மா என்ன சாப்பாடு ?” என்று மட்டும் கேட்டவள்…இன்று முதன்முறையாக அடுப்பை பார்த்து நின்றாள்.

முதலில் அரிசியை எடுத்தாள்.“இது எவ்வளவு பேர் சாப்பிடுறதுக்கு எவ்வளவு போடணும்?” என்றே தெரியவில்லையே என யோசித்தாள்.

Advertisement

“இறுதியில் ஒரு முடிவுக்கு வந்து ,ஒரு டம்ளர் அரிசியை பாத்திரத்தில் போட்டாள்.அடுத்த குழப்பம்… அரிசிக்கு எவ்வளவு தண்ணீர் ஊத்தணும்?

Advertisement

ஒரு முறை தண்ணீர் ஊற்றி பார்த்து,
“இது கஞ்சி ஆகிடுமோ?”என பாதியை ஊற்றி விட்டாள்.

குக்கரை மூடி வைத்து விட்டதும்…“விசில் எப்போ வரும்?” என அதையே பார்த்துக் கொண்டு நின்றாள்.

அடுத்த நிமிஷமே “பீஈஈஈ!”என விசில் கத்த…

Advertisement

“அய்யய்யோ!” என பயந்து கொண்டு,
குக்கரையே பார்த்து இரண்டு அடி பின்னால் ஓடி நின்றாள்.

“எதுக்கு இவ்வளவு சத்தமா கத்தணும்?” என குக்கரை முறைத்தாள்.

அந்த சமயம், பானுமதியின் மகன் விக்கி வந்தான். அக்கா!எதாச்சு வேணுமா?வாங்கி தந்துட்டு போறேன்.

அது எல்லா ஒண்ணு வேண்டா விக்கி. உட்காரு காபி வெச்சு எடுத்துட்டு வரேன் என…அடுத்து பால் காய்ச்ச போனாள். பாலை அடுப்பில் ஊற்றி வைத்தாள்.

ஐந்து நிமிடம்… பத்து நிமிடம்… கூட கடந்து விட்டது.“ஏன் இந்த பால் இன்னமும் பொங்கவே மாட்டேங்குது?”என பாத்திரத்துக்குள் எட்டி பார்த்தவள்…

அடுப்பில் தீயே பற்ற வைக்கவில்லை என்பதை கண்டு தன் தலையிலேயே தட்டிக் கொண்டாள்.

ஐய்யோ ஏன் கங்கா இப்படி சொதப்பறே? இதுல”அப்பாகிட்ட வேறே நானே எல்லா பாத்துக்குவேனு உறுதி கொடுத்துருக்கையே” என தன்னைத்தானே திட்டிக் கொண்டாள்.

எப்படியோ காபியை வைத்து விக்கியிடம் கொடுத்தாள்.

பின் லட்சுமியிடம் ஃபோன் மூலம், சாம்பார் தூள் எது?மஞ்சள் தூள் எது?என விளக்கம் எல்லாம் கேட்டு,ஒருவழியாக சாம்பார் வைத்து முடித்தாள்.

வெண்டைக்காய் பொரியல் மட்டும் வீரமரணம் அடைந்திருந்தது.

அடுப்பில் கருகி கருப்பாக கிடந்ததை பார்த்தவள், “இத சாப்பிடுறவங்க நேரா சொர்க்கத்துக்கே போயிருவாங்க…” என சோகமாக அமர்ந்தாள்.

அந்த நேரம் கெளசி குளித்து முடித்து வந்தவள்,“வாசனை பார்த்தா ஏதோ கருகுன மாதிரி இருக்கே…” என,
நேராக சமையலறைக்குள் ஓடி வந்தாள்.

“கங்கா! இது பொரியலா? இல்ல நிலக்கரியாடீ?” என சிரிக்க…

கங்கா முகம் சுளித்து, “சிரிக்காதடி… நானே டென்ஷன்ல இருக்கேன்.காலைலே சேமியா செஞ்சிருக்கே. நீயும் விக்கியும் சாப்பிடுங்க..நான் போய் குளிச்சிட்டு வந்தறேன்” என பாத்ரூமினுள் சென்றாள்.

குளித்து வந்தவளை, ஏன் கங்கா நீ செஞ்ச வெள்ளை கூலுக்கு சேமியானு பேரு வெக்க தெரிஞ்ச உனக்கு…அதுக்கு உப்பு போடனுனு தெரிலயா?என்றாள்.

அச்சச்சோ!மறந்துட்ட போலவே.. என்றாள் முகத்தை கவலையாக வைத்துக் கொண்டே…

“அக்கா சேமியா நல்லாதான் இருந்துச்சு.கெளசி அக்கா சும்மா சொல்லுது” என கங்கா மனதை சமாதானபடுத்தினான் விக்கி.

பின் கெளசி, லட்சுமியிடம் ஃபோன் செய்து,”அம்மா கங்காவை தயவு செய்து சமைக்க மட்டும் வேண்டானு சொல்லுமா” என நடந்ததை கூறினாள்.

“நல்லவேளை இந்த கங்காவுக்கு கல்யாணம் பண்ணி வெச்சிருந்தோம் நம்ம மானமே போய்ருக்கும்” என்றார் விஷயத்தை கேள்விபட்ட சிவராமன்.

மருமகனின் உடல்நிலையை பற்றி விசாரிக்க ஃபோன் செய்த பழனியம்மாளிடம், கங்காவின் சமையல் சாகசங்களை சொல்ல…அவர் தான் சமைத்து தருவதாக கூறினார். கங்காவை பற்றியும் அவரது அம்மாவை பற்றியும் தான் லட்சுமிக்கு தெரியுமே .

“அம்மா அவ இனி சமைச்சு பழகட்டும்னு மாமன் சொல்லுச்சு. அதுனால நீ சமைக்க மட்டும் எதாச்சு வாங்கி கொடுத்துருமா” என நிலையை சமாளித்தார்.

கங்காவிடம் விஷயத்தை கூற, “அந்த அம்மாகிட்ட எல்லா என்னால வாங்கி சாப்பிட முடியாது” என மறுபடியும் முருங்கை மரம் ஏறிவிட்டாள்.

“இந்த ஒருவாட்டி மட்டும் வாங்கிக்க. அப்பறம் வேண்டா” என அவளை சம்மதிக்க வைத்தார் லட்சுமி.

லட்சுமி ,”உங்க அம்மா கிட்ட அதெல்லா வேண்டானு சொல்லு, கங்கா மூஞ்சில அடிச்ச மாதிரி ஏதாச்சு பேசிற போது” என்றார் சிவராமன்.

“எங்க அம்மாவும் சொன்னாலும் கேட்காது.ஒருவாட்டி அவள பாக்கட்டும். அப்பறோம் அதுவே விட்டுரும்” என்றார் லட்சுமி.

மாலை பள்ளி வேனை விட்டு கீழே இறங்க, மரத்தடியில் ஒரு கட்ட பையை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார் பழனியம்மாள். கங்காவை பார்த்தும் சிரமபட்டு கைகளை நிலத்தில் ஊன்றி எழுந்து பையை எடுத்துக் கொண்டு நடந்து வந்தார்.

வெறும் எலும்புக்கூடு மீது தோல் மட்டுமே போர்வையை போல் போர்த்தி இருந்தது. அதுவரை அவர்மீது வெறுப்பாக இருந்த கங்காவிற்கு அவர் நிலையை பார்த்ததும் சிறு இரக்கம்.

அவள் அவரை “அம்மத்தா” என்றோ, “அம்மச்சி” என்றோ “அம்மாயி” என்றெல்லாம் கூட அழைத்ததில்லை. நினைவு தெரிந்த நாளில் இருந்து, லட்சுமி, ராதா,கலா, ரமேஷ் என அனைவரும் அவரை “அம்மா” என அழைக்க, அவர்களை பார்த்து இவளும் “அம்மா” என்றே அழைத்து வந்தாள். இவளை தொடர்ந்து மற்ற ஒன்பது பேரும் அவரை “அம்மா” என்றே அழைக்க தொடங்கினர்.

இருவரும் நெருங்க, அவர் முந்தானையை கொண்டு வாயை மூடி அழுக ஆரம்பித்தார். “இனி உங்க அப்பன் எப்புடி காலு இல்லாம இருக்கும்?கடைக்கு எப்புடி போகும்?”

அம்மா,நீ அழாதே. அது எல்லா நான் பாத்துக்குவேன்.
இப்போ எல்லா எவ்வளவோ முன்னேற்றம் வந்திருச்சு.நான் எங்க அப்பாக்கு கட்டை கால் வெச்சு கொடுத்துருவே. எப்பவும் போல அப்பா கடைக்கு போய்க்கலாம் என்றாள்.

“கட்டை கால் வெச்சா சரியாயிடுமா?” என மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திக் கொண்டார்.

சரி வாம்மா உன்னை வீட்டுல விட்டுட்டு நான் எங்க வீட்டுக்கு போய்கறே.

“இல்ல இல்ல வேண்டா பாப்பா.நான் போய்கறே.இப்பவே மணி அஞ்சரை. இனி நீ போய் சமைக்கனும் இல்ல.நீ போய்க்க” என தனது சுருக்கு பையில் இருந்து இருநூறு ரூபாயை எடுத்து தந்தார்.

கங்கா “வேண்டாம்மா” என மறுக்க, கையில் திணித்து அவளை அனுப்பி விட்டார்.

வீடு வந்து அந்த கட்டை பையில் இருந்ததை எடுத்தவளுக்கு அவரின் அன்பின் ஆழம் புரிந்தது.ஒரு கடையே வைத்து விடலாம் அத்தனையை வாங்கி தந்திருந்தார். மேலும் ஒரு பெரிய பாத்திரத்தில்,முட்டைகோஸை பொரியலுக்கு ஏற்ப அறிந்து,அதற்கு வெங்காயம்,பச்சை மிளகாய், கருவேப்பிலை, தேவையான அளவு உப்பு,மஞ்சள் பொடி எல்லாம் தனி தனியாக கொடுத்து இருந்தார்.

கங்கா அவளிடமே கேள்வி கேட்டு, பதிலையும் கூறிக் கொண்டாள்.

நீ யார் கங்கா?அவங்கள மன்னிக்க… அதுக்கான வயசும் உனக்கில்ல.தகுதியும் உனக்கில்ல.அப்பா சொன்ன மாறி அவங்க ரெண்டு பேருக்கும் இடையில இருக்கறே உறவை யாரலையும் புரிஞ்சிக்க முடியாது. அப்பாவை ஜெயிலுக்கு அனுப்பும் போதும் எழுதி கொடுத்து அழுததும் அவங்கதான், இன்னைக்கு அவரோட உடல் நிலையை நினைச்சு அழுகறதும் அவங்கதான். இந்த ரெண்டு குணங்களிலுமே உண்மை மட்டுமே இருக்கு பொய் இல்ல. அப்பா சொல்றே மாதிரி,”இன்னமும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்த அம்மாவே,அவருக்கு மாமியாராக வரட்டும்” என நினைத்துக் கொண்டாள்.

கெளசி தன் உடன் படித்த கொளஞ்சிநாதன் என்பவருடன் காதல் கொண்டுவிட்டாள்.சிவராமன் ஹாஸ்பிடலில் உள்ள விஷயம் அவருக்கு சொல்ல. அவர் உடனே சிவராமனை பார்க்க வேண்டும் என துபாயில் இருந்து வந்துவிட்டார்.எப்படி அவரை சிவராமன் முன் கொண்டு சென்று நிற்க வைக்க முடியும்?

தனது வேலையை மூட்டை கட்டி வைத்துவிட்டு இவ்வளவு தூரம் ப்ளைட் பிடித்து வந்துள்ளார்.அவரை எப்படி திருப்பி அனுப்ப முடியும்?இருவேறு இக்கட்டான நிலையில் மூவரும் நின்றனர்.

பின் ஐசியூவில் இருந்த சிவராமனிடம் விஷயம் சொல்லப்பட முதலில் அவர் கேட்டது,நம்ம சொந்தமா?என “இல்லை” என்ற பதில் கிடைக்க தலையில் அடித்துக் கொண்டு அழுதார்.

கங்கா வாழ்க்கைதான் இப்படி இருக்குனா. இந்த கெளசியும் ஏன் இப்படி பண்ணனும்?நான் எப்படி என்ற பங்காளிங்க முன்னாடி நிப்பேன்?என்ற மச்சினனுங்க என்னை பத்தி என்ன நினைப்பாங்க?என கத்த ஆரம்பித்தார்.

சரி இனி தன்னால் எதுவும் முடியாது. ஒற்றை காலை இழந்து எப்படி மாப்பிள்ளை தேடுவேன் என கெளசியே இந்த முடிவை எடுத்து விட்டது என்ற விரக்தி நிலையில்,அவரை வரச் சொல் என பார்க்க சம்மதம் தந்தார்.

கொளஞ்சிநாதன் மட்டும் ஐசியுவில் நுழைய,மூவரும் கண்ணாடி வழியே இருவரையும் பார்த்தனர்.

சிவராமன் இரண்டு கைகளையும் எடுத்து வணக்கம் தெரிவிக்க இவரும் வணக்கம் கூறினார்.தன்னையும் மீறி சிவராமன் அவர் முன்னே அழுது விட்டார்.

கொளஞ்சிநாதன்,”நான் இருக்கே. எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன்” என அவரது கையை பிடித்துக் கொண்டார்.

பின் டாக்டரிடம் அவர் உடல் நிலையை பற்றியும்,எப்போது குணமடையும் என்பதையும் கேட்டு தெரிந்து கொண்டார் கொளஞ்சி.

சிறிது நேரம்,இருவரும்
உரையாடினர். அவர் தன்னுடைய மகளை பத்திரமாக பார்த்துக் கொள்வார்.அவரிடம் மகளை தைரியமாக கொடுக்கலாம் என்ற முடிவுக்கு சிவராமன் வந்து,அவர்களது காதலுக்கு பச்சை கொடி காட்டினார்.

ஒருமாதம் கடந்து விட்டது.கையில் இருந்த பணமும் ஹாஸ்பிடல் செலவுக்கு மொத்தமாக கரைந்து விட்டது.சிவராமன் கங்காவின் திருமணத்திற்காக எடுத்த அனைத்து நகைகளும் அடமானம் வைக்கப்பட்டது.
சிவராமன் கடையை திறந்தும் ஒரு மாதம் ஆகிவிட்டது.

அடுத்தநாள் அவரை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு கூட்டி வர வேண்டும். பணத்திற்கு என்ன செய்வோம்?என கங்கா குழம்பி இருந்தாள்.

கொளஞ்சி”நான் தருகிறேன்” என முன்வந்தார்.கங்காவிற்கு அவரிடம் வாங்க விருப்பமில்லை.
“வேண்டாம்” என்று கூறிவிட்டாள்.

கங்கா,”நாளைக்கு காலைலே அப்பாவே டிஸ்சார்ஜ் பண்ணனும். குறைஞ்சது இருபதாயிரம் ஆச்சு வேணும்.எல்லா நகையும் அடமானத்துக்கு போய்ருச்சு. கையிலையும் சுத்தமா காசு இல்ல. எங்க போய் வாங்குவோம்? அவங்ககிட்ட வாங்கிக்கலாம்.அப்பா வந்ததும் திருப்பி கொடுக்கலாம்”
என்றாள் கெளசி

“கல்யாணம் ஆகறதுக்கு முன்னாடி இப்படியெல்லாம் வாங்க கூடாது. வேண்டா” என மறுத்து விட்டாள்.

“கலாவே ஃபோன் செய்து பணம் ஏதாச்சு வேணுமா கங்கா” என்றார்.

ஆமா சித்தி.

எவ்வளவு?

இருபதாயிரம்.

ஏன் கங்கா?முதல்லே பணம் வேணும்னு சொல்ல மாட்டே. காலைலே அப்பாவை கூட்டிட்டு வரனும். இப்போ நானே ஃபோன் பண்ணி கேட்டதும்.ஆமா இருபதாயிரம் வேணும்னு சொல்றே, என திட்டி.. “கிளினிகிற்கு கிளம்பி வா” என்றார்.

இவளும் கிளம்பி போக,தன் இரண்டு ஜிமிக்கி கம்மல்களையும் அடமானம் வைத்து.. இருபதாயிரம் தந்தார்.

அதை பார்த்த கங்காவிற்கு…
எத்தனை கஷ்டம் இருந்தாலும்,
இந்த வீடு… இந்த உறவுகள்… தன்னை உடைந்து போக விடாது என்ற உணர்வு மெதுவாக மனதுக்குள் பரவியது.

சிவராமனை அழைத்து வர,கொளஞ்சி தனது காரை எடுத்து வந்தார். கங்கா அதற்கு மறுப்பு சொல்லாது ஏற்றுக் கொண்டார்.

நல்லபடியாக சிவராமன் வீடு வந்து சேர்ந்தார்.தங்கை சிவகாமி ஆர்த்தி எடுத்து அண்ணனை உள்ளே அழைத்து சென்றார்.உறவுகளும் வந்து அவரை நலம் விசாரித்து சென்றனர். கிளம்பும் முன் கொளஞ்சி நாதன் சிவராமனுக்கு தனியாக கட்டில் வாங்கி தந்து,அதில் படுத்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

லட்சுமியின் அரவணைப்பில் அவர் கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் தேறி வந்தார்.

–தலைவன் வருவான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!